அத்தியாயம் 13
பென்ட்ரைவை தனது லாப்டாப்பில் போட்டு பார்த்தவன் அதிலிருந்த போட்டோக்களை பார்த்து சத்தமாக சிரித்தான். "மாமா இந்த வயசில இதெல்லாம் தேவையா?" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவனுக்கு கயல்விழியை எப்படி திட்டம் போட்டு திருமணம் செய்துக் கொண்டான் என்கின்ற விடயம் நினைவுக்கு வந்தது.
மகாலிங்கம் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் ஆனவர். ஹோட்டலில் ரூம் போட்டு பெண்களுடன் கூடி களிப்பவர்.
இதெல்லாம் அரசல் புரசலாக சாணக்கியனுக்கு தெரிந்தாலும் அப்பா என்னும் மரியாதைக்காக கண்டும் காணாமல் இருந்தான்.
அந்நேரம் ஊருக்கு மாற்றலாகி வந்த கௌதமுக்கு, தனது பாரிய திட்டத்தை செயல் படுத்த மகாலிங்கம் வீட்டுக்கு எப்படியாவது போக வேண்டிய தேவை இருக்க பல வழிகளை யோசித்தவன் கயல் விழி, விஷ்வா, சாணக்கியன் என்று அனைவரையும் பின் தொடர்ந்தான்.
கயல்விழியை முதன் முதலாக ஹாஸ்பிடல் கேன்டீனில் பார்த்தான். அவனுக்கு நேரே சிரித்தபடி அவள் காபியை குடித்துக் கொண்டிருக்க அவள் முன்னாலிருந்த அவனுக்கு தொலைபேசியில், "ப்ளூ சாரி" என்று ஒரு மெசேஜ் வந்தது.
கையில் புத்தகம் ஒன்றை பிரித்து படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தின் மேலாக பார்வையை அவளை நோக்கி செலுத்தினான்.
பெயருக்கேற்ற போல காந்த விழிகளும் கூரான நாசியும் சிவந்த நிறமும் பார்த்தவுடன் போதை கொள்ள செய்யும் இதழ்களும் என அழகின் இலக்கணமாய் இருந்தவளை பார்த்து ஒரு கணம் கண் இமைக்க மறந்தான்.
அவள் அழகு அவனை கிறங்க செய்தது.
அவளை தன்னவளாக்க வேண்டும் என வெறி எழுந்தது... ஆனால் அவளின் குடும்பம் அவனின் காதலை உதித்த இடத்திலேயே கொன்று புதைக்க அவளை திருமணம் செய்து கர்ப்பமாகி கைவிடும் எண்ணத்துடன் தான் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.
அதுக்கு முதல் காயாக அவன் நகர்த்தியது மகாலிங்கத்தின் பலவீனத்தை... அவர் செல்லும் கேளிக்கை விடுதியில் கேமரா பொருத்தியவன் அவரின் அந்தரங்க லீலைகளை அழகாக படம் பிடித்திருந்தான்.
நிதானமாகச் சென்றால் அவன் மீது சந்தேகம் வரும் என்று யோசித்தவன் மன நிலை சரி இல்லாத வேஷத்தை போட்டான். அதுக்காக மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்தான் மன நல மருத்துவராலேயே கண்டு பிடிக்க முடியாதளவுக்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றான்.
ஒரு நாள் மகாலிங்கம் எண்ணுக்கு அவரின் லீலையில் ஒரு படம் அனுப்ப பட்டதும் கூட்டத்தில் இருந்தவர் பதறி அடித்து வியர்க்க விறுவிறுக்க வெளியே வந்து அனுப்பிய நம்பருக்கு கால் எடுத்தார்.
அந்த இலக்கத்தில் பேசியவர் கௌதமின் கீழ் வேலை செய்யும் கொஞ்சம் வயதான போலீஸ்காரர் மயில்வாகனம். அவரும் புதிதாக மாற்றலாகி வந்ததால் அவரையும் யாருக்கும் பெரிதாக தெரிந்து இருக்கவில்லை.
அது கௌதமுக்கு வாய்ப்பாக போனது.
மகாலிங்கத்துக்கு அழைத்தவர், "சார் நான் இப்போ உங்க வீட்ட தான் நிக்கிறேன்" என்றதும், "அங்கேயா?" என்று பதறியபடி வீட்டை நோக்கி ஓடினார் மகாலிங்கம்...
வீட்டினுள் நுழைந்த போது மனநிலை சரி இல்லாமல் அந்த பெரியவருடன் கூட இருந்த கௌதமை பார்த்து முதலில் முகம் சுளித்த மகாலிங்கம் மயில் வாகனத்தை அழைத்துக் கொண்டு தனியாக வெளியே வந்தார்.
