ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிலு சிலு தென்றலாய் வந்தவளே - கதை திரி

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6

கல்யாணம் முடிந்தாலும் பார்க்கவிற்கு மனதில் சிறு உறுத்தல் இருக்கத் தான் செய்தது.. அவன் எதிர்பார்த்தது, நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து, ஊர் உறவுகள் கூடி, சொந்தபந்தங்கள் வாழ்த்தோடு
அனைவரின் நல்லாசியுடன் தன்னவளின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைத்தான்...

ஆனால் கடத்தி வற்புறுத்தி தனக்குப் பிடித்தமா?? என்றுக் கூட கேட்காமல் நடந்த திருமணத்தை நினைக்க நினைக்க வேப்பங்காயாய் கசந்தது...

ஆனால் அவனிற்கு நேர்மாறாக ஊர்மிளாவோ வானத்தில் பறக்காத குறையாய் இருந்தாள்.. நடக்குமா?? நடக்காதா?? என நினைத்த திருமணம் நடந்தே விட்டதே?? வேறென்ன வேண்டும்??.. தன் அத்தான் தனக்கு மட்டுமே என்ற எண்ணமே அவளுக்கு மனசெல்லாம் பூரிப்பாய் இருந்தது..

அவளின் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்தவனுக்கு ஏனோ தன் விருப்பமின்மையே காட்ட மனதில்லை.. கல்யாணம் எப்படி நடந்தாலும் ரிசப்ஷனை கிரண்டாக நடத்த வேண்டுமென தீர்மானித்தான்..

"வாழ்வில் நாம் கடந்து சென்ற நொடிகளை பற்றி வருத்தப்படுவதை விட, இனி வரும் நொடிகளை அனுபவித்து வாழ்வதே சால சிறந்தது" என்ற கொள்கையுடையவன் பார்க்கவ்...

திவ்யாவிற்கு தான் தோற்றுவிட்ட கோபம் மனதில் இருந்தாலும்.. அவர்களின் வாழ்க்கையில் நுழைய வேண்டும்.. இரண்டாவதாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை.. இவனை விட்டால் வேறொருவன் தன் அழகில் மயங்கி வருவான் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.. அதனால் இருவரையும் முறைத்து விட்டு வெளியேறி விட்டாள்..

மனோரஞ்சனுக்கு காயத்ரியிடம் தோற்றதை ஏற்க முடியாவிட்டாலும் இவர்களுடன் போராடி ஜெயிக்க முடியாது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்..

அதனால் பெருமூச்சுவிட்டவாறே, "அப்புறம் என்ன மச்சான்... கல்யாணமே முடிஞ்சிடுச்சி.. வீட்டுக்குப் போகலாம்" என பார்க்கவை பார்க்க அவன் முகமோ வழக்கத்திற்கு மாறாக சோர்ந்தே இருந்தது.. அதை மறைத்து புன்னகைக்க முயன்றான்..

அதை மனோரஞ்சன் கவனித்தாலும் கேட்கும் மனநிலைமையில் தான் இல்லை..

அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்குள் முன்பு வீட்டின் முன்பே பெரிய லாரியில் ஊர்மிளாவிற்கான அத்தனை சீரும் இருந்தது..

மிகப்பெரிய லாரியில் வந்த பொருட்களைப் பார்த்ததுமே புரிந்தது.. "எல்லாமே பக்கா பிளான் என்று" என நினைத்தவனுக்கு மனதின் ஓரம் சிறு வலி எழ தான் செய்தது.. "என்ன மாமா இதெல்லாம்??" என சிடுசிடுத்தவனை பார்த்து சிரித்தவாறே,

"இதெல்லாம் சீர் மாப்பிள்ளை.. எம் பொண்ணுக்கு தான்.. நாளைக்கு யாரும் எம் பொண்ணை வெறுங்கையை வீசிட்டு வந்தவன்னு சொல்லக்கூடாதுல்ல.. அதான் மாப்பிள்ளை" என்றவரை தீயாய் முறைத்தவன் யாரிடமும் பேசாமல் உள்ளே சென்று விட்டான்... அவனின் கோபத்தை புரிந்த காயத்ரி தான் அனைவரிடம் நைசியமாக பேசி அனைவரையும் சரி கட்டி சாப்பிட வைத்தார்... மாலை மங்கும் இரவும் வேளையும் வந்தது.. கல்யாணம் முடிந்த அனைவரும் சிறு படபடப்புடன் கடக்கும் இரவு அது... பார்க்கவும் வேஷ்டி சட்டையில் அவளுக்காக காத்திருந்தான்.

அழகிய காதல் பள்ளியறையில் ஊர்மிளாவிற்காக காத்துக் கொண்டிருந்தான் பார்க்கவ்... அவனுக்கு இந்த அனுபவமே புதிது.. தன்னறையில் தன்னுடன் பேச, சிரிக்க, சண்டை போட, தன்னை மடியில் தாங்க, தான் தப்பு செய்தால் திட்ட, தன்னை சரிபாதியாய் ஏற்று, தன்னை நம்பி ஒரு பெண் தன் பெண்மையை தர வருகிறாள் ஒன்ற நினைப்பே தித்திப்பாய் இருந்தது... கல்யாணம் அவன் நினைத்தது போல் நடக்கவில்லையென்றாலும் தான் காதலித்து முழுதாக இருபத்தி நாலு மணி நேரம் ஆவதற்குள் அவள் தனக்கே தனக்கானவளாய் வருகிறாள் என்ற நினைப்பே பெருவகை ஊற்றாய் மனதில் சந்தோஷம் பொங்க.. முதல் இரவு அறையில் காத்துக் கொண்டிருந்தான்...

வெள்ளை நிற படுக்கையில் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நறுமண மெழுகுவர்த்திகளால் அந்த அறையே வாசனையாக இருந்தது.. சிவப்பு நிற பலூன்கள் ஆங்காங்கு கட்டப்பட்டு இருந்தது... மல்லிகைப் பூவை தோரணங்கள் போல் தொங்க விட்டு முழுதாக பார்க்கவின் அறையை மாற்றியமைத்திருந்தார் காயத்ரி..

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கதவு திறக்கும் சத்தத்தில் உடலெல்லாம் சிலிர்த்தது தேகம் சிறிது நடுங்க ஆரம்பித்தது... கை காலெல்லாம் வேர்த்து கையை சற்றி மடக்கியவாறே தலையை கீழே குனிந்து. திரும்பி நின்றான்.... அவனால் ஊர்மியை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களின் வெட்கமும் அழகானது.. பால்வண்ண நிறத்தில் இருந்தவனது முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்து சிவப்பு நிறமாக மாற ஆரம்பித்தது..

மெதுவாக கீழிருந்து மேலாக தன் தலையை நிமிர்த்து பார்த்தவன்.. "அய்யோ யம்ம்ம்மமா.. பூச்சாண்டி" என அலறியபடி, தொப்பென கட்டிலில் மல்லாக்க விழுந்தான்..

'ஊர்மிளா வருவாள்' என எதிர்பார்ப்பில் நின்றவனுக்கு அங்கு நின்று கொண்டிருந்த கிடாமீசையே நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.. "இங்க என்ன பண்றீங்க மாமா??"
என படபடப்புடன் கேட்டவனை கண்டு தலையை குனிந்து மெல்ல சிரித்தவாறே,

"இல்லை மாப்ள.. ஆடி.. பொறக்குது.. அதான் ஊர்மியை"

"ஊர்மியை"

"ஆடி மாசம் ஊருக்கு கூப்ட்டுப் போகலாம்னு இருக்கேன் மாப்ள".. என்றவரை அப்படியே மண்டையில் ரெண்டு கொட்டு வைக்கலாமா?? என்று கூட யோசித்தான்...

"அப்புறம் எதுக்குய்யா?? கல்யாணம் பண்ணி வச்சே.. நான் பாட்டுக்கு சும்மா இருந்திருப்பேன்ல. நல்லா இருந்த பையன் மனசை கெடுத்துட்டு இப்போ என்னடான்னா ஆடி மாசம் கூப்ட்டு போறேன்.. ஆவணி மாசம் கூப்ட்டுப் போறேன்னா என்னய்யா அர்த்தம்" என கோவமாய் ஆரம்பித்தவன் பாவமாய் முடித்தான்..

"இல்லை மாப்ள.. நானும் அப்படித்தான் நினைச்சேன்.. அப்புறம் உங்கப்பா தான் சொன்னாங்க தான்... ஆடி மாசம் சேர்ந்தா சித்திரையில புள்ளை பொறக்குமாம்.. நம்ம குடும்பத்துக்கு சித்திரை மாச குழந்தை வேண்டாம் மாப்ள" என கெஞ்சுவதை போல் மிரட்டியவரை கடுப்புடன் முறைத்தவன்..

"இப்போ என்ன உங்களுக்கு சித்திரையில புள்ளை பொறக்கக்கூடாது அவ்ளோ தானே.. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க ஊர்மியை அனுப்பி வைங்க" என தன் மனதில் உள்ள ஆசையை வெளிப்படையாக சொல்லியவனை பார்த்து புன்னகைத்தவர்....

"மாப்பிளைக்கு எப்பவும் குறும்பு தான்... ஊர்மி ஊருக்கு ரெடியாகிட்டு இருக்கா மாப்ள.. நாங்க இப்போ கிளம்புறோம்" என பார்க்கவின் குட்டி இதயத்தில் டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தார் கெடாமீசை...

. "அவளைய்ய்ய்" என பல்லை கடித்தவாறே, கிடாமீசையை பிடித்து தள்ளியவன்... கீழே இறங்கிச் செல்ல அவளோ காயத்ரியுடன் பேசியவாறே தன் பேக்கில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்..

"இவ ஓடி வரும் போது யூனிபார்மோட தான வந்தா... இப்போ என்னடா பையை அடுக்கிறா" என பல்லைக் கடித்தவாறே அவளின் முழங்கையைப் பற்றியவன்... "எங்கேடி போற???" என்றவனைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக, "ஊருக்குப் போறேன் அத்தான்.. இது ஆடி மாசமாம்ல அதான்... அப்பா சொன்னாரு புருஷனும் பொண்டாட்டியும் சேரக் கூடாதாம்" என்றவளை தீயாய் முறைத்தவன்...

"இங்க பாரு பாப்பூ.. இப்போ சையின்ஸ் எவ்ளவோ அட்வான்டேஜே மாறிடுச்சி... சோ நீ எங்கேயும் போக தேவையில்ல" என்றவனை பாவமாக பார்த்தவள் கட்டிலில் ஒரு காலை மடக்கி தலையில் கை வைத்து அமர்ந்திருந்த காயத்ரியை திரும்பி பார்த்தாள்..

"நீங்களாவது உங்க அண்ணனுக்கு சொல்லுங்க மாம்" என்றவனை பாவமாக எட்டிப்பார்த்தவர்..

"நான் எவ்ளோவோ சொல்லிட்டேன் டா.. சொல்லச் சொல்ல கேட்காம கூப்ட்டுப் போறாரு.. இந்தக் குந்தாணியும் எப்படி கிளம்புது பாரு" என ஊர்மியை முறைத்துக் கொண்டே இருந்தார்..

