அத்தியாயம் 14
வீட்டுக்கு வந்த சர்வஜித்துக்கு கோபம் அடங்கவே இல்லை...
ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை...
ஆனால் கோபமாக வந்தது...
அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டான்...
ஆதிரையாழோ இதனை எல்லாம் அறியாமல் ரோஸியுடன் விளையாடச் சென்று விட்டாள்.
இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும்...
அலுவலகத்தில் முக்கிய மீட்டிங்கை முடித்து விட்டு காஃபி குடித்துக் கொண்டு இருந்த சர்வஜித் முன்னே அமர்ந்து இருந்தார்கள் அவன் நண்பர்கள்...
அவனுக்கு எண்ணி நான்கு நெருங்கிய நண்பர்கள் தான்...
விஷ்வா, ஒலிவர், பெஞ்சமின் மற்றும் மிஷேல்...
அனைவரும் அவனுடன் கல்லூரியில் படித்தவர்கள்... அவனை போலவே பணக்காரர்கள்...
விஷ்வா தவிர ஏனையவர்கள் மேற்கத்தேய நாட்டவர்கள் தான்...
முதல் எல்லாம் அடிக்கடி சந்தித்தாலும் சர்வஜித் இப்போதெல்லாம் அவர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டான்...
அதனால் தான் இன்று தேடியே வந்து விட்டார்கள்...
காஃபி அருந்திக் கொண்டே முன்னால் இருந்தவர்களை பார்த்தவன், "என்ன திடீர்னு?" என்று ஆங்கிலத்தில் கேட்டான்...
விஷ்வாவோ, "கமான் சர்வா, நாம மீட் பண்ணி எவ்ளோ நாள் ஆச்சு? எப்போ பார்த்தாலும் பிஸினு சொல்லிட்டே இருக்க... ஒரு கெட் டு கெதர் போடலாம்னு தான் தேடி வந்தோம்" என்றான்...
ஒலிவரோ, "எஸ், நாம மீட் பண்ணி பார்ட்டி பண்ணி நாள் ஆச்சு" என்று சொல்ல, சர்வஜித்தும் பெருமூச்சுடன், "ஓகே கெட் டு கெதர் ப்லான் பண்ணிடலாம்" என்றான்...
"உன் வீட்ல தான்... திஸ் சன்டே" என்றான் பெஞ்சமின்...
"வாட் என் வீட்லயா?" என்று சர்வஜித் அதிர, "வழக்கமா உன் வீட்ல தானே நடக்கும்" என்றாள் மிஷேல்...
"ஓகே கோ எஹெட்" என்று அவன் முடித்துக் கொண்டாலும் ஆதிரையாழை நினைத்து தலை விண் விண்ணென்று வலித்தது...
அவனுக்கு ஞாயிற்றுக் கிழமையை நினைத்து வீட்டிற்கு வந்த பின்னரும் நிம்மதி இல்லை...
இன்னும் இரு நாட்களே இருந்தன...
அன்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்த ஆதிரையாழிடம், "ஆதிரா, கொஞ்சம் இரு பேசணும்" என்றான்...
அவளும், அவனை கேள்வியாக பார்க்க, "இங்க சன்டே, ஃப்ரெண்ட்ஸ் மீட் அப் இருக்கு" என்றான்...
அவளோ, "ம்ம்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன், "உன்னை என் பொண்டாட்டினு எல்லாம் சொல்ல முடியாது" என்றான்...
அவள் எதிர்பார்த்தது தான்...
அதற்கும், "ம்ம்" என்றாள்.
"வேலைக்காரினு சொல்லுவேன், அதற்கு ஏற்ற போல மெயின்டெய்ன் பண்ணு" என்றான்...
அவளுக்கு இதயத்தினுள் சுர்ரென்று வலிக்க, அதனை அடக்கிக் கொண்டே, "சரி" என்றாள்.
இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது...
அடுத்த நாளும் வேகமாக கிளம்பி விட, ஞாயிற்றுக் கிழமையும் வந்து சேர்ந்தது...
காலையில் தனியாகவே ஜிம் போய் வந்து விட்டான் சர்வஜித்...
ஆதிரையாழுக்கோ ஜிம்முக்கு போக தேவையில்லை என்று நிம்மதியாக இருக்க, நன்றாக தூங்கி எழுந்தவள் காலையிலேயே ரோஸியுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.
