அத்தியாயம் 10
மித்ராவின் திருமணத்தை பற்றி கேள்விப்பட்ட கெளதம் திருமணம் முடியும் வரை தனது திட்டத்தை தள்ளி வைத்திருந்தான். சாணக்கியனுக்கோ வீடு வந்தால், வசுந்தரா நினைவாகவே இருந்தது. வீட்டில் யாருடனும் பேசாதவனுக்கு வசுந்தராவின் துணை அப்போது தேவைப்பட்டது.
அதுக்காகவே சந்தர்ப்பத்தை அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டான். அடுத்த நாள் வசுந்தராவின் அலுவலகத்துக்கு வந்திறங்கியதும் அந்த இடமே சல சலக்க தொடங்கியது.
யாரையும் பார்க்காமல் நேரடியாக வசுந்தரா அறைக்குள் நுழைய அங்கு மீட்டிங்கில் இருந்த வசுந்தரா உட்பட அனைவரும் மரியாதையின் நிமித்தம் எழுந்து நின்றனர். 'இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று சங்கடப்பட்ட படியே வசுந்தராவும் எழுந்து நின்றாள்.
வந்தவன் நேரடியாக மீட்டிங் மேசையை தாண்டி இருந்த வசுந்தராவின் மேசைக்கு முன்னால் இருந்த கதிரையில் போய் உட்கார்ந்தான்.
எல்லாரும் எழுந்து நின்று அமைதியாக இருக்க திரும்பி பார்த்தவன், "நான் இங்க வசு வோட ஹஸ்பண்டாக தான் வந்திருக்கிறேன், நீங்க மீட்டிங்கை கன்டினியூ பண்ணுங்க நான் வெயிட் பண்றேன்" என்றான்.
அவனின் இந்த பணிவான பதில் இது கனவா என்றே வசுந்தரவுக்கு தோன்ற மீட்டிங்கை நாளைக்கு தொடர்வதாக அறிவித்தவள் அனைவரும் சென்றதும் தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
"நான் தான் வெயிட் பண்றேன்னு சொன்னனே. எதுக்கு இப்போ இடையில நிப்பாட்டின?" என்று கேட்க,
"அந்நியர்களுக்கு முன்னால் நாங்க எங்க அலுவலக விஷயம் பேச விரும்ப மாட்டோம்" என்றாள்.
புருவம் உயர்த்தி பார்த்தவன், "அப்போ சொல்லி இருந்தால் வெளியில போய் இருப்பேனே" என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவள் உடனே சுதாரித்துக் கொண்டு, "அதெல்லாம் விடுங்க என்ன விஷயமாக வந்தீங்க?" என்று கேட்க, "இன்னைக்கு லீவு போடு வெளிய போகலாம்" என்றான்.
அவன் பேசியது கோபத்தை கிளற, "இது என்ன உங்க அப்பா ஆபீஸா? நினைச்ச நேரத்துக்கு லீவு போடுறதுக்கு? எனக்கு ஆயிரம் வேலை முடிக்க இருக்கு... எம்.பி சாணக்கியவர்மன் சார் எல்லா வேலையும் முடிச்சு விரைவாக சப்மிட் பண்ண சொல்லி இருக்கார்." என்று அவனையும் காரணமாக்கி பேசியவளை கொடுப்புக்குள் சிரித்தபடி பார்த்தவன், "உங்க சார் கிட்ட நான் சொல்லிக்கிறேன் வா போகலாம்" என்றான்.
"முடியாது" என்றதும், "இப்போ நீ வரலன்னா... உன்ன தூக்கிட்டு போயிருவேன் பார்த்துக்கோ" என்றதும் அவளோ அவனை அலட்சியமாக பார்க்க எழுந்து அவளை நோக்கி வந்தவன் கண நேரத்தில் அவளை குழந்தை போலே கையில் ஏந்தி இருந்தான்.
