ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 12

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 12

அவர்கள் செல்வதை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்த கெளதம் சோபாவில் கண்கள் மூடி அமர்ந்த போது அவன் கண் முன்னே சில பல நினைவுகள் வந்து அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணை துடைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினான்.

அதே போல சாணக்கியனும் வீட்டிலிருந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினான். இடையில் மகாலிங்கம் எப்படி பிரச்சனையிலிருந்து வெளி வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் உருண்டோட திருமணத்துக்கு இன்னும் இரு கிழமைகள் என்ற நிலையில் அன்று சுகாதார விழிப்புணர்வு மாநாட்டுக்காக மகாலிங்கம் பிரதம விருந்தினராக அழைக்கபட்டிருந்தார். வெளியே போக ஆயத்தமான மகாலிங்கத்துக்கு பாதுகாப்பாக மித்ராவும் வர அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தான் கெளதம். மகாலிங்கத்துக்கு பின்னால் வந்த சாணக்கியனின் பார்வை முழுதும் கௌதமிலேயே நிலைத்திருந்தது.

தனக்கு எதிராக ஏதோ அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்று யூகித்த சாணக்கியன் அவனில் இருந்து பார்வையை அகற்றவில்லை.

மகாலிங்கத்திடம் காதில், "நானும் வரேன்" என்று கெளதம் கிருஷ்ணா சொல்ல அவனை ஆச்சரியமாக பார்த்தவர் மறு பேச்சு பேசாமல் தலை ஆட்டினார்.

கௌதமை தாண்டி சாணக்கியன் செல்லும் போது இருவர் கண்களும் சந்தித்து மீண்டன. சுகாதார மாநாடு என்பதால் கயல்விழியும் விஷ்வாவும் மருத்துவர்களாக கலந்துக் கொள்ள வந்தனர். விஷ்வாவுடன் பின்னால் வந்த கயல்விழியோ கௌதமை பார்த்ததும் தலையை குனிந்து வர பக்கத்தில் விஷ்வாவோ கௌதமை முறைத்தபடி வந்தான்.

'ஆளாளுக்கு நம்மள முறைக்கிறாங்கப்பா' என்று மனதுக்குள் சலித்தபடி மகாலிங்கத்துடன் அவர் வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

அவன் அவருடன் போவது அனைவருக்கும் நெருடலாக இருந்தாலும் யாரும் மகாலிங்கத்திடம் இது பற்றி கேட்கவில்லை.தொடர்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த கார்கள் மாநாடு நடக்கும் வளாகத்துக்குள் நுழைந்தன. ஒவ்வொருவராய் இறங்க மகாலிங்கத்துடன் இறங்கிய கெளதமை சாணக்கியன் எரித்து விடுவது போல பார்த்தான்.

அதனை சட்டை செய்யாமல் மகாலிங்கத்துடன் கூட இறங்கிய கெளதம் அவரை விட்டு இம்மியளவும் நகரவில்லை. மாநாட்டில் கூட அவன் மகாலிங்கத்தை விட்டு நகராமல் அவர் பின்னால் கம்பீரமாக மப்டியில் நின்றவனை பார்த்த அனைவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.

மாநாடு முடிந்ததும் ரத்ததான நிகழ்வுகளை பார்வையிடச் சென்றார்.

ரத்தம் கொடுத்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்வையிட்டபடி கட்டில் ஒவ்வொன்றாக தாண்டி வந்தார் மகாலிங்கம். அப்போது யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவர் முன்னால் செல்ல பின்னால் ரத்தம் கொடுக்க ஆயத்தமான ஒருவன் கட்டிலுக்கு கீழிருந்த கத்தியை எடுத்து மகாலிங்கத்தின் கழுத்தை குறி பார்த்தப்படி ஓடி வந்தான். சடுதியில் சுதாரித்து திரும்பிய கெளதம் கண நேரத்தில் பின்னால் திரும்பி தனது பின் பக்க டிஷர்டை கிளப்பி இடுப்பில் சொருகி இருந்த துப்பாகியை எடுத்து அவன் நெற்றியில் குறிவைத்து தனக்கு பின்னால் நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்த சாணக்கியனை முறைத்தபடி சுட்டான்.

