ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அணுசரணின் "வேங்கை விழியாள் " - கதை திரி

Status
Not open for further replies.

Anucharan

Active member
Wonderland writer
விழி-3

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த நிலவழகனுக்கு தன் கையில் இருக்கும் முகவரியை யாரிடம் கேட்பது என தெரியாது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்...

அவ்வழியே செல்பவர்களை அழைக்க அவர்களும் ஒருநிமிடம் நிற்பவர்கள் அவனின் தோற்றத்தை கண்டதும் அலட்சியப் பார்வையை வீசிவிட்டு சென்றுவிடுவார்கள்... அவனுக்கு மனம் சோர்ந்து கண்ணீர் வரப் பார்த்தது...

இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அவன் கூறவருவதைக் கேட்கும் முன்பே "காசில்லை போ" என விரட்டவே செய்தனர்...

சோர்வாக சென்றவன் அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து கொண்டான்... அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது...

என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம் .... ஒரு தனி மனித உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா... ஒருவனின் உருவத்தில் என்ன உள்ளது ... ஒருவர் செய்யும் செயல்களே அவருக்கு மதிப்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர பணமோ தோற்றமோ அதனை நிர்ணயிக்க கூடாது... இந்த சிறுவயதிலேயே நிலவழகனுக்கு இவையெல்லாம் வலிக்க வலிக்க அடித்து இந்த சமூகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... இன்னும் அவனுக்கு இந்த சமூகம் என்ன வைத்திருக்கிறதோ.....

கலங்கி அமர்ந்திருப்பவனை சற்றுத் தொலைவில் கண்ணில் வஞ்சம் மின்ன பார்த்துக் கொண்டே ஒரு மிருகம் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது..‌தன் அலைப்பேசியே எடுத்த அந்த மிருகம் யாருக்கோ அழைப்பை விடுக்க பார்வை மட்டும் நிலவழகனை விட்டு அகலவில்லை ...
மறுமுனை அழைப்பை ஏற்றவுடன்
" மச்சி காலைலேயே ஒரு பட்சி சிக்கியிருக்கு... இளசான ப்ரஷு பீஸூ மாமே ... தூக்குனோம் நல்ல துட்டு பார்க்கலாம்... "
என்க...

...................

"கவலையை விடு மாமே உனக்கே தெரியும் ... என் கண்ணுல சிக்குனா அடையாளமே இல்லாம பார்சல் பண்ணீருவேன்னு... இன்னைக்கு நைட்டு பார்சல்னு மெசேஜ போட்டுரு மாமே ... சத்தமே இல்லாம தூக்கிட்டு போட்டோ அனுப்புறேன்"

...................

"வேணாம் மாமே அந்த தௌலத்து போன தடவையே துட்ட குறைச்சுட்டான் ... ரொம்ப நாளா ஒரு பாம்பேகாரன் நம்மகிட்ட பார்சல் கேட்டுட்டே இருந்தான்ல அவனுக்கு நா அனுப்புற போட்டோ அனுப்பி விலைய கேளு ஒத்து வந்தா சரி இல்லாட்டி வேற இடம் பார்ப்போம்..."

.....................

"சரி மாமே .. விரசா நம்ம பயலுககிட்ட பொருள வச்சுட்டு ரெடியா இருக்க சொல்லு.... இன்னும் அரை மணி நேரத்தில அங்க இருப்பேன் " என்றவன்
அலைபேசியை சட்டைப்பையில் போட்டவன் தன்னுடைய ஆட்டோவை எடுத்து கொண்டு நிலவழகனின் அருகில் நிறுத்தினான்....


தன் முன் நின்ற ஆட்டோவைக் கண்டவனுக்கு முதலில் பயம் உருவானது..
தலையை மட்டும் வெளியே நீட்டிய அந்த கயவன் எதார்த்தமாக கேட்பது போல

"தம்பி ஊருக்கு புதுசா... இங்க எல்லாம் உட்கார கூடாது பா" என்க... அதை நம்பிய நிலவழகனும் எழுந்து நின்றவனுக்கு தன்னை மதித்து ஒருவர் பேசுவதிலேயே மகிழ்ச்சியாக இருந்தது...

"ஆமா அண்ணா .... " என்றவன் தன் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்து அவனிடம் காட்டி எப்படி செல்வது எனக் கேட்டான்....

அழகாக அமைந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவன் முகவரியைப் பார்த்ததும் மனதில் இருந்த சிறு சந்தேகமும் நிவர்த்தியானது. ..

ஏனெனில் அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவரும் எதில் மிகச் சிறந்தவர் என்பது அந்த வட்டாரத்திற்கே தெரியும் அது மட்டுமின்றி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதற்கு பின்னான பாதுகாப்பையும் அவர்களே வழங்குதால் இவன் அங்கு ஒரு முறை சென்று விட்டால் திரும்ப அவனை தூக்குவது மிகவும் கடினம் என்பதையெல்லாம் யோசித்தவன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...

புன்னகையுடன் நிலவழகனைப் பார்த்தவன்

"இந்த இடமா . எனக்கு நல்லாவே தெரியும்... இங்க இருந்து கொஞ்ச தூரம்" என்க

அழகனும்"என்ன அங்க கொண்டு போய் விடுறீங்களா ... ஆட்டோக்கு பணம் நான் தரேன்.. " என்றான் ‌..

அந்த கயவனும் "அங்க போன திரும்பி வர சவாரி கிடைக்காது தம்பி.... அதனாலேயே எந்த ஆட்டோவும் வராது.... உன்ன பார்க்க வேற பாவமா இருக்கு..." என்று பொய்யாக நடித்தான்.

அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "பிளீஸ் அண்ணா என்னை கொண்டு விடுறீங்களா..." என கெஞ்சினான்... அதில் பாவப்பட்டு ஒத்துக் கொள்வது போல " சரி தம்பி உனக்காக வரேன்.... " என்றவன் நிலவழகன் ஆட்டோவில் ஏறியவுடன் தன் அலைப்பேசி மூலம்

"பட்சி சிக்கிடுச்சு " என்று தகவலை தன் கூட்டாளிகளுக்கு அனுப்பியவன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.‌...

தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாத நிலவழகனும் தன் பொதிப்பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சிங்காரச் சென்னையை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.....

-----------------------------------

குளித்து விட்டு வந்த நிலாவிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது....

ஜீன்சும் டாப்பும் அணிந்து கொண்டவள் தலைமுடியினை ஒரு கிளிப் கொண்டு அடக்கியவளுக்கு அலைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள் அவள் முன் சீறுடை அணிந்து கொண்டு கையில் காலையுணவுடன் பணியாள் நிற்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்...
அவளுக்கு பிடித்த பூரியும் மாசாலாவும் இருக்க உணவை முடித்தவள் அடுத்து அழைத்தது என்னவோ மணிக்கு தான்.....

என்னதான் அவன் கோபத்தைக் காட்டினாலும் அது அவள் மேல் உள்ள அக்கறையில் அல்லவா... நிலாவைப் பொறுத்தவரை நண்பர்கள் மூவரும் தான் உலகம்...
தாயாய் தந்தையாய் சகோதரியாய் சகோதரனாய் நண்பர்களாய் அவள் வாழ்க்கையில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்கள் மூவரும் தான்...

அழைப்பை ஏற்ற மணி
" சொல்லுடி சாப்டியா ‌‌... " மணி..

"சாப்டேன் மணி.. ஏன் அவ்வளவு கோபம்... நான்தான் அப்ப அப்ப ஏதாவது உளருவேன்னு தெரியும்ல் அப்புறம் ஏன் அவர்களை திட்டுகிறாய்...." நிலா..

"நிலா மார்னிங் வாசு சொன்னதும் எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு அதான் . இங்கபாரு உனக்கு அங்க பிடிக்கலன்னா உடனே கிளம்பி வந்திடு" என்றான்..

" இல்ல மணி எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு... புது இடம்ல அதான் தூக்கம் வராம கெட்ட கனவா வந்திருக்கு.. கொஞ்சநாள் இருந்துட்டே வரேன்..." நிலா..

"நிலா வேணும்னா நான் கிளம்பி வரவா ரெண்டு பேரும் ஒரு ஒன்வீக் அங்க இருந்துட்டு கிளம்பி வந்திருவோம் " என்றான் அக்கறையாக.‌ " இல்லாடா நான் மேனேஜ் பண்ணிப்பேன் .. அதான் மூணு வாரம் கழிச்சு நீங்க எல்லாம் வருவீங்கல்ல அப்புறம் என்ன..." நிலா ..

" சரிடி பாத்துக்கோ... பத்திரமா இரு.‌‌ எதுனாலும் எனக்கு கால் பண்ணு... சரியா" மணி..

" சரிடா நான் பாத்துக்கிறேன்... ஆமா இப்போ எல்லாம் உன்னோட புது பிஏ க்கு நிறைய வேலை குடுக்கற போல .‌. ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனாலும் கால் பண்ணி வேல தருகிறாயாமே... அப்படியா..." என நக்கலாக இழுத்தாள்.... மணி ' அய்யய்யோ இவளுக்கு எப்படி தெரிந்தது... அடேய் வாசுப்பயலே உனக்கு இருக்குடா ' என மனதில் கருவிக் கொண்டான்..

" என்னடா சத்தத்தைக் காணோம்.." நிலா..

" ச்ச... ச்ச... அப்படியெல்லாம் இல்ல நிலாம்மா .. பைல்ல டவுட் அதான் கால் பண்ணி கேட்டேன் மத்தபடி எதும் இல்லை " என வழிந்து கொண்டே பேசினான்... ஏதும் மறைத்தாலோ அல்லது அவளை சமாளிக்கும் போது மட்டுமே அவனின் அழைப்பு 'நிலாம்மா' வாக இருக்கும்...

" அப்போ கன்பார்ம் .. சரிடா சீக்கிரம் சொல்லி சம்மதத்தை வாங்கிரு... சரியா " என மறைமுகமாக தன் சம்மதத்தை கூற அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி...

இருந்தும் அவனுக்கு மனது சற்று உறுத்தலாகவே இருந்தது. 'இப்போது தான் வாசு கீர்த்தி திருமணம் முடிந்து வேறு வீடு சென்றார்கள்..‌. அதேபோல் தானும் சென்றுவிட்டால் நிலா தனியாளாகிவிடுவாள்....அவளை தனியாக விட முடியாது... திருமணம் முடித்தால் நிச்சயம் மற்றவர்கள் போல் தன்னையும் தனியாக செல்லவே வற்புறுத்துவாள் ' என பலவாறு யோசித்தவன் அவளிடம் இருந்து உண்மையை மறைத்தான்..

" நிலாம்மா. உனக்கே என்னைப் பற்றி தெரியும்ல .. எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் ஒத்துவராது.. கொஞ்சநாள் எந்த கமிட்மென்ட் உம் இல்லாம சந்தோஷமா இருக்கணும்.. அதனால இத பத்தியெல்லாம் யோசிக்காம ஹாலிடேவ என்ஜாய் பண்ணு..." என்றான் சமாதானமாக...

