ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 19- என் பாதையில் உன் கைகள் கோர்த்து

pommu

Administrator
Staff member
APV 19- என் பாதையில் உன் கைகள் கோர்த்து
 
#உன்_பாதையில்_உடன்_கைகள்_கோர்த்து_விமர்சனம்

விஜய ராகவன் ஐ. பி .எஸ்ஸிற்க்கும் மஹா லட்சுமி ஐ. ஏ. எஸ்ற்க்கும் விவகரத்தாகிடுது அதற்கான காரணம் என்ன? மறுபடியும் அவங்க சேர்ந்தார்களா? மற்றும் கோவை மாநகரில் நடக்கும் இரண்டு கொலைகள் அதற்கான காரணமும் மற்றும் கொலையாளி யார்? என்பதை சொல்லுது இந்த கதை.

விஜய் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥மஹா இருவரின் காதலும் ரொமான்ஸும் வேற மாதிரி 🙈🙈🙈

விஜயின் மைண்ட் வாய்ஸ் எல்லாம் சூப்பர் 🤣🤣 விஜயக்கும் மஹாக்கும் நடுவுல 3 வயசு பையன் தான் பாவம் மாட்டிட்டு முழிக்குது.

வைஷ்ணவிக்கு நடந்தது கொடுமை 😓😓😓
கொலையாளி யாருங்கர ட்விஸ்ட் 🫰🫰🫰 சற்றும் எதிர்பார்க்காதது❤


விஜயின் காதல் பிரிவு கோபம் ஆசைனு எல்லாம் நல்லா சொல்லீருக்கீங்க அதே அளவுக்கு கொலை வழக்கையும் மற்றும் வைஷ்ணவிக்கு நடந்ததுவும் இன்னும் கொஞ்சம் தெளிவாவும் நல்ல ஸ்ட்ராங்காவும் சொல்லீருக்கலாம். மற்றமடி நல்ல கதை

வாசகர்களும் உங்களுடன் கைகோர்த்து போட்டியில் வெற்றி பெற செய்ய வாழ்த்துக்கள் 👍
 
#என்_பாதையில்_உன்_கைகள்_கோர்த்து…
#கௌரிஸ்ரிவ்யூ

கலெக்டர் ஹீரோயின் ♥️ ஐபிஎஸ் ஹீரோ🤩🤩🤩🤩

ஆரம்பமே டிவோர்ஸ் வாங்கிட்டு இனி உன் பேச்சி டூ அப்படினு அவங்க அவங்க வழியை பார்த்திட்டு போயறாங்க 😔😔😔😔😔…..

இவங்களுக்கு நடுவில் மாட்டிக்கிட்டது இவங்க 3 வயசு பையன் தான்…..

இது தான் சான்ஸ் அப்படினு மகிக்கு அவ அம்மாவும், விஜய்க்கு அவன் அப்பாவும் வேற கல்யாணம் பண்ண டிரை பண்றாங்க….

ஆன ரெண்டு பேருக்குமே அதே காதல் அப்படியே தான் இருக்கு….ஆனாலும் ஏன் இந்த முடிவு?????

இதுக்கு நடுவில் நகரத்தில் நடக்கும் தொடர் கொ***லைகள்….

செய்தது யார்????

இனி அவங்க எப்படி சேர்ந்தாங்க அப்படிக்கறது தான் மீதி கதை….

விஜய்…. எப்பா டேய்….வாயா என்னடா உனக்கு???? கோவம் வந்தா எப்படி வேணா பேசுவியா???🙄🙄🙄🙄🙄

ஆன காதல் வந்தா🙈🙈🙈🙈🙈

ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீம் இவன் கிட்ட….

