ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 11

அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, எழுந்துக் கொண்டவள், அவனை தொடர்ந்து நடந்து வெளியே வந்தாள்.

அவன் நடைக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை... ஓட்டமும் நடையுமாக தான் ஓடி வந்தாள்.

அவனோ லக்கேஜை எடுத்தவன், அவளுக்கு தனி ட்ராலி ஒன்றை கொடுத்து, "உன் லக்கேஜை நீயே கொண்டு வா" என்று சொல்லி விட்டு அவன் முன்னேச் செல்ல, அவன் பின்னே இழுபட்டுச் சென்றாள் பெண்ணவள்...

அவன் வாசலுக்குச் செல்ல, அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தான் அவனது ட்ரைவர் ரிச்சர்ட்...

சர்வஜித்தைக் கண்டதுமே, அவனை நோக்கி வந்தவன், சர்வஜித்திடம் இருந்த ட்ராலியை வாங்கிக் கொள்ள, அவனும், ஒற்றைக் கையால் தலை முடியை சரி செய்துக் கொண்டே, ரிச்சர்ட் அருகே நடந்தவன், "ஹவ் டூ யூ டூ?" என்று கேட்க, "குட் சார், ஹவ் இஸ் யோர் ஜேர்னி?" என்று கேட்டான் அவன்...

"நாட் பேட்" என்றபடி நடந்தான் சர்வஜித்...

அவர்களை பார்த்துக் கொண்டே பின்னால் வந்த ஆதிரையாழோ, 'வெள்ளை காரன் கூட எல்லாம் பேசுறார்' என்று இதழ்களை பிதுக்கிக் கொண்டே நினைத்துக் கொண்டாள்.

நியூயோர்க்கின் ஜே. ஃஎப். கே எயார் போர்ட்டில் இருந்து வெளியே வந்தவளுக்கு குளிர் ஜில்லென்று இருந்தது...

இரவு நேரம் அது...

இதற்கு அங்கே சம்மர் தான்...

அந்த குளிர் கூட அவளால் தாங்க முடியவே இல்லை...

ட்ராலியை வேறு தள்ள வேண்டும்... கஷ்டப்பட்டு தள்ளிக் கொண்டே நடந்தாள்.

அப்படியே அவர்கள் கார் அருகே வந்ததுமே, பெட்டிகளை உள்ளே ரிச்சர்ட் அடுக்கி வைக்க, இப்போது தான் திரும்பி ஆதிரையாழைப் பார்த்தான்...

அவளோ அனைத்தையும் மிரட்சியாக பார்த்துக் கொண்டே நிற்க, "ரிச்சர்ட் இவ லக்கேஜையும் உள்ளே வை" என்று ஆங்கிலத்தில் சொல்ல, ரிச்சர்டோ சட்டென திரும்பி ஆதிரையாழை புருவம் சுருக்கி பார்த்தான்...

யார் என்று தெரியவில்லை அவனுக்கு...

தெரிந்துக் கொள்ள ஆவல் இருந்தாலும் அடக்கிக் கொண்டே அவள் ட்ராலியில் இருந்த லக்கேஜுகளை காரினுள் வைத்தான்...

"பின்னால ஏறிக்கோ" என்று அவளிடம் சொல்லிக் கொண்டே சர்வஜித் முன்னேச் செல்ல, டெஸ்லா வகை காரின் பின் கதவு அருகே வந்தவளுக்கு அதனை எப்படி திறப்பது என்று தெரியவே இல்லை...

ரிச்சர்டும் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து விட்டான், சர்வஜித்தும் உள்ளே ஏறி விட்டான்... ஆனால் அவள் வெளியிலேயே நின்று இருந்தாள்.

சட்டென கார் கண்ணாடியை இறக்கிய சர்வஜித்தோ, "என்ன வரலையா?" என்று கேட்க, அவளோ பதறி போனவள், "ஐயோ வரேன்... எனக்கு கதவு திறக்குறது எப்படினு தெரியல" என்றாள்.

"ஷீட்" என்றபடி இறங்கியவனோ, "இப்படி தான்" என்று கடுப்புடன் அவளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு மீண்டும் காரில் ஏற, உள்ளே ஏறியவளுக்கு காரின் பிரம்மாண்டம் ஆச்சரியம் தான்...

அவளுக்கு தெரிந்தது எல்லாம் மருதநாயகத்தின் உடைசல் கார் தான்...

உள்ளே குளிர் குறைவாக இருந்தது...

சற்று இதமாக இருக்க, "வெளிய குளிரா இருக்கு... உள்ளே குளிரலையே" என்றாள்.