" சரிடா ... என்னமோ சொல்லுற நானும் கேட்டுக்கிறேன்... " என்றவள் பேசி முடித்து அலைபேசியை வைக்கையில் நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது..

அவளுக்கு தோன்றியதெல்லாம் தான் எவ்வளவு அதிஷ்டசாலி என்பதே.. இந்த காலத்தில் இரத்த சொந்தமே இக்கட்டான சூழ்நிலைகளில் சுயநலத்திற்காக உறவுகளை துச்சமாக வீசிச் செல்கையில் எந்த இரத்த சொந்தமும் இன்றி நட்பிற்காக இன்றுவரை அதே பாசத்துடன் வாழும் மனிதர்கள்தான் எத்தனை சிறந்தவர்கள்...
அவளுக்கு பெருமையாகவும் ஒருபுறம் கர்வமாகவும் இருந்தது...

அதேநேரம் அவள் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது..‌ அழைப்பை ஏற்றவளுக்கு எதிர்முனையில் என்ன தகவல் சொல்லப்பட்டதோ அதிர்ச்சியாய்...

" ஷிட்... உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்.. நம்மகிட்ட உதவி கேட்டு நம்ம தேடி வர்றவங்களை பாதுகாப்பா நம்ம காப்பகத்துக்கு கொண்டு வரணும்னு.... நீங்க இவ்வளவு கவனமில்லாம இருப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை ‌.. என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள அந்த பையன் நம்ம காப்பகத்துல பாதுகாப்பா இருக்கணும் ... புரியுதா க்விக்... அந்த பையனோட அடையாளங்களை டாக்டர் சொன்னாருல அத வச்சு நம்ம டிடெக்டிவ் கிட்டவும் சொல்லி தேட சொல்லுங்க ... " என மேலும் சில கட்டளைகளையிட்டவளுக்கு மனம் ஒரு நிலையிலேயே இருக்கவில்லை‌..‌

ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோத இதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து அவளின் இருவிழிகளும் கலங்க துவங்கியிருந்தது.....

❤️❤️❤️❤️

கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??❤️

Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
 

Anucharan

Active member
Wonderland writer
விழி-4

சட்டென ஆட்டோ நிற்கையில் சுயம் தெளிந்த நிலவழகன் "என்னாச்சு அண்ணா..." என்றான் ...



அவனோ "தம்பி சவாரிக்கு ரெண்டு பேரு கை காட்டுறாங்க.... நான் உன்ன இறக்கிவிட்டுட்டு சும்மா தான் திரும்பி போகணும்.. அவங்க ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டா எனக்கும் திரும்பி போக சவாரி கிடைத்த மாதிரி இருக்கும்"என்றான் அப்பாவியான குரலில்...



அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "சரி அண்ணா" என்று நகர்ந்து அமர அவனின் கூட்டாளிகள் இருவரும் நிழவழகனின் இருபுறமும் அமர்ந்தனர்.‌.



ஆட்டோ புறப்பட மூவரும் ஒருவருக்கு ஒருவர் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்து கொள்ள சில நொடிகளில் அழகனின் வலது புறம் அமர்ந்து இருந்தவன் தன் கையில் மயக்க மருந்து அடித்து வைத்திருந்த கைக்குட்டையை இடப்பக்கம் வேடிக்கை பாரத்துக் கொண்டிருந்த அழகனின் மூக்கில் வைத்து அழுத்தியிருந்தான்...



நிலவழகனும் சிறிது நேரம் தன்னை விடுவிக்க போராட அவனின் முயற்சிகள் தோல்வியடைய அந்த மயக்க மருந்தை சுவாசித்த சில நிமிடங்களிலேயே மயக்கத்தை தழுவியிருந்தான்...



உணர்வற்று இருப்பதை உணர்ந்து கொண்ட மூவரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார் பின்பு அவனை வெவ்வேறு கோணங்களில் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் ஒரு எண்ணிற்கு அனுப்பிவிட்டு வண்டியை கிளப்பினான்.



பழைய இரும்பு குடோன் போன்று இருந்த அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தியவன் அவனுடன் இருந்த மற்ற இருவரும் மேலும் ஒருவன் என நால்வர் சேர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்...



ஒருவன் "மாமே பத்து லட்சம் இல்லாம பொருள அனுப்ப முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லிரு.. இதுல எவ்ளோ ரிஸ்க் இருக்குன்னு தெரியாம அவன் பாட்டுக்கு குறைச்சு சொல்லிட்டு இருக்கான்" என்க மற்றவனும் "சரிப்பா நீயே பேசிப் பாரு" என்றான்...



வெளியே வந்தவனும் ஒரு எண்ணிற்கு அழைத்து பேச சிறிது நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது சில மணி நேரங்கள் தொடர்ந்த அந்த விவாதம் ஒரு முடிவுக்கு வர புன்னகையுடன் திரும்பி வந்தான் அவன்...



மற்றவர்களிடம் "எப்படியோ பேசி சமாதானம் பண்ணிட்டேன் டா அதே அமௌன்ட்க்கு சரி சொல்லிட்டாங்க இன்னைக்கு நைட் நம்ம கொரியர் வண்டியில பார்சல் பண்ணிரலாம்" என்றவன் முகத்தில் வெற்றிக் களிப்பு...



