அத்தியாயம் 13
அன்னையுடன் பேசியபடி அவன் வெளியேறி விட, அவளுக்கு தான் எப்படி அவனை எதிர்கொள்வது என்று தெரியாமல் அவஸ்த்தையாகி போனது. கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியேறியவளை ஒரு கணம் திரும்பி பார்த்தவன் " உனக்கு டிரான்ஸ்போர்ட் அரேஞ் பண்ணி இருக்கேன்.. ஆபீஸ் வெஹிகிள் நான் பெர்சனலா யூஸ் பண்ண மாட்டேன்.. கார்ல உன்னை கொண்டு விட்டுட்டு போற அளவு எனக்கு நேரம் இல்ல" என்று சொல்ல அவளோ "பரவாயில்லை சார், நான் பார்த்துகிறேன்" என்றாள். "ம்ம்" என்றவன் "சரிம்மா நான் கிளம்புறேன்" என்று புறப்பட ஆயத்தமானவன் மாதவி அருகே வந்து அவளிடம் ஒரு விலை உயர்ந்த
பேனையை நீட்டி "பெஸ்ட் ஒப் லக் " என்று சொல்ல அவளோ அதை வாங்கியவள் அவன் காலில் விழ போக "ஹேய் என்ன பண்ற?' என்று சீறியவன் அவள் தோள்களை பிடித்து எழ வைத்தவன் "அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு கிளம்பும்மா" என்றபடி வெளியேறி விட்டான். அவளும் கரிகாலனின் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள் தனது வாழ்வின் முக்கிய நாளை அன்று ஆரம்பித்தாள்.
கல்லூரிக்குள் அவளைக் கண்டதுமே கொஞ்ச சல சலப்பு உருவானது என்னவோ உண்மை தான். ஆனாலும் அதை எல்லாம் சட்டை செய்யாமல் அவளோ புன்னகையாக அனைவரையும் எதிர் கொள்ள அவளது நிமிர்வில் கொஞ்சம் பிரமித்து தான் போனார்கள்.
வகுப்புக்குள் நுழைந்ததுமே நண்பர்களை உருவாக்கி கொண்டவள் கொஞ்சம் கொஞ்சம் புது உலகுக்குள் நுழைந்து கொண்டாள். அவளுக்கும் கல்வியில் அளப்பெரிய ஆர்வம் இருப்பதால் என்னவோ அவ்வளவு ஈடுபாடாக கற்க ஆரம்பித்தாள். இடையிடையே ஆதித்தின் எண்ணம் அவளை கொஞ்சம் படுத்திக் கொண்டு தான் இருந்தது. வலி தாங்கி கஷ்டங்கள் கடந்து தான் எதையும் சாதிக்க முடியும் என்று அறிந்தவளும் அந்த வலிகளை தாங்கி கொண்டாள்.
இப்படியே அவர்கள் வாழ்க்கை நகர ஆரம்பிக்க , அன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அன்று கரிகாலனின் தாயோ " இன்னைக்கு எங்கயாவது வெளிய போகலாம் " என்று சொல்ல அதே நினைப்பு தான் அனைவர்க்கும்..
அவனோ வேலை வேலை என்று திரிவதாலும் அவளோ படிப்பு படிப்பு என்று இருப்பதாலும் இப்போதெல்லாம் சந்திக்கும் நேரம் கூட அரிதாகி தான் போனது.. அவனும் அவள் கல்வியை குழப்ப விரும்பாமல் தள்wbளியே இருந்தாலும் அவள் மேல் காதல் கரை புரண்டு ஓடியது என்னவோ உண்மை தான். அவள் கல்வியில் மூழ்கி போனதால் இந்த எண்ணங்கள் வராமல் இருந்தாலும் அவனை காணும் போதெல்லாம் அவள் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது என்னவோ உண்மை தான்.. இன்று தான் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைத்து இருக்க கடற்கரைக்கு போக அனைவரும் சம்மதித்து இருந்தார்கள்.