"ஹீட்டர் போட்டிருக்கு" என்று அவனிடம் இருந்து பதில் வந்தது...

அதன் பிறகு அவன் ப்ளூ டூத்தில் பிசினஸ் விஷயமாக பேச ஆரம்பித்து விட்டான்...

அவளுக்கும் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல், நியூயோர்க் நகரத்தின் பிரம்மாண்டத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருக்க, காரும் புறப்பட்டு இருந்தது...

அவன் வீட்டுக்குச் செல்ல கொஞ்ச நேரம் தான் எடுத்தது...

அவன் வீடும் வந்து விட்டது...

பெரிய பரப்பளவில் அமைந்த மாளிகை...

வரிசையாக கார்கள் அடுக்கப்பட்டு இருந்தன..

அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்துக் கொண்டன...

அதே ஆச்சரியத்துடன் காரில் அவள் அமர்ந்து இருந்தாள்.

அவன் வீட்டு வாசலில் கார் வந்து நின்று இருக்க, கார் கதவை திறந்த சர்வஜித்தோ, "வரலையா நீ?" என்று கேட்டான்...

"ஐயோ வரேன்" என்று சொல்லிக் கொண்டே, கார் கதவை திறக்க முயன்றாள்.

மீண்டும் எப்படி திறப்பது என்று தெரியாமல் அவள் தடுமாற, 'சரியான இம்சை' என்று அவன் நினைத்துக் கொண்டே, கையை பின்னால் நீட்டி கார் கதவை திறந்து விட்டு இறங்கிக் கொள்ள, அவளும் இறங்கிக் கொண்டாள்.

இறங்கிய சர்வஜித், வீட்டை நோக்கிச் செல்ல, ரிச்சர்ட் அவனது பெட்டிகளையும் ஆதிரையாழின் பெட்டிகளையும் தூக்கி வந்து வீட்டு வாசலில் வைத்தான்...

"தேங்க்ஸ் ரிச்சர்ட்" என்று சொல்லிக் கொண்டே, ரிமோர்டினால் வீட்டை திறந்து உள்ளே நுழைந்தான் சர்வஜித்...

இப்படி ஒரு பிரம்மாண்ட நவநாகரீக வீட்டை இன்று தான் முதல் முறை பார்க்கின்றாள் ஆதிரையாழ்...

வியந்து வியந்தே களைத்து போனவள் வீட்டினுள் நுழைந்துமே, அனைத்து விளக்குகளும் போடாமலே சட்டென்று எரிந்தன...

"ஐயோ, லைட் போடாமலே எரியுது" என்று சொல்லி முடிக்க முதல் வாசல் கதவு தானாக அடைக்கப்பட இன்னும் பயந்து விட்டாள்.

"பேய் பங்களா போல இருக்கு" என்றாள். அவளை திரும்பி முறைத்துப் பார்த்த சர்வஜித்தோ, "எல்லாமே சென்சார்..." என்று சொல்ல, "அப்படின்னா?" என்றாள்.

அவனுக்கு எங்காவது சென்று தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது...

"எல்லாமே ஆட்டோமேட்டிக் ஆஹ் பண்ணிடும்... இதுக்கு மேல உனக்கு புரியுற போல எனக்கு விளக்கம் கொடுக்க தெரியல" என்று சொல்லிக் கொண்டே, லேப்டாப்பை எடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்...

அவளும் குடு குடுவென்று ஓடிச் சென்று பின்னால் நுழைய, "இப்போ எதுக்கு உள்ளே வந்த?" என்று எறிந்து விழுந்தான்...

"அப்போ நான் எங்க போறது?" என்றாள் அவள்...

"ஊர்ல வேற வழி இல்லாம ஒரே ரூம், ஆனா இங்க வேற வேற ரூம் தான்... புரியுதா?" என்று கேட்டுக் கொண்டே, அவனுக்கு அடுத்து இருந்த அறைக்குள் அவளை அழைத்துச் சென்று விட்டான்...

அதுவோ பிரம்மாண்ட கட்டிலுடன் பெரிதாக இருந்தது...

"எல்லாமே பெருசு பெருசா இருக்கே" என்றாள். அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "இங்க நீ இருக்கிறதுக்கு டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு... குளிச்சிட்டு வா, அத பேசிக்கலாம்" என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் சென்று விட்டான்...

அவளும் அந்த அறையை அரை மணி நேரத்துக்கு மேல் ஆராய்ந்து விட்டே குளிக்கச் சென்றாள்.

தட்டு தடுமாறி எல்லாமே கற்றுக் கொண்டாள்.

அவனை ஒவ்வொன்றுக்கும் அழைப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது...