அங்கு ஒரு ஓரமாக நின்றிருந்த ஆட்டோவில் இருந்த நிலவழகன் ஐ பார்க்க அவனோ இன்னும் அதே மயக்க நிலையில் இருந்தான் என்னடா இன்னும் மயக்கம் தெளியவில்லையா என்றான் மற்றவனிடம்...



"சீக்கிரம் தெளிஞ்சுடும் அண்ணா அதுக்குள்ள நம்ம மயக்க மருந்து கொடுத்து விடுவோம் " என்று முடிக்கவில்லை நிலவழகனிடம் இருந்து லேசாக அசைவு தெரிந்தது அதை பார்த்த மற்றவர்கள் மீண்டும் அதே கைக்குட்டையை அவனின் முகத்தில் வைத்து அழுத்தி இருந்தனர்...



புன்னகையுடன் திரும்பிய அவனின் கூட்டாளிகள் இன்னும் நாலு மணி நேரத்துக்கு அவன் எந்திரிக்கவே மாட்டான் அண்ணா..



அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடக்க மாலை குடோன் முன் இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கொரியர் வண்டியும் கூடுதலாக நிலவழகனை வாங்குபவனின் கையாள் ஒருவனுடன் தயாராக இருந்தது.



ஆட்டோவில் தன் கையில் இருந்த பையை கெட்டியாகப் பிடித்தபடி மயக்க நிலையில் இருந்த நிலவழகனை வண்டிக்கு இடம் மாற்றும் பொருட்டு தூக்க அவனிடம் இருந்து அந்த பையை பிரிக்க முயன்றனர்...



ஆனால் மயக்க நிலையிலும் அழகன் அந்த பையை கெட்டியாக பிடித்து இருந்தான் நேரமாவதை உணர்ந்தவர்கள் அதில் பெரிதாக எதுவும் இருக்காது என்று எண்ணி அந்த பையுடனே அவனை அந்த வண்டிக்கு மாற்றினர்....



அவனை வண்டியில் ஏற்றிய உடன் அதனையும் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் அதனை முன்பு புகைப்படம் எடுத்து அனுப்பிய அதே எண்ணிற்கு அனுப்ப அடுத்த நிமிடம் வண்டியுடன் வந்த கையாளுக்கு அழைப்பு வந்தது அதனை ஏற்று பேசியவன் கையில் இருந்த பணக்கட்டை அவர்களிடம் கொடுத்து விட்டு வண்டியை கிளப்பியிருந்தனர்...



நால்வரில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த ஒருவன்

"ஏன் அண்ணே இந்த சின்னப்பையனை எதுக்காக இவ்வளவு காசு குடுத்து வாங்கிட்டுப் போறாங்க " என கேள்வியாக வினவினான்...



" டேய் அவன் நமக்குத்தான் சின்னப் பையன் ஆனா பாம்பே கல்காத்தாவுல எல்லாம் அவனுங்களுக்கு பணம் காய்க்கிற மரம்டா... ஆள் வேற உயரமா கலரா இருக்கான் இவனுக்கு கொஞ்சம் செலவு பண்ணுனா போதும்டா இன்னும் ஆறுமாசத்துல தொழில்ல இறக்கி விட்டுருவானுங்க ... அப்புறம் என்ன காலம் முழுக்க சம்பாதிட்டே இருக்க வேண்டியதுதான்..." என்றான் ஏளனமாக அதைக் கேட்ட புதியவன் கண்களை விரித்தான்....

என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம்..அவனால் நிலவழகனின் விதியை எண்ணி பரிதாபம் மட்டுமே பட முடிந்தது....

-------------------

நீண்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து நிலாவிற்கு சேவை மையத்தில் இருந்து அழைப்பு வந்தது..ஒரே ரிங்கில் எடுக்க மறுமுனையில்

" மேம் பையன் கிடைச்சுட்டான் .. நம்ம ஆட்கள் அங்க போக நேரமானதால அவனை நம்ம முகவரியை வச்சுட்டு ஆட்டோவுல வந்துருக்கான் ... இடையில வண்டி பழுதானதால நேரத்துக்கு வர முடியாம தாமதமாகிடுச்சாம் மேம்..." என்க அப்போதுதான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.......



" ஓ.கே.. அந்த ஆட்டோகாரர் எண்ணை வாங்கி வைத்துவிட்டு அவருக்கு சன்மானம் கொடுத்துவிடு... அத்தோடு அந்த பையனை அழைச்சுட்டு வர அனுப்புன ஆள் அண்ட் அவனோட ஹெட் ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் பண்ணீருங்க... இனி இது போல எதும் நடக்க கூடாது... அந்த பையனுக்கு தேவையான மெடிக்கல் டிரிட்மெண்ட் முடிந்ததும் நம்ம ட்ரஸ்ட் மூலமாகவே படிக்க தேவையான பணத்தை அரேன்ச் பண்ணி கொடுத்துருங்க " என கட்டளைகளைப் பிறப்பித்தவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது..‌‌..



நேரம் மாலையை நெருங்க அவளுக்கு சற்று நடந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது... வாசனின் கெஸ்ட் ஹவுஸ் ஹோட்டல் அறைகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடமும் அதனை சுற்றிலும் தனித் தனி வீடுகள் என மிகவும் அழகாக அமைந்திருந்தது...



நிலா ஒற்றை அறையுள்ள மரத்திலால் ஆன சிறிய வீட்டிலேயே தங்கியிருந்தாள்... குளிருக்கு இதமான கோர்ட் மற்றும் காலணிகளை அணிந்தவள் அங்கு காலார நடக்க ஆரம்பித்து இருந்தாள்...



