ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 28- என் மரணமும் உனக்காக

என் மரணமும் உனக்காக

குழலி நம் கதையின் நாயகி. அவ ஒரு உடற்கூறு செய்யும் டாக்டர்.அவளோட பிரண்ட்ஸ் வேதா, லேயா.
ஒரு பாடி வருது அவங்க ஹாஸ்பிடல்க்கு ரொம்ப மோசமா சிதைஞ்ச உடலா இருக்கு. அதை போஸ்ட்மார்ட்டம் பண்றா.

மறுநாள் அவளுக்கு அவ வீட்ல மாப்பிள்ளை பார்க்க அப்பா ஏற்பாடு பண்றாரு. அதுல அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனா அங்க போஸ்ட் மார்ட்டம் பண்ண சத்ரியன் அவளுக்கு மாப்பிள்ளையா வரான்.

அவள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான்.

பரிதி நம் நாயகன். மந்திரம் தெரிஞ்சவன். அவளுக்கு இருக்கும் ஆபத்தை அவ அப்பா அம்மா மூலமாக தெரிஞ்சுக்கிட்டு அவளுக்கு ஹெல்ப் பண்றான்.

சத்ரியன் யாரு அவன் எதுக்கு குழலியை சுத்தி வரான். பரிதி அவளை சத்ரியன் கிட்ட இருந்து காப்பாத்துவானு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.

ஸ்டோரி ஃபுல்லா ஒரு மாதிரி பேய் ஆன்மா மந்திரம்னு திகிலோடவே படிச்சேன். வேதா லேயா குழலி கூட்டணி சிரிக்க வைச்சாங்க. அவங்க பாண்டிங் நல்லா இருந்துச்சு.

சத்ரியன் பாவம் அநியாயமா அவனை சாகடிச்சிட்டீங்க. 😒😒😒

அந்த நாசமா போன வில்லனுங்க 5 பேருக்கும் சரியான தண்டனை அதுவும் குழலி மூலமா கிடைச்சது நிறைவாக இருந்துச்சு.

பரிதிக்கு குழலி மேல அவ்வளவு லவ். குழலி கடைசியில் அவன் தனிமையை போக்கி அவனுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுத்து அவனை ஏத்துக்கிட்டது நிறைவாக இருந்துச்சு.

ஸ்டோரி படிக்க திரில்லிங் ஆஹ் நல்லா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
என் மரணமும் உனக்காக
A gripping supernatural thriller romance where a doctor, குழலி, meets the soul of the man she once autopsied now appearing as her would-be groom. Shocking, intriguing, and unexpected.
With mantras, black magic, good and evil souls, and dark secrets, the story keeps the suspense high. Sathriyan’s soul trying to protect his love adds strong emotional depth, while பரிதி's role brings another layer of romance.
Mystery, emotion, and twists blend perfectly, making this an engaging and thrilling read till the end❤️✨
 
என் மரணமும் உனக்காக



நாயகி குழலி.. இவ ஒரு உடற்கூராய்வு மருத்துவர். ரொம்ப சிதிலடைஞ்ச பாடி ஒன்னு வர அதைய போஸ்ட்மார்ட்டமும் பண்றா..

வீட்டுல இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க, இவளுக்காக மாப்பிள்ளையாக போஸ்ட்மார்ட்டம் பண்ணுன சத்ரியன் வர்றான்😱😱😱

மத்தவங்க கண்ணுக்கு மனிதனா தெரியறவன் குழலி கண்ணுக்கு மட்டும் ஆன்மாவா தெரியறான்..

அதோட விடறானா.. அதுவும் இல்ல.. அவளை பயப்படுத்த.. அவளும் பயந்து போக.. கடைசில இவன் கூட தான் நம் வாழ்க்கையானு அவ பதறி நிற்க.. அவளை ஆபத்துல இருந்து காப்பாத்த வர்றான் மந்திரவாதி பரிதி..

சத்ரியன் ஏன் குழலியை தொந்தரவு பண்றான்.?

பரிதி தான் குழலியை காப்பாற்றுனானா.?

ஒரு பயம் பேய்னா..

இன்னொரு பக்கம் மந்திரவாதி..

கடைசில சூனியக்காரன் வேற..

ஒரே கதைல அத்தனையும் வெச்சு செஞ்சாச்சு..

ரைட்டரே உங்களுக்கு ஒரு பிக் சல்யூட்.. அல்டிமேட் போங்க.. கதையை பின்னி எடுத்துட்டீங்க..

போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள் டியர்...
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP28
தீபிகா அவர்களின் எழுத்தில்
"என் மரணமும் உனக்காக"
குழலி.. தான் பிரேத பரிசோதனை செய்த ஒருவன் மறுநாளே தன்னைப் பெண் பார்க்க வந்தால் எப்படி இருக்கும் பயந்தது பெண் அவள் மட்டுமல்ல படிக்கும் நாமும்தான் 😳😳
சத்ரியன்.. ஆன்மாவாக பெண்ணவளை சுற்றி வருகிறான் அவளோடு சேர்ந்து பயந்து நடுங்குகிறார்கள் அவள் நண்பர்கள் லியா மற்றும் வேதா பூஜை அறையில் இவர்களின் சம்பாஷனை அனைத்தும் சிரிப்பு 😀
ஆன்மாவாக மாறியவன் பெண் அவளை ஏன் துரத்தி வருகிறான். இவளால் அவனுக்கு என்ன காரியம் ஆக வேண்டி இருக்கிறது கதையின் தலைப்பை போல் இவனின் மரணம் அவளுக்காகவா இவை அனைத்துக்கும் விடை கதையில்
பரிதி.. மந்திர சக்திகள் கொண்ட நவீன அழகான மந்திரவாதி 😀 ஆன்மாவிடம் இருந்து பெண் அவளை காக்க முற்படுவது எதனால் அவள் மீது காதலாக படியும் இவன் பார்வைக்கு அர்த்தம் என்ன வில்லனுக்கு உயிர் காதலியாக இருப்பவள் யார் இவை அனைத்தும் கதையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top