கீழே விழுந்து விடாமல் இருக்க பயத்தில் குழந்தையையும் கருத்தில் கொண்டவள் அவன் கழுத்தை கைகளால் மாலை போல கோர்த்துக் கொண்டாள்.
"ப்ளீஸ் விடுங்க யாரும் பார்த்தால் என்ன நினைப்பாங்க. என்னோட மானமே போகுது. ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை சட்டை செய்யாமல் வாசல் நோக்கி நடக்க அவள் இதயம் நின்று துடித்தது.
வெளியில் போனால் எல்லாருக்கும் காட்சி பொருளாகி விடுவோம் என்று பயந்தவள், "நானே வரேன் ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை பத்திரமாக இறக்கி விட்டவன் அவள் கையை பிடித்துக் கொண்டு வெளியேறினான்.
அவன் கையை பிடித்ததே அவளுக்கு அனைவர் முன்னாடியும் சங்கடத்தை கொடுக்க, "யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க??" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
"புருஷன் பொண்டாட்டி கையை புடிச்சிட்டு வர்றான்னு நினைப்பாங்க" என்றான் சாதாரணமாக.
அவள் கையை விட்டவன் அவள் இடையை பின்னால் கையை விட்டு அணைத்தபடி அவள் மேடிட்ட வயிற்றை கையால் தடவியபடி காரை நெருங்க, "எல்லாருக்கும் முன்னாடி இப்படி நெருக்கமா இருக்க சங்கடமா இல்லையா?" என்று மனதிலிருப்பதை கேட்க அவளை கேள்வியாக பார்த்தவன், "சங்கடமா?" என்றபடி அவன் மேடிட்ட வயிற்றை பார்த்து, "இதை விடவா? ஏதோ குந்தி தேவி போல நீ கர்ப்பமான மாதிரி பேசுறியே... என் குழந்தையை சுமந்து வரும் போது வராத சங்கடம் நான் உன்னை அணைத்ததும் வருதோ?" என்றதும் அவன் பார்வை வீச்சு தாங்க முடியாமல் வெட்கத்தில் குனிந்துக் கொண்டாள்.
காரில் ஏறியதும் அவன் வண்டி முன்னாலும் பின்னால் அவன் காவலர்கள் வண்டியும் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை நோக்கி புறப்பட்டது.
உள்ளேச் சென்றதும் அவர்கள் இருவருக்காக மட்டும் ரிசர்வ் பண்ணி இருந்த தனி அறைக்குள் வசுந்தராவை அழைத்துச் சென்றவன், கூட வந்தவர்கள் சாப்பிட அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பினான்.
அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த அறைக்குள் சென்றதும் அதனழகை பாத்து பூரித்த வசுந்தரா அதனை மறந்தும் முகத்தில் காட்டவில்லை.
உணவு ஆர்டர் எடுப்பவர் வந்ததும், "என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு" என்றவனை முறைத்தவள், "எனக்கு எதுவும் வேணாம்" என்றாள். கூறி விட்டு நிமிர்ந்தவள் அவனின் அனல் கக்கும் பார்வையில் ஒரு கணம் ஆடி தான் போனாள்.
'எதுக்கு வம்பு?' என்று நினைத்தவள் பயத்துடனேயே தேவையானதை வந்தவரிடம் சொல்ல அவனும் அதை குறித்துக் கொண்டான். அதன் பிறகு தான் சாணக்கியன் முகத்தில் புன்னகை அரும்பியது.
'எல்லாவற்றிலும் அதிரடி தானா?' என்று மனதுக்குள் சலித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
அவனோ அவளை பார்க்க அவளோ அலங்காரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள். சாப்பாடு வந்ததும் சாப்பிட்டவர்கள், அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான போது அவள் மேலுதட்டில் கடைசியாக சாப்பிட்ட ஐஸ் கிரீம் ஒட்டி இருந்தது. அதை அவதானித்தவன் எழும்ப போன அவளின் கையை பிடித்து தடுத்தபடி முழு உயரத்துக்கு எழும்பி அவளை நோக்கி குனிந்தான்.