ஓடி வந்தவன் நெற்றியில் பட்ட புல்லட்டால் அவ்விடத்திலேயே அவன் சுருண்டு விழுந்தான். விழுந்ததும் பதட்டத்தில் அங்கிருந்த அனைவரும் தெறித்து ஓட மகாலிங்கத்தை பத்திரமாக காவல்காரர்கள் அவரின் காருக்குள் அழைத்துச் சென்றனர்.

அவன் விழுந்த கணத்தில் கௌதமின் கழுத்தை நோக்கி பக்கத்தில் டாக்டர் வேஷம் போட்டிருந்தவன் கத்தியால் குத்த ஆயத்தமான போது அவன் கையை பிடித்து கௌதமுக்கு குத்த விடாமல் தடுத்தது சாணக்கியன் தான். கெளதம் நினைத்திருந்தால் தன்னை குத்த வந்தவனிடம் உண்மையை கறந்திருக்கலாம் ஆனால் அதை தவிர்ப்பதற்காகவே, "தாங்க் யு மச்சான்" என்று சாணக்கியனை பார்த்து கண்ணடித்தபடி குத்த வந்தவன் கழுத்தை ஒரு கையால் பிடித்தவன் அடுத்த கையால் அவன் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டான். ஜனதிரள் அங்கும் இங்கும் கூச்சலுடன் ஓடி திரிந்ததால் யாரும் அதை கவனிக்க வில்லை.

அவன் சுருண்டு விழுந்ததும் சாணக்கியனை பார்த்து பெருவிரலை தலை கீழாக காட்டி, "பிளான் பெயிலியர் படி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்றவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சாணக்கியன்.

தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த சாணக்கியனை நெருங்கிய கெளதம், "ரொம்ப விவரமா தான் இருக்கீங்க... ஆனா நீங்க நினைக்கிறது எப்போவும் நடக்காது. என்னை தாண்டி அவர் முடியை கூட புடுங்க முடியாது" என்று ஆவேசமாக உரைத்தவனை இளக்காரமாக பார்த்தவன், "அதையும் பார்க்கலாம்" என்றான்.

சத்தமாக சிரித்த கெளதம், "போகலாமா சார்?" என்று கேட்க அவனை சீண்டும் பொருட்டு அவனுடன் நடந்த படியே, "நீங்க மறந்திட்டீங்க கெளதம் கிருஷ்ணா நாங்க ஒரே வீட்ல தான் இருக்கோம்" என்றவனை கூர்மையாக பார்த்தவன், "வீட்டுல வச்சு உங்க நகம் கூட அவர் மேல் படாது என்று தெரியும் சார், அந்தளவுக்கு நீங்க முட்டாள் இல்ல என்றும் தெரியும்" என கண்ணடித்தான்.

அனைவரையும் காருக்குள் ஏற்றியபின் தான் கயல் விழியை காணவில்லை என்பதை கெளதம் கவனித்தான். "எங்கே கயல்?" என்று அவன் கேட்க பதட்டமடைந்த சாணக்கியனும் விஷ்வாவும் தேட இறங்கிய போது அவர்களுக்கு முன்னால் வந்த கெளதம், "என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டு வர்றேன் நீங்க போங்க" என்றவன், சாணக்கியனிடம் திரும்பி, "சார் மறுபடி உங்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது... ப்ளீஸ் நானே கூட்டி வருவேன்" என்று நக்கலாக மொழிந்தான்.

கௌதமை முறைத்தபடி அவனுடன் மல்லுக்கட்ட போன விஷ்வாவை நெஞ்சில் கை வைத்து தடுத்த சாணக்கியன், "உள்ள போ" என்று சீற வேறு வழியில்லாமல் விஷ்வா காரில் ஏறினான். சாணக்கியனும் கௌதமை முறைத்தபடி காரில் ஏற கார் அவர்களின் வீடு நோக்கி பறந்தது.

ரத்ததான மண்டபத்துக்குள் சென்றவன், "கயல் கயல்" என்று பதறியபடி தேட அவளோ ஜன திரளுக்குள் சிக்குண்டு மூச்சுக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

"எங்கடி பொய் தொலைஞ்ச?" என்று வாய்க்குள் திட்டியபடி ரத்த தான முகம் நடந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் தேடியும் அங்கு அவளை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான்.

சற்று நிதானமாகி தான் பார்க்கும் போது அவள் கடைசியாக நின்ற இடத்தை கண் மூடி யோசித்தவனின் கூர்மையான மூளைக்கு அது உடனே புலப்பட அவ்விடத்தை நோக்கிச் சென்றான்.

