ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

௨ன் விழிகளில் விழுந்த நாள் - கதை திரி

Status
Not open for further replies.
?நாள் 04.........

பெங்களுர் புகையிரத நிலையம்.....

புகையிரதில் இருந்து இறங்கிய நால்வரும் தம் பைகளை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வர......

" சிவா நீ சொன்னதும் வந்தாச்சி இப்போ எங்க stay பண்ணுரது..... எங்க இடம் பார்த்து வெச்சி இருக்க..... நல்ல இடமா..... நாம நாலுப் பேரும் தங்களாம் தானே...... officeக்கு போக வசதியா இருக்கும் தானே......" என்று மகி விசாரித்துக் கொண்டே போக.....

ஆகாஷ்சும் மதுவும் காதை மூடிக் கொண்டு நிற்க...... சிவா தலையில் கைவைத்து நின்றான்.......

மகி மீண்டும் ஏதோ சொல்ல வர அதை உணர்ந்த ஆகாஷ் மகியின் வாயை மூடி.....

" டேய் இவள விட்டு நடு ரோட்டுலயே வச்சி நீதி மன்றம் நடத்துவ வா நாம வீட்டுக்கு போய்டலாம்......." என சொன்னவன்..... மகி திமிற திமிற அவளை இழுத்துக் கொண்டு ரோட்டைக் கடக்க.......

சிவாவும் அவன் சொல்வதை கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடன் கடந்தான்...... மது இவர்கள் செயலைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு ரோட்டு கடக்க முயல......

திடிர் என்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது..... அந்த சத்ததைக் கேட்டு திடுக்கிட்டு ஆகாஷ்,மகி,சிவா மூவரும் திருப்ப அங்கு இரு சக்கர வாகனம் ஒன்று கீழே விழுந்துக் கிடக்க அதற்குப் பக்கத்தில் தலைகவசம் அணிந்த ஒருத்தன் சரிந்துக் கிடக்க அவனுக்குப் பக்கத்தில் மது விழுந்து கிடந்தாள்..... அதற்கு சற்று தள்ளி கையில் சிறாய்புகளுடன் ஒருத்தன் விழுந்துக் கிடப்பவர்களைப் பார்த்து வந்து கொண்டிருந்தான்......

இதைப் பார்த்த மூவரும் ஸ்தப்பித்து சிலையாக நின்று விட்டனர்........ இதில் இருந்து வெளிவந்த ஆகாஷ் "சிவா" என்று கத்தி அவனை உலுக்க...... அதில் சுய நினைவு வந்த சிவா
"மது மா" என்று கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான்........

" மகி " என ஆகாஷ் அவளை உலுக்க..... அதில் அவனின் மேல் மயங்கி சரிந்தாள் மகிழினி.......

"மகி மகி" என்று அவளின் கன்னத்தைத் தட்ட அவள் எழுந்த பாடு தான் இல்லை.......

இதில் இந்த விபத்து நடந்தது பிரதாதன வீதி என்பதால் அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் அங்கு இருந்த சிலர் இவர்களுக்கு உதவ முன் வர.....

அதற்க்கிடையில் அங்கு வந்து சேர்ந்தது இரு அவசர ஊந்திகள்........

சிவா ஓடிப் போய் மதுவை தன் மடியில் கிடத்திக் கொண்டு "மது மது மதுமா"
என அவளை எழுப்ப அவளிடம் எந்த அசைவும் இல்லை.......

அடிப்பட்டவர்களின் ஒருவன் மதுக்கு பக்கத்தில் மயக்கத்தில் கிடந்தவனை
" டேய் அகி எந்திரிடா டேய் அகிலான் எந்திரி" என்க அவனிடமும் எந்த அசைவும் இல்லை..... ஆம் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தது அகிலன் மற்றும் சத்யா தான்.......

அவர்களின் சத்தம் கேட்டதும் சிவா ஒரு நிமிடம் அவர்களைப் பார்த்தவன்...... மதுவைத் தூக்கிக் கொண்டு ambulance நோக்கி ஓடினான்...... மதுவை அதில் ஏத்தி அவனும் ஏறிக்கொண்டான்......