மனதில் இருக்கும் காயங்கள் ஆற துவங்கியிருந்தாலும் அதனை நினைவு படுத்துவது போலவே மேலும் மேலும் சம்பவங்கள் நடக்க அவளும் தான் என்ன செய்வாள்..



பதினான்கு வயதில் இருந்தே வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறாள் காயங்கள் ஆறினாலும் அதன் வடு இன்னும் அப்படியே அல்லவா உள்ளது...



நண்பர்களுக்காக சிரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் இன்னும் மனதின் வெறுமை விரக்தி எல்லாம் நீங்காமல் நெருப்பு கங்குகள் போல் ஒருபக்கம் புகைந்து கொண்டே அல்லவா உள்ளது...



மலைகளுக்கு நடுவே மறையும் ஆதவனை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .. ஆறுமணிவாக்கிலே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த போது வாசனின் தந்தையும் அவருடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்...‌



"வாம்மா நிலா... இவங்க தான் ஜெயந்தி..‌ நீ இருக்க வரை உனக்கு உதவியா உங்கூடவே இருப்பாங்கமா " என்க "எதுக்கு அங்கிள் சிரமம் நானே பாத்துக்குவேன்" நிலா..



"பரவாயில்லை மா ... இவங்க இங்க வேலை செய்றவங்கதான் ஹோட்டலுக்கு பக்கத்துல தங்குவாங்க இப்போ உங்கூட இருப்பாங்க அவ்வளவுதான் டா வித்தியாசம் நீ எதுவும் மறுக்க வேணாம்மா... " என்ற அவரின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டவள்



"சரி அங்கிள்" என்றுவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து புன்னகைத்தாள்... அவரும் பதிலுக்கு புன்னகை செய்ய ஏனோ அவளின் தாயின் எண்ணமே மனதில் ஓடியது...



அவரின் ஸ்பரிசத்தையோ இல்லை அவரின் அன்பையோ இதுவரை அவள் உணர்ந்ததில்லை அவளின் தாயினை புகைப்படத்தில் தான் பார்த்து இருக்கிறாள் .. இப்போதும் அவரின் புகைப்படத்தை பொக்கிஷம் போல் கையில் வைத்துள்ளால் தான் அதுவும் நிலா ஒவ்வொரு முறை கண்ணாடி பார்க்கும் போது அவளுக்கே தோன்றுவது தன் தாய் எங்கும் செல்லவில்லை தன்னுள் தான் தன்னைக் காத்து தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றும் ஏனெனில் அவள் அப்படியே அவள் தாயைப் போல...



ஒவ்வொரு முறை அவள் தனிமையை உணரும் போதும் அவருடைய புகைப்படத்துடன் மானசீகமாக பேசிக் கொள்வாள்...இன்று கூட காணாமல் போன அந்த சிறுவன் நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என மனமுருகி தன் தாயிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்...



வாசனின் தந்தை சென்றவுடன் "ஜெயாம்மா வாங்க காபி சாப்பிடுறீங்களா"என பாசமாக கேட்டாள்... இதுவரை தன்னை வேலைக்காரியாகவே நினைத்து விரட்டியவர்கள் மத்தியில் தன்னை மரியாதையுடன் நடத்தும் நிலவழகியை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது...



வாசனின் தந்தை அனைத்தையும் கூறியதால் நிலாவைப் பற்றி தெரிந்தே உடன் இருக்க சம்மதித்திருந்தார்....



இருவரும் பேசிக் கொண்டே அந்த நாளைக் கடத்த நிலாவிற்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது..



ஜெயந்தி சிறுவயதிலேயே திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் பிரிந்து சென்று விட வாசனின் தந்தை உதவியால் இங்கு வேலை செய்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்...



இரவுணவு முடிந்ததும் உறக்கம் வராமல் இருக்க இருவரும் கணப்பை முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...



"ஏன் ஜெயாம்மா நீங்க ஒரு குழந்தையை தத்தெடுத்து இருக்கலாமே ஏன் ரெண்டு பேரும் பிரிந்தீர்கள்..."என்றாள்...



" கல்யாணமான புதுசுல என் மேல ரொம்ப பாசமாதான் இருந்தாங்க .. மூணு வருசமா குழந்தை இல்லாமல்தான் இருந்தோம் நான் கூட வருத்தப்படுவேன் ஆனா அவுக தான் எனக்கு ஆறுதல் சொல்லுவாங்க அப்படி இருந்தவங்கள அவங்க அம்மா அதான் ஏன் மாமியார் ஏதேதோ சொல்லி மனச கலைச்சுட்டாங்க ...அவுகளும் ஒரு கட்டத்தில தனக்கும் வாரிசு வேணுமுன்னு வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க.."என்றவர் குரலில் சோகத்தை உணர்ந்த நிலா ஆதரவாக அவருடைய தோளைத் தொட்டாள்...



தன்னை மீட்டுக் கொண்டவர் மேலும் தொடர்ந்தார்.."அவர விட்டு வந்தது வருத்தமா இருந்தாலும் அதைவிட அவர் சந்தோஷமா இருக்காருங்கரது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துதுமா...இந்த சமூகத்தில ஒரு பொண்ணு தனியா வாழ்வது ரொம்ப கஷ்டம் வாசனோட அப்பா மட்டும் இல்லனா நா எப்பவோ மண்ணுல மக்கிப் போயிருப்பேன் மா... பெண்ணுங்க எவ்வளவுதான் சாதிச்சாலும் ஏன் அந்த நிலவுக்கே கூட போனாலும் திரும்பி வீட்டுக்கு வரும்போது நமக்குன்னு ஒருத்தராவது வீட்டுல இருக்கணும்மா ... அது அப்பா அம்மா அண்ணன் தம்பி கணவன் நம்ம குழந்தைங்க அப்படி யாரவேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா கண்டிப்பா அப்படி ஒரு ஆள் நமக்கு இருக்கணும் " என்றவரின் குரலில் இத்தனை வருட தனிமையும் ஏக்கமும் நிறைந்திருந்தது... அதனை புரிந்து கொண்ட நிலாவும் அவருக்கு ஆதரவாக தோளில் வைத்திருந்த தன் கையில் அழுத்தத்தைக் கூட்டினாள்...