அறைக்குள் இருந்து வெளியே வந்த சர்வஜித்தின் கண்ணில் ஆதிரையாழ் பட, அவனுக்கு சட்டென்று கடுப்பாகி விட்டது...
"உன் கிட்ட குங்குமம் வைக்க வேணாம்னு எத்தனை தடவை சொல்றது?" என்று எறிந்து விழுந்தான்...
ரோஸியை தூக்கிக் கொண்டே எழுந்தவளோ, "வெளிய போற நேரம் தானே வைக்க வேணாம்னு சொன்னீங்க" என்று இழுக்க, அவளை முறைத்தவன், "இன்னைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க, பட்டிக்காடு போல நிற்காதே... வேலைக்காரி கூட டீசென்ட் ஆஹ் இருக்கணும்னு எதிர்பார்க்கிறவன் நான்... இங்க வேலைக்கு வர்றவங்கள பார்த்து இருக்க தானே" என்று அதட்ட, அவளோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே நாய்க்குட்டியை கீழே விட்டவள், குளியலறைக்குள் சென்று முகத்தை அடித்து கழுவி விட்டு வந்தாள்.
வெளியே வந்தவளை மேலிருந்து கீழ் மீண்டும் ஆராய்ந்தவனோ, "தாலியை கழட்டு இல்லனா ஷால் போட்டு மறைச்சுக்கோ" என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் செல்ல, அவளோ அறைக்குள் சென்று ஷால் ஒன்றை போட்டுக் கொண்டே வந்தாள்.
அவள் மனமோ, 'ஃப்ரெண்ட்ஸ் வர்றதுக்கு ஏன் இவ்ளோ அலப்பறை பண்ணுறார்?' என்று நினைத்துக் கொண்டது...
நேரம் ஒன்பது மணியை தொட்டு இருக்கும், கட கடவென வந்து இறங்கினார்கள் சர்வஜித்தின் நண்பர்கள்...
விஷ்வா, ஒலிவர், பெஞ்சமின், மிஷேல் என நால்வரும் ஆளுக்கொரு உயர் ரக காரில் இருந்து இறங்க, அவர்கள் உள்ளே வருவதை பார்த்த ஆதிரையாழோ, 'ஒருத்தரை தவிர எல்லாருமே வெள்ளைகாரங்க போல' என்று நினைத்துக் கொண்டே, நின்று இருந்தாள்.
உள்ளே வந்தவர்களை, "கம் இன்" என்று சொல்லி கை குலுக்கி அணைத்து வரவேற்றான் சர்வஜித்...
அவர்களும் அவனை அணைத்து விட்டு அங்கே அமர்ந்தார்கள்...
அவர்களுக்காக கடையில் இருந்து விதம் விதமான மதுபானங்கள் வாங்கி வைத்து இருந்தான்...
அங்கே வேலை செய்யும் இரு பெண்கள் தான் வந்தவர்களுக்கு இதனை பரிமாறினர்...
ஆதிரையாழுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்று சர்வஜித்துக்கு தெரியும்...
அதனாலேயே அவளை ரோஸியை மட்டுமே பார்த்துக் கொள்ள சொல்லி இருந்தான்...
அவர்கள் வரும் போது ஹாலில் நின்று இருந்த ஆதிரையாழுக்கு மது வகைகளை பார்த்ததுமே உள்ளே போய் விடலாம் என்கின்ற எண்ணம் தான்...
மெதுவாக ரோஸியுடன் அறையை நோக்கி அவள் நகர முற்பட, "இது யாரு நம்ம ஊரு பொண்ணு?" என்றான் விஷ்வா...
மதுவை குவளையில் ஊற்றிக் கொண்டே, "அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, வேலைக்கு அழைச்சு வந்து இருக்கேன்" என்றான் சர்வஜித்...
"ஓஹோ" என்று மார்க்கமாக சொல்லிக் கொண்டே மதுக்குவளையை எடுத்த விஷ்வாவின் கண்கள் அவள் மீது அழுத்தமாக படிந்து மீண்டன...
அவளும், வலுக்கட்டாய புன்னகையுடன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அதன் பின்னரே அவளுக்கு மூச்சு வந்தது...