வெளியே வந்ததும், "என்ன வேணும்?" என்று கேட்டார் பணத்தை எதிர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்.
ஆனால் மயில் வாகனமோ நேரடியாக, "உங்க பொண்ணு கயல்விழியை என் பையனுக்கு கட்டி கொடுக்கணும்" என்றதும் சினம் ஏற, "உனக்கென்ன பைத்தியமா? உன் பைத்தியக்கார மகனுக்கு என் பொண்ணா? முடியாது போடா..." என்று பதிலுக்கு எகிற,
"சரி உங்களுக்கு இப்போ அனுப்பினது நாளைக்கு டிவில வரும்" என்றதும் அதிர்ந்தவர் உடனே சுதாரித்துக் கொண்டு, "என்னை பற்றி தெரியாது... இப்போவே உன்னையும் உன் மகனையும் இருக்கிற இடம் தெரியாம அழிச்சிருவேன்" என்று உறுமியவரை பார்த்து புன்னகைத்தவர், "ஐயா நீங்க இப்படி பண்ணுவீங்கனு தெரிஞ்சு தான் இங்க வர முதலே ஒரு காப்பிய என் நண்பனிடம் கொடுத்திருக்கேன். எனக்கோ என் மகனுக்கோ ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட எல்லாம் மீடியாவுக்கு போகும்... மேலும் பேங்க் லாக்கரில் ஒரு காப்பி இருக்கு என் உயிருக்கு ஏதும் நடந்தா அதுவும் நேரடியா மீடியாவுக்கு போகும்" என்று போலியாக தயாரிக்க பட்ட ஒரு பத்திரத்தை எடுத்து காட்டினார்.
மகாலிங்கம் அந்த பத்திரத்தை பார்த்து அதிர்ந்து நிற்க, "இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் இருக்கு..." என்றவர் இன்னொரு போலீஸ் காபியை எடுத்து காட்ட அதில் மயில் வாகனத்துக்கோ காத்தமுத்துவுக்கோ ஏதும் நடந்தால் அதுக்கு காரணம் அமைச்சர் மகாலிங்கம் என்று இருக்க அவருக்கு உலகம் தலை கீழானது போல் இருந்தது.
"ஏய்" என்று பல்லை கடித்தவர், "அதுக்கு என் பொண்ணா? அவ சின்ன பொண்ணுய்யா... வேணும்னா பணம் தரேன்... எவ்வளவு வேணுமோ கேளு..." என்று கண் கலங்க கூறியவரை இளக்காரமாக பார்த்த மயில்வாகனம், "உங்க பணம் தேவல சார்... உங்க பொண்ணு தான் தேவை..." என்றபடி ஒரு கவரை எடுத்து காட்ட அது முழுதும் மகாலிங்கத்தின் அந்தரங்க புகைப்படங்களே இருந்தது.
"இப்போவே உங்க மனைவி கிட்ட போகவா?" என்று கேட்டவரை முறைத்தவர், "கொஞ்சம் பொறு" என்றபடி யோசித்தவருக்கு மகள் வாழ்க்கையை விட அரசியல் வாழ்க்கையும் தனது மானமும் பெரிதாக பட்டது.
தன்னை காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தவர், "சரி முடிச்சு தர்றேன்" என்றதும், "நாளைக்கே" என்ற மயில் வாகனத்தை அதிர்ந்து பார்த்தார்.
"லூசா நீ? நாளைக்கா?" என்றவரை கூர்ந்து பார்த்தபடி ஆமாம் என்று தலையாட்ட வேறு வழி இல்லாமல் மகாலிங்கமும் ஒத்துக் கொண்டார்.
காத்தமுத்துவுக்கு சாணக்கியனாலோ விஷ்வாவினாலோ ஒரு சின்ன அடி கூட படாமலிருக்க காவல் வேறு போட்டார். வன்மத்துடன் கயல்விழியை மணந்த கௌதமுக்கு அவள் கவனிப்பில் அன்பிலும் வன்மம் மறைந்து புதைக்கப் பட்டிருந்த காதல் வெளி வந்தது.
எவ்வளவு முயன்றும் அவளை பலியாக்க அவன் மனது இடம் கொடுக்காததால் அவளை விட்டு தள்ளியே இருந்தான்.