அவனின் செய்கை விசித்திரமாக இருக்க பின்னால் நகர போனவளின் முகத்தை பிடித்தவன் ஒட்டியிருந்த ஐஸ்கிரீமை தனது இதழ்களால் சுவைத்து விழுங்கினான்.
அதிர்ச்சி அடைந்தவள் உடனே சுதாரித்து அவன் மார்பில் கை வைத்து தள்ள... கர்ப்பமாய் இருப்பதால் அவளை கஷ்டப்படுத்த கூடாது என்று நினைத்தவன் அவனாகவே விலகினான்.
"இப்போ எதுக்கு கிஸ் பண்ணுனீங்க?" என்று அவள் கோபத்தில் எகிற,
"நான் எங்க பண்ணினேன்? ஐஸ்கிரீம் வேஸ்ட் ஆக கூடாதுனு சாப்பிட்டேன்" என்றான் சாதாரணமாக.
"என் கிட்ட சொல்லி இருக்கலாமே நான் துடைத்திருப்பேன். இல்லாவிட்டால் உங்களுக்கு இங்கே டிஷ்யூ பேப்பருக்கா பஞ்சம்?" என்று சினம் பொங்க கூறியவளை பார்த்தவன், "எனக்கு சாப்பிடணும் போல இருந்திச்சு வசு... என்ன பண்றது?" என்றான் சிரித்தபடியே...
"அப்படின்னா புதுசா ஆர்டர் பண்ணி சாப்பிட வேண்டியது தானே?" என்றவளை நோக்கி கண்ணடித்தவன், "எனக்கு அதை தான் சாப்பிடணும் போல இருந்திச்சு." என்றான்.
அவன் பதிலில் எரிச்சல் முண்ட, "ச்ச" என்று எழும்பி நடக்க போனவள் கால் தடுக்கி விழ போக பாய்ந்துச் சென்று பிடித்தவன் அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தான்.
'ஐயோ இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து திட்ட போறானே' என்று அவள் பயப்பட அவனோ எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் அவள் இடையை அணைத்தபடி வெளியே வந்தான்.
அவன் பேசுவதை தாங்கியவளால் அவனின் மௌனத்தை தாங்க முடியவில்லை... காரில் ஏறியதும் எதுவும் பேசாமல் இருக்க பொறுமை இழந்தவள்,
"இப்போ எதுக்கு உம் என்று வர்றீங்க?" என்று கேட்டாள்.
"நான் என்ன பண்ணினாலும் உனக்கு பிடிக்குறது இல்ல... டென்ஷன் ஆகிற... அதனால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு வர கூடாதுனு பார்க்கிறேன்... இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்" என்றான். அவன் கூற்றில் இனம் புரியாத கவலை தோன்ற அவள் முகம் அவளை அறியாமலே கூம்பியது.
அதை கவனித்தவன் கொடுப்புக்குள் சிரித்தபடி, "ஒன்றும் கவலை படாதே... நீ விரும்பற போலவே டெய்லி லவ் டாச்சர் பண்ணுறேன்" என்றதும் அவனை முறைத்தவள் தலையை வெளி பக்கம் நோக்கி திருப்பிக் கொண்டாள்.
அடுத்து அங்கிருந்து நேரடியாக அவளை தனது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்து போனான். அங்குச் சென்றதும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவ்விடத்தை சுருக்கமாக பூங்கா என்று சொல்லலாம். விதம் விதமான பூக்களும் பல வகை பறவைகளும் பறந்து திரிய காரில் இருந்து இறங்கியவள் அதன் அழகில் மெய் மறந்து போனாள். அவன் அதுக்காகவே அவளை அங்கு அழைத்து வந்தான்.
கர்ப்பிணி பெண்ணின் மன மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான் அந்த காதல் மன்னன்...