"ஏன் அயித்தே இப்டி சொல்றீங்க... நான் ஊருக்குப் போறது உங்களுக்குப் புடிக்கலையா???" என வாடிய முகத்துடன் கேட்டவளைப் பார்த்தவனுக்கு ஏனோ போக வேண்டாம் என சொல்ல மனமில்லாமல்... "சரி போய்ட்டு வா" என்றவனை இறுக்கி அணைத்தவள்.

"தாங்க்ஸ் அத்தான்" என கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட... பார்க்கவோ வாயைப் பிளந்து நின்று கொண்டிருந்தான்..

சிறிது நேரத்தில் குதித்து குதித்து வெளியே சென்றவளை ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டவாறே நின்று கொண்டிருந்த பார்க்கவின் தோளின் மேல் கை வைத்த காயத்ரி, "நீ போக வேண்டாம்னு சொல்லியிருந்தா.. கொஞ்ச நேரம் அழுதுட்டு அப்புறம் அவளே சமாதானம் ஆகியிருப்பான்னு தோணுதுடா" என்றவரை மென்மையாக பார்த்து புன்னகைத்தவன்...

"தெரியும் மாம்.. ஆனா அதுல என்ன மாம் சந்தோஷம்.. ஒரு பொண்ணோட கண்ணீர் ரொம்ப பவர்புல் மாம். அவளுக்கு அப்பா வீட்டுக்குப் போகுறது ஆசைன்னா போகட்டுமே.. நான் போக வேண்டாம்னு சொன்னா இந்தக் குழந்தைத்தனம் அவளை விட்டுப் போயிரும் மாம்.. என்னை வருடி செல்லுற தென்றல் காற்று அவ.. அவ சந்தோஷத்தை விட என்னது பெருசில்ல... இப்போ என்ன பர்ஸ்ட் நைட்டு நடக்கலை அவளோ தானே.. பரவால்ல மாம்... கிணத்துத் தண்ணியை ஆத்து வெள்ளமா வந்து அடிச்சிட்டுப் போகப் போகுது.. நோ மாம். ஷி இஸ் மை கேர்ள்".. என்றவனை ஆரத் தழுவிக் கொண்டார் காயத்ரி..

தன் பையனை ஒரு நல்ல ஆண்மகனாய் வளர்த்திருக்கிறோம் என்பதே அவருக்கு பெருமிதமாய் இருந்தது...

இதெற்கெல்லாம் காரணமான மனோரஞ்சனை சும்மா விட்டால் அவர் காயத்ரி அல்லவே... ஊர்மியின் அறையிலிருந்து தங்கள் அறைக்குச் செல்ல, அங்கு மனோரஞ்சனோ கால்டவுசர் ஒன்றை போட்டுக் கொண்டு மேல்சட்டை எதுவும் இல்லாமல் தன் உடம்பிலிருந்த நாலு நல்லி எலும்பையும் சிக்ஸ் பேக்கைப் போல் அங்கங்கு நெளித்து கண்ணாடியை உற்று உற்றுப் பார்த்தவாறே

"எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா"

என பாடியவரின் கையைப் பிடித்து ஒரு சுற்று சுற்றி விட, கயிற்றிலிருந்து விடுபட்ட பம்பரத்தை போல் சுற்றி சுற்றி காயத்ரியின் தோளின் மேலேயே மயங்கி கிடந்தார் மனோரஞ்சன்...

"நரம்பனுக்கு நிக்கிறதுக்கே தெம்பே இல்ல.. பாட்டைப் பாரு.. எங்கிட்ட மோதாதே வாம்.. எம் பையனை அங்க வருத்தப்பட வச்சிட்டு இங்கே குத்தாட்டமா போடுற.. இருடி உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா" என தோளில் கிடந்தவரை தூக்கி வீச அவரோ கட்டிலில் கவிழ்ந்து கிடந்தார்..

"குந்தாணி மவ.. என்ன திங்குறான்னு தான்னு தெரியலை.. நம்மளை பம்பரம் மாதிர சுத்தி விட்டுட்டாளே.. அய்யோ... யம்மா. இடுப்பு புடிச்சிக்கிச்சே" என்றவரை பார்த்து உதட்டை சுழித்துக் கொண்டு சென்றார் காயத்ரி..

ஊர்மி கிளம்பும் போது எல்லாரிடம் சொல்லி விட்டு செல்ல காயத்ரியை தேட அவரோ அவளுக்கு மேலே நாலைந்து பேக்கை மூட்டைக் கட்டி வைத்திருந்தார்....

"என்ன அத்தை நீங்களும் பேக்கெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க" என்றவளைப் பார்த்து முறைத்தவர்...

"ஏண்ணேன்.. உம் பொண்ணுக்கு மட்டுந்தான்... ஆடி மாசமெல்லாம் கூப்பிடுவிய்யா.. எம் பொறந்த வீட்டுக்கு என்னை கூப்பிட மாட்டியா??" என்றவளை கண்ணீர் மல்க பார்த்தவர்...

"என்னாத்தா இப்டி சொல்லிப்புட்ட.. நீயும் கிளம்புத்தா... ஆடி என்ன வருஷம் புல்லா இருத்தா.. நானும் எந்தங்கச்சியை பிரிஞ்சி வருஷக்கணக்கா ஆகிடுச்சி. இனிமேலாவது ஒன்னுமன்னுமா இருப்போம்"...

"ஏது.. வருஷம் புல்லா இருக்கிறதா?? யோவ்வ்வ்.. அறிவு கெட்ட மச்சான்" என வாயை விட கெடாமீசை மனோரஞ்சனை பார்த்து முறைத்துக் கொண்டே மீசையை நீவிவிடவும், சற்று பம்மியவாறே,

"அவ என்ன புதுசா கல்யாணமானவளா?? இவளை கூட்டுப் போறேன்னு சொல்றீங்க??"
என்றவரை மேலும் அனல் கக்கும் பார்வையில் முறைத்தவர்..

"என் தங்கச்சியை பொறந்த வீட்டுக்குப் போறதுக்கு ஆடி என்ன? ஆவணி என்ன??"நீ வாத்தா" என காயத்ரியும் ஊர்மிளாவையும் பொறந்த வீட்டுக்கு கூட்டிச் சென்றார் கெடாமீசை..
 

Madhusha

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 7

ஊர்மி ஊருக்கு சென்றதும் பசலை நோய் வந்தது போல் மனமெல்லாம் வெறுமையை உணர்ந்தான் பார்க்கவ்.. வீட்டில் இருந்தாலே ஊர்மியின் நினைவு வருகிறதென ஜவுளிக்கடைக்குச் சென்று விட்டான்..

இரவு பத்து மணியளவில் வீட்டிற்கு வந்தவனுக்கு அங்கு ஹாலில் கையில பீர் பாட்டிலை வைத்தபடி,

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
காயும்மா பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே

என டி.எம்.எஸ் ஸை போல் பாடுகிறேன் என கர்ண கொடூரமாய் கத்திக் கொண்டிருத்தார் மனோ ரஞ்சன்..

"டாட். வாட் இஸ் திஸ்??" என்றவரை ஓரக்கண்ணால் பார்த்த மனோ ரஞ்சன்,

"வாடா.. என் வெள்ளைப் பண்ணி... எல்லாம் உன்னால தாண்டா.. உம் பொண்டாட்டி ஆடி மாசம் ஊருக்குப் போனா அது நியாயம்.. தர்மம்.. எம் பொண்டாட்டி ஏன்டா போனாஈ.. சைனா பொம்மை என்னை தனியா விட்டுப் போயிட்டாளே?" என்றதும் அதிர்ச்சியில் விழிகள் விரித்து பார்த்தான்..

"வெள்ளைப் பண்ணியா??... டாட்ட்ட்" என உலுக்கியவனின் கையை உதறியவர் சோபாவில் தலைகீழாக படுத்தார்.. தலையை தரையில் வைத்து படுத்தவர் காலை சோபாவின் மேல் தூக்கிப் போட்டே, "அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே, ஹக்க்க்" என அப்படியே தலைகீழாய் பல்ட்டியடித்து மயங்கி விழுந்தார்..


அவரை தோளில் துண்டை தூக்கிப் போடுவதைப் போல் தூக்கிப் போட்டு தனதறைக்கு சென்று படுக்க வைத்தான்.. ப்ரெஸ அப் ஆகி விட்டு வந்தவனுக்கு அதிகமாக அவனின் மிளா குட்டியின் நியாபகம் வாட்டி வதைத்தது..

காயத்ரியும் ஊர்மியும் வீடு வந்து சேரவும் ஆர்ப்பாட்டத்துடன் ஆரவாரத்துடன் வரவேற்றார் தேவி.. ஊர்மிளாவின் அன்னை.. வாயில்லாப் பூச்சி அப்படி தான் வெளியில் காட்டிக் கொள்வார்... கமுக்கமாக காரியம் செய்வதில் கெட்டிக்காரர்.. எதுவும் தெரியாதது போல் ஊர்மிளா ஊரை விட்டு செல்வதற்கு உதவியதை போல், பரமசிவத்தை தூண்டி விட்டு கல்யாணத்தையே முடித்து வைத்த நாரதி (நாரதர் எதிர்) இவரே.. ஆனால் முகத்தையோ பால்வாடி பாப்பா போல் வைத்திருப்பதில் கில்லாடி..

உள்ளே நுழைந்த காயத்ரியை அணைத்த தேவி... "அப்புறம் மதினி எப்படியோ கல்யாணத்தை நடத்திப்புட்டிக போல??"

"பின்னே காயத்ரின்னா சும்மாவா?" என தற்பெருமையை பேசியவரை பார்த்து சிரித்தவாறே தோளில் சாய்ந்தவ தேவி,

"சப்பான் மூஞ்சிக்காரிக்கு பெருமையே பாரு.. என்னமோ இந்தம்மா தான் எல்லாத்தையும் செஞ்சிக் கிழிச்ச மாதிரி.. எம்புருஷன் கடத்தி கல்யாணத்தையும் பண்ணி வச்சாரு" என மனதுக்குள் நினைத்தாலும் வெளியே வாயெல்லாம் புன்னகையாக நின்றிருந்தார்.

அவரை உற்றுப் பார்த்த காயத்ரியோ மனதுக்குள்ளே, "வாடி என் அண்ணன் பொண்டாட்டி அருக்காணி மவளே. நீ என்ன மனசுக்குள்ள என்ன நினைக்கிறேன்னு நல்லா தெரியும்டி.. ம்ஹுக்கும்.. என் அண்ணன் ரத்தம்டி அவ.. அவளோ சிக்கீரத்துல வேறொருத்தனுக்கு பரிசம் போட விட்ருவேனா நானு.. அவளுக்காக நாடகமாடி ஹாஸ்பிட்டல்ல படுத்தவடி நானு"

"நான் மட்டும் என்னவாம்??. புருஷன் மானம் காத்துல பறந்தா என்ன? கோமணத்துல பறந்தா எனக்கென்னன்னு அவ ஊரை விட்டு ஓடி உதவி செஞ்சதே நான்தாண்டி".. என இருவரின் மனதும் சண்டை போட ஆரம்பிக்க. ஊர்மிளாவோ மூக்கை சுருக்கி சுருக்கி ஏதோ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தாள்...