நண்பர்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா? சிரித்து பேசி குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்...
ஆண் பெண் பேதம் இல்லாமல், ஆட்டம் பாட்டம் அலட்டல் என்று நேரம் நகர்ந்தது...
அப்படியே ஆளுக்கொரு மூலையில் சோஃபாவில் தூங்கியும் போனார்கள்...
சர்வஜித்தும் அதில் அடக்கம்...
நீண்ட நேரம் கழித்து ஆதிரையாழுடன் அறைக்குள் இருந்த ரோஸியோ கத்த ஆரம்பித்து விட்டது...
பசி போலும் அதற்கு...
"ஐயோ ரோஸி, பசிக்குதா?" என்று கேட்டுக் கொண்டே, கதவை மெதுவாக திறந்து பார்த்தாள் ஆதிரையாழ்...
எல்லோரும் மட்டையாகி தூங்கிக் கொண்டு இருக்கும் காட்சி தான் அவள் கண்ணில் பட்டது...
'மொடா குடிகாரனுங்க போல' என்று நினைத்துக் கொண்டே, ரோஸியுடன் வெளியே வந்தாள்.
வேலை செய்துக் கொண்டு இருந்த பெண்கள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்...
அவர்களை பார்த்து விட்டு நேரத்தைப் பார்த்தாள் ஆதிரையாழ்... மணி மாலை மூன்று மணி தான்...
இவ்வளவு விரைவாக கிளம்புகிறார்கள் என்று தோன்றியது...
ஆதிரையாழ் மணியை பார்த்ததை கவனித்தவர்களோ, "சார் தான் வேலை முடிஞ்சா போக சொன்னார்" என்று ஆங்கிலத்தில் சொல்ல, அது அவளுக்கு புரிந்தால் தானே...
'என்ன பேசுறாங்கனு தெரியலையே' என்று நினைத்தவள், "ஹி ஹி, எஸ் எஸ்" என்றாள்.
அவர்களோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு கிளம்பி விட, பெருமூச்சுடன் ஒவ்வொரு சோஃபாவில் படுத்து இருந்தவர்களை பார்த்தாள்...
மிஷேலைப் பார்த்தவளோ, 'பொண்ணுங்களும் குடிப்பாங்க போல' என்று நினைத்துக் கொண்டே, சமையலறைக்குள் சென்று ரோஸிக்கு உணவை எடுத்து வைத்துக் கொண்டே, வாசலை நோக்கி திரும்பியவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
கண்கள் சொருக அவளை பார்த்துக் கொண்டே நின்று இருந்தான் விஷ்வா...
அவளோ சற்று பயந்து தான் போனாள்.
விஷ்வாவோ, அவளை பார்த்துக் கொண்டே அடிமேல் அடி வைத்து வர, அவளுக்கோ இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...
"என்ன வேணும்?" என்று அவசரமாக கேட்டாள்.
"வாட்டர்" என்று சொல்லிக் கொண்டே, அவளை நோக்கி நடக்க, அவளோ பதறி அங்கே இருந்த நீர் பாட்டிலை எடுத்து நீட்டினாள்...
அவன் இதழில் ஒரு வித்தியாசமான புன்னகை...
சிரித்துக் கொண்டே, பாட்டிலை வாங்கும் போது அவன் கரம் தாராளமாக அவள் கரத்தில் உரசியது...
அவளும் பட்டென்று கையை விலக்கிக் கொள்ள, அவளை பார்த்துக் கொண்டே நீரை அருந்தினான்.
போதையின் பிடியில் இருந்தவன் விழிகளோ அவள் கழுத்தில் பதிந்து கீழ் இறங்க, அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்த ஆதிரையாழ் சட்டென்று மறுபக்கம் திரும்பி நிற்க முயன்றாள்.
அடுத்த கணமே, பாட்டிலை எட்டி அவள் அருகே இருந்த மேசையில் வைத்தவன் கரம், அவள் இடையில் பதிய, பதறி திரும்பிய பெண்ணவளோ அவனை உறுத்து விழிக்க, "என்னடி பெரிய கண்ணகி போல பில்ட் அப் பண்ணுற... அஃப்டர் ஆல் ஒரு வேலைக்காரி தானே நீ... சும்மா சொல்ல கூடாது செமயா இருக்க" என்றான்...