அங்கும் பதறி தேடியவனுக்கு அவளை காண கிடைக்கவில்லை. வாசலை நோக்கி ஜனம் ஓடிக் கொண்டு இருந்ததால் அவ்விடம் வெற்றிடமாக இருந்தது. "ஷீட்" என்று நிலத்தில் உதைத்தவனுக்கு அவளின் சிவப்பு நிற சாரி முந்தானை கண்ணில் பட்டது.

அதை குனிந்து தொட்டு தேடியவன் அது கட்டிலின் கீழ் இருந்து வருவதை அறிந்துக் கொண்டான். கட்டிலின் கீழ் குனிந்து பார்த்த போது அவள் கட்டிலின் கீழே பேச்சு மூச்சு இன்றி கிடப்பதை கண்டு பதறியவன் கையை நீட்டி அவளை வெளியில் இழுத்தான்.

அவள் மூச்சின்றி கிடப்பதை பார்த்து பதறியபடி, "எந்திரிடி... ப்ளீஸ் டி" என்று கன்னத்தில் தட்டியும் அவள் எழும்பவில்லை.

அவளை அசைத்தும் அவள் எழும்பாமலும் அவளுக்கு மூச்சும் வராமல் இருக்க தன்னவளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் உடனே சுதாரித்துக் கொண்டு அவள் மூக்கை பொத்தி பிடித்து அவள் வாய் மேல் தனது வாயை வைத்து ஊதி தனது மூச்சை அவளுக்கு கொடுத்தவன் அப்போதும் அசைவில்லாமல் போக தாமதிக்காமல் அவள் மார்பில் கை வைத்து மீண்டும் மீண்டும் அழுத்தினான்.

அழுத்தி விட்டு அவள் முகம் பார்த்தவன், "கயல் கயல்" என்று அவள் கன்னத்தில் தட்டியும் அவள் எழும்பவில்லை. மீண்டும் அவளுக்கு தன் மூச்சை கொடுத்து அவள் மார்பை அழுத்தினான்.

அப்போதும் அவள் எழும்பாமல் போக முதல் முறை வாழ்க்கையில் அவன் கை நடுங்கியது. மீண்டும் மூன்றாம் முறை விடாமல் முயற்சித்தவன் மூன்றாம் முறை அவள் மார்பில் அழுத்திய போது அவள் பெரிய மூச்சுடன் கண்விழித்து எழுந்து அமர்ந்தாள்.

"தாங்க் காட்" என்றபடி அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவன், அவள் அதிர்ச்சியில் இருந்து சுதாரிக்க முன்னமே அவள் முகத்தை இரு கைகளாலும் பிடித்து அவள் இதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டான்.

அவளுக்கு என்ன நடந்தது என்று புரியாமல் இருந்த அதிர்ச்சிக்கு மேலாக அவன் கொடுத்த முத்த அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

அவள் மூச்சுக்காக தான் தள்ளுகிறாள் என்று நினைத்து விலகியவன், "இப்போ ஓகேயா? மூச்செடுக்க முடியுதா?" என்று அவள் கன்னத்தை பெரு விரலால் வருடியபடி கேட்டான்.

அவனை புரியாமல் பார்த்து, "ஓகே" என்றவளை இழுத்தவன் தனது மார்பில் அவள் முகத்தை சேர்த்து அணைத்துக் கொண்டான். 'இவனுக்கு என்னாச்சு?' என்று நினைத்தபடியே அவன் மார்பில் சாய்ந்திருந்த தனது

கன்னத்தை சற்று விலக்கி நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவள் கண்களுடன் தனது கண்களை கலக்க விட்டவன் அவள் இதழ்களில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டான்.

அவளுக்கோ என்ன நடந்தது என்று புரியாமல் இருக்க அவளை யோசிக்க கூட விடாமல், "வா போகலாம்" என்று எழுப்பியவன் அவளையும் கை கொடுத்து எழுப்பி விட்டுக் கொண்டே, 'எப்படி இந்த நெருக்கடிக்குள் போவது ?' என்று சற்று யோசித்தான்.

அவளை நெருக்கத்தில் தள்ளாமல் எவ்வாறு கூட்டிச் செல்வது என்று யோசித்தவன் அவள் இடையை வலது கையால் சுற்றி ஒற்றை கையால் அவள் முகம் தனது முகத்துக்கு நேரே வரும் உயரத்துக்கு தூக்கியவன், "என் கழுத்தை கட்டி புடிச்சுக்கோ" என்றான்.

