ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 1- வாக்கப்பட்டு வந்த வாசமலரே

ஹாய் நண்பர்களே


Pommu Novels அவர்களின் AP Verses contest AVP Writing excellence award போட்டிக் கதைகள்.
அம்மு இளையாள் அவர்கள் எழுதிய "வாக்கப்பட்டு வந்த வாசமலரே"
கந்தன்.. தெய்வானை.. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதலும்,திருமணமுமே கதை.


வீட்டினர் பெண் பார்த்து முடிவாகும் திருமணம். ஆனால் பெண் பார்க்க வந்த அன்றே இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் வீட்டில் பார்த்த அரேஞ்ச்டு மேரேஜ் ஆக இல்லாமல் அவர்களுக்கிடையில் காலம் காலமாக இருந்த காதலால் காதலித்து மணமுடித்தவர்கள் போன்று நிலை. பார்த்ததும் பிடித்து விட்டது இருவருக்கும். அதுவே மாப்பிள்ளையின் அன்னையான நளினிக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் கந்தனின் அக்காக்கள் இருவருக்கும் ஏனோ பெண்ணவளை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என நினைத்து தாயை மூளை சலவை செய்கிறார்கள். அவர்களின் பேச்சுக்கு சில நேரம் கட்டுப்பட்டாலும் தன் சுய அறிவையும் அவரின் நல்மனதாலும் சுதாரித்து மகனின் கோபத்திற்கும் அஞ்சி தன்னை சரி செய்து கொள்கிறார் நளினி.
கந்தனின் தந்தை எப்போதும் நியாயவாதியாக இருக்கிறார். அவரைப் போலவே அவரின் மாப்பிள்ளைகள் இருவரும் அதே நல்ல குணநலனுடன்.
திருமணம் கோலாகலமாக நடக்கிறது.
அதீதக் காதலுடன் பயணிக்கிறது இவர்களின் வாழ்வும். திடீரென சுனாமியாக இவர்கள் வாழ்வில் இரு பிரிவுகள் வருகிறது. ஒன்று கந்தனின் அன்னை நளினியால் மற்றொன்று அவனின் சகோதரிகளால்.
இதில் பெண் அவள் கணவனையும் சந்தேகிக்கிறாள். அவன் வேண்டாம் என முடிவெடுக்க. அவள் முடிவுக்கு கட்டுப்பட்டானா அல்லது வெகுண்டு எழுந்தானா என்பது கதையில்.


மனைவியை தேடி மாமனார் வீட்டிற்கு வரும் கந்தனுக்கும் தெய்வானையின் தந்தைக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் அருமை.. சீரியஸாக போய்க் கொண்டிருந்த கதைக்கு இடையில் நகைச்சுவையான காட்சி 😀🥰
சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
# வாக்கப்பட்டு வப்த வாசமலரே !

# அம்மு இளையாள்


திருமணம் வேண்டாம் என்றவனை கட்டாயப்டுத்தி பெண் பார்க்க அழைத்துசெல்ல …


பெண்ணை பார்த்துவிட்டு அவன் செய்யும் அலப்பறையில் இவனா திருமணத்தை தள்ளி போட்டவன் என நினைக்க வைததுவிடுகின்றான்.



மாப்பிள்ளை கந்தனின் அலப்பறையில் பெண்ணை பெற்றவர்கள் மகிழ, வழக்கம் போல தான், மாப்பிள்ளை பக்கம் கொஞ்சம் சைடாக சைட் வாங்க ஆரம்பித்துவிடுகிறது.



மகனின் அலப்பறையில் தாய் மனம் சுணங்கினாலும், மருமகள் தன் இயல்பான நல்குணங்களால் அவளை அறியாமலேயே மாமியாரின் சுணக்கங்களை தீர்த்துவிடுகிறாள்.




நாத்தனார்கள் வேலை இல்லாமாலா,அதுவும் கல்யாண கனவு காணும் தன் தம்பியை கண்ட பின்னால்…



இயல்பாய் தோன்றும்…பய உணர்வு…தெளிந்த ஓடையில் கசடை சேர்க்கிறது …ஆனாலும் இத்தனையும் தாண்டி திருமண வைபவத்தில் இருவரும் இணைகின்றனர்.


மாமியருடன் சின்ன சினன் பூசல்கள் ஏற்பட தான் செய்கிறது..


அதை ஒருவருக்கு துணையாய் நின்று கடக்கின்றனர்.



மாப்பிள்ளை மாமானார் உறவு வார்த்தையாடல்…நேர்த்தி

அவர்களின் புரிநதணர்வு நம் மனதில் இதமான உணர்வு


ஒருவரின் மேல் ஒருவருக்கு அபரிதமான பிணைப்பும்,நம்பிக்கையும் இருந்தும்‌,ஏனோ தன் மன்னவனை பிரிகிறாள் இந்த கந்தனின் காதல் கண்ணாட்டி. தெய்வயானை.