அவளின் செய்கையில் இருவரும் திரும்பி பார்க்க.. அவளோ முகமெல்லாம் புன்னகையாக "அம்மா.. இன்னைக்கு கருப்பட்டி பணியாரந் தானே" என துள்ளிக் குதித்து ஓடிச் சென்றவளை சற்று கவலையுடன் பார்த்தார் தேவி.. தாய்க்கே உண்டான கவலை அது.. என்னதான் நாத்தனாரும் அண்ணியாரும் சண்டையிட்டாலும். அவர்களின் சண்டை வாய்ச்சண்டை மட்டுமே... போட்டியோ பொறாமையொ அதில் வரவே வராது.

அவளின் குழந்தைத் தனத்தை கண்டு பயந்து தானே ஆயிரம் தகிடுதத்தம் வேலையை செய்து கல்யாணத்தை முடித்து வைத்தார்... "இவ இப்படி சின்னப்புள்ளையா இருக்கிதை நினைச்சா பயமாத்தான் இருக்குது".. என கவலையாக சொன்னவரின் தோளில் கை வைத்த காயத்ரி..

"என்ன இப்படி சொல்லிப்புட்டிங்க மதினி?? அவ குணம் தெரிஞ்சதுக்கப்புறம் தானே எம் பையனுக்கு கல்யாணத்தையே பண்ணி வச்சேன்" என்ற காயத்ரியை சோர்ந்த முகத்துடன் பார்த்தவர் ..

"கல்யாணம் பண்ணி வச்சி என்ன ப்ரோஜனம்.. அதான் பர்ஸ்ட் நைட்டு கூட நடக்காம இப்படி பிரிச்சி கூட்டி வந்தாச்சே??" என்ற ஆதங்கமாய் சொன்னவரை பார்த்த காயத்ரிக்கும் எண்ணம் ஆழமாக இருந்தது...

"அதுனால என்ன பர்ஸ்ட் நைட்டை நாம நடத்திருவோம்" என்ற காயத்ரியை குழப்பமாக பார்த்தார் தேவி.

"நாமளா?? எப்படி??" என்றவரைப் பார்த்து கண்ணடித்த காயத்ரி,

"வேறெப்படி.. எம் பையன் இங்கே வந்தா போதும்.. அவனே எல்லாம் பார்த்துப்பான்.. ஆனா அவனை என்ன சொல்லி கூப்பிடன்னு தான் தெரியலை?" என சில மணி நேரமாக குறுக்கு நெடுக்குமாக நடந்து சிந்தித்தவரை இடைமறித்தவாறே,

"ஐடியா கிடைச்சிடுச்சி??" என கத்திய தேவியை, " என்ன ஐடியா?" என்பதை போல் பார்த்த காயத்ரியை பார்த்து சிரித்த தேவி..

"நம்மளுக்கு இப்போ அறுவடை காலம் போயிட்டு இருக்கு... அது போக தோப்புல தேங்கா பறிச்சி போடணும்" என்ற தேவியை முறைத்த காயத்ரி..

"எம் பையனை தேங்கா பறிச்சி போட சொல்றீயளாக்கும்??" என சீறியவரை பார்த்து முறைத்த தேவி...

" அட.. யாருடி இவ.. அவசரத்துக்கு ஆட்டோவுல பொறந்த மாதிரி... நான் இப்போ மாப்ளையை தேங்கா பறிச்சிப் போடவா சொன்னேன். இப்போ உங்க அண்ணனுக்கு நிறைய வேலை இருக்கும்.. அவருக்கு கால் உடைஞ்சிடுச்சின்னா.. அடுத்து அவர் இடத்துல இருந்து பார்க்க வேண்டிய ஆளு.. நம்ம மாப்பிள்ளை தானே.. இதை சாக்கா வைச்சி அவரும் இங்கே வந்த மாதிரியாச்சும்.. "ஊரும் நாக்கு மேலே பல்ல போட்டு ஏதும் பேசாத மாதிரியாச்சும்" என்றவரின் ஐடியாவை கேட்டு வாயெல்லாம் பல்லாக புன்னகைத்தவர்..

"நல்ல ஐடியா தான்.. ஆனா அண்ணனுக்கு தான் காலே உடையலையே... நல்லா மலைமுழுங்கி மாதிரி தானே சுத்திட்டு இருக்கான்" என்ற கவலையாக கேட்டவரைக் கண்டு ஒரு மார்க்கமாக புன்னகைத்த தேவி..

"காலு தானே.. உடைச்சிட்டாப் போச்சி" என்றவளை அதிர்ச்சியில் விழிகள் விரித்து பார்த்த காயத்ரி "அடி.. பாவி மகளே.. புருஷன் காலை உடைக்க எப்புடி பிளான் பண்ணுது. இதெல்லாம் நல்ல பொண்டாட்டிக்கு அழகா" என்றவரின் மனசாட்சியே காரித்துப்பியது காயத்ரியைப் பார்த்து (விதவிதமாக ரூம் போட்டு புருஷனை அடி வெளுத்து வாங்குற உன்னை விட அவ பெட்டர்) என்ற மனசாட்சியை மண்டையிலேயே ஒரு கொட்டு வைத்து உள்ளே அடக்கி வைத்தார்..

"என் அண்ணன் காலை உடைக்க நான் ஒரு காலமும் சம்மதிக்க மாட்டேன்" என முந்தானையை வாயில் வைத்து பாசமலர் சாவித்திரியை மிஞ்சி நடித்த காயத்ரியை புருவத்தை ஏற்றி இறக்கி குறுகுறுவென கிண்டலாக பார்க்க..

"எங்கே தன் குட்டு வெளி வந்து விடுமோ" என அஞ்சியவர்.. "சரி. சரி. எப்போ உடைக்கலாம்?" என்றதும் மந்தகாசமாக புன்னகைத்தபடி இருவரும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்... பரமசிவத்தின் காலை உடைக்க...

பரமசிவத்தின் காலை எப்படி உடைப்பது என திவீரமாக சிந்தித்தபடி ஊர்மியின் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு பக்கென இருந்தது.. பின்னே யாருக்காக இவ்வளவு செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அவளோ புருஷனைக் கட்டிப்பிடித்து தூங்கும் வயதில் தலகாணியை கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்தாள்..

அவளைப் பார்த்த இருவரின் எண்ணமும் "இவ எப்படி குடும்பம் நடத்தி.. புள்ளை பெத்து.. நாம எப்போ பேரனையோ பேத்தியையோ பாக்குறது" என பெருங்கவலையாக இருந்தது..

நினைத்ததை சாதிக்காவிட்டால் அவர்கள் காயத்ரி, தேவி இல்லையே... அடுத்த நாளே மாடியில் இறங்கும் போது எண்ணெய் வழுக்கி பரமசிவம் கீழே விழுந்து காலோடு, மண்டையும் சேர்ந்தே உடைந்தது...

"அய்யோ.. யம்ம்மாஆஆ" என்ற பரமசிவத்தின் அழுகுரலை கேட்டு சந்தோஷப்பட்டது பல ஜீவன்கள்..

தேவிக்கு காயத்ரிக்கும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை செழித்து விடும் என்ற ஆனந்தம்...

ஊர்மிளாவிற்கோ ஹார்லிக்ஸை திருடி திங்கலாம் என்ற ஆனந்தம்.. பார்க்கவிற்கோ மிளாகுட்டியை பார்க்கலாம் என்கிற ஆனந்தம்..

பரமசிவம் கால் உடைந்த தகவல் அனைவரையும் சென்றடைந்தது... அடுத்த நிமிடம் பார்க்கவ் ஊருக்கு கிளம்பி விட்டான்.. ஆனால் அதற்கு முன்பாகவே வந்து இறங்கினார்.. மனோரஞ்சன்..

அழகிய மாலைப் பொழுதில் வீட்டில் வடையும் பஜ்ஜியின் வாசனையும் தூள் கிளப்பியது.. அதை மென்று முழுங்காமல் தூர்வாறிக் கொண்டிருந்தனர் ஊர்மிளாவும், பரிமளாவும்...

அவர்கள் தின்பதை பார்த்த பரமசிவம் தான் தன் கோபக்கனலை தேவி மீது செலுத்த, "பெத்த அப்பன் கால் ஒடைஞ்சிப் போய் கிடக்கேன்.. அதைப் பத்தி அக்கறை கொஞ்சமாவது இருக்கா. திங்குறதைப் பாரு" என திட்டிக் கொண்டிருந்தவரை பார்த்த தேவி,

"என்னங்க நீங்க புள்ளைங்க சாப்பிடுறதைப் போய் கண்ணு வைக்கிறீங்க??" என மேலும் இரண்டு பஜ்ஜியை வைத்தார்..

தேவியை முறைத்தவர்.. "ஏன்டி.. அறிவுகெட்ட முண்டம்.. உனக்கென்ன ஆண்டவன் மண்டையில களிமண்ணா வச்சிருக்கான்.. மாப்பிள்ளை வர்ற நேரம்டி புள்ளை எப்படி இருக்குன்னு பாரு.. பஞ்சத்துல அடிபட்ட பரதேசி" என்றதும் தான் ஊர்மியை பார்க்க அவளோ சிகப்பு நிற நைட்டியை இடுப்பில் வேஷ்டி போல் மடித்து கட்டியிருந்தாள்.. தலையை முனிவர் போல் கொண்டை போட்டு அதில் ஒரு குச்சியை வேறு குத்தி வைத்திருந்தாள்...

ஊர்மியை பார்த்த தேவி காயத்ரியை பார்க்க.... காயத்ரி தேவியை பார்க்க... இருவரும் ஊர்மியை அலேக்காக தூக்கி செல்ல முயல.. அரிசிமூட்டை அவளையா தூக்க முடியும்?? டிரம்மை உருட்டுவது போல் உருட்டியவர்கள் அவளை அழகாக மேக்கப் செய்து பார்க்கவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்..

காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் வேகமாக கதவை திறந்த ஊர்மியோ அதிர்ச்சியாகி காயத்ரியை பார்க்க. காயத்ரி எட்டி வாசலைப் பார்த்தவர்... மயங்கி தேவியின் மேல் விழுந்தார்...
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8

பார்க்கவை பார்ப்பதற்காக ஆசை ஆசையாக ரெடியாகி.. இல்லை அத்தை அம்மாவால் ரெடியாக்கப்பட்டு தன் ஆசை அத்தானை பார்ப்பதற்காக காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் புன்னகை முகமாய் கதவை திறந்தவளுக்கு, வெள்ளை பேண்ட், வெள்ளை நிற பனியனின் மேல் மஞ்சள் நிற கோட் அணிந்து, ஒரு டப்பா சுண்ணாம்பை எடுத்து முகத்தில் பூசியதை போல் வெள்ளை நிறத்தில்.. மீசைக்கு டை அடித்து, தலையில் விக் வைத்து, கண்ணில் சிகப்பு நிற கண்ணாடியை வேறு மாட்டி வைத்திருந்த மனோரஞ்சனை பார்த்ததும் மயக்கம் வராத குறை தான்... உற்று பார்த்ததும் சர்க்கஸில் இருக்கும் பப்பூன் தான் நியாபகத்திற்கு வந்தது... ஆசை ஆசையாக ஓடி வந்தவளுக்கு மனோரஞ்சனின கோலம் திகைப்பை தர.. அவரின் அலங்காரத்தை பார்த்து உதட்டை சுழித்தவாறே திரும்பியவளின் கண்ணில் விழுந்தான் கார்முகில கண்ணனவன் பார்க்கவன்..

