ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

16. உயிரிலே சடுகுடு ஆடினாய்- நாவலுக்கான விமர்சனங்கள்

வணக்கம் சகோதரிகளே ..

#பவாவிமர்சனம்

#உயிரிலேசடுகுடுஆடினாய்

#விருட்சம்16

பருவயதின் காதல் நிலை பசுமரத்தாணி நினைவாக
பக்கம் வந்த போது சொல்லாது செல்லாது என நினைக்க..

பூவுக்குள் பூகம்ப தரிசனமாய் நேசன்
பூமகளை பூமிக்குள் புதைக்க..

காதலும் தூரம் நேசமும் தூரம்
மீண்டும் மீண்ட நிலை விதிகையில் பெண்ணவள்..

உயிரிலே சடுகுடு ஆடி என் உயிரோவியம் நீயென நினைக்க
ஊஞ்சலானதோ மனதோ தென்றலாய் ஆடி மகிழ..

சசிதரன்.: வந்தவுடன் பிடித்த நிலை.. இவனின் ஒரு செயலால் பிடிக்கவில்லை ...போக போக பிடிக்காத நாயகன்
முடிவில் ஏனோ பரவாயில்லை ரகமாய் எனக்கு.
ஆனாலும் ஹீரோவாச்சே சரி ஓகே ரகமாய் போச்சு.❤❤

அருந்ததி: காதலின் அழகு பாவை. கடைசிவரை இவளின் காதல் அசத்தலாவே இருந்தது. அருமையாகவும் இருந்தது❤❤❤

தூக்கி எறிந்த காதலுக்காக பெற்றோரை விட்டகல்வது பிடிக்கவில்லை எனக்கு இவளிடம்.😐

தேவ்: அருமையான நண்பன். நேர்மையான தம்பி. இவனின் இருப்பக்க சார்பு நட்பின் உன்னதம் அருமையே.💓💓

ஹாசினி: வந்தாள் சென்றாள் என்ற கேள்விகுறி பெண்.🤔

ஆசிரிய தோழியே. கதைக்கரு அருமையக இருந்தது. அதி பாத்திரம் மிகவும் அருமை. பட்டு பட்டென கேட்கும் இடமெல்லாம் மிகவும் அருமை. 👏👏👌

தேவின் பாத்திரம் சபாஷ் அழகாக கொண்டு சென்றீர்கள் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கணக்காக👌👌👌👌👌

இன்னும் சசிதரன் பாத்திரத்தை வலுவேற்றி இருக்கலாம் மா😊

ஆனாலும் கதையில் ஏதோ ஒரு தோய்வு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் எடுத்து இருக்கலாமோ என நினைக்கத் தோன்றியது😊.

நிறைய இடங்களில் சிலவார்த்தைகளை முடிக்கவே இல்லை தொக்கி நிற்கிறது. கவணித்து கொள்ளுங்கள் மா.
எழுத்து பிழைகளை சரி பாருங்கள் நிறையமா.😍

ஆனாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியங்கள் குறையவில்லை அழகாக கொண்டு சென்றீர்கள் .வாழ்த்துக்கள் மா.👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐
உங்கள் கருத்துக்கும்‌ ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி 😍
 
#கௌரிவிமர்சனம்

#videoediting

#உயிரிலேசடுகுடுஆடினாய்

இது மைல்டு ஆன்டி ஹீரோ கதை 🤩🤩🤩

அருந்ததி - அவளோட தருக்கு மட்டும் அதி🤩🤩🤩🤩, இவளோட காதல் ரொம்ப பிடிச்சி இருந்தது🥰🥰🥰🥰

கடைசி வரை இவ காதல் மாறவே இல்ல💖💖💖💖

ஒண்ணே ஒன்னு தான் பிடிக்கல, இவ காதல் ஆழமானது தான், அது தனக்கு இல்லனு ஆனதும், அதுக்குக்காக அவ அம்மா அப்பா ப்ரெண்ட் இப்படி எல்லாரையும் பிரிஞ்சி அவங்களுக்கு கஷ்டம் கொடுத்து இருக்க வேணாம்…..இதில் இவ தன் காதல்னு சுயநலமா இருந்துட்டானு தோணுது….

