ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிலு சிலு தென்றலாய் வந்தவளே - கதை திரி

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 1
கே.எஸ்..மருத்துவமனையில் தன் அழுத்தமான நடையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான் பார்க்கவன்.. ஆபீஸ் மீட்டிங்கில் இருந்தவனுக்கு, "அவனின் அம்மா காயத்ரி மயங்கி ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாகி இருக்கிறார்" என்ற தகவல் வந்ததுமே மீட்டிங்கை கேன்சல் பண்ணிவிட்டு வந்து விட்டான்.

நேராக நான்காவது மாடிக்கு படிக்கட்டு வழியாகவே ஏறியவன் அங்கு இருந்த சோபாவில் தலைசாய்த்து படுத்திருந்த மனோரஞ்சனை கண்டதும் வேகமாக ஓடி வந்தான்..

"டாட்" என்றவனின் குரலில் அதுவரை வருத்தத்தில் இருந்த மனோரஞ்சன் முறைத்துக் கொண்டு நின்றார் பார்க்கவ்வை பார்த்து… மனோரஞ்சன் பார்க்கவ்வின் தந்தை..

"உங்கம்மாவுக்கு கொழுப்பை பார்த்தியாடா.. அவ அண்ணன் பொண்ணை தான் உனக்குக் கட்டிக்கொடுக்கணும்.. என்னென்ன கூத்துப் பண்றா தெரியுமா??... இப்ப என்னடான்னா சுகர் இருக்குன்னு தெரிஞ்சும்.. பாயாசத்துல அவ்ளோ இனிப்பு போட்டு சாப்பிட்டுருக்கா??" என்றதும் தான் அதுவரை என்னவாகுமோ?? என்ற பதட்டத்தில் இருந்தவன் ஆசுவாசமடைந்தான்..

"மாம் நல்லா இருக்காங்கள்ள?? எதும் பிரச்சனை இல்லைல்ல டாடி" என பதட்டமாக கேட்டவனை எரிச்சலுடன் பார்த்தவர்...

"லூசாடா.. நீ... நான்தான் அவ வேணும்னே ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்திருக்கான்னு சொல்றேன்.. நீ என்னடான்னா.. மாம் நல்லா இருக்காங்களான்னு கேக்குற??.. அடேய்.. மகனே.. நீ ஏன்டா இப்படி இருக்க??... எல்லா பசங்களும் எவ்ளோ கெத்தா எப்படியெல்லாம் இருக்கானுங்க தெரியுமா??.. நீ ஏன்டா இப்பவும் அம்மா முந்தானையை புடிச்சிட்டு சுத்துற??" என திட்டிக் கொண்டிருந்தவரையும் கனிவாக பார்த்தான் பார்க்கவன்...

அவனுக்கு தான் யாரையும் திட்ட வராதே... பார்க்கவன் 29 வயதுள்ள கம்பீரமான ஆண்மகன்... அழகுக்கு குறைவில்லாதவன்... பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் கோமகன்.... மென்மையானவன்.. சாந்தமானவன்... பார்ப்பதற்கு மட்டுமல்ல குணத்திலும் அமைதியானவன்.. எதையும் நிதானமாக செய்தே பழக்கப்பட்டவன்.. வேகம் என்பது அவனிடம் எப்பொழுதுமே இருந்ததில்லை... யாரையும் கடிந்து பேசத் தெரியாதவன்...

வேகமாக தன் தாயை பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தவனுக்கு அங்கு பெட்டில் சாய்ந்தமர்ந்து காலின் மேல் கால் போட்டவாறே, ஆரஞ்சுப் பழத்தை உரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் காயத்ரி...

"மாம்" என்ற கனிவான குரலில் திரும்பிப் பார்த்தவர்.. அதுவரை இருந்த எனர்ஜியெல்லாம் வடிந்ததை போல் "பாரு....பாரு" என தன் இரு கைகளையும் விரிக்கவும் ஓடி வந்து அடைக்கலமானான் பார்க்கவன்..

காயத்ரியின் தோள் வளைவில் தேம்பி அழுதவனை கண்டு மனோ ரஞ்சன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.. "அவ நடிக்கிறான்னு பச்சையா தெரியுது.. அதையும் இந்த லூசு நம்புது பாரு... ஆம்பிளைப் புள்ளை அழாதுன்னு.. ஊரு புல்லா சொல்றாங்க.. ஆனா இவன் இப்படி பொம்பளை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கான்".. என முணுமுணுத்தவரை கண்டு முறைத்த காயத்ரி, "என்ன அங்க சத்தம்??". என்றவரை பார்த்து சிரித்தவர்..

"பிளாஸ்க்கு கழுவிட்டு இருக்கேன் மா" என வடிவேலு போல் இழுத்து சொன்னவரை பார்த்து முறைத்தவர்..

"பாரு. நீ அம்மா சொல்றதை கேட்பல்ல" என்றவரை தவிப்புடன் பார்த்தவன்..

"மாம்.. நீங்க சொல்ற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சேன்.. ஆனா உங்க அண்ணா பொண்ணு வேண்டாம் மாம்.. அவருக்கும் நம்மளுக்கும் ஏற்கனவே ஆகாது.. இப்போ அவரு பொண்ணை பொண்ணு கேட்டுப் போனோம்னா?? உங்களை அவமானப்படுத்திருவாரு மாம்.. ப்ளீஸ் மாம்" என்றவனின் கன்னத்தை வருடியவாறே,

"ப்ளீஸ் பாரு... நாம பொண்ணெல்லாம் கேட்டுப் போக வேண்டாம்.. தூக்கிட்டு வந்துரலாம்" என்றவளை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர் இருவரும்..

"என்னடி சொல்ற?? கடத்தப் போறீயா??" என அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைத்து சொன்ன மனோரஞ்சனை பார்த்து முறைத்தார் காயத்ரி...

"யோவ்.. நான் யாரையும் கடத்தப்போறதில்லை" என்றதும் இருவரும் பெருமூச்சு விட்டனர்.. "பொண்ணே ஓடி வரப் போறா" என்றதும் அவர்களின் கண்முழி வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு முழித்துக் கொண்டிருந்தனர்..

"என்ன மாம் சொல்றீங்க??.. பொண்ணு ஓடி வரப் போகுதா??" அவுங்க அப்பாவுக்கு அது அவமானம் மாம்.. நீங்க அந்தப் பொண்ணுகிட்ட பேசுங்க... இதெல்லாம் தப்புன்னு சொல்லுங்க" என்றவனை முறைத்தவர்.

"அடேய்ய்ய்.. பாரு சொன்னா கேளுடா.. அவ நல்ல பொண்ணுடா.. எங்க அண்ணாவை பத்தி உனக்குத் தெரியாதுடா.. வேணும்னா உங்க அப்பாகிட்ட கேளு.. அவ பத்தரை மாத்து தங்கம் டா. எங்க அண்ணன் அந்த தங்கத்தை போய் ஒரு தகரடப்பா கையில ஒப்படைக்க பாக்குறாருடா.. ப்ளீஸ்டா.. அம்மாவுக்காக அந்தப் பொண்ணை கூப்ட்டு வாடா.. நீ ஊருக்குள்ள எல்லாம் போக வேண்டாம்.. ஊர் எல்லையில நில்லு.. அவ வந்துருவாடா.. எம் பட்டுல்ல.. புஜ்ஜில்ல.. போடா" என கெஞ்சியும் கொஞ்சியும் அவனை மலையிறக்கியிருந்தார் காயத்ரி..

"ம்ம்ம்.. சரி மாம். நான் போய் நாளைக்கு கூப்பிட்டு வர்றேன்" என்றவனை வலுக்கட்டாயமாக எழுப்பியவர்..

"நீ இப்பவே போய் எம்மருமகளை கூப்பட்டு வா.. அவளைப் பார்த்தாலே போதும் என் நோயெல்லாம் பறந்துரும்" என்றவரை பார்த்து மௌனமாக தலையசைத்தவாறே கோயம்புத்தூரிலிருந்து மதுரைக்கு செல்ல ஆரம்பித்தான்...

மதுரையில் உள்ள வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான்... சொக்கலிங்கம் - பாப்பாத்தி அம்மாள்.. அவருக்கு இரு பிள்ளைகள் மூத்தவர் பரமசிவம், இரண்டாவது மகள் காயத்ரி.... காயத்ரி படித்து முடிக்காத நிலையிலேயே மனோரஞ்சனை காதலித்து, ஓடிப்போக வர மாட்டேன் என்ற மனோரஞ்சனை மிரட்டி, ஜாதி மாறி கல்யாணம் முடித்து கோயம்புத்தூருக்கு ஓடி வந்து விட்டார்...

ஓடி வந்தவர் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த இருபது பவுன் நகையை விற்று சிறிதாக ஜவுளிக்கடை ஆரம்பித்தவர்.. அதன் பின்பு வியாபாரம் ஓஹோவென்று செல்ல... இப்பொழுது ஜவுளி மாளிகைக்கு சொந்தமாகி விட்டார்..