வாடிய முகத்துடன் திரும்பியவளுக்கு வாசலில் காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த பார்க்கவ்வை பார்த்ததும் சந்தோஷத்தில் கை கால் எதுவும் பிடிபடவில்லை... வேகமாக ஓடியவள் மனோரஞ்சனை ஒரு இடி இடிக்க.. அவரோ சுவரோடு சுவராக பல்லியோடு ஒட்டிக் கொண்டார்..

ஓடி சென்று பார்க்கவ்வை அணைத்தவள், "அத்தான்ன்" என கலங்கிய குரலை கேட்டதும் புத்துணர்ச்சி பெற்றான் பார்க்கவ்.. தன்னைத் தேடியிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்..

அவளைப் பிரிந்து இரண்டு நாள் தான் ஆகிறது என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.. அவ்வளவு ஏங்கினான் அவளின் அருகாமைக்காக.... அவளை இறுக்கமாக அணைத்தவன், " ஐ மிஸ் யூ பாப்பு" என்றவனின் கலங்கிய குரலில் இருந்த காதலும் அவனின் நேசத்தையும் ஊர்மிளாவிற்கு உணர்த்த அழகிய சிறு புன்னகையுடன் அவன் நெஞ்சமே தஞ்சமென சாய்ந்திருந்தாள்..

ஊர்மிளாவைத் தொடர்ந்து வாசலை எட்டிப் பார்த்த காயத்ரிக்கு மனோரஞ்சனின் அலங்கோலத்தைப் பார்த்ததும் மயங்கியே விழுந்து விட்டார்... தேவி அவரை அணைத்தவாறே சோபாவில் படுக்க வைத்தவர்.. "அண்ணி, அண்ணி" என எழுப்பியவர் தண்ணி கொண்டு வர செல்ல.. சத்தம் கேட்டு அறையில் இருந்த வெளிவந்த பரிமளாவோ மனோரஞ்சனை சுத்தி சுத்திப் பார்த்தாள்...

"ம்ம்மா. ஜவ்வு மிட்டாய் விக்கிறவனை ஏன்மா நடுவீட்டுல விட்ருக்க??" என்றவளை திகைப்பாக பார்த்தவர்..

"ஏய்ய்.. மூக்கு ஒழுகி.. நான் ஜவ்வு மிட்டாய் விக்கிறவன் இல்லை.. உன் மாமா.. மனோ மாமா" என்றவரை அஷ்டகோணலாய் பார்த்தவள்...

"ஏது மாமாவா.. ஐய்ய கருமம்..?". "ஏது.. கருமமா?" என்பதற்குள் வேகமாக வந்த தேவி தண்ணீர் தெளித்து காயத்ரியை எழுப்பியவர்.. "ஏண்ணேன்.. இப்படித்தான் அர்த்தஜாம குடுகுடுப்பைக்காரன் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்து பயமுறுத்துவீங்களா??.. என்ன கோலம் இது.. கண்றாவி" என்ற தேவியைப் பார்த்து வளைந்து நெளிந்து சிரித்தவர்....

" என்ன தங்கச்சி இப்படி சொல்லிட்ட இதுதான் இப்ப ஃபேஷன் எப்படி அழகா இருக்கனா??".. என்ற மனோரஞ்சனை, மேலும் கீழும் பார்த்தவள்...

" எப்படித்தான் அண்ணி உங்க கூட குடும்பம் நடத்தினாங்களோ?? தலையெழுத்து" என தலையில் அடித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்

அரை மயக்கத்தில் இருந்து வெளில வந்த காயத்ரி தன்னருகில் மிக நெருக்கத்தில் இருந்த மனோரஞ்சனை பார்த்து மறுபடியும் மயக்கத்தில் விழுந்தாள்

ஊர்மியோடு உள்ளே வந்த பார்க்கவ் பரமசிவத்தைப் பார்க்க சென்றான்.. காலில் கட்டிப்போட்டிருந்த கட்டையும் தலைக்கட்டையும் பார்த்தவன்.. "எப்படி இருக்கீங்க மாமா???" என்றவனைப் பார்த்தவர்..

"எப்படி மாப்ள நல்லாருக்குறது.. குடும்பமா இது?? கொலைகார குடும்பம்.. வேணும்னே காலை உடைச்சிட்டாங்க மாப்ள.. எந்தங்கச்சியாவது பரவால்ல மாப்ள.. உங்கப்பனை ஊமைக்காயமா அடிப்பா.. ஆனா எம் பொண்டாட்டி இருக்காங்க.. கருவாச்சி.. ஊமைக்குறத்தி.. ப்ளான் பண்ணி மண்டையையும் சேர்த்து ஒடைச்சிட்டா" என்றவரை பரிதாபமாக பார்த்தான்..

"நாளை நம் நிலையும் இதுதானோ??" என பயத்துடன் எச்சில் முழுங்கியவனை பார்த்து சிரித்தவர்...

"ஆனா மாப்ள.. எங்க ஊர்மிக்கு திங்க தான் தெரியுமே தவிர.. இந்த மாதிரி மாஸ்டர் பிளான் போட்டு மண்டையை எல்லாம் பொளக்கத் தெரியுது.. அப்பாவி புள்ளை மாப்ள.. அவ வயசுக்கு வந்த புதுசுல எவனோ ஒருத்தன் கையைப் பிடிச்சிட்டான்னு.. ஸ்கூலுக்கேப் போக மாட்டேன்னு சொல்லிட்டா மாப்ள.. நான் கூட எவ்ளவோ சொன்னேன்.. "அப்பா அவனை கண்டிக்கிறேன்னு" ஆனா அவதான் "எனக்கு படிப்பே வேண்டாம்ப்பா.. அப்படின்னு சொல்லிட்டா" என்றவர் மிகுந்த தயக்கத்துடன் பார்க்கவைப் பார்த்தவர்..

"அவளுக்கு எதுலையும் பிடித்தமே இல்லை தம்பி.. அவளுக்கு தெரிஞ்சது எல்லாம் திங்குறது.. தூங்குறது. நல்லா கார் ஓட்டுறது" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்..

"நானும் கேட்கணும் நினைச்சேன் மாமா.. அவ எப்படி அவளோ சூப்பரா கார் ஓட்டுறா??"

"எனக்கும் தெரியலை மாப்ள.. சின்ன வயசா இருக்கும் போது. எப்பவும் கார் பொம்மையா வச்சி விளையாடுவா??.. நானும் குழந்தை தானே அப்படின்னு விட்டுட்டென்.. சில டைம் காரை பிரிச்சி மேஞ்சி வச்சி என்னன்னோவோ செய்வா மாப்ள.. எப்படி பிரிச்சாலோ அப்படியே சேர்த்து வச்சிருவா தம்பி.. பதினோரு வயசு இருக்கும் மாப்ள என் அம்பாசிடர் எடுத்து ஊரையே ஒரு ரவுண்டு வந்துட்டா.. அவ காரை ஓட்டுனதை பார்துட்டு ஊர்க்கண்ணே அவ மேலே தான் தம்பி.. படிப்பு தான் வரலையெ தவிர அந்தக் கழுதைக்கு காரெல்லாம் அத்துப்பிடி மாப்ள.. சூப்பரா கார் ஓட்டுவ.. ஊர்ல யாருக்காவது ஒரு அவசரம் ஹாஸ்பிட்டல் போகணும்னா இந்த அரை லூசைத்தான் கூப்பிடுவாங்க.. அசராம ஓட்டுவா மாப்ள காரு" என தன் பிள்ளையின் புகழாரத்தை சொல்லிக் கொண்டே சென்றவரை தடை செய்வதைப் போல் தேவி வந்தவர் பார்க்கவை சாப்பிட வைத்து சிறிது நேரம் ஊர்மியுடன் வெளியில் சென்று வர அனுப்பினார்..

இளமஞ்சள் மாலை வேளையில் தென்னந்தோப்பின் சலசலப்புக்கிடையில் பார்க்கவின் கையோடு கை கோர்த்தபடி நடந்த ஊர்மிளாவிற்கோ வானின் சிறகில்லாமல் பறப்பதை போல் உணர்ந்தாள்..

அவனின் கைகளைப் பின்னிப் பிணைந்தும் வருடிக் கொண்டே வந்தவளை சிறு சிரிப்புடனே பார்த்தான்.. இவளை பார்ப்பதற்காகத் தானே இவ்வளவு தூரம் ஓடியும் வந்திருக்கிறான்...

இருவரும் பேசிக் கொண்டே அங்குப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர்.. ஊர்மியோ பார்க்கவை இடிக்காத குறையாக அவனை நெருங்கி அமர்ந்தவள் அவனின் தோளோடு சாய்ந்து அமர்ந்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவளுக்கு பார்க்கவை பிரிந்து இருக்க வேண்டுமென்பதே பெரும் வலியாக இருந்தது.. இது காதலா என கேட்டால் தெரியாது என்றே பதில் சொல்வாள்.. பருவம் எய்திய வயதிலிருந்தே இவன் தான் உன்னவன் என சொல்லி சொல்லி வளர்த்ததால் அவனின் மேல் அளவுகடந்த அன்பு உள்ளது.. அது காதல் என்பது தெரியும் காலம் எப்பொழுதோ??

சற்று நேரம் உட்கார்ந்திருந்தவர்கள் வரப்பின் மேல் நடக்க ஆரம்பிக்க.. ஊர்மிக்கு வரப்பின் மேல் நடந்து பழக்கமானதால் வேகமாக முன்னாடி செல்ல ஆரம்பித்தாள். ஆனால் பார்க்கவோ. நடக்கத் தெரியாமல் கயிற்றின் மேல் நடப்பது போல் இந்தப்பக்கமும்.. அந்தப்பக்கமும் ஆடி ஆடி நடக்க ஆரம்பித்தான்..

"ஆஆஆஆ.. அம்மாஆஆ" என்ற அலறலில் திரும்பி பார்க்க.. பார்க்கவோ வறண்ட பகுதியில் நடக்கத் தெரியாமல் கீழே விழுந்து கிடந்தான்..

"ஐய்யோ.. அத்தான்ன்" என வேகமாக ஓடியவள்.. கால் வழுத்கி அவன் மேலேயே விழுந்தாள்.. "ஐய்யோ.. என் இடுப்பு" என அலறியவனின் சத்தத்தில் தோப்பில் இருந்த அனைவருமே வந்து விட்டனர்.. அவனைத் தூக்க முயல.. அவனால் காலை சிறிது கூட அசைக்க முடியவில்லை...

ஊர்மிளாவோ காலைத் தூக்க செல்ல.. " ஸ்ஸ்.. வேணாம் பாப்பூ ரொம்ப வலிக்குது" என்றவனின் குரலில் இருந்த வலி ஊடுருவி ஊர்மிக்கும் மிகுந்த வலியை கொடுத்தது... "அத்தான்ன்" என ஈனஸ்வரத்தில் முனங்கியவளின் அழுகையே கண்டவனுக்கு அவளைத் தன் கையணைவுக்குள் வைக்க வேண்டுமென தோன்றியது... ஆனால் அதை செய்ய முடியாதபடி வலி உயிர் சென்றது.. அங்கிருந்த ஆட்கள் அனைவரும் கூடி அவன் நடக்க முடியாததால் அவர்கள் உட்கார்ந்திருந்த கயித்துக் கட்டிலேயே உட்கார வைத்தனர்.. அவனை ஊர்வலமாக திரண்டு வநது வேடிக்கை பார்க்க.. பார்க்கவிற்கு தான் ஷேம்மாகி விட்டது..

