அத்தியாயம் 10
அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, சன்க்ளாஸை கண்ணில் போட்டவன், "இப்போவும் ஒன்னும் கெட்டு போகல, என் கூட வந்தா கண்டிப்பா கஷ்டப்படுவ, நீ கிளம்புறதுனா கிளம்பு, இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, பயணிகளை விமானத்தில் ஏறும்படி கட்டளையை அறிவித்தார்கள்...
அவளோ அப்படியே அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க, கையில் இருந்த லேப்டாப்பை எடுத்து பையில் போட்டவனோ, பையை தோள்களில் போட்டுக் கொண்டே, "யூ ஹாவ் ஃபைவ் செகண்ட்ஸ் டு டிசைட்" என்றான்... அவன் நாவை சுழட்டி பேசிய ஆங்கிலம் அவளுக்கு புரியவில்லை...
"ஹான்" என்றாள் புரியாமல்...
"அஞ்சு செகண்ட்ஸ்ல முடிவு எடு... என் கூட வந்தா ரொம்பவே கஷ்டப்படுவ, கடைசியா யோசிச்சுக்கோ" என்று சொல்லிக் கொண்டே, அவள் பாஸ்போர்டையும் டிக்கெட்டையும் அவளின் அருகே இருந்த இருக்கையில் வைத்து விட்டு, கையில் ஒவ்வொரு செகண்டுக்கும் சொடக்கு போட்டுக் கொண்டே நடந்தான்... அவளுக்கு நடந்ததை கிரகிக்கவே நேரம் எடுத்தது...
தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்தியவளுக்கு மருதநாயகம் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்து போயின...
"அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த பையன்... கொஞ்சம் பாசம்னா என்னனு புரிய வை" என்று சொன்னது தான் நினைவில் வந்து நின்றது...
கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை...
பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டே, வேகமாக அவன் அருகே ஓடிச் செல்லவும், அவன் ஐந்தாவது சொடக்கை போட்டு முடிக்கவும் நேரம் சரியாக இருந்தது...
"நான் வரேன்" என்றாள் பெண்ணவள்...
அவளை பக்கவாட்டாக திரும்பி புருவம் சுருக்கி பார்த்தவன், "யோர் ஃபேட்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய, அவனை ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தாள் பெண்ணவள்...
விமானத்தின் உள்ளே சர்வஜித்தை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.
எல்லாமே புதிதாக இருந்தது அவளுக்கு...
எதுவுமே தெரியாது... சர்வஜித்தை தவற விட்டு விடுவோமோ என்கின்ற பயத்தில் அவனை ஒட்டி நடந்தாள்.
அவனோ சட்டென்று திரும்பி பார்த்தவன், "கீப் டிஸ்டன்ஸ்" என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே தனது இருக்கையை அடைந்தான்...
இருவர் இருக்க கூடிய இடம் அது...
தனக்கு பின்னே மிரட்சியுடன் நின்றவளை பார்த்தவன், "உள்ளே போ" என்று ஜன்னல் சீட்டை கண்களால் காட்டினான்... அவளும் குடு குடுவென உள்ளேச் சென்று அமர்ந்து விட, அவனோ லேப்டாப்பை தலைக்கு மேலே ஹாண்ட் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு அமர்ந்து விட்டான்...
அவளோ விமானத்தையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தவள் கண்ணாடியூடு வெளியே தெரியும் ஓடு பாதையை பார்த்தாள்...
அவனுக்கோ அவள் இப்படி சுற்றி சுற்றி பார்ப்பது எரிச்சலாக இருந்தது...
சலிப்பாக தலையை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே, தனக்கு முன்னே இருந்த ஹெட் ஃபோனை எடுத்து போட்டான்.
அவளோ அவனை பார்த்து, அதே போல ஹெட் ஃபோனை போட்டவள் அவன் செய்வதை பார்த்து பார்த்து செய்துக் கொண்டு இருந்தாள். அவனது பட ஸ்க்ரீனையும் எட்டி பார்த்தாள்.