தன் பிறந்த வீட்டு சொந்தத்தை அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் தான் சந்திப்பார்... அப்படி சந்தித்த பொழுது தான் ஒரு நாள் ஊர்மிளாவை சந்தித்தவர்.. கட்டினால் தன் மகனுக்கு இவளைத் தான் கட்ட வேண்டும் என முடிவெடுத்தவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஊர்மிளாவுடன் பழகி அது இப்பொழுது கல்யாணத்தை நிப்பாட்டி ஓடி வரும் அளவிற்கு வந்து நிற்கிறுது...

பார்க்கவன் இதுவரை ஊர்மிளாவை பார்த்ததேயில்லை.. ஆனால் பார்க்கவனின் ஒவ்வொரு அசைவும் ஊர்மிளாவிற்கு வீடியோவாக சென்றுவிடும்.. காயத்ரி வீடியோ அனுப்பும் போது ஏனோதானோவென்று பார்க்க ஆரம்பித்தவள்.. இப்பொழுது வீடியோவில் இருக்கும் பார்க்கவுடன் கனவிலேயே வாழ ஆரம்பித்து விட்டாள்....

அவன் காலையில் எழுந்து ஜாக்கிங் செல்வதில் இருந்து இரவு வீட்டிற்கு வரும் வரை அனைத்து வீடியோவும் அவளிடம் இருக்கும்..

சில மணி நேரத்திற்குப் பிறகு வாடிப்பட்டி எல்லையில் காரை நிறுத்தியவன்... ஊர்மிளாவிற்கு காத்திருக்க ஆரம்பித்தான்... மூன்று மணி நேரமாகியும் ஊர்மி வருவதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது...

சலிப்புடன் காயத்ரிக்கு போன் போட்டவன்... "மாம்.. அந்தப் பொண்ணு இன்னும் வரலை" என்பதற்குள் நின்று கொண்டிருந்தவனின் முதுகை சுரண்டினாள் ஒரு பூந்தென்றல்...

திரும்பியவன் அங்கிருந்த பெண்ணை பார்த்து அதிர்ந்தே விட்டான்.. ஸ்கூல் யூனிபார்மில் நான்கடி உயரத்தில் இருந்தாள்... ஓடி வந்திருப்பாள் போல மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது....

"என்னாச்சி பாப்பா?? ஊர்மிளா அக்கா வரமுடியாதுன்னு சொன்னாங்களா??" என்றவனை தீயாய் முறைக்க ஆரம்பித்தவள்...

"ய்யோவ்வ். என்ன லந்தா?? இல்லை லந்தான்னு கேட்குறேன்.. உனக்கு எவ்ளோ அதுப்பு இருந்தா ஊர்மிளா எங்கேன்னு கேப்ப??... நான்தான்யா ஊர்மிளா" என்றதும் மயக்கமே வராத குறை அவனுக்கு..

"அவன் வயதென்ன?? இவள் வயதென்ன?? ஸ்கூல் போகும் பெண்ணை கல்யாணம் முடித்தால் நாளைக்கு ஜெயிலில் களி தான் திங்க வேண்டும்" என யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை தடைபடும் வண்ணம் செல்போன் அடித்தது..

"மாம்.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. ஸ்கூல் படிக்கிற பொண்ணு வந்துருக்கு" என பேசிக் கொண்டிருந்தவனின் போனை புடுங்கியவள்..

"அத்தை. நான் அப்புறம் பேசுறேன்.. அந்த கிடாமீசைக்கு தெரியாம சுவரேறி குதிச்சிருக்கேன்.
கால்ல கண்ணாடி குத்திருச்சி.. நான் மட்டும் ஓடிப்போறது அந்த கிடாமீசைக்கு தெரிஞ்சுச்சு என்னை வெட்டிப் போலி பொட்டுரும்... நான் ஊருக்கு வந்துட்டு பேசுறேன் அத்தை" என போனை கட் பண்ணியவள் அவனையும் இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு காரில் விட்டாள்..

அவனோ அவளையே பிரமிப்பாக பார்த்தான்.. அவள் அடிபட்டிருக்கிறது என்றது நெஞ்சில் சுருக்கென வலித்தது... அவள் யார் கண்ணிலும் பட்டு விடுவோமோ??.. என்ற பயத்திலே வேகமாக காரை திறக்க செல்ல.. அதுவோ "கீங்.. கீங்" என சத்தமிட ஆரம்பித்தது...

அந்த சத்தத்தில் தன் நினைவுக்கு வந்தவன் காரை அனலாக் பண்ணி அவளை உள்ளே ஏற்றியவன்... அங்கிருந்த பர்ஸ்ட் ஏய்ட் பாக்ஸை எடுத்து, "காலை தூக்கி மேலே வை" என்றவனை குழப்பமாக பார்த்தவள்..

"எதுக்கு"...

"என்ன கேள்வி இது. கால்ல கண்ணாடி குத்திருக்குன்னு சொன்னல்ல அதுக்குத்தான்" என்றவன் அவளின் சம்மதம் இல்லாமல் சீட்டில் அமர்ந்திருந்த அவளின் காலை கீழே குனிந்து தன் தொடையில் வைத்தவன்... காயம்பட்ட இடத்தை பார்க்க.. அது சற்று ஆழமாக பட்டிருந்தது... இரத்தம் வேறு வடிந்து கொண்டிருந்தது...

மெதுவாக அவளின் காயத்தை சுத்தப்படுத்தியவன் காலுக்கு மருந்திட்டதை விழியகலாமல் பார்த்தாள்.. அவள் வளர்ந்த முறையில் பெண்கள் உடம்பிற்கு முடியாமல் படுத்திருந்தால் கூட தண்ணீர் கூட மோந்து கொடுக்க மாட்டார்கள் கணவன்மார்கள்.. அப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்தவளுக்கு சட்டென தன் காலை தூக்கி மடியில் வைத்து மருந்திட்டவனை இன்னும் பிடிக்க ஆரம்பித்தது...

"அத்தான்" என்றதும் விலுக்கென நிமிர்ந்தவன்.. "அத்தானாஆஆஆ" என அதிர்ச்சியாக கேட்டவனை..

"ஆமா.. அத்தான்.. அத்தை பையன் தானே நீங்க அப்போ அத்தான் தான்... மாமன் பையன்னா மச்சான்" என விளக்கம் சொன்னவளை சலிப்புடன் பார்த்தான்.. அவனுக்குத் தான் இந்த உறவுமுறையெல்லாம் தெரியாதே...

"ப்ச்ச.. இங்க பாரு.. நான் உன்னோட நல்லதுக்குத் தான் சொல்றேன்... அப்பா அம்மா சொல்ற பையன்ன கல்யாணம் பண்ணிக்கோ.. அம்மா இப்படித்தான் ஏதாவது சில டைம் சில்லியா பிகேவ் பண்ணுவாங்க.. அதைக் கேட்டு நீ உன் வாழ்க்கையை இழந்துராதே... வீட்டுக்கே போறீயா??.. நான் வேணும்னா கொண்டு வந்து விடட்டுமா??" என்றவனை ஆழ்ந்து பார்த்தவள் சீட்டின் மேல் குரங்கு போல் ஏறியவள்.. டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அவனை பக்கத்து சீட்டுக்கு தள்ளியவள் கண்ணிமைக்கும் நொடியில் காரை எடுத்துப் புறப்பட்டிருந்தாள்..
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 2

உயர் வேகத்தில் காரை செலுத்தியவளைக் கண்ட பார்க்கவனுக்கோ இரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்தது.. "ஹேய்ய்... ஸ்டாப்... ஸ்டாப்.. வண்டியை நிறுத்து... ஏன் இவ்ளோ ஸ்பீட்ல போற... கடவுளே.. அய்யோ.. லாரி" ஏன தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சீட்டில் பயத்துடன் கண் மூடி அமர்ந்தவனை பார்த்து வாய் விட்டு சிரித்தவள்.. அரை ரவுண்டடித்து ஆளில்லாத அந்த சாலையில் க்றீச்சென டயர் தேயும் அளவிற்கு நிப்பாட்டினாள் ஊர்மி ...

அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு கண்ணை மூடி அமர்ந்திருந்தவனைப் பார்க்க பார்க்க சிரிப்பு பீறிட்டு வந்தது.. அவனின் செய்கையை பார்த்தவள் "கொல்லுறடா... அழகா" என மனதுக்குள் ஒரு நிமிடம் அவனை ரசித்தவள், "அத்தான்", "அத்தான்" என தோளைப் பிடித்து உலுக்கிய பின்பு தான் சுயத்திற்கு வந்தவன்..

"ப்ச்ச்.. இப்படித்தான் வேகமாக வண்டி ஓட்டுவீய்யா??.. தள்ளு" என அவளைத் தள்ளிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தவன்... ஜானவாசா காரை போல் உருட்டிக் கொண்டு கோயம்புத்தூர் ஒரு வழியாக வந்து சேர்ந்தான்..