ஊர்மியோ அழுது கொண்டே வந்தாள்.. தேவியும், காயத்ரியும் இருவரும் ஒன்றாக சென்றதால் இருவருக்குமிடையில் "டச்சிங், டச்சிங், கிஸ்ஸிங், கிஸ்ஸிங்" ஏதாவது நடந்திருக்கும்.. ஊர்மி வந்தவுடன் அவளிடம் விசாரிக்க வேண்டுமென காத்திருந்தனர்..

வீட்டின் வெளியே கேட்கும் கூச்சல் சத்தத்தில் இருவரும் வெளியே பார்க்க.. அங்கு பத்து பதினைந்து பேர் கட்டிலில் பார்க்கவை உட்கார வைத்து தூக்கிக் கொண்டு வந்தனர்..

"ஏய்.. பாரு கண்ணா.. மாப்ள" என ஓடி.வந்தவர்கள். "என்னடா ஆச்சி??" என்றதும் அங்கிருந்தவர்களே நடந்ததை சொல்ல. வேலையாட்கள் அனைவருமே அவனைத் தூக்கிக் கொண்டு சென்று ஊர்மியின் அறையில் படுக்க வைத்தனர்..

அறையில் சாய்ந்து வலியில் துடித்தவனின் காதில் தேவி ஊர்மியை திட்டுவது தெளிவாக விழுந்தது ..

"ஏன்டி.. மூதேவி.. அறிவிருக்கா உனக்கு.. கல்யாணம் பண்ணி வச்சாலாவது நல்ல படியா வாழுவேன்னு நினைச்ச.. இப்போ அவரு காலை உடைச்சி உட்கார வச்சிட்ட.. ஊருக்குள்ள போய் பாருடி உன் வயசுப் புள்ளைக எல்லாம் எவ்ளோ புத்தியோட பொழைக்குதுங்க.. ஆனா நீ எப்போ பார்த்தாலும் திங்குறது... தூங்குறது.. ஏதாவது வேலை கொடுத்துட்டா போதும் மூக்கால அழுவுறது.. இதுவரைக்கும் சுடுதண்ணீ வச்சிருப்பியாடி.. நீயெல்லாம் எப்படித்தான் உருப்புட போறீயோ??... உன்னைக் கட்டுன பாவத்துக்கு மாப்ளையும் இப்போ வலியில துடிக்கிறாரு" என ஆதங்கமாய் பேசியவரின் வார்த்தைகள் சிறு பெண்ணவளின் நெஞ்சை ஆழமாக கீறியதை அறியவில்லை..

"இந்தா... மதினி கொஞ்சம் நிறுத்துறீய்யா??.. நானும் பாததுட்டு இருக்கேன் ஓவரா பேசிட்டே போற.. ஏன் ஆண்டவன் உனக்கு மட்டுந்தான் வாய் கொடுத்தானாக்கும். அவன் ஆகாசத்தை பார்த்துட்டு வழுக்கி விழுந்தா.. இவ என்ன பண்ணுவா??.. இவளா அவனை புடிச்சி தள்ளிவிட்டா??.. இல்லைல்ல.. ஏன் சமைக்கத் தெரிஞ்சா தான். பொண்ணா. அப்படின்னா அவ சமைக்கவே தேவையில்லை... சுடுதண்ணீ வைக்கத் தெரியுமான்னு கேட்குற?? ஏன் உன் தலையில ஊத்தி அவிய போறீயா??.. ஏற்கனவே உறிச்ச கோழியாட்டம் வெள்ளையா தான இருக்க அப்புறம் என்ன??... இனி எம் பொண்ணை ஏதாவது சொல்லிப் பாரு.. நீ போடுற வெத்தலையில சுண்ணாம்பை அதிகமாக தடவிர்றேன்.. நாக்கு வெந்து சாவுன்னு.. வந்துட்டா பெருசா... எங்கண்ணனை கட்டும் போது இவ பவுசை என்னன்னு எனக்குத் தெரியாதாக்கும்" என எதிர்த்து ஒரு பேச்சு பேச விடாமல் சாடியவர் ஊர்மியை அழைத்துக் கொண்டு பார்க்கவின் அறைக்குச் சென்று விடடார்.

அவளுக்கோ அழுகை குடம், குடமாக வந்தது.. ஜன்னல் கம்பியை பிடித்து அழுதவள் சேலை முந்தானையில் மூக்கை உறிவதைப் பார்த்தவன்.. "பாப்பூ" என்றதும் கணணீரை துடைத்தவாறே திரும்பியவளை தன்னருகில் அழைக்கவும்,

"என்ன அத்தான் வலிக்குதா??.. வைத்தியரை கூப்பிட போயிருக்காங்க.. கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க" என்றவளை அவ்வளவு வலியிலும் அவளை இரு கரங்களை விரித்து "வா" என்றதும் ஓடி வந்து அவனின் மார்பில் விழுந்தவளின் அழுகை அவனையும் வருத்தியது.. அவளினத் தலையை வருடி கொடுக்கவும்.. ஜன்னல் வழியாக வந்த காற்றினாலா இல்லை வலி கொடுத்த மயக்கமா?? தன்னவளின் அருகாமை கொடுத்த கிறக்கமா?? என்றறியாமல் விழிகள் சொருக தன்னையறியாமல் உறங்க ஆரம்பித்தான் பார்க்கவ்..

ஊர்மியோ அதிக நேரம் அழுததால் தூக்கம் கண்ணை சொக்க வைக்க.. பார்க்கவின் மேலேயே படுத்து உறங்கினாள்.. ஊர் மக்கள் அனைவரும் வைத்தியரை கூட்டி வந்து பார்க்க.. பார்க்கவின் மேல் தன் பாதி உடலை படரவிட்டபடி படுத்துக் கொண்டிருந்த ஊர்மியை தான்.. காயத்ரிக்கும் தேவிக்கும் முகமெல்லாம் மலர சிறு வெட்கமும் சேர்ந்தே வந்தது... ஊரின் வயசுப்பெண்களோ காணாததை காண்பதைப் போல் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்..

வயதான கிழவிகளோ, கொல்லென சிரித்தபடி சேலை முந்தானையால் வாயை மூடியபடி செல்ல... தேவியோ அவர்கள் இருவருக்கும் திருஷ்டி சுத்திப் போட மிளகாய் உப்பு எடுக்க சென்று விட்டார். தங்களை சுற்றி இவ்வளவு நடந்திருக்கிறது அறியாமல் தங்களுக்கென உலகத்ததில் நிம்மதியாக உறங்கினர்.. பார்க்கவும் ஊர்மியும்..

 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9

இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு முதலில் எழுந்தது பார்க்கவன் தான்.. அவனுக்கு சிறிது உடல் வலித்தாலும் ஏனோ அவளின் அருகாமையை இழக்க விரும்பவில்லை.. அவளின் மேல் காதல் பெருகியதே தவிர சிறிதும் குறையவில்லை…

இவன் முழிக்கும் இரண்டு மணி நேரத்தில் டாக்டரை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தனர் காயத்ரியும், தேவியும்..

ஊர்மிளாவும் பார்க்கவும் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து மெதுவாக டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பின் பிடித்து இழுத்தவாறே வெளியே கொண்டு வந்தார் காயத்ரி..

"உன் பார்வைல கொள்ளிக்கண்ணை வைக்க.. இப்டி வெறிச்சிப் பார்க்குற" என்றவரின் குற்றச்சாட்டில் திகைத்து நின்ற டாக்டரை பற்றி சிறிதும் கவலைப்படாமல்.. "என்னம்மா பேசுற நீ.. நான் கண்ணு வச்சேனா. நான் டாக்டர்ம்மா??" என்றவரை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர்..

"டாக்டர்னா பெரிய கொக்கா.. போய்யா யோவ்வ்" என அவருடன் சண்டைக்கு மல்லுக்கட்ட.. தேவியோ வேகமாக கை நிறைய சர்க்கரையை அள்ளிக் கொண்டு வந்தவர் டாக்டரை பேசவிடாமல் அவரின் வாயில் ஒரு கை நிறைய சர்க்கரையை அள்ளிக் கொட்டியவர்..

"யோவ்வ்.. டாக்டரு.. நீ வாசப்படில கால் வச்ச நேரம் எம் பொண்ணும் மாப்ளையும் ஒன்னுமன்னுமா கட்டிக்கிட்டு தூங்குதுங்க" என பூரிப்பாக சொல்லியவர்.. டாக்டரை ஒரு சுழற்று சுற்றி விட.. டாக்டரோ காயத்ரியின் மேல் மோதப் போக… அவர் சட்டென்று விலகவும். எதிரில் இருந்த தூணில் மோதி நின்றார்..

"ஆஆஆ...அம்மாஆஆஆ" என அலறியவாறே, "குடும்பமாடா இது.. குட்டிச்சாத்தான் புகுந்த வீடு மாதிரி" என்றவர் வெளியே செல்வதற்குள் அயிரை மீன் குழம்பு வாசனை ஆளை தூக்கவும் கண்களோ தன்னையறியாமல் அடுப்பாங்கரை பக்கம் செல்ல.. அவரின் எண்ணம் புரிந்தது போல்

"டாக்டரே சாப்பாடு வேணும்னாலும் சாப்பிட்டுட்டு போய்யா.. நாய் மாதிரி மோப்பம் புடிச்சிட்டு போவாதய்யா.. அப்புறம் எங்களுக்கு வவுத்த வலிக்கப் போகுது" என்ற தேவி அவரை அழைத்துக் கொண்டு அடுப்பாங்கரை சென்றவர் இலை வாழை போட்டு சாப்பாடு பரிமாறினார்..

ஒரு வாய் வைத்தவருக்கு வாயிலிருந்து கையை எடுக்க முடியவில்லை அந்தளவு பிரமாதமாக சமைத்திருந்தார் தேவி..

சாப்பிட்டு முடித்து பார்க்கவ் எழுந்து கொள்ளவும் அவனை செக் பண்ணியவர் எலும்பு முறிவு இல்லையென்றும் சாதாரண தசைப்பிடிப்பு தான் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்பதை அறிந்த பின்பு தான் நிம்மதி பெருமூச்சே விட்டனர்…

பரமசிவத்தையும் செக் பண்ணியவர் அவருக்கும் சிக்கீரம் குணமாகிவிடும் என்று விட்டு சென்றார்..

காயத்ரியும், தேவியும் பிள்ளைகளின் நிலையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க.. அவர்களுக்கு நேர்மாறாக ஒரு ஜீவன்.. கட்டிலில் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தது… அவரின் இதழ்களோ,

நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

என பாட்டு பாடிக் கொண்டிருந்த மனோரஞ்சனை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டிருந்தார் காயத்ரி..

பின்னே பையன் அடிபட்டு எழ முடியாமல் தாம்பத்ய வாழ்க்கையில் அடி எடுத்து வைக்காமல் இருக்கிறானென இவரே கவலையில் இருக்கும் போது மனோவின் செயல் அவரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு நிறுத்தியது…

"இருடி மஞ்சக்கலர் பென்சில் உன்னை ஒடைச்சி ஒடப்புல போடுறேன்னா இல்லையான்னு பாரு" என சிடுசிடுத்தவர்..