இதே சமயம் விருத்தாச்சலம் கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போய் இருக்க அவருக்கு அடுத்து கட்சியை கட்டிக் காத்தது என்னவோ மதுபாலா தான். கட்சி தலைமை என்றால் சும்மாவா என்ன?? அவளுக்கும் மூச்சு விட நேரம் இல்லாமல் இருக்க அன்று அவளுக்கும் கூட கடற்கரையில் தான் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கரிகாலனின் குடும்பமும் ஆயத்தமாகி கடற்கரையை அடைந்தவர்கள் அங்கிருந்த மணலில் அமர்ந்து கொள்ள ஆதித்தும் கடற்கரை மணலில் சந்தோஷமாக பிஞ்சு பாதங்கள் கொண்டு நடந்து விளையாட ஆரம்பித்து இருந்தான்.
அதை அனைவரும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருக்க அவனோ அவன் தாத்தாவுடனும் பாட்டியுடனும் வீடு கட்டிக் கொண்டு இருந்தவனிடம் " வாடா ஐஸ்க்ரீம் வாங்கி வருவோம் " என்று கரிகாலன் அழைக்க அவனோ இல்லை என்று தலையாட்டி விட்டு வீடு கட்ட ஆரம்பித்தான். கரிகாலனோ எழுந்து மணலை தட்டியவன் " சரி நான் வாங்கி வரேன் " என்றபடி நடக்க ஆரம்பிக்க , " நானும் வரேன் " என்றாள் மாதவி.
உடனே அவன் கையை நீட்டி அவளை எழுப்ப உதவி செய்ய அவளும் தனது மென் கையை அவன் கை மேல் வைக்க அவனோ அவள் கையை இறுக பற்றிக் கொண்டு அவளை எழுப்பி விட்டான். அவன் கை கொடுத்த அழுத்தத்தில் அவள் உடல் சிலிர்த்து போக " ச்ச கொஞ்சமும் ஸ்டெடி இல்ல " என்று தனக்கு கடிந்து கொண்டவள் அவன் முகத்தை பார்க்காமலே எழுந்து கொண்டாள்..
எழுந்ததுமே அவன் கையில் இருந்து தனது கையை விலக்கி கொண்டவள் அவன் அருகே பட்டு படாமல் தொட்டும் தொடாமல் ஒரு தூரத்தில் நடந்து வந்தாள் .. ஐஸ்க்ரீம் விற்கும் இடத்துக்கு போக முதல் அவள் கண்ணில் பட்டது என்னவோ பலூன் சுட்டு பரிசை வாங்கும் கடை தான். அதையே அவள் பார்த்துக் கொண்டு வேகத்தை குறைக்க , திரும்பி பார்த்த கரிகாலன் " விளையாட போறியா? " என்று கேட்டான். அவளோ " ம்ம் " என்று புன்னகைத்தபடி சொல்ல " சரி வா " என்று அழைத்து சென்றவன் " துப்பாக்கியை இவங்க கிட்ட கொடுப்பா " என்றபடி மார்புக்கு குறுக்காக கையை கட்டியபடி நின்று இருந்தான்.
கையில் துப்பாக்கியை மாதவி தூக்க அந்தக் கடைக்காரனோ " ஒவ்வொரு பலூனுக்கும் ஒவ்வொரு பரிசும்மா " என்று சொல்ல அவளும் " எல்லாம் எனக்கு தான். பாருங்க " என்று சொன்னவள் துப்பாக்கியை பிடிக்க பக்கத்தில் நின்ற கரிகாலனோ பின் பாக்கட்டில் இருந்து பர்ஸை வெளியே எடுத்தவன் அவனுக்கு காசை நீட்டினான். அவளும் தொடர்ச்சியாக சுட முயன்று எல்லாம் தோல்வியிலேயே முடிய அவனோ ஒவ்வொரு பண தாளாக அவனிடம் கொடுத்து கொண்டு இருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் கடைசியாக இருந்த மாற்றிய காசை கொடுத்தவன் மாதவியிடம் திரும்பி " இது தான் கடைசி ...இதுக்கு மேல மாத்துன காசு இல்ல.. " என்று சொல்ல அவளோ " இப்போ பாருங்க சுட்டு காட்டுறேன் " என்றபடி துப்பாக்கியை பிடிக்க கடைக்காரனோ " சார் பெரிய காசா இருந்தா கூட பரவாயில்ல நான் மாத்துவேன்" என்று சொல்ல அவனை இதழ்களை குவித்து மேலிருந்து கீழ் பார்த்தவன் " உன் காரியத்தில் நீ கண்ணா இருக்க " என்று சொன்னான். அதைக் கேட்டு சிரித்த கடைக்காரன் " ஒரு பெட் சார்...இந்த பலூன் ஒன்னை அவங்க சுட்டாங்கன்னா இந்த லைன்ல இருக்கிற அவ்வளவு பரிசும் அவங்களுக்கு தான்" என்று பத்து பலூனுக்கு உரிய பரிசை காட்டினான். உடனே கரிகாலன் பக்கத்தில் இருந்த மாதவியிடம் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவளோ " சுட்டு உங்க மனதை காப்பாத்துவேன் சார் " என்று சொன்னபடி துப்பாக்கியை பிடிக்க , அவள் பிடித்து இருந்த லட்சணத்தில் ஒரு பலூனும் சுட முடியாது என்று தெளிவாக தெரிந்தது.. கரிகாலனும் துப்பாக்கியை ஒரு கை கொண்டு தூக்கி விட. அதுவோ பழைய நிலையிலேயே வந்து நின்றது..