ஒவ்வொரு பூவாக ரசித்தபடி அங்கிருந்த பூங்குவியல் நடுவில் வைக்கப்பட்டு இருந்த வெண்ணிற ஊஞ்சலில் அமர அவனும் அருகில் அமர்ந்தான். பறவைகளின் சத்தமும் அவள் முகத்தில் பட்ட குளிர்ந்த காற்றும் அவளை போதை கொள்ள செய்தது.
தன்னை மறந்து லயித்திருந்தவள் சாணக்கியன் தோளில் தன்னை மறந்து சாய்ந்துக் கொண்டாள்.
அவள் தோளை வாகாக அணைத்தபடி அவள் காதில் மீசை ரோமங்கள் உரச, "பிடிச்சிருக்கா?" என்று ஹஸ்கியான குரலில் கேட்டான். அவன் மீசை முடி தந்த குறுகுறுப்பில் அவளுடல் சிலிர்க்க அவனை நோக்கி தலையை திருப்பியவள் அவன் தாடி அரும்பி இருந்த தாடையை வெண் பஞ்சு விரல்களால் வருடியபடி சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். சற்று முன் இதழ் அணைத்ததுக்கு எகிறிய வசுந்தராவா என்று அவனும் ஆச்சரியத்துடன் பார்க்க, அவனின் அடுத்த கன்னத்தில் தனது மெல்லிதழை பதித்தாள். சாணக்கியனோ அதை கண் மூடி அனுபவித்து இருக்கும் போது அவன் அதரங்களை நெருங்கி வந்தது அவள் அதரங்கள்.
ஆனால் அவனை நெருங்கும் போது விதி வசத்தால் அவளின் முன்னே டிரைவர் கழுத்தில் அவன் ஏற்றிய கத்தி நினைவுக்கு வர அதுவரை இருந்த மாய வலை அறுந்து விழுந்தது. அவனை விட்டு எழுந்தவள் விறு விறுவென காரினுள் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
தன்னவனை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் இருக்கும் கையாளாகா தனத்தை எண்ணி அவளால் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது. அவள் தள்ளி விட்டதில் சுய நினைவு அடைந்தவன் அவளின் நடவடிக்கையை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
பெருமூச்செடுத்து எழுந்தவன் காரினுள் ஏறி அமர்ந்தபடி, "இப்போ எதுக்குடி அழுற?" என்று கேட்டான்.
அவனை முறைத்தவள், "வீட்டுக்கு போகணும்" என்றாள். உலகில் உள்ள அனைத்தையும் கண பொழுதில் அறியும் அவனாலேயே மனைவியின் மன ஆழத்தை அறிய முடியாமல் திண்டாடினான்.
மேலும் கேட்டால் சண்டையாகும் என்பதால் மௌனமாகவே அவளை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டான்.
அதன் பிறகு அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து மீண்டும் சாணக்கியனின் கூட்ட அழைப்பை ஏற்று வந்தவளுக்கு பயத்தில் ஏ.சி அறையிலேயே வியர்க்க தொடங்கியது.
போன கிழமை ஒரு நாள் சாணக்கியனுடன் சென்று விட இரு நாட்கள் உடல் உபாதையில் போக, மற்றைய இரு நாட்களும் வேறு ஒரு முக்கிய வேலையால் சாணக்கியனின் வேலையை சரி வர கண்காணிக்க முடியாமல் போனது. இரு வாரம் கழித்து கூட்டம் கூட்டப்படும் என்று நினைத்தவளுக்கு அன்று கூட்டப்பட்டது பேரதிர்ச்சியாக இருந்தது.
முகத்தில் கஷ்டப்பட்டு பயத்தை மறைக்க நினைத்தவளுக்கு முடியாமல் போக தலையை குனிந்து உணர்ச்சிகளை சமப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியும் என்ன தான் கணவனாக இருந்தாலும் வேலை என்று வந்தால் அவன் பாயும் புலியாக மாறுவான் என்று...