சசி - இவனை ஆரம்பத்தில் பிடிக்கல, பயபுள்ள பண்ணினா காரியம் அப்படி🙄🙄🙄🙄

அப்பறம் திருந்தி, காலில் விழுந்தது எல்லாம் தனி கதை 😜😜😜

தேவ் - இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க அரு ரொம்பவே லக்கி, இவளுக்காக இவ சந்தோஷத்துக்குனு இவன் பண்ணினது எல்லாம்🥰🥰🥰🥰, ரொம்ப பிடிச்சது இவன் கேரக்டர்….

காசினி - வில்லிங்கர பெயரில் சுத்தும் காமெடி பீஸ்🤣🤣🤣🤣

ஆதி - இவனும் அதே போல தான் 😅😅😅

சுபா & விஷால் - அருக்கு நல்ல ப்ரெண்ட்ஸ்😍😍😍

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதை நல்லாவே போச்சி, அந்த ஆதி பார்ட் மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணி இருக்கலாம் ரைட்டர் ஜீ…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐💐
உங்கள் கருத்துக்கும்‌ ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி 😍😍🥰
 
#உயிரிலே_சடுகுடு_ஆடினாய்

தன் காதலை ஒருத்தன் கருவியாய் பயன்படுத்தி ஏமாற்றிய பின்னும், அவனின் துன்பங்களை கண்டு வேதனை படும் தியாக(!?) உள்ளம் அருந்ததியின் காதல் கதை❤️

சசி(தி)தரன் இவனை எல்லாம் என்ன செய்ய தெரியலை... அருவை அதி அதினு கொஞ்சியே ஏமாத்திட்டான் லூசு பய.. ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரளை😡😡 இவன் எல்லாம் பண்ணியும் இவன் காதலை உணர்ந்ததும் எல்லாம் இவனுக்கு favour ஆஹ தான் நடக்குது... சிரிச்சு பேசும் போது அப்படியே மண்டையில் கொட்ட தோணுச்சு.. இதில் இவன் காதலியை கூப்பிட்டு வச்சுட்டு இவன் பண்ணுற எல்லாம் சத்தியமா மண்டையில் கல்லை போட தோணுச்சு😡😡😡

தேவ்😍 நல்ல நண்பன்... தோழியின் வேதனை புரிந்து அவளை மீட்க அவனின் செயல்கள் சூப்பர்😍😍 தோழிக்காக என்று அண்ணனுக்கும் சேர்த்து நல்லது பண்ணும் நல்லவன்...

Mr&Mrs. சுபா அருமையான நண்பி😍😍 தோழியை அப்படி தாங்குறா... அவள் கணவனும் சரி அவள் மீது அத்துணை அன்பு வச்சு அவளை மீட்க விளைகிறான்... ஆனால் இவளின் தயக்கம், என்ன தான் இவ வேற யோசனையில் இருந்தா என்றாலும் எனக்கு கொஞ்சம் அது எப்படி அப்படி இருக்கா முடியும் அப்படினு தோணுச்சு...

அருந்ததி❤️ இவ மேல கோபம் வந்தாலும் இவளின் அந்த துரோகமே செய்த போதும் நல்லா இருக்கணும் நினைப்பது, அவனின் வேதனையில் தானும் வருந்துவது😍😍😍 என்ன அவனுக்காக பெற்றோரை வருத்தியது கொஞ்சம் வருத்தம்... தந்தையை கிட்ட பேச துணியாது இருப்பது அதுவும் கொஞ்சம் என்ன டா இவ என்ன சொன்னாலும் சரி அப்படினு தலையாட்டும் தந்தைகிட்ட போய் தயக்கம் அப்படினு தோணுச்சு....

நாசினி கிட்ட இவ பேசுறது, ரெண்டு பேரையும் அலட்சியமா நடத்துவது சூப்பர்....

தேவ் parents அண்ட் அதி parents nice😍😍😍

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐😍
உங்கள் கருத்துக்கும்‌ ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி 😍😍🥰
 
#priyareviews

கதை எண் 16

உயிரிலே சடுகுடு ஆடினாய்

அருந்ததி தனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே சசிதரனை விரும்ப அவன் மனதிலோ வேறு ஒருத்தி இருக்க அருந்ததி நிலை?

அருந்ததி நல்ல கலகலப்பான அறுந்த வாலு, தன் வீடு, தன் காதல், தன் நட்பு என்று சந்தோசமாக செல்லும் வாழ்வில் அவளே எதிர் பாராமல் சில விஷயங்கள் நடக்க அதை எல்லாம் முறியடித்து சரி செய்து வருவாளா?

