ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 22- கொஞ்சம் உள்ளம் சிந்திடு

கொஞ்சம் உள்ளம் சிந்திடு

எதார்த்தமான குடும்ப கதை..

பிரனேஷ் நிதர்சனாவின் வாழ்வில் நடக்கும் கதை..

பிரனேஷ் - இவனை திட்டுனா அந்த திட்டுக்கே கேவலம். ஒரு ஆண்மகன் எப்படி இருக்க கூடாதுங்கறதுக்கு இவன் ஒரு உதாரணம்.. பொண்டாட்டியை மதிக்காதவன் எல்லாம் மனுசனா இருப்பானா.?

நிதர்சனா- அவனுக்கு அப்படியே எதிர் துருவம். பொறுமையின் கடல்.. ஒரு கட்டத்துல இவன் கூட தான் வாழணுமானு நமக்கே தோணும்..

அந்த அளவுக்கு படிக்கறவங்கள கடுப்பாக்குவான் அவன்..

விவாகரத்து சாதாரணமானது இல்ல.. அதுக்கு முன்னாடி யோசிக்க வேண்டிய விசயங்கள் நிறையா இருக்கு... அதெல்லாம் யோசிச்சு நிதர்சனா பொறுமையா இருந்தது அருமை.

எந்த ஒரு சூழ்நிலையிலும் இவளை பெத்தவங்க இவளுக்கு உறுதுணையா நிற்கறாங்க.. அதனால தான் என்னவோ அவளால அத்தனையும் தாங்கிக்க முடிஞ்சுதோ.?

ஆனா ஒரு பொண்ணுக்கு வேலையும் மனதைரியமும் தர்ற நம்பிக்கையை வேற யாராலும் தர முடியாது..

கடைசில கணவனுக்கு வாய்ப்பு கொடுத்து அவனை திருத்தி அவனோட வாழ்றது எல்லாம்😍😍😍

உண்மையா கதை ரொம்ப அருமைங்க.. எனக்கு மிகவும் பிடித்தது..

போட்டியில் வெற்றி பெற வா
ழ்த்துக்கள் சிஸ்டர்..
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP22
ருத்ர பிரார்த்தனா அவர்களின் எழுத்தில்
"கொஞ்சம் உள்ளம் சிந்திடு"
நிதர்ஷனா... ஐடி துறையில் ஆறு இலக்க சம்பளத்தில் வேலை பார்ப்பவள்
இவள் குடும்பம் வசதி வாய்ப்பிற்கு குறைவில்லாதது ஒரே பெண் என்ற செல்லமும் அதே நேரம் பண்பாக வளர்க்கப்பட்டவள். பணம் இருந்தாலும் மனிதர்களை மதிக்கவும் அவர்களின் சூழ்நிலைகளை புரிந்து அதன்படி நடக்கவும் தெரிந்திருக்கிறது இவளுக்கு. இப்படி அழகான பூமாலையாக இருப்பவள் குரங்கிடம் மாட்டிக் கொண்டதைப் போல பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக இவள் வாழ்க்கையில் வருகிறான் பிரனேஷ் விதுலன். ஆரம்பத்தில் நல்லவனாக தான் தெரிகிறான் ஆனால் பெண் வீட்டின் வசதி வாய்ப்பை பார்த்து எங்கேயோ மச்சம் இருக்கு டா உனக்கு என நண்பர்களும் உறவினர்களும் ஏற்றி விட அதுவே அவன் மண்டையில் போய் அமர்ந்து விடுகிறது மனைவி தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொள்கிறான். அதற்கு பிறகு இவன் செய்யும் அனைத்து விஷயங்களையும் நம்மை கோபத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்கிறது 😡😡 இவன் மண்டையை உடைக்க வெறி வருகிறது ஆனாலும் பெண் அவள் அனைத்தையும் பொறுத்து போகிறாள் கணவனை ஏதோ ஒன்று தின்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து தன்னை புரிய வைத்து அவனையும் புரிந்து கொள்ள முயல்கிறாள் அதில் வெற்றி பெற்றாளா என்பது கதையில்.
பிரனேஷயின் அன்னை அபிராமி இரண்டு தமக்கைகள் தீபா, அஸ்வினி. பணக்காரியான தம்பி மனைவி தங்களை மதிக்க மாட்டாள் என நினைத்துக் கொண்டு ஆரம்பத்தில் இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியில்லை என்றாலும் அவள் இவர்களோடு கொண்டுள்ள பாசத்தை போகப்போக புரிந்து கொண்டு இவர்களும் அதே பாசத்தை அவளுக்கு திருப்பி கொடுக்கிறார்கள். இப்படி அனைவரும் அவளை புரிந்து கொள்ள புரிந்து கொள்ள வேண்டிய கணவனோ எதிர்மறையாக நிற்கிறான். பணக்காரியாக இருக்கும் மனைவி தன்னை அவளின் கை பாவையாக மாற்றி விடுவாளோ என்ற பயம் இவனுக்கு. ஒரு கட்டத்தில் பிரிந்து விடலாம் என நினைக்கும் நிதர்சஷனாவின் நிலை அதன் பின் என்ன என்பது கதையில்.
காதலும் புரிதலும் இல்லாத திருமணம் என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் கூறியிருக்கிறார் எழுத்தாளர் 🥰👏
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹❤️
 
Top