போன கிழமையும் வார்னிங் தந்ததால் என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு அவன் வரும் அரவம் கூட கேட்கவில்லை. அனைவரும் எழுந்து நிற்க அவள் மட்டும் தலை குனிந்து யோசித்துக் கொண்டிருந்தாள். கம்பீர நடையில் அவளை பார்த்துக் கொண்டே வந்தவன் தனது இருக்கையை அடைந்த பிறகும் அவளை உணர்ச்சி துடைக்கபட்ட முகத்துடன் கூர்ந்து பார்த்தபடி அனைவரையும் அமர சொன்னான்.
அவள் எழும்பாததால் மற்றைய அதிகாரிகள் சல சலத்தனர். அந்த சலசலப்பில் தன்னுணர்வு பெற்றவள் நிமிர்ந்து பார்க்க அவனோ வட்ட மேசையின் முன்னால் இருந்த பெரிய கதிரையில் அவளை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருந்தான்.
அவளோ பதறியபடி எழுந்து நிற்க, அவளின் கெட்ட நேரம் அனைவரும் இருக்கையில் இருக்க அவள் மட்டும் எழுந்து நிற்க வேண்டியதாக போய்விட்டது.
"என்ன மிஸிஸ். வசுந்தரா?" என்று சாணக்கியன் புருவத்தை உயர்த்தி கேட்க, அவளுக்கோ தனியாக எழுந்து நின்றது அவமானமாக போய் விட்டது. ஒன்றுமில்லை என்று தலையாட்டியவளை சாணக்கியன் கண்களால் அமர சொன்னான்.
பயத்துடனேயே அமர்ந்திருந்தவள் அவனின் பார்வை வீச்சு தாங்காமல் மீண்டும் குனிந்துக் கொண்டாள். அவனோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்தியபடி கூட்டத்தை தொடங்கினான்.
வேலை முடியாதவர்களுக்கு சரமாரியாக திட்டியவன் கோபத்தில் கோப்புகளை விசிறி அடித்திருந்தான்.
சிலருக்கு மாற்றல் வழங்க போவதாக மிரட்ட வேறு செய்தான்.
தந்தையின் சிம்ம கர்ஜனையை கேட்டு அவள் வயிற்றிலிருந்த சிசு கூட ஒரு சுற்று சுற்றி வந்தது. அது தந்தையின் குரல் கேட்ட ஆனந்தத்திலா அல்லது தாயை போல பயத்திலா என்று யாருக்கும் தெரியவில்லை.
அவன் ஆக்ரோஷத்தை பார்த்து மனசு படபடக்க இருந்தவளது டர்ன் அடுத்ததாக வர அவள் கோப்பை பிரித்து படித்துக்கொண்டு இருந்தவனை நோக்கி, "சாரி சார்" என்று தொடங்க போக, 'இவ எல்லாவற்றையும் குழப்பிருவா போல' என்று நினைத்தவன், "வெல் டன் மிஸிஸ்.வசுந்தரா இப்படி தான் இருக்கணும்...குட் ஜாப்" என்று கூற, 'நம்மள கலாய்க்கிறாரோ?' என்று சந்தேகமாக அவனை கூர்ந்து பார்த்தாள்.
அவன் முகத்தில் நக்கலின் சாயல் கொஞ்சமும் இல்லை. அவள் சந்தேகத்தை அறிந்தவன் அந்த கோப்பை தூக்கி அவள் முன்னால் போட அதை பிரித்தவள் அப்படியே அதிர்ந்து போனாள்.
அவளது வேலைகள் அனைத்தும் செவ்வனே முடிக்கப்பட்டு அதற்கு சான்றாக அனைத்து பத்திரங்களும் அதில் இருந்தது. அவள் கொடுத்த கோப்பில் எதுவும் இருக்கவில்லை.
எப்படி இதெல்லாம் இணைக்கப்பட்டது என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.
அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவனோ மனசுக்குள், 'இப்படி கண்ணை விரிச்சு பார்த்து காட்டி கொடுத்திராதடி' என்று மானசீகமாக அவளுடன் உரையாடியவன் மேலும் அவளை பேச விடாமல் கூட்டத்தை தொடர்ந்தான்.