❤️❤️❤️



உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ?

Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
 

Anucharan

Active member
Wonderland writer
விழி-5



பாராங்கல்லை வைத்ததைப் போன்று கனத்த இமைகளை மெதுவாக பிரித்த நிலவழகனுக்கு முதலில் தெரிந்தது என்னவோ இருள் தான்...



அவனுக்கு நிதானத்திற்கு வரவே முழு மூன்று நிமிடங்கள் தேவைப்பட்டது அதன்பின்னே சற்று நினைவு கூர்ந்தவனுக்கு அவனுடன் ஆட்டோவில் இரண்டு பேர் ஏறியதும் மூக்கில் ஏதோ வைத்து அழுத்தியது வரை நினைவில் இருந்தது...



அவனுக்கு தன்னை யாரோ கடத்தியுள்ளனர் என்பது வரை தெளிவாய் புரிந்தது.... கிட்டத்தட்ட தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மயக்கத்திலேயே இருந்ததால் அவனால் சரியாக காலைக்கூட அசைக்க முடியவில்லை....



தனக்கு என்ன நடந்தது ஏன் கை, காலை கூட அசைக்க முடியவில்லை என யோசித்துக் கொண்டே தட்டுத்தடுமாறி எழுந்து அந்த இருளிலும் ஒரு மூலையில் எறிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் அருகில் சுவற்றைப் பிடித்து தள்ளாடிக் கொண்டே சென்று கையில் எடுத்தவன் அப்போதுதான் தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தான்...



அது ஒரு அறை என்பதும் அதில் இரண்டு கதவுகள் இருந்தது வரை தெளிவாக தெரிந்தது... அதில் ஒரு கதவு பூட்டப்பட்டிருக்க மற்றொன்று குளியலறை என்பது வரை அறிந்து கொண்டான்...

தான் எங்கிருக்கிறோம் எதற்காக தன்னை கடத்தினார்கள் என்பது தெரியாமல் இருந்தவனுக்கு அப்போதுதான் தன் வைத்திருந்த கைப்பை நினைவுக்கு வர அதனை சுற்றிலும் தேடினான் ....



அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் அருகேயே இருக்க முதலில் அதனை சோதிக்கையில் அதில் துணிகளுக்கு அடியில் இருந்த பணம் அப்படியே இருந்தது அதைக் கண்டு பெருமூச்சு விட்டான்...

சாதாரணமாக தேடினால் அதில் பணம் இருப்பது துளியும் வெளியில் தெரியாது அதுபோலதான் அவன் பணத்தை வைத்து இருந்தான் ....



சிறிது நேரத்திலேயே பயமும் குழப்பமுமாக அவனின் எண்ணமோ " இந்த பணத்துகாக தான் என்னை கடத்துனாங்க அப்படி என்றால் அவங்க ஏன் என்னோட பையை பாக்கல .... அப்போ வேற எதுக்காக என்னை கடத்துனாங்க" என்ற கேள்வி மனதினுள் ஓட சற்று தலை சுற்றுவது உணர்ந்தவன் அப்படியே கட்டிலில் அமர்ந்தான்....



இன்னும் மருந்தின் மிச்சமீதி அவனின் உடலில் இருக்க அதன் வீரியம் தான் குறைந்த பாடில்லை...சற்று நேரத்திலேயே அறையின் வாயிலில் பேச்சு சத்தம் கேட்க அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்....



அவர்கள் பேசுவது வேறு மொழி என்பது வரை அவனுக்கு புரிந்தது...கதவு திறக்கும் சத்தத்தில் பழைய படியே படுத்துக் கொண்டான் நிலவழகன்....



உள்ளே வந்த நான்கு ஐந்து பேரில் நாற்பதைக் கடந்த மருத்துவர் ஒருவர் மற்றவர்களை வெளியில் அனுப்பிவிட்டு அவனைப் பரிசோதித்தார்..



அவர் தொடுவதால் ஒருவித அருவருப்பும் கூச்சத்தையும் உணர்ந்தவன் தன்னை சமாளிக்கும் பொருட்டு பற்களைக் கடித்துக் கொண்டான்...



அவர் தன்னை என்ன நோக்கத்தில் பரிசோதிக்கிறார் என்பதை உணர்ந்தவனுக்கு மனம் திக்கென்றது ஏனெனில் அவன் இதனை முன்பே தெரிந்திருந்தான்....



அவனுக்கு மயக்கம் தெளிந்தது தெரிந்து மீண்டும் ஏதேனும் தந்து மயக்கம் வருவது போல் செய்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக மயக்கத்தில் இருப்பது போலேவே படுத்திருந்தான்.......