அவளுடன் வாழ விரும்பினாலும் அவளை தான் திருமணம் செய்ய விரும்பிய காரணம் தெரிந்தால் கண்டிப்பாக தன்னோடு வாழ மாட்டாள் என்று அறிந்தவன் இருவர் வாழ்க்கையும் பாழாக்க விரும்பாமல் ஒதுங்கி இருந்தான்.
தனது குறிக்கோள் முடிய அவளை விவாகரத்து செய்து விடுதலை அளிக்க வேண்டும் என விரும்பியவன் தற்போது வரை அந்த வீட்டுக்குச் சென்று வர அவனுக்கு இந்த கல்யாணம் துருப்பு சீட்டாக இருந்ததால் விவாகரத்தை தள்ளி போட்டான். ஆனாலும் சில நேரங்களில் அவனின் காதல் உள்ளம் அவனையும் மீறி வெளி வந்தது.
"இன்னும் கொஞ்ச நாள் தான் கயல்...அதுக்கப்புறம் நீ என்னை முழுமையா பிரிஞ்சிரலாம்..." என்று உருக்கமாக சொன்னவன் பென்ட்ரைவை லாப்டாப்பில் இருந்து கழட்டினான்.
பென்ட்ரைவை பார்த்தபடியே, 'சாணக்கியா இந்த பென்ட்ரைவுக்காக ஒருத்தன பயங்கரமா அடிக்க வச்சுட்டியேடா' என்று வெறுப்புடன் மனதுக்குள் சொன்னவன் அதை பத்திரமாக தனது லாக்கரில் வைத்து பூட்டினான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த நாளும் போட்டோக்கள் மகாலிங்கத்தை தேடி போனது. அவரும் வழமை போல கௌதமிடம் எகிற, "எத்தனை காப்பி எடுத்து வச்சிருக்கானோ" என்று சலித்தவன் மீண்டும் சாணக்கியனுக்கு எடுத்தான்.
சாணக்கியனுக்கு புரிந்தது எதற்காக எடுக்கிறான் என்று அதனால் அவனை தவிர்க்க நினைத்தவன் அவன் அழைப்பை எடுக்கவே இல்லை. அவன் எடுக்காததால் சலித்தவன், "என்னவோ பண்ணி தொலைக்கட்டும் அப்பவாச்சு மகனாச்சு" என்றபடி இருந்தவனுக்கு அடுத்த நாள் மீண்டும் மகாலிங்கம் அழைத்தார்.
பொறுமை இழந்த கெளதம், "உங்க மூத்த பையன்ட கேளுங்க" என்று கூறிவிட்டு வைத்து விட்டான். மேலும் பேச போனால் அவர் கௌதமை புலம்பி புலம்பியே ஒரு வழி பண்ணி விடுவார் என்று அறிந்தவன் அழகாக இருவரையும் இணைத்துவிட்டு தான் நழுவிக் கொண்டான்.
"என்னது சாணக்கியனிடமா?" என்று அதிர்ந்தவர் மீண்டும் மீண்டும் கௌதமுக்கு அழைக்க அவன் தொலைபேசி அணைக்கபட்டிருந்தது.
கெளதம் மேல் கோபம் எகிற, 'சாணக்கியனுக்கு சொன்னதுக்காக உன்னை என்ன பண்ணுறேன் பாரு.... இனி உன்ன உயிரோட விடுறதாக இல்லை படம் மீடியாவுக்கு போனாலும் மீடியாவை நான் பார்த்துக்கொள்ளுவேன்.' என்று மனதுக்குள் உறுமியவர் கௌதமை போட்டு தள்ள திட்டமிட்டார்.
சாணக்கியன் தான் துரும்பு அசைந்தாலே அறிந்துக் கொள்பவன் ஆயிற்றே மகாலிங்கத்தின் திட்டமும் அவன் காதில் விழ கௌதமுக்கு நாள் குறிக்கப்பட்ட அன்று அவனுக்கே தெரியாமல் அவனை பின் தொடர்ந்தான் சாணக்கியன்.
போய் கொண்டிருந்த ஜீப் திடீரென வழியில் பஞ்சர் ஆனதும் இறங்கிய கெளதம் குனிந்து பார்த்த போது அங்கு நிறைய கண்ணாடி துண்டுகள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. ஏதோ தப்பாக பட ஜீப்புக்குள் எட்டி கையில் துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியுடன் சுற்றி நோட்டமிட்டான். வீதிக்கு இரு பக்கங்களிலும் புதர்கள் மட்டுமே இருந்தன.
ட்ரைவரிடம் டயரை மாற்ற சொல்லிவிட்டு ஜீப்பில் சாய்ந்து துப்பாக்கியை கைகளால் பிடித்தபடி அலெர்ட்டாக நின்றான்.
