அகமாளவந்த அகவாளனே!!
நாயகன் -தமிழறிவாளன்
நாயகி - நறுவீ
முதல் திருமணம் தோல்வியால் முடிந்து இரண்டாம் திருமணம் என்ற பந்தத்தில் நுழையும் நம் நாயகிக்கு அந்த திருமண வாழ்க்கை எப்படி அவளை உள்வாங்கி கொண்டு அவளுக்கு வசந்தமாக மாறியது , நாயகன் நாயகியின் கூட்டினை உடைத்து அவளை எப்படி மாற்றினான்? நாயகி அவனைஏற்றுக்கொண்டாளா அப்படின்றது தான் இந்த கதை..
திருமண தோல்வியால் ஒரு பெண்எந்த அளவு ஏச்சும் பேச்சும் ஊர் உலகத்து கிட்ட இருந்து வாங்குறா ..அவ மனசு எந்தளவு பாதிக்கப்படும்ன்ற யோசிக்காம பேசுறவங்க ரொம்ப அதிகம்.. அந்த பேச்சுக்களால் காயப்பட்டு , தன்னுடைய பெற்றோர்கள் கூட துணை இல்லாமல் தனிமையாய் , அவளுடைய முதல் திருமணத்தின் கசடுகளும் வடுக்களாக மாறி இறுக்கமாக இருக்கிற நம் நாயகியை அவள் தான் வேண்டும் என்று தன் அன்னையிடம் போராடி அவளை கரம் பிடிக்கிறான் நம்ம நாயகன்..
குழந்தை பெத்துக்க முடியாதவள்னு முத்திரை குத்தப்பட்டு இருக்கிற நம்ம நறுவீக்காக தனக்கு குழந்தையே பிறக்காதுன்னு அவனுடைய அம்மாகிட்ட பொய் சொல்லி திருமணம் செய்கிறான் தமிழ் ..தன்னோட காதலுக்காக எந்த ஒரு ஆணும் செய்யாத விசயத்தை செய்யுறான்..அது மெய்சிலிர்க்க வைக்குது ...
நறுவீக்காக ஒவ்வொரு இடத்துலயும் அவன் நிக்கிற விதம்..அவளை கையாளும் விதம்..அவ கஷ்டத்துல ஆறுதலாக இருந்ததுனு தமிழோட காதல் ரொம்ப ஆத்மார்த்தமானது..
பள்ளி பருவத்தில் தோன்றிய தன் காதலை தன்னோட தந்தை கிட்ட கேட்ட விதமாகட்டும் அதற்கு தந்தையின் வழிகாட்டுதல்னு எல்லாமே ரொம்ப அருமையா இருந்தது ...தன்னை உயர்த்திக் கிட்டு நறுவீய கல்யாணம் பண்ணிக்க கேட்கும் போது தான் அவளுடைய கல்யாணம் விசயம் தெரிய வருது தமிழுக்கு ..அந்த டைம்ல அவன் பீல் பண்ணி அழுததுலாம் படிக்கும்போது ரொம்பவே பீல் ஆச்சு



அப்போது கூட தன்னோட அழுகை அவளுடைய வாழ்க்கையை பாதிச்சிடக்கூடாதுனு அவளுக்காக பிரார்த்திக்கிறதுலாம் வெகு அருமை...
இரண்டாம் திருமணத்தை சீக்கிரமே ஏத்துக்க முடியாம இருந்த நம்ம நறுவீய நம்ம அறிவு அவனுடைய தூய நேசத்தால கொஞ்சம் கொஞ்சமா வெளிய கொண்டுவந்து அவளை தமிழுக்கான நறுவீயா மாத்திட்டான்.

நறுவீக்கு தான்தான் தமிழோட காதல்னு தெரியவரும்போது அவளுடைய நிலைமைனு எல்லாமே புரிஞ்சுக்க முடிஞ்சது
இளங்கோ அன்ட் அண்ணியோட பிணைப்பு லாம் ரொம்பவே அருமை .இப்ப உள்ள கொழுந்தனுங்கள்ளாம் நீ யாரு நான் யாருன்னு இருக்காங்க.ஆனால் தன்னோட அண்ணிக்காக தன் கூடப்பிறந்த அண்ணண் பொய் சொன்னான் தெரிஞ்சு அண்ணண் கிட்டயே சண்டை போட்டு அண்ணிக்காக நின்னதுலாம் சூப்பர்...
காமாட்சி இவங்க சுயநலமா ஒரு அம்மாவா யோசிச்சாங்களே தவிர தன் மருமகளும் பொண்ணுதான்னு யோசிக்க மறந்துட்டாங்க..ஆனாலும் குற்ற உணர்ச்சில இருந்து கடைசில திருந்திட்டாங்க ..
சுந்தரவல்லி பாட்டி மாதிரி சிலபேர் வாழ்க்கையில் இன்னும் இருக்காங்க.. அவங்களுக்கு நறுவீ கொடுத்த பதிலடியும் சூப்பர்.. அவளுக்கு துணை நின்ற தமிழும் சூப்பர்...
கார்த்திக் சரியான சுயநலவாதி

கல்யாணம் பண்ணிக்குவானாம் ஆனால் அவளை மனுசியாகூட மதிக்க மாட்டானாம் ..ஆனாலும் கார்த்திக் கூட இருக்கும்போது நறுவீ நிலைமைலாம் ரொம்பவே மோசம்..எல்லா தப்பும் இவனே பண்ணிட்டு கடைசில நறுவீக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லி டிவோர்ஸ் வாங்குனதுலாம் ரொம்பவே மோசம் .. இவன்லாம் என்ன மனுசன் அப்படின்னு இருந்துச்சு..கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் ஈஸியாக சொல்லிட்டான் ..எல்லா தப்பும் பண்ணிட்டு கடைசில குற்ற உணர்ச்சில மன்னிப்பு கேட்டா யாரு மன்னிப்பா ?? நறுவீ கடைசிவரை மன்னிக்கவே இல்ல.இதுதான் அவனுக்கு நறுவீ கொடுக்குற தண்டனை
நறுவீ பேரன்ட்ஸ்..எந்த சிச்சுவேசன்லயும் தன் பிள்ளைங்களுக்கு ஆதரவாதான் இருக்கனும்றத மறந்துட்டாங்க போல

..பட் லாஸ்ட் வர இவங்க ரியலைஸ் பண்ணல...


இவங்களுக்கு காமாட்சி எவ்வளவோ பரவாயில்லை
தமிழோட நறுவீ மேலான காதல் கவிதை எல்லாமே சூப்பர்... !! புசிகேட் செல்ல பேருகூட சூப்பர்பா.
அவர்கள் ஆத்மார்த்தமான அன்பின் அடையாளமா , எந்த பழியினால அவளுடைய முதல் திருமணம் தோல்வி அடைஞ்சதோ அதை மாத்தி அவங்க இரண்டு பேருக்கும் கிடைச்ச ரொம்ப பெரிய கிஃப்ட் தான் தமிழ் இயல் அன்ட் தமிழ் இசை ...

நறுவீயின் அகத்தினை ஆளவந்த(ஆண்ட) அகவாளனான தமிழ்
வெற்றிபெற வாழ்த்துக்கள்..