மஹி….எப்படி மா இவனை சமாளிக்கர 🤷🤷🤷…..சரி அது உன் பாடு🤭🤭🤭🤭

இவளோட காதல் செம்ம cute🥰🥰🥰🥰

வைஷு....இவளுக்கு இப்படி ஆகி இருக்க வேணாம்🥺🥺🥺🥺🥺....ஆன வினோத் நல்ல பார்ட்னரா இருப்பான்🫰🫰🫰🫰

இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல ரைட்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

கதை நல்ல விறுவிறுப்பா போச்சி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்து
க்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
உன் கைகள் கோர்த்து விமர்சனம்

ஆரம்பத்துலயே கோர்ட் வாசல்லதான் கதை ஆரம்பிக்கிறதது.. கோர்ட்ல கணவன் மனைவி டிவோர்ஸ் வாங்குறாங்க.. அவங்க ரெண்டு பேரும் சாதாரண மக்கள் இல்ல.. ஆதிகார வர்க்கத்துல உள்ளவங்க கணவன் ஐபிஎஸ் அதிகாரி மனைவி ஐஏஎஸ் அதிகாரி ..இவங்க டிவோர்ஸ் எதுனால நடக்குது ஆனாலும் பேருக்கு டிவோர்ஸ் வாங்கிகிறாங்க ..ஆனா நம்ம ஐபிஎஸ் மனைவி பின்னாடியே சுத்துறாங்க.ஒரு பக்கம் இவங்க கதை நடக்க இன்னொரு பக்கம் இரண்டு கொலைகள் நடக்குது‌..இந்த கொலை கேச விசாரிக்கிறதும் நம்ம ஐபிஎஸ் தான்..அந்த கொலைகள் ஏன் நடக்குது? கொலையாளி எதுக்காக இந்த கொலைகள பண்ணுறான்.. கொலையாளிய கண்டுபிடிச்சாங்கலா ? கணவன் மனைவியோட டிவோர்ஸ் எதுக்கு நடக்குது ? அவங்க சேர்ந்தாங்களா இல்லையான்றத கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்


விஜய் - நம்மளோட ஐபிஎஸ் 😉😉ரொமான்டிக் மன்னன் அப்படினு சொல்ல ஆசைதான் ஆனால் அவன் பண்ற ரொமான்டிக்லாம் காமெடியா தான் இருக்கு .அதுவும் அவன் மனைவி பின்னாடி சுத்துறது அவனோட ரசகுல்லாவ கொஞ்சுறதுனு‌ எல்லாமே படிக்க நல்லா இருந்துச்சு கொஞ்சம் சிரிப்பா இருந்துச்சு.. மனைவிட்ட காமெடியா இருந்தாலும் கடமைனு வந்துட்டா நம்ம பாவா வ மிஞ்ச யாரும் இல்லை..அவங்க அம்மாகிட்ட பாசமா இருக்குற விஜய் அவன் அப்பாகிட்ட மட்டும் விரைப்பா இருக்கிறது...அவங்க பையன் ப்ரணவ் கூட இருக்குற பாண்டும் குட்.. அவன் செஞ்ச தப்ப உணர்ந்து மனைவி கிட்ட மன்னிப்பு கேட்டு நடந்த விதம் அருமை..


மஹாலக்ஷ்மி - நம்ப கலெக்டர் மேடம்...இவங்க கேரக்டர் நல்லா இருக்கு..அவங்க விஜய்ய செல்லப்பேர் வச்சு கொஞ்சுறதும் படிக்க நல்லா இருக்கு..அவளோட பாவா ன்ற செல்ல பேர் 🤭இதுங்க டிவோர்ஸ் கதைலாம் கேட்டா சிரிப்பா இருக்கு..டிவோர்ஸ் வாங்கிட்டு ரெண்டும் ஒன்னாதான் இருக்காங்க.. 🤔🤔 எல்லா ஸ்டோரிலயும் அம்மா லவ்வ ஏத்துப்பாங்க அப்பாதான் லவ்வ அப்ஜக்ட் பண்ணுவாங்க..இதுல அப்படியே அப்போஸிட்.. அம்மா தான் ஏத்துக்கல அப்பா கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு...இவ விஜயோட அப்பாக்கு கொடுத்த பதிலடி சூப்பர்..