அவனோ அவளை திரும்பி பார்த்தவன், "கொஞ்சம் கூட மேன்னர்ஸ் இல்லையா?" என்று கேட்டான்... "எனக்கு என்ன பண்ணனும்னு தெரியாது" என்றாள்.
"இரிடேட்டிங்" என்று அவன் திட்டிக் கொண்டே இருக்கும் போது, பைலட்டின் குரல் ஒலித்தது...
'டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசுறாங்க, ஒன்னுமே புரியல' என்று அவள் நினைத்து இருக்க, சீட் பெல்ட்டை போட சொல்லி அறிவுறுத்தல் வந்தது... சர்வஜித் சீட் பெல்ட்டை போட, அவளும் அதனை பார்த்து சீட் பெல்ட்டை போட முயன்றாள்... போட முடியவே இல்லை...
படம் பார்த்துக் கொண்டிருந்தவனை சுரண்டினாள்...
"இப்போ என்ன?" என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே...
"போட முடியல" என்று பெல்ட்டை தூக்கி காட்ட, "இது கூட தெரியாதா இடியட்?" என்று கேட்டுக் கொண்டே அவனே சீட் பெல்ட்டை போட்டு விட்டான்.
விமானமும் ஓடு பாதையில் இருந்து மேலெழ ஆரம்பித்தது...
ஆதிரையாழுக்கோ முதல் விமானப் பயணம்... உள்ளுக்குள் நடுக்கம்... ஒரு குமட்டும் உணர்வு வேறு... கண்களை இறுக மூடிக் கொண்டாலும் அந்த உணர்வில் இருந்து வெளியே வர முடியவில்லை...
அவள் கரமோ தன்னையும் மீறி, சர்வஜித்துக்கும் அவளுக்கும் இடையே இருந்த கைப்பிடியில் பதிந்தது...
அதில் ஏற்கனவே சர்வஜித் கையை வைத்து இருக்க, அவள் பயத்தில் கையை அவன் கை மேலே வைத்த அழுத்தத்தில் கொஞ்சமாக வளர்ந்து இருந்த அவள் நகம் அவனுக்கு கீறி இருந்தது...
இருக்கையில் சாய்ந்து இருந்தவனோ கண நேரத்தில் அவள் தனது கையில் கொடுத்த அழுத்தத்தினால் அவளை திரும்பி அனல் தெறிக்க பார்த்தான்...
கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்...
விமானம் மேலே ஏறி சமநிலை அடைந்ததுமே கண்களை மெதுவாக திறந்தாள்...
அவள் கண்களை திறக்கும் வரை அவளையே பார்த்து இருந்தான் சர்வஜித்...
அவளோ மெதுவாக கண்களை திறந்து சர்வஜித்தைப் பார்த்தாள்...
அவன் அனல் பொதிந்த பார்வையை பார்த்துக் கொண்டே, 'இப்போ எதுக்கு முறைக்கிறாருனு தெரியலையே' என்று நினைக்க, அவனோ கண்களால் அவள் கையை காட்டினான்...
சட்டென்று குனிந்து பார்த்தவளோ, கையை வேகமாக அவன் கையில் இருந்து அகற்றிக் கொள்ள, அவனோ தனது கையை எடுத்து அடுத்த கையால் வருடிக் கொண்டே, "நகம் வெட்ட மாட்டியா?" என்று கேட்டான்...
அவளோ, "வெட்டி தானே இருந்தேன்" என்று சொல்லிக் கொண்டே கையை பார்க்க, அது லேசாக வளர்ந்து இருந்தது...
"ஐயையோ கீறிடுச்சா?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையை பிடிக்க போக, அவனோ லாவகமாக கையை அகற்றியவன், "தொட்டு பேசுற வேலை வச்சுக்காதே" என்று முகத்துக்கு நேரே சொல்லி விட்டு, படத்தை பார்க்க தொடங்க, அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு...
