ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அதிரல் தாங்கும் பாதிரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அதிரல் தாங்கும் பாதிரி


"அழையா விருந்தாளியாக

தினமும் வந்து விடுகிறது
உன் அழைப்பு.
உனை அணைத்திட
கைகள் பர பரத்தாலும்
அடக்கி கொள்கிறேன்
என் உணர்வுகளை மட்டுமல்ல!

என் உள்ளத்தையும்!!!"


அத்தியாயம் 1




ஹா ஹா ஹா …

“நிலா அவளை பிடி”

“நோ… நிலாஆஆஆ“

என்று இருவிதமான குரல்கள் அவள் செவியை நிறைத்து கொண்டிருந்தது.

மஞ்சள் வானில் சில வெண்ணிற மேகங்கள் அழகாக ஊரவலம் சென்றுக் கொண்டிருந்த அந்தி மாலை.

அந்த இடம் முழுவதும் சிரிப்பொழிகள் சிலாகிக்க, தன் எதிரே ஓடி வந்துக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை நிலா பிடித்து கொள்ள, அவளிடம் இருந்து குட்டியை காப்பாற்றி இன்னும் சற்று வளர்ந்த இரு சிறுவ, சிறுமிகள் அந்த புல் வெளியில் ஓடிட,

இறுதியில் இரும்பு பாறை போல் திடம் கொண்டவன் மார்பில் மோதி அவன் அணைப்பில் மூவரும் அடங்கி விட, சிறுமியோ வலியவன் இடையை கிள்ளி கூச்சம் வர செய்தாள்.

ஹாக்… என்று உடல் சிலிர்த்து பிள்ளைகள் மூவருடன் புற்கள் மீது விழுந்தவன் மீது ஏறி அமர்ந்து, அவனை சிறை செய்து பிள்ளைகள் மூவரும் கிச்சு கிச்சு மூட்டி கிளுக்கி சிரித்து விளையாடிட, அவனோ சிரித்தபடி தங்கள் அருகே நின்றிருந்த நிலா கையை பிடித்து இழுக்க, அவளும் அவன் மார்பில் விழுந்தாள்.

அவனை சிறை செய்திருந்த தளிர் கரங்கள் இப்போது அவள் மீது பாய்ந்திருக்க, கள்ளமில்லா சிரிப்புகளில் உள்ளங்கள் ஐந்தும் மகிழ்ந்திருந்த ரம்யமான தருணத்தை கலைத்தது “ட்ரீரீரீல்” என்ற அலறிய போனின் அலாரம் சத்தம்.

ஹ்ம்ம்… என்று மனமேயின்றி சோம்பலாக கண்களை திறந்தாள் தங்கநிலா.

‘இன்னும் அஞ்சு நிமிஷம் தூங்கிக்கிறேன் மா’ என்று கெஞ்சிட அன்னையும் உடன் இல்லை.

“இன்னைக்கு முதல் நாள் காலேஜ் போகணும். எழுந்திருடா செல்லம்” என்று கொஞ்சிட தந்தையும் இல்லை.

அவள் நாட்களை அவளே உந்தி தள்ளும் நிலை.

விடியற்காலையில் கண்ட கனவின் இதமான நினைவில் மென் புன்னகையுடன் எழுந்தவள், கனவில் கண்ட காட்சிகளை காகிதத்தில் வரைய துவங்கினாள். கனவில் கண்ட உருவங்கள் மட்டுமே நினைவில் இருந்தது. முகங்கள் எவ்வளவு நினைவு படுத்தியும் நினைவில் வரவில்லை.

முகமின்றி அந்த ஓவியங்கள் முடிவுறாதிருந்தது. அது போல் தானே அவளும், துணைக்கு சொந்தங்களின்றி நிற்கதியாக இருக்கிறாள்.

யாரும் இல்லை என்றும் சொல்லிட முடியாது. இருக்கிறார் ஒருவர் அவளுக்காக. ஆனால் அவரை அருகே சேர்த்திட பதுமை மனம் மறுக்கிறதே.

அழகான குடும்பமாக தான் வரைந்திருந்த ஓவியத்தை பார்த்தவள் செவ்விதழ்கள் அழகாக விரிய, வெண் பற்கள் தெரிய சிரித்து கொண்டிருந்தவள் சிரிப்பு மொத்தமும் மறைந்து தான் போனது, அலைபேசி அழைப்பு கேட்டு. அதில் மிளிர்ந்த பெயரை பார்த்து.

"மாம்…"

என்ன உணர்வென்று விளக்க இயலா முக பாவம். சட்டென்று இறுகிய முகத்தோடு அழைப்பை ஏற்றவள் நாகரீகமாக கூட ஒரு ஹலோ சொல்லவில்லை.

அதை அவரும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது சில வினாடி மெளனதிற்கு பிறகு, அவரின் அக்கறையான நலன் விசாரிப்பிலேயே தெரிந்தது.

"நிலா… நல்லா இருக்கியா டா?"

அத்தனை கனிவான குரலில் அவர் கேட்க,

"டெய்லி போன் போட்டு இத கேட்கணுமா?" எரிந்து விழாத குறையாக சலிப்பாக வந்தது நிலா என்று அவரால் அழைக்கப்படும் தங்கநிலாவின் குரல்.

இதுவும் அவர் எதிர்பார்த்தது தான். ஆனாலும் தாயுள்ளம் வலிக்கிறதே. அவள் உதாசீன பேச்சில் மனதில் ஏற்பட்ட சிறு சுணக்கத்தை புன்னகை வழியே மறைத்துக் கொண்டே மேலும் பேச்சை தொடர்ந்தார் கவியரசி.

"இன்னைக்கு காலேஜ் முதல் நாள்ல, எல்லாம் சரியா எடுத்து வச்சிருக்கியா?" உடனிருந்து அவள் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தவிப்பு அவர் குரலில் தெரிந்தது.

வலி நிறைந்த ஏளன புன்னகையை சிந்திய நிலாவோ,

"ரொம்ப தான் என்மேல அக்கறை. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க உங்க புருஷனை மட்டும் பாருங்க. பாசத்த பொழியுற நாடகமெல்லாம் எங்கிட்ட வேண்டாம்" என்றவள் வெட்டி முறிக்கும் பேச்சில், அந்த தாயும் மனமுடைந்து தான் போனார்.

"எனக்கு உன்மேல அக்கறை இல்லனு நினைக்கிறியா நிலா?" கர கரப்பான குரலில் அவர் கேட்க,

"என்மேல அக்கறை காட்ட தேவையில்லனு சொல்றேன். உங்க டெய்லி கோட்டா முடிஞ்சதுனா போனை வைக்கிறீங்களா? நான் காலேஜ்க்கு கிளம்பனும்" என்று நிலா எரிந்து விழுந்ததும்,

பாசத்தை கூட பகையாக சித்தரித்து எட்டி நிற்கும் சிறுபெண் பேச்சில் துளிர்த்த விழி நீரை மூச்சை உள்ளிழுத்து அடக்கி கொண்டவர்,

"சரி டா நீ பத்திரமா போய்ட்டு வா. விக்ரம் கூட அங்க தான்…" என்றவரை முழுதாக கூட முடிக்கவிடவில்லை அவள்.

"யாரு அவன்?"

"ராஜனோட பையன்" என்றதும் எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ அவளுக்கு,

"உங்க புருஷனோட பையனை பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. தயவுசெஞ்சி உங்க குடும்ப ஆட்கள் பத்தி என்கிட்ட பேசாதீங்க"

என்று சீறியவள் அவர் பதிலை கூட எதிர்பாராது போனை அணைத்து மேஜை மீது வீசியவள், கல்லூரிக்கு செல்ல தயாரானாள். அரை மணி நேரத்தில் தயாராகியிருந்தாள்.

கொஞ்சம் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட், தொடை வரையிருந்த ஸ்லீவ்லெஸ் டாப், விரித்து விட்டிருந்த கூந்தல், கண்ணில் காஜல், காதுகளில் சிறிய பொட்டு கம்மல். ஒரு கையில் வாட்ச், இன்னொரு கையில் உருண்டையான பாசிகள் சுற்றப்பட்ட கைச்சங்கிலி. அதிலிருந்து கீழ் நோக்கி தொங்கிய பட்டாம்பூச்சி பென்டென்ட்.

இவ்வளவு தான் அவள் ஒப்பனை. கைகளால் முதுகு வரையிருந்த கூந்தலை கோதிக் கொண்டே, போனை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் திணித்து கொண்டவள், இருபக்கமும் போடும் ஸ்லிம் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

ஒரே போல் வரிசையாக இருந்த விடுதி அறைகள் கடந்து கீழ் தளத்தில் இருந்த உணவகத்திற்கு வந்தவள், நேராக சென்று இரண்டு இட்லிகளை வாங்கி வந்து பெஞ்சில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒரு வாய் தான் வைத்திருப்பாள், அதற்கு மேல் தொண்டை குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.

உணவில் குறைபாடா? மனதில் குறைபாடா?

இரண்டும் குறைபாடாக இருந்தாள் சிறுபெண் அவளும் என்ன தான் செய்வாள்?

ஆம் சிறு பெண் தான். பதினெட்டு வயது தான் ஆகிறது. அதற்குள் எத்தனையோ மன கஷ்டங்களை அனுபவித்து விட்டாள்.

தனித்து வாழ பழகி கொண்டாள். அவளுக்கு தேவையானதை அவளே செய்து பழகி கொண்டாள். பள்ளி படிப்பு முடிய இப்போது சேர போகும் கல்லூரி, பாடத்திட்டம் எல்லாம் அவளது தேர்வே.

அவள் செயல்களுக்கு யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தவறு செய்தால் தட்டி கேட்கவும், தண்டிக்கவும் கூட ஆளில்லை.

சில நேரங்களில் அதீத சுதந்திரம் கூட அதிக கவலையை கொடுக்கும் என்று இவளை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

சுவை தேடிய நாவை அடக்கி, பசிக்கும் வயிற்றை அடைக்க மட்டுமே அந்த இரண்டு இட்லிகளையும் விழுங்கி கொண்டு தட்டை கழுவி வைத்து விட்டு நகரவிருந்தவளிடம்,

"மதிய சாப்பாடு கொண்டு போறியா மா?" என்று கேட்டார் விடுதியின் சமையல்கார பெண் அம்சவேனி.

"இல்ல ஆன்டி. இன்னைக்கு ஹாஃப்டே தான் காலேஜ்" என்ற நிலாவும் அங்கிருந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.


*******

"அம்மா… பூரி செஞ்சி கேட்டா உப்புமாவை கொண்டு வந்து நீட்டுற, முதல் நாள் காலேஜுக்கு போகும் போது இந்த உப்புமாவ தின்னுட்டு போன நல்லது நடக்குமா? இல்ல படிப்பு தான் மண்டையில ஏறுமா? எனக்கு பூரி தான் வேணும்." என்று மண்டையை ஆட்டி அடம்பிடித்தவள் தலையில் நங்கென்று கொட்டு வைத்தார், எருமைகிடா வயதிலும் அவளுக்கு தலை வாரி விட்டுக் கொண்டிருந்த முத்துலட்சுமி.

"ஆ ஆ ஆ…. வலிக்குது ம்மா" என்று தலையை தடவிக் கொண்டே அவரை பின்னால் திரும்பி அவள் பார்க்க,

"தலவாரும் போது முதல்ல ஒழுங்கா நில்லு டி" என்று அவள் தலையை முன்னால் திரும்பி விட்டவர், மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார்.

