ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 30

அது ஒரு கல்லூரி காலம்… அழகிய நிலா காலம்… வசந்த காலம்….. இப்டி நிறைய சொல்லலாம்.. அதை முடித்தவர்களுக்கு மட்டுமே புரியும் அதை விட சொர்க்கம் வேறே ஏதும் இல்லை என்று..!

சூடான இளம் ரத்தம்… எது வந்தாலும் வந்து நின்னு பாருன்னு நிக்கிற திடம்… பயமறியா காலம்.. சும்மாவா சொன்னார்கள் இளங் கன்று பயமரியாதுனு…. எல்லாவற்றுக்கும் மேலே பிரின்ட்ஸ்… வீட்ல அத்தனை பிரச்சனை இருந்தாலும் பிரின்ட்ஸ்ட சும்மா பத்து நிமிஷம் பேசுற பேச்சுல அத்தனையும் மறந்து விடும்…

அது ஒரு பொறியியல் கல்லூரி.. சாதிக்கணும் என்ற வெறியோடு சில மாணவர்கள்… எப்பிடியாவது நாலு வருஷம் அரியேர் இல்லாம தள்ளுனா போதும் என்று சிலர்… படிக்குறோமோ இல்லையோ என்ஜோய் பன்றோம் என சிலர்.. இன்னும் சிலர் காலேஜ்லயாச்சும் கமிட் ஆகிடனுப்பா.. இப்டி பல பல ஆசைகள் கணுவுகளுடன் மாணவ பட்டாம்பூச்சிகள் அந்த கல்லூரியில் இருந்தார்கள்..

தேவ், ஹரிஷ், வருண்.. மூவரும் கணினி பிரிவு… முதல் வருடம் கண் மூடி திறக்கும் முன் ஓடி விட்டது…

இதோ இப்பொழுது இரண்டாம் வருடத்திற்கு அடி எடுத்து வைகத்து ஆறு மாதங்கள் ஆகிறது….. இரண்டாம் வருடம் என்பதால் அவர்கள் பிரிவு சார்ந்த படிப்பு மட்டுமே…

தேவ், மிக நன்றாக படிப்பான்… படிக்கணும்… பிஸ்னஸ் மேன் ஆகணும் அது மட்டுமே அவனுடைய குறிகோள்… வெறும் புத்தக கல்வி மட்டும் அல்லாமல்… தன்னுடைய குறிகோள்க்கு ஏற்றவாரு தன்னை செதுக்க ஆரம்பித்தான்… பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் கிளாஸ் காலேஜிலயும் இருந்தது தான்.. ஆனால், கடைசி வருடம் மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் மட்டுமே இருக்கும்… அதுனால்.. இப்பொழுதே தனியாக பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட், தொழிலதிபர் கிளாஸ்(entrepreneur class) இதற்கும் செல்ல ஆரம்பித்தான் ஈவினிங் காலேஜ் முடிந்ததும்… அவனுடைய அப்பா அவனுக்கு மிக பெரிய சப்போர்ட் என்றும் சொல்லலாம்.. அவனுடைய விருப்பங்கள் அறிந்ததினால் எதற்கும் அவர் தடை போட வில்லை… அவர் அவன் மேல் அவ்ளோ நம்பிக்கை வைத்ததுனாலே…. அவன் மனதில் அவர் தன் மேல் வைத்த நம்பிக்கையை உடைத்திர கூடாதுங்கற கவனத்துடன் இருந்தான்… அதுனாலேயே காதல் அவனுக்கு எட்டாக்கனி… கல்யாணத்தில் நாட்டம் உண்டு… காதலில் நம்பிக்கை இல்லாமல் இல்லை.. ஆனால் அவனை பொறுத்தவரை காதலிச்சா கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும்… இல்லையென்றால் காதலிக்க கூடாது… ஒரு வேளை அவனுக்கும் காதல் வந்தால் அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணி கொள்ளணும் என்றும் இருந்தான்… பிரேக் அப் பண்ணிட்டோ சும்மா டைம் பாஸ்கோ காதல் பண்ணுகிற ரகம் இல்லை அவன்….

அதே கல்லூரியில் தான் ஐஸ்வர்யாவும் படித்து கொண்டிருந்தாள்… தேவிற்கு மாமா பொண்ணு… அதாவது ஐஸ்வர்யாவின் அப்பா ராபர்ட் அவர்கள் ஜெயாவிற்கு அண்ணன் முறை.. (ஜெயாவின் அப்பா பெஞ்சமின் அவர்களும்.. ராபர்ட் அப்பா மோகன் தாஸ் அவர்களும் கூட பிறந்தவர்கள்)….

ஐஸ்வர்யாவும், தேவும் வேற டிபார்ட்மென்ட்… தேவ் கணினி.. ஐஸ்வர்யா எலக்ட்ரிகல்… பார்த்து கொள்ளும் நேரமும் குறைவு தான்.. டெய்லி ஒரு முறைதான் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்… அதில் நலன்களும், ஹாய்களும், பாய்களும் மற்றுமே இடம் பெற்றுயிருக்கும்…
லஞ்ச் டைம்… கேம்பஸ் கிரௌண்ட்… ஆங்காங்கு கூட்டமாக மாணவர்கள் இருந்தார்கள்…

அதில் ஒரு இடத்தில் மட்டும் கார சரமாய் விவாதம் நடந்து கொண்டிருந்தது…

“ஐஸ்வர்யா, ப்ளீஸ் டூ கோன்சிடெர் மை ப்ரொபைசல்”
“ஹே, ரவி நா உங்கிட்ட பிரின்ட்லியா தான் பழகுன்னே… நீ என்ன இப்டி வந்து சொல்ற.. ஐ காண்ட் அக்ஸ்ப்ட்..”

“ப்ளீஸ் ஐஷு… ஐ லவ் யூ சோ மச்”

“இதோ பாரு உனக்கு புடிச்சது சொல்ற.. எனக்கு புடிக்கல.. அதுனால புடிக்கலனு சொல்றேன்”

“ஐஷு அப்டி சொல்லாத… ஐ கேன் டூ எனிதிங் போர் யூ”

“இதோ பாரு ரவி, பிரின்ட் ஆஹ் பழுகுற அப்டினா நாம தொடரவோம்… இல்லனா இங்கேயே முடிச்சுக்கலாம்… அதையும் மீறி எனைய கட்டாய படுத்தினா… நா மேனேஜ்மென்ட் கிட்ட கம்பளைண்ட் பண்ணிடுவேன்.. பாத்துக்க.. “


“என்ன ஐஷு இப்டிலாம் சொல்ற…”

“வேற எப்படி சொல்ல சொல்ற… நீயா வந்து பேசுன.. சரினு நானும் பிரின்ட்லியா பேசுனேன்… அதுக்குன்னு இப்டி வந்து சொல்லிவியா… பெட்டெர் ப்ளீஸ் ஸ்டே அவய்… நான் உன்ன பார்க்க விரும்பல… பிரின்ட்னு சொல்லி சீப்பா பெஹவ் பண்ணிட்ட… இப்போ இங்க நடந்த பேசுக்களை நா என் போன் ல ரெகார்ட் பண்ணிருக்கேன்… நீ என்ன திரும்ப திரும்ப இப்டி டிஸ்டர்ப் பண்ணினா… நா கண்டிப்பா இந்த ரெகார்ட் வச்சு கம்பளைண்ட் பண்ணுவேன்… லவ் டார்ச்சர் குடுக்குறனு சொல்லுவேன்… சோ, ப்ளீஸ் என்ன விட்டுடு..” என கண்டிப்புடன் கூடிய அழுத்தத்துடன் கூறி விறு விறுவென அவள் காங் கூட ஐக்கியமகிட்டாள்…..

இவள் இப்டி தான்… தானாக வழிய வருபவர்களை எவ்ளோ உபயோகிக்கனுமோ அவ்ளோ யூஸ் பண்ணிவிடுவாள்… ஆதாயம் இல்லாமல் பிரின்ட்னு வர மாட்டார்கள்.. கண்டிப்பாக லவ் தான் என்று அறிந்து கொண்டாள்… அவர்கள் லவ் சொல்லும் வரை யூஸ் பண்ணிக் கொள்வாள்… வெளியே போவதற்கு… அசைன்மென்ட் எழுதுவதற்கு… சாப்பாடு வாங்கி தருவதற்கு… இந்த மாதிரியானவைகளுக்கு…

எப்பொழுதுமே ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை பிடித்திருந்தால் முதலில் போய் அவன் ப்ரொபோஸ் பண்ண மாட்டான்… சும்மா பேசி பழகலாம் என்று நினைப்பான்… அப்புறம் சொல்லுவோம்…என்று தயங்குவான்… இது அந்த பையனுக்கு மைனஸ்.. ஆனால் இவளை மாதிரியான பெண்களுக்கு பிளஸ்…..

“என்ன மச்சி, பிரேக் அப் ஆஹ்…?” என கேட்டாள் நித்திலா…

“தப்பு தப்பு வாயில அடி வாயில அடி…” ஐஷு

“ஏன் மச்சி, என்னவாம்… லவ் சொல்லிட்டனா” இது வர்ஷா…

“ஆமா டி… அதான் முடிச்சு விட்டு வந்தேன்…”

“மச்சி இப்போ யாரு கேன்டீன்ல நமக்கு ஸ்னாக்ஸ் வாங்கி தருவா” நித்திலா…

“ஹ்ம்ம்.. உனக்கு உன் பிரச்சனை.. அவன் வர முன்னாடி நாம தானே வாங்குனோம்… இன்னொரு அடிமை சிக்குற வர நாம பாத்துக்கோவோம்.. இருந்தாலும் அவனும் இவ்ளோ சீக்கிரம் லவ் சொல்லிருக்க வேணாம்… இன்னொரு ஆறு மாசம் ஒட்டிருக்கலாம்” ஐஷு

“ஹ்ம்ம், நீ கொஞ்சம் சுத்தல விட்ருக்கணும் மச்சி.. செரி பரவால்ல…” நித்திலா…

“சரி.. அது உன் மாமா தானே.. இப்போ தான் தெளிவா பாக்கறேன்.. ரொம்ப நல்லா இருக்கான்டி… செம ஹாண்ட்ஸம் போ…” வர்ஷா

“ஆமா ஆமா அவன் தான், இங்க என்ன பன்னிட்டு இருக்கான் தெரிலயே… அவன் கொஞ்சம் படிப்ஸ்”

“மச்சி, ஒரு ஐடியா… நீ ஏன் இவனை லவ் பண்ண கூடாது” நித்திலா…

“ஏன்டி? அவன்லாம் செட் ஆக மாட்டான்..” ஐஷு

“ அப்போ, உனக்கு அவனை பிடிக்காதா?” வர்ஷா


“அப்டிலா இல்லை.. அவன் அழகன் தான்.. வருஷத்துக்கு நாலு முறை இல்லாட்டினா ஏதாச்சும் பண்டிகை இப்படி தான் பார்த்துப்போம்…நா டென்த் படிக்கும் போது ட்ரை பண்ணுனேன்.. பட் செட் ஆக மாட்டான்.. கோல், அம்பிஷன், ஆச்சேவேமென்ட்(acheivement) இப்டி தான் பேசவே செய்வான் மச்சி..”