இதற்க்கிடையில் ஆகாஷ் பக்கத்தில் இருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி மகிக்கு தெளித்து அவளை நினைவுக்கு கொண்டு வந்தவன்...... அவளை கைதாங்கலாக அழைத்து வந்து சிவா ஏறிய ambulance அவனும் ஏறினான்........

" என்ன ஆச்சிடா அவளுக்கு" என்று மகியைப் பார்த்து சிவா கேட்டக........

" ஒன்னும் இல்லடா அதிர்ச்சில மயங்கிட்டா ட்ரிப்ஸ் ஏத்துனா சரி ஆகிடும்......" என்றான்.

தலையை ஆட்டி சரி என்றவன்..... மதுவை கன்னத்தில் தட்டிக் கொண்டே வந்தான்......

இவர்கள் இருந்த வண்டி கிளம்ப...... பக்கத்தில் இருந்தவர்களின் தூணையுடன் அகிலனை தூக்கி மற்றொறு ambulance ஏற்றிய சத்யா...... தங்களது இரு சக்கர வண்டியை ஒரமாக நிருத்தி விட்டு ambulance நோக்கி வேகமாக ஓடும் போது தடுக்க விழப் பார்த்தவனை பிடித்தது ஒரு மெல்லிய கரம்......

பிடித்தவர்களைப் பார்க்காமல்
" Thanks" என்றவன் வண்டியில் எற...... சிவா சென்ற ambuleance பின்தொடர்ந்து இவர்களின் ambuleance.......

அவனைப் பிடித்த அந்த கரங்களின் சொந்தக்காரி சத்யாவைப் பிடிக்குப் போது அவனின் கழுத்தில் இருந்து விழுந்த "SRS" என்ற எழுத்து பொறிக்கப் பட்ட சைனை எடுத்து தனது பையில் போட்டவள் அவள்கள் சென்றதற்கு எதிர் திசையில் தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பானாள்........

Ambulence இரண்டும் வேகமாக மருத்துவ மனையை நோக்கிப் பயணித்தது??.........

( என்ன நடக்குது இங்க எல்ல கதையிலயும் மோதல் அல்லது காதல்ல hero heroin சந்திபாங்கன்டு கேள்விப் பட்டு இருக்க ஆனா இங்க இப்படிப் பட்ட ஒரு மோதல்ல
( excedent ) சந்திச்சி இருக்கங்க...... இது விதியா அல்லது சதியா யார் செய்ததாக இருக்கும்...... ஐயோ எனக்கு தெரியாது இதுக்கும் எனக்கு சம்மதம் இல்ல??? )

மருத்துவமனை......

உள்ளே icuக்கு முன்னால் உள்ள இருக்கையி அமர்ந்து சுவரில் தலை சாய்த்துக் கண்னை மூடி அமர்ந்து இருந்தான் சிவா...... அவனக்கு பக்கத்தில் அவனின் தோளில் சாய்ந்து icuவையே வெறித்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்......

ஆஷ்சின் மடியில் தூயில் கொண்டிருந்தாள் மகி........

அவர்கள் இருக்கும் இருக்கையின் பக்கத்தில் கையில் சிறு கட்டுடன் நின்று கொண்டு அந்த அறை 'திருக்குமா' என்று ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.......

அவனின் ஏக்கம் புரிந்ததோ என்னவோ அந்த அறைக் கதவு திறக்கப் பட்டது......

அங்கு இருந்து வெளிய வந்த மருத்துவரைப் பார்த்த சத்யா
" docter" என்று சொல்லிக் கொண்டு அவரை நெருங்க.......

அவனின் சத்ததில் சிவா,ஆகாஷ் நினைவு வந்தனர்......சிவாவும் மருத்துவரிடம் செல்ல..... ஆகாஷ் மகியை எழுப மனமற்று அவளை அந்த இருகையிலே படுக்க வைத்தவன் மருத்துவரை நோக்கி அவனும் சென்றான்......

" docter என்ன ஆச்சி பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லதானே" என்று சத்யா தினறிய குறலில் கேட்க......

அவனை முறைத்த சிவா "docter ple சொல்லுங்க எங்க மதுக்கு எதுவும் இல்லத்தானே" என்று அவன் அவளுக்கு எதுவும் அகிவிடக் கூடாது என்று பயத்தில் கேட்க.......