அவனோ பெருமூச்சுடன் அவள் பின்னே சென்று அவள் கைகள் இரண்டின் மேலும் கைகளை வைக்க அவள் விழிகளோ விரிந்து கொள்ள அவள் இதயமோ துடிக்க ஆரம்பித்தது. அவள் மேனி அவனது மார்பில் மொத்தமாக சாய்ந்து இருக்கிறது. அவளது கரத்தின் மீது பதிந்திருந்த அவன் கரங்கள் அவன் கத கதப்பை அவள் ஸ்பரிசத்தினூடு கடத்த மெல்லிய அவன் தீண்டலில் அவள் மொத்தமாக தொலைந்து போனாள்...
அவன் முகமோ சற்று குனிந்திருக்க அவன் மூச்சு காற்று அவள் கழுத்து வளைவில் பட்டுச் செல்ல அவளோ நிலை கொள்ள முடியாமல் தடுமாறினாள்..இதை அறியாத அவனோ " இப்படி பாயிண்ட் பண்ணி சுடு " என்று சொல்ல இதற்கு பிறகு அவளால் சுட முடியுமா என்ன??
" நீங்களே சுடுங்க " என்று தட்டு தடுமாறி சொல்ல அப்போது தான் தளம்பிக் கொண்டு இருந்த அவள் முகத்தை திரும்பி பார்த்தவன் இதழ்கள் மெலிதாக விரிய அவள் கரம் மீது இருந்த அவன் கரம் கொண்டு சுட்டதில் பலூன் வெடித்து சிதறியது. .
உடனே கடைக்காரன் " சார் இது போங்காட்டம் " என்று சொல்ல அவனோ மெல்லிய சிரிப்புடன் அவளை விட்டு விலகியவன் " நீ டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ல சொல்லலையேப்பா " என்று சொல்ல அவனோ " சரி வச்சுக்கோங்க " என்றபடி பரிசு பொருளை எடுக்க சென்றான். கரிகாலனோ முத்து பற்கள் தெரிய சிரித்தவன் " அதெல்லாம் வேணாம் நீயே வச்சுக்கோ " என்று சொன்னபடி மாதவியை பார்க்க அவளோ ஏதோ யோசனையில் நின்று இருந்தாள். அவனும் அவளை புருவம் சுருக்கி பார்த்து விட்டு " மாதவி " என்று அழைக்க " ஹா சார் " என்றாள் அவள்.