அவள் ஒன்றும் ஆசைப்பட்டு அவனை ஸ்பரிசிக்கவே இல்லையே...
எதார்த்தமாக கை பட்டது தானே...
அதற்கு இப்படியா பேசுவது என்று அவளால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, அவளும் படத்தை பார்க்க ஆரம்பித்தாள்...
கொஞ்ச நேரத்தில் சர்வஜித் எழுந்துக் கொண்டான்... உடனே பதறிய ஆதிரையாழோ, "என்னை விட்டுட்டு எங்க போறீங்க?" என்று கேட்டாள்.
அவனோ சலிப்பாக இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "பாத்ரூம் போறேன்டி" என்றான்...
"எனக்கும் வருது" என்றாள் அவள்...
அவளை சலிப்பாக பார்த்தவன், "வந்து தொலை" என்று சொல்லிக் கொண்டே, அவன் நடக்க, அவனை தொடர்ந்து அவளும் நடந்தாள்...
இருக்கைகள் நடுவே சின்ன இடைவெளி தான்... கஷ்டப்பட்டு நடந்து கழிப்பறையை நோக்கிச் சென்றவனுக்கு எரிச்சலாக இருந்தது...
ஃபெர்ஸ்ட் க்ளாஸிலேயே பயணம் செய்து பழகியவன் அல்லவா?
கழிப்பறையை நெருங்கியவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை, "நீ போ" என்று சொல்லி அவளுக்கு வழி விட்டு விலகி நிற்க, அவளோ அந்த கதவை எப்படி திறப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்...
"பட்டிக்காடு" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே, கதவை திறந்து விட்டான்...
"என்ன இவ்ளோ சின்ன இடமா இருக்கு?" என்று அவனை திரும்பி பார்த்து கேட்க, "உனக்கு ஏக்கர் கணக்குல கட்டி வைக்கணுமா என்ன? இங்க தண்ணி எல்லாம் கிடைக்காது, டிஸ்ஸு தான்" என்றான்...
அவளுக்கு சங்கடமாக இருந்தாலும் வேறு வழி இல்லை...
அவ்வளவு அவசரமாக இயற்கை அழைக்க, தனது தேவையை முடித்து விட்டு வெளியே வந்தாள்.
அவனோ, "நீ போ, நான் வரேன்" என்றான்...
"இல்ல நான் நிக்குறேன், தனியா போக பயமா இருக்கு" என்றாள்.
"ஹேய், நாலு ஸ்டெப்ஸ் நடக்குறதுக்கு எவ்ளோ பில்ட் அப் பண்ணுற?" என்று அவளுக்கு திட்டிக் கொண்டே அவன் கழிப்பறைக்குள் நுழைய, அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
வந்ததில் இருந்து அனைத்துக்கும் திட்டிக் கொண்டல்லவா இருக்கின்றான்...
முகம் வேறு சுருங்கி போனது...
அவளுக்கு பின்னே கழிப்பறைக்கு போவதற்காக ஒருத்தர் வந்து நின்றார்... அதற்கு மேல் அங்கே நிற்பது அவளுக்கு சரியாக படவில்லை... தட்டு தடுமாறி நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தவள், ஜன்னலை திறந்தாள்.
வெண்பஞ்சு மேகங்களை கண்டதுமே அவள் இதழ்கள் மெலிதாக விரிந்துக் கொண்டன... இயற்கையின் ரசிகை அவள்...
மேகங்களை பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு இதமாக இருந்தது...
அப்படியே அவள் புன்னகையுடன் அமர்ந்து இருக்க, அவளை விசித்திரமாக பார்த்து விட்டு, அவள் அருகே அமர்ந்து படம் பார்க்க தொடங்கி விட்டான் சர்வஜித்...
பல மணி நேர பயணம்...