கேட்ட இருவரையும் முறைத்த மருத்துவர் " என்ன அவங்களுக்கு பெரிய அடி ரத்த ஆறு ஒடுதுடு நினைபோ stupids..... அவங்க இரண்டு பேரும் நல்ல தான் இருக்கங்க அடி பட்ட அந்த பையனுக்கு ஒன்னு இல்ல லேசா கால்ல அடி அவ்வளவு தான் and அந்தப் பைய ம....... " என்று ஏதோ சொல்ல வந்தவர் எதும் சொல்லாமல் நிருத்திக் கொண்டார்.........

மருத்துவர் சொல்லி முடிக்க அங்கு இருந்தவர்களின் முகத்தி ஈ அடவில்லை........

(??? என்ன friends நா excedentன்டு சொன்னதும் serious யோசிச்சிட்டிகளா நா அப்டிலா யோசிக்க கூட இல்ல சும்மா hero heroin சத்திப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும் அப்படிடு இப்படி first serious கொண்டு போய் comedy முடிச்சிட்ட...... அத பார்த்து நீங்களும் பயந்திடிகள்ள ?? ஐயோ ஐயோ....... எல்லாரும் என்ன அடிக்க வராத்துக்குள்ள நா ஒடிர்ர டாடா???‍♀?‍♀?‍♀)

சுயநினைவு பெற்ற சிவா
" பார்த்தியா ஆகாஷ் நா சொன்னன்ல இவனங்க நடிக்கிறான் இவனுங்களுக்கு ஒன்னும் இல்லடு...... இப்ப பாரு இவனுங்களாள என் மதுக்குதான் அடிப் பட்டிரிச்சி இவனுங்கள சும்மா விடக் கூடாது" என்று சிவா கத்த......

"Hello mr. சிவா கொஞ்ச நேரம் கத்தாம இருக்கிங்களா......இது hospitalலா இல்ல வேர எதுவுமா..... அவங்களாவது பரவல்ல கால்ல லேசான அடி ஆனா நீங்க சொன்ன அந்த மதுப் பொண்னு அதிர்ச்சில மயங்கி இருக்காங்க excedent நடந்த இடத்துலயே தண்ணீர் தெளிச்சி கூட்டிடுப் போய் இருக்கலாம்...... இங்க வந்து எங்க time west பன்னிட்டு ideots...... அவங்கள கூட்டிட்டு இடத்த காலி பண்ணுங்க......." என்று மருத்துவர் அடக்க மட்ட கோபத்தில் கத்த......

அங்கு வந்த nurse " docter ple cool நீங்க போங்க நா பாத்துக்குர அவங்கள " என்று அவரை அனுப்பி வைத்தவள்......

இவர் பேசியதை காதில் வாங்காமல் சுண்டு விரலால் தனது இடத்துக் காதைத் குடைந்துக் கொண்டு இருந்த சிவாவைப் பார்த்து.....

" excuse me தயவு செஞ்சி அவங்க கூட்டிட்டு கிளம்புரிங்களா " என்று பல்லைக் கடித்துக் அடக்கப் பட்ட கோபத்தில் சொல்ல......

சிவா ஏதோ பதில் சொல்ல வரும் போது தூங்கிக் கொண்டிருந்த மகி எழுந்தாள்...... அவள் எழுவதைப் பார்த்த அனைவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்ப.......

எழுந்தவள் நேராக சிவாவிடம் வந்து "எவ்வளவு நேரம்டா இதுலயே தூங்குரது அதுல தூங்குனதால எனக்கு இடுப்புதா வலிக்கிது...." என்று இடுப்பை பிடித்துக் கொண்டு கூறினாள்.......

அந்த nurse தான்" இதுங்க எல்லாம் லூசா"........என்ற ரீதியில் பார்த்து விட்டு நகர அவளை அழைத்தான் சிவா...........

அவள் சிவாவை 'என்னவென்று' பார்க்க......

" உன் பேர் என்னடு தெரிஞ்சிகளாமா....." என்று கேட்க.......

அவனை ஒரு மாதிரிப் பார்த்தவள்
" திஷா திஷா வினோதன்" என்க அவள் பெயரை சொன்னதும் சிவா அதிர்ந்தான்??........