“ஹே, அப்போ பிடிச்சுருக்குல… மறுபடியும் ட்ரை பண்ணு..”நித்திலா

“அவன் வேஸ்ட் டி.. சரியான கஞ்சம்… படிப்பாளி… அவங்க அம்மா “டி” னு அவன் ஒரு பொண்ண பார்த்து சொன்னதுக்கே அடி பின்னி எடுத்துட்டாங்களாம்… அவன் தம்பி சொன்னான்..”

“சரி மச்சி வீடு அப்டித்தான் இருக்கும்.., ஆனா பார்க்க ஸ்மார்ட் ஆஹ் இருக்கான்.. நல்லா படிக்கிறான்… இந்த செமஸ்டர்ல டோப்பர் வேற… அவன் பிஸிக் பாரு சும்மா அப்டி இருக்கு.. அவன் கிளாஸ் பிள்ளைகள் எல்லாம் ஜொள்ளுறால்கள்…” நித்திலா
தேவ் பாஸ்கெட் பால் பிளேயர்.. அதுனால் அவன் புஜங்கள் முறுக்கேறி திடக்கத்திரமாக இருக்கும்…. அதுவும் சிறிதும் தொப்பை இல்லாத வயிறு…. அளவான மீசை… கூரிய கண்கள்… என அவனை அழகனாகாவே காட்டும்…
“அதுக்கு நானும் ஜொள்ளு ஊத்தணுமா?” ஐஷு

“அட சீ.. இல்லைடி… ட்ரை குடு திரும்ப” வர்ஷா

“ஹே,அவன் சல்லி காசுக்கு ப்ரோயோஜனம் இல்லடி” ஐஷு


“மச்சி, புடிச்சிருக்குனு சொல்லிட்ட… அவன் கோல் என்ன… அத சொல்லு” நித்திலா

“ஏதோ பிசினஸ்மேன் ஆகணுமாம்… அதுல நிறைய சாதிக்கணுமாம்…” ஐஷு

“இது நல்லா கோல் தான்… இவன் இவ்ளோ வெறியா இருக்கான்… அப்போ செட்டில் ஆகிடுவான்… ஸ்மார்ட்க்கு ஸ்மார்ட்.. காசுக்கு காசு.. மச்சி ட்ரை பண்ணு” நித்திலா..

“சொன்னா புரிய மாட்டிக்கிது உங்களுக்கு… அவனை புடிக்கும் தான் இல்லனு சொல்ல.. ஆனா..அவன் சரியான பழம்டி… லவ் வருமானே தெரில..”

“மச்சி, வெளில இருந்து பாக்க அப்டித்தான்.. அதும் அவன் கோல் அம்பிஷன் இருக்குற பையன்… அப்டித்தான் வெளில இருக்கும்.. ஆனா உள்ள சாராசரியான பையன் தான் அவனும்… ஒன்னு தெரிஞ்சுக்காத வரை அது யாருக்குமே பொருட்டு இல்லை… நீ லவ் பண்ணி லவ் பண்ண வை.. ஏன் ஐஷு... உன் மேல, உன் அழகு மேலயே உனக்கு நம்பிக்கை இல்லையா? என அவளுடைய மெயின் சுவிட்சை பிடித்தாள்”…

ஐஸ்வர்யாவிற்கு எப்பொழுதுமே தான் அழகு என்பதில் கர்வம் அதிகம்… அவளும் அழகானவள்… ஆனால் அழகு இருக்குற அளவுக்கு குணம் இல்லை என்பதே உண்மை…

“எனக்கு என்னமோ நித்தி சொன்னது தான் உண்மையோனு தோணுது. அவன் அவ்ளோ ஸ்டப்பர்ன் அப்டினா நீ எவ்ளோ ஸ்ட்ரோங்… உன்னால முடிலனு நினைக்கிறன்…செரி விடு” வர்ஷா

“சரிடி.. நா அவனை என்னை லவ் பண்ணி வச்சு காட்றேன்… இத நான் சவாலாவே எடுத்துகிறேன்.. கண்டிப்பா முடிச்சு காட்றேன்..”

“இது தான் ஐஷுக்கு அழகு… உன் மேல நம்பிக்கை இருக்குடி” என நித்திலாவும், வர்ஷாவும் அவளை கட்டி பிடித்து கொண்டனர்…

கூடா நட்பு கேடில் முடியும் என்பதற்கு இவர்களே சான்று!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 31

ஐஸ்வர்யா, அவளுடையை வீட்டில் மிகவும் செல்ல பிள்ளை… அவள் சொந்த ஊர் மதுரை…… பன்னிரண்டாம் வகுப்பு வரை மதுரையில் தான் படித்தால்… அப்பா ராபர்ட்.. அம்மா சோபனா…ஒரு தம்பி டார்வின்… அப்பா விவசாயம்… மதுரையில் தோட்டம், துரவு என்று வைத்திருப்பவர்… மதுரை மல்லியை விளைவித்து… அதை மதுரை தொடக்கம்.. சுற்று வட்டாரங்களுக்கு ஏற்றுமதி பண்ணி விடுபவர்…

வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி பண்ணுவார்… அவர்கள் வாசனை திரவியம்(perfume) தயாரிக்க என வாங்குவார்கள்… இது போக.. மீன், இறால் எஸ்ப்போர்ட் கம்பெனி ஒன்று தூத்துக்குடியில் உள்ளது…
முதலில் இந்த ஏறுமுகம் அவருக்கு இல்லை.. ஐஸ்வர்யா பிறந்த இரண்டே மாதத்தில்… நிறையாக லாபம் பார்த்தார்… நிறைய பேர் இவரிடம் மொத்தமாக வாங்கவே வருவார்கள்… அதிலிருந்து அவர் “தொட்டதெல்லாம் ஹிட்டு” என்ற நிலை தான்…

தன் மகள் தான் இதற்கு காரணம்… ஐசுவாரியம் நிறைந்தவள் என்று “ஐஸ்வர்யா” என பெயர் இட்டார்…

அவள் ம்ம்ம் என்று சொன்னாள் போனதும் என்ன வேண்டுமானாலும் செய்து கொடுத்து விடும் தகப்பன்… இவ்ளோ செல்லம் குடுக்காதீங்க என்று எவ்ளோவோ சோபனா தடுத்து பார்த்தார்… மனுஷன் அசையவில்லை…

ராபர்ட், ஆரம்ப காலத்தில் பட்ட அவமானமோ என்னவோ.. காசு தான் முதலில் என்று நினைப்பும் உள்ளவர்…. அவமானம் என்பது பாடம் கற்று குடுக்கும்… நல்ல மனிதர்கள் யார் என பிரித்தரிய பக்குவம் வரும்..நேர்மையை கற்று குடுக்கும்… ஆனால் அவருக்கோ மேலும் வளரனும், பணம் சம்பாதிக்கனும் என்று மட்டுமே கற்று குடுத்தது அது தான் மேல் என்றும் நினைக்க வைத்தது…

அதை பார்த்து வளந்த மகளோ.. அப்டியே உள்ள எண்ணங்களுடன் வளர்ந்தாள்….

இங்கு பொறியியல் கல்லூரியில்… ஐஸ்வர்யாவிற்கு எப்படி அவனிடம் நெருங்குவது என்றே தெரியவில்லை… எவ்ளோ யோசித்தும் தெரியவில்லை…

“யோசி ஐஷு, யோசி.. கண்டிப்பா கிடைக்கும்…” என்று தனக்குள் உருப்போட்டு கொண்டே அவள் ரூமிற்குள் நடந்து கொண்டிருந்தாள்…

தினமும் அவளுடைய ஹாஸ்டளில் 7-8 ஸ்டைடி டைம்… கண்டிப்பாக அமர்ந்து படிக்க வேண்டும்… அந்த சமயம் போன் யூஸ் பண்ண கூடாது… கண்டிப்பாக ரூமிற்குள் இருக்க கூடாது… வேண்டா வெறுப்பாக புக் எடுத்து ஸ்டடி ஹால்க்குள்ள வந்தாள்…
புக் திறந்து வைத்துக்கொண்டு… சும்மா என்ன இருக்குனு பார்த்தாள்.. ஒன்றும் புரியவில்லை…

திடிர் என ஒரு ஐடியா உதயமாகியது… இதை செயல் படுத்தி விடணும் என்று உறுதி எடுத்து கொண்டாள்…

ஐடியா கிடைத்ததும்.. நிம்மதியாக உறங்கி காலையில் எந்தரித்தால் … காலேஜ்குள் வந்து அவனிடம் பேச சமயம் பார்த்து கொண்டிருந்தாள்…

மதியம் சாப்பிடுவதற்கென்று கேன்டீன்குள் வந்தான்… பின், வெளியே கிரௌண்ட்க்கு சென்று அங்கே இருந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்தான்… இவளும் பின்னே போய், அவன் பக்கத்தில் அமர்த்தாள்…

“ஹாய் தேவ், எப்படி இருக்க”

“ஹே ஐஷு, குட் குட்.. நீ”

“ஹ்ம்ம் இருக்கேன் தேவ்”

“என்ன ஆச்சு.. ஏதாச்சும் ப்ரோப்லேம்ஆஹ்”

“ப்ரோப்லேம்னு இல்லை.. பேசாட்டி னா ட்ரோப் அவுட் ஆகலாம்னு பாக்கறேன்..”.

“ஏன்” என கூர்மையான விழிகளால் கேட்டான்…

“உனக்கு என்ன நீ டோப்பர்.. னா அப்படியா.. ஒரு செமஸ்டர் பாஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளுது தேவ்.. முடியல…எலக்ட்ரிகல்.. ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ கஷ்ட படமா எதுவும் கிடைக்காது ஐஷு”

கிழிஞ்சுது… போ என்று எண்ணியவாரு… “ஹ்ம்ம், ஆனா.. எவ்ளோ கஷ்ட பட்டாலும் பாஸ் ஆக மாட்டேன் னு தோணுது.. அதுக்கு நா ட்ரோப் அவுட் ஆகிடுவேன்”

“சரி, உன் சீனியர்ஸ்.. உன் ஸ்டாப்ஸ் கிட்ட கேளு.. ட்ரை குடு ஐஷு.. கண்டிப்பா முடியும்”

“சீனியர்ஸ் கஷ்டம் தேவ், அவங்களும் படிக்கணுமே… ஸ்டாப் கிட்ட படிக்கலாம் பட் அவங்களுக்கு பீஸ் குடுக்கணும்.. டெய்லியும் படிக்க போனா.. அதுக்கு லாம் காசு இல்லை தேவ்” எவ்ளோ முடியுமோ அவ்ளோ அவன் மனதில் பதியுற மாதிரி கூறினாள்…

“சரி நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற… நா வேணும்னா உன் சீனியர்ஸ் கிட்ட பேசவா” கஷ்ட பட்டு பீஸ் கட்டி ஒன்னரை வருடம் தாண்டியாச்சு… முதலில் கஷ்டமாக தான் இருக்கும் போக போக சரி ஆகிடும் என்று நினைத்தான்…