பரிசோதனை முடித்தவர் வெளியில் நின்றவர்களை அழைத்தார்....
(வேற்று மொழி தமிழில் )



"எல்லாம் ஓகே கம்மிங் வீக்கெண்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருங்க அடுத்த மூணு மாசத்துக்கு அப்புறம் தொழில்ல இறக்குங்க... " என மேலும் சில விசயங்களை கூற இதையெல்லாம் தூங்குவது போல் நடித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு அவர் கூறியதில் பாதி வார்த்தை புரியவில்லை...



சில ஆங்கில வார்த்தைகளை மட்டும் புரிந்து கொண்டவனுக்கு தனக்கு நடக்கவிருப்பதை ஊகித்தவனுக்கு மனதில் பயம் உருவானது... இதையெல்லாம் இவர்கள் ஏன் செய்ய வேண்டும் நிச்சயம் இதில் ஏதோ தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டவன் இங்கிருந்து முதலில் தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்...



அறையில் இருந்து வெளியே சென்றவர்கள் ஒருவனை காவலுக்கு நிறுத்திவிட்டு மற்றவர்கள் கலைந்து சென்றனர்...



நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்க நல்ல குடி போதையில் கையில் மது பாட்டிலும் தொப்பையுமாக அந்த விடுதியின் உரிமையாளன் நிலவழகனின் அறை இருந்த பகுதியில் தள்ளாடியபடியே நடந்து வந்தான்..

அவன் நடக்கும் சத்தத்தில் தூக்கம் கலைந்த அந்த காவல்காரனுக்கு சற்று சலிப்பாக இருந்தது.. விடுதியின் இந்த பகுதி புதியவர்களை மட்டுமே அடைத்து வைப்பர்...



எப்போதுமே மற்ற பெண்கள் இல்லாத சமயத்தில் தான் இந்த பகுதியை நாடி வருபவன் அப்படி வந்து சென்றால் அன்றைய தினம் நிச்சயம் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்காது ..



இன்றும் அதே போல் அந்த காமுகன் வர அவனுக்கோ அந்த சிறுவனை நினைத்து பாவமாக இருந்தது... தள்ளாடியபடி வந்த அந்த மிருகமோ நேரே சென்று அழகனின் அறை கதவில் கைவைக்க



அவனோ "ஜீ வேணா ஜி அவன் சின்ன பையன் இந்த வாரக் கடைசியில ஆஸ்பிடல் அனுப்பனும் அப்புறம் கூட பாத்துக்கலாம்...இப்ப எதும் ஆச்சுன்னா நமக்கு தான் நஷ்டம்"என தடுக்க போதையில் இருந்தவனுக்கு வெறி ஏறியது



"அரே சாலா ... என்னையேவே தடுக்க...றயா.... இங்க இருந்து ....எந்த பீஸும் என்னை தாண்டி தான்...... போகும்னு உனக்கு தெரியும்ல...."என நா குழறியபடி பேசியவன் அவனைத் தள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைப் பூட்டினான்....



மருத்துவர் வெளியே சென்றதுமே அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை தேடியவன் குளியலறையில் இருந்த சிறிய சன்னல் அதன் கம்பியை கடினபட்டு ஒரு வழியாக அகற்றியவன் அதன் மேல் ஏறி கீழே பார்க்க அது ஒரு உயரம் குறைந்த இரண்டாவது மாடியின் பின்புறம் மேலும் அருகிலேயே பதில் சுவர் இருக்க என்பதை அறிந்து கொண்டான்...



மேலும் அதில் திட்டு போன்ற பகுதியிருக்க அதில் தப்பித்து விடலாம் என எண்ணியவன் நடுநிசியானதும் முதலில் தன் பையை வீசினான்

பின் அவன் குதிக்க எத்தனித்த வேளையில் அறை வாசலில் பேச்சு சத்தம் கேட்க இப்போது தப்பித்தால் அனைவரும் முழித்து விரைவில் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம் என்பதை புரிந்து கொண்டவன் சத்தமில்லாமல் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் தனக்கு நடக்க போகும் விபரீதத்தை அறியாமல்.....



முழு மது போதையில் இருந்த அந்த மிருகத்திற்கு ஆணிற்கும் பெண்ணிற்குமான வித்தியாசம் கூட தெரியாமல் புத்தி மழுங்கிதான் போனது அவனிற்கு தற்போதைக்கு தேவை ... தன் வெறியை தீர்த்துக் கொள்ள அந்த பிஞ்சை கருக்கவும் தயாராகிவிட்டான்..‌‌...



நம் நாட்டில் நடக்கும் பல பாலியல் குற்றங்களுக்கு இந்த மது தான் மிகப்பெரிய பங்கையாற்றுகிறது என்றால் அது மிகையாகாது..



இந்த மது மற்றுமின்றி ஏனைய பிற போதை வஸ்துகளும் எத்தனையோ பிஞ்சுகளை முலையிலேயே கருக்கி விடுகின்றன......

இதில் ஆண் பெண் வித்தியாசங்கள் எல்லாம் எப்போதோ மறைந்து போய் விட்டது....



சிறிது நேரத்திலேயே வெளியில் நின்றவனுக்கு சிறுவனின் அலறல் சத்தம் மட்டுமே கேட்க அதுவும் சில வினாடிகளிலேயே அடங்கியும் போனது....



அந்தக் விடுதி உரிமையாளனின் வலது கை மற்றும் நிலவழகனை வாங்க டீல் பேசியவர் வேகமாக அந்த தளத்தை நோக்கி ஓடிவந்தான்....



நிலவழகனின் அறை முன்பு கைகளைப் பிசைந்து கொண்டிருந்த அடியாளைக் கண்டவனுக்கு ஒருபுறம் ஆத்திரமாக இருந்தது...