( யேன்டு கேக்குறிகலா ஐயா சொல்லுவாரு பாருங்க??)

" என்னாது திஷா வினோதானா அப்.... அப்ப உனக்கு கல்யாணண் ஆகிரிச்சா......." என்று சிவா கேட்க......

கடுப்பான திஷா " யோவ் லூசாயா நீ அது என் அப்பா பேரு " என்க

அதற்கு சிவா " அப்பா பேரா.... புருசன் பேரத்தானே பின்னாடிப் போடு வாங்க...... " என்று கேட்க.......

அவனை முறைத்தவள் "சரியான லூசு கிட்ட வந்து மாட்டிக்கிற...... திருப்பி இவன பாத்திடவே கூடாது......"என்று புலம்பிக் கொண்டே அங்கு இருந்து நகர்ந்தாள்........

( ஆனால் அவளுக்கு தெரியாது இனி அவளின் மீதி வாழ்கையே அவன் தான் என்று...... நான் சொன்னடு சிவாட சொல்லிராதிக பயாபுள்ள கொஞ்ச நாள் அலயட்டும் இது நமக்கு உள்ள ராகசியம் நியபகம் வச்சிகங்க......?)

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சிவா 'icu என்று நான் சொல்லிக் கொண்டிருந்த normal ward அறைக்குள் நுழைந்தான்'.......

அவனை தொடர்ந்து சத்யா ஆகாஷ்சின் தோளில் கைப் போர்ட்டு " என்ன தேவ இல்லாம திட்டிகளே பாஸ்" என்க.....

"நான் எங்க பாஸ் உங்க திட்டினே அந்த லூசுப் பயத்தா திட்டினான் சாரி பாஸ்" என்க......

" விடுங்க பாஸ் வாழ்கையில் இதலாம் சாதாரணம் " என்று பேசிக் கொண்டே அவர்களும் அறையினுள் நுளைய.....

இவர்கள் இருவரையும் பார்த்த மகி தலையில் அடித்துக் கொண்டு அவர்களுடன் உள்ளே சென்றாள்........

உள்ளே சென்ற நால்வருக்கும் பேர்அதிர்ச்சி????......

அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம்?????

இன்னொரு புது காதாபாத்திரம் அவளால் இன்னும் என்னென்ன நிகழும்????

பொருத்திருந்து பார்ப்போம்.....

? தொடரும்......... ?
(Hiii நண்பர்களே படிக்குரவங்க தயவு செய்து தங்கள் கருத்தை சொல்லுங்க பா........ அப்போ தான் எனக்கு எழுந்த intrest வரும்....... )
 
நாள் 05..........

உள்ளே சென்ற நால்வருக்கும் பேர்அதிர்ச்சி??.......

அங்கு அவர்கள் கண்டகாட்சி அந்த அறை முழுவதும் களைந்து அங்கு இருக்கும் மருத்துவ பொருட்கள் எல்லாம் அங்காங்கே சிதறிகிடப்பதும் தான்.....

அதுபோக அங்கு இருந்த இருவரும் கலைத்துப் போன முகத்துடனும் கண்களில் கோபத்துடனும் இருந்தனர்......

( அவங்க இரண்டு பேரும் யாருனுத்தான் நாமக்கே தெரியுமே அது நம்ம மதுவும் அகிலனும் தான்??........)

அவர்கள் இருவரும் எதிர்எதிரே இருக்கும் badல் அமர்ந்து ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்??.......

இவர்களைப் பார்த்து தான் நால்வரும் அதிர்ந்தது??......

அதிர்ச்சியில் இருந்து மீண்டது முதலில் சிவாதான்...... அவன் பக்கதில் இருக்கும் மகி மற்றும் ஆகாஷ்சை உணர்வுக்கு கொண்டு வந்து.......

அவர்கள் மூவரும் மதுவிடம் செல்ல...... அவர்களைப் பார்தவள் அவர்களை நோக்கி வர......

அவள் வருவதைப் பார்த் சிவா தன்னை தான் அவள் கட்டிப்பிடிக்க வருகிறாள் என்று நினைத்து கைகள் இரண்டையும் விரித்து அவளுக்காக காத்திருக்க.......