“ நானே சில சீனியர்ஸ் கிட்ட ஹெல்ப் கேட்டேன்.. உனக்கு புக்ஸ் வேணும்னா சொல்லு தரோம்.. பட், இது நிறைய டைம் எடுக்கும்.. எங்களுக்கே நிறைய படிக்க இருக்குனு கைய விரிச்சுட்டாங்க தேவ்.. நீ ஏன் எனக்கு சொல்லி தர கூடாது”

“ நானா.. ஹே, நீ எலக்ட்ரிகல்.. நா கம்ப்யூட்டர்… எப்படி என்னால முடியும்”

“தேவ், பிலீஸ் ப்ளீஸ்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு .. நீ படிச்சு பார்த்து.. உனக்கு புரியுறத சொல்லி குடு… உனக்கு புரியாதத நா டவுட்னு ஏன் ப்ரோபிபிசார் கிட்ட கேட்டுக்கிறேன்.. டியூஷன் போன தான பீஸ்.. டவுட்க்கு இல்லையே.. ப்ளீஸ் தேவ்.. “

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு.. சரி என்று.. இரு மனதாக கூறினான்…

காலேஜ் முடிந்ததும்.. சிறிது நேரம் படிப்போம் என்றும் பேசி கொண்டார்கள்… நாளையில் இருந்து ஆரம்பிப்போம் என்றும் முடிவு பண்ணி கொண்டார்கள்…

இப்படியாக சென்றது.. தினமும் ஒரு மணி நேரம்..முதல் நாள் அவன் படித்து.. அடுத்த நாள் அவன் அவளுக்கு சொல்லி குடுப்பான்… இவள் கற்று கொள்ளுகிறேன் என்று நோட்ஸ் மட்டும் எடுத்து கொள்ளுவாள்…

போக போக அவனை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது…. கொஞ்சம் முரடன் தான்.. ஆனால் நல்லவன் என்று தோன்றியது… தவறான சிறு பார்வை கூட அவள் மேல் பட்டதில்லை.. இவள் மட்டுமே அவனை நோட்டம் விடுவாள்… போக போக சைட் அடிக்க ஆரம்பித்தாள்… அவனுடையா பிசிக் பிடித்தது… மொத்தத்தில் அவனை பிடித்தது…. அவனை லவ் பண்ண வைப்பேன் என்று சபதம் எடுத்துவிட்டு இவள் தான் மொத்தமாக விழுந்தாள்… ஆனால் கண்டிப்பாக லவ் பண்ண வைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொழுந்து விட்டு இருத்தது..

ஆனால், அவனுக்கு அப்டி எதுவும் இல்லை… அவனை பொறுத்தவரை… அவனுக்கு படிக்க உதவி செய்கிறான்.. அவ்வளவே…

அன்றைய தினம், அவர்களுக்கு செமஸ்டர் ரிசல்ட் வருவதாக இருந்தது… நான்காவது செமஸ்டர் இரண்டாவது வருடம்…
எப்பொழுதும் நைட் தான் வரும்.. அதே போலவே வந்தது… இந்த முறையும் அவன் டிபார்ட்மென்ட் டோப்பர்… ஐஷு எப்படி எடுத்திருக்கிறா என்று தெரிய வில்லை… சரி கால் பண்ணுவோம் என்று கால் பண்ணினான்…

அந்த கால நேரத்தில் வாட்ஸாப்ப் வராத நேரம்.. அவன் மூன்றாம் வருடம் ஆரம்பிக்கும் நேரம் தான் வந்தது… டச் போன் கூட ரொம்ப பேசிக் ஆஹ் தான் வந்தது… எக்ஸ்பிரஸ் மியூசிக் போன் வைத்திருந்தாலே பெருசு.. அப்படிங்கிற நிலை…
ஐஷு போன் எடுத்தால்.. “தேவ், னா ஆல் கிளீர்… பிளஸ் நீ சொல்லி ககுடுத்தத்துல “அ(A)” கிரேட்…தேங்க்ஸ் தேவ்” என்று சொன்னாள்…
அவனுக்கும் கேக்கவே சந்தோசம்.. குட் ஐஷு… நாளைக்கு காலேஜில் பார்க்கலாம் என்று முடித்து விட்டான்…

அடுத்த நாள்.. காலை.. காலேஜ் கொஞ்சம் பரபரப்பாக இருந்தது ரிசல்ட் வந்ததின் பலானாக… யாரு முதல்ல வந்தது.. எத்தனை பேர் ஆல் கிளீர்.. எத்தனை பேர் அர்ரெர் வச்சுருக்காங்க.. என்ற விபரங்களுடன் அந்த நாள் சென்று கொண்டிருந்தது… அது போக.. நிறைய மதிப்பெண் எடுத்தவர்கள் சாதித்து விட்டோம் என்கிற நினைப்பிலும்… அர்ரெஅர் விழுந்தவர்கள்.. இந்த நாள் சீக்கிரம் போனா நல்லா இருக்கும் என்ற நினைப்புடனும் சென்றது…

லஞ்ச் இடைவெளியில் வர்ஷா ஐஷுவிடம் “என்ன மச்சி, நீ காதல் பாடத்துல தேர்ச்சி பெறுவனு பார்த்தா… காலேஜ் பாடத்துல தேர்ச்சி பெற்றுருக்க…என்ன ஆச்சு.. எப்படி தான் போகுது”

“ஹ்ம்ம், சொல்லுவடி.. சொல்லுவ.. எனக்கு உண்மையிலே அவனை ரொம்ப பிடிச்சுருச்சு…. அடுத்த கட்டம் எப்படி போகனு யோசனையா இருக்கு … பார்ப்போம் … இன்னும் டைம் இருக்கு… எங்க போய்ட போறான்.. என்னைய லவ் பண்ணி தான் ஆகணும்”

“ஹ்ம்ம், சரி சரி… அப்புறம் இந்த பூஜா லீவ்க்கு ஊருக்கு போறியா “..
“ஆமா வர்ஷா… ஒரு வாரம் லீவ் எடுத்திருக்கேன் .. போறதுக்கு முன்னாடி ஒரு சம்பவம் பண்ணனும்… பன்னிட்டு என்ன ரிசல்ட்னு சொல்றேன்..”

“என்னனு சொல்லுடி..”

“அது இப்போ சொல்ல மாட்டேன்… வர்ஷா…வெயிட் பண்ணு”

இதற்கு மேல அவளிடம் கேட்க முடியாது என்று விட்டு விட்டால்…
காலேஜ் முடித்ததும் 6 மணி வாக்குல அவனை பார்க்கலாம் என்று சொலிருந்தாள்…

சந்தித்தார்கள்… “சூப்பர் ஐஷு.. நல்லா தான் மார்க் எடுத்திருக்க… அப்போ இனிமேல் என் உதவி தேவை படாதுல…”

சுத்தம் என நினைத்த படி… “தேவ், இனிமேட்டு தான் முக்கியமா நீ தேவை..”

அவள் அப்டி கூறியதும்.. என்ன என்று அழுத்தமான விழிகளுடன் ஏறிட்டான்…

இவன் ஒருத்தன் பார்வையால பயமுறுத்துவான் என நினைத்த படி… “ஐ மீன்… இப்போ நீ சொல்லி குடுத்த நல்லா எடுத்தேன்… நீ சொல்லி குடுக்காம போனா… பழைய மாதிரி ஆகிடும்ல… அதான் தேவ்”

“ஹ்ம்ம்.. பட் நீயும் கத்துக்கணும் ஐஷு… எல்லா டைமும் நானும் பிரீனு சொல்ல முடியாது”

“புரிது தேவ், எனக்கும் கொஞ்சம் காங்பிடென்ஸ் வந்ததும் நிறுத்திகலாம்”

சரி என்று சொல்லி விட்டான்..

சரி கிளம்புவோம்.. என்று சொல்லும் போது…
ஒன் மினிட் தேவ்… என்று தன் கை பையில் இருந்து ஒரு ரோஜாவுடன் ஒரு குட்டி கிப்ட் நீட்டினால்…

அவனோ என்னது இது…

“கிப்ட் உனக்கு தான் தேவ், வாங்கிக்கோ..”

“எதுக்கு?”

“அது வந்து.. ஐ லவ் யூ தேவ்”

“என்னது ஐஷு இதெல்லாம்… பட் ஐ அம் நாட்”

“நீ உடனே சொல்லணும்னு இல்லை தேவ்.. டைம் எடுத்துட்டு சொல்லு”

“இல்லை ஐஷு…. லவ் இப்டிலாம் ஐ காண்ட் கான்சென்டிரேட்…”

“ப்ளீஸ் தேவ், எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு…” என ஒரு வேகத்தில் அவனை இறுக கட்டி பிடித்தாள்…

“ஐஷு.. தள்ளு என்ன ஒரு இழு இழுத்து.. சப்புன்னு அவ கன்னத்தில் ஒரு அறை வைத்தான்..”

என்ன நடந்தது இப்போ என ஸ்தம்பித்து நின்றாள்…. அவனை பாவமாக பார்த்து நின்றாள்…அவள் அப்பா கூட அவள் மேல் கை நீட்டியது இல்லை..

தேவ், “இதோ பாரு இந்த மாதிரி கட்டி பிடிக்கிற வேளை வச்சுக்காத… புரிஞ்சுதா..” கொஞ்சம் கண்டிப்பாகவே சொன்னான்…

அவளுக்கோ நிக்காமல் கண்ணீர் கண்ணில் வலிந்தது… இதற்கு மேல் என்ன பண்ணுவது என்று தெரிய வில்லை… அழுது கொண்டே ஹாஸ்டல்க்கு கிளம்பியும் விட்டால்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 32

அழுது கொண்டே ஹாஸ்டல் போனவள்.. அன்றைக்கு நைட்ட்டே மதுரைக்கு பஸ் ஏறிவிட்டாள்…

அவன் அடித்த கோவம் மனதில் கனன்று கொண்டே இருந்தது… இதுக்கு மேல் அவனை சம்மதிக்க வைக்க முடியாது என்றும் தோன்றியது… சரி சபதமாவது மண்ணாவது… என்று விட்டு விடலாம் என்று ஒரு மனது சொன்னது.. இன்னொரு மனமோ.. அவன் தான் வேண்டும் என்றும் சொன்னது… எதை கேட்பது என்று தெரியவில்லை…..

அவன் அடித்த பாதிப்பும் மனதை விட்டு அகல வில்லை… அடித்த கையை வைத்தே அணைக்க வைக்க வேண்டும் என்கிற வெறி வேற மனதில் சுழன்றது… என்ன முடிவு எடுக்க என்றும் தெரியவில்லை… கொஞ்சம் ஆற போடுவோம்… ஒரு வாரம் தள்ளி வைப்போம்… இப்போதைக்கு எதையும் யோசிக்க வேண்டாம் என்று நினைத்தாள்….

ஆனால் தேவிற்கோ இப்டி அடித்து விட்டோமே என்கிற குற்ற உணர்வுடன் இருந்தான்… அவள் அழுது நின்ற தோற்றமே கண் முன் வந்தது…. தூங்க முடியவில்லை… மன்னிப்பு கேக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டான்…

அவள் கேட்டத்தில் தப்பும் இல்லையே என்று அவன் மனது அவளுக்கு வக்காலத்து வாங்கியது…

ஒரு முறை.. அவளுக்கு அவன் படிப்பித்து விட்டு ஹாஸ்டல்குள் நுழையும் போது..