தேவ் செம கேரக்டர் அருமையான நண்பன் ஒவ்வொரு இடத்திலும் உறுதுணையாக இருப்பதில் இருந்து அவளுக்கு சிறந்த வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பது வரை 👌👌👌

சுபா அருந்ததியின் உற்ற தோழி அவள் துவளும் இடங்களில் எல்லாம் எதுவுமே கேட்காமல் அழகாக தாங்கி நிற்கிறாள் 🤩🤩🤩

சசிதரன் இவனை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பிடிக்கவே இல்ல அதுவும் இவன் செய்யும் சில விஷயங்கள் செம கடுப்பு 🤧🤧🤧 போனால் போகுது மன்னிச்சி விட்ரலாம் என்று பார்த்தால் திரும்பவும் 😤😤😤 டேய் நீ லூசா லூசு மாதிரி நடிக்கிறியா டா 😒😒😒 ஒரு விஷயத்தில் ஸ்கோர் பண்ணிட்டான் போய் தொலையட்டும் 🤭🤭🤭

ஹாசினி 🤮🤮🤮🤮

அழகான காதலை அழகா சொல்லி இருக்கீங்க எந்த வித ட்விஸ்ட் & டர்ன் இல்லாமல் இயல்பாக இருந்தது 🥰🥰

ரைட்டர் க்கு ஒரு விஷயம் ஏகப்பட்ட எழுத்து பிழை அதுவும் பெயர்களில் ஏகப்பட்ட குழப்பம் மாத்தி மாத்தி போட்டு வைச்சு இருக்கீங்க தயவு செய்து சரி செய்து விடுங்க 🙏🙏🙏🙏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
#yagnithaareview

#yagnithaavideoediting

#உயிரிலே_சடுகுடு_ஆடினாய்

😍ஒரு அழகான காதல் கதை😍

அருந்ததி

வீட்டில் அனைவருக்கும் செல்லப்பிள்ளை, கலகல என்று துள்ளிக்குதிக்கும் கவரிமான் இவள்... ஒருதலை காதலினால், இவளின் சிரிப்பு கலகலப்பை இழந்து, தன் உயிர் நண்பன் இடம் கூட சொல்லாமல் காஞ்சிபுரத்திற்கு செல்கிறாள்.... அங்கு சில பல திருப்பத்தினால், தன் பெற்றோர் கை நீட்டிய மாப்பிள்ளையை தவிர்க்கும் நிலை ஏனோ..... அவள் ஒருதலை காதல் நிறைவேறியதா, இல்லை தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 😜😜
சசிதரன்
யார் நல்லவங்க யார் கெட்டவங்க என்று தெரியுமா, இவன் படும் பாடு 😔😤 ஆனா கடைசியா இவன் செஞ்ச விஷயங்கள் 😘😘 இவன் காட்டிய லவ் செம 😍😍
ஆனால் உன் மேல செம காண்டுல இருக்கேன் 😤 ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா, நீயா போயி அவ கிட்ட பேசுவ, முத்தம் கொடுப்ப
ஆனா இதெல்லாம் நடிப்பேன்னு அவளுக்கு தெரிஞ்சு இருக்கணுமா 😤😤😤😤😤😤 என்னடா நியாயம்🤬 கடைசியா கால்ல விழுந்தநாள உன்ன விற்றேன்....
தேவ்
இவனின் நட்பு அருமை 😍😍 தன் உடன்பிறப்பு என்றிடாமல்
அவன் நட்புக்கு துணை நின்றது அழகு 😍😍😍

ஹாசினி 🤬
இவள எல்லாம் என்ன பீஸ்னு தெரியல 😤 இவளுக்கு கொடுத்த தண்டனை சரியே, இனியாவது வாழ்க்கையை புரிஞ்சிகிட்டும்.....

விஷால் சுபா உங்கள மாதிரி ஒரு நட்பு வட்டாரம் கிடைக்கிறது எல்லாம் அபூர்வம்😍😍 அதுவும் விஷால் செம்ம, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😍😍🙈.....

ஆதி இவன் ஒரு வீணா போன ஆளு 🤬🤬 இவனுக்கெல்லாம் ஹெவியா தண்டனை கொடுத்து இருக்கணும்....

அருமையான விறுவிறுப்பான கதை...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி😍😍😍👏👏👏👏

𝐓𝟐𝟐_ 𝐍𝐨 𝟏𝟔_ #உயிரிலேசடுகுடுஆடினாய் கதை திரி

 
Top