அவன் பேச்சு எல்லை மீறுவதை அறிந்தவளோ அங்கிருந்து வேகமாக நகர முற்பட, அவனோ அவள் கையை பிடித்து இழுத்து இருந்தான்...
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அவன் பிடியில் இருந்து விலக முற்பட, அவளை இறுக அணைத்து இருந்தான்... பதறி விட்டாள் பெண்ணவள்...
"என்னை விடுங்க" என்று அவள் ஆக்ரோஷமாக கத்திய போதிலும் போதையின் பிடியில் தூங்கிக் கொண்டு இருந்த யாருக்கும் கேட்கவே இல்லை...
அதில் சர்வஜித்தும் அடக்கம்...
அவளை விடும் நிலையில் விஷ்வா இல்லை...
அவளை அணைத்து இருந்த அவன் பிடி இறுக, "ஒரு நாள் கம்பெனி கொடு... ராணி மாதிரி வச்சு இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை முத்தமிட முனைய அவளோ தனது பலம் முழுதும் பயன்படுத்தி அவனை வேகமாக தள்ளி விட்டவள், மின்னல் வேகத்தில் தனது அறைக்குள் அழுதுக் கொண்டே ஓடிச் சென்றாள்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...
அவன் அணைத்த மேனி அருவருத்து போக, அவசரமாக குளியலறைக்குள் புகுந்து ஷவரின் கீழ் நின்றாள்.
சோப்பை எடுத்து வேகமாக தேய்த்துக் கொண்டாள்.
அழுகை... நிற்காத அழுகை...
அதுவும் கணவன் வீட்டில் இருக்கும் போதே ஒருவன் தன் மீது கையை வைத்ததை அவளால் தாங்க முடியவில்லை...
சர்வஜித் மீது தான் ஆத்திரம் பொங்கியது...
அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்கின்ற ஆதங்கம்...
ஆனால் விஷ்வா இருக்கும் போது வெளியேச் செல்லவே பயந்தாள்.
இதே சமயம், அவள் தள்ளி விட்டதில் கீழே விழுந்த விஷ்வாவுக்கு அங்கே இருந்த மேசையின் காலினால் பின் தலையில் பலத்த அடி...
போதை முழுதாக இறங்கிய உணர்வு...
"ஆஹ்" என்று முனகிக் கொண்டே தலையை தேய்த்தபடி எழுந்தவனோ தலையை உலுக்கிக் கொண்டான்...
தன்னை நிராகரித்த ஆதிரையாழ் மீது ஆத்திரமாக வந்தது...
"இருடி உன்னை ஒரு நாளைக்கு பார்த்துக்கிறேன்" என்று கறுவிக் கொண்டே வெளியே வந்தவனோ அடுத்த கணமே காரை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்...
யாரிடமும் சொல்லவில்லை...
இதே சமயம் போதை தெளிந்து எழுந்துக் கொண்டார்கள் ஏனையவர்கள்...
ஒருவாறு நிதானமாகிக் கொண்டே அங்கிருந்து சர்வஜித்திடம் விடை பெற்றுச் செல்ல, "பார்ட்டி பார்ட்டினு சொல்லிட்டு விஷ்வா ஏர்லியா கிளம்பிட்டானா?" என்று கேட்டுக் கொண்டே, சர்வஜித் தனது அறைக்குள் நுழைந்தான்...
ஆதிரையாழ் இன்னுமே அறைக்குள் அழுதுக் கொண்டு இருந்தாள்.
இரவாகி இருந்தது... சாப்பிடவும் வெளியே வரவில்லை...
அனைவரும் சென்றதும், சர்வஜித் ஹாலில் இருப்பதையும் சத்தம் மூலம் அறிந்துக் கொண்டாள்.
அவளுக்கு சர்வஜித்திடம் இதனை சொல்லி ஆக வேண்டும்...
அவனிடம் கேள்வி கேட்க வேண்டும் போல இருந்தது...
கேள்வி கேட்கும் அளவுக்கு தைரியம் இல்லை...
நீண்ட நேரம் யோசித்து விட்டு சர்வஜித்தின் அறையை நோக்கிச் சென்றாள் பெண்ணவள்...