கூட்டம் முடிந்து அனைவரும் எழுந்துச் சென்றாலும் அவள் மட்டும் எழாமல் அவனை முறைத்தபடி இருந்தாள்.
அவளை கவனித்தவன், 'சரி இனி மாரியாத்தாவுக்கு கோபம் வந்திடுச்சு, என்று நினைத்தபடி,
"என்ன போற எண்ணம் இல்லையா? இங்கயே இருக்கிற பிளான் ஆஹ்?" என்று கேட்டபடி எழுந்து அவளை தாண்டி போக அவளோ நாற்காலியிலிருந்து பின்னால் மெதுவாக திரும்பி கை நீட்டி அவன் கையை பிடித்தபடி அவன் முகத்தை சினத்துடன் பார்த்தாள்.
அவள் கையை பிடித்ததும் அவன் பாதுகாவலர்களை பார்க்க அவனின் கண்ணசைவை உணர்ந்தவர்கள் கண நேரத்தில் வெளியேறி இருந்தனர்.
"எழுப்பி விடணுமா?" என்றபடி அவளை தூக்க போக, "ஒன்றும் வேண்டாம்" என்று அவன் கையை தட்டி விட்டவள் கஷ்டபட்டு எழுந்து அவனை நோக்கியவாறு அவன் முன்னால் வந்து நின்றாள்
அவனோ கொஞ்சம் நகர்ந்து பின்னால் இருந்த மேசையில் சாய்ந்து நின்று மார்புக்கு குறுக்காக தனது கைகளை கட்டியபடி அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
உடனே அவள், "உங்கள யாரு என் வேலை எல்லாம் பண்ண சொன்னாங்க? எனக்குதான் என் வேலையை யார் பண்ணினாலும் பிடிக்காதுன்னு தெரியும் தானே... இப்படியே இம்ப்ரெஸ் பண்ணலாம்னு பார்க்கிறீங்களா? நீங்க என் வேலையை முடித்து தந்ததும் வந்து உங்க காலிலே விழ நான் ஒன்றும் மற்ற அதிகாரிகள் போல இல்லை" என்று சீற சத்தமாக சிரித்தவன், "எது உன் வேலை?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.
அந்த கேள்வியில் அதிர்ந்தவளுக்கு அப்போது தான் புலப்பட்டது அது அவன் தொகுதி வேலை. அதை செயல் படுத்தும் அதிகாரிதான் தான் அவள் என்று.
என்ன விடை சொல்வது என்று தத்தளித்தவளிடம் அருகில் கையை கட்டியபடியே வந்தவன், "இங்க பாரு வசுந்தரா... எனக்கு நேரத்துக்கு வேலை முடிக்கணும். உன்னால முடியாது உன் உடல் ஒத்துழைக்காதுனு எனக்கு தெரியும். நீ மட்டும் ப்ரெக்னன்ட் இல்லா விட்டால் மற்றவர்களுக்கு நடந்தது தான் உனக்கும் நடந்திருக்கும். அதுக்காக எல்லா ப்ரெக்னன்ட் லேடீஸ் உடைய வேலைகளை எல்லாம் செய்வேனா என்று கேட்டால் கண்டிப்பாக என் பதில் இல்லை என்பது தான்... இந்த சலுகை என் மனைவிக்கும் உன் வயிற்றில் வளரும் என் மகனுக்கு மட்டும் தான்." என்றவன் அவள் கன்னத்தை தட்டி, "வரட்டா" என்று முன்னால் செல்ல அவளோ அவன் பின்னால் அவமான பட்ட சங்கடத்துடன் தலை குனிந்து மெதுவாக வந்தாள்.
திரும்பி பார்த்தவன் சற்று நின்று அவளை முன்னால் விட்டு அவள் பின்னால் அவன் கம்பீர நடையை தளர்த்தி அவளுக்காக மெதுவாக நடந்து வந்தான்.