கோயம்புத்தூர் வந்தவன் நேராக சென்றது அவனின் வீட்டுக்கு தான்.... கேரளா அமைப்பில் கட்டப்பட்டிருந்த வீட்டையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. "எம்மா பெரிய வீடு... அத்தான்.. அத்தான்" என்றவளை எரிச்சலுடன் பார்த்தான்.. "அத்தான்" என்றழைப்பே அவனுக்கு எரிச்சலை தான் கொடுத்தது...

"நீ பார்க்கவன்னு கூட கூப்பிடு.. தயவுசெஞ்சு அத்தான், பொத்தான்னு கூப்பிடாதே" என்றவனை முறைத்தவள்..

"அத்தானை அத்தான்னு கூப்பிடாம.. அம்மிக்கல்லுன்னா கூப்பிடுவாக.. சரியான மடசாம்பிராணியா இருக்கிறாறே" என முணுமுணுத்தவாறே சென்றவளை முறைத்துக் கொண்டு காயத்ரி அறைக்குள் சென்றான்....

அறைக்குள் உள்ளே சென்றவள், "அயித்தே" என கத்திய கத்தலில் காயத்ரி குடித்துக் கொண்டிருந்த ஜுஸை மனோரஞ்சன் சட்டை மேலேயே துப்பி விட்டார்....

"அடடட சண்டாளி.. ஜுஸ்ல குளிப்பாட்டி விட்டுட்டாளே" என்பதற்குள் வேகமாக உள்ளே நுழைந்த ஊர்மி காயத்ரியை அணைத்துக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்க்க... அவர்களை சலிப்பாக பார்த்தனர் ஆண்கள் இருவரும்...

அழுதார்களே தவிர ஒரு சொட்டுக்கண்ணீர் கூட வரவில்லை.. வெறுமேன அழுதழுது மூக்கை சீந்தியவள், அருகில் நின்றிருந்த பார்க்கவனின் சட்டையிலேயே துடைத்து விட்டாள்...

"ஹேய்ய். ச்ச்சீசீ" என வேகமாக வெளியேறியவன் தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.. அங்கு நடக்கும் டிராமாவை பாவமாக பார்த்து நின்றது மனோ ரஞ்சன்..

"அயித்தே"

"ஊர்மி குட்டி"...

"உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னதும் எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா??"... என சற்று கவலையுடன் கேட்டவளை கண்டவர்..

"இல்லடா.. ஊர்மி குட்டி"... என ஏதோ சொல்ல வந்தவர்.. மனோரஞ்சனைப் பார்த்து ,

"யோவ்வ்.. இப்படித்தான் மாமியாரும் மருமகளும் பேசும் போது ஒட்டுக் கேப்பியா??"..

"ஏது ஒட்டுக் கேட்டேனா??.. இது என் ரூம்" என வீராப்பாக சொல்லியவரை கண்டு முறைத்தார்...

"இது என் ரூமும் தான்... போய்யா வெளியே" என்ற அதட்டல் போட்ட காயத்ரியையும் ஊர்மியையும் மாறி மாறி பார்த்தவர்... "இதெல்லாம் சரிவரும்னு எனக்குத் தோணலை" என முணுமுணுத்தவரை கண்டு முறைத்தவர்....

"யோவ்வ்.. கதவை சாத்திட்டுப் போ.. பெப்பரப்பேன்னு திறந்து வச்சிட்டுப் போறதை பாரு.. ஒரு காசுக்கு உதவாது.. இதைக் கூட்டிட்டு ஓடிப்போன என்னை சொல்லணும்" என தலையிலடித்தவரைக் கண்ட ஊர்மி,

"ப்ச்... விடுங்க அத்தை அவரு கிடக்காரு.. டம்மி பீசு.... உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லையே" என்றதும் வேகமாக கட்டிலில் இருந்து இறங்கியவர் போட்ட குத்தாட்டத்தில் வாயைப் பிளந்து நின்றாள் ஊர்மி...

"அயித்தே"... என அதிர்ச்சியில் கேட்டவளை,

"ஆமா.. உன் அயித்தே தான்... உன்னை எம்மவனுக்கு கட்டி வைக்க என்ன தகிடுதத்தம் செஞ்சாவது கல்யாணத்தை முடிச்சிற மாட்டேன்" என்றவளை உள்ளார்ந்த அன்புடன் கட்டியணைத்துக் கொண்டாள்....

"ஏன் அயித்தே.. எம்மேலே இவ்ளோ பாசம். நான் உங்கப் பையனுக்கு ஏத்தவ இல்லை அயித்தே.. அவரு ரொம்ப படிச்சிருக்காரு... நான் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன்.. அவரு அழகா இருக்காரு.. ஆனா என்னைப் பாருங்க" என்றதும் தான் ஊர்மியை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர்...

அவளின் யூனிபார்மில் முகத்தை சுழித்தவர். "இது என்ன ஸ்கூல்ல யூனிபார்ம்ல வந்துருக்க"

"அதை ஏன் அயித்தே கேக்குற?? அந்த கிடாமீசை உன் நொண்ணேன் பண்ண வேலை இது... நான் எகிறிக் குதிக்கும் போது தாவணியோட ஜாக்கெட்டும் சேர்ந்து கிழிஞ்சிருச்சி அயித்தே... அதான் கொடியில காயப்போட்டிருந்த என் தங்கச்சி துணியை எடுத்துப் போட்டுட்டு வந்தேன்.. ஒரே வேர்வை நாத்தம் அடிக்குது... உங்க சேலை ஏதாவது இருக்கா" என கேட்க, காயத்ரிக்கு சட்டென மின்னல் வேகத்தில் ஒரு யோசனை தோன்ற...

அவளின் காதில் ஏதோ குசுகுசுவென பேசியவரின் ஐடியாவைக் கேட்டு வாயெல்லாம் பல்லாக... நேராக வெளியே போக சட்டென கதவை திறந்தாள்.. அங்கு கதவில் காதை வைத்து ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மனோரஞ்சன் எதிர்பாராத விதமாக 'தொபக்கடீர்' என பாய்ந்து காயத்ரியின் காலில் வந்து விழுந்தார்...

"அட எலும்புப்பயலே.. என்கால்ல ஏன் வந்து விழுற" என அவரின் மேலேயே ஏறி வெளியே சென்று விட்டார் காயத்ரி..

"அய்யோ... யம்மா" என்றவரின் அலறல் யாருக்கும் கேட்கவேயில்லை... கேட்டாலும் தூக்கி விட ஆள் வேண்டுமே.. எப்படியோ தட்டுத்தடுமாறி எழுந்தவர் யாருக்கோ போன் போட்டு வைத்த பின்பு, "காயத்திரி.. இருடி உனக்கு வைக்கிறேன் பெரிய ஆப்பா" என கருவிக்கொண்டவர் அறியவில்லை காயத்ரி அவரின் எண்ணத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவள் என்று...

வேகமாக மான்குட்டி போல் துள்ளி துள்ளி ஓடி வந்த ஊர்மி, சட்டென கதவை திறக்க.. அங்கு டிரஸ்ஸை கழட்டி விட்டு இடுப்பில் டவலுடன் நின்றிருந்தவனின் பரந்த முதுகின் தோற்றத்தை ரசித்தவள்.. மெதுவாக அடி மீது அடி வைத்து நெருங்கியவள், "அத்தான்" என காதில் கத்தியதும் அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்திருந்தது.

"ஏய்.. அறிவில்லை.. இப்படி தான் ஆம்பளை பையன் இருக்கிற ரூம்ல நுழைவீய்யா??" என சிடுசிடுத்தவனை கண்டு முறைத்தவள்..

"இப்போ என்ன ஒன்னுமே போடாமையா நிக்குறீக. அதான் பட்டாபட்டி (ஷார்ட்ஸ்) போட்டுருக்கீங்கள்ள... அப்புறம் என்ன" என்றவள் உரிமையாக அவனின் கபோர்டை திறந்தவள்... அவனின் ஒவ்வொரு சட்டையும் தனக்கு செட்டாகுமா?? என தன் மேலையே வைத்துப் பார்த்தவள்... கிட்டத்தட்ட பத்து சட்டையாவது வைத்துப் பார்த்தவள் எதுவும் பிடிக்காமல்... அங்கங்கே தூக்கி வீசி கொண்டிருந்தவளின் கண்களுக்கு.... அப்பொழுது தான் அவன் கழட்டிப் போட்ட சட்டையை பார்த்தாள்...

அதை எடுத்துப் முகர்ந்து பார்த்தவளுக்கு அவனின் டியோவின் நறுமணமும் அவனின் ஆண்மை கலந்த வாசனையும் அவளின் மூச்சுக்குழலுக்குள் சுகமாக இறங்கியது... அதை முகர்ந்து பார்த்தவள்... கிறங்கிய குரலில் "நான் இந்த சட்டையை எடுத்துக்கிறேன்" என உதட்டை கடித்தவாறே அவனின் அனுமதியை கூட கேட்காமல் சட்டையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடி விட்டாள்...