அவனிடம் வந்தவள் யாரும் எதிர்பாக்காத நேரம் அவன் கன்னத்தில் விட்டாள் 'பளார் ' என்று ஒரு அறையை........

இதை எதிர் பார்க்காத சிவாத் தான் பேந்த பேந்த முழித்தப் படி நின்றான்........

பல்பு வாங்கிய சிவாவைப் பார்த்து மகியும், ஆகாஷ்வும் சிரிப்பை அடக்க பாடாத பாடுப்பட ஆனால் அகிலனோ வாய்விட்டே சிரித்து விட்டான்......

அவர்கள் எல்லாரையும் கன்னத்தில் கை வைத்து கொலை வெறியில் முறைத்தவன் அதே முறைப்புடன் மதுவைப் பார்க்க அவள் அதைவிட கொடூரமாக அவனை முறைத்தாள்......

அகிலன் சிரித்தில் மகியும் ஆகாஷ்வும் கூடவே சிரித்து விட மது அவர்கள் மூவரையும் முறைத்த முறைபில் தான் சிரிப்பை அடக்கினர்......

" ஏன்டி என்ன அடிச்ச..... உனக்காக நா எவ்வளவு கவலப்பட்டேன் தெரியும் ஆனா நீஈஈ...... ஆனா நீனு என்ன அடிச்சிட்டள அது மட்டு....." என்று அவன் பேசி முடிக்க முன்பே இடைப்புகுந்து மது பேசத் தொடங்கினாள்.....

" ஏன்டா டேய் உன்ன நான் எனக்காக கவலப்பட சொன்னேனா...... " என்று மது கோபமாக கேட்க??......

"உனக்காக கவலப்பட்ட பாரு எனக்கு இதுவும் தேவை இன்னுமும் தேவை" என்று சிவா பொய்யான சலிப்புடன் கூற.......

" பின்ன என்னடா நா என்ன ரத்தக்கலரிலயாவா கடந்தன் என்ன hospital கூட்டிட்டு வாரதுக்கு மயங்கிதானே இருந்ன் தண்ணீ தெளிச்சி வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் இருக்கலாம்ல......" என்க சிவா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க.....

மது திரும்பி ஆகாஷ் மற்றும் மகியைப் பார்க்க அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் "நாங்க இல்ல சிவாதான்.... " என்று சொல்லவும் மது சிவாவை முறைத்தாள்.....

சிவா அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டே "எல்லாதுலயும் என்னையே மாட்டி விடுங்க....." என்று சொல்லி விட்டு மதுவைப் பாவமாக பார்க்க......

" இப்டி பாக்காத சகிக்க முடியல நீ மட்டும் அப்பவே என்ன வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் இருந்த நான் ஒரு லூச சந்திச்சி இருக்க வேண்டியது அவசியமே இருந்து இருக்காது.....ஶ" என்று மது அகிலனைப் பார்த்துக் கொண்டே சொல்ல.....

இவ்வளவு நேரமாக இவர்களை ரசனயாக பார்த்துக் கொண்டிருந்த அகிலன் மது தன்னை 'லூசு' என்று சொன்னதும் அவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏற.....

" ஏய் இங்க பாரு மரியாதைய பேசு யாருப் பார்த்து லூசுடு சொல்லுர....." என்று அகி அவளிடம் எகிற??.......

" உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு..... உன்னை பார்த்துத் தான் சொன்ன லூசுடு லூசு....." என்று அவள் அவனுக்கும் மேல் எகிற......

" ஏய் இந்த மாதிரி 'டா' போட்டுப் பேசுர வேலையலாம் வெச்சிக்க வேணாம்...... அப்பறம் பொண்ணுனு கூடப் பார்க்க மாட்ட அறைசிடுவேன் பாத்துக்க....." என்று அகிலன் கத்த.......

மது ஏதோ கோபமாக சொல்ல வரும் போது இவ்வளவு நேரமாக இங்கு நடப்பதை பேரதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு இருந்த சத்யா......

அகிலனின் பக்கம் போய் அவனை கையை அழுத்தமாக பற்றியவன்.....

