zeenath Sabeeha
Member
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP35
ஆதுரியாழ் அவர்களின் எழுத்தில்
"கார்கால தேர்வுகள்.."
கதையின் தலைப்புக்கு ஏற்ப தேர்வுகளாக எழுதிக் கொண்டே இருக்கிறாள் கதையின் நாயகி
இனிமையான இலங்கைத் தமிழில் அழகான காதல் கதை
ஜீவானந்தி... பாவம்... பெண்அவள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதது . தந்தை என்று ஒருவர் இருந்தும் இல்லாதது போன்ற நிலை தான். சித்தி என்பவரிடம் இவள் படும் பாடு
ஆனால் நன்றாகவே திருப்பிக் கொடுக்கிறாள் அவளுக்கு 
நிறைய இடங்களில் சபாஷ் சொல்ல வைத்தது.. ஆனால் இவள் படித்து உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களை பார்ப்பது போலவோ தன்நிலை உயர்ந்ததை அவர்களிடம் காட்டுவது போன்றோ ஒரு காட்சி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அதேபோன்று ஓடிப்போன மகன் என்ன ஆனான் என்பதும் சொல்லாமல் விடுபட்டது போன்று இருந்தது..
படிப்பு மட்டுமே தனக்கு சாஸ்வதம் என சிறு வயதிலேயே புரிந்துகொண்டு அதன்பின் ஓடுபவளுக்கு அந்த படிப்பு வெற்றியை கொடுக்கிறது
நாயகனின் மேல் பெண் அவளுக்கு மனம் முட்டும் அளவுக்கு காதல் இருந்தாலும் அதை அவனிடம் சொல்வதற்கு தயாராக இல்லை அவள். ஏதோ ஒன்று இவளை தடுத்து பிடிக்கிறது அது என்ன ஏன் தன் காதலை மறைக்கிறாள் என்பது கதையில்.
ஜெயமன்... பள்ளி பருவத்திலேயே அவள் மீது காதல் இவனுக்கு
வயசுக்கு வராத பிள்ளையிடம் காதல் சொன்னவன் தானே நீ என நாயகி இவனை வாரி எடுப்பதெல்லாம் படிப்பதற்கு நன்றாக இருந்தது
படிப்பு வரவில்லை என்றாலும் பெண் அவளுக்காக மட்டுமே தன் நிலையை உயர்த்திக் கொள்ள நினைக்கிறான். அதுபோல இவனின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் வெளிநாட்டில் தன்னிலை உயர உழைப்பவன் பல வருடங்களை கழித்து பெற்றோருக்காக ஊருக்கு வருகிறான். அவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்க நினைக்கும் போது தன் காதலனுடன் ஓடி விடுகிறாள் திருமணத்திற்கு பார்த்து இருந்த பெண்.. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ நம் நாயகியே காரணமாக இருக்கிறாள் 
தன் நந்தியின் காதல் ஜெயமனுக்கு புரிந்தே இருக்கிறது. ஆனால் அதை ஒத்துக்கொள்ள பெண் அவளை ஏதோ தடுக்கிறது என அவனுக்கும் புரிகிறது. அது என்ன என்பது மட்டுமே தெரியாமல் தவித்து அவளை விட்டு தள்ளி நிற்கிறான். அனைத்து தடைகளும் நீங்கி காதலில் வெற்றி பெற்று இவர்கள் ஒன்று சேர்கிறார்களா என்பது கதையில்.
சிவக்குமார் ஜோதி டீச்சர்.. அருமையான கதாபாத்திரங்கள்
தங்களிடம் படித்த பிள்ளையின் எதிர்காலத்திற்காக இவர்கள் செய்த அனைத்தும் பாராட்டுக்குரியது 

ராஜு லாவண்யா அழகான ஜோடிகள்
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்