அப்படி அழைத்தால் அவன் ஏதாவது தேவை இல்லாமல் பேசி விடுவான் என்று அவளுக்கு தெரியும்...

குளித்து விட்டு சுடிதாரை அணிந்துக் கொண்டே வெளியே வந்தாள்.

அங்கே ஏற்கனவே குளித்து விட்டு மேசையில் அமர்ந்து இரவு உணவை அருந்திக் கொண்டு இருந்தான் சர்வஜித்...

தயங்கி நின்றவளை திரும்பிப் பார்த்தவன், "வா" என்று அழைக்க, அவளும் சென்று அவன் முன்னே அமர்ந்தாள்...

அவளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே தனது தட்டில் இருந்த சேலடை சாப்பிட்டான்...

அவளுக்கோ, 'இது என்ன? எல்லா காய் கறிகளையும் பச்சை பச்சையா சாப்பிடுறார்?' என்று நினைக்க, அவனோ சாப்பிட்டு முடிந்து கரண்டியை பிளேட்டில் வைத்துக் கொண்டே, அருகே இருந்த டிஸ்ஸுவினால் வாயை துடைத்தான்...

அவள் அவனையே இமைக்காமல் பார்த்திருக்க, அவனோ நீரையும் அருந்தி விட்டு, "இங்க நீ இருக்கணும்னா நிறைய டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு" என்றான்...

அவளும், "ம்ம்" என்று சொன்னாள்.

"இங்க என் சாப்பாடு நானே பார்த்துப்பேன்... ஊர்ல சமைச்ச போல எல்லாம் சமைக்க முடியாது... வெய்ட் போடும்... அதனால இத தான் நீயும் சாப்பிடணும்... சேலேட் பாக்கெட்ஸ் ஃப்ரிட்ஜ்ல இருக்கும்... இப்படி சாப்பிட்டா ஓகே" என்றான்...

"பச்சையாவா?" என்று அவள் அதிர்ந்து கேட்க, "எஸ்" என்று முடித்து இருந்தான்...

அவளோ, 'சரி சாப்பாட்டுலயே கையை வச்சுட்டார்' என்று நினைத்துக் கொள்ள, "அடுத்தது, டெய்லி நான் பக்கத்துல இருக்கிற ஜிம்முக்கு போவேன்... எனக்கு திங்க்ஸ் எல்லாம் கெர்ரி பண்ணி நீ தான் வரணும்" என்றான்...

அவளோ, "ம்ம்" என்று தலையாட்ட, அடுத்தது, "உன்னை நான் யார் கிட்டயும் பொண்டாட்டினு சொல்ல போறது இல்ல... இங்க என்னோட ஸ்டேட்டஸ் வேற, அங்கே பார்த்த சர்வஜித் இல்ல இங்க இருக்கிறது... புரியுதா?" என்று கேட்டான்...

"அப்போ தங்கச்சினு சொல்வீங்களா?" என்று அவள் கேட்க, அவனுக்கும் புரையேற, தலையில் தட்டிக் கொண்டே, அவளை பார்த்தவன், "வாட் தெ ஃப" என்று ஆரம்பித்து மீதி வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, "வேலைக்காரினு சொல்லுவேன்" என்றான்...

நெஞ்சில் மெல்லிய வலி அவளுக்கு...

மறுக்க முடியாத நிலையில் இருக்கின்றாள்...

"ஓகே" என்றாள் மென்குரலில்...

"குட்" என்று சொன்னவனோ, "இப்போதைக்கு இவ்ளோ தான், நான் என்ன பண்ண சொன்னாலும் கரெக்ட் டைமுக்கு பண்ணனும்... இல்லனா கண்டிப்பா தண்டனை உண்டு" என்று சொல்லிக் கொண்டே, அவளுக்காக எடுத்து வைத்து இருந்த சேலட் ப்ளேட்டை அவளை நோக்கி நகர்த்தியவன், "சாப்பிட்டு போய் படு... காலைல ஜிம் போகணும்" என்று சொல்லிக் கொண்டே நேரத்தைப் பார்த்தான்...

அது மணி பத்தரையைக் காட்டியது...

"காலைல அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கணும்" என்று சொல்லிக் கொண்டே, எழுந்தவன் அறைக்குள் நுழைய, அவளோ அவன் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு, "இத எப்படி சாப்பிடுறது?" என்று புலம்பிக் கொண்டே அதனை சாப்பிட ஆரம்பித்தாள்...