"ஏய்ய்.. அது அழுக்கு சட்டைடி" என்ற வார்த்தை காற்றிலே கலந்து போனது...

அவள் ஏன் சட்டையை எடுத்துச் செல்கிறாள் என சிந்தித்தவனுக்கு விடை விரைவிலேயே கிடைத்தது... ஜீன்ஸும் அவனின் சட்டையும் போட்டு வந்தவளைப் பார்த்தவன் கோபத்தில் முறைக்க.. அவளோ அவனின் முறைப்பெல்லாம் தூசி தட்டியவள்.. "நான் நல்லா இருக்கேனா அத்தான்" என்றவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்...

அவனுக்கு பிட்டாக இருந்த சட்டை.. அவள் குள்ளம் என்பதால் அவளுக்கு நீளமாக சற்று தொளதொளவென இருந்தது.. தோளில் இருந்து எப்பொழுதடா கழண்டு விழுவோம்.. என இருந்தது "சுத்தமா நல்லா இல்லை" என்றவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்..

யாருக்கோ போன் பண்ண அரை மணி நேரத்தில் அவளுக்குத் தேவையான அனைத்தும் அவளை வந்து சேர்ந்தது.. இன்னர்ஸ் முதல் கொண்டு...

அவனை ஆச்சர்யமாக பார்த்தவள்... காயத்ரியை பார்த்து கண் சிமிட்டியவாறே அவளுக்கு பிடித்த பிங்க் கலர் லாங்க் ஸ்கேர்ட், லைட் க்ரீன் டாப் போட்டு வந்தவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து விட்டு ஆபீஸ்க்கு சென்று விட்டான்...

"நல்லா இருக்கு" என ஒரு வார்த்தையாவது சொல்வான் என எதிர்பார்த்தவளுக்கு எதையும் சொல்லாமல் சென்றவனை பார்த்ததும் முகமெல்லாம் வாடி வதங்கியது...

காயத்ரி அவளின் வாடிய முகத்தை கண்டவர். "என்னடா தங்கம்.. எதும் சொல்லாம போறான்னு பாக்குறீயா??.. உம்மேலே அக்கறை இல்லாமயா இவ்ளோ டிரெஸ்ஸையும் எடுத்துட்டு வர சொல்லியிருக்கான்... போடா இதுக்கு போய் வாடிக்கிட்டு.. போ அத்தை உனக்குப் பிடிச்ச குடல் குழம்பு, மீன் பொறியல் எல்லாம் வச்சிருக்கேன்... போய் சாப்பிடு தங்கம்" என நாடியைப் பிடித்து கொஞ்சியவரை பார்த்து சிரித்தவாறே,

"பரவால்ல அத்தை... நாம இப்போ குடல் குழம்ப பாப்போம்... அப்புறம் அத்தானை பாத்துக்கலாம்" என துள்ளிக்குதித்து சென்றவளை காயத்ரி பாசமாக பார்த்தார்.. மனோரஞ்சன் கோபமாக முறைத்தார்...

"என்னய்யா இப்படி பாக்குற??" என்றவரை ஒரு சுத்து சுத்தியவாறே,

"நீ உன் அண்ணன் பொண்ணை இறக்கிட்டல்ல... வந்துக்கிட்டே இருக்காடி என் தங்கச்சி பொண்ணு திவ்யா.. அவ அழகுக்கு முன்னாடி... உன் அண்ணன் பொண்ணு அந்த தர்பூசணியை எல்லாம் ஒளிச்சி வச்சிக்கோ.. அவ வருவா... பாருக்கு அவளை தான் புடிக்கும்... அடுத்த மூகூர்த்தத்துல கல்யாணம் தான்.. அப்புறம் டும்.. டும்.. டும்.. தான்"... என்றவரை ஏளனமாக பார்த்தவள்..

"பார்க்கலாம்யா.. ஒட்டடைக்குச்சி... என் அண்ணன் பொண்ணா?? இல்லை உன் தங்கச்சி பொண்ணான்னு??" என தோளை குலுக்கி விட்டு சென்றவர் போகிற போக்கில் ஒரு இடி இடித்து விட... தரையிலேயே மட்ட மல்லாக்க விழுந்து கிடந்தார் மனோரஞ்சன்..

இவர்களை கதி கலங்க வைக்கவென மதுரையில் இருந்து ஊர்மிளாவின் சொந்த பந்தங்கள் டிராக்டரில் ஆட்கள் ஏற்றி வந்து கொண்டிருந்தனர் கோயம்புத்தூரை நோக்கி..

பெங்களூரில் பேஷன் டெக்னாலஜி முடித்து விட்டு தன் ஸீரோ சைஸ் உடம்புடன் ஒல்லி பெல்லியாக பூனை நடையிட்டு நடந்து வந்து கொண்டிருந்தவளை ஏர்போர்ட்டில் இருந்த அனைவருமே பார்த்து ஜொல்லு விட்டு கொண்டிருந்தனர்.. அவளின் ஆடையில் பாதி அங்கங்களை மறைக்காமல் இருந்ததே காரணம்...

இதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் குடல் குழம்பை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..

பார்க்கவன் யாருக்கு?? தர்பூசணி ஊர்மிளாவுக்கா?? இல்லை ஒல்லி பெல்லி திவ்யாவாவுக்கா??
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3

திவ்யா பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வந்திறங்கியவள் நேராக வந்தது பார்க்கவ் வீட்டிற்கு தான்.. அவளின் டிரஸ்ஸை பார்த்த காயத்ரிக்கு மயக்கம் வராத குறை தான்... அவ்வளவு கவர்ச்சியாக இருந்தது...

ஆம் அவள் எடையே நாற்பது கிலோவை தாண்டாதது போல் அவ்வளவு ஒல்லியாக இருந்தாள்.... ப்ளாக் கலர் டாப், மினி ஸ்கர்ட் அணிந்திருந்தவளை பார்க்க பார்க்க மனதில் சிறு பயம் கவ்வியது காயத்ரிக்கு...

உள்ளே நுழைந்தவள் நேராக மனோரஞ்சனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவும், அவரோ மிதப்பாக காயத்ரியை பார்த்தவர்... "பாத்தியாடி.. எங்க வீட்டுப் பழக்கத்தை... உன் அண்ணன் பொண்ணு தான் வந்தாளே இப்படி மரியாதை கொடுத்தாளா??.. ஓ ன்னு ஒப்பாரி தான் வச்சா" என்றவரின் காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தவர்...

"என்ன ஒட்டடைக்குச்சி கொழுப்பா??.. நாலு நல்லி எலும்பையும் ஒடைச்சி போட்ருவேன் ஜாக்கிரதை" என்றவர் நேராக ஊர்மியை தேடிச்செல்ல..

அவளோ, "எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன?? என்பதைப் போல்" குடல் குழம்பை புல்லா ஒரு கட்டு கட்டியவள் குப்புற படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்....

"ஏய்ய்ய். எந்திரிடி. ஏய்.. எந்திரி... என் அண்ணன் பெத்த அரை லூசே.. எந்திரிச்சி தொலைடி" என தட்டி எழுப்ப.... அவளோ கும்பகர்ணனின் கொள்ளுப்பேத்தி போல தூங்கிக் கொண்டிருந்தாள்...

"இது சரி வராது" என நினைத்தவர் காலை கொண்டு வேகமாக அவளின் பின்புறத்தில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க.. அரக்க பரக்க எழுந்து உட்கார்ந்தாள் ஊர்மிளா...

தன் முன்னால் இருந்த காயத்ரியை பாவமாக பார்த்தவள், "அயித்தே" என்பதற்குள் வேகமாக எழுப்பி அவளை பாத்ரூமுக்குள் தள்ளியவர் அவள் முகத்தை வேக வேகமாக சோப்பு போட்டுக் கழுவியவர்.. பறபறவென துண்டை எடுத்து அவளின் முகத்தை துடைத்து.... பவுடரை எடுத்து அப்படியே அவளின் முகத்தில் தட்டியவர்.. வேக வேகமாக அவளுக்கு டிரஸை மாற்றுவதற்காக அவளின் டாப்பில் கை வைக்கவும்.... தன் கைகளால் மார்பை குறுக்காக வைத்து மறுப்பாக தலையசைத்தவள்..

"அயித்தே.. நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது.. டிரஸ் தானே நானே மாத்துறேன்".. என்றவளைப் பார்த்து..

"சரி.. சரி.. டிரஸ்ஸை மாத்து
. இங்க பாரு அவ சும்மா தாருமாறா வந்திருக்கா.. இப்போ பாரு (பார்கவ்) வர்ற டைம்.. அதுனால நீயும் சும்மா தூக்கலா மேக்கப் போட்டு வரணும்" என கையிலிருந்த ஜீன்ஸை, டீஸர்ட்டை அவளின் கையில் கொடுத்தார்...