ஆடிக் கொண்டிருந்த மனோரஞ்சனின் பின்பக்கத்தில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க.. அவரோ இரண்டு மூணு தடவை குப்புற அடித்து குரங்கு பொம்மை போல் உட்கார்ந்திருந்தார..

"அப்பவே கால் ஊரும் போதே நினைச்சேன். யாரோ மிதி வாங்கப் போறாங்கன்னு" என முணுமுணுத்தவாறே,

"என்னய்யா பாடுன நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வைய்யா" என அவரின் டீஸர்ட்டினை பிடித்து இழுத்தவர்..

"வா.. வா.. நிலாவை கொண்டு வர்ற வரைக்கும் இந்த ரூம்க்குள்ள அடியெடுத்து வைக்காதே" என தரதரவென இழுத்துக் கொண்டு வந்து அறைக்கு வெளியே போட..

அப்படியே சென்றால் அது மனோரஞ்சன் அல்லவே..

"இன்னார்க்கு இன்னாரெனறு முடிவாக்கினான் தேவன் அன்று.. சப்பான் மூஞ்சிக்காரி உன் கையில் என்னை விளையாட்டு பொம்மையாக்கினான் இன்று" என பாடி முடிப்பதற்குள் தலகாணியும் பாயும் பறந்து வந்தது…

"சாவடி அடிக்குறதுக்குள்ள ஓடிப்போயிடு" என்ற குரலை கேட்டதற்கு பிறகும் அங்கு இருக்க அவர் என்ன பைத்தியமா??" தலகாணியை எடுத்து கக்கத்தில் சொருகியவாறே,

"யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற யார் மகனோ" என பாடிக் கொண்டே சென்றவருக்கு பார்க்கவ் அறை கண்ணில் தென்பட்டது..

"சரி பையன் கால்மாட்டுல படுத்துக்கலாம்" என கதவில் கை வைக்க கதவோ பூட்டியிருந்தது..

"அய்யய்யோ எம்பையன் ஏதோ பண்ணிக்கிட்டான் போலையே" என அலறியவர் விடாமல் கதவை தட்ட.. அப்பொழுது தான் அசதியில் உறங்கலாம் என நினைத்து பார்க்கவிற்கு கடுப்பாக இருந்தது.. அவனின் முகத்தைப் பார்த்தே அவன் சோர்வை அறிந்த. ஊர்மி கடுப்பில் வந்து கதவை வேகமாக திறந்தாள்.. மறுபடியும் குப்புற விழப்போனவர் எப்படியோ சமாளித்து நின்றார்..

மனோரஞ்சன் செய்யும் சர்க்கஸை பார்த்தவன் "டாட்ட்.. வாட் இஸ் திஸ்" என்றவனின் அருகில் சென்றமர்ந்தவர்..

. "பாரு… பாரு நான் உன்கூட படுத்துக்கிறேனே" என கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமல் கேட்டவரை கண்டு தலையிலடித்தவன்... "அப்பாஆஆஆஆ" என சென்னைத் தமிழில் திட்ட ஆரம்பிக்க. மனோ ரஞ்சன் காதைப் பொத்திக் கொண்டு ஓடி விட்டார்.

"மத்த நேரமெல்லாம் இங்கிலீஸ்காரனா இருக்கான்.. கோபம் வந்தா மட்டும் தமிழனா மாறிறான்டா… அது சரி ஆணிவேரை யாரு அசைச்சிப் பார்க்க முடியும்" என புலம்பியவர்.. ஹாலிலேயே கொசுக்கடியில் படுத்து விட்டார்….

ஊர்மியோ பார்க்கவ்வை விட்டு சிறிதும் விலகவில்லை.. அவனின் அருகாமையிலே இருந்தாள்.. அவனுக்கு தேவையான மருந்து மாத்திரையெல்லாம் நேரத்திற்கு நேரம் சரியாக கொடுத்தாள். அவளின் கவனிப்பை பார்த்த காயத்ரி, தேவியுமே அசந்து விட்டனர்…

அன்று மாலைப் பொழுதில் வெளிக்காற்று வாங்குவதற்காக உட்கார்ந்திருந்தனர் இரண்டு குடும்பமும். பரமசிவத்திற்கும், பார்க்கவிற்கும் இப்பொழுது கால் ஓரளவிற்கு சரியாகி வருவதால் அவர்களால் ஓரளவிற்கு நடக்க முடிந்தது..

"என்ன மச்சான் திடீர் மாநாடு" என்ற மனோவை சற்று கவலையுடன் பார்த்தார்...

"ஒன்னுமில்ல மாப்ள. வீட்டுல எதுவும் சரியாக நடக்கலை.. அடுக்கடுக்கா ஏதாவது கெட்டது நடக்குது.. அதான் கோயிலுக்கு போய் ஒரு படையல் போட்டுட்டு புள்ளையை உங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்" என்றவரை பின்னாடியிருந்து கழுத்தோடு கட்டிப்பிடித்தாள் ஊர்மிளா…

"தாங்க்ஸ்ப்பா.. நான் இனி அத்தான் கூடவே இருப்பேன்.. அயித்தே கூட விளையாடுவேன்" என சந்தோஷத்தில் பரமசிவத்தின் கெடாமீசையை பிடித்து இழுத்தபடி சென்றவளை புன்னகையுடன் பார்த்தனர் அனைவரும்..

பார்க்கவிற்கும் இன்னும் சில தினங்களில் தன்னவள் தன்னுடன் இருப்பாள் என்பதே அவ்வளவு சந்தோஷத்தை அளித்தது… கோயம்புத்தூர்க்கும் இரண்டு முறை சென்று வந்து விட்டான்…

ஆடி மாதம் முடியவும்.. இரு குடும்பமும் ஒன்றாய் கோயிலுக்குள் வந்தனர்.. பார்க்கவிற்கு இதெல்லாம் புதிது.. அவன் இந்த மாதிரி திருவிழாக்கள் எல்லாம் கலந்து கொண்டதேயில்லை.. கடைகள் ஒவ்வொன்றையும் வேடிக்கை பார்த்தபடி வந்தவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டு நின்றாள் அகிலா..

அந்த ஊரின் ப்ரசிடெண்ட்டின் மகள்..வெளியூரிலிருந்து படித்து முடித்து விட்டு வந்திருந்தாள்…

அவள் அவ்வாறு செய்வாளென பார்க்கவ்வே எதிர்பார்க்கவில்லை.. அவளை விலக்க முயல அவளோ கம் போட்டது போல ஒட்டிக் கொண்டாள்..

திடீரென தன்னை ஒரு பெண் அணைத்ததை ஏற்க முடியாமல் நின்றவன். தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து "ஆர் யூ மேட்." என சிடுசிடுத்தவாறே அவளால் கசங்கியிருந்த சட்டையை நீவிக்கொண்டு சென்றான் சற்று எரிச்சலுடன்..

அவன் திட்டியதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் நேராக தன் தோழிகளிடம் சென்றவள்.. "கொடுங்கடி.. காசை.. நீங்க சொன்ன மாதிரியே ஒருத்தனை கட்டிப்பிடிச்சிட்டேன்" என அவள் தோழியிடம் விட்ட சற்று முன் விட்ட சவாலில் ஜெயித்ததால் குதுகலித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அங்கு ஜவ்வுமிட்டாய் மேய்ந்து கொண்டிருந்தவளையும், அவளின் அருகில் நின்றிருந்த பார்க்கவ்வின் மேல் அழுத்தமாக பதிந்தது..

"யாருடி அவன்??.. அந்த குண்டச்சி பின்னாடி சுத்திட்டு இருக்கான்??" என ஆணவத்திலும் திமிரிலும் பேசியவளை கண்டு முறைத்தனர் தோழி..

"அவன்தான் அவளோட புருஷன்… அவ அத்தை பையன்டி.. ரொம்ப வருஷமா சேராம இருந்தவங்க இப்போ இவிய கல்யாணத்துல ஒன்னு சேர்ந்துட்டாங்களாம்டி" என்ற தோழியின் பேச்சில் ஊர்மியை வன்மத்துடன் பார்த்தாள்

"நிஜமாவ சொல்ற??" என இன்னும் நம்பாமல் கேட்டவளின் பார்வையோ அங்கு நின்றிருந்த பார்க்கவை விட்டு சிறிதும் விலகவில்லை..

"ஆமாடி.. நிசம்தான்"

"என்னால நம்பவே முடியலைடி. இவளுக்கு இப்படியொருத்தனா.. அவனைப் பார்த்தா படிச்சவனாட்டம் தெரியுது"

"படிச்சவனா.. வாயைத் திறந்தாலே இங்கிலீஸ்ல பீட்டர் விடுறான்"

"ஓஹ்.. அப்புறம் எப்படிடி இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்"

"எங்கே ஊர்மியோட அப்பா பரமசிவம் பையனை கடத்தி கட்டாயத்தாலி கட்ட வச்சிட்டாங்களாம்.. ஊருக்குள்ள பேச்சே இதுக ரெண்டைப் பத்தி தான்.. ஆனா" என இழுத்தவளை புருவம் சுருக்கி பார்த்தவள்..

"ஆனா"

"அந்தப் பையன் நடந்திக்கிறதை பார்த்தவிய புடிக்காத கல்யாணம்னு சொல்லமாட்டாக.. எப்போ பார்த்தாலும் அவ கைப்பிடிச்சி ஊரை சுத்துறதும்.. தென்னந்தோப்பை சுத்துறதும் சந்தைக்கு போறதுன்னு ஒரே அதகளம் பண்ணுதுக" என்ற தோழியை பார்த்தவளின் கண்களோ வன்மத்தில் இருந்தது…

அவளின் பார்வையை அறிந்தவாறே, "இங்கே பாரு அகிலா.. உன்னோட சிலுவண்டு சேட்டையெல்லாம் அதுங்ககிட்ட வச்சிக்காத.. அதுங்க ரெண்டு பேரோட ஆத்தாளை பத்தி தெரியாம பண்ணாத.. ரெண்டுமே அராத்து கேசுங்க.. நீ அதுங்க கையில சிக்கின அவ்ளோ தான்" என எச்சரித்து விட்டு சென்ற தோழியை அசால்ட்டாக புறம்தள்ளியவளின் பார்வை பார்க்கவ்வின் மேல் தான் விழுந்தது..

அலைஅலையால் காற்றில் கலைந்து கவி பாடிய சிகையும், படர்ந்த நெற்றியில் சிறு குங்குமக்கீற்றிருந்தது.. பால்வண்ண நிறத்தில் இருந்தவனின் கூர்நாசி சற்று சிவந்திருந்தது.. வெயில் பட்டதாலா?? இல்லை தன்னவளின் அருகாமையை ரசித்ததாலா?? என அறியவில்லை.. தனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என அடித்து சொல்லும் விதமாக இளரோஸ் நிறத்தில் இருந்த உதடுகளில் தன்னிதழ்களை இணைத்து கற்பனையில் மிதந்துக் கொண்டிருந்தாள் அகிலா…

அகிலா வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கவ்வை பார்ப்பதை கவனித்தது தேவி தான்.. பக்கத்தில் பொங்கலை புல் கட்டு கட்டிக் கொண்டிருந்த காயத்ரியின் கையை சுரண்டியவரை கடுப்பாக பார்த்தார் காயத்ரி..