அவள் முன்னால் நின்றிருந்த கஜலட்சுமியோ, "இன்னைக்கு ஒருநாள் சாப்பிடு தங்கோம். அம்மா நாளைக்கு கண்டிப்பா உனக்கு பூரி சுட்டு தரேன். என் கண்ணுல, செல்லம்ல சாப்பிடு டா" என்று அரை கிலோ முந்திரி பதுங்கியிருந்த உப்புமாவை அழிச்சாட்டிய அம்மையாருக்கு அவர் கொஞ்சி கொஞ்சி ஊட்டிக் கொண்டிருக்க,

"ம்மா… அந்த எருமை இன்னும் விரல் சப்புற சின்ன பப்பா பாருங்க… விட்டா இடுப்புல தூக்கி வச்சு ஊட்டுவீங்க போல, நானும் உன் பொண்ணு தான் என்னையும் வந்து பாரு" என்று சாப்பாடு மேஜையில் வந்தமர்ந்த கனகவள்ளி கடுப்பாக அன்னையை அழைத்தாள்.

"எல்லாம் உன் முன்னால தானே இருக்கு. எடுத்து போட்டு சாப்பிடு. எப்போ பாரு சின்ன பிள்ளை கூடவே போட்டி போட்டுட்டு. அவகிடக்கிற நீ சாப்பிடு கண்ணு", மூக்கு, நாக்கு என்ற கஜலட்சுமி இரண்டாவது மகளுக்கு சேவகம் செய்ய,

நாக்கை துருத்தி அழகு காட்டி இன்னும் மூத்தவளை வெறுபேற்றினாள் அந்த வீட்டின் குட்டி இளவரசி செண்பகவள்ளி.

"மத்த யாரும் பிள்ளைங்க இல்ல, அவ ஒருத்தி தான் பிள்ளை. இப்படியே செல்லம் கொடுத்து அவளை கெடுத்து வைங்க. ஒருநாள் இல்ல ஒருநாள் எல்லார் மூஞ்சிலயும் கரிய பூச போறா" என்ற கனகவள்ளியும், தனக்கு நீதிமன்றத்துக்கு செல்ல நேரமாவதை உணர்ந்து அவசர அவசரமாக உண்டு விட்டு கிளம்ப எத்தனிக்க,

"அப்பனே முருகா… ஊர் மக்களை போல என் மக்களையும் நல்லாக்கி வை ப்பா" என்ற வேண்டுதல் மணியோசையோடு சத்தமாக வர, வெளியே செல்ல எத்தனித்த கனகவள்ளி துவக்கம், உணவு ஊட்டி, தலைவாரி முடித்த லட்சுமி சிஸ்டர்ஸ், செண்பகவள்ளி என அவ்வீட்டின் அத்தனை டிக்கெட்டும் அடுத்த நொடி பூஜை அறையில் தான் இருந்தனர்.

எழுபது வயதை கடந்த பெண்மணி, கடவுளுக்கு தீபாராதனை காட்டி, அவர் மக்கள் முன் அதை நீட்டிட, எல்லாரும் வரிசையாக நின்று தீபாராதனையை கண்ணில் ஒத்திக் கொண்டனர்.

"நல்ல தொழில் விருத்தியை கொடுப்பா" என்று வேண்டிக் கொண்டே தன் இரு பையன்கள் நெற்றியிலும் திருநீரை பூசி விட்டவர்,

"இதே போல எம் பிள்ளைகள் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்" என்று சொல்லிக் கொண்டே கஜலட்சுமி, முத்துலட்சுமி நெற்றியில் திருநீரு வைத்து விட்டார்.

"யார் பாவத்தையும் வாங்கி கட்டிக்காத, நியாயமா இரு த்தா" என்று சொல்லிக் கொண்டே கனகவள்ளி நெற்றியில் பூசி விட்டவர்,

"எம் புள்ளைக்கு நல்ல புத்திய கொடு… நல்லா படிக்கணும்" என்று செண்பகவள்ளி நெற்றியிலும் திருநீறை பூசி விட்டார்.

நெஞ்சுக்கு நேராக இருகைகளை கூப்பி வணங்கி கொண்டே அந்த அறையை விட்டு பொன்னாபரணம் பாட்டி வெளியேற, மற்றவர்களும் தங்கள் வேலையை பார்க்க கிளம்பி விட்டனர்.

அந்த வீட்டின் ராஜமாதா பொன்னாபரணம் பாட்டி தான். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பொன்காத்த பெருமாள், இளையவர் சிவனனைந்த பெருமாள். இரண்டு பிள்ளை பெற்றதோடு, இவ்வுலகில் தன் கடமை முடிந்தது என்று தாத்தா டிக்கெட் வாங்கியிருக்க, தனியாகவே தன் பிள்ளைகளை வளர்த்து, நல்ல நிலமைக்கும் கொண்டு வந்தார் பொன்னாபரணம்.

மகன்கள் இருவரும் சேர்ந்து சொந்தமாக மீன் வலைகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்கள்.

கோடிகளில் புரளவில்லை என்றாலும், தெருக்கோடியில் நிற்காத அளவுக்கு, அளவான வருமானம், அன்பான குடும்பம், நிறைவான வாழ்க்கை என்று நலமாக தான் இதுநாள் வரை சென்று கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்க்கை.

பெருமாள் பிரதர்ஸ் இருவரும், லட்சுமி சிஸ்டர்ஸை ஒரே மேடையில் திருமணம் செய்துக் கொண்டனர். உடன் பிறப்புகள் என்பதாலோ என்னவோ சிறு சிறு சண்டைகள், மனஸ்தாபங்கள் வந்தாலும், பெரிதாக சண்டை வளர்ந்து குடும்பம் அத்துக் கொண்டு போகும் நிலை இதுநாள் வரை வரவில்லை.

மூத்தவர் பொன்காத்த பெருமாள், கஜலட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். கனகவள்ளி, செண்பகவள்ளி.

கனகவள்ளி வழக்கறிஞர் படிப்பை முடித்து விட்டு, அந்த ஊரின் பெரிய லாயர் ஒருவரிடம் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

இளையவள் செண்பகவள்ளி பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகி கொண்டிருக்கிறாள்.

சிவனனைந்த பெருமாள், முத்துலட்சுமி தம்பதிகளுக்கு பல வருடங்கள் ஆகியும் மகவுகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் அது பெரிய குறையாக தான் பெரியவர்கள் எல்லாருக்கும் இருந்தது. ஆனால் செண்பகவள்ளி பிறந்த பிறகு, அவள் மழலை மொழியில் "மா…..ம்… மா" என்று முதல் வார்த்தை அவரை பார்த்து பேச முயன்ற போதே, அத்தனை கவலையும் மறந்து போனார்.

செண்பகவள்ளி பிறந்த பிறகு தான் தொழில் கூட விருத்தியாகியது என்று வீட்டில் அத்தனை பேருக்கும் அவள் மீது ஒருபடி மேலான பாசம் தான்.

பெண் பிள்ளைகள் மீது காட்டும் அளவு கடந்த பாசம் கூட வினையாகி போகும் என்பதை அப்போது அவர்கள் யாரும் அறியவில்லை. எதிர்காலம் கணிக்கும் திறன் இருந்தால், நிகழ்காலம் நிசப்தமாகி விடுமே.

தன் கைப்பையை தோளில் போட்டுக் கொண்டு வெளியேறயிருந்த கனகவள்ளி முன்பு பாய்ந்து வந்து நின்ற செண்பகவள்ளியோ, "அக்கா… ஷால் குத்தி விடேன்" என்று கெஞ்சுதலாக கேட்க,

"ஏன் டி அவங்களை போல நானும் உனக்கு சேவகம் செய்வேனு நினைக்கிறீயா? வாய்ப்பே இல்ல" என்று சொல்லிக் கொண்டே பிடிக்கொடுக்காது போக எத்தனித்த கனகவள்ளி முன் சென்று வாசலை அடைத்து நின்றவள்,

"பிளீஸ் க்கா… நீ தான் அழகா மடிப்பு மடிப்பா குத்தி விடுவா, அம்மாக்களுக்கு இப்படி மடிப்பு எடுக்க வராது. மொத்த சாலையும் நாலா மடிச்சு ஸ்கூல் பிள்ளை மாதிரி குத்தி விடுவாங்க" என்று கனகவள்ளி போட்டிருந்த அலையலையான துப்பட்டா மடிப்புகளை சுட்டிக் காட்டியவள்,

"உன் தங்கச்சி நான்… கோயா மாதிரி போனா உனக்கு தானே அசிங்கம்" என்று முகத்தை சுருக்கி பாவமாக வைத்தே வக்கீலையும் படிய வைத்து விட்டாள்.

"சரி ஷால் குத்தி விடுறேன் முகரையை அப்படி வைக்காத" என்று சலிப்பாக சொன்னாலும், தங்கை முகம் சுருங்கினாள் தாங்கா தமக்கை தான் அவளும்.

நெற்றியில் பொன்னாபரணம் பூசி விட்ட பெரிய பட்டையோடும், நீண்ட கூந்தலை முத்துலட்சுமி இறுக்க பின்னி விட்டிருந்த நீண்ட கூந்தலில் வெள்ளை, ஆரஞ்சு, பச்சை என்று மல்லிகை, கனகாம்பரம், கொழுந்து பூக்கள் கொண்டு தொடுக்கப்பட்ட கதம்பம் சூடி, இரு தோளில் போடும் பேக்கை, ஒரு தோளில் தொங்கவிட்ட படி கூண்டு கிளி சிறகடிக்க தயாராகி, தன் சித்தப்பாவோடு கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள்.

அவள் கல்லூரிக்குள் நுழைந்த கணம், “செம்பூஊஊஊ” என்று கூவிக் கொண்டே ஒரு உருவம் அவளை நோக்கி ஓடி வர, செண்பகாவும் “கோல்டே…” என்று கத்திக் கொண்டே பாய்ந்து அவளை கட்டிக் கொண்டாள்.

அவர்களை தொடர்ந்து “மச்சீஸ்ஸ்ஸ்” என்று அவர்கள் பின்னால் இருந்து இன்னும் இரண்டு குரல்கள். இருவரும் திரும்பி பார்க்கும் முன், இருவர் கழுத்தையும் நெரித்துக் கொண்டே அணைத்து இருந்தார்கள், கல்பனாவும், நந்தினியும்.

மீனம் ராசிக்காரர்களை பிறவியிலிருந்தே தொடரும் ஏழரை நாட்டு சனி போல, இவர்கள் நட்பும் பால்வாடியில் இருந்தே தொடர்கிறது.

“கல்லு, நண்டு, ஹேய்…” என்று கூச்சலிட்டபடியே நால்வரும் கட்டிக் கொண்டு குதித்தபடி சுத்த, அவ்வழியே சென்றவர்கள் ஒருநொடி ஜெர்க்காகி வித்தியாசமான ஜந்துவை போல தான் நால்வரையும் பார்த்து விலகி சென்றனர்.

"மச்சி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சில?" சரவணன், பார்த்தா (ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி, சந்தானம் கேரக்டர்) நட்பை விட ஊறி போன நட்பில் நலன் விசாரிப்பு போய் கொண்டிருந்தது.

இத்தனைக்கும் "மச்சி நீ என்ன கலர் ட்ரெஸ் போட்டு வர்ற? எத்தனை மணிக்கு வர்ற? என்னவெல்லாம் கொண்டு வரணும்?" என்று இன்று காலை எழுந்த நேரத்தில் இருந்தே ஒவ்வொரு நொடிக்கும் கால் தான்.

காலத்தின் முன்னேற்றம் காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் தானே தூது செல்கிறது.

நால்வரையும் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த சிவனணைந்த பெருமாளோ, "பிள்ளைகளா மீதி கதையை மீட்டிங் முடிய பேசுங்க. உங்களுக்கு ஆடிட்டோரியம்ல மீட்டிங் இருக்கு. அங்க போங்க" என்று பொறுப்பான தந்தையாக ஆடிட்டோரியம் செல்லும் வழிக் கேட்டு, செண்பகவள்ளி உள்ளே சென்று பெஞ்சில் அமர்ந்த பிறகே, மகளை கண்களில் நிரப்பிக் கொண்டே வெளியேறினார்.