அவளோ தயங்கியபடி அவனை பார்க்க, "பிடி" என்று உறுமினான். பயத்தில் அவன் கழுத்தை சுற்றி தனது இரு கரங்களையும் கோர்த்தவள் அவன் தோளில் தனது நாடியை பதித்துக் கொண்டாள்.

நெருக்கத்துக்குள் புகுந்தவன் ஒற்றை கையால் கூட்டத்தை விலக்கியபடி ஒரே மூச்சில் வாசலை நோக்கி வெளியேறினான்.

அவள் கன்னம் அவன் தாடி அரும்பிய கன்னத்தில் உரச அவள் உடல் சிலிர்க்க தொடங்கியது. அவன் அணைப்பில் கண் மூடி நெகிழ தொடங்கியவள் அவனை இறுக்கி அணைத்திருந்தாள். அவள் இறுகிய அணைப்பில் அவளின் மனதை அறிந்தவன் உடல் அதிர்ச்சியில் விறைக்க வேகமாக வாசலை அடைந்தான். அப்போதும் அவள் பிடி தளராமல் இருக்க, "கயல் கயல்" என்று மென்மையாக அழைத்தான். அப்போதும் அவனை அவள் அணைத்தபடி கண் மூடி இருக்க அவனின் ஒரு கை அவள் இடையை சுற்றி அணைத்திருக்க மற்றைய கை தன்னை அறியாமல் அவள் வெற்றிடையை வருடியது. சுருக்கமாக சொல்ல போனால் இருக்கும் இடம் மறந்து இருவரும் மோன நிலையில் நின்றிருந்தார்கள்.

அவன் தன்னிலை இழக்கும் நேரம் அவன் தொலைபேசி அலற சுய நினைவுக்கு வந்தவன், "கயல்விழி" என்று கடின குரலில் கர்ஜிக்க சுய உணர்வுக்கு வந்தவள் சட்டென கையை எடுக்க அவளை இறக்கி விட்டான்.

அவளோ சங்கடத்தில் குனிந்தபடி இருக்க அவள் கண் முன் சொடக்கிட்டவன் அவள் நிமிர்ந்து பார்க்க அவளை முறைத்தபடி, "வா" என்றபடி முன்னால் நடந்தான்.

தொலைபேசியை எடுத்து தனது காதில் வைக்க மறுமுனையிலிருந்து சாணக்கியனோ கயலை பற்றி விசாரிக்க, "பைன் நோ ப்ராப்ளம்" என்று பதிலுரைத்தவன் போனை கட் பண்ணிவிட்டு தனது சாரதிக்கு அழைத்து வரவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு திரும்பி பார்த்தான்.

அங்கு கயலோ அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்தாள். இடுப்பில் இரு கைகளையும் வைத்து அவள் வருவதை பார்த்தவன்,

'இவளுக்கு பேஷன் ஷோவில நடக்கிறதா நினைப்பா?' என்று கடுப்பாக மனதுக்குள் நினைத்துவிட்டு அவளை நோக்கி நடந்தவன், "இன்னும் மெதுவா வா நிலத்துக்கு நோக போகுது" என்று சினம் கலந்த குரலில் உரைத்து விட்டு அவள் கையை பிடித்து விறு விறுவென இழுத்துச் சென்றான்.

அவளோ மனதுக்குள், 'கொஞ்ச நேரத்துக்கு முதல் கிஸ் பண்ணினான். பிறகு அணைத்தான் இப்போ முறைக்கிறான். இவன் என்ன டிசைனோ?' என்று யோசித்தபடி அவன் பின்னால் இழுபட்டு ஓடிச் சென்றாள்.

அவன் ஜீப்பில் அவளை பின்னால் ஏறச் சொல்லி கதவை திறந்து விட்டான். அவள் ஏறிய பின்னர் முன்னால் சாரதிக்கு பக்கத்தில் ஏறியவன் வண்டியை எடுக்க சொன்னான். மறந்தும் அவள் புறம் அவன் திரும்பவில்லை.

அவளை பார்க்க தோன்றிய மனதை, 'யு பிளடி கெளதம், கண்ட்ரோல் யுவர் செல்ப்' என்று தனக்கு தானே திட்டியபடி வெளி நோக்கியே பார்த்தபடி அவள் வீட்டை அடைந்தான்.