"பொங்கல் வேணும்னா பானைசட்டியை சுரண்ட வேண்டிதானே. என் கையை எதுக்கு சுரண்டிக்கிட்டு கிடக்கீக" என எரிந்து விழுந்தவரின் விழாவிலே ஒரு இடி இடித்தில் கையிலிருந்த வாழை இலை நழுவி பொங்கலும் மண்ணில் விழுந்து பல்லைக்காட்டியது…

கண்கள் முழுவதும் கோபத்துடன் தேவியை பார்த்து முறைத்த காயத்ரியின் தலையை கோழியை திருப்புவதைப் போல் திருப்பினார் தேவி… அவர் திருப்பிய திசையில் எட்டிப் பார்த்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காத குறை தான்..

" யாருடி இவ?? எம்பையனை கண்ணாலேயே முழுங்கி ஏப்பம் விட்ருவா போல" என்ற காயத்ரியை முறைத்தவாறே

"இவ ஏப்பம் விடுறதுக்கா எம் பொண்ணை கட்டி வச்சேன்" என எரிந்து விழுந்தவரை முறைத்த காயத்ரி..

"உம் பொண்ணுக்கு கூறு இருந்தா எவளோ இப்படி பாக்குறதை கண்டுக்காம சக்கரைப்பொங்கல் தின்பாளா??" பதிலுக்கு பதில் எகிறியவர்.. தன் கண்களில் அக்னிஜுவாலையை எறிய விட்டு ஊர்மியை பார்க்க..

அவளோ "ஒரு கடி அப்பளம்.. ஒரு வாய் சோறு" என்பதைப் போல் பார்க்கவ்விற்கு ஒரு வாய் அவளுக்கு ஒரு வாய் என மாறி மாறி ஊட்டிக் கொண்டிருந்தாள்…

சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றவளை தனியாக இழுத்துக் கொண்டு வந்த காயத்ரி, தேவியும் அகிலாவை கண்ணால் காட்டி எச்சரிக்க.. ஊர்மியோ இருவரையும் உத்து உத்துப் பார்த்தவள்.. "அவ தானே பாக்குறா.. அதுக்கென்ன இப்போ??" என்ற ஊர்மியை மானாவரியாக இருவரும் சேர்ந்தே கொட்டி வைத்தனர்..

அவர்கள் இருவரும் கொட்டி வைத்ததில் சிறு பிள்ளை அழுது கொண்டே பார்க்கவ்விடம் ஓடியவள்.. காயத்ரி, தேவி இருவரையும் சேர்த்தே போட்டுக் கொடுத்தாள்.. பார்க்கவ் இருவரையும் முறைக்க.. "இல்லடா.. அது வந்து" என அகிலா பார்த்ததை சொல்ல.. பார்க்கவ்விற்கு முன்னால் ஊர்மி முந்திக் கொண்டு, "அவ தானே பார்த்தா.. அத்தானை பார்த்தாக.. அத்தான் என்னைத் தான் 46 தடவை பார்த்தாக.. அப்போ நான் தான் ஜெயிச்சேன்" என்றவளின் பேச்சில் இருந்த நம்பிக்கையை கண்டு அழுவதா?? சிரிப்பதா?? சந்தோஷப்படுவதா?? என தெரியாமல் கலங்கி நின்றனர் மூவரும்…

இருவரையும் முறைத்து விட்டு ஊர்மியை கைக்குள் அணைத்தவாறே அடுத்த கடையை தேடிச் சென்றான்… பின்னே அவளுக்குத் தான் ஏதாவது சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டுமே..

கோயிலைச் சுற்றி நல்லபடியாக தரிசனம் சென்று விட்டு வீடு திரும்பினர்.. மூன்று நாள் கொடை என்பதால் ஒவ்வொரு நாளும் திருவிழா களை கட்டியது..

இரண்டாவது நாளை ஊர்மியை கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டாள்..

ஆம்.. ஒருவனின் பலம் எது?? பலவீனம் எது?? என்பதை அறிந்து அதை வீழ்த்துவதில் கில்லாடியாக இருந்தாள் அகிலா..

பார்க்கவ்வின் பலம், பலவீனம் ரெண்டுமே ஊர்மிளா என்பதை அறிந்தவன்.. அவளைத் தாக்கினால் போதும் என்பதை அறிந்து ஊர்மியை யாருமில்லாத நேரம் பார்த்து தனிமையில் பார்ப்பதற்கான எல்லாத் திட்டத்தையும் தீட்ட ஆரம்பித்தாள்..

ஊர்மியை தன்னைச்சுற்றி ஒரு சதிவலையை பின்னப்படுகிறது என்பதை அறியாமல் இப்பொழுதும் சோளப்பொறியை மென்றுக் கொண்டிருந்தாள்..

"ஹாய் புதுப்பொண்ணு… எப்படி இருக்க???" என்ற குரலில் திரும்பியவள்.

"நல்லா இருக்கேன் க்கா.. நீங்க எப்படி இருக்கீங்க?? படிப்பெல்லாம் முடிஞ்சுதா??" என மனதில் கள்ளங்கபடமில்லாமல் கேட்க… எதிரில் இருப்பவளோ வன்மத்துடன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்..

"உன்கிட்ட என்ன இருக்குன்னு.. அவேன் உன் பின்னாடி சுத்துறான்னு தான் தெரிலை??" என முணுமுணுக்க பக்கத்தில் நின்றவளின் செவுட்டு காதில் விழுந்தாள் தானே. சோளப்பொறி முடிந்து அடுத்து என்ன திங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

"அப்புறம் கல்யாணமெல்லாம் முடிஞ்சிடுச்சினு கேள்விப்பட்டேன்.. என் பிரெண்டு ஒருத்திக்கு இப்படித்தான் அவுக அத்தைப் பையன் கட்டி வச்சாக.. அவனும் அந்தப் பையனும் அந்தப் பொணணு பின்னாடியே தான் சுத்துனான்.. அவ ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.. அப்புறம் ஒரு நாள் உத்திரத்துல தூக்குப் போட்டுத் தொங்கிட்டான்" என மெதுவாக வாழைப்பழத்தில் விஷ ஊசியை இறக்குவது போல் அவளின் கள்ளமில்லா மனதில் நஞ்சை கலக்க ஆரம்பித்தாள்..

"என்ன சொல்றீங்க?" என்றவளின் குரலும் உடலும் சேர்ந்தே நடுங்கியது…

"ஆமா ஊர்மிளா.. அந்தப் பொண்ணு கொஞ்சம் குண்டா வேற இருப்பாளா" என்றதும் தன்னையறியாமல் பார்வை தன்னைத் தானே அளவீட்டது..

"எப்போ பார்த்தாலும் தின்னுக்கிட்டே இருப்பா??" என்றவள் ஓரக்கண்ணால் ஊர்மியை பார்க்க அவள் முகம் வாடி வதங்கியிருந்தது..

. "ஆமா ஊர்மி… கிட்டத்தட்ட நீயும் உன் அத்தானை மாதிரி தான். அந்தப் பையன படிச்சவன்.. இவ கூட வாழுறதுக்கு பேசாம செத்துரலாம்னு செத்தேப் போயிட்டான்" என சொல்லி முடிப்பதற்குள் கண்ணை கரித்துக் கொண்டு அழவே ஆரம்பித்து விட்டாள்.. ஊர்மி..

உண்மையெது பொய்யெது தெரியாமல் அழுது கொண்டே சென்றவளை எதிர்கொண்ட பார்க்கவ் "பாப்பூ… பாப்பூ" என கூப்பிட கூப்பிட காதிலேயே வாங்காமல் ஓடிச் செல்ல அவன் பின்னாலேயே ஓடிச் சென்றாள்..

ஊர்மியிடம் அகிலா பேசுவதை கேட்ட இரு காயத்ரியும், தேவியும் அலேக்காக ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருந்தனர் அகிலாவை..

வசமாக சிக்கிய அகிலாவை ஒரு ரூமிற்குள் தள்ளி தாழிட்டனர் "ஏன்டி.. உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா.. எம் மருமக மனசுல இல்லாததையும்.. பொல்லாததையும் சொல்லி… எம்பையனை உன் கைக்குள்ள போடப் பார்த்திருப்ப?" என்ற காயத்ரியை பார்த்து முறைக்க முயன்ற அகிலாவின் கொமட்டிலேயே ஒரு குத்து குத்தினார் தேவி…

"எம்பொண்ணு வாழ்க்கையை கெடுக்கப் பார்க்க.. நாங்க கைக்கட்டி நின்னு வேடிக்கை பார்ப்போம்னு நினைச்சீயா.. உன் கொண்டைமுடியை ஆஞ்சி எடுக்கலை நான் தேவி இல்லைடி" என தொடை தட்டி சவால் விட்டவரை பார்த்த அகிலாவிற்கு பயத்தில் நாக்கு வறண்டு போனது..
 

Madhusha

Well-known member
Wonderland writer
"அப்போ நான் மட்டும் சும்மா இருப்பேன்னு நினைச்சியா.. எம்மருகள கலங்க வச்ச கண்ணை நொண்டி காக்கா போடலை நான் காயத்ரி இல்லைடி"

"அவ கையை நான் உடைப்பேன்டி"

"அவ காலை உடைச்சி அடுப்புல வச்சி.. ஜெகன்மோகினி மாதிரி அடுப்பை பத்த வைக்கலை நான் காயத்ரி இல்லைடி" என இருவரும் மாற்றி மாற்றி சொல்லியதில் பீதியில் அலறியடித்துக் கொண்டு ஓடியே விட்டாள் அகிலா..

அவள் ஓடவும் வாய்விட்டு சிரித்தனர் காயத்ரியும் தேவியும்..

"காயத்ரி, தேவின்னா சும்மாவா.. ஓடுடி.. ஓடு" என அகிலாவை துரத்தி விட்டவர்கள் ஊர்மியும், பார்க்கவ்வையும் தேட ஆரம்பிக்க.. வழியில் சென்றவர்களை விசாரித்தவர்களுக்கு பார்க்கவ்வை தென்னந்தோப்பில் பார்த்ததாக சொல்லவும்.. நொடியும் தாமதிக்காமல் இருவரும் அங்கு நடந்தே சென்றனர்.. தென்னந்தோப்பை சுற்றி சுற்றி தேடியவர்களின் கண்ணில் பட்டது ஊர்மியை பார்க்கவ் தூக்கிக் கொண்டு மோட்டார் அறைக்கு செல்வது தான்.. அதைப் பார்த்த இருவரும் வெட்கப்பட்டு வந்த விழியே ஓடியே வந்து விட்டனர்…

தென்னந்தோப்பில் அழுது கொண்டிருந்த ஊர்மியை சமாதானப்படுத்துவதற்காக வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்தான்..

"ஏன்டி அழுகிற??" என்றவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணீர் பெருக்கெடுக்க "உனக்கு நான் பொருத்தமில்லாதவ அத்தான். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. நல்ல படிச்ச பொண்ணா" என விம்மி விம்மி சொல்லி அழுதவளை கண்டு மனதிற்கு மிகவும் பாரமாகிய உணர்வு..