காயத்ரி சென்ற பின் டிரஸ்ஸை போட்டுப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறைதான்.. அவ்வளவு குறைவாக இருந்தது... மினி ஸ்கேர்ட் அன்ட் டீஷர்ட் தான் இருந்தது.. "இந்த கருமத்தை யாரு போடுறது" என நினைத்தவள் வேக வேகமாக கழட்டி எறிந்தவள்... அங்கிருந்த வெள்ளை கலர் சுடிதாரில் ஆங்காங்கே ப்ளூ கலர் எம்ப்ராய்டரி போட்ட சுடிதாரில் கீழே வந்தவளை கடுப்புடன் பார்த்தார் காயத்ரி...

"ஏன்டி நான் உன்கிட்ட என்ன டிரெஸ் கொடுத்துட்டு வந்தேன்??" என சிடுசிடுத்தவரை கண்டவர்..

"அயித்தே.. என்னால அந்த கருமத்தை எல்லாம் போட முடியாது... டிரெஸ்ஸா அது.. ச்சீய்ய்.. உவ்வேக்க்" என்றவளை முறைத்தவர்...

"என்னடி உவ்வேக்.. அங்கே பாரு" என கைகாட்டிய திசையில் பார்த்தவளுக்கு இதயம் சுக்குநூறாக வெடிக்காத குறைதான்....

பார்க்கவ்வின் மிக அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் திவ்யா... அவளின் டிரெஸ்ஸே பாதி உடம்பை அப்படியே வெளிகாட்டியது...

"என்ன அத்தை இந்த பொண்ணு... இப்படி வந்துருக்கு.. யாரு இந்த பொண்ணு அத்தான் பக்கத்துல ரொம்ப உரிமையா உக்காந்துருக்கு.. தங்கச்சியா??"

"ஏது.. தங்கச்சியா?? உனக்கு சக்காளத்திடி... அந்த ஒட்டகத்தோட தங்கச்சி பொண்ணு... எப்படி வந்துருக்கான்னு பாரு.. நல்லா கண்ணை தொறந்து பாருடி.. பெங்களூர் தக்காளி மாதிரி மினுங்குறா பாரு.. எப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்துருக்கான்னு. .. எனக்கென்னமோ அவளுக்குத் தான் பாருன்னு தோணுது.. உனக்கு கிடையாது.. பாரு உனக்கு கிடையாது.. உனக்கு கிடையாது பாரு" என கருமியைப் போல் புலம்பவே ஆரம்பித்து விட்டார்..

"அயித்தே.. அத்தான் எனக்குத் தான்"... என முகத்தை சுழித்தவள் அப்பொழுது தான் கவனித்தாள்.. பார்கவ் பேசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி அவன் கைகளை நெற்றியில் வைத்து அழுத்துவதும் முகமெல்லாம் சற்று சோர்ந்ததை போல் இருந்தையும்... ஏனோ பார்கவின் சோர்வான முகத்தைப் பார்த்ததும் மனதில் சிறு வலி தோன்ற.. வேக வேகமாக கிச்சனுக்குள் சென்றவள் காபி போட்டு வந்து பார்கவ் நேராக நீட்டினாள்..

"எப்பொழுதடா எழுந்து செல்வோம்" என்ற நிலைமையில் இருந்த பார்கவ்வுக்கு தன் முன் நீட்டியிருந்த காபி கப்பை பார்த்தவனுக்கு மனதில் சொல்லாணா நிம்மதி தோன்றியது"...

அப்பொழுது தான் ஊர்மியை முழுதாக பார்த்தான்.. கள்ளங்கபடமில்லாமல் பேசுவதாலோ என்னவோ அவள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை ஒன்று தவழும்... அழகிய இரு புருவ வளைவுகளுக்கு நானே ராணி என்னும் விதமாய் அழகிய சிறு பொட்டு வீற்றிருந்தது.. கூர்நாசியில் கண்ணுக்கு தெரியாத சிறு மூக்குத்தி ஒன்று இருந்தது.. செவ்விதழ்களில் எந்தவித சாயமும் இல்லாமல் இயற்கையாக சிவந்திருந்தது... அழகிய இளங்கழுத்தை தாண்டி கீழே சென்றவனின் பார்வையை சட்டென மாற்றி விட்டான்... "பார்கவ் நீ சரியில்லை.. உனக்கு என்னமோ ஆகிடுச்சி" என வேகமாக எழுந்து சென்று விட்டான்...

அவன் மனதில் ஊர்மி இருக்கிறாளா?? என கேட்டால் அடித்து சொல்வான் இல்லை என்று.. ஆனால் இதுவரை யாரையும் பார்க்காத கண்கள்.. அவளைத் தழுவியதைக் கண்டவனுக்கு முதன் முதலாக இளமையின் தேடலை உணர்ந்தான்... அவளைத் தன் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.. நாளை காயத்ரியிடம் சொல்லலாம் என நினைத்தவனுக்கு நாளை அவன் வாழ்வையை புரட்டிப் போடும் என்பதை அறியவில்லை...

அவன் ஊர்மியை அளவெடுப்பதை போல் பார்த்ததை மனோரஞ்சன் கவனித்து விட்டார். "இப்படியே விட்டால்.. காயத்ரி ஜெயித்து விடுவார்??" என நினைத்தவர் அதிரடியாக ஒரு முடிவெடுத்தார்..

அடுத்த நாள் காலை பார்கவ் ஆபீஸ் செல்ல ஆரம்பிக்கும் பொழுதே மனோரஞ்சன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாயவுமே பார்க்கவன் பதறி விட்டான்.. அவரை ஓடி வந்து அணைத்தவன் "டாடிஈஈஈ" என சத்தத்தில் அனைவருமே ஓடி வந்தனர்...

ஊர்மி ஒரு புறம் கைத்தாங்கலாக பிடிக்க வர அவளைப் பிடித்து தள்ளி விட்டவர் திவ்யாவின் கையைப் பிடித்து கொண்டார்...

காயத்ரியோ ஊர்மியை பிடி பிடிவென்று பிடித்துக் கொண்டார்.. "அறிவில்லை உனக்கு??" என்ற காயத்ரியிடம் அழுது கொண்டே "மாமாவுக்கு நெஞ்சு வலிக்குது அயித்தே" என அழுதவளை கண்டு எரிச்சலானவர்....

"அவன் கிடக்குறான்.... டெட் பாடிஈஈஈ.... நீ வா.. நாம சாப்பிட பேகலாம்" என்றவரை சலிப்பாக பார்த்த பார்கவ்..

"மாம்.. என்ன பேசுறீங்க. டாட் இஸ் வெரி சீரியஸ்" என இங்கிலிஸீல் வெளுத்து வாங்கியவனை, "இதுக்குத் தான் இங்கிலீஸ் மீடியத்துல சேர்க்க வேண்டாம்னு சொன்னேன்... கேட்டானா அந்த ஒட்டகச்சிவிங்கி" என சிடுசிடுத்தவர்... "சரி.. சரி.. ஹாஸ்பிட்டல் கூப்ட்டு போகலாம். அதுக்குள்ள டெட்பாடியா. மாறிறாமா??" என முணுமுணுத்தவர் மனோ ரஞ்சனின் காதில் குனிந்தவர்.. "ஹேய்ய்.... துடப்பக்கட்ட.. எதுக்கு இப்போ நெஞ்சு வலின்னு டிராமா பண்ற" என்றவரை அதிர்ச்சியாக திரும்பி பார்த்தார் மனோரஞ்சன்...

"எப்படி கண்டுபிடிச்ச?" என பார்வையாலே கேட்டவரை "என்ன லுக்கு... உன்கூட இருபத்து ஒன்பது வருஷமா குடும்பம் நடத்துறேன்.. எனக்கு தெரியாதா?? நீ எப்போ எப்படியெல்லாம் நாடகம் போடுவேன்னு" என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவரை கண்கள் இடுங்க பார்த்தார் காயத்ரி..

"இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்டி நான் ஏன் நடிக்கிறேன்னு??" என்றவரின் கண்கள் மேலே சொருகி மூச்சுத் திணற, "பார்க்கவ் பயந்தே விட்டான்"

"டாட்.. டாட்" என அழுதவனின் கைப்பிடித்தவாறே, "பார்கவ்... அப்பாவுக்கு ஒரு கடைசி ஆசைப்பா" என்றவரின் வாயைப் பொத்தியவன்,

"ப்ளீஸ் டாடி. அப்படி மட்டும் சொல்லாதீங்க" என்றவனை மறுப்பாக இருபக்கமும் தலையாட்டியவர்.. "இல்லை பார்கவ்.. உன்னை சுத்தி சில விஷப்பூச்சிகள் இருக்குப்பா" என காயத்ரியையும் ஊர்மியையும் பார்த்து சொன்னவரை முறைத்த காயத்ரி, "எலும்பனுக்கு உசிரு போற நேரத்துலையும் குசும்பை பாத்தியா??" என ஊர்மியை பார்க்க அவளோ தன் மாமனுக்காக தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்நாள்...