மதுவின் பக்கம் திரும்பி "sorry sister அவன் பேசுனதுக்கு நா மனிப்பு கேட்டுக்குறன்......ஶ"என்று கூற.....

இடைப்புகுந்த அகிலன் "அவகிட்ட எதுக்குடா நீ மன்னிப்பெல்லாம் கேட்குற......" என்று அகிலன் மதுவை ஏழறமாக பார்த்துக் கொண்டே கூற.......

சிவா, ஆகாஷ் அவனை முறைத்துக் கொண்டே ஏதோ சொல்ல வர??.......

அதற்கு முன்னால் சத்யா "டேய் வாய மூடுடா..... முதல்ல நீ வெளில்ல போ" என்க அவனின் பேச்சை தட்ட முடியாத அகிலன் எல்லோரையும் முறைத்துக் கொண்டே கையில் இருந்த ஸ்டிக்கின் உதவியுடன் வெளியேரினான்.......

அவன் சென்றதும் "மனிச்சிடுங்க எல்லாரும் அவன் கொஞ்சம் கோபக்காரன் இனி இப்படி நடக்காது sorry sister...." என்று அவன் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு வேண்ட......

" ஹ்ம் சரி அண்ணா விடுங்க இனி அவர இது மாதிரி கோப்பட வேண்டாம்டு சொல்லுங்க..." என்று மது தன்மையாக சொல்ல......

அவளைப் பார்த்து மெல்லிதாக முருவலிந்தவன் "அதலாம் அவன்ட நிறைய வாட்டி சொல்லியாச்சி ஆனா அவன்தான் கேட்குறது இல்ல...... சரிமா நா பாத்துக்குர வறேன்......" என்று பெருமூச்சுடன் அனைவரிடமும் விடைப் பெற்றவன் சிவாவை ஒருப் பார்வைப் பார்த்தவன் அங்கு இருந்து அகன்றான்......

அவன் சென்றதும் சிவா மதுவை நோக்கி கேள்விகளைத் தொடுக்க தொடங்கி விட்டான்........

" என்ன நடக்குது இங்க..... அவன் எதுகாக உன்ன திட்டுறான்...... நாங்க உள்ள வரத்துக்கு முன்னாடி அப்படி என்னத் தான் இங்ங நடந்திச்சி....... " என்று சிவா மதுவிடமும் சத்யா அகிலனிடமும் ஒரே நேரத்தில் கேட்டனர்......

அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் " சொல்ற மாதிரியா நடந்திச்சி...... " என்று சொல்ல.......

எல்லோருக்கும் என்ன நடந்து இருக்கும் என்று கேட்பதுக்கு அர்வம் வந்தது.....??

அவர்களும் சொல்ல தொடங்கினர்.......

ஒரு குட்டி Flash back.....

மது,அகிலன் இருந்த அறை.....

அங்கு மது, அகிலன் இருவரும் மயக்கத்தில் இருந்தனர்.......

( உண்மைலயே மயக்கத்துல இருந்தது மது மட்டும் தான் அகிலன் இல்ல......?? )

அகிலன் மெதுவாக கண்னை திறந்து பார்த்தான்......

அவனுக்கு மருத்துவ அறைப் போல் தெரிந்தது உணர்ந்துக் கொண்டான் தான் மருத்துவ மனையில் இருக்கிறோம் என்று.....

சுற்றி கண்களை சுழல விட்டவனது கண்ணில் பட்டது மது அவனுக்கு கொஞ்சம் தள்ளி மயக்கத்தில் இருப்பது........

அதிலும் முக்கியமாக அவன் கண்களில் பட்டது என்வோ அவளின் மூடி இருந்த சிப்பி இமைகள் தான்........

அதில் தன்னை சில நொடிகள் தொலைத்தவன்..... சிறிது நேரத்திற்கு பிறகு தான் உணர்வுக்கு வந்தான்.........

தான் படுத்து இருக்கும் கட்டிலில் இருந்து மெல்ல எழுந்தவன் தனது பாதங்களைத் தரையில் உந்தி எழுந்து நிற்க முயற்தித் தான்......

ஆனால் அவனால் முடியவில்லை மீண்டும் கட்டிலிலே உட்கார்ந்தான்.......