ஹரிஷ் கேட்டான், “ என்ன மச்சான் லவ்ஆஹ்…”

“இல்லைடா.. படிக்க ஹெல்ப் கேட்டா..அதான் சொல்லி குடுத்துட்டு வரேன்”

“மச்சான்.. எலக்ட்ரிகல் தானே அவ.. நீ என்ன சொல்லி குடுக்க முடியும்”

“உனக்கு புரிது.. ஆனா அவளுக்கு அது தெரிலயே.. முடிஞ்ச அளவுக்கு சொல்லி கொடுக்கிறேன்டா …..”

“ஏன் மச்சான் அவ உனக்கு ரிலேஷன் தானே”

“ஹ்ம்ம் மாமன் பொண்ணு… “

“ஓஹ் முறை பொண்ணு… அப்போ லவ்வும் பண்ணலாம்.. தப்பில்ல”
“மச்சான்..” என கண்டிப்புடன் சொன்னான்…

“ இல்லை மாப்ள.. முறை பொண்ணு மேல முறை பையனுக்கு இல்லாத உரிமையா… சும்மா ஜாலிக்கு கேட்டேன்… உன்ன பத்தி தெரியாதா” என ஹரிஷ் சொல்லவும் விடுவிட்டான் தான்…
ஆனாலும்… இன்று அவனுக்கு அவன் சொன்னது புரிந்தது…

இவர்கள் இரண்டு பேர் காதலித்தால் கண்டிப்பாக திருமணத்தில் தான் முடியும்.. வீட்டில் தடை சொல்ல மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை… எந்த சிக்கலும் இல்லை…

காதலித்தால் திருமணத்தில் தான் முடியானும் என்ற கோட்பாடுக்கு.. இவர்கள் காதலித்தால் ஒத்து வரும்… இப்பொழுது அவளை காதலித்தால் என்ன என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டான்…
அந்த வாரம் முழுவதும் அவள் லீவ் என்று தெரியாது.. இவன் அவள் ஹாஸ்டல்க்கு போய் கேட்கும் போது சொன்னார்கள் ஊருக்கு போய் விட்டாள் … வருவதற்கும் ஒரு வாரம் ஆகும் என்றும் சொன்னார்கள்…
இரண்டு நாள் ஒன்றும் தெரியவில்லை.. ஆனால் மூன்றாவது நாள்… அவளை தேட ஆரம்பித்தான்…நான்காவது நாள்… அவன் தான் தப்பு என்கிற நிலைக்கு வந்து விட்டான்…

எப்டியோ அந்த வாரத்தை நெட்டி தள்ளி விட்டான்…

அவளிடம் இன்னைக்கு சொல்லி விட வேண்டும் என்கிற முனைப்புடன்… காலேஜ்க்குள் வந்தான்… முதல் ஹாப் அவளை பார்க்க முடியவில்லை… ஈவினிங் காலேஜ் முடியும் போகும் எதிற்கே எதிற்கே சந்தித்து கொண்டார்கள்…

இவளும் அவனை பார்த்தாள் தான்… அவனை வைத்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்று வந்தவளுக்கு… அவன் கண் தட்டாத பார்வை… பயத்தை குடுத்தது… சரி இவன் வேண்டாம் என்று மனம் சொல்லுகையில்…

“நில்லு… உன்கிட்ட பேசணும்.. வா கிரௌண்ட்க்கு போகலாம்” என்று அவன் சொன்னதும் இவளும் மறுக்காமல் அவனுடன் நடந்தாள்….
கிரௌண்ட்க்குள் வந்ததும்.. தொண்டையை செருமி கொண்டே.. “அன்னைக்கு உன்ன அடிச்சதுக்கு சாரி ஐஷு.. என்ன இருந்தாலும் ஒரு பொண்ண அடிச்சுருக்க கூடாது” என உண்மையில் வருந்தி அவளிடம் சொன்னான்…

இவளுக்கோ மனது குத்தாட்டம் போட்டது.. “ஹ்ம்ம், பரவலா தேவ்” பெரிய மனசு போல் கூறினாள் …

“அப்புறம்.. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன்… நாம கல்யாணம் பண்ணிக்கலாம் படிச்சு முடிச்சு, கூடவே னா கொஞ்சம் செட்டில் ஆகுனதும்.. பட் எப்படியும் இன்னும் ஐந்து வருஷம் டைம் வேணும்.. னா எம். பி. எ படிக்கணும் அப்புறம் கம்பெனி ஸ்டார்ட் பண்ணிடுவேன்… சோ நீ கொஞ்சம் வெயிட் பண்ற மாதிரி இருக்கும்….எனக்கு லவ் பண்ணா கல்யாணம் பண்ணனும்… அது நம்ம விஷயத்துல நடக்கும்னு தோணுது… நீ என்ன சொல்ற? ”

“ஹ்ம்ம்… எனக்கு உன்ன பிடிக்கும் தேவ்.. நீ சொல்றதும் சரி தான்… யாரும் தடை சொல்ல மாட்டாங்க”

ஏதோ ஒரு அக்ரீமெண்ட் மாதிரி அவர்களின் லவ் அங்கே இருந்து ஆரம்பித்தது….

அடுத்த நாள்… ஐஷு கொண்டாடி தீர்த்து விட்டாள் என்றே சொல்லலாம்…

போட்ட சபதத்தில் ஜெயித்து விட்டாளே… அன்னைக்கு மதியம் அவளே ட்ரீட் வைத்தாள்…

“ஹ்ம்ம், நீ கெட்டிக்காரி தான்டி… அவனையே லவ் பண்ண வச்சுட்டியே” நித்திலா…

“அதுதான் என்னோட திறமை” என இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்”.

“சரி மச்சி, எப்போ கழட்டி விடுவ” வர்ஷா…

“இந்த வாட்டி அப்டில இல்லை.. செட்டில் ஆகணும்னு தோணுது… அதுக்கு அவன் தான் கரெக்ட்… ஸ்மார்ட் பர்சன்… ஒரு கெட்ட பழக்கம் கிடையாது… கண்டிப்பா பிசினஸ்மேன் ஆகிடுவான்… சோ அவன் செக்யூர் பர்சன்… அதக்கும் மேல அவனை பிடிச்சுருக்கு.. சோ அவனை விட மாட்டேன்… கல்யாணம் பண்ணுவேன்”

“செம ஐஷு, இது கூட நல்ல யோசனை..” என்று ஜால்ரா அடித்தர்கள் நித்திலாவும் வர்ஷாவும்…

அப்டியாக மூன்றாம் வருடம் கடந்தது.. அவள் அவனின் புண்ணியத்துனாலே ஒரு அர்ரெயர் வைத்தது இல்லை…
அதை போலவே அவர்கள் காதலும் வளர்ந்தது..அசைவம் இல்லா சைவ காதல் தான் அவர்களுடையது…

தேவ்விற்கு கட்டி பிடிக்கிறதோ… முத்தம் குடுக்கறதோ…எல்லாமே திருமணத்திற்கு அப்புறம் தான் என்கிற மன்பான்மை… ஆனால் அவளை மிகவும் பாதுகாப்பான்… வெளியே செல்ல வேண்டும் என்றாள் கூட வருவான்… படிப்பும் சொல்லி தருவான்… மத்தபடி வெளியே செல்வதோ.. தினமும் மணிகணக்காய் போனில் உரையாடுவதோ அவர்களிடம் கிடையாது…

தேவும் அவன் நண்பர்களிடம் கூறினான்.. லவ் பண்ண மாட்டேன்னு இருந்த அவன் இப்போ பண்ணுகிறேன் என்றதும் அவர்களுக்கும் சந்தோசம் தான்… அதுவும் சிக்கல் இல்லாமல் திருமணம் நடக்குமே என்ற சந்தோசம்…

இப்படியாக சென்று கொண்டிருந்தது… நான்காம் வருடம் தொடக்கத்தில்.. தேவ்விற்கு சரியான காய்ச்சல்.. வைரல் பிவேர் என்று சொன்னார்கள்..

காலேஜ்க்கும் அவனால் செல்ல முடியவில்லை ஒரு வாரம்… ஐஷு பேசும் போது.. தேவ் நீ சரி ஆனதும் வா.. அப்போ உன்ன பாக்கறேன்…. இப்போவே வந்தா எனக்கும் வந்துடும் என்று முடித்து கொண்டாள்…
அவனை அந்த சமயம் பார்த்து கொண்டது முழுவதும் வருனும் ஹரிஷ்ம் தான்… வருனுக்கு தான் நெருடியது…. என்னதான் காய்ச்சல் என்றாலும்… அந்த சமயத்தில் எப்படி இருக்கான் என்றும் பார்க்கவும் தோணாதா என்று தான் நினைத்தான்… பின், தேவ்விற்கு தெரியாதா.. அவன் பார்த்துப்பான் என்று விட்டுவிட்டான்… ஒரு இரண்டு வாரத்தில் தேவ் தேறி விட்டான்…


காலேஜ் அவன் வந்ததும் அவளும் உருகி விட வில்லை.. அவள் முதல் கேள்வியே, “தேவ் உனக்கு முழுசும் குணமாகிட்டுல? எங்களுக்கும் பரவி விடாதே? என்பது தான்…

அவனோ அவள் காயச்சல், ஊசிக்கு பயப்படுறா என்று நினைத்து கொண்டு.. “ இல்லா ஐஷு.. சரி ஆகிட்டு” என்று புன்னகை முகமாவே கூறினான்…

அப்டியே கடைசி வருடம் கடைசி செம்க்கு வந்தார்கள்…அது இரண்டு படங்களும் மீதி ப்ராஜெக்ட் இப்டி தான் இருந்தது…

ஆனால் இந்த ப்ராஜெக்ட் டைம் தான் லவர்ஸ்க்கு கொண்டாட்டம்… ப்ராஜெக்ட்னு சொல்லி வெளியே செல்லலாம்.. ஆனால் அவளுக்கு அப்டி இல்லை… தேவ், வெளியே கூட்டிட்டு போக மாட்டான்… ப்ராஜெக்ட் தான் கதி என்று கிடைப்பான்…

இப்படிபட்ட நேரத்தில்.. இவளும், இவள் நண்பர்கள் வர்ஷா மற்றும் நித்திலா எல்லாரும் சேர்ந்து தியேட்டர் போகலாம் என்றும் பிளான் பண்ணியிருந்தார்கள்.. கூடவே நித்திலா லவ்வரும் வருவதாக இருந்தது… பிரிண்ட்ஸ் மட்டும் போகலாம் என்று இருந்ததில் அவன் வருவது பிடிக்காமல் நித்திலாவிடம் ஐஷு கேட்டாள்..

“யே, நாம கேர்ள்ஸ் மட்டும் என்ஜோய் பண்ணலாம் தானே நினைச்சோம் இப்போ என்னடி உன் லவர்ஆஹ் வருவானு சொல்ற”

“இல்லா மச்சி, தனியா போனா மாட்டிப்போம்… அதான் மச்சி.. உனக்கு துணைக்கு வர்ஷா இருக்கால.. அவனை பார்த்து இரண்டு வாரம் ஆகுதுடி… அவனே படம் புக் பண்ணிட்டான்.. ப்ளீஸ் ஐஷு..”