பசி வயிற்றைக் கிள்ளியதால் வேறு வழி இல்லை, கிடைத்ததை சாப்பிட்டு தான் ஆகணும்... “அமெரிக்கான்னா நானும் பெருசா கற்பனை பண்ணிட்டேன்... இங்க என்னனா ஆதிவாசி போல இலை குலையை சாப்பிடுறாங்க” என்று முணு முணுத்துக் கொண்டே சாப்பிட்டாள்...

சாப்பிட்டு விட்டு அறைக்குள் நுழைந்து பஞ்சு மெத்தையில் படுத்தவளுக்கு களைப்பில் அப்படி ஒரு தூக்கம்...

அடுத்த கணமே தூங்கிப் போனாள் பெண்ணவள்...

சர்வஜித் தனது வேலைகளை முடித்து விட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் தூங்கிப் போனான்...

காலையில் ஆதிரையாழ் கண் விழித்தது என்னவோ கதவு தட்டும் சத்தத்தில் தான்... பதறி எழுந்தவள் நேரத்தைப் பார்த்தாள்...

நேரம் மணி ஐந்தைக் காட்டியது...

குளிருக்கு இன்னும் தூங்க வேண்டும் போல இருந்தது...

ஆனால் அவன் விட மாட்டான் என்று தெரியும்...

சலிப்பாக எழுந்து கதவை திறந்தாள்...

"சீக்கிரம் ரெடி ஆகி வா, ஜிம் போகணும்" என்றான்...

அவளும், "ம்ம்" என்று தலையாட்டியவள், சுடிதாருக்கு மேலே அவன் வாங்கி கொடுத்த ஜெர்க்கினை அணிந்துக் கொண்டே வெளியே வந்தாள்.

அங்கே அவன் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக் கொண்டே இருக்க, அவளும் அமர்ந்து ஷூவை போட, அவனோ, "சுடிதார், ஷூ ச்ச என்ன ஒரு ட்ரெஸ்ஸிங் சென்ஸ்" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே எழுந்தவனோ ஜிம்முக்கு போக எடுத்து வைத்து இருந்த தனது பையை தூக்கி அவளிடம் நீட்டினான்...

அவளோ அவனை புரியாமல் பார்க்க, "தூக்கிட்டு வா" என்று சொன்னான்...

அவளும் அதனை தூக்கிக் கொண்டாள்.

உள்ளே நீர் பாட்டில், மற்றும் எனெர்ஜி ட்ரிங்க் பாட்டில்கள் இருக்கும் போல... பாரமாக இருந்தது...

அவனோ வேகமாக வீட்டை விட்டு வெளியேற, அவளும் அவனை தொடர்ந்து வெளியேறினாள்...

இருளாக இருந்தது...

இன்னும் முழுதாக விடியவில்லை...

குளிர் ஜில் என்று இருந்தது...

'வெயில் காலமே இப்படினா குளிர் காலம் எப்படி இருக்கும்?' என்று யோசித்துக் கொண்டாள்.

அவனோ காதில் ப்ளூ டூத்தும் ஜெர்க்கினுமாக நடந்தான்...

அவன் வேகத்துக்கு அவள் ஓடி தான் சென்றாள்.

அவளுக்கு ஜிம்முக்கு போகாமலே களைத்தது...

ஜிம்மின் வாசலுக்கு வந்த சர்வஜித்தோ, ஜிம்முக்குச் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் பிரத்தியேக அட்டையை வாசலில் காட்ட, ஜிம்மின் வாசல் திறந்துக் கொண்டது...

பிரம்மாண்டமான ஜிம் அது...

நூற்றுக்கணக்கான உபகாரணங்கள்.

உள்ளே நுழைந்த சர்வஜித்தைக் கண்டதுமே, "குட் மார்னிங் சார்" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் இருந்து ஓடி வந்தான் ஜிம்மை மேற்பார்வை செய்பவன்...

"குட் மார்னிங்" என்று சொல்லிக் கொண்டே, ஜெர்க்கினை கழட்டி அங்கே இருந்த ஹங்கேரில் அவன் மாட்ட, அந்த மேற்பார்வையாளனோ பையை தூக்கிக் கொண்டே நின்ற ஆதிரையாழை புருவம் சுருக்கி பார்த்தான்...

சர்வஜித் அதனை கண்டும் காணாமல், கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, குறுக்காக பிடித்தபடி, உடலை இரு பக்கமும் வளைத்து ஸ்ட்ரெட்ச் அப் செய்தான்...

சர்வஜித்திடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், "சார் இவங்களுக்கும் ட்ரெயின் பண்ணனுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டான் அந்த மேற்பார்வையாளன்...

"ஷீ இஸ் மை சர்வன்ட்" என்று சொல்லிக் கொண்டே, அவளை பார்க்க, அவளுக்கு வேலைக்காரிக்கு ஆங்கிலம் தெரியும் அல்லவா?