அந்த மாவட்டத்திலேயே புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி தான் அது. ராகிங் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஒரே நாளில் கல்லூரி திறக்கவில்லை. ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டாக தான் அறிமுக விழா ஒன்று நடத்தி வருகின்றனர். முன்னமே பி.ஏ., பி.எஸ்.சி அறிமுக விழா நடந்து முடிந்து விட்டது. இப்போது பி.காம் மாணவர்களுக்கான அறிமுக விழா தான் இன்று.

பி.காம்மில் கூட 75 வகையான சிறப்பு பிரிவுகள் உள்ளது என்பதை அந்த கல்லூரியில் சேரும் பொருட்டு சேர்க்கை படிவம் நிரப்பும் பொழுது தான் நம் பிள்ளைகளுக்கே தெரிந்தது.

நால்வரில் ஒருத்தியை தவிர எதிர்காலம் பற்றிய சிந்தனை மூவருக்கும் துளியும் இல்லை. கோல்டு எவ்வழியோ நாங்களும் அவ்வழி என்று கோல்டு என்று அவர்களால் அழைக்கபடும் தங்கநிலா முடிவே அவர்களுக்கு எழுதப்படாத சாசனம்.

நிலாவுக்கு உயிர் கொடுத்த தாய், தந்தை அவளை விட்டு பிரிந்து சென்றாலும், இப்போது வரை அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பது இவர்கள் நட்பு ஒன்று தானே!

அவளும் கவலை மறந்து சிரித்து இயல்பாக இருப்பது இவர்களிடம் மட்டும் தான்.

அவள் சொல்லுக்கு மறுசொல்லின்றி, கல்லூரியின் தாளாளர் வீட்டு வாசலில் தவம் கிடந்து, பல ஆயிரங்கள் டொனேஷன் கொடுத்து நால்வரும் இப்போதும் ஒன்றாக ஒரே பெஞ்சில் அமர்ந்து இருந்தவர்கள், சுற்றி இருந்த மாணவர்கள் கூட்டத்தை தான் பார்த்து கேலி செய்து கொண்டிருந்தார்கள்.

முதல் வருடம் மட்டுமல்ல, அவர்களை வரவேற்க இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் கூட இன்று வந்திருந்தார்கள்.

சிறிய அளவு கெட் டூ கெதர். முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து ஆட்டம், பாட்டம் என சிறிது நேரம் கடந்து கொண்டிருக்க,

சுற்றி பார்த்துக் கொண்டிருந்த நிலா கண்களில் நொடியில் மின்னல் மின்னி மறைய, சட்டென்று திரும்பி நேராக மேடையை பார்த்து அமர்ந்து கொண்டவள், "மச்சி… மச்சி… சட்டுனு திரும்பி பார்க்காதீங்க, அங்க வாசல் பக்கத்துல ப்ளூ கலர் ஷர்ட் போட்டு, செம அழகா ஒரு பையன் நிற்கிறான்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள் மட்டுமல்ல, மற்ற மூவரும் கூட சட்டென்று திரும்பி பார்த்தார்கள். அடுத்த நொடியே நாலு கொசு வாய்க்குள் நுழைந்து காது வழியே வெளிவரும் அளவிற்கு வாயை பிளந்து கொண்டார்கள்.

தங்க நிலா, "மச்சி… இப்போ ஒரு சிச்சுவேஷன் சாங் பாடவா?" என்று கேட்டுக் கொண்டே,

"நான் காலி….
மொத்தமா காலி…" என்று பாட,

அதை ஆமோதிக்கும் விதமாக கல்பனாவும், "ஆமா மச்சி… செமையா இருக்கான்" என்று சொல்லிக் கொண்டே இமைக்காது அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செண்பகவள்ளியோ, "தேர்ட் இயர் அண்ணாவா இருப்பாங்க போல… ப்பா கொல்லுறார்" என்றவள் பார்வையும் அவன் மீது ரசனையாக பதிந்திருந்தது.

நச்சென்று அவள் கையில் கிள்ளி வைத்த நந்தினியோ,

"ஏய் சைட் அடிக்கிற பையனை அண்ணானு சொல்லாதடி" என்று நந்தினி அதட்ட,

"ஆ ஆ ஆ…" என்று கையை தடவிக் கொண்ட செண்பகவள்ளியும், "ஹி…ஹி… நான் என்ன பண்ண? நம்மள விட வயசு அதிகமா இருக்கவங்களை பார்த்தாலே அண்ணானு தான் சொல்ல வருது" என்று அசடு வழிய சொன்னவள் இதழ்கள் விரிந்து கொண்டது, அவள் கருவிழியில் பதிந்து இருந்தவன் இதழ்கள் சிரித்து பேசிய தருணம்.

"சிரிச்சா இன்னும் அழகா இருக்கார்ல" என்று சொல்ல, மற்றவர்களும் "ஆமா டி" என்று ஒருமித்த சிந்தனையோடு அவனை தான் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

திராவிட நிறம், ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், ஆனால் அங்கு நின்றிருந்தார்களில் அவன் தான் உயரமாக இருந்தான்.

"நீல் வட்ட முகம், கூர்மையான விழிகளில் கனிவும் சற்று இழையோடியது, கூர் நாசி, கற்றை மீசை, அழுத்தமான அதரங்கள், குட்டி தாடி, ஜிம் பாடி. நாவல்கள்ல வர்ற ஏய்ட் பேக் ஹீரோ இல்லைனாலும், நமக்கு ஓகேவான ஹீரோ தான்" என்று நிலா அவனை வர்ணித்து கொண்டிருந்தாள்.

அந்த சமயம் இவர்கள் வருணனையின் அரசனை பின்னால் தட்டியபடி, அவன் தோளில் கைபோட்டு இன்னொருவன் வந்து நிற்க,

'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என்று தான் இருந்தது கமுக்கமாக சைட் அடித்து கடந்து செல்லும் நம் கண்ணியவாசிகளுக்கு.

"ஏ எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா?"

என்று கல்பனா பாட,

சைடாக அவளை பார்த்த மூவரும்,

"தினுசான கேள்வி தான் ப்பா..
துடிப்பான ஆளு நீ ப்பா…"

என்று கோரசாக பாடினார்கள்.

ஹஸ்கி குரலில் கேலி, கிண்டல்கள் என வாயை மூடி சிரித்தபடி அவர்கள் நாழிகைகள் கழிய,

"நிறைவுரை வழங்கி விழாவை முடித்து வைக்க உதவி பேராசிரியர் திரு. சத்யன் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்" என்ற அறிவிப்பை வாசித்து கொண்டிருந்த மூன்றாம் ஆண்டு மாணவி இதழ்கள் உச்சரித்த ‘சத்யன்’ என்ற பெயரில் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க, கீழே மாணவர்களிடமிருந்து விண்ணை பிளக்கும் கரகோசங்களும், 'சத்யன் சார்… சத்யன் சார்…' என்ற கூச்சல் சத்தங்களும் அனைவரின் செவியையும் அதிர வைத்தது.

"என்னடி இவ்வளவு நேரம் டான்ஸ், பாட்டுக்கு கூட இந்த அளவு சத்தம் இல்ல, யாரு டி அந்த சத்யன் சார்?" என்று நால்வரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,

இத்தனை நேரம் அவர்கள் வாயை பிளந்து ரசித்துக் கொண்டிருந்த முதலாமவன் தான் மெல்லிய ஓட்ட நடையுடன் துள்ளி மேடையில் ஏற, அதிர்ந்தே விட்டாள் செண்பகவள்ளி.

"அய்யே… இவர் ப்ரொஃபஸரா?" என்று முகத்தை சுழித்து கேட்க,

மற்ற மூவருக்கும் ஏக குஷி… "ஐ நம்ம டிபார்ட்மெண்ட்ல இவ்வளவு அழகான ப்ரொஃபஸரா?" என்று நந்தினி சொல்ல,

"இவர் கிளாஸ் நான் எப்பவும் கட்டே அடிக்க மாட்டேன் மச்சி…." என்றால் கல்பனா.

அவர்களை வித்தியாசமாக பார்த்து வைத்த செண்பகவள்ளியோ "அய்யே… ப்ரொஃபஸர போய் யாராவது சைட் அடிப்பாங்களா?" என்று கேட்க,

நிலா, "ஏன் கூடாது. செம்பு… ஸ்டூடண்ட்ட சைட் அடிக்கிறத விட ப்ரொஃபஸர சைட் அடிக்கிறது பல வகைல நமக்கு சேஃப். கிளாஸ் டைம்ல பசங்களை திரும்பி பார்த்தா திட்டு தான் விழும். அதுவே ப்ரொஃபஸர பார்த்துட்டே இருந்தாலும், நீ ஏன் என்னை பார்க்கிறனு அவரால கேட்க கூட முடியாது" என்று கண் சிமிட்டி சொல்லி சிரிக்க,

"கரெக்ட் மச்சி" என்றார்கள் நந்தினியும், கல்பனாவும்.

அங்கே மேடை ஏறியவன் மெல்லிய புன்னகையோடு கூச்சல் சத்தம் அடங்கும் வரை காத்திருக்க, மாணவர்களும் அவன் குரல் கேட்கவே அமைதியாகினர்.

அதற்குள் காத்து வாக்குல அவர்கள் டிபார்ட்மெண்ட்டில் மூன்று ஆண் விரிவுரையாளர்கள், ஒரு பெண் விரிவுரையாளர். டிபார்ட்மெண்ட் தலைவர் இன்னும் மூன்று வருடத்தில் ஓய்வு பெற இருக்கும் வயோதிகர், மற்ற மூவரும் இளம் வயதினர்கள். முக்கிய குறிப்பு மூவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இரண்டு ஆண்களில் ஒருவன் சத்யன், இன்னொருவன் அவன் அருகே நின்றிருந்த கருப்பு சட்டைக்காரன் என்ற தகவல் வந்து சேர்ந்தது.

"அடேய் ரெண்டு பேரும் செமையா இருக்காங்க டா… நான் சண்டே காலேஜ் வச்சா கூட வந்துடுவேன்" என்று இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போதே சத்யன் அங்கே பேசி முடித்துவிட்டு மேடையை விட்டே இறங்கி விட்டான்.

"சரி மச்சி… பங்கு பிரிக்கலாம், எனக்கு சத்யன் சார்" என்றாள் கல்பனா.

"எனக்கு அந்த ஹைட் ஹர்பஜன் சிங்" என்றால் நந்தினி.

"எனக்கு ப்ரொஃபஸரே வேணாம்" என்று செண்பகவள்ளி ஒதுங்கி கொள்ள,

"சந்தோசம் ஒரு டிக்கெட் அவுட்" என்று மற்ற இருவரும் நிலாவை பார்க்க,

அவளோ, "ஓ பேபி தங்கமே ரெண்டும் ரெண்டும் வேணுமே!" என்று தான் நெஞ்சில் கை வைத்து செண்பகா மீது சாய்ந்து அவர்கள் இருவரையும் பார்த்து பாட,

"முடியாது முடியாது" என்று மற்ற மூவரும் அவள் இடுப்பில் கிள்ளி விளையாட, சிரிப்பொலி தான் நால்வர் திசையிலும்.

விழா முடிந்து அனைவரும் வெளியேற,

"சத்யன் சார், விக்ரமன் சார்… ஆறுமுகம் சார் நம்ம மூனு பேரையும் ஸ்டாப் ரூம் வர சொன்னார்" என்று சொல்லிக் கொண்டே உதவி பேராசிரியர் ஜெயஶ்ரீ முன்னே சென்று விட,

"இப்போ எதுக்கு மீட்டிங்காம்?" என்று கேட்டுக் கொண்டே விக்ரமன் சத்யன் தோளில் கை போட்டப்படி நடக்க,

"நாளைல இருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுதுல அத பத்தி பேசவா இருக்கும். வா போய் பார்ப்போம்" என்றவனும் அவனுடன் நடந்தான்.