“சரி என்னமோ பண்ணிதொலை” என்று விட்டால்…

மதியம் 12 மணி ஷோ… கிளம்பி போய் விட்டார்கள்…. எழும்பூர் பக்கத்தில் உள்ள தியேட்டர்… மதியம் என்பதால் கூட்டம் இல்லை…

நித்திலா லவர் பெயர் சதீஷ்.. அவனோ கார்னெர் சீட் தான் புக் பன்னிருந்தான்… கார்னெர்ல அவனும்.. இடது பக்கத்தில் நித்திலா… இவளுக்கு இடது பக்கத்தில் ஐஷு.. ஐஷு இடது பக்கத்துல வர்ஷா…
படம் ஆரம்பித்து சிறுது நேரம் ஆகியிருக்கும்… பக்கத்தில் நித்திலா நெளிவது தெளிவாக உணர முடிந்தது…

என்ன பண்ணிட்டு இருக்கா பக்கி… என்று திரும்பி பார்த்தாள்… சதீஷ் கை அவள் மார்பு மேலே இருந்து கசக்கி கொண்டு இருந்தது….
ஐஷுக்கு நெஞ்சே நின்று விட்ட நிலை.. அடி பாவி மகளே.. என்று திரும்பி வர்ஷாவை சுரண்டினாள்…

“என்னடி” வர்ஷா

“ஹே, இங்க நித்திய பாருடி.. அவன் அவளை என்னமோ பண்ட்ரான்…” என்று இவள் சொன்னதும் வர்ஷா திரும்பி நித்திலாவை பார்த்தாள்..

“ஹே, விடு விடு… லவர்ஸ் குள்ள இதுளெல்லாம் சகஜம்” என்று கூல்ஆஹ் சொன்னாள்…

“ஹ்ம்ம்” என்று சொல்லிவிட்டு.. படத்தை பார்த்தாள்….
திடிரென “ம்ப்ஸ்” என்ற சத்தம் கேட்டது… என்னவென்று திரும்பி பார்த்தாள்.. அவர்கள் இருவரும் இதழ்களோடு இதழ் பொருத்தி முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்…

இதுக்கு மேலே முடியாது பா.. இந்த சைடுயே பார்க்க கூடாது என்றும் கடிவாளம் இட்ட குதிரை போல திரையை மட்டுமே பார்த்தாள்….

தேவ், ஏன் என்கிட்டே இப்டி இல்ல என்று தோன்றமல் இல்லை.. ஒரு ஏக்கம் பரவுவதை தடுக்கவும் முடியவில்லை…..

ஒரு வழியாக படம் முடித்ததும் வெளியே வந்தார்கள்… சதீஷ் கிளம்பி விட்டான்.. வேலை இருக்கிறது என்று…

அவன் போனதும் இவர்கள் மூவரும் பக்கத்தில் இருந்த மால்க்குல் சென்றார்கள்…. மதியம் சாப்பிடவில்லை… எனவே, மாலில் புட் கோர்ட்க்கு சென்று பிடித்ததை வாங்கி சாப்பிட அமர்ந்தார்கள்…
வர்ஷா, “என்ன ஐஷு, படம் ரொம்ப நல்லா இருந்துச்ச்சு போல…நீ விழுந்து விழுந்து பார்த்துட்டு இருந்த” என்று நக்கலா கேட்டாள்…

அவளை முறைத்து விட்டு ஒண்ணும் சொல்லாமல் சாப்பிட்டாள்…
“என்னடி படம் நல்லா இருந்துச்சா?” நித்திலா கேட்டாள்..

“ஹ்ம்ம்” என்று அவளையும் முறைத்தால்…

“மேடம் எங்க படத்தை பார்த்தாங்க… சைடுல நீங்க ஓட்டுன படத்தை தானே பார்த்தாங்க”

“ஹையோ, ஐஷு அது வந்து..” என்று இழுத்து.. அவன் ரெண்டு வாரம் கழிச்சு பாக்கிறான்.. அதான் ஒரு வேகத்துல…

“அது சரி.. பாத்துமா.. அதே வேகத்துல குழந்தை வந்துட போகுது?”
“ஹே, அதுலாம் இல்ல.. சும்மா கிஸ் அண்ட் டச்சிங் டச்சிங்… அவ்ளோதான்” நித்திலா…

“ஹ்ம்ம், பார்த்தேன் பார்த்தேன்..”

“ஏன் ஐஷு, உனக்கு தெரியாதத.. நீயும் தானே லவ் பண்ற.. நீ பண்ணாததா நான் பன்னிருக்க போறேன்”

“ஏய், எங்களோடதுலாம் சைவ காதல்..”

“ஒரு முத்தம் கூட கிடையாதா அப்போ..” வர்ஷா ஆச்சரியமாக வினாவினால்…

ஐஷுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை… இல்லைனு சொன்னா நம்மள கீழாக பார்ப்பாளுகளோ என்று.. அது மட்டும் உண்டு” என்று கெத்தா சொன்னாள்…

“ஓஹ் ஹோ… சேரி சேரி..” என்று சிரித்து கொண்டார்கள்…

அவளுக்கும் தேவ்வை பார்க்க வேண்டும் போல் இருந்தது… எனவே அவனுக்கு மெசேஜ் பண்ணினால்.. னா ப்ராஜெக்ட் சென்டர் பக்கத்தில் இத்தனை மணிக்கு இருப்பேன்.. என்னை கூப்பிட்டு ஹாஸ்டல விடு என்று அனுப்பினால்… அவனும் சரி என்று சொன்னான்.. சில சமயம் இந்த மாதிரி உதவி செய்வான்…
சிறிது நேரம் உலாவி விட்டு கிளப்பினர்கள்… ஐஷுவோ.. தேவ் வரேன்னு சொன்னான்டி.. நீங்க கிளம்புங்க… நான் அவனோட வற்ரன்…

“ஓஹோ, கதை அப்டி போகுதா.. என்ஜோய் என்ஜோய்” என்று சொல்லிவிட்டு கிளப்பிவிட்டார்கள்…

இவளும்… ப்ராஜெக்ட் சென்டர்க்கு பஸ் ஏறி.. அதற்கு பக்கத்தில் ஒரு இடத்தில் காத்து இருந்தாள்.. அவனும் வந்து விடவே..
“தேவ், பீச் போலாம்… ரொம்ப கடுப்பா இருக்கு ப்ளீஸ் தேவ் வேண்டாம்னு சொல்லாத…”

“சரி எதோ கடுப்பு போலவே.. என்று அவனும் அவளை பீச்க்கு அழைத்து வந்தான்..”

அவள் ஒரு மறைவான இடம் தேடி அமர்ந்தாள்… போட்க்கு சைடு பக்கமாக அமர்ந்தாள்…

இவள் என்ன இங்க வந்து உக்காரரா.. அவ்ளோ இடம் வெளில இருக்கே என்று நினைத்து…

“ஐஷு, என்ன இங்க.. அதான் அவ்ளோ இடம் வெளில இருக்கே”
“இது கொஞ்சம் பிரைவசி இருக்குல்ல அதான்”

“பீச்க்கு வந்துட்டு என்ன பிரைவசி வேணும்” என்று சொன்னாலும் சிறிது இடம் விட்டு பக்கத்தில் அமர்ந்தான்…

கொஞ்சம்… அந்தி சாயும் வேளை… ரொம்ப இருட்டும் இல்லை வெளிச்சமும் இல்லை..

சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்கள்… அவன் பேசுனது எல்லாமே ப்ராஜெக்ட், வைவா மட்டுமே… அவளுக்கு இன்னும் கடுப்பு தான் வந்தது…

இவ்ளோ அழகா ஒரு பொண்ண பக்கத்துல வச்சுக்கிட்டு என்ன பேசிகிட்டு இருக்கான் மட பய.. என்று மனதில் திட்டி கொண்டு இருந்தாள்…

பின், அவனை பார்த்தாள்… பையன் லுக் மாறி… மீசை நன்றாக வளர்ந்து இருந்தது… மன்லி லுக் ஆக இருந்தான்…

சிகரெட் இப்டி எந்த பழக்கமும் இல்லாமையால்… உதடுகள் சிவப்பாக இருந்தது… அவனை முத்தமிட்டு… முத்தம் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சே ஆக வேண்டும் என்ற வெறியே இருந்தது அவளுக்கு…
இன்னும் இருட்ட ஆரம்பித்ததும்.. அவன் பிடரியை பற்றி இழுத்து அவள் இதழில் பொருத்தி கொண்டாள்… அவனுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை…

அவளுக்கும் முத்தமிட தெரியவில்லை… அவனுக்கு பொது வெளியில் இப்டி அவள் நடந்து கொள்வதும் பிடிக்கவில்லை…. அடித்த விட கூடாது என்று கவனமாக இருந்தான்…

அவளோ தப்பும் தவறுமாக முத்தமிட்டாள்… அவள் உதட்டுக்கு மேலே…
அவன் வலுகட்டாயமாக பிரித்து விட்டான்…

“ஐஷு, இது சரி இல்லை… வெளில இருக்கோம்.. போலாம் வா..” என்று அவன் அவ்ளோ கோவத்தை கட்டு படுத்தி கொண்டு சொன்னான்..

பின், விறு விறு வென்று நடந்தான் அவன் பைக் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்க்கு…

அவளும் அமைதியாக வந்தாள்… ஆனால் அவள் மனதில் இவனுக்கு ஏன் எந்த பீலிங்சும் இல்லை என்று மனதை போட்டு வாட்டியது…

தேவ்கோ.. அவன் எப்படியாவது பாடு பட்டு சுயமாக மேலே வந்து விட வேண்டும் என்கிற குறிகோள் மட்டுமே.. என்னைக்கிருந்தாலும் இவளை தானே கட்டிக்க போறோம் என்ற எண்ணம்….
இவளுக்கோ அந்த வயதுக்குரிய ஹோர்மோன் எண்ணங்கள்… இவனுக்கோ அந்த வயதுக்கும் மேற்பட்ட குறிக்கோள்….!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 33

இதோ ப்ராஜெக்ட் வைவா முடிந்து, இருந்த இரண்டு பரீட்சையும் முடிந்தது. இனி ரிசல்ட் வருவது மட்டுமே பாக்கி இருந்தது…
தேவ், கேம்பஸ் இன்டெர்வியூஒன்றில் செலக்ட் ஆகியும் இருந்தான். சும்மா தான் அட்டென்ட் பண்ணி இருந்தான்… அவன் நிலை எவ்வாறாக இருக்கு என்று தெரிந்து கொள்ளவே அதில் கலந்து கொண்டான். அதில் வெற்றியும் கிட்டியது. ஆனால் கிடைத்ததும் மறுத்தும் விட்டான். நேர விரயம் செய்ய விருப்பம் இல்லை. வேற யாருக்காவது கிடைக்கட்டும் என்று மறுத்தான்…

ஏற்கனவே, லண்டனில் உள்ள ஓர் பேர் பெற்ற யூனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணிருந்தான்… அது கிடைத்து விட்டால் அதை வைத்துக்கொண்டு விசா வாங்கி பறந்துவிட வேண்டிய வேலை மட்டுமே பாக்கி…

வருண்க்கு குடும்ப சூழ்நிலை காரணமாய் மேலே படிக்க வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் கேம்பசில் செலக்ட் ஆகியிருந்தான். அவன் சூழ்நிலை கருதி அவன் வேலை பார்க்கட்டும் என்று முடிவு எடுத்தார்கள்…

ஹரிஷ் அண்ட் தேவ் மட்டுமே லண்டன் யூனிவர்சிட்டிக்கு அப்ளை பன்னிருந்தார்கள்….
ஐஷுவிற்கு, கேம்பசில் எதுவும் கிடைக்கவில்லை.. தேவ் லண்டன் செல்வான் ஒரு வேளை கிடைத்தால் என்றும் அறிவாள்… அதன் பொருட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்… அவளுக்கு மேலே படிக்க விருப்பம் இல்லை. ஆனால் அவன் வெளிநாடு செல்வதால் இவள் நேரத்தை ஓட்டுவதற்கு படிக்க வேண்டிய கட்டாயம்…

கடைசி செமஸ்டர் தேர்வு முடிவும் வெளியாயின. அதிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான்… அதை நகல் எடுத்து அதையும் யூனிவர்சிட்டிக்கு அனுப்பி வைத்தான்.. எப்பிடியும் ஒரு மாதம் ஆகிவிடும் செலக்ட் ஆக..