"அடடட.. கிராதஹி.... கட்டின பொண்டாட்டி நானே கல்லு மாதிரி நிக்கிறேன்.. இதுக எல்லாம் ஏன் ஓவர் பெர்பார்மென்ஸ பண்ணுதுன்னு தெரியலையே.. சரி நாமளும் நடிப்போம்.. அப்போதான் உலகம் நம்மளை நல்லவன்னு நம்பும்",

"என்னங்ங்கக" என ஓடிச்சென்று மனோரஞ்சன் மேல் ஓடிப் போய் விழவும்.. அவருக்கு உண்மையிலேயே நெஞ்சு வலிப்பதை போல் இருந்தது...

"ஏய்ய்.. குந்தாணி எந்திரிடி" என்றவரின் காதில்.. "ஆங்.. நான் அழுதா தான் உலகம் என்னை நல்லவன்னு நம்பும்.. நீ ஏன் டிராமாப் போடுறேன்னு கண்டுபிடிச்சிட்டாண்டா.. எலும்புப்பயலே
நெஞ்சுவலின்னு டிராமா பண்ணி அந்த நரம்பியை எம்புள்ளைக்கு கட்டவா பாக்குற" என கிசுகிசுத்தவர்...

"அய்யோ.. ராசா என்னை விட்டுப் போயிராதே" என காட்டுக்கத்தலாய் கத்த,

"அத்தை ஏன் இவ்ளோ சவுண்ட் கொடுக்கிறீங்க??" என்ற திவ்யாவை முறைத்தவர்....

"உனக்கென்னடி வந்திச்சி... உசிருக்குப் போராடுறது உம் புருஷனா?? எம் புருஷன்டி... அய்யோ என் ராசாஆஆஆ" என அவரின் நெஞ்சில் ஓங்கி ஒரு அடி அடிக்க.. மனோரஞ்சனை பிடித்திருந்த பார்க்கவும் அவரின் மேலேயே கீழே விழுந்து கிடந்தான்.. முதலில் மனோரஞ்சன் தரையில் கிடக்க.. அவரின் மேல் பார்க்கவ் கிடந்தான்.... காயத்ரி பண்ணிய அலப்பறையில் உண்மையிலேயே கண்கள் எல்லாம் மேலே சொருகி மயங்கி விழுந்து விட்டார் மனோரஞ்சன்...

"வா.. ஊர்மி... பென்சிலை நாளைக்கு டிஸ்போஸ் பண்ணிக்கலாம்".. என அழுது கொண்டிருந்தவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்...

 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4

டாக்டர் வீட்டிற்கே வந்து மனோரஞ்சனை செக் பண்ணியவர் வெறும் அசிடிட்டிக் தான் என்று சொல்லியவர் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்குமாறு சொல்லி சென்று விட்டார்....

திவ்யா தான் பொறுமிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு எப்பொழுதுமே தான் அழகு என்ற அகந்தை நிறையவே உண்டு.. தன்னைப் பார்த்து மயங்காதவர் எவரூம் இல்லை என்ற இறுமாப்பில் சுத்திக் கொண்டிருந்தாள்... பார்க்கவை திருமணம் செய்ய சம்மதம் சொன்னதற்கு ஒரே காரணம்.. "அவனை தன் கைம்பாவையாய் மாற்றி விடலாம்" என்பதால் தான்... ஆனால் பார்க்கவின் பார்வை ஊர்மிளா மீது விழுந்தது.. அவள் காபி கொண்டு நீட்டியதும் நன்றியுணர்வுடன் பார்த்தது அனைத்தையும் கவனித்திருந்தாள்...

திவ்யாவிற்கு பார்கவ்விடம் அதிகம் ஈர்த்தது.. அவனின் அமைதியும் அடங்கும் பான்மையும்... அவளின் முழு வெறுப்பையும் சம்பாதித்திருந்தனர்.. காயத்ரியும், ஊர்மியும்...

பார்க்கவை கல்யாணம் செய்வதற்கு ஒரே வழி.. மனோரஞ்சன் மட்டுமே.. காயத்ரியின் மேல் உள்ள வெறுப்பையெல்லாம் தன் அன்னையுடன் வன்மத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்...

"என்னடி சொல்ற?? காலையில அவ்ளோ கூத்து நடந்திருக்கு.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்னடி? ஆமா எங்கண்ணன் எப்படி இருக்கான்.. அவனுக்கு ஒன்னும் பிரச்சனையில்லல்ல?" என தன் அண்ணனின் அக்கறையைப் பற்றி விசாரித்தவரை கண்டு கடுப்பானவள்...

"ம்மா. நீ வேற, அவரு நல்லா தான் இருக்காரு... டாக்டர் இப்போ தான் பார்த்துட்டு ஒரு பிரச்சினையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க"... ஆனா என இழுத்தவளை

"என்னாச்சி திவி.. ஆனா ஊனான்னு இழுத்துக் கிட்டுருக்க??"

"ப்ச்... இங்கே ஒரு குண்டு பூசணிக்கா இருக்கும்மா . அவளை தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் உன் நாத்தனாரு அந்த சப்பான் மூஞ்சிக்காரி எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருக்கா... அது மட்டுமில்லாம பார்க்கவ்வும் அவளை தான்மா பாக்குறான்"

"அடியே... கூறு கெட்டவளை இதை சொல்லவாடி.. நான் உன்னை இங்க கூட வரவேண்டாம்னு கோயம்புத்தூருக்கு அனுப்பி வச்சேன். இங்க பாரு எங்க அண்ணன் பையன் தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்... அவ்ளோ தான்"

"ம்ம்.. சரிம்மா.. இனி நான் பாத்துக்கிறேன்"

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த காயத்ரியின் காலை யாரோ சுரண்டுவதைப் போல் தோன்ற... "ப்ச்ச்" என காலை உதறியவாறே திரும்பி புரண்டு படுத்தார்...

மறுபடியும் அதே போல் காலை சுரண்டவும் பக்கத்தில் படுத்திருந்த மனோரஞ்சனை எட்டி மிதித்தவர்.. "ஒட்டடைக்குச்சி .. சும்மா இருக்க மாட்ட.. காலை கால சுரண்டிட்டு இருக்க... சுரண்டுற கையை ஒடைச்சி அடுப்புல வச்சிருவேன் ஜாக்கிரதை"... என கத்தி விட்டு தூக்கத்தில் மறுபடியும் புரண்டு படுத்தார்..

அவர் எட்டி மிதித்ததிலேயே எழுந்தவர் நேராக பார்க்கவின் அறைக்கு ஓடி விட்டார்.. அவருக்கு தனியே படுப்பது என்றால் அப்படி ஒரு பயம்... காலையில் எப்படி சண்டை போட்டாலும் இரவு படுக்கும் பொழுது காயத்ரி கையில் காலில் விழுந்தாவது தன்னருகில் படுக்க வைத்து விடுவார்.

மனோரஞ்சன் எழுந்து சென்ற பின்பு மறுபடியும் காலை சுரண்டுவதை போல் இருக்க..எட்டி ஒரு மிதி மிதிக்க "அய்ய்யோ... யம்மா" என்ற அலறலுடன் மல்லாந்து விழுந்து கிடந்தாள் ஊர்மிளா....

அவளின் அலறலை கேட்டவர் கடகடவென எழுந்து லைட்டை ஆன் பண்ணியவர். சத்தியமாக அங்கு ஊர்மிளாவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது...

இங்கே என்னடி பண்ற?? குந்தாணி" என சிடுசிடுத்தவரை கண்டவள்...

"எனக்கு ஐஸ் வேணும் வாங்கித் தா அயித்தே" என்றவளை கடுப்பாக பார்த்தவர் ..

"என்னது ஐஸ் வேணுமா?? எங்க அண்ணன் உன்னை பெத்ததுக்கு அஞ்சி கிலோ அரிசி மூட்டை பெத்துருந்தாருன்னு வச்சிக்கோ அவிச்சே தின்னுருப்பேன் .. எனக்குன்னு வந்து சேருது பாருங்க" என கோபத்தில் கத்தியவரை பார்த்து முறைத்தவள்...

"இப்போ ஏன் அர்த்த ஜாமத்துல கத்துறீங்க... எனக்கு யாரும் ஐஸ் வாங்கித்தர வேண்டாம் போங்க.. நீங்க போய் தூங்குங்க??" என உதட்டை சுழித்தவாறே, வெளியே சென்றவள் நங்கென எதன் மீதோ மோதி நின்றாள்...

"ஏங்க.. வர்ற ஆளு பாத்து வரமாட்டீங்களா??" என கடுப்புடன் கத்தியவாறே ஏறிட்டுப் பார்க்க அங்கு பார்கவ் தான் முறைத்துக் கொண்டிருந்தான்....

அவளை முறைத்துக் கொண்டே தன் வாட்சை திரும்பி பார்த்தவனுக்கு, மணி பதினோன்றரை என காட்டியது.. "இந்த அன்டைம்ல நீ இங்க என்ன பண்ணுற??.. அம்மா கூட தான் படுத்திருந்தியா??" என்றவனை பார்த்து முறைத்தவள்..