“நீ பிரிந்து சென்ற
உறவை எண்ணி வாடுகிறாய்…
நான் மரித்து போன உணர்வுகளை
நித்தம் தேடுகிறேன்!”
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
“உன் காதல் தொலைந்து போன கானல் என்றால்,
என் நேசம் காற்றில் கலந்து போன வாசம் தானோ.”



அதிரல் தாங்கும் பாதிரி

அத்தியாயம் 2




“எங்கேயாவது வெளிய போலாமா மச்சி?” என்று நந்தினி கேட்டுக் கொண்டே ஆடிட்டோரியம் விட்டு வெளியேற, அவளுடனே மற்றவர்களும் வெளியேறியிருந்தார்கள்.

நந்தினி கேட்டதற்கு நிலாவும், கல்பனாவும் “ஹ்ம்ம்” என்று தலையாட்ட, செண்பகாவோ “ம்ஹிம்” என்று தான் அவசரமாக மறுத்திருந்தாள்.

“ஏன் டி?” மூவரும் நின்று அவளை பார்க்க,

“வெளிய போனா அப்பத்தா அடிக்கும். இப்போ சிவா அப்பா கார் எடுத்துட்டு வருவாங்க. நேரா வீட்டுக்கு தான் வரணும். எங்கேயும் சுத்திட்டு இருக்க கூடாதுனு காலைலயே சொல்லி தான் விட்டுச்சு” என்று சிறு பிள்ளை போல சொன்னவளை பார்த்து பெருமூச்சு விட்ட கல்பனாவோ,

“மச்சி… நாம இன்னும் ஸ்கூல் போற சின்ன பிள்ளைங்க இல்ல. வீ ஆர் காலேஜ் கேர்ள்ஸ். இன்னமும் ஆத்தா அடிக்கும், அப்பா வையும்னு சொல்லிட்டு இருக்க, சில்லி கேர்ள்” என்று கலாய்க்க,

நந்தினியோ “சிவா அப்பா கார் கொண்டு வந்தா கார்லயே வெளிய சுத்தலாம். வெயில் வேற ஜாஸ்தியா இருக்கு. ஐஸ்க்ரீம் பார்லர் போனா அவரே பில் கூட கட்டிடுவார். பாக்கெட் மணியும் மிச்சம்” நீ எந்த பக்கம் போனாலும் நாங்களும் வந்து கடையை போடுவோம் என்று முட்டு கட்டை போட,

ஆமோதிப்பாக சிரித்தபடி அவளோடு கையை அடித்துக் கொண்டாள் கல்பனா.

செண்பகாவோ முகத்தை சுருக்கி கொண்டு அவள் அப்பத்தாவை எண்ணி பயந்து கொண்டு நிற்க, இவர்கள் உரையாடலில் இல்லாமல் பராக்க பார்த்துக் கொண்டிருந்த நிலா தோளில் கைகளை போட்ட கல்பனாவும், “நீ என்ன மச்சி யோசிச்சிட்டிருக்க?” என்று கேட்டாள்.

“இல்ல டி கடைசியா ஒருமுறை சத்யன் சாரையும், அந்த ஹர்பஜன் சிங்கையும் பார்த்துட்டு போய்ட்டா மதிய சாப்பாடு நிம்மதியா சாப்பிடுவேன். எந்த பக்கம் போனாங்கனு தெரியல" என்று தாடையை நீவியபடி சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்த நிலாவோ, "வாயேன் அப்படியே காலேஜை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு அவங்களை தேடிட்டு வருவோம்” என்று சொல்ல, அவளை பார்த்து இப்போது பீதியாகியது என்னவோ கல்பனாவும், நந்தினியும் தான்.

“எத? அவங்க ரெண்டு பேரையும் பார்க்க போகணுமா? மச்சி… இன்னைக்கு நமக்கு அறிமுக விழா. ஒரேயடியா நாலு பேருக்கும் இறுதி சடங்கு பண்ண வச்சிடாத… அம்மா தாயே! முதல்ல இடத்தை காலிபண்ணுவோம் வா” என்று நிலா இடுப்பை சுற்றி வளைத்து இழுத்துக் கொண்டே நந்தினி முன்னால் செல்ல,

பயந்த முகத்துடன் நின்றுக் கொண்டிருந்த செண்பகா தோளை சுற்றி கையை போட்ட கல்பனாவோ,

“செம்பூ… சும்மா எல்லாத்துக்கும் பயந்துட்டு இருக்க கூடாது. நல்ல பிள்ளையா இருந்தா உன்ன கூப்பிட்டு அவார்ட்டா தர போறாங்க? எதையும் என்ஜாய் பண்ணாம சாகுறதுக்கு, நல்லா என்ஜாய் பண்ணிட்டு நாலு அடிய வாங்கிட்டு போய்டலாம். நம்ம வாழ்க்கை சரித்திரத்த திருப்பி பார்க்கும் போது எதுவுமே இல்லாம ட்ரையா இருக்கிறதுக்கு பதிலா, ரன்னிங், ஜேஸிங், பையிட்டிங்னு ஏதாவது இருந்தா நமக்கும் ஒரு என்டர்டைன்மென்ட்டா இருக்கும், நாளைய சந்ததிகளும் அதுல இருந்து ஏதாவது கத்துக்கும்.” என்று சொல்லிக் கொண்டே அவளை யோசிக்க விடாமல் பதவிசாக அழைத்து செல்ல,

செண்பகாவும் பலியாடு போல தான் அவர்கள் உடனே சென்றாள்.

துரு துரு சேட்டைகாரி தான். ஆனால் அந்த துரு துருப்பும், சேட்டையும் அவளுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் தான். மற்றவர்களிடம் எப்போதும் அடக்கி வாசிக்கும் கேட்டகிரி தான் செண்பகா. அடி உதைக்கு பயந்த பெண்ணும் கூட. அதனால் தானோ என்னவோ தவறு செய்ய துணிவதில்லை.

நந்தினியின் திட்டபடி செண்பகாவை அழைத்து செல்ல வந்திருந்த சிவனணைந்த பெருமாளிடம் “ப்ளீஸ் ப்பா… கொஞ்ச நேரம் ஒன்னா இருக்கோம். ஸ்கூல் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் நேர்ல பார்த்து பேச முடியுது. உடனே கூட்டிட்டு போனா நியாயமா? சின்ன புள்ளைங்க மனசு தாங்குமா? எங்களை பார்த்தா பாவமா இல்லையா? உங்க மனசு என்ன கல்லா? ப்ளீஸ் ப்பா… ப்ளீஸ்…" என்று பாசத்தை பிழிந்து வசனம் பேசி, ஆயிரம் ப்ளீஸ் போட்டு நால்வரும் சுற்றி நின்று அவரை தாஜா பண்ணி அவர் பர்ஸுக்கு வேட்டு வைத்தே வீடு வந்து சேர்ந்தனர்.

சிவனணைந்த பெருமாளுக்கு பிள்ளைகள் இல்லை என்பதாலோ என்னவோ "அப்பா… அப்பா…" என்று வாய் நிறைய தன்னை அழைக்கும் செண்பகவள்ளியின் தோழிகள் மீது அவருக்கும் இயல்பாகவே தந்தை பாசம் நிறைந்திருக்க தான் செய்தது.

தோழிகள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்ல, நிலாவும் தன் விடுதி அறைக்கு திரும்பியிருந்தாள்.

அதே சமயம் தன் பிளாட்டிற்கு வந்து சேர்ந்திருந்த விக்ரமனோ, ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த சாப்பாட்டு பார்சலை மேஜை மீது அவிழ்த்து வைத்துக் கொண்டிருந்த சமயம் அவன் அலைபேசி இசைக்க, அவன் பார்வை எதிரே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் தான் பதிந்து மீண்டது.

பிற்பகல் 2.30 மணி… மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் இழையோட, சோபாவில் பேக் அருகே கிடந்த அலைபேசியை ஏற்றது தான் தாமதம்,

"அண்ணா… இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?" இரண்டு கீச் குரல்கள் அவன் செவியை நிறைத்திருக்க, விழிகளோ போன் ஸ்க்ரீனில் தான் நிலைத்திருந்தது.

வீடியோ கால், இரண்டு சில்வண்டிகள் போன் ஸ்க்ரீனை இடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். இருவரும் இரட்டையர்கள். வித்யுத், வினிஷா. இப்போது தான் ஆறு வயது முடிந்திருக்கிறது.

"நான் தான் முதல்ல சொல்லுவேன்."

"இல்ல நான் தான் ஃபர்ஸ்ட்" என்று அவர்களுக்குள்ளேயே வாக்கு வாதம் ஆரம்பமாக,

விக்ரமனோ ஸ்க்ரீனில் இருந்து விழியை அகற்றாது, மெல்லிய புன்னகையோடு நடந்தவன், சாப்பாடு மேஜையில் இருந்த தண்ணீர் ஜக் மீது போனை சாய்த்து வைத்தப்படியே, எதிரே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

"அண்ணா இன்னைக்கு ஸ்கேட்டிங் கிளாஸ் போனேன். வாவ்… இட்ஸ் எ வொண்டர்ஃபுள் எக்ஸ்பீரியன்ஸ்" என்று வித்யுத் சிலாகித்தபடியே சொல்ல,

"யா யா… ஹி ஃபெல்ட் டவுன்… நிறைய முறை கீழ விழுந்தான். நான் தான் குட் கேர்ள்… சீக்கிரமே கத்துக்கிட்டேன்" என்று தமையனை வாரி விட்டு, வினிஷா காலரை தூக்கி விட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.

"இல்ல நீ தான் என்னை விட அதிகமுறை கீழ விழுந்த" என்று இருவரும் அலைபேசி வழியே சண்டையிட்டு கொண்டிருந்ததை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரமன்.

வீணாக அவன் இதழ்கள் யாரிடமும் வளைவது இல்லை. ஆனால் இந்த பிஞ்சு உள்ளங்கள், தங்களின் கள்ளமற்ற அன்பினால் அவன் கொண்ட இறுக்கம் கூட களவாடி தான் கொண்டார்கள்.

சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்த விக்ரமனோ, "விது, வினி ஹோல்ட் டவுன். அண்ணா கூட பேச வேணாமா? உங்களோட ஃபைட்லையே இந்த டேய் முடிச்சிக்கலாமா?" என்று கேட்க,

“ஓகே… வீ ஆர் ஸ்டாப் தி ஃபைட்” என்று முகத்தை சுருக்கி, ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டே சொன்னார்கள்.

அவர்கள் இருவரையும் பார்த்தவன் இதழ்கள் இப்போது தாராளமாக விரிந்து கொள்ள,

அப்போது தான் அவன் முன்பிருந்த சாப்பாட்டு பார்சலை பார்த்தார்கள் வாண்டுகள் இருவரும்.

“அண்ணா என்ன சாப்பிடுறீங்க?” செல்போன் திரைவழியே எட்டி பார்த்து அவர்கள் கேட்க,

கையில் சிறிது சாதம் எடுத்து அதே திரை வழியே அவர்களுக்கு காட்டியவனும், “சாம்பார் சாதம் வித் சிக்கன் ஃப்ரை” என்றான்.

“வாவ்… அம்மாவும் இன்னைக்கு சாம்பார் சாதம் தான் செய்றேன்னு சொல்லிருக்காங்க” என்றதும் அதுவரை விரிந்திருந்த விக்ரமன் இதழ்கள் சுருங்கிட,

“வித்யு, வினிஷா ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க” என்று கவியரசியின் குரல் பிள்ளைகளுக்கு பின்னால் கேட்கவும், சட்டென்று அழைப்பை துண்டித்து விட்டான்.

அவர் பெற்ற பிள்ளைகளை ஏற்றுக் கொள்ள முடிந்த அவனால், ஏனோ அவரை ஏற்றுக் கொண்டு, இயல்பாக பேசிட முடியவில்லை.