முகம் சட்டென வாடிப் போனது...

அவளை அழுத்தமாக பார்த்த சர்வஜித்தோ, "இங்க திங்க்ஸ் எல்லாம் வச்சிட்டு நில்லு, நான் கூப்பிடுற நேரம், கேக்கிற திங்க்ஸ் எடுத்து கொடுக்கணும்" என்று சொல்லிக் கொண்டே, ஜிம் செய்யச் சென்று விட்டான்...

அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த மேற்பார்வையாளனோ, "இது தான் சாரோட அலுமாரி" என்று ஒரு இடத்தைக் காட்ட, அவன் தமிழில் பேசியதை விழி விரித்துப் பார்த்த ஆதிரையாழோ, "தமிழா?" என்று கேட்டாள்.

அவனோ, "பார்க்க எப்படி தெரியுது?" என்று கேட்க, அவளோ, "ம்ம்... பார்க்க நம்ம ஆட்கள் போல தான் கறுப்பு முடியோட இருக்கீங்க..." என்று சிரித்தபடி சொல்ல, "உங்க பேர்?" என்றான் அவன்...

"நான் ஆதிரையாழ்... நீங்க?" என்று அவள் கேட்க, "நான் கபிலன்... இந்த ஜிம்மோட மேனேஜர்" என்றான்...

"ஓஹ்" என்று சொல்லிக் கொண்டே சர்வஜித்தின் பொருட்களை அவனது அலுமாரியில் வைத்து விட்டு அருகே நின்றவளோ, "எவ்ளோ பெரிய இடம்ல" என்றாள்.

"ம்ம், சார் தான் ஓனர்... அவரோட ஜிம் தான் இது" என்று அவள் தலையில் குண்டை தூக்கி போட்டான் கபிலன்...

"சாரா?" என்று அவள் யோசனையாக கேட்க, "ஆமா, சர்வா சாரோட ஜிம் தான் இது" என்றான் அவன்...

அவளுக்கு இப்போது தான் அவனது உயரம் விளங்க ஆரம்பித்தது... அவன் தன்னை திருமணம் செய்ய மறுத்த காரணமும் புரிந்தது...

ஒரு பெருமூச்சு அவளிடம்...

"சரி" என்றாள் உயிர்ப்பற்ற குரலில்...

"ஏதும் ஹெல்ப்னா கேளுங்க" என்று கபிலன் சொல்லி விட்டு நகர, அவளும் அலுமாரிக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டே அந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.

சர்வஜித்தோ கார்டியோ ஓடிக் கொண்டே அவளை கண்ணாடியால் பார்த்தவன், அடுத்து ஹாட் ஜிம் செய்யச் சென்று இருந்தான்...

அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவள் கண்களோ இறுதியாக சர்வஜித்தில் படிந்தது... ஆர்ம் கட் அணிந்து இருந்தான்...

இரு புஜங்களும், மார்பு பகுதியும் தசைக்கோளங்களால் நிரம்பி இருந்தன... அதுவும் அவன் பளு தூக்கி உடற்பயிற்சி செய்யும் போது கையில் இருந்த நரம்புகள் எல்லாம் புடைத்துக் கிளம்பின...

அவனது தோற்றத்தை விழி விரித்துப் பார்த்தவளோ, 'ஒரு அறை அறைஞ்சாலே நான் தாங்க மாட்டேன் போலவே' என்று நினைத்துக் கொள்ள, சட்டென ஜிம்மில் ஈடுபட்டுக் கொண்டே அவளை திரும்பிப் பார்த்தவன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்...

அவளோ சட்டென பார்வையை தாழ்த்திக் கொள்ள, அவனோ அவளை அழுத்தமாக பார்த்து விட்டு உடற்பயிற்சியை தொடர்ந்து இருந்தான்...
 
Super sis
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 11)

இந்த சர்வா ரொம்ப தான் பில்டப் பண்றான். இவனுக்கு மட்டும் தான் எல்லாம் இருக்கா ?
இவன் மட்டும் தான் எல்லாத்தையும் காட்டுவானா..?
ஏன் ஆதிராவுக்கு இல்லையா..?
அவ கிட்ட வேணுமின்னா பணம் இல்லாம இருக்கலாம். ஆனா, அவ கிட்ட இருக்கிற அழகை பார்த்தான்னா.... இவனே சொக்கி விழுந்திடுவான். அப்புறம் எழுந்துக்கவே முடியாது. அப்புறம் ஜிம்மாவது கம்மாவது. கூடிய சீக்கிரம் அந்த காலம் வரத்தான் போகுது பாருங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top