இந்த சமயத்தில் தேவும் ஐஷுவும் மீட் பண்ணி கொண்டார்கள்.. அவன் அடுத்து என்ன பண்ண போறான் என்பதை தெளிவாக கூறினான்.. கூறிவிட்டு, “ஐஷு நீ என்ன பண்ண போற அடுத்து” இவன் லண்டன் யூனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணும் போது அவளிடமும் ஒரு வார்த்தை கேட்டிருந்தான். அதற்க்கு அவளோ எனக்கு அங்க விருப்பம் இல்லை தேவ்.. அங்க போனா படிக்க தோணாது, ஊரை சுத்த தான் தோணும்.. நீ போய்ட்டு வா என்றும் கூறிவிட்டாள்.. அவனும் மேற்கொண்டு கட்டாய படுத்தவில்லை.

“நானும் மேலே தான் படிக்கணும் தேவ். இதே காலேஜ்ல பண்ணலாம்னு இருக்கேன்”

“சரி, நல்லது தான்.. நான் லண்டன் போய்ட்டு வந்ததும்.. நிறுவனம் தொடங்கிடுவேன்.. தொடங்கியதும் ஏன் வீட்ல சொல்லி உன் வீட்ல பேசுறேன்.. அதுக்கு அப்புறம் அவங்க கல்யாணத்துக்கு தேதி குறிக்கட்டும்.. ஓகேவா?” என கேட்டான்..

“சரி தேவ்” என்றும் சொன்னாள்…

அவளுக்கு இப்பொழுதும் அவனை முத்தமிட தோன்றியது. ஏனென்று தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தாள் யாரும் அவ்ளோவாக இருக்கவில்லை.. இது தான் தக்க சமயம் எண்றெண்ணி நுனி காலால் மேலேழும்பி அவன் இதழிலில் முத்தமிட்டாள்… அவனுக்கோ இப்போவும் ஒன்ற முடியவில்லை. இவள் முத்தமிட்டு கொண்டே அவனை உணர முயற்சித்தாள். பொதுவாக இருக்கும் உணர்ச்சிகள் கூட அவனுக்கு இல்லையோ என்று தோன்றியது. அவன் கை அவள் மேல் படவில்லை, இறுக்கி அனைக்கவில்லை, மேலும் அவள் இதழ்களை தேடவில்லை, கூடவே அவன் ஆண்மையும் எழவில்லை.. ஏன் இப்டி என்றுதான் தோன்றியது.. ஒரு பெண்ணை பார்த்தால் அதுவும் முத்தமிட்டால் பொதுவாக தோன்ற கூடிய விஷயமே அவனுக்கு இல்லை என்றே தோன்றியது. சலிப்பை ஏற்படுத்தியது… அவள் நிறுத்தும் முன்பே தேவ் விலக்கி இருந்தான்.

“என்ன ஆச்சு ஐஷு.. ஏன் இப்டி நடந்துக்குற”

“அது நான் கேக்கணும்.. ஏன் உனக்கு என் மேலே எதுவும் தோணல..”

“என்ன தோணனும்”

“இவ்ளோ அழகான பொண்ணு பக்கத்துல இருக்கேன்ல. கட்டி புடிக்கணும் இப்டில ஏன் தோணல”

“ சீ ஐஸ்வர்யா. அழகு அப்டினா வெளி தோற்றத்தில்லை உள்ளான கேரக்டர்ல தான் இருக்கு.. அதுவும் இல்லாம எனக்கு னா சாதிக்கணும்னு வெறி இருக்கு.. நமக்கு காலமும் இருக்கு”

“ஓஹ், அப்போ நான் அழகு இல்லனு சொல்றியா?”

கோவமா வந்தது அவளுக்கு


“அழகு அப்டினா என்னனு சொன்னேன்.. உன்ன எதுவும் சொல்லல.. நீ சொல்றது வச்சு பார்த்தா அழகான பொண்ணு யாரு பக்கத்துல வந்து நின்னாலும் கட்டி புடிச்சிடணுமா?”

“நான் அப்டி சொல்லல.. நீ திசை திருப்புற தேவ்.. சரி அத விடு. னா கிஸ் பண்ணும் போது கூட உனக்க்கு எதுவும் தோணல தானே தேவ். நான் என்ன கேக்குறேனு உனக்கு புரியும் தேவ். இதுக்கு பதில் சொல்லியே ஆகணும்”

அவள் சொல்லுவது புரிகிறது நீ ஆம்பளையா இல்லையானு கேக்குறா என்று. “இதோ பாரு எனக்கு இப்போ இதுல உடன்பாடு இல்லை. அதுக்குன்னு காலங்கள் இருக்கு. உன்னால புரிஞ்சுக்க முடியும் அப்டினா புரிஞ்சுக்கோ இல்லை என்னவேணும் என்றாலும் நினைச்சுக்கோ.. அது எனக்கு கவலை இல்லை..” இதுவெல்லாம் காரணம் என்று காதலில் பின் வாங்கவும் விருப்பமில்லை..

இந்த மாதிரி யோசனையை விட்டேறி.. தேவை இல்லாத சிந்தனை.. இப்போ படிப்போம்.. நாம கமிட் ஆகிட்டோம் கல்யாணம் பண்ணுவோம் அப்புறம் இதவெல்லாம் பார்ப்போம் சரியா… என்று மிக பொறுமையுடனே கூறினான்..

அவளுக்கு இதற்கு மேல் எப்படி கேட்பது என்று புரியவில்லை “ சரி என்று” விட்டுவிட்டாலும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது..

இப்படியாக இரு மாதம் சென்ற நிலையில்.. அவன் அன்றைக்கு லண்டன் கிளம்புவதாக இருந்தது.. ஈவினிங் 5 மணிக்கு பிலைட்.. ஐஷுவிற்கு அன்றைக்கு தான் காலேஜ் ஓபன் அதனால் அவளால் ஏர்போர்ட்க்கு செல்ல முடியவில்லை.. எனவே அவன் அவளை பார்க்க அவள் லஞ்ச் டைமில் வந்திருந்தான்.. அவளும் அவனை பார்க்க வந்தாள்..

“ஐஷு, இன்னிக்கு கிளம்புறேன்.. நல்லா படி வேற ஏதும் யோசிக்காத.. பத்திரமா இருந்துப்ப தானே”

“ஹ்ம்ம், ஆல் தே பெஸ்ட்”

“தேங்க்ஸ், ஐஷு.. எதுனாலும் கூப்பிடு.. நான் அங்க போனதும் கூப்பிடுறேன்.. சரியா” என்று இருவரும் விடை பெற்று கொண்டார்கள்…

அவனும் அன்றைக்கே கிளம்பினான்… வழி அனுப்ப ஜெயாவும், கிருபாவும் வந்தார்கள்…

அவனும் அங்கே சென்றதும்.. எல்லாருக்கும் சொல்லி விட்டு ஐஷுவிற்கும் கூறினான்…

வாரம் ஒரு முறை பேசிகொள்வர்… நலம் விசாரிப்புகள், படிப்பு விடயம் மட்டுமே இடம் பெற்றிருக்கும்… இப்படியே இரு வருடம் சென்றது… அவனும் முடித்தவுடன் லண்டனில் இருந்து இந்தியா வந்தான்… வந்ததும் முதல் வேலையாக ஒரு கிளையேண்ட் பிடித்தான்… இடம் எல்லாம் பார்க்கவில்லை… ஏன்னென்றால் கையிருப்பு அப்பொழுது கைவசம் இல்லை… முதலில் சிறிய அளவு ஒர்க்பிளேஸ் தான் வாங்க வேண்டும் என்று இருந்தான்… லாபத்தை வைத்து விரிவு படுத்த வேண்டும் என்று எண்ணினான்…

முதல் வருடம் அயராது உழைத்தார்கள்… எவ்ளோ உழைத்தும் பயன் என்னவோ சிறிதளவு தான் இருந்தது… சில சமயம் விட்டு விடலாமா என்றும் தோன்றியது உண்டு… இருந்தாலும் அதை ஒதுக்கி விட்டு வேலையில் கவனம் வைத்தான்..

அவன் இந்தியா திரும்பிய சமயத்தில் இவளும் மேற்படிப்பு முடித்திருந்தாள்….


அடுத்து என்ன பண்ணுவது என்று யோசனையில் தான் நாட்களை கழித்தாள்..


ஒரு முறை அவள் நண்பிகளுடன் உணவு விடுதிக்கு சென்றிருந்த நேரம்.. அவளின் இன்னொரு அத்தை பையனான வினோத்தை சந்திக்க நேர்ந்தது. வினோத், சோபனாவின் அண்ணன் பையன். இவளை விட இரு வயது மூத்தவன். எம். பி. எ பயின்று நகை கடை தொழில் பண்ணுகிறான். நகை தொழில் அவர்களின் வம்சத் தொழில். அவனின் ஊர் கன்னியாகுமரி, அங்கே பல கிளைகளில் அவர்களின் நகை கடை உள்ளது.

இவன் மேலும் விரிவு படுத்துகிறேன் என்று சென்னையிலும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறான் கடந்த இரு ஆண்டுகளாக… அதுவும் இல்லாமல் வினோத்திற்கு ஐஸ்வர்யா மேல் விருப்பம் உண்டு. ஆனால் கூறியது இல்லை. எதேச்சையாக பார்க்க நேரவும் அவளை எப்படியாவது தன்னை விரும்ப வைக்க வேண்டும் என்றும் உத்வேகம் வந்தது..

“ஹலோ ஐஷு, உன்ன பார்ப்பேன்னு நினைக்கல.. எப்படி இருக்க. என்ன பண்ற?”

“வினோ அத்தான், நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பிசினஸ் எப்படி போகுது. நான் இப்போ தான் படிச்சு முடிச்சேன். வேலை தேடிட்டு இருக்கேன்”

“ஹ்ம்ம், எனக்கு நல்லா போகுது. நீ எம். பி. எ. தானே இப்போ முடிச்ச?”

“ஆமா, அத்தான், வேலை ஒண்ணும் கிடைக்க மாட்டிக்குது” சலிப்பாக சொன்னாள்..