விழிகளில் சிறு கோபம். விரல்கள் நடுவே பிசைந்த சாதம் நசிந்து போக, சிவந்திருந்த விழிகள் செல்ஃப் மீது பிரேம் செய்யப்பட்டிருந்த சிறிய அளவு புகைப்படம் மீது தான் பதிந்தது.

வலது கையில் செல்போனை நெஞ்சு நேராக தூக்கி பிடித்தப்படி முகம் நிறைந்த புன்னகையுடன் விக்ரமன் நின்றிருக்க, அவனை அணைத்த படி நின்றிருந்தாள் பெண் ஒருத்தி.

அவனுக்கான பெண் என்று அவன் நெஞ்சில் சுமந்திருந்தவள். ஒற்றை உறவை காரணம் காட்டி மொத்தமாக அவனை விட்டு பிரிந்து சென்றவள்.

இலக்கியா… விக்ரமனின் முன்னால் காதலி.

இரட்டை குழந்தைகள் பிறந்த பிறகு தான் தந்தை இன்னொரு பெண்ணுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொண்டார் என்ற தகவல் தெரிந்தது விக்ரமனுக்கு.

பேரதிர்ச்சி அவனுக்கு. ஐந்து வயதில் அன்னையை இழந்து நின்றபோது கூட தாயுமானவராக மாறி போன தந்தை, அவரின் இளம் வயதில் கூட தனக்காக ஒரு துணையை தேடாது மகனுக்காக வாழ்ந்தவர் மறுமணம் செய்து கொண்டார் என்பதே அவனுக்கு அதிர்ச்சி தான்.


அதுவும் அவன் பட்டம் பெற்று, முழு ஆண்மகனாக தலை தூக்கிய பிறகு சிற்றன்னை என்று ஒருவரை அறிமுகம் செய்தால்? அவன் நிலை என்னவாக இருக்கும்?

இப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்று அவன் துளியும் எதிர் பார்த்திருக்க மாட்டான்.

கடல் கடந்து பாடம் கற்பிக்க சென்ற தந்தையின் இச்செயலில் வாழ்க்கை வலிக்க வலிக்க பல பாடங்கள் விக்ரமனுக்கு கற்று கொடுத்து விட்டது.

முதல் வலி காதல் தோல்வி தான். தான் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்ட பெண்ணை தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்க அவன் அவளை துபாய்க்கு அழைத்து சென்றிருக்க, அங்கே அவன் தந்தை அவனுக்கு சிற்றன்னையையும், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவன் சகோதரங்களையும் தான் அறிமுகம் செய்து வைத்தார்.

வாழ்க்கையில் முதல்முறை பேரிடியை சந்தித்தான்.

அதிலிருந்து மீளும் முன்னமே,

“சாரி விக்ரம்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனா… என்னால உன்னை கல்யாணம் செஞ்சிக்க முடியாது. உனக்கு கல்யாணம் ஆகி, குழந்தை பிறக்க வேண்டிய வயசுல, உன் அப்பா ரெண்டு குழந்தையோட நிற்கிறார். இப்படி ஒரு குடும்பத்தை என் வீட்ல எப்படி ஏத்துப்பாங்க சொல்லு? அது மட்டுமில்ல, உன் அப்பாவுக்கு பிறகு அந்த குழந்தைங்களை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உன் தலையில தான் விழும். யாரோ பெத்து போட்ட பிள்ளைகளுக்கு அம்மா ஆகிற அளவுக்கு நான் அவ்வளவு நல்லவ இல்ல. என்னை மன்னிச்சிடு விக்ரம். நமக்குள்ள ஒத்து வராது. லெட்ஸ் ப்ரேக் அப்” என்றவள் அவன் முகத்தை கூட பாராது விறு விறுவென சென்றிருக்க,

அந்த இடத்திலேயே அவன் காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என இரண்டும் புதைந்து தான் போனது.

தந்தையின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது பெரியவர்கள் இருவரையும் ஒதுக்கி வைத்த அவனால், பிள்ளை மனதின் மாறா அன்புடன் “அண்ணா… அண்ணா…” என்று வாய் ஓயாது தன்னை அழைக்கும் அவன் குட்டி சகோதரங்களை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் அவர்களின் அழைப்பு வந்து விடும். இருபத்தி ஐந்தை கடந்த வயதிலும் அனாதையாய் உணர்ந்த அவனுக்கு இனிமை சேர்த்தது அவர்கள் குரலும், மெய் அன்பும் தான்.

ஆண் மனம் மெழுகு தானே!
அன்பிற்கு ஏங்கி உருகி விட்டது.

ஆனால் பெண் மனம் பாறை போல் இறுகிட…
உழியும் உடைந்து போனது.
சிற்பியும் ஓய்ந்து போனாள்.

இளம் உறவுகளை விக்ரம் ஏற்றுக் கொண்டது போல் கூட, நிலாவால் யாரையும் ஏற்று கொள்ள முடியவில்லை. தன் தனிமையின் திறவுகோல் அவர்கள் என்று எண்ணி தான் அவர்களையும் அருகே சேர்க்க மறுத்தாள்.

இருபத்தி நான்கு வயதில் தனி ரேஷன் கார்ட் போட தயாராக இருந்த முழு ஆண் மகன் அவனாலேயே தந்தையின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாவம் பதின் வயது சிறுமி அவளால் அந்த திருமணத்தையும், புது உறவுகளையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?




“விளங்க இயலா கவிதையல்ல அவள்…

விலகி நிற்கும் மழலை அவள்.”
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
"நித்தம் நூறு கவிதை வரைகிறேன்
உன் விழி தீண்டும் முன்
கிழித்தும் போடுகிறேன்…

காதல் தான் அவஸ்தை என்றால்
உன் கண்ணியம் கூட

எனக்கு அவஸ்தையாகிறது…"




அதிரல் தாங்கும் பாதிரி


அத்தியாயம் 3





முதல் நாள் வகுப்பிற்கு மிகுந்த ஆர்வத்துடன் தான் காத்திருந்தார்கள் மாணவர்கள் அனைவரும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் அன்று வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தது.

காலையிலேயே எழுந்து, குளித்து, அழகாக உடுத்தி, புதிதாக வாங்கிய புத்தக பையை தோளில் சுமந்து கொண்டே கல்லூரிக்கும் வந்து விட்டார்கள்.

பல கனவுகளோடு வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்க தயாராக இருந்தது இளம் கன்றுகள். புதிதாக ரெக்கை முளைத்த உணர்வு. புதிதாக கிடைக்கும் நட்பு வட்டாரங்கள், தவறே செய்தாலும் சரி என்று துணிந்து நிற்கும் வயது.

கனவுகளை துரத்தி சிலர் பாட பிரிவை தேர்ந்தெடுத்தால், பெற்றோர்களின் கைப்பாவையாக விரும்பமின்றி சிலருக்கு திணிக்கப்படுகிறது இந்த கல்வி.

எது எப்படியோ கல்லூரி என்றாலே குதுகளம் தானே. கொண்டாடி தீர்க்கும் பேரானந்தத்தோடு இதோ நம் தோழிகளும் வகுப்பறையில் இடம் தேடி பிடித்து, பல ஆராய்ச்சிகள் நடத்தியே நடு வரிசையில், ஒரே பெஞ்சில் நால்வரும் அமர்ந்து இருக்கிறார்கள்.

முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தால், வாத்தியார் முகத்தை மிக மிக அருகில் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் கூட முதுகு பின்னால் மறைந்து கொள்ளும் வாய்ப்பே கிடைக்காது.

கடைசி பெஞ்சு என்றால், கேடி கும்பல் என்று முத்திரையே குத்தி விடுவார்கள். வகுப்பில் யார் எந்த தவறு செய்தாலும், முதல் பலிகிடா கடைசி பெஞ்சு மாணவர்கள் தானே. அத்தனை அடிகளையும், பழி சொற்களையும் தாங்கவே உறுதியான இதயம் வேண்டுமே.

இதையெல்லாம் கலந்தாலோசனை செய்து தான் நிலா கேங் நடுவில் கிடந்த நாலாவது பெஞ்சில் இடம் பிடித்து கொண்டார்கள்.

மாணவர்களின் சிநேக புன்னகையுடன் அறிமுக படலம் நிகழ்ந்து, நட்பு கொடி வளர, எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தோழிகளோ இயல்பாக மற்றவர்களுடன் பேசி சிரித்தாலும், தங்கள் கூட்டணியில் யாருக்கும் இடம் கொடுக்க போவதில்லை என்பதில் தெளிவாக தான் இருக்கிறார்கள்.

முதலாம் பாட வேலைக்கான மணி அடிக்க, டிபார்ட்மென்ட் ஹச் ஓ டி (HOD - Head of the Department) ஆறுமுகம் வகுப்பிற்குள் நுழைந்தார்.

அவர் உள்ளே வந்ததும் மாணவர்கள் அனைவரும் எழுந்து “குட் மாஆஆர்னிங் சார்” என்று ராகம் இழுக்க,

“குட் மார்னிங்… எல்லாரும் உட்காருங்க” என்று சொன்னவர் முகத்தில் அத்தனை வருட அனுபவமும், பூரிப்பும் இருந்தது.

“ஐ அம் ப்ரொபஸர் ஆறுமுகம். உங்களுக்கு பிஸினஸ் மேனேஜ்மென்ட் சொல்லிக் கொடுக்க போற வாத்தியார். கூடுதலா இந்த டிபார்ட்மெண்ட் ஹச் ஓ டி பொறுப்பும் இருக்கு” என்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டவர்,

மாணவர்களையும் சுய அறிமுகம் செய்து கொள்ள சொல்ல,

வரிசையாக ஒவ்வொருவரும் தங்கள் பெயர், ஊர், தாங்கள் படித்த பள்ளியின் பெயர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரம் வகுப்பு. அரை மணி நேரத்திலேயே அறிமுகம் முடிந்து இருக்க, பேராசிரியர் ஆறுமுகமோ,

“இவ்வளவு நாள் ஸ்கூல்ல விளையாட்டு தனமா இருந்தது போல இனி இருக்க கூடாது. காலேஜ் வந்தாச்சி, நல்லா படிக்கணும். நல்லா படிச்சா தான் நல்ல நிலைமைக்கு போக முடியும். படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒழுக்கம் முக்கியம். ஒருத்தன் எவ்வளவு தான் அறிவாளியா? புத்திசாலியா, பெரிய பதவியில இருந்தாலும், ஒழுக்கம் இல்லைனா அவனுக்கு மதிப்பு இல்ல. இந்த காலேஜ் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குதோ அதே அளவு ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்.

பெரிய பணக்கார வீட்டு பிள்ளைங்கலாம் இங்க யாரும் இல்ல. எல்லாரும் மிடில் கிளாஸ் பிள்ளைங்க தான். அதுக்கும் கீழ அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்ட படுற பிள்ளைங்க தான் இருக்கீங்க. உங்க அப்பா, அம்மா எவ்வளவு கஷ்டபட்டு உங்களை படிக்க வைக்கிறாங்க? அதெல்லாம் மனசுல வச்சி நல்ல பிள்ளைங்களா படிச்சு முடிச்சு வெளிய போகணும்." என்று சில அறிவுரைகள் கூறியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்.

இதே வார்த்தைகளை தான் முதல் நாள் மீட்டிங்கிலும் முதல்வர் சொன்னார். இப்போதும் அதையே கேட்க அறுவை தான். அறிவுரை சொன்னால் யாருக்கு தான் பிடிக்கும்? ஆனாலும் அமைதியாக அவரை தான் கவனித்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள் அனைவரும்.

முதல் நாளே பாடம் எடுக்கிறேன் என்று உயிரை எடுப்பதற்கு, இந்த அறுவை எவ்வளவோ மேல் என்று தான் நல்ல பிள்ளைகளாக இருக்கிறார்கள்.

பள்ளியில் ஒரு பாடத்திற்கான வகுப்பு நேரம் அரை மணி நேரம் தான். ஒரு சில பீரியட்ஸ் மட்டும் அதிக பட்சம் முக்கால் மணி நேரம் போகும். இங்கே ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணி நேரம். அதை எண்ணி வருத்தமெல்லாம் இல்லை.