"நீதான்டி எனக்குப் பொருத்தம்" என காதலுடன் சொல்லியவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டவள்…

"இல்லை நான் பொருத்தமில்லை.. நான் தான் உன்னை காதலிக்கவே இல்லையே" என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லியவளை கன்னங்களை அழுத்தமாக பற்றியவன். "நீதான் எனக்குப் பொருத்தமானவன்னு நிருபீச்சா நம்புவல்ல" என்றவனின் பேச்சில் குழப்பமாக பார்த்தாள்…

அவளின் கன்னங்களை அழுத்தமாக பற்றியவன் இதழ்களில் அழுத்தமாக பொருத்தியிருந்தான்.. அவளின் உவர்நீரோடு, உமிழ்நீரையும் சேர்த்தே தன் இதழுக்கு பரிசளித்தான்..

மென்மையானவளை வன்மையாக ஆட்கொள்ள மனம் விரும்பியது.. காதல் உள்ளமோ பெண்ணவளை வீணையாக மீட்ட கட்டளையிட்டது..

இதழ் தேனை உறிஞ்சியவனை மெல்ல அவளை விட்டு பிரிந்தவனின் இதழ்கள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் மெல்ல தன் பற்களால் முத்திரையை பதிக்க.. பெண்ணவளோ தன்னிலை இழந்தாள்.. அவளின் எண்ணம் முழுவதும் அவன் மட்டுமே…

அவளைத் தன் இருகைகளில் ஏந்தியவன் மெல்ல அடியெடுத்து வைத்தவனுக்கு வழிகாட்டியது சில்லென்று வீசும் தென்றல் காற்று..

அங்கிருந்த மோட்டார் அறைக்குள் தூக்கிச் செல்ல.. அவளோ அதிர்ச்சியில் விழி விரித்துப் பார்த்தாள்… "அத்தான்ன்" என பலமிழந்த குரலில் கூப்பிட்டவளின் குரலே இவனுக்கு போதை ஏற்றியது..

அந்த ரூமில் ஒரு கயிற்றுக் கட்டில், டார்ச் லைட், ஒரு பேன் என இருந்தது.. தோட்டக்காரர் தங்கியிருக்கும் அறை என்பது தெளிவாக தெரிந்தது..

அவளை கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தவனின் விழிகளோ தன்னவளின் அங்கங்களை அணு அணுவாக ரசித்தது.. காற்றில் கலைந்த கூந்தல் கழுத்தடியில் படர்ந்திருந்தது.. அழகிய இரு மான்விழிகள் இறுக்க மூடியிருந்தது.. அவளின் கூர்நாசியில் இருந்த சிறு மூக்குத்தி கோகினூர் வைரமாய் மின்னியது.. பவள இதழ்களோ அதன் இணையை தேடி துடித்தது

மெதுவாக அடியெடுத்து அவளை முழுங்கும் பார்வையில் பார்த்தவாறே அந்த ரூமின் கதவை அடைக்கும் சத்தத்தில் பெண்ணவளின் இதயமோ மத்தளம் வாசிக்க ஆரம்பித்தது..

எழிலோவியமாய் படுத்திருந்தவளைப் பார்த்தவனுக்கு தாபத்துடன் மோகமும் பெருக்கெடுத்தது.. அவளின் மேல் படர்ந்தவனின் நறுமணமும் அருகாமையும் பெண்ணவளை பித்தாக்கியது.. சிறிது நேரமாகியும் எந்தவித அசைவும் இல்லாமல் இருக்க.. மெல்ல மெல்ல தன் அல்லிவிழி மலர்களை விழித்தாள்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல் அவளின் விழிகளின் இமைகளில் முத்தமிட்டவனின் இதழ்களோ காதின் அருகில் சென்றவனுக்கு தான் தீண்ட வேண்டிய இடத்திலிருந்த ஜிமிக்கியின் மேல் கோபம் தோன்ற.. அதனை மெதுவாக கழற்றி அவளின் மெல்லிய நுனிகாதில் முத்தமிட.. புதுவித உணர்வுகளின் தாக்கத்தில் தன்னிதழ்களை அழுத்தமாக கடித்தாள்…

அவளின் கழுத்தடியில் படர்ந்த கார்கூந்தலை தன் ஒற்றை விரலை ஒதுக்கி விட்டவன்.. அவள் அணிந்திருந்த ஆரங்களுக்கும், ஆபரணங்களுக்கும் விடுதலையளித்தான்.

மெல்லிய சிணுங்கலுடன் தாங்கள் இருக்கும் நிலையை வெளியுலகத்திற்கு பறைசாற்றிய கொலுசிற்கு விடுதலையளிக்க.. அதுவோ செல்ல சிணுங்கலுடன் தொப்பென கீழே விழுந்தது..

அவளின் ஆடைகளை விலக்க.. பெண்ணவளோ தவித்துப் போனாள்.. அவன் கைகளுக்கு அணைப் போட முயன்றவளின் முயற்சியெல்லாம் அவனின் தேக பலத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போனது.. எண்ணிலடங்கா முத்தத்தால் அவனுக்கு அவள் தான் பொருத்தம் என நிரூபிக்க போராடினான்..

தன் அடர்ந்த மீசையால் அவளின் தேகம் முழுவதும் முத்தமிட பெண்ணவளின் பூந்தேகத்தின் பூனைமுடிகள் கூட சிலிர்த்து அடங்கியது..

அவளின் கரங்களோ அவன் கொடுத்த முத்தத்தாக்குதலில் அவன் சிகையை பற்றுகோலாக பற்றிக்கொண்டது.. செல்ல சித்ரவதைகள் செய்பவனையே சிறையெடுக்க விரும்பியது பெண்ணவளின் பூமனம்..

இருவரின் தேகங்களும் வியர்வையில் முக்குளிக்க… புதுவித உணர்வுகளின் தாக்கத்தில் சிக்கித் தவித்தனர் இருவரும்… சிறிது சிறிதாக முற்றுகையிட்டவன் அவளை மொத்தமாக கொள்ளையிட.. முதல் கூடல் வலித்தாலும் அவனிற்கு தன் தேகத்தையே விருந்தளித்தாள்.. அவனின் விருப்பத்திற்கே இசைந்து கொடுத்தாள்..

அவளை விட்டு விலகியவனின் சிறு விலகலை கூட தாங்கமுடியாமல் தவித்தவள் அவன் நெஞ்சாங்கூட்டில் சரணமடைந்தாள்.. களைப்பில் உறங்கியவர்கள் காலையில் தான் கண் விழித்தனர்..

தென்றல் காற்று தன் மேனியில் தவழும் வேளையில் தான் கண் விழித்த பார்க்கவ் தன்னருகில் படுத்திருந்தவளை பார்க்க அவளோ களைப்பின் மிகுதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்..

"பாப்பூ.. எந்திரிடா டைம் ஆகிடுச்சி" என எழுந்து கொள்ள முயன்றவனை இழுத்து கட்டிலில் போட்டவள்… "தூக்கமா வருது.. அத்தான் நாளைக்குப் போகலாம்" என்றவளை சமாதானப்படுத்துவதற்குள் தோட்டக்கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள் ஊர்மிளா…

ஏதோ கள்ளக்காதலர்கள் மாட்டிக் கொண்டதைப் போல் திருதிருவென முழித்தவர்களுக்கு வெளியில் காயத்ரி, தேவி, இருவரின் குரலை கேட்டபின்பு தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்..

"ஊர்மிளாஆஆ" என்றக்குரலில் பதில் கூறப்போனவளின் வாயை அடைத்தான் பார்க்கவ்… "ஸ்ஸு.. அமைதியா இரு" என்றவனின் வார்த்தைக்கேற்ப அமைதியாக இருந்தாள்..

"யம்மாடி… ஊர்மி.. உங்களுக்குத் தேவையான டிரஸ் எல்லாமே இங்கே இருக்கு.. தோட்டத்துக்கு லீவு விட்டாச்சி.. நீங்க எப்போ வர்றீங்களோ அப்போ வாங்க.. மோட்டார் போட்டு குளிச்சிருங்கடா" என எல்லா வசதியும் செய்து கொடுத்து விட்டு பென்றவர்களை புன்னகையுடன் பார்த்தனர் இருவரும்.. குளித்து முடித்து வீட்டிற்குள் செல்ல வடபாயசத்துடன் வரவேற்றனர் காயத்ரியும், தேவியும்... பரமசிவத்திற்கு தன் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஒன்றே பிரதானமாக இருந்தது…

பார்க்கவ்வின் குடும்பம் கோயம்புத்தூர் கிளம்பிச் சென்றனர்.. ஊரை விட்டு செல்லும் நேரத்தில் ஒரு மூச்சு அழுது தீர்த்தனர் காயத்ரியும், தேவியும்… வாரத்திற்கு ஒரு முறை வந்து பார்க்க வேண்டுமென்ற ஒப்பந்தத்துடன் பிரியா விடை கொடுத்தனர் இருவரும்.. ஊர்மியே இருவரையும் ஏதோ அரிய வகை ஜந்து போல் பார்த்தவள் பார்க்கவை விட்டு சிறிதும் விலகவில்லை…

காதலில்லா காலத்திலேயே அவனின் மேல் பித்தாக இருந்தவள்.. இப்பொழுதெல்லாம் அவனின் மூச்சுக்காற்றாய் மாறிட தவித்தாள்.. அவன் கூடவே ஜவுளிக்கடைக்கு செல்பவள் அவன் வரும் நேரத்தில் தான் வருவாள்.. சிறிது சிறிதாக தொழிலை கற்றுக் கொண்டவள் அதன் பின்னே அவளே நடத்தும் அளவிற்கு உயர்ந்திருந்தாள்.

இருவரும் சேர்ந்தனரா இல்லையா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்த மனோவிற்கு ஒரே மாதத்தில் பதில் கூறியது ஊர்மியின் வயிற்றில் வளரும் சிறு சிசு..

குடும்பம் மொத்தமும் கொண்டாடித் தீர்த்தனர்.. காயத்ரியும் தேவியும் சொல்வதற்கு வார்த்தையில்லாமல் ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடி தீர்த்தனர்..

எண்ணி பத்தாம் மாதத்தில் ஊர்மிளாவை பாடாய்படுத்தி பூவுலகத்தில் உதித்தது பார்க்கவின் பெண் குழந்தை.. பெண்குழந்தை பிறந்தது அனைவருக்கும் சந்தோஷம். இருவரைத் தவிர.. காயத்ரியையும் தேவியையும் கலந்த உருவத்தில் பிறந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் பரமசிவமும், மனோரஞ்சனமும்…

ஒருவரையொருவர் அணைத்தபடியே..

"மச்சான்ன்ன்"....

"மாப்ப்ளளள"...

"இவளுக ரெண்டு பேருக்கும் ஒரு என்ட் கார்டே இல்லையே மச்சான்… ஆமா மாப்ள" என கதறி அழுதவர்களை கண்டு வாய் விட்டு சிரித்தனர் அங்கிருந்த அனைவருமே..

இவர்களின் சிரிப்பலை இன்று போல் என்றும் தொடரும்..

புன்னகை மாறா அன்பில் பூத்த சிறு தென்றலான ஊர்மிளாவும், அவளை மொத்தமாக கொள்ளையிட்ட கள்வனவன் பார்க்கவும் இன்றுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்கள்…



அமைதியின் பிரதியாய் பார்க்கவ்வன்...
அவனை வருடிச்செல்லும் பூங்காற்றாய் ஊர்மிளா..

இவர்கள் இருவரையும் இணைக்கப் காயத்ரியும், தேவியும் செய்யும் தகிடுதத்தங்களை காமெடியுடன் கொடுத்திருக்கிறேன்..
 
Top