"டேய் அறிவுகெட்டவனே!!!! அவர எதுக்கு டா உள்ளவிட்ட ... போனதடவை என்ன நடந்ததுனு தெரியும்ல .. பாடிய கிளியர் பண்றதுக்கு படாதபாடு பட்டோம் அதோட எவ்வளவு காசு நட்டமாகிடுச்சுனு தெரியும்ல" என்க தலைகுனிந்து நின்றான்...



ஆம் கடந்தமுறை ஒரு பதினைந்து வயது சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்திருந்தனர்....

இதேபோல் அன்றும் ஆள்கிடைக்காமல் இங்கு வந்த பிசாசின் இச்சைக்கு ஆளாகி அந்த பிஞ்சு அநியாயமாய் தன் உயிரினை விட்டிருந்தது...



"உள்ள போய் எவ்வளவு நேரம் ஆச்சு டா"என்க ...

"ஒரு மணி நேரம் இருக்கும் பையா ... மொதல்ல அந்த பையன் சத்தம் வந்தது அப்புறம் இல்லை " என்றான்...



" எல்லாம் போச்சு ... இன்னும் அவனுக்கு சிகிச்சையே முடியல அந்த டாக்டர் வேற கத்த போறான்... " என்றவன் வேகமாய் கதவை தட்டினான்...



உள்ளிருந்து எந்த எதிரொலியும் வராமல் போக ஒரு கட்டத்திற்கு மேல் கதவை தள்ளி உடைத்துக் கொண்டே உள்ளே சென்றான்...

அங்கு அவன் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான்....



அவனின் பாஸ் அங்கு கட்டிலின் கீழே அரைகுறை ஆடையில் வயிற்றில் குத்திய மது பாட்டிலுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்...



அடுத்த நொடி பதறியவன் அருகில் சென்று உயிர் இருக்கிறதா என சோதிக்க அந்தோ பரிதாபம் அதிக இரத்த போக்கினால் அந்த மிருகம் அந்த இடத்திலேயே இறந்து கிடந்தது... அதிர்ச்சியில் தன் ஆட்களை கத்தி அழைத்தவன் கொலைவெறியுடன் நிலவழகனை அறை முழுவதும் தேடினான் ...



குளியலறை சன்னல் கம்பி கீழே கிடப்பதைக் கண்டவன் ஒரு பதினான்கு வயது பாலகனுக்கு இவ்வளவு துணிச்சலா என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்....



பின் இதன் வழிதான் தப்பியிருப்பான் என்பதை ஊகித்து தனது அடியாட்களை ஏரியா முழுவதும் தேடுமாறு விரட்டினான்...



உடை அங்காங்கே கிழிந்திருக்க உடலில் அந்த அரக்கனால் ஏற்பட்ட காயம் மற்றும் இரண்டு நாட்கள் சாப்பிடாதது என நிலவழகனை அதிக தூரம் தப்பிக்க இயலாது செய்திருக்க ஒரு மரத்தின் பின்னே மறைந்திருந்தான்...



இன்னும் அவன் கையும் உடலிலும் ஒருவித நடுக்கம் இருந்து கொண்டேதான் இருந்தது...அவன் கண்ணில் இருந்து கண்ணீர் விடாது வழிந்து கொண்டே இருந்தது...



என்ன மாதிரியான மனித மிருகங்கள் இவர்கள்... ஒரு சிறுவன் என்றும் பாராது ... ச்ச ... அவன் மனதில் உயிருடன் வாழ்வதற்காக இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அந்த மிருகத்தால் முற்றிலும் அழிந்து போனது....



முதலில் இங்கிருந்து தப்பித்து பிறகு வாழ்வதா சாவதா என்பதை முடிவு செய்வோம் என எண்ணியவன் மறைவிலிருந்து வெளியில் வந்து தன் பையை தோளில் மாட்டியவன் வேகமாய் நடக்க ஆரம்பிக்க அதற்குள் அவனின் அடியாட்கள் நிலவழகனை கண்டு விட்டனர்...



பின்னங்கால் பிடறியில் படற இருள் கவ்விய அந்த ஆள் ஆரவமற்ற சாலையில் தன் உடம்பில் உள்ள காயங்களையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்த பதின் வயது பாலகனை சிறிதும் இரக்கமில்லா அந்த மனித மிருகங்கள் துரத்திக் கொண்டிருந்தது...



ஒரு தெருவைக் கடந்ததும் அவர்கள் பின் வருவதற்கான ‌எந்த அறிகுறியும் இல்லாமல் போக அந்த பிஞ்சோ ஓடிவந்ததனால் ஏற்பட்ட களைப்பில் அருகில் இருந்த குப்பைத் தொட்டியின் பின் மறைந்து கொள்ள,

துரத்தி வந்த அரக்கர்களை வெறுமையான தெருவே வரவேற்றது...



அதில் மாமிசமலைபோல் இருந்த ஒருவன் மற்றவனிடம் 'அவனை விடக் கூடாது... இந்த தெருவத் தாண்டி அவன் எங்கையும் போயிருக்க முடியாது... நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் போங்க 'என அனுப்பிவிட்டு அவனும் நகர ....



அதுவரை தன் வாயை இருகையாலும் மூடி மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தவன் அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட அந்நேரம் அவன் தோள்களில் ஒரு கரம் விழுந்தது.. திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று சில நொடிகளிலேயே அந்த கரங்களில் மயங்கி விழுந்திருந்தான் நிலவழகன்



❤️❤️❤️❤️



உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே

Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
 
Status
Not open for further replies.
Top