அவன் ஒற்றை பார்வையை எதிர்பார்த்து ஏங்கியவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச ஜீப்பை விட்டு இறங்கியவள் அவனை பார்த்தாள்.

அவனோ இறுகிய முகத்துடன் முன்னோக்கி பார்த்துக் கொண்டிருந்தவன் அவளை பார்க்கவே இல்லை.

அது அவளுக்கு வலியை ஏற்படுத்த, "தாங்க் யு, நான் கிளம்புறேன்" என்று உரைத்து விட்டு குனிந்தபடி நடந்து வீட்டை நோக்கிச் சென்றவளின் முதுகை பார்த்து வெறித்தவன் சாரதியிடம் போக சொல்லி உத்தரவிட்ட பின் கண் மூடி சீட்டில் சாய்ந்தான்.

அடுத்த நாள் காலையில் சாணக்கியன் பத்திரிக்கை படித்துக் கொண்டிருக்க மகாலிங்கம் பெயருக்கு மறுபடி ஒரு கவர் வந்திருந்தது. மகாலிங்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் அதை சாணக்கியன் கையில் காவலாளி கொடுத்தான்.

அதை பெற்ற சாணக்கியன் அவரை பார்க்க அதிர்ந்த மகாலிங்கம் சாப்பிட்ட கையுடன் எழுந்து வந்து அதை சாணக்கியனிடம் இருந்து பறித்துக் கொண்டார். பறித்தவர் கை கழுவாமலேயே அறைக்குள் செல்ல அதை பார்த்து ரகசியமாக சிரித்த சாணக்கியன் பத்திரிக்கையை புரட்ட தொடங்கினான். மீண்டும் அதே புகைப்படங்கள், அதிர்ந்தவர் கௌதமுக்கு அழைத்தார்.

"டேய் ஏன்டா திருப்பி திருப்பி அந்த போட்டோஸ் எல்லாம் அனுப்புற?" என்று அவனிடம் எகிற முதல் நாள் களைப்பில் தூங்கி தாமதமாக எழுந்தவன், "ஷீட்" என்றபடி, "வைங்க மாமா நான் பார்த்துக்கிறேன்" என்றான்.

"என்னத்த பார்த்து என்னத்த கிழிச்ச... பேர் தான் போலீஸ்..." என்று அவர் கடுப்பாக எரிச்சலடைந்தவன் தொலைபேசியை கட் பண்ணிவிட்டு, "அடங்க மாட்டேன் என்றானே" என்றபடி தலையை பிடித்து அமர்ந்தவன் வேறு வழி இல்லாமல் சாணக்கியனுக்கு அழைத்தான்.

அவனின் எண்ணை பார்த்த சாணக்கியன் தொலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அதை உயிர்ப்பித்தான். "எங்கே என் பென் ட்ரைவ்?" என்று நேரடியாகவே கெளதம் கேட்க, "எந்த பென் ட்ரைவ்?" என்று புரியாமல் சாணக்கியன் கேட்டான்.

"சரி பென் ட்ரைவ் உங்க கிட்டயே இருக்கட்டும் ஆனா இனி தயவு செய்து போட்டோ அனுப்பாதீங்க" என்று பணிவாக சொன்னதில் ஆச்சரியப்பட்ட சாணக்கியன், "புலி பதுங்குறது பாயுறதுக்கு தான்னு தெரியும் கெளதம்... சோ உங்க நடிப்பு என் கிட்ட வேகாது" என்றான்.

தன்னை கண்டுக் கொண்டவனை மனதில் மெச்சிய கெளதம், "நீங்க பென் ட்ரைவை தரா விட்டால் நானே எடுத்துக்கிறேன்... இதற்காக ஒரு உயிர் போக கூடாதுனு பார்த்தேன்...ஆனா இப்போ உங்க விருப்பப்படியே செஞ்சிரலாம்" என்றபடி தொலைபேசியை வைத்தான். அன்று பின்நேரமே அவன் பென் ட்ரைவ் கொடுத்து வைத்திருந்த அவன் ஆள் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சாணக்கியன் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.


அதை கேட்டு அதிர்ச்சியடைந்தவன், 'ஷீட், உன்ன நான் எடை போட்டது தப்பாயிடுச்சு...' என்று நினைத்தான். கெளதமோ அலுவலகத்தில் பென் ட்ரைவை கண் முன்னால் சிரித்தபடி சுழட்டிக் கொண்டிருந்தான்.
 
Top