'என்ன நடந்தது' என்று குனிந்து தனது கால்களைப் பார்த்தான்..... அதில் அவனின் பாததில் சிறிய கட்டு ஒன்று போட பட்டிருந்தது........

அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது..... தன் காலில் அடிப்பட்டு இருப்பது.......

" ச்சே இத மறந்துடோமே இப்ப என்னப் பன்னுறது..... எப்படி எழுந்து நிக்கிறது....." என்று யோசித்தவனின் கண்ணில் பட்டது அங்கு இருந்த ஸ்டிக் ஒன்று........

அதை எட்டி எடுத்தவன்.... மெதுவாக எழுந்து நடக்க தொடங்கினான்.....

அவனால் இப்போது கொஞ்சம் நடக்க முடிந்தது.......

" சரி நா எதுக்கு இப்படி எழுந்து நடக்க முயற்சி பண்னிட்டு இருக்கன்...... " என்று யோசித்தவனுக்கு மூளையில் பல்பு எறிந்தது???.........

தான் மதுவைப் பார்த்து தான் எழுந்து நடக்க முயற்சி செய்தோம் என்று உணர்தவன் உடனே நிமிர்ந்து அவளை நோக்கினான்.......

மீண்டும் அவனின் கண்கள் அவளின் சிப்பி இமைகளிலே நிலைக் குத்தியது........

'அவள் யார் என்று தெரிந்துக் கொள்' என்று அவனை எதோ ஒன்று தூண்ட அவளை நோக்கி நடந்தான் ஸ்டிக்கின் உதவியுடன்......?‍??‍?

அவள் யார் என்று தெரிந்துக் கொள்ள நினைத்ததன் காரணம்.... மதுவின் பாதி முகம் மட்டும் தெரியும் அளவுக்கு காற்றில் உதவியால் அவளின் தூப்பட்டாவால் அவள் முகம் மறைக்க பட்டிருந்தது.......

அகிலன் மதுவிடம் நெருக்கி கொஞ்சம் அவளின் முகத்திற்கு நேராக குனிந்தவன்........ அவளின் தூப்பட்டாவை எடுக்க போன நேரம் மதுவின் இமையில் கண்மணிகள் அசைந்தன......

அதை பார்த்தும் தான் தன் சுயநினைவுக்கே வந்தான் அகிலன்......

உடனே அவளிடம் இருந்து விளகியவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.....

" டேய் அகிலன் என்ன அச்சிடா உனக்கு இப்படி ஒரு காரியத்தை பணப் போற...... எந்த ஒரு பொண்ணுக்கிட்டையும் நெருங்கி பழகாதவன் ஏன் ஒரு வார்த்தை பேச யோசிப்பவன்......எப்படிடா இப்படி ஒரு பொண்ண அவ சுய நினைவு இல்லாத நேரம் நெருங்கலாம்.... " என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.......

அப்போது எதர்ச்சியாக மதுவின் மீது அவன் பார்வைப் பட மதுவின் நெற்றி ஒரு விஷ வண்டு ஒன்று ஏறுவதைக் கண்டான்......

அது அவளைக் கடித்தாள் விஷம் ஏறிவிடும் என்று பதறியவன்.....

உடனே அவளை நெருங்கி பூச்சியை தட்டி விட்டவன் தனது கை எடுக்கும் போது மதுவின் இமைகள் திறந்தன......

அதை எதிர்ப் பாராதவன் தடுமாறினாலும் அவளின் விழியைப் பார்த்தவன் அதில் தன்னைத் தொலைத்தான்........

மது கூட முதலில் அகிலனின் முகத்தில் தான் முழித்தாள்.......

இரு ஜோடி விழிகளும் ஒன்றை ஒன்று நொக்கி கொண்டிருக்க.....

அப்போது அந்த அறையில் ஏதோ உடைந்து விழும் சத்தம் கேட்டது.......

எங்கு இருந்து அந்த சத்தம் கேட்டது????

இருவரும் சுயநினைவு வந்தால் அடுத்து என்ன நடக்கும்????

வரும் அத்யாயங்களில்......

? தொடரும்....... ?

( Sry for the late ud frnds....... Ini sikiram tharan......)
 
Status
Not open for further replies.
Top