ஏழு மணி நேரத்தை விட ஐந்து மணி நேரம் எவ்வளவோ தேவலமே.

அங்கே ஆறுமுகம் ஐயா, தம் கட்டி அறிவுரை மழையை பொழிந்துக் கொண்டிருக்க, இரண்டு கன்னங்களுக்கும் கையை முட்டுக் கொடுத்து ஒரே பொசிசனில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள் நிலா அண்ட் கோஸ்.

நடுவில் அமர்ந்திருந்த செண்பகவள்ளியோ, "நேத்து வி-லைவ் ல ஜேகே லைவ் வந்தான் பார்த்தீங்களா?" என்று ஹஸ்கி குரலில் கேட்க,

நிலா, "ஹ்ம்ம் பார்த்தேன்… பார்த்தேன்… நான் நிறைய ஹார்ட் விட்டேன்" என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

நந்தினியோ, "லைவ்ல ஃபேன்ஸ்க்கு ரிப்ளை பண்ணிட்டு இருக்கும் போதே தூங்கிட்டான்" என்று சிரித்துக் கொண்டே சொல்ல,

"ஆமா மச்சி… அவன் நாற்பது நிமிஷமா தூங்குனத கூட நான் வாயை பிளந்து பார்த்துட்டு இருந்தேன்" என்றாள் கல்பனா.

"நானும்… நானும்…" என்றார்கள் மற்ற மூவரும்.

"ஆவ்வ்… எவ்வளவு அழகா இருந்தான். அப்படியே தொக்கா என் ஹார்ட்ட கொத்திட்டு போய்ட்டான்.

என் லட்சியம், கனவு எல்லாம் ஒன்னே ஒன்னு தான் மச்சி. கொரியா போகணும், பி டி எஸ்ஸ பார்க்கணும், அவங்க கான்செப்ட்க்கு போய் அந்த லைட் ஸ்டிக் கையில வச்சிட்டு ஆர்மி கூட்டத்துல இருந்து கத்தனும்" என்று கல்பனா சிலாகித்தபடி சொல்லி முடிக்க,

"கல்ப்… இப்பவே நான் உன்ன அவங்க கான்செப்ட்க்கு கூட்டிட்டு போறேன்" என்ற நிலாவோ,

"ஜஸ்ட் இமாஜின்… நாம எல்லாம் இப்போ பி டி எஸ் கான்செப்ட் நடக்கிற ஆடிட்டோரியத்துல உட்கார்ந்து இருக்கோம்." என்றதும் அந்த வகுப்பறை மொத்தமும் ஸ்பாட் லைட்டால் ஒளி பெறும் பெரிய அரங்காக மாறியது.

முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும், மேற்பகுதி உருண்டு ஒளிவீசும் லைட் ஸ்டிக்கை கையில் பிடித்து, உற்சாகமாக கூச்சலிடும் ரசிகர்களாக மாறினார்கள்.

"ஆ ஆ… கோல்டே ஒரு பொண்ணு மேல வந்து இடிக்குது" என்று நந்தினி கூட்ட நெரிசலை கற்பனையில் கலக்க,

"அவ தாடையிலயே ஒரு குத்து விட்டு பின்னாடி தள்ளு நண்டு" என்றாள் கல்பனா.

"ஏய்… அமைதியா இருங்க … நம்ம ஆளுங்க வரப் போறாங்க" என்று நிலா அனைவரையும் அமைதிப்படுத்த, நால்வரும் எந்த பாவணையையும் முகத்தில் காட்டாது, விழிகளை கூட அகற்றாது முன்னால் நின்றிருந்த ஆறுமுகத்தை பார்த்திருந்தாலும், சிந்தனை முழுவதும் அவர்கள் மாய உலகில் தான் இருந்தது.

"இப்போ பி டி எஸ்ஸ பார்க்க போறோம்." என்று நிலா கமெண்டரி போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"முன்னாடி பெரிய ஸ்டேஜ்… ரொம்ப இருட்டா இருக்கு. துளி கூட வெளிச்சம் இல்ல. ஆனா ஃபுல் கிரவுட். அவங்க சவுண்ட் தான் அதிகமா இருக்கு.

சடனா ஸ்பீக்கர் அட்ஜஸ்ட் சவுண்ட்… க்கொயிங்னு கேட்குது. மொத்த கூட்டமும் அமைதியாகிடுச்சு. இப்போ ஸ்டேஜ்ல மட்டும் சின்ன வெளிச்சம். நாலா பக்கமும் இருந்து புகை வருது. அதுக்கு நடுவுல ஸ்டேஜ் புளோர் ஓபன் ஆகுது. அதுல தான் தனி தனி லிஃப்ட்ல ஜின், ஆர்.எம்., ஜங்கூக், ஜே-ஹோப், சுகா, வி, ஜிமின் எல்லாரும் மெது மெதுவா மேல வர்றாங்க" என்று அவள் சொல்லி முடிக்க முன்,

"ஹே… வீவீவீ…" என்று உற்சாக மிகுதியில் எழுந்து நின்று கையை தூக்கி கத்தியே விட்டாள் செண்பகா.

காலியான அறைக்குள் எதிரொலிக்கும் குரல் போல் ஆறுமுகம் குரல் மட்டும் அந்த அறை முழுவதும் கேட்டுக் கொண்டிருக்க, அவர் குரலுக்கு போட்டியாக இவள் குரல் மிகுந்து ஒலித்ததில் மொத்த வகுப்பும் விசித்திரமாக தான் செண்பகாவை திரும்பிப் பார்த்தது.

முன்னால் நின்று தொண்ட தண்ணி வத்த வாழ்க்கை பாடம் எடுத்துக் கொண்டிருந்த அந்த மனிதரோ இவள் கூச்சலில் ஒரு நொடி அரண்டு தான் போனார்.

‘சுகர் பேசண்ட் மா? ஏன் இப்படி கத்தி ஹார்ட் அட்டாக் வர வைக்கிற?’ என்பது போல் இருந்தது அவர் பார்வை.

மாய உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த தோழிகள், அவள் கூச்சலில் ஜர்க்காகி அதிர்ந்து, அய்யோ! என்று தலையில் அடித்துக் கொண்டு, தலையை கவிழ்ந்தபடி எழுந்து நின்ற செண்பாகாவை ரகசியமாக விழியால் கடிந்து கொண்டிருந்தார்கள்.

செண்பகாவுக்கோ என்ன செய்வது என்று தெரியா நிலை. மேலே உயர்த்திய கையை ஆசிரியரை பார்த்து திரு திருவென விழித்தபடியே மெதுவாக கீழே இறக்கினாள்.

அவளையே ஆறுமுகம் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, பயதில் கை, கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது செண்பகாவுக்கு.


"என்னாச்சு மா? ஏன் கத்தின?" என்று அவர் கேட்க,

பயத்தில் இதயம் வெளியே எம்பி குதித்தது அவளுக்கு.

விட்டால் அழுது விடும் ரேஞ்சில் உதட்டை பிதுக்கி, கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சாதாரணமாகவே அவள் மூளை தாமதமாக தான் வேலை செய்யும். இப்போது மொத்தமாக வேலை நிறுத்தமே செய்து விட்டது போல. ஆள் வாயே திறக்கவில்லை. திருவிழா கூட்டத்தில் தொலைந்து விட்ட சிறு பிள்ளை போல பாவமாக விழித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

அவள் நிலை உணர்ந்த நிலா தான், "வீ…வீ… வீ ஆர் சோ லக்கி சார். இந்த காலேஜ்ல சீட் கிடைச்சு, உங்கள போல ஃப்ரண்ட்லி அண்ட் குட் லுக்கிங் டீச்சர் வேற கிடைச்சு இருக்கீங்கல்ல… அந்த எக்ஸைட்மெண்ட்ல தான் வீ ஆர் சோ லக்கினு சொல்றதுக்கு வீஈஈஈ னு கத்திட்டா"

என்று தண்டவாளத்தில் போய் தலை வைத்து மாட்டிக் கொள்ள இருந்த தோழியை காப்பாற்றி விட்டாள்.

செண்பகாவும், "ஹி ஹி… ஆமா சார்" என்று பல்லை இழித்து சமாளிக்க முயல, அது வந்தால் தானே.

சமாளிப்பு என்பது சுட்டு போட்டாலும் அவளுக்கு வராத ஒன்று. இதய துடிப்பு இன்னும் இயல்பாகாது வேகமாக துடிக்க ஆரம்பித்தது, ஆறுமுகம் ஐயாவின் நம்பிக்கையில்லா ஆராயும் பார்வையில்.

அவர்களின் நல்ல நேரத்துக்கு பெல் அடிக்க, முதல் ஆளாக எழுந்து "தாங்க் யூயூயூ சார்" என்று கல்பனாவும், நந்தினியும் ராகம் இசைக்க, மற்ற மாணவர்களும் வேறு வழியில்லாமல் எழுந்து ஒத்து ஊத வேண்டியதாயிற்று.

அடுத்த வகுப்பிற்காக ஜெயஶ்ரீ வாசலில் வந்து நிற்க, ஆறுமுகமும் வேறு வழியில்லாமல் நால்வரையும் பார்த்த படியே வெளியேறினார்.


மெல்லிய புன்னகையோடு உள்ளே வந்த ஜெயஶ்ரீக்கும் அதே குட் மாஆஆஆர்னிங்கே பார்சல் செய்ய,

அவளும் "குட் மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்… சிட்" என்றவள் இயல்பான அறிமுகத்தோடு ஆரம்பித்து, "உங்கள பத்தி நீங்களே ஒரு செல்ஃப் இன்ரோடக்ஷன் எழுதுங்க" என்று சொல்லி விட,

'எத செல்ஃப் இன்ரோடக்ஷனா? அப்படினா?' என்ற தொனியில் தான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே பையில் இருந்து லாங் சைஸ் நோட் ஒன்றை எடுத்து கடைசி பக்கத்தில் செல்ஃப் இன்ரோடக்ஷன் என்று தலைப்பு போட்டு விட்டு அருகே இருந்தவர்கள் பேப்பரை பார்க்க,

அவள் இவளுக்கு மேல் போல, அந்த
செல்ஃப் இன்ரோடக்ஷனுக்கே ஸ்பெல்லிங் இவளை தான் பார்த்து எழுதிக் கொண்டிருந்தாள்.

யாராவது எழுதுவார்கள் என்று முன்னால், பின்னால் நோட்டம் விட்டபடி அனைவரும் உருட்டி கொண்டிருக்க, கொஞ்ச நேரம் பொறுமை காத்த ஜெயஶ்ரீயோ, "சாதாரண சுயவிவரம் கூட யாருக்கும் எழுத தெரியல" என்று சொன்னபடி அவளே போர்டில் மாதிரி படிவம் எழுதி, "இந்த மாதிரி ஃபார்மெட்ல உங்களோட டீட்டில்ஸ் ஃபில் பண்ணுங்க" என்றாள்.

அதையும் யார் முதலில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைப்பது என்று சுய விவர படிவமே பொது அலசலாக மாறியது.

தோழிகள் குழுவில் தங்கநிலா தான் முதலில் எழுத தொடங்கினாள். அவள் அருகே இருந்த செண்பகாவோ, அவள் பேப்பரை பார்த்து அப்படியே எழுதி வைக்க,

நங்கென்று அவள் தலையில் ஒரு கரம் கொட்டு வைத்தது.

வேறு யார் நந்தினி தான்.

"எருமை… அவ பேர எழுதி வைக்கிற. உன் பேர எழுது. அய்யோ இவளை எப்படி கரை சேர்க்க போறோம்னு தெரிலையே. பாவம் டி உன்ன கட்டிக்க போறவன்" என்று கேலி, கிண்டல்கள், செண்பகாவின் அசட்டு சிரிப்பு நடுவே சுய விவர படிவம் பூர்த்தி செய்து பேப்பரையும் கிழித்து கொடுக்க அந்த வகுப்பும் முடிந்தது.