விஜய் நண்பன் வினோத் - டாக்டர் தான்..ஆனா தான் காதலிக்கிற பெண்ணுக்கு நடந்த அநியாயத்துக்கு தண்டனை குடுங்கனுங்கிறதுக்காக தன்னோட ப்ரோபோஷனையே விட்டுருக்காரு.... தன்னோட காதலையும் கடைசியாக காப்பாத்திட்டாரு..நல்ல ஹெல்ப் ஆ இருந்தாரு


மஹாவோட அப்பா சிதம்பரம் - இவர் கேரக்டர் நல்லா இருக்கு..ஒரு அப்பாவும் குட் அன்ட் மாமானாரா இருந்தாலும் விஜய்க்கு ஃப்ரெண்ட் மாதிரி இருந்தாங்க..அதே மாதிரிதான் விஜயோட அம்மாவும்.. கேரக்டர்ல ரெண்டு பேரும் ஒரே மாதிரி விஜய் மம்மி அன்ட் மஹா டேட் ..


விஜயோட அப்பா பார்க்க டெரர் மாதிரி காட்டுனாங்க ஆனா கடைசில காமெடியா போச்சு..விஜயோட அப்பாக்கு தன்னோட‌தங்கச்சி பொண்ணதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் விஜய்க்கு நினைக்க அதேதான் மஹா அம்மாக்கும் தன்னோட அண்ணண் பையனுக்குதான் தன்னோட பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கனும் னு ..ஆனா பாருங்க கடைசில தான் தெரியுது இவங்க ரெண்டு பேரும் அண்ணண் தங்கச்சி தான்னு😂😂


வைஷூவோட நிலைமைதான் படிக்க கஷ்டமா இருந்துச்சு ஒரு‌ பொண்ணுக்கு நடக்க கூடாத விசயம் நடந்து அதனால ரொம்ப கஷ்டப்பட்டா..கடைசில அவளுக்கு நியாயம் கிடைச்சிடுச்சு...


செத்தவனுங்கல்லாம் நல்லவனுங்க இல்ல அவனுங்களுக்குலாம் இந்த தண்டனை தான் கிடைக்கனும் ..கதையோட முடிவு நல்லாதான் இருக்கு...


அதே மாதிரி பேசும் வார்த்தைகளும் எவ்வளவு காயப்படுத்துன்றத புரிஞ்சிக்கனும்...அத விஜய் புரிஞ்சிகிட்டு மனைவி கிட்ட மன்னிப்பு கேட்டது சூப்பர்..


ஆனால் கொலையாளி யாரு அப்படின்றததுதான் டிவிஸ்ட்.. எக்ஸ்பெக்ட் பண்ணாத ஆளுங்கப்பா கொலையாளிஸ்..


ஒரு நல்ல ஜோவியலான கதை..


ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து

விஜயராகவன் ஐபிஎஸ் நம் நாயகன். மஹாலட்சுமி ஐஏஎஸ் நம் நாயகி. ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்குறதுல கதை ஸ்டார்ட் ஆகுது.

அவங்க ஏன் டிவோர்ஸ் வாங்குறாங்க. அவங்க ஸ்டோரி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கொலை நடக்குது. அது யாரு பண்றாங்கனு கண்டு பிடிக்கிறது ஒரு பக்கம்னு ஸ்டோரியை கொண்டு போய் இருக்காங்க.

இதுங்க தேவை இல்லாத ஒரு காரணத்துக்காக டிவோர்ஸ் வாங்குற மாதிரி பீல் ஆச்சு. பேசியே தீர்வை கொண்டு வந்து இருக்கலாம். அதுங்க சேர்ந்து தானே இருந்துச்சுங்க. இதுக்கு டிவோர்ஸ் வரைக்கும் போகாமலே இருந்து இருக்கலாம். 🙄🙄🙄🙄

விஜய் மஹா லவ் ரசிக்கும் படியா இருந்துச்சு.

இதுங்க ரொமான்ஸ் செம 🥰🥰🥰

வைஷு பாவம் அவளுக்கு ஒரு நல்ல லைப் அமைச்சது நல்லா இருந்துச்சு.

கொலை பண்ணது இவங்க தான்னு எதிர் பார்க்கல. அவங்களுக்கு இது தேவை தான் 😡😡😡😡

இதுங்க டிவோர்ஸ் வாங்குறதுக்கு சரியான காரணம் சொல்லி இருக்கலாம். அது மட்டும் ஏத்துக்க முடியல.

ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Top