உடனே அவன் " துப்பாக்கியை கொடுத்துட்டு உனக்கு பிடிச்ச ஒண்ண எடுத்துக்கோ " என்று சொல்ல கடைக்காரனிடம் துப்பாக்கியை நீட்டியவள் அங்கிருந்த இரு லாலிபாப்புகளை தூக்கினாள். கரிகாலனோ " க்கும் " என்று சொல்ல , கடைக்காரனோ வாயெல்லாம் பல்லாக நின்று இருந்தான்.. அவ்வளவு பரிசு பொருட்கள் இருக்கும் போது அவள் லாலிபப்பை தூக்கினால் அவனுக்கு லாபம் தானே.. கரிகாலனும் தலையை இருபக்கமும் ஆட்டியபடி " சரி வா " என்றபடி அவள் அருகே நடந்தவன் " உனக்கு லாலிபாப் பிடிக்குமா? " என்று கேட்க " ரொம்ப பிடிக்கும் சார் ...சின்ன வயசிலேயே இது டெய்லி வாங்கி சாப்பிடுவேன் ..ஒன்னு ஆதித்துக்கு ஒன்னு எனக்கு " என்று சொன்னபடி அதை உடைத்து வாய்க்குள் வைத்துக் கொண்டாள். அவனோ அவள் வாயில் இருந்ததை பறித்தெடுத்து தான் உட்கொள்ள முனைய அவளோ " சார் " என்று அழைக்க அவனோ " நான் தானே ஷூட் பண்ணினேன்.. எனக்கு தரமாட்டியா ?? " என்று கேட்க அவளோ " அதெல்லாம் இல்ல சார் எச்சி " என்று முடிக்கவில்லை அதை தனது வாய்க்குள் திணித்துக் கொண்டான். அதைக் கண்டதும் அவள் விழிகள் விரிய அவளுக்கு உணர்வுகள் வித்தியாசமாக தோன்ற ஆரம்பிக்க அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள். அவனோ கண நேரத்தின் பின்னர் லாலிபாப்பை அவளிடம் நீட்டியவன் " பறிச்சுட்டேன்னு கோபமா இருக்கியா?? " என்று கேட்க அவளோ அவன் கரத்தில் இருந்த லாலிபாப்பை யோசனையாக பார்த்தாள்.. அவனோ " ஓஹ் எச்சில.. மறந்துட்டேன் சாரி " என்று முடிக்கவில்லை அவன் கரத்தில் இருந்த லாலிபாப்பை வாங்கியவள் அதை சாப்பிட ஆரம்பிக்க அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் பாக்கெட்டில் கையை விட்டபடி அவளை பார்க்காமலே முன்னால் பார்த்தபடி நடந்து சென்றான்...அவளோ லாலிபாப்பை சாப்பிட்டபடி ஒரு கணம் கடைக்கண் பார்வையை அவனிடம் செலுத்திவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.
ஐஸ்க்க்ரீம் கடையை அடைந்ததும் அவனும் அனைவர்க்கும் ஐஸ்க்ரீமை வாங்கி கொள்ள அவளும் அவன் அருகே நடந்து வந்தாள் .. கரிகாலனோ " லாலிபாப்பை வீட்ட கொண்டு வச்சு கொடு.. " என்று கூற அவளோ " ஐஸ்க்ரீம் கொஞ்சமா கொடுக்கலாம் இல்லன்னா சளி கட்டிக்கும் " என்றாள் .. அவனும் ஆமோதிப்பாக தலை ஆட்டியவன் அவர்களை நோக்கி சென்று ஐஸ்க்ரீமை கொடுத்துவிட்டு அங்கிருந்த மணலில் அமர்ந்தான். மாதவியும் ஐஸ் க்ரீமை ஆதித்துக்கு ஊட்ட கரிகாலனோ இரு ஐஸ்க்ரீம்களையும் கையில் வைத்துக் கொண்டு இருந்தான்.
ஆதித்ததோ ஐஸ்க்ரீமை கொஞ்சமாக சாப்பிட்டு முடிய மாதவியும் " போதும் கண்ணா " என்று சொல்லி ஐஸ்க்ரீமை தள்ளி எடுக்க குழந்தையோ கோபத்தில் தட்டியதில் ஐஸ்க்ரீம் நிலத்தில் விழ கரிகாலனோ தனது ஐஸ்க்ரீமை நீட்டினான். அவளோ " சளி பிடிச்சுக்கும் சார் " என்று சொல்லி முடிய முதல் அதனையும் பறிக்க போக அந்த ஐஸ்க்ரீமும் மணலில் விழுந்தது. அது மணலில் விழ முதல் மாதவியின் உடையிலும் விழ அவளோ " ஹையோ " என்று சொல்லிக் கொண்டாள் .. கரிகாலனின் தாயோ " அவனை என்கிட்ட தாம்மா.... விடமாட்டான்.. இந்த நேரம் அதிகமா ஐஸ்க்ரீம் கொடுக்காதே.. நாங்க கார் கிட்ட நடந்து போறோம் நீ தண்ணில ஐஸ்க்ரீமை கழுவிட்டு கரிகாலனோட வா " என்றபடி ஆதித்தை தூக்கியபடி செல்ல , அவளும் கடல் நீரில் சென்று கழுவி விட்டு வந்தாள் ...அந்த நேரம் எழுந்து நின்ற கரிகாலன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை நீட்ட அவளோ " உங்களுக்கு சார் " என்றாள் .. அவனோ மெல்லிய சிரிப்புடன் " நீ சாப்பிடு " என்று சொல்ல அவளோ " இல்ல " என்று முடிக்க முதல் அவள் கையை பிடித்து அதற்குள் திணித்து இருந்தான். அவளும் அவன் சொல்லை மீறாமல் சாப்பிட்டபடி அவன் கூட நடக்க ஆர்மபிக்க அவனோ " எனக்கு இல்லையா?? " என்று கேட்டபடி அவள் கரம் மேல் கரம் வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் தன்னையே விழி விரித்து பார்த்தபடி இருந்த மாதவியை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே ஐசுகிறீமை சுவைக்க அவளுக்கோ அவன் பார்வையும் செயலும் அவள் கையில் அவன் விரல்கள் போட்ட கோலமும் என்னவோ செய்ய அவள் கை கூட ஐஸ்க்ரீமை பிடிக்க முடியாமல் நடுங்க ஆரம்பித்தது.