அடுத்து பத்து நிமிட இடைவேளை…

ஒரு சிலர் வெளியே உலாத்த, சிலர் ஹப்பாடா என்று பெஞ்சிலே சாய்ந்து விட்டார்கள். இன்னும் சிலர் செல்பி, ரீல்ஸ் என்று போனோடு ஐக்கியமாகிவிட்டார்கள்.

"மச்சி… நான் அடுத்த ஹவர்க்காக ரொம்ப ஈகரா வெயிட் பண்றேன். ஏன்னு சொல்லு?" என்று கல்பனா கேட்க,

"ஏன்?" கவுண்டமணி டோனில் புருவத்தை உயர்த்தி கேட்டாள் நிலா.

"இல்ல… இருக்கிற நாலு வாத்தில ரெண்டு டிக்கெட் வந்துட்டு போயாச்சு. அடுத்து சத்யன் சார் இல்லனா விக்ரம் சார், ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து தானே ஆகனும்" என்று அவள் சந்திராயன் 3-யை வெற்றிகரமாக நிலாவுக்கு அனுப்பிய விஞ்ஞானி போல் குதுகளமாக சொல்ல,

அவளை முறைத்தாள் நிலா.

கல்பனா அருகே இருந்த நந்தினியோ, "அப்போ ஃபர்ஸ்ட் பெஞ்சுக்கு போய்டலாமா?" என்று வாயெல்லாம் பல்லாக கேட்க,

"எல்லாரும் செத்துடலாமா?" என்று மொத்தமாக வாரி விட்டிருந்தாள் நிலா.

"ஏன் டி?" என்று முகம் சுருங்கி போனது கல்பனாவுக்கும், நந்தினிக்கும்.

"மச்சீஸ்… பார்க்க அழகா இருந்தாலும், அவங்க எல்லாம் ஆபத்தானவங்க தூரத்துல இருந்து ரசிக்கிறதோட நிறுத்திக்கணும். பக்கத்துல போனோம் அப்புறம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பிக் பாஸ் வீடு போல ஆகிடும்.

இந்த வாத்தீஸ்லாம் தூங்கி வழியிற கடைசி பெஞ்சை விட, ஃபர்ஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கிறவங்களை பார்த்து தான் பாடம் எடுப்பாங்க, கொட்டாவி கூட விட முடியாது பார்த்துக்க" என்று பயம் காட்ட,

அவர்களும் "இல்ல இல்ல வேணாம். நாங்க எட்ட நின்னே எட்டி பார்த்துக்கிறோம்" என்று அடங்கி விட்டார்கள்.

‘வாத்திய சைட் அடிக்க கூட நிமிர்ந்து பார்க்க மாட்டேன்’ என்ற கொள்கையில் தீர்க்கமாக இருந்த செண்பகாவோ அவர்கள் உரையாடலில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.

பத்து நிமிட இடைவேளை முடிந்து மணியும் அடித்தது.

நிலா, கல்பனா, நந்தினி மட்டுமின்றி மற்ற மாணவிகள் கூட ஆர்வமாக வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை பேரும் ஆர்வமாக இருக்க, அவர்கள் ஆர்வத்திற்கு ஆப்பு வைத்து, அனைவர் கனவிலும் ஆசிடை பீய்ச்சி அடித்தது போல் வந்து சேர்ந்தார் தமிழ் ஐயா.

முதல் வருடத்திற்கு மட்டும் மொழி பாடம் உண்டு.

ஐம்பது வயதை கடந்த ஒருவர். அளவான உடல்வாகு தான். ஆனால் அவர் அணிந்திருந்த உடை அவர் அளவுக்கு சற்று பெரிதாக இருக்க, காற்றில் பறந்து கொண்டிருந்தது.

முன் தலை வழுக்கையோ என்னவோ, பின்னால் இருந்த முடிகளை முன்னால் கொண்டு வந்து ஓட்ட வைத்தது போல தலை முடிகள் இருக்க,

செண்பகா வெகு நேரமாக அதை தான் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

அந்த ஆராய்ச்சிக்கு முடிவு தெரியாமலே அவர் வகுப்பும் முடிந்து இருந்தது.

அடுத்து நாற்பத்தைந்து நிமிடம் மதிய உணவு இடைவேளை.

காலேஜ் கேண்டீனில் இருந்து நிலா பார்சல் வாங்கி வர, மற்ற மூவரும் வீட்டு உணவை அவளுடன் பகிர்ந்து பல அரட்டைகள் நடுவே வயிற்றை நிரப்பினார்கள்.

சாப்பிட்டு முடிய, ரெஸ்ட் ரூம், வெயிட்டிங் ஹால், மற்ற வகுப்புகள் என காலேஜ் ஓனர் ரேஞ்சில் நால்வரும் சுத்தி விட்டு, மணி அடித்த பிறகே அரக்க பறக்க ஓடி வந்தார்கள்.

வந்த பத்தாவது நிமிடமே அவளை வெளியே விரட்டி இருந்தான் விக்ரமன்.




“ஆண்மையின் அழகியல்
என்று உனை நினைத்திருந்தேன்…

அரக்கர்களின் கூடாரமாக இருக்கிறாய்…”
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
உன் எதிரில்
இயல்பாய் இருக்க
முயல்கிறேன்…

என் இமைகள் கூட
உன் இதய இசைக்கு
தாளம் போட
நான் எப்படி

இயல்பாய் இருக்க முடியும்???


******

அதிரல் தாங்கும் பாதிரி

அத்தியாயம் 4


உணவு இடைவேளை முடிய முதல் வகுப்பு….

கல்லூரியை சுற்றி பார்க்க சென்ற நிலா அண்ட் கோஸ் மணி சத்தம் கேட்டு தான் அரக்க பறக்க வகுப்பிற்கு ஓடி வந்தார்கள்.


ஓடி வந்த வேகத்தில் ஒருவரை ஒருவர் இடித்தபடி சடன் பிரேக் போட்டு நின்றவர்கள், வகுப்பறைக்குள் நின்றிருந்தவனை பார்த்து அதிசயத்து தான் போனார்கள்.


ஆறடி உயரம்… டேப் வைத்து அளக்கவா முடியும்? அதற்கு மேலும் உயரமாக இருப்பான் போல, அவன் நிமிர்ந்து நின்ற தொனியில் கழுத்து வலி வரும் அளவிற்கு அன்னார்ந்து தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் முதல் பெஞ்சு மாணவர்கள்.

நல்ல சிவந்த நிறம். அதுவும் அவன் அணிந்திருந்த கருநீல நிற ஷர்ட் அவன் நிறத்தை தூக்கி காட்டியது. முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்தான். திடமானவன் தான். முறுக்கேறிய கை கோலங்களும், திண்ணிய மார்பும் அவன் வலிமையை பறைசாற்றியது.

இடது கரத்தில் கேசியோ வாட்ச் இடம் பிடித்திருக்க, வலது கையை பேண்டின் முன் பாக்கெட்டில் விட்டபடி நின்றிருந்தவனை, காணாத அதிசயத்தை கண்டது போல் தான் செண்பகா தவிர்த்து மற்ற மூவரும் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


செண்பகாவோ உள்ளே செல்ல அனுமதி கேட்டு "சார்" என்று கீச்சு குரலில் அழைக்க,


வாசல் பக்கம் பார்வையை திருப்பியவன் வாயை கூட திறக்கவில்லை.

'ஏன் லேட்?' என்பது போல் அழுத்தமான ஒரு பார்வை.


சும்மா சுத்திட்டு வந்தோம் என்றா சொல்ல முடியும். அவசரத்திற்கு பொய் கூட சொல்ல வராது, தன் சகாக்களை செண்பகா திரும்பி பார்க்க, அவர்கள் எங்கே இங்கே இருக்கிறார்கள்.

'இந்திரனோ இவன் சந்திரனோ…' என்று தான் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையில் மெய் மறந்து நின்றிருந்தார்கள்.

பதில் சொல்லாது செண்பகா திணறி கொண்டு நிற்க, உள்ள வாங்க என்று கண்ணை மட்டும் காட்டி விட்டு தன் பணியை தொடர்ந்தான் விக்ரமன்.

அவன் அனுமதி அளித்ததும் நால்வரும் வகுப்பறைக்குள் செல்ல,

"முதல் நாள் என்கிறதுனால தான் இந்த எஸ்க்யுஸ், என் கிளாஸ்க்கு யாரும் லேட்டா வர கூடாது. ஒருவேளை லேட் ஆச்சுனா லைப்ரரி போயிடுங்க. பாதியில கிளாஸ் டிஸ்டர்ப் ஆகுறது எனக்கு பிடிக்காது" என்று கண்டிப்பான குரலில் பொது அறிவிக்கையாக சொன்னான்.

"என்ன டி இவர் ஸ்ட்ரீட் ஆஃபிசரா இருப்பார் போலவே?" நிலா காதில் கிசு கிசுத்தப்படி கல்பனா தன் இடத்தில் அமர,

"மெல்லிய ஆண்மகனை
பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை
ரசித்தேன்!!!"

என்று முணு முணுப்பாக பாடியபடி நிலாவும் தன் இடத்தில் அமர்ந்தாள்.

"சரி தான்" என்று சொல்லிக் கொண்டே மூவரையும் தாண்டி சுவரோரத்தில் நந்தினி அமர்ந்து கொண்டாள்.

"தென் ஸ்டார்ட் தி டாபிக் அபவுட் கேபிடல்" என்று சொல்லிக் கொண்டே விக்ரமன் கரும்பலகையில் தலைப்பை எழுதி போட ஆரம்பிக்க,

"என்ன மச்சி இவர் வந்ததும், வராததுமா கிளாஸ்லாம் எடுக்கிறார். இது ரொம்ப தப்பாச்சே" என்று சொல்லிக் கொண்டே நந்தினி எழுந்து நின்று "சார்…" என்று அழைக்க,

விக்ரமனும் திரும்பி பார்த்தான்.

ஹி ஹி கடவா பல் வரை தெரியும் அளவிற்கு சிரித்து வைத்தவள், "நீங்க எங்க பெயர் எதுவும் கேட்கவே இல்லையே!" நேரத்தை விரயமாக்கும் வழி தேடினாள்.

"ஒரே நாள்ல இத்தனை பேர் பெயர் நியாபகம் வச்சிக்க முடியாது. போக போக தெரிஞ்சிக்கலாம்" என்றவன்,

"வாட் இஸ் கேபிடல்?" என்று அவளிடமே கேள்வி கேட்க,

நந்தினியும் 'உனக்கு இது தேவையா? மூடிட்டு எல்லாரையும் போல இருந்து இருக்கலாம்' என்று மனதில் புலம்பிக் கொண்டே நெளிந்து கொண்டு நின்றிருந்தாள்.

பதில் தெரியாது தோழி நெளிவதை பார்த்த செண்பகாவோ, வாயை பொத்திக் கொண்டு குனிந்து சிரிக்க,

“நெக்ஸ்ட் ஒன்” என்று அவளையும் எழுப்பி விட்டு, கேள்வி கேட்டான் விக்ரமன்.

“ஏ, பி, சி, டி, இ, எஃப்…” என்று சொல்லிக் கொண்டே போனவளை புரியாமல் விக்ரமன் பார்க்க, பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முயன்றப்படி தான் மாணவர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள்.

“நிறுத்து … என்ன இது?” என்று கேட்ட விக்ரமனிடம்,

"நீங்க தானே சார்… கேபிடல் கேட்டீங்க… கேபிடல் மட்டுமில்ல ஸ்மால் லெட்டர்ஸ் கூட தெரியும்" என்று அவள் சொல்ல, 'இவ லூசா இல்ல என்னையே கலாய்க்கிறாளா?' என்பது போல் தான் பார்த்தான்.