பிரிவுக்கான காரணம் என்ன…


பிடித்தமிருந்தும், பிடிப்பிருந்தும் விலகி செல்ல தூண்டியதன் பின்னனி தான் என்ன…




அவதூறுகள் எப்பொழுதும் அருவாள்களை விட கூர்மைமானது…வீசுவதற்கு முன் யோசிங்கள்…பூமாராங்காய் நம்மை பதம் பார்ததால் நாம் தாங்கவோமா என்று…!!


இதில் தாய் மகனுக்கிடையே சிறு சிறு உறசல்கள் இருந்தாலும் அவர்களிடைய இருக்கும் அந்த பாசத்தினை, அதனை தாண்டிய அவர்களின் அழகான பந்தம்…நிச்சயம் நகைச்சுவை கவிதையின் அழகுதான்.


கந்தனும் அவன் காதலியும் கைகோர்த்தபின், அவர்கள் காதல் தென்றலாய் எல்லோரையும் வருடி தான் செல்கிறது.



மொத்தத்தில் “வாக்கப்பட்டு வந்த வாசமலரில் ” , வீசும் வாசம்,உங்களையும் வசம் கொள்ள .. வாசித்து மகிழுங்கள்.
 
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
From midnight texts to mother-in-law troubles! This story of கந்தன் and தெய்வானை is a rollercoaster of emotions. It captures the soul of Indian marriages where love is great, but the family politics is even greater! A must-read for anyone who loves a realistic family drama❤️✨
 
வாக்கப்பட்டு வந்த வாசமலர்



பெண் பார்த்து திருமணம் செய்து.. அதன் பிறகு நிகழ்வும் இன்பம் துன்பங்கள் தான் இக்கதை.

கந்தன் கலகலப்பான நாயகன்.. தெய்வானையை பார்த்ததும் அவளிடம் விழுந்தும் விடுகிறான்.. அவளிடம் பேசி பேசியே அவளையும் கவுத்து விடுகிறான்..

இடையில் அவனின் அக்காக்கள் நுழைந்து அவனின் அன்னையை குழப்பி விட.. நம் நாயகனும் கட்டுனா அவளை தான் கட்டுவேனு நின்னு தெய்வானையை கல்யாணமும் செஞ்சுகிறான்.. அடேய் யப்பா உன் கல்யாணம் நடக்கறதுக்குள்ள...

என்ன இருந்தாலும் நீயும் பாவம்தான்டா.. வீட்டுக்கு இப்படி ஒருத்தர் இருந்தா எப்படிடா உங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்.?

சரி கல்யாணம் தான் ஆச்சு அப்பறமாவது விட்டு தொலைஞ்சுக்கணும்ல.? ஆனா அவன் அக்காளுக மறுபடியும் அவங்க அம்மாவை ஏத்தி விட்டு கடைசில நம்ம தெய்வானையையே கோவிச்சுட்டு போக வெச்சுட்டாங்க.. ஆனா அவ மேல பாவம் வரலங்க கோவம் தான் வந்துச்சுங்க..

பின்ன என்ன உப்புசப்பில்லாத காரணத்துக்காகவா கந்தனை விட்டுட்டு போறது.?

ஆக மொத்தம் கலாட்டாவான குடும்ப கதை..

படிக்கறவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
வாக்கப்பட்டு வந்த வாசமலரே விமர்சனம்


இது ஒரு அழகான பீல் குட் ஸ்டோரி .


வீட்டில் பெண்பார்த்து திருமணம் செய்கிறாங்க .. புதிதாக திருமணம் ஆனவர்களுக்கிடையே ஏற்படும் ஊடலையும் இருவரின் புரிதலையும் சொல்லும் கதை..


கந்தன் தெய்வானை பெயர் பொருத்தம்போல இவங்க காதலும் அழகா இருந்தது..


திருமணம் பேசிய பிறகு இவங்க ரெண்டு பேரும் மெசேஜில் பேசிக்கொள்ளும் விதம் அழகா இருந்தது.. நம்மளும் இதையெல்லாம் கடந்து வந்தவங்க தான்..மலரும் நினைவுகள் போல இருந்தது 🙈😍😍😍😍


இவர்கள் திருமணம் நடந்த விதம் பார்க்கும்போது நமது திருமண நினைவுகளை நினைக்க வைத்தது..


கந்தன் கலகலப்புக்கு பஞ்சமே இல்லாத ஆளு..இவன் பேச்செல்லாம் நல்லா இருந்தது 😍 😍 தெய்வானைகிட்ட அவளுக்கு நம்பிக்கை கொடுக்கிற பேச்சு, அதை அவளுக்கு தெளிவுபடுத்துற விதம் , மாமனார் மாமியார்க்கு நம்பிக்கை கொடுக்கிற விதம்னு கந்தன் கலக்கிட்டாரு..