அவளோ " வேணும்ன்னா நீங்களே சாப்பிடுங்க " என்று தட்டு தடுமாறி சொல்ல அவனோ " ஏன் நான் சாப்டா நீ சாப்பிட மாட்டியா,?? " என்று கேட்க அவன் நின்ற நெருக்கத்தில் அவன் மூச்சு காற்று அவன் முகத்தை தீண்ட அவளுக்கு அதற்கு மேல் நிலை கொள்ள முடியாமல் போனது.
அவனும் அவள் அவஸ்தையை உணர்ந்து அடக்கப்பட்ட சிரிப்புடன் தள்ளி நிற்க அவளோ அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு குனிந்துகொள்ள அவனோ " சரி வா " என்று சொல்ல அவளும் அவன் அருகே நடந்து சென்றாள் ..
இது யார் கண்ணில் பட்டதோ இல்லையோ அங்கே மீட்டிங்குக்கு வந்து மேடை ஏறி இருந்த மதுபாலா கண்ணில் பட அவளையும் மீறி அவளது வன்மம் வெளி வந்தது..
அவனோ இதை எல்லாம் அறியாமல் அவளை நெருங்கி வந்தவன் கரம் அவனையும் மீறி அவள் கரத்துடன் உரச அவளும் கையை அகற்றாமலே நடந்து வர இதழ்கள் பேசாத காதல் பாஷையை அவர்கள் கரங்கள் பேசிக் கொண்டே இருந்தன.
மதுபாலா அவர்களை பற்றி நினைக்க கூடாது என்று நினைத்தாலும் இருவரினதும் நெருக்கம் அவள் நிம்மதியை மொத்தமாக பறித்து விட பார்வையை கஷ்டப்பட்டு அவர்களிடம் இருந்து அகற்றிக் கொண்டாள்...
அப்போது தான் சலசலப்பு கேட்டு மேடையை பார்த்த கரிகாலனுக்கு மதுபாலா கண்ணில் பட " ஓஹ் இவ மீட்டிங்கா " என்று நினைத்தவன் கரம் இப்பொது உரிமையாக மாதவியின் கரத்தை பற்றிக் கொள்ள , தன் விரல்களோடு ஆழமாக விரல்களை கோர்த்து இருந்த கரிகாலனை பக்கவாட்டாக அவள் திரும்பி பார்க்க அவனோ அவளை பார்க்காமலே முன்னே பார்த்தபடி காரை நோக்கி நடந்து சென்றான். இந்த காட்சி மீண்டும் மதுபாலாவின் கண்ணில் பட இருவரின் பிணைந்த கரங்களை பார்த்தவள் வாயிறோ பற்றி எரிய அவர்கள் நெருக்கத்தை பார்த்தவள் மனமோ " இப்பவே இவ்ளோ க்ளோஸ் ஆஹ் இருக்காங்க தனியே இருக்கும் போது என்ன பண்ணுவாங்க?? அவன் வேற புது பொண்டாடினா சும்மா இருக்க மாட்டானே. " என்று கண்ட மேனிக்கு அவர்கள் அந்தரங்கமாக இருப்பதை அவளையும் மீறி கற்பனை செய்து பார்த்து அவள் வயிறை மேலும் மேலும் எரிய வைத்தது.