பவ்யாமாக அவள் நின்ற தொனி கலாய்ப்பது போல் தெரியவில்லை. நொடியில் அவளை ஆராய்ந்தவன்,

"உன் வீட்டு பக்கத்துல பிளே ஸ்கூல் இருக்கா?" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டே கேட்க,

அவளும் "ஓ இருக்கே. ரெண்டு இருக்கு" என்றாள் துள்ளலாக,

"நாளைல இருந்து அங்க அட்மிஷன் போட்டுக்கோ" என்று அவன் சிரிக்காமல் சொல்லி விட,

எதுக்கு? என்று புரியாமல் நின்றிருந்தது என்னவோ செண்பகவள்ளி தான்.

மற்ற மாணவர்கள் அனைவரும் சட்டென்று சிரித்து விட்டார்கள். அதன் பிறகே அவன் கலாய்த்தது அம்மையாருக்கு புரிந்தது.

'ஆஹா!' என்று வடிவேலு பாணியில் மனதிற்குள் அரற்றிக் கொண்டவள், பாவமாக முகத்தை வைத்து கொண்டு விக்ரமனை பார்க்க,

அவன் இதழ் ஓரத்திலும் சிறு புன்னகை வெளிவர துடித்தது. "க்கும்" என்று குரலை செருமி, புன்னகையை மட்டுமல்ல சிரித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் அடக்க, சிரிப்பு சத்தமும் குறைந்தது.

எழுந்து நின்றிருந்த இருவரையும் அமர சொன்னவன், "ஒழுங்கா கிளாஸ கவனிங்க" என்று சொல்ல,

செண்பகாவும் சுருங்கிய முகத்தோடு அமர்ந்து நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்து விட்டாள்.


"ஸ்கூல் மாதிரி நோட்ஸ் எல்லாம் போர்டுல எழுதி போட்டுட்டு இருக்க மாட்டேன். கிளாஸ் எடுக்கும் போது நீங்களே நோட்ஸ் எடுத்துக்கணும். புக்ஸ் ரெஃபரிங் வேணும்னா லைப்ரரில எடுத்துக்கோங்க… ஏதாவது டவுட் இருந்தா எப்போ வேணா எங்கிட்ட கேட்கலாம்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"நைட் பனிரெண்டு மணிக்கு கூட கேட்கலாமா சார்?" ஆண்கள் வரிசையில் இருந்து குரல் வந்தது நக்கலாக.

"ஹ்ம்ம் தாராளமா கேட்கலாம். சொல்லி தர நான் எப்பவும் தயார் தான். அதே போல சொல்லி தந்ததுல இருந்து நானும் கேள்வி கேட்பேன், பதில் சொல்ல நீங்க தயார்னா மிட் நைட் தாண்டி கூட டவுட் கேட்கலாம்"

என்றவன் பதிலில் கேள்வி கேட்டவன் ஆஃப் ஆகிவிட, மீண்டும் சத்தமான சிரிப்பு சத்தம் பரவி அடங்கியது.

ஒற்றை பார்வையில் அனைவரையும் அடக்கியவன், மீண்டும் வகுப்பை தொடர்ந்தான்.

கேபிடல், இன்வெஸ்ட்மென்ட் என்று விரிவுரை வழங்கிக் கொண்டே நடந்தவன் விழிகள் வெண்ணிற கைகள் வரைந்து கொண்டிருந்த ஓவியம் ஒன்றில் நிலைகுத்தி அதிர்ந்து நின்றது.

ஆறடி ஆண் மகன் அவனுக்கே ஒருநொடி உடல் கூசி போனது, அந்த காகிதத்தில் வரைந்திருந்த ஓவியத்தை பார்த்து.

சட்டென்று வரைந்திருந்த பக்கத்தை தன் கையால் கசக்கி அவன் கிழிக்க,

அவனை எதிர்பாராதவள் திடுகிட்டு "சார்" என்று தொண்டையை விட்டு வெளிவராத குரலில் பம்மியபடி எழுந்து நின்றாள்.

விக்ரம் பாடம் எடுக்க ஆரம்பித்த போதே, "அவர் பாடம் எடுத்தா நாம நோட்ஸ் எடுக்கணுமா? அதெல்லாம் முடியாது" என்று வீம்புக்காகவே நிலாவும் நோட்டில் படம் வரைய ஆரம்பித்து விட்டாள்.

கவனமெல்லாம் வரைவதில் இருக்க, தொக்காக மாட்டிக் கொண்டது பச்சக்கிளி.

அவள் சாதாரணமாக எதையாவது வரைந்திருந்தால் கூட நான்கு திட்டோடு விட்டிருப்பான்.

அவள் வரைந்ததோ அவனை தான்., அதுவும் சென்சார் போடும் அளவிற்கு ஒரு படம்.

"என்ன இது?" என்று கையில் கசக்கி வைத்திருந்த பேப்பரை காட்டி, கண்களை விரித்து அடிகுரலில் கேட்க,

பயத்தில் எச்சில் விழுங்கினாள் தங்கநிலா.

மொத்த வகுப்பும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தது. நிலாவுக்கோ எங்கே தன் செயலை வெளிச்சம் போட்டு காட்டி அவமானப்படுத்தி விடுவானோ என்ற பயம் தொற்றி கொள்ள, அமைதியாக தலையை குனிந்து கொண்டாள்.

ஒரு செயலை செய்யும் போது எதையும் யோசிக்காமல் செய்து விடுகிறோம். சரி தவறு கூட அடுத்தவர்கள் பார்வையில் தானே புலப்படுகிறது.

"கெட் அவுட் மை கிளாஸ்" என்று கோபத்தில் கத்தியவன் குரல் அமைதியாக இருந்த வகுப்பறையில் உச்சஸ்தாயியில் எதிரொலிக்க,

நெஞ்சு கூடு நடுங்கி போனது நிலாவுக்கு.

தயங்கியப்படி விக்ரமனை நிமிர்ந்து பார்த்தவள், தடுமாற்றமாக அவன் கைக்குள் அடங்கி இருந்த காகிதத்தை பார்க்க,

அதை அப்படியே சுருட்டி தன் பேண்ட் பாக்கெட்டில் திணித்தவன், "அவுட்" என்று மீண்டும் அடிகுரலில் கர்ஜிக்க,

தலையை குனிந்தபடி வேகமாக வெளியேற இருந்தவளை, "ஹே…ஸ்டாப்" என்று நிறுத்தினான்.

"வாட்ஸ் யுவர் நேம்?" யார் பெயரையும் அறிந்து கொள்ள விரும்பாதவன் அவள் பெயரை கேட்டான்.

"நிலா… த… தங்கநிலா…" தெளிவாக பேசும் பெண் முதல்முறை தடுமாறினாள் அவன் எதிரில்.

தடுமாற்றம் தான் வாழ்க்கையின் திசை மாற்றத்திற்கு திறவுகோலோ!

பெயரை சொல்லி விட்டு வகுப்பை விட்டே பறந்து செல்ல இருந்தவளை மீண்டும் நிறுத்தியது விக்ரமன் குரல்.

"எங்க போற?"

"நீங்க தானே வெளிய போக சொன்னீங்க." என்னை போல் அடக்கமான பெண் எந்த கிரகத்திலும் பார்த்திருக்க மாட்டாய் என்பது போல் அத்தனை மெல்லிய குரலில் அவள் சொல்ல,

எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து தன்னுள் ஸ்டோர் செய்து கொண்டது அந்த கருவண்டு கண்கள்.

"வெளிய தான் போக சொன்னேன். கிளாஸ் ஸ்கிப் பண்ண சொல்லல. வெளிய நின்னே கிளாஸ் கவனி. இப்போ மட்டுமல்ல என் கிளாஸ் எப்பவும் நீ வெளிய தான் நிற்கணும்" என்றவன்,

"அவ நோட் எடுத்துக் கொடுங்க" என்று அருகே இருந்த கல்பனாவிடம் சொல்ல, கல்பனாவும் சற்று மிரண்டபடி தான் நிலாவின் நோட்டையும் பேனாவையும் எடுத்து அவள் கையில் கொடுத்தாள்.

"நோட்ஸ் மட்டும் தான் எடுக்கணும்" என்று கண்ணை உருட்டி மிரட்டலாக சொன்னவன் விட்ட வகுப்பை தொடர,

அதன் பிறகே நிலாவுக்கு மூச்சே வந்தது. அத்தனை பேர் முன்னிலையில் அவளை அவமான படுத்தாமல் விட்டதே பெரிய விசயம் அல்லவா.

இதுவரை யாரும் அவளை குறை சொன்னது இல்லை. ஆனால் முதல் முறை அவன் பார்வை அவளை குற்றம் சாட்டியது.

ஆயிரம் வசவு சொற்களை விட, 'ச்சீ…' என்பது போல் அவன் பார்த்த ஒற்றை பார்வை அவளை கூனி குறுக வைத்தது.

வரைவதில் ஆர்வம் கொண்டவள், வரைமுறை வகுக்காமல் போனது தான் பெரும் தவறு.

வாசலுக்கு வெளியே நின்று நோட்டை கையில் வைத்து எழுத திணறிக் கொண்டிருந்த தோழியை மற்ற மூவரும் பாவமாக பார்த்து கொண்டிருக்க, அவர்களை பார்த்து கண் சிமிட்டிய நிலாவோ 'ஐ அம் ஓகே' என்று அங்கிருந்தே கண்களால் தோழிகளை சமாதானம் செய்து விட்டு விக்ரமனை பார்த்தாள்.

அவன் கடை விழி பார்வை கூட அவள் புறம் திரும்பவில்லை. அது நிலாவுக்கும் நிம்மதியே.

அதன் பிறகு கடந்த நிமிடங்கள் அனைத்தும் அவன் குரல் மட்டுமே அந்த வகுப்பறையை ஆட்சி செய்தது.

இறுதி வகுப்புக்கான மணி அடிக்க, வாசலில் நின்றிருந்த நிலாவை முறைத்த படி விக்ரமன் வெளியேற,

விக்ரமனை பார்த்து தலை குனிந்து நின்றிருந்த நிலா அவன் போன பிறகும் தரையை ஆராய்ந்து கொண்டிருக்க,

"முதல் நாளே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்டா" என்ற குரலில் தான் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

பார்த்த நொடி சிலையாகி தான் போனாள். கன பொழுதில் கனவுலகம் அழைத்து சென்றது அவன் அருகாமை. வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு. ஆம் எதிரில் நின்றது சத்யனே தான்.

அவனை பார்த்த நொடியில் இருந்து அவள் கிரஷ் லிஸ்டில் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்கு தள்ளி, அவள் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சத்யனே தான்.

இமைக்க மறந்து அவனை அவள் பார்த்து கொண்டிருக்க,

"உள்ள வாங்க" என்றவன் அவளுக்கு முன்னால் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

நிலாவும் வாயெல்லாம் புன்னகையோடு அவனை தான் ரசித்தபடி தன் இடத்தில் வந்தமர்ந்தாள்.

ஓட்டமும் அல்லாத, மென்நடையும் அல்லாத அவனுக்கே உரிதான துள்ளல் நடையில் ஆசிரியர்களுக்கான மேடையில் ஏறி நின்றவன்,

"சொல்லுங்க இன்னைக்கு ஃபர்ஸ்ட் டேய் கிளாசஸ் எல்லாம் எப்படி போச்சு?" வெகு வெகு இயல்பான பேச்சு வார்த்தைகளில் ஆரம்பித்தான்.

இவர் எந்த வகை வாத்தியார்? ஸ்ட்ரிட் ஆபீசரா? போரிங்ஹா? இல்ல மஜாவான ஆளா? என்ற ஆராய்ச்சியில் மாணவர்கள்.

*********

அடாவடி தான் ஆண்மைக்கு அழகா?

உன் அமைதி கூட எனை ஆர்பறிக்க செய்கிறதே!!!
 
Top