பின்னால் காவலர்கள் இல்லாமல் கௌதமை பின் தொடர்ந்து டிரைவர் உடன் மட்டும் வந்த சாணக்கியனுக்கு ஏதோ தப்பாக பட அவன் ஜீப்பை நெருக்கி நிப்பாட்டியவன் கிடைத்த தகவல்களின் படி புதருக்குள் கண்களை செலுத்தினான்.
சாணக்கியனின் வண்டியை கண்டதும் இது மகாலிங்கத்தின் வேலை என்று யூகித்த கெளதம் சாணக்கியனை பார்க்க அவனோ கையில் துப்பாக்கியுடனும் வெண்ணிற குர்தாவுடன் ஜீப்பிலிருந்து இறங்கினான்.
கெளதம் நின்ற ஜீப்புக்கு மறைவான பக்கம் அவன் நெஞ்சை குறி பார்த்து ஒருவன் நின்றிருந்தான். கெளதம் அங்கும் இங்கும் அசைந்ததால் அவனால் சுட முடியவில்லை.
கெளதம் நின்ற கண் பார்வை திசைக்கு புலப்படாதவன் இறங்கிய சாணக்கியனுக்கு உடனே புலப்பட கண நேரம் தாமதிக்காது பதுங்கி இருந்தவன் தலையில் சாணக்கியனின் துப்பாக்கி புல்லட் ஏறியது.
சத்தத்தில் அதிர்ச்சியடைந்த கெளதம் புதருக்குள் எட்டி பார்க்க அங்கு ஒருவன் கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தான். அந்நேரம் பார்த்து புதருக்குள் இருந்த இன்னொருவன் கௌதமை நோக்கி சுட்டது அவன் எட்டி பார்த்ததில் குறி தப்பி அவன் தலைக்கு மேலால் புல்லட் சென்றிருந்தது, இந்த திடீர் தாக்குதலில் முதலில் அதிர்ந்த கெளதம் உடனே சுதாரித்தபடி ஜீப்புக்கு பின்னால் ஓடிச் சென்று தன்னை நோக்கி சுட்டவன் திசையிலேயே சுட அவனை நோக்கி சுட்டவன் அவ்விடத்திலேயே இறந்தான்.
அதை பார்த்து, "அப்பாடா" என்று அவன் மூச்சு விட முதல் ஜீப்பின் கண்ணாடியை அடுத்த புல்லட் துளைத்தது. எட்டி பார்த்தால் புதரிலிருந்து மேலும் நான்கு பேர் ஜீப்பின் முன்னால் கௌதமை குறி வைத்தபடி நின்றனர்.
முன்னுக்கு கெளதம் ஜீப்பும் பின்னால் சாணக்கியன் ஜீப்பும் நிற்க இருவரும் தங்கள் ஜீப்புகளுக்கு பின்னால் ஒளிந்திருந்தனர்.
வந்தவர்களை நோக்கி இருவரும் ஒளிந்திருந்து சரமாரியாக சுட நால்வரும் அவ்விடத்திலேயே இறந்தனர்.
ஆசுவாசமடைந்ததும் இருவரும் வெளியே வர புதரிலிருந்து யாரும் எதிர் பார்க்காத வண்ணம் ஒருத்தன் சாணக்கியனை நோக்கி துப்பாக்கியை நீட்டி இருந்தான். ஓடிச் சென்ற கெளதம் சாணக்கியனை தள்ள அவன் புல்லட் கௌதமின் தோள் பட்டையில் இறங்கியது.
கண நேரத்தில் வலியையும் பொருட்படுத்தாமல் துப்பாக்கியை இடது கைக்கு மாற்றி அவனையும் சுட்டுக் கொன்றான் கெளதம்.
அவன் கையில் துப்பாக்கி சூடு பட்டதால் பதறிய சாணக்கியன், "டேய் என்னடா ஆச்சு?" என்றபடி காருக்குள் இருந்து தனது துண்டை எடுத்து ரத்தம் வெளியேறாமல் இறுக்கி கட்டினான். "ஆஅ..." என்று வலியில் பல்லைக் கடித்து முனகியவனை பார்த்த சாணக்கியனுக்கு ஆத்திரம் தலைக்கேற,
"அவனை அன்னைக்கே போட்டிருக்கணும்... எல்லாம் உன்னால தான்" என்று திட்டிய படியே அவன் காயம் பட்ட இடத்தை பார்த்தான். உடனே கெளதம், "என்னடா மாமாக்கு மரியாதை இல்லாம பேசுற?" என்று நக்கல் தொனியில் கேட்க, "டேய் வேணாம் வாயை கிளறாதே... வா ஹாஸ்பிடல் போவோம்" என்றான் அவன் கையை பிடித்தவாறே. அவனிடமிருந்து கையை உருவியவன், "வேணாம்டா நானே பார்த்துக்கிறேன்.
