இராஜி அன்புவின் விதியை மாற்றிடும் திருத்தங்கள்
நாயகன்: சங்கர்
நாயகி: சிவானி
காட்டிலாக்கா அதிகாரியாக இருக்கும் சங்கர்,மன உளைச்சல் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டு தன் தந்ததையிடம் சென்றுவிட, அந்த நேரத்தில் , மழையின் காரணமாக பெரும் மழையின் காரணமாக, பெருநிலசரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
தன் இங்கேயே இருந்திருந்தால்,இவ்வளவு மனித உயிர் சேதத்தை தடுத்திருக்கலாம் என மனம் அல்லாட மனம் தவித்து நிற்கிறான்.
அவ்விடத்திற்கு வருகிறாள் நாயகி, தான் ஒரு யூ- டியுபர் என்றும் தனக்கு இந்த காட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறாள்.
இந்த சூழலில் அது முடியாது என சங்கர் மறுக்க,அவள் அவனது பேச்சை கேட்காது உள்ளே செல்ல முற்படுகிறாள்.
நடந்த கோரத்தின் சாயல் கூட மாறாத நிலையில்,அவளது செயல் அவனை உறுத்த, அவளை கேள்விகளால் துளைக்க, தான் செய்த தவறால் தன் அம்மா பாதிக்கப்பட்டிருப்பதால் தன் அம்மாவை காப்பாற்ற அந்த மலைக்கு ,அங்குள்ள சித்தர்களை சந்திக்க அங்கு செல்ல வேண்டும் என கூறுகிறாள்.
அவள் வார்த்தை மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவனுக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் தோன்ற கடினப்பட்டு அதன் உச்சியை அடைகின்றனர்.
இருவருக்குமான காரணங்கள் வேறாக இருக்கலாம்,ஆனால் இருவரும்,மன உளைச்சளில் உழன்று, மீண்டு வர தவிக்க,உயிரை பணயம் வைத்து, இறந்த காலத்திவ் நடந்த 3
தவறுகளை திருத்தினால் ,இப்பொழுது நடந்த தவறுக்கூ உபாயம் கிடைக்கும் என சில சங்கேத வார்த்தைகளின் மூலம் அறிய,சங்கரை சிவானிக்கு துணை இருக்கும் படி கட்டளை வருகிறது.
அதை ஏற்று கொண்டவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த மனதை இரணமாக்கும் சம்பவங்கள் நடக்காமல் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என நம் மனம் ஏங்குமே,அதுபோன்ற சம்பவங்களை சிலவற்றை நட்க்காமல் தடுக்கதான் இவர்கள் தன் உயிரை பணயம் வைத்து செல்கின்றனர்.
எந்தந்த காலகட்டத்திற்கு செல்கின்றனர்,அங்கே அவர்கள் சந்திக்கும் சவால்கள்,இன்னல்கள்,ஆபத்துகள் ,அதனை எவ்வாறு தன் அறிவு கூர்மை,சமயோஜித புத்தி,சாதுர்யம்,உடல் பலம்,மனபலம் கொண்டு திருத்தங்கள் செய்கின்றனர் என்பதே கதையின் போக்கு,இதனிடையே மெல்லிய தூரலாய் காதல் இழையோட,அழகான நகர்வுகளுடன்,சுவாரஸ்யமான திருப்பங்களுடன்,விதியை மாற்றிடும் திருத்தங்கள்.
மூன்று திருத்தங்களினால் விளைந்த திருப்பங்கள் என்ன??
மழையின் அறிகுறி இருந்தும்,விடுப்பு எடுத்து சென்று மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய காரணம் தான் என்ன?
சிவானியும் சங்கரும்,தங்கள் முயற்சி பயனலித்து அவர்களது மன உலைச்சளிலிருந்து மீண்டனரா…
ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பிய சங்கர்,அவளை விடுத்து,சிவானியை தருமணம் செய்ய, காரணம் தான் என்ன???
சில நாட்களே ஆன சங்கர்,சிவானியின் சந்திப்பு,பல ஜென்ம பந்தமாக மாறியது எப்படி???
இறந்தகாலம் மட்டுமன்றி எதிர்காலத்திலும்,இவர்கள் பயணம் தொடர்விலி இருக்கும் என்றும்,அதற்கான திருத்த வேண்டிய திருத்தங்கள்….அச்சோ. மிரட்டல்…..
விதியை மாற்றிடும் திருத்தங்கள்…சுவாரசிய தொகுப்பு.
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