"யாரும் என்கிட்ட பேச தேவலை.. ஒரு ஐஸ் கேட்டது குத்தமா?? ஆளாளுக்கு நம்மளையே டார்கெட் பண்ணி திட்டுறாங்க" என புலம்பிக் கொண்டே செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன் "என்ன வேணும்" என அழுத்தமாக கேட்டவனை கண்டு முறைத்தவள்.

"அதான் சொன்னேனே. ஐஸ் சாப்பிடணும்னு. எங்க ஊர்ல குச்சி ஐஸ், கோன் ஐஸ் எல்லாம் சாப்பிட்டுருக்கேன்.. இது ஏதோ குல்பி ஐஸாம்.. இப்போ தான் மணியடிச்சி சொல்லிட்டுப் போனான்.... ப்ளீஸ் அத்தான் வாங்கித்தா அத்தான்" என அவன் முழங்கையைப் பற்றி சுரண்டி முகத்தை சுருக்கி கெஞ்சியவளைப் பார்க்கும் பொழுது ஏனோ மறுக்க தோன்றவில்லை ..

"சரி.. வா"

"ஹைய்யா.. ஜாலி.. ஜாலி.. இரு அத்தான் வர்றேன்" என ரூமை நோக்கி சென்றவள் வரும் பொழுது நைட்டியின் மேலே ஷால் ஒன்றை சுற்றிக் கொண்டு வந்தாள்..

"போலாம் அத்தான்" என அவனின் முழங்கையை உரிமையாக பற்றியவள்... ஏதோ ஏதோ பேசிக் கொண்டே வந்தாள்... ஆனால் பார்க்கவின் மொத்த கவனமும் அவள் மேலே தான் இருந்ததே தவிர.. அவளின் பேச்சில் இல்லை..

ரெண்டு தெரு தள்ளி நின்று ஐஸை வாங்கியவர்கள் அங்கிருந்தே சாப்பிட்டுக் கொண்டே நடந்து வந்தனர்...

"ஊர்மி" என்றழைத்தவனின் குரல் அவள் செவியில் விழுந்தாள் தானே.. அவள் தான் ஐஸ்கிரீமை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாளே.. இதோடு மூன்றாவது ஐஸ்கிரீம் உள்ளே சென்றது....

"ஊர்மி" என சத்தமாக கூப்பிட்டதும் சட்டென கையில் இருந்த ஐஸ்கிரீம் கீழே விழுந்து விட.. "ஏன் அத்தான்.. இப்டி கத்துன?? பாரு.. ஐஸ்கிரீம் போச்சி.. எல்லாம் உன்னால தான்" என கீழே விழுந்த ஐஸ்கிரீமையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

"ஸாரிடா.. சும்மா தான் கூப்பிட்டேன்" என்றவனின் வருத்தத்தை கவனித்தவள்... "சரி பரவால்ல அத்தான் விடு"

"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா??"

"ம்ம்.. கேளு அத்தான்"..

"டூ யூ லவ் மீ"

"அப்படின்னா??"

"ஓஹ்.. உனக்கு இங்கிலீஸ் தெரியாதுல்ல்... நீ என்னை லவ் பண்றீயா??" என்றவனை விழி விரித்து பார்த்தவள்...

"இல்லை அத்தான்... நான் உன்னை லவ் எல்லாம் பண்ணலை.. உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் அவளோதான்" என்றவளின் முழங்கையை பற்றி இழுத்தவன் ...

"என்ன உளர்ற??.. நீ என்னை லவ் பண்ணலைன்னா அப்புறம் எதுக்குடி ஊரை விட்டு ஓடி வந்தே??" என்றவனின் கையை விலக்கியவாறே,

"உன்னைக் கல்யாணம் பண்ணிக்க தான் வந்தேன் த்தான்" என்றவளை அதிர்ச்சியில் திரும்பி பார்த்தான்.. அவள் தன்னைக் காதலிக்கிறாள்.. அதனால் தான் வீட்டை விட்டே ஓடி வந்திருக்கிறாள் என இதுவரை நினைத்துக் கொண்டிருந்தான்..

ஆனால் அவளோ "உன்னை காதலிக்கவில்லை.. கல்யாணம் பண்ணிக்க தான் வந்தேன்" என சொல்லியவளின் பதிலில் குழம்பித் தான் போனான்.. நடுரோட்டிலேயே தலையில் கை வைத்து அமர்ந்தவன்..

"சத்தியமா நீ சொல்றது புரியலடி" என்றவனின் அருகில் அமர்ந்தவள் அவனின் தோளில் சாய்ந்தவாறே, "அத்தான்.... நான் வயசுக்கு வந்த நாள்ள இருந்து அயித்தே உன் போட்டோ காமிச்சி.. இவன் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன்னு சொல்லிட்டாங்க... நானும் அதை அப்படியே எம்மனசுல பதிய வச்சிட்டேன்.. இப்போ உன்னோட இடத்துல இன்னொருத்தரை வச்சிப் பார்க்க முடியாம தான்..கல்யாணம் பண்ண புடிக்காம ஊரை விட்டு ஓடி வந்தேன்" என்றவளின் கண்ணீர் கன்னத்தை தாண்டி வழிந்தது....

அவளுக்கு தன் மேல் மலையளவு காதல் இருந்தாலும் அதை அவள் உணரவேயில்லை என்பதை புரிந்து கொண்டான்..

"நான் கிடைக்கலன்னா என்ன பண்ணுவ??"

"செத்துருவேன் த்தான்" என சட்டென பதில் சொன்னவளின் இதழை அழுத்தமாக சிறை பிடித்தான்.... அவளின் காதலை உணர்ந்தவனுக்கு இவள் என்னவள் என்ற எண்ணமே மேலோங்க... அவளின் இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தான்.... இடைவெளி விட்டு விட்டு இதழை சிறைபிடித்தவனின் வேகத்தையும் தாபத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினாள்...

அவனைத் தள்ளிவிட முயன்றவளுக்கு அவன் இதழ் செய்த மாயம்.. அவனின் கழுத்தில்லா டீஷர்ட்டை அழுத்தமாக பற்றியது... அவளின் சம்மதம் அறிந்தவன் மேலும் மேலும் முன்னேற, அவள் மூச்சுக்கு திணறியபின்னே அவளை விடுவித்தான்...அவளின் இதழின் இருந்த ஐஸ்கிரீமின் சுவையோடு அவள் இதழில் சுரந்த உமிழ்நீரையும் சேர்த்தே விழுங்கினான்....

பத்து நிமிடங்களாய் அவன் இதழ் செய்த மாயத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அவனிடம் தன் இதழ்களை பிரித்தவள் தன் இதழ்களை அழுத்தமாக துடைத்தவாறே அவனின் தோள்பட்டையிலேயே அடித்தவள்.
"அத்தான்.. நீ ரொம்ப மோசம்.. கெட்ட பையன் நீ... உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன். இரு காலையிலே அயித்தே கிட்ட. சொல்லுறேன்" என வேகமாக ஓடி சென்றவளின் கோபத்தை ரசித்தவன் வாய் விட்டு சிரித்தவாறே, "போடி... போ.. யார்கிட்ட வேணும்னாலும் சொல்லு" என சிரித்தவனின் சிரிப்பை கேட்டவள் அங்கிருந்து ஓட்டமாய் ஓடி விட்டாள் வீட்டிற்கு...

இவர்கள் இருவரையும் கண்களில் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா... ஊர்மிளாவும் பார்க்கவும் வெளியே வரும் பொழுதே கவனித்தவள்.. அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டது அவன் முத்தம் கொடுத்தது என ஒன்று விடாமல் அனைத்தையும் பார்த்து விட்டாள்.... நாளையே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றாள்...

வீட்டிற்கு வந்த பார்கவ் தன் இதழ்களை கண்ணாடியில் பார்த்து ரசித்தவாறே இனிய கனவுடன் தூங்கிக் கொண்டிருந்தான்... சில மணி நேரத்திலேயே முகமூடி அணிந்த மர்ம நபர்களால் பார்க்கவ் கடத்தப்பட்டான்.....
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5

தன்னைக் கடத்தியிருக்கிறார்கள் என்பதை கூட அறியாமல் நன்றாக கட்டிலில் உருண்டு ஊர்மியுடன் கனவிலேயே வாழ ஆரம்பித்தான்.... அவன் இருந்தது பாழடைந்த பங்களாவிலோ இல்லை யாருமில்லா காட்டில் இருக்கும் வீட்டிலோ அல்ல... கோயம்புத்தூரில் மிகப்பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டல் சொகுசு மெத்தையில் அல்லவா.. அதுதான் தூக்கம் சொக்கியது...