அப்புறம் கேஸ் அது இது விசாரணை கமிஷன் என்று ஒரே அலுப்பு... இப்போ இருக்கிற கெடுபிடியையே சமாளிக்க எனக்கு நேரமில்லை" என்றான்.
"டேய் உள்ள புல்லெட் இருக்குடா..." என்றவன் கௌதமை இழுத்து ஜீப்புக்குள் போட்டு பக்கத்தில் தானும் ஏறிக் கொண்டவன் மேலும், "விஷ்வா கிட்ட தான் போக போறோம் போலீஸ் கெடுபிடி வராம நான் பார்த்துக்கிறேன்." என்றதும், "ஐயோ வசூல்ராஜாவா? வேணாம்டா... ஆ!" என்று வலியிலும் காமெடி பண்ணியவனை முறைத்தவன், "அவன் என்ன வசூல்ராஜாவா??" என்று கேட்டான்.
"பின்ன ரவுடி டாக்டர் தானே... அன்னைக்கு குத்தினான் பாரு இப்போவும் என் தாடை வலிக்குது..." என்றவனை பார்த்து முறைத்த சாணக்கியன், "நீ மட்டும் குத்தல பாரு... அவனுக்கும் இப்படி தானே வலிக்கும்" என்றான். உடனே சாணக்கியனை பார்த்து உதட்டை சுளித்தபடி, "தம்பி என்றால் போதுமே... வரிஞ்சு கட்டிட்டு சப்போர்ட் பண்றது..." என திட்ட... புன்னகையை மட்டும் கௌதமுக்கு விடையாக கொடுத்தான்.
சிறிது நேரம் இருவரும் அமைதியாக வர கௌதமோ வலியால் முனகினான்.
"டேய் வலிக்குதாடா?" என்று பாசமாக கேட்டவனிடம், "எல்லாம் உன் அப்பாவின் கைங்கரியம் தான்..." என்றான். "இதுக்கு தான் அவனை போட நினைச்சேன்" என்று இறுகிய முகத்துடன் சொன்ன சாணக்கியனை கூர்ந்து பார்த்தவன், "அதுக்கு நான் விடமாட்டேன்" என்றான்.
அவன் பதிலால் கெளதம் மீது சாணக்கியனுக்கு கொலை வெறி எழுந்தது.
கோபத்தை கட்டுப்படுத்தியவன் கதையை மாற்றும் பொருட்டு, "அவன் ஏன்டா எனக்கு துப்பாக்கியை நீட்டினான்?" என்று சந்தேகமாக கௌதமிடம் கேட்க, கௌதமோ, "அத நீ சொல்லாதே... ஏன்டா உங்க ரெண்டு பேருக்கும் ஒழுங்கான அடியாட்கள் கிடைக்காதா? அன்னைக்கு என்னனா நீ செட் பண்ணின ஆள் என் கழுத்துல கத்தியை வைக்கிறான்.இன்னைக்கு உங்க அப்பாவோட ஆள் உனக்கு துப்பாக்கியை நீட்டுறான். என்ன தான் ஆட்களை பிடிக்கிறீங்களோ தெரியல" என்று சலித்துக் கொண்டான்.
"அன்னைக்கு மிஸ் ஆச்சு அடுத்த கிழமை அவனை போடுவேன் பாரு" என்றவனிடம், "எப்படியும் நான் காப்பாத்திருவேன்... ஆனா ப்ளீஸ் உன் அடியாட்களிடம் சொல்லி வை கௌதம் கிருஷ்ணா சார் மேல நகம் கூட பட கூடாது என்று... உண்மையாவே முடியலடா..." என்று பரிதாபமாக சொன்னவன் தோளில் சிரித்துக் கொண்டு கையை போட அது அவனுக்கு மேலும் வலித்தது.
"எடுடா கையை... ரொம்ப வலிக்குது" என்றவனிடம், "சாரி சாரி" என்றபடி சாணக்கியன் கையை எடுத்தான்.
சாணக்கியனை பார்த்த கெளதம், "உன் தம்பி கிட்ட கட்டாயம் போகணுமாடா? அவன் புல்லட்டை இருக்கிற கோவத்துக்கு இன்னும் உள்ள இறக்கிருவான்." என்றான்.