“உனக்கு கிடைக்காதது ஒரு வகையில நல்லது தான்” சந்தோசமா கூறினான்..

“என்ன? என்ன நல்லது.. நான் வேலை பாக்க வேண்டாமா” சிறிது கோவமும் எட்டி பார்த்தது..

“அப்டி சொல்ல வரல.. எனக்கும் ஒரு ஹஃச். ர் தேவை படுது.. இப்போ கடைல நிறைய பேர் வேலைக்கு எடுத்திருக்கேன்.. ஒருத்தங்க வேலைய விட்டா அவங்களுக்கு பதிலா வேற யாராச்சும் எடுக்க.. அதற்குரிய வெப்சைட்ல போட்டு அது மூலமா ஆள் எடுக்க..கூடவே சம்பளம், பொண்ணுகளுக்கு ஏதாச்சும் ப்ரோப்லேம்னா கம்பளைண்ட் பண்ண..இந்த மாதிரி பாக்எண்டுல மைண்டைன் பண்ண ஒருத்தங்க தேவை பட்றாங்க… அது ஏன் நீ வர கூடாது”

“நானா.. ஏனக்கு எந்த முன்அனுபவம் கிடையாது.”

“அது பரவால்ல.. வந்து பாரு. ஒரு முனு மாசம் ட்ரை பண்ணு.. செட் ஆகலானு நினச்சா.. நீ தாராளமா வேற பாரு..”.

ஏதோ இது கொஞ்சம் நல்லா இருக்குமோ என்று தோணவும் சரி என்று சொல்லி விட்டாள்..

“சரி ஐஷு, நாளைக்கு ஒரு போர்மல் இன்டெர்வியூ வைக்கிறேன்.. வந்துடு” என முகவரி குடுத்து விட்டு அவள் நம்பரையும் வாங்கி கொண்டு கிளம்பி விட்டான்…

இவளும் அவள் நண்பிகளுடன் கிளம்பினாள்… அடுத்த நாள் காலை அவன் குடுத்த முகவரிக்கு சென்றாள்.. முதல் ரவுண்டு போர்மலிட்டிக்காக மேனேஜர் எடுத்தார்.. பின், வினோத் எடுத்தான்.. ஏற்கனவே முடிவு செய்ய பட்ட ஒன்று.. எனவே, அன்றைக்கே வேலையை ஆரம்பித்தார்கள்.. அவன் சிலது எப்படி வேண்டும் என்று கேட்டான். அதை எப்படி செய்யலாம் என்றும் சொல்லி குடுத்தான்… இவள் அதை செயல் மட்டுமே படுத்த வேண்டும்.. ஒரு வாரம் கத்துக்கிட்டதை செயல் படுத்தினாள்.. எதாவது தவறு வந்தாலும் வினோத் மிக பொறுமையாக கையாண்டான்.. அவன் எதுவும் கோவ படாமல் சொல்லி குடுத்துதற்காகவே மெனக்கெட்டு வேலை பார்த்தாள்..

அவள் வேலை அங்கே சேர்ந்து ஒரு வாரம் கழித்து தான் தேவ்விடம் தெரிவித்தாள்.. அவனுக்கும் அது சரி என்று பட்டதால் எதுவும் மறுப்பு கூறவில்லை..
இப்படியாகதான் அந்த ஒரு வருடமும் கழித்தார்கள்..


சொல்ல போனால் அவர்கள் பார்த்து கொள்வதே அரிதாக இருந்தது.. தேவிற்கு இரண்டாவது வருடமும் சரியாக போகவில்லை.. லாபம் என்ற ஒன்று இருக்கவில்லை… போட்ட முதல்லையும் எடுக்க முடியவில்லை… அப்போதைக்கு வாழ்க்கை நடத்த மட்டுமே லாபம் வந்தது.. இந்த வருடத்தில் வருணும் இணைந்து கொண்டான்..

வேலையை வைத்து வாழ்க்கைகை எடுத்துட்டு போக வேண்டாம் என்றும் தேவ்விற்கு இப்பொழுது தோன்ற ஆரம்பித்தது.. வாழ்க்கை நடத்த போதுமானது இருக்கு என்பது தான் அவனுடைய இன்றைய நிலை.. அதனால் வீட்டில் அவனுடைய காதலை சொல்லிவிடலாம் என்று யோசித்து கோவைக்கு அந்த வரமே கிளம்பினான்..

இதை ஐஷுவிற்கு சொல்ல தோணவில்லை.. எல்லாம் ஒழுங்கானதும் அவளை ஆச்சிரிய படுத்தலாம் என்கிற எண்ணம்..

அதே வீக் எண்டில், வினோத்தோ ஐஷுவை டின்னெர்க்கு போகலாம் என்று அழைத்து சென்றான்..


அவளுக்கு பிடித்ததை வாங்கி தந்தான்.. சாப்பிட்டு முடித்தது, அவளுக்கு பிடித்த பிரவுனி ஆர்டர் பண்ணினான்… அது வர நேரம் ஆகவே.. இது தான் தக்க சமயம் என்று அவளிடம் பேச்சு குடுக்க ஆரம்பித்தான்…


“ஐஷு, லவ் பத்தி என்ன நினைக்குற?”

“அத பத்தி நினைக்க என்ன இருக்கு அத்தான்.. ஒண்ணும் தெரியல”

“சரி, னா சுத்தி வளைச்சி பேச விரும்பல.. நாம ஏன் அடுத்த நிலைக்கு போக கூடாது?”
அவன் கேட்டதும் அவள் கண்கள் இரண்டும் விரிந்தது..

“னா கேக்குறது புரிதா ஐஷு”
புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு என்று தலையை நாலா பக்கமும் ஆட்டினாள்..

“ ஐ லவ் யூ ஐஷு.. லவ் இப்போ வந்தது இல்லை.. எனக்கு உன்ன முன்னாடி இருந்தே புடிக்கும்.. பட் சொல்லலே.. உன்ன லாஸ்ட் இயர் பார்த்ததும் ஏன் கூட இருக்கனும்னு நினைச்சேன்.. அந்த சமயத்துல உன் படிப்பும் ஏன் தேவையும் நேர் கோட்டுல வந்ததும்.. அந்த வாய்ப்ப விட மனசு இல்லை… எனக்கு நீ வேணும் லைப் லோங் ஐஷு” என மனதில் உள்ளதை கொட்டினான்…

“அத்தான்.. னா கமிடெட்” தயங்கி கூறினாள்.

“ ஓஹ் கமிடெட் ஆஹ்” என சுணங்கினாலும் மேலும் கேட்டான் “பட் நான் ஒரு நாளும் ஒரு லவ் பண்ற பொண்ணு நடந்துக்குற மாதிரிலாம் நீ இருந்தது இல்லையே.. பையன் யாருனு சொல்லுவியா இல்லை அதுவும் சஸ்பென்ஸ் தானா?”

“அத்தான், சஸ்பென்ஸ்லாம் இல்லை.. எனக்கே கொஞ்சம் குழம்பமா தான் இருக்கு… ஜெயா அத்தை பையன் தேவ்..”

“ஓஹ் அவனா.. அவனுக்கு லவ்லாம் வருமா.. அவன் எதோ கோல், அப்டி இப்டினு சுத்துறவன் ஆச்சே”

“அது அத்தான்.. சும்மா ஃபன்க்காக அவனை லவ் பண்ண வைக்கிறேனு காலேஜ் செகண்ட் இயர் கிட்ட ஆரம்பிச்சது… அப்புறம் னா தான் ப்ரொபோஸ் பண்ணேன்.. அக்ஸ்ப்ட் பண்ணான்… அப்டியே போகுது”

“ஏன் சலிப்பா சொல்ற”

“அவனுக்கு லவ் பீல் அப்டினு ஒண்ணே இல்லை. னா சொன்னேன் ஆல்சோ எந்த பிரச்சனை வராதுன்னு அக்ஸ்ப்ட் பண்ணிக்கிட்டான்.. ஒரு நாள் கூட அவனும் லவ் பண்றானு உணர வச்சது இல்லை..”

எப்போ நாம நமக்கானவங்கள இன்னோருத்தர் கிட்ட விட்டு குடுக்கோமோ… அப்போவே அந்த ரிலேஷன் தோற்க ஆரம்பிக்குது.. இங்கே ஐஷுவிற்கும் அப்படி தான்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 34

“கேக்குறேனு தப்பா நினைக்காத.. அப்புறமும் நீ ஏன் பிரேக் அப் பண்ணிக்கல?” வினோத்

“அது தான் சொல்றேன் எனக்கே குழப்பமா இருக்கு..”

“இதுல குழம்ப என்ன இருக்கு.. ரெண்டு கையும் தட்டுனா தான் சத்தம் வரும்… கேள்வி பட்ருக்கல.. ஒருத்தர் மட்டுமே எபர்ட் போட்டுட்டே இருக்க முடியாது.. அது இப்போ சரியா தெரியலாம்.. பட் ஒரு கட்டத்துல பெரிய பிரச்சனை ஆகும்.. கல்யாணம் ஆகி பிரியருதுக்கு.. இப்போ சரி வரலைனா பிரிறது பெட்டெர்”


அவன் சொல்றது புரிகிறது தான்.. ஆனால் தேவ் நினைத்தால் தான் யோசனையாக இருந்தது..

“ஹ்ம்ம்.. அவன் கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கிற டைய்ப்.. கமிடெட் அப்டினா கல்யாணம் தான் பண்ணனும்.. இடைல பிரேக் பண்ண விரும்ப மாட்டான்”

“இப்டி நிலையா நிக்க முடியாதுல.. சரி உனக்கு அவன் வேணுமா வேண்டாமான்னு நீ தான் முடிவு எடுக்கணும்.. ஒரு வாட்டி முடிவு எடுத்துட்டா அதை செயல் படுத்தனும்.. ரொம்ப யோசிக்க கூடாது”

“அத்தான்.. எதோ ஒரு வேகத்துல காதலிச்சேன் காதலிக்க வச்சேன்.. ஆனா அப்டி வச்சது இப்போ எனக்கே புடிக்கல.. கமிட் பண்ணிகிட்டோம் அவ்ளோதானே தவிர உங்கள்ட எப்படி சொல்ல… அவன் எதுக்குமே லாயிக்கில்லை… எனன அவனே வந்து வெளில கூப்பிட்டு போக மாட்டான்.. ஆசையா பேச மாட்டான்.. கைய கூட புடிச்சது இல்லை.. சில சமயம் அவன் பையன் தானானு சந்தேகம் தான் வருது..”

“பெட்டெர் அவனை பிரேக் அப் பண்ணு.. இது என்னுடைய அபிப்ராயம்.. ஆனா முடிவு உன் கையிலே”

“எனக்கு அவன் கூட அடுத்த லைப் நினைச்சு கூட பார்க்க முடில.. வேணாம்னு தோணிருச்சு.. பட் அவன் கிட்ட என்ன சொல்லி புரிய வைக்கனு தெரில.. பட் கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும்”

“சரி.. உனக்கு புடிச்ச மாதிரி நடக்கும்”


“ஆனா அத்தான் நீங்க இப்டி சொல்லுவீங்கனு நினைக்கல..”