கலகலப்பான நம்ம கந்தனையே மாமியாரும் மருமகளும் சேர்ந்து அலற விடுறது பார்க்க பாவமா இருந்தது ...தெய்வானைக்கு சப்போர்ட்டா இருந்தது , அவள்மேல் நம்பிக்கை வைச்சி தன் அம்மாகிட்ட அவளை புரியவச்சது , அவளுக்கான ஸ்பேஸ் கொடுத்து சின்ன சின்ன செல்ல சீண்டல்கள் பண்ணது எல்லாமே பிடித்தது ❣️

இடையிடையே இரண்டுபேரும் பண்ணுற ரொமான்ஸ் 🙈 🙈 🤭

தெய்வானையை பிரிஞ்சு கந்தன் பட்ட பாடு புரிஞ்சிக்க முடிஞ்சது ...

ஆனா கல்யாணம் பண்ணி ஆவலோட இருந்த கந்தனை வெயிட்டிங்ல வச்சு பிரியாணி சட்டியை கண்ணுல காட்டாம விட்டதுலாம் பாவம்ப்பா ஆனா ஒரே சிரிப்பு 🤭 🤭 🤭


தெய்வானை கல்யாணமான புதுப்பொண்ணுங்க சந்திக்கிற பிரச்சினைகள்தான் இவளும் சந்திக்கிறா.. புது இடத்தில் ஏற்படும் பயம் , கணவனுடன் அணுசரனையான காதலான உறவுனு நல்லா இருந்தது படிக்க.,சின்ன சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங்னால கோவம் வருது தெய்வானைக்கு , அதற்காக டக்கு டக்குனு ஊருக்கு போறது பார்க்க கோவம் வந்தது ‌‌..நாத்தனார் பேசுற பேச்சுக்கு கந்தனுடைய பாசத்தை சந்தேகப்பட்டு பேசுனது பிடிக்கல ப்பா😏😏😒


ஊடல் கொண்டவளே தாயுமானவனை எதிர்பார்த்து காத்திருந்தது அவனை சமாதானப்படுத்த அவள் பண்ண யுக்திகள் 🙈🙈🤭🤭🤭


எப்படிதான் இருந்தாலும் மாமியார் அம்மாவாக முடியாது..நளினி மட்டும் விதிவிலக்கா என்ன .. ஆரம்பத்தில் தெய்வானையை புரிந்து கொள்ளாமல் மகள்கள் வேறு குழப்பி விட , பிறகு அவளை புரிந்து கொள்ளும் விதம் பிடித்தது 👍 மகனுக்கும் அன்னைக்கும் இடையே சின்ன சின்ன கோபங்கள் வந்தாலும் இவர்கள் பாசப்போராட்டம் நல்லா இருந்தது.முதல்ல தெய்வானையை புரிஞ்சிக்காமல் திட்டுவது, அதே நளினி தான் தெய்வானைக்காக தன் மகள்களையே அடிச்சாங்க ..


கந்தனும் அம்மா மேல் உள்ள தவறையும் மனைவி மேல் உள்ள தவறையும் சரியாக இரண்டுபேருக்கும் புரிய வச்சது நல்லா இருந்தது..👍👍


சண்டையே இல்லாமல் ஸ்மூத்தாவா போகுது லைஃப் இந்தா வர்றோம் பிரச்சனையை உண்டாக்கன்னு நாத்தனார் வேலையை கரெக்டா செய்ய வர்ராங்க சந்தியாவும் மீனாவும்..ஆரம்பத்துல இருந்தே தெய்வானையை பற்றி நளினிகிட்ட தப்புதப்பா சொல்லி கொடுக்கிறது , தெய்வானை கிட்ட வார்த்தை விடுறது பார்த்து மூஞ்சிலேயே குத்தலானு தோணுச்சு 😬😬😬


அப்பா ராகவன் கேரக்டர் நல்லா இருந்தது..மனைவியா நளினிய கண்டிச்சது மாமனாரா தெய்வானை பண்ண தவறை சொன்னது எல்லாமே சூப்பர் ..



"கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிக் கோழி பிடிக்கலாம் "இது தெய்வானை விசயத்தில உண்மையா இருந்தது..


கந்தனும் தெய்வானையும் ஒருத்தருக்கொருத்தர் எப்படி புரிஞ்சிகிறாங்கன்றத ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க...


கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர்..சிம்பிள் ஸ்டோரி படிக்க மனதை வருடுவது போல இருந்து ..


கந்தனும் தெய்வானையும் நமது நெஞ்சங்களில் நிறைந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
Last edited:
Top