'எவ்ளோ நேரம் இப்படியே இருக்கணும்?' என்று யோசித்து சலித்துக் கொண்டு இருந்த ஆதிரையாழுக்கு ஒரு கட்டத்தில் தூக்கம் வர தூங்கி விட்டாள்.
சிறிது நேரம் கழித்து, "ஆதிரா" என்று அழைத்தான் சர்வஜித்...
மெதுவாக கண்களை விரித்து அவனைப் பார்க்க, "சாப்பாடு வந்திருக்கு" என்று சொல்லிக் கொண்டே, விமானப் பணிப்பெண் கொடுத்த உணவை அவள் இருக்கைக்கு முன்னே இருந்த தட்டில் வைத்தான்...
அவனுக்கு அவள் மேல் கோபம் இருந்தாலும், ஒன்றும் தெரியாத இடத்தில் வைத்து அவளை பழி வாங்க அவனுக்கு ஏனோ மனம் கேட்கவில்லை...
அவன் சொல்லிக் கொடுக்கவில்லை என்றாலும் நச்சரித்துக் கொண்டு இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்...
அதனை விட சொல்லிக் கொடுத்து விடலாம் என்று நினைத்து இருந்தான்...
அவளும், உணவைப் பார்த்தாள்...
சோறு தான் கொடுக்கப்பட்டு இருந்தது...
கொஞ்சம் வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு இருந்தது...
அவளுக்கு எப்படி சாப்பிடுவது என்று தெரியவே இல்லை... திரும்பி சர்வஜித் சாப்பிடும் முறையை பார்த்துக் கொண்டே கரண்டியை கையில் எடுத்துக் கொண்டாள்.
தெரியவில்லை என்றாலும் அனைத்தையும் கட்சிதமாக கவ்விக் கொள்ளும் திறமை அவளுக்கு இருந்தது...
அதனாலேயே அவளால் எந்த இடத்திலும் சமாளிக்க கூடியதாக இருந்தது...
உணவை பிரித்து வாய்க்குள் வைத்தாள்...
காரமாக சாப்பிட்டு பழகியவளுக்கு சொர்ஸும் மயோனைஸும் குமட்டியது...
சாப்பிட முடியவே இல்லை...
கரண்டியை அப்படியே வைத்து விட்டு பக்கவாட்டாக திரும்பி சர்வஜித்தைப் பார்த்தவள், 'இதெல்லாம் எப்படி தான் சாப்பிடுறாரோ தெரியல' என்று நினைக்க, அவனோ சட்டென்று அவளை திரும்பி பார்த்தவன், "சாப்பிடும் போது இப்படி பார்க்கிறியே... அசிங்கமா இல்லையா? உன் பிளேட்ல இருக்கிறத சாப்பிட வேண்டியது தானே" என்றான்...
அவளுக்கோ அவன் பேச்சில் தலை விண்விண்ணென்று வலித்தது...
அவளை தப்பாகவே நினைத்து அவன் பழகி விட்டான்...
சட்டென பார்வையை திருப்பி தனது தட்டை பார்த்தவளோ, அதில் இருந்த டெசெர்ட்டான கேக்கை மட்டுமே சாப்பிட்டாள்...
சர்வஜித், அவள் சாப்பிட்டாளா இல்லையா என்று கூட கேட்கவில்லை...
சாப்பிட்டு முடிய, கண்களை ஐ மாஸ்க்கினால் மூடியவன் தூங்க ஆரம்பித்து விட்டான்...
அவனை பெருமூச்சுடன் பார்த்து விட்டு நீரை அருந்தியவளோ கண்ணாடியூடு வெளியே பார்த்துக் கொண்டே தூங்கிப் போனாள்...
"ஆதிரா" என்ற குரல் கேட்டு தான் மீண்டும் விழித்தாள்...
"நியூயோர்க் எயார் போர்டுக்கு வந்தாச்சு, இறங்கு" என்று சொல்லிக் கொண்டே, அவனது லேப்டாப்பை எடுத்தான் சர்வஜித்...