“ஹ்ம்ம் இனிமேட்டு என்னையும் கொஞ்சம் நினைச்சு பாரேன்”

“அத்தான்” என சிணுங்கினாள்…

“இல்லை.. இடம் இருக்கு அதுக்குள்ள நுழைஞ்சுடலாம்னு இல்லை.. எனக்கு உன்ன மட்டும் தான் இப்போ வரைக்கும் புடிக்குது.. உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. டிரஸ்ட் மீ பேபி.. கன்சீடர் பண்ணு.. நீ இன்னோருத்தன லவ் பண்ண அப்டி இப்டி எதுவுமே கேக்க மாட்டேன்.. பஸ்ட் ஈஸ் அல்வய்ஸ் பாஸ்ட்..இதுல நீ கண்டிப்பா நம்பலாம்”

“அத்தான், எனக்கு கொஞ்சம் டைம் வேணும். யோசிக்கிறதுக்கு..”

“கண்டிப்பா டைம் எடுத்துக்கோ”

அதற்குள் பிரவுனி வந்து விடவே. சாப்பிட்டு கிளம்பிவிட்டார்கள்..

இங்கோ, தேவ் வீட்டுக்கு கிளம்பி காலையில் வந்தடைந்தான். வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தான்… காலையில் சாப்பிட்டு முடித்ததும். ஜெயாவையும், கிருபாவையும் ஹாலில் நிறுத்தி வைத்தான்…

“அப்பா கொஞ்சம் பேசனும். இங்க உக்காருங்க. அம்மாவை கூப்பிட்டு வரேன்” என ஜெயாவை அழைக்க சென்றான்…
ஜெயாவும் வந்து விடவே..

“மா, ப்பா.. னா ஒரு பொண்ண விரும்புறேன்”
கிருபாவிற்கோ ஆச்சர்யம். இவனை பற்றி அறிந்ததால்.. இவனுக்க்கு லவ் எல்லாம் வருமா என்று!

ஜெயாவிற்கு சந்தோசம் தான்.. அவர்களும் காதல் திருமணம் தான்.. அதனால் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது அவர்களிடம் இல்லை. அதுவும் தேவ் லவ் பண்றான் என்பது கேட்கவே நன்றாக இருந்தது அவருக்கு.. ஏன்னென்றால் அவன் எப்பொழுதுமே படிப்பு லட்சியம் என்றே இருப்பவன்..

“பொண்ணு, ராபர்ட் மாமா பொண்ணு.. ஐஸ்வர்யா”

இருவருக்கும் திகைப்பு.. ராபர்ட் பத்தி அறிந்தவர்கள்.. கொஞ்சம் பணப்பேய்.. ஆனால், அவர் பொண்ணும் அப்டி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே.. அதுவும் அவள் அழகான பொண்ணு.. படித்த பெண்.. அவர்களுக்கு விருப்பமே..

ஜெயாவே ஆரம்பித்தார்.. “ஹ்ம்ம், நீ ஒரு பொண்ண விரும்புறனு சொல்றது எங்களுக்கு ஆச்சரியம் தான்.. உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை.. ராபர்ட் கொஞ்சம் பணத்தாசை புடிச்சவர்.. அதுக்காக அவர் பொண்ணும் அப்டி இருப்பானு சொல்ல வரல.. ஆனா உனக்கும் சிலது தெரிஞ்சுருக்கணும்னு நினைக்கிறேன்..”

“ஹ்ம்ம் புரிதும்மம்மா.. அவ அப்டி இல்லை… அவளுக்கும் ஏன் மேல விருப்பம் இருக்கு..”

“சரிப்பா, இப்போ நீ என்ன நினைக்குற.. எங்கள்ட இருந்து என்ன எதிர் பாக்குற” கிருபா தான் கேட்டார்..

“அவங்க வீட்ல பொண்ணு கேக்கணும் பா. நா இன்னும் பெருசா வந்துட்டு தான் கல்யாணம் பண்ணனும்னு நினச்சேன்.. பட் அது நடக்க இன்னும் நேரம் எடுக்கும்.. என்னைக்கா இருந்தாலும் அவா தான் என் மனைவி அதான் இப்போவே கல்யாணம் பண்ணா என்னனு தோணுச்சு..”

“உன்னுட இந்த வயசுல நாங்களும் திருமணம் பண்ணவங்க தான்.. சரி.. பேசி பார்ப்போம்..” “ஜெயா, முதல்ல அத்தை கிட்ட சொல்லு.. அத்தை மூலமாவே முதல் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார் கிருபா..

உடனே அதை செயல் படுத்தினார்..ஜெயா.. அவருக்கு தன் மகன் விரும்பிய பெண் என்பதால் சீக்கிரமாக திருமணம் வைக்கவே விரும்பினார்..

மரகதமும், அன்றைக்கே ராபர்ட் கிட்ட பேச சென்றார். ராபர்டும் லவ்க்கு எதிரி அல்ல. பணம் இருக்குதா என்று மட்டுமே பார்ப்பவர்..

ஐஸ்வர்யா, தேவ்வை விருப்புகிறாள் என்று தெரியும்.. அவள் அவன் லண்டன் செல்லும் போதே ராபர்ட்ட்டிடம் கூறினாள்.. தேவ்வை பிடித்திருக்கிறது என்று.. அவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.. லண்டன் செல்கிறான்.. கண்டிப்பாக நல்லா சம்பாதிப்பான் என்று நினைத்து மறுக்கவில்லை. இப்பொழுது மரகதம் கேட்கவே.

மகளுக்கு பிடித்திருக்கு என்று அறிந்ததால் மட்டுமே சரி என்று சொன்னார்..ஆனாலும் கூட, ஒரு வருத்தம் உண்டு.. அவன் ஒன்றும் பெரிதாக சம்பாதிக்கவில்லை என்று. கூடவே மாப்பிளை வீட்டில் இருந்து தானே தேடி வந்து பெண் கேட்கிறார்கள் என்று பெருமிதம். இப்டி ரெண்டுகிட்டான் மனசில் சரி என்று சொன்னார்..
மரகதமும், இந்த மாதத்தில் ஒரு நாளில் திருமணம் வைத்து விடலாம் என்று யோசனை கூறவே. ஜெயா, கிருபா, தேவ் சம்மதித்தனார். இன்னுமே தேவ், ஐஷுவிடம் கூறவில்லை.

மரகதம் கூறிய நாளில், ராபர்ட்டும் சரி என்று சொன்னார். பின், தேதி முடிவு ஆனதும்.. ராபர்ட் மகளிடம் பேச போன் எடுத்தார்.

“ஐஷுமா, எப்படி இருக்கிற”

“நல்லா இருக்கேன் டாடி. நீங்க?”
“நல்லா இருக்கேன் ஐஷு. நீ ஏன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லல. தேவ் வீட்ல இருந்து பொண்ணு கேக்க வருவாங்கனு. நீ விரும்புறேன் சொன்ன. ஆனா இத சொல்லலயேடா”

“தேவ் வீட்ல என்னைய கேட்டாங்களாப்பா. தேவ் என்கிட்ட எதுவுமே சொல்லலப்பா. நீங்க சரினு சொல்லிட்டிங்களா?”

“நான் என்னைக்கு ஐஷு உனக்கு மறுப்பு சொல்லிருக்கேன்”

இவளுக்கும் என்ன சொல்வதே என்றும் தெரியவில்லை. அவன் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டாள். அன்றைய தினம் தான். அவன் இவ்ளோ விரைவாக கேட்பான் என்று நினைக்கவில்லை. அப்பாவிடம் பேசுவதை விட தேவ்விடம் பேசலாம் என்று நினைத்தாள்..

“சரிப்பா,” என்று வைத்துவிட்டு. தேவிற்கு அழைப்பு எடுத்தாள்..

அவன் எடுத்ததும், “ஏன் தேவ் என்கிட்ட சொல்லாம செஞ்ச”

புரிந்து விட்டது. எதை பற்றி கேக்கிறாள் என்றும். “ஏற்கனவே நாம முடிவு பண்ணது தானே. உனக்கு சர்பிரைஸ் ஆஹ் தானே இருக்கு”

ஹ்ம்ம்க்கும் ரொம்ப பெரிய சர்பிரைஸ்.. யாருக்கு வேணும். “தேவ் கொஞ்சம் பேசணும்”

“சொல்லு ஐஷு”

“நீ உன் கம்பெனி கொஞ்சம் நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம் தானே கல்யாணம்னு சொல்லியிருந்த.. அப்புறம் ஏன் உடனே பேசிட்டே”

“அது ரொம்ப டைம் எடுக்கும் ஐஷு.. இப்போ கைக்கு வர்றதே போதும்னு தோணுச்சு. தோணுனதை செயல் படுத்திட்டேன்”

“தேவ், எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்”

“ஏன் வேண்டாம். காசு பத்தாதுனு நினைக்கிறியா?”

“நா அப்டி நினைக்கல. எனக்கு இப்போ வேணாம்னு தோணுது”

“ஏன்” தேவ்

“ஏன்னு தெரியாது.. எனக்கு வேண்டாம்” மிக மிக அழுத்தமாய் கூறினாள்.

“இப்போ வேண்டாமா எப்போவுமே வேண்டாமா?”

“தெரியாதுனு சொல்றேன்ல தேவ், நீ பேசுனது நீயே நிறுத்து”

“முடியாது.. நா என்னைக்கும் பின் வாங்க மாட்டேன். “கெட் ரெடி டூ மார்ரி மீ”” என்று வைத்து விட்டான்..

கல்யாணம் என்று சொன்னதும் பயப்படுகிறாள் என்றே நினைத்தான். கல்யாணம் பண்ணி விட்டாள் சரி ஆகிடும் என்று அவள் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..
அவளுக்கோ ஆத்திரமாக வந்தது. அவள் யோசித்து பார்க்கும் போது தேவ்வை விட வினோத் சிறந்தவனாக தோன்றினான். அவளை தாங்கிய விதம் ஈர்த்தது. அவள் ஒரு நாள் அவனை சந்திக்கவில்லை என்றால் அவன் தேடிய விதம் பிடித்தது.. இப்டி எல்லாவற்றிலும் அவளுக்கு பிடித்தவனாக அவன் இருந்தான்.. தேவ்வுடன் திருமணம் ஒவ்வாமையை குடுத்தது..

உடனே அதை வினோத் க்கு தெரிய படுத்த வேண்டும் என்று நினைத்தாள்… நாளைக்கு நேர்ல பேசலாம் என்று ஒத்தி போட்டாள்.. சிறிது நேரம் சென்றுயிருக்கும்.. வினோத், அவளுக்கு கால் செய்து, ஒரு முக்கியமான வேலை உடனே துபாய் கிளம்புறேன், வர ஒரு வாரம் ஆகும் என்று கிளம்பி சென்றான்.

அவனிடம் இப்போ பேச வேண்டாம் என்று மேலும் தள்ளி போட்டாள்.. அவன் இல்லாத போது தான் புரிந்தது அவனை எவ்ளோ மிஸ் பண்ணுகிறோம் என்று.. உடனே வினோத்தை லவ் பண்றேன் என சொல்லுவதும் அபத்தமாக பட்டது. ஆனால் கண்டிப்பாக தேவ் வேண்டாம்.
 
Status
Not open for further replies.
Top