காலையில் காயத்ரியிடம் ஊர்மியைப் பிடித்திருப்பதாக சொல்லி ஊரறிய அவளை திருமணம் செய்ய வேண்டுமென நினைத்தான்... சற்று நேரத்திலே மூச்சு விடுவதற்கு திணறியவன் "ம்ம்ம்" என்ற முணங்கலில் அங்கிருந்த ஒருவன், "அண்ணேன் முழிச்சிட்டாரு அண்ணேன்".. என்ற குரலில் அடித்து பிடித்து எழுந்தான் பார்க்கவ்...

தன்னறையில் வேறொருவனின் குரல் கேட்கவுமே பதட்டமாக எழுந்தவன்... எழுந்தவனையே குறுகுறுவென பார்த்தபடி ஒருவன் இருக்க.. ஒருவன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.. மற்றொருவன் வாழைப்பழத்தை தின்று தோலை பளபளவென இருந்த மார்பிள்கல் தரையிலேயே வீசி கொண்டிருந்தான்....

அவர்களின் செய்கை சிரிப்பு வந்தாலும் ஆட்கள் பார்ப்பதற்கே பயமுறுத்துவதைப் போல் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, முறுக்கிய மீசை, புதர் போல் மண்டிக்கிடக்கும் தாடி என உருவமே பயமுறுத்துவதைப் போல் இருந்தது...

"ஹேய்.. நீங்க எல்லாம் யாரு?? எப்படி என் ரூமுக்குள்ள வந்தீங்க??" என பதட்டத்திலும் ஒரு வித பயத்திலும் கேட்டவனை, குறுகுறுவென பார்த்து கெண்டிருந்தவன் பார்க்கவின் முகத்தை மிக மிக அருகில் உற்றுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்...

அவன் பார்வையே பார்த்த ஜெர்க்கானவன்.. "ஒரு வேளை இவன் அவனா இருப்பானோ??". என மனதுக்குள் நினைத்தவாறே "ஏன்டா.. இப்படி குறுகுறுன்னு பாக்குற?" என்றவனின் ட்ரீம் செய்யப்பட்ட தாடியை வருடி விட...பார்க்கவோ கூச்சத்தில் நெளியவே ஆரம்பித்து விட்டான்....

"ஏய்ய்.. டோன்ட் டச் மீ" என கத்தவும் என்னவோ ஏதோவென்று சட்டென கையை பின்னிழுத்த அடியாளுக்கு அவனின் கன்னங்களை மேலும் வருட தான் ஆசை வந்தது.... புல் போன்று வளர்ந்திருந்த தாடியையும் அவனின் ட்ரீம் செய்யப்பட்ட தாடியையும் ஒப்பிட்டுப் பார்த்தவனுக்கு அவனின் தாடி தான் மிகவும் பிடித்தது...

"அண்ணேன்.. பாத்தியா அண்ணேன். தம்பி எம்புட்டு அழகா இங்கிலீஸ் பேசுது.. எவ்ளோ அழகா தாடி வச்சிருக்கு.. நம்ம புள்ளை கொடுத்து வச்சது" என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தான் பார்க்கவ்.

"அப்படியாஆஆ" என இன்னொருவன் வந்து மறுபடியும் பார்க்கவின் தாடியை வருட.. "ச்சீ... கையை எடு" என அவனின் கையை தட்டி விட்டவன்.. பெட்டிலே எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டான்...

பெட்டிலேயே நிற்காமல் கபடி விளையாடியபடி, "இங்கே பாருங்க... நீங்க எந்த மாதிரி ஆளுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிப் போச்சி... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி பையன் நானில்லை... நான் ஒரு பொண்ணை மனசார நேத்து தாண்டா விரும்ப ஆரம்பிச்சேன்" என்றவனின் கீச்சுக்குரலை தாண்டி, கம்பீரமான குரல் ஒன்று அவனை மிரட்டியது...

"அப்புறம் என்ன ம***க்குடா.. எம் பொண்ணை கல்யாணம் பண்றேன்னு சொல்லி ஊரை விட்டு ஓடி வர சொன்ன??" என்ற கழுதைக்குரலை எங்கேயோ கேட்டது போல் இருக்க.. பெட்டிலிருந்தே தலையை சாய்த்தபடி எட்டிப் பார்த்த பார்க்கவனுக்கு பக்கென இருநதது..

"இந்தாளாஆஆ.. அப்போ இதுக எல்லாம் இந்தாளு அடியாளா??.. போச்சி.. போச்சி.. ஊர்மியை ஊருக்கு கூட்டிப் போயிடுவாறே" என பதட்டத்தில் எச்சில் முழுங்கினான்.. ஆம் வந்தது வேறு யாருமில்லை... கிடாமீசை என ஊர்மியால் செல்லமாக அழைக்கப்படும் அவளின் தந்தை பரமசிவம்.. காயத்ரியின் உடன்பிறந்த அண்ணன்... பார்க்கவின் தாய் மாமன்...

அவனோ என்ன சொல்வதென தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க.. அருகில் நின்ற அடியாளோ நேரம் காலம் தெரியாமல், "ஏண்ணேன்.. இந்த மாதிரி கலரா பொறக்கணும்னு என்ன ண்ணேன் செய்யணும்" என குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தவன் கேடகவும்.. அவனை கடுப்புடன் முறைத்தவன்... "இவன் வேற நிலைமை புரியாம??"..

"இந்த மாதிரி கலரா வரணும்னா பால்டாயில குடி... கலரா ஆயிருவ" என கடுகடுப்புடன் சொன்னவனின் பேச்சையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு "சரிண்ணேன்.. நான் போய் பால்டாயில குடிச்சிட்டு வர்றேன்" என்றவனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தான்..

"ஏது.. பால்டாயில குடிக்கப் போறியா??.. முண்டம் செத்து தொலைஞ்சிருவடா??" என்றவனின் கத்தலெல்லாம் காதிலயே வாங்கிக்காமல் சென்றான்...

"ப்ச்.. எக்கேடா கெட்டுப் போய்த்தொலை" என்றவாறே கட்டிலில் இருந்து இறங்கியவன் அங்கு தலைமையாய் நிற்பவரை பார்த்து சிரித்து, "இங்க பாருங்க மாமா" என்றதும்

"யாருக்கு யார்ல மாமா??.. நான் உனக்கு மாமாவா?? எம் பொண்ணை ஏமாத்தி ஊர்ல இருந்து ஓடி வர வைச்சிட்டு... இன்னும் அந்தப் புள்ளையே கல்யாணம் கூட பண்ணாம.. எம் புள்ளையே நடுரோடுன்னு கூட பார்க்காம முத்தம் கொடுத்திருக்க" என சீறியவரை

"நாம முத்தம் கொடுத்ததை பார்த்து தொலைஞ்சிட்டாரு போல" என அதிர்ச்சியுடன் பார்த்தவன்... "இல்லை மாமா.. நான் எல்லார் முன்னாடியும் கிரெண்டா கல்யாணம் பண்ணனும்னு" என்பதற்குள் அவன் பேசுவதை காதிலேயே வாங்காமல் நேராக காயத்ரிக்கு போன் அடித்தார்..

தன் அண்ணனின் போன் நம்பரை பார்த்தவுடனே, "என்னண்ணே" என்றவளை பேச கூட விடாமல், "இங்க பாரு காயத்ரி.. நீ என்ன பண்ணுவீயோ ஏது பண்ணுவீயோ எனக்குத் தெரியாது.. எம் பொண்ணை மணப்பொண்ணா அலங்கரிச்சி கூப்பிட்டு வர்ற.. இல்லை உம் பையனோட பொணத்தை வந்து அள்ளிக்கோ" என கத்திவிட்டு போனை வைத்தவர் ஊர்மிளாவை அப்பாவியாக பார்த்தார்.. அவளுக்கும் தன் தந்தை போனில் பேசியது கேட்டது..

"பரவால்ல அயித்தே... நான் அப்பா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்... அத்தான் உசிரோட நல்லா இருந்தா போதும்" என கண்ணீருடனே சொல்லியவளை வாரியணைத்துக் கொண்டார்...

காயத்ரியின் துணையுடன் முழுதாய் மணப்பெண்ணாய் அலங்கரித்து தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தடித்து சற்று சிவந்திருந்த இதழ்களைப் பார்த்தவளுக்கு நேற்று பார்க்கவன் கொடுத்த முத்தமும்... அவன் கண்களில் தெரிந்த தாபமும் காதலும் இவளுக்கு கண்ணீரை வரவழைத்ததது..

அவளின் கண்ணீரை கண்டவர்.. "இப்போ எதுக்கு அழுதிக்கிட்டு இருக்க.. இங்கே பாரு.. நாம போராடாமையே அழக்கூடாது.. முதல்ல அண்ணாவை போய் பார்ப்போம்.. கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குவோம்.. இல்லை எங்கண்ணேன் எதுக்கும் சம்மதிக்கலன்னா.. எங்க அண்ணா மண்டையை ரெண்டா பொளக்குறோம்.. வாடியாத்தா.. அழாம.. இந்த அயித்தே இருக்கும் போது கண்ணை கசக்கலாமா??" என அவளின் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல..

அப்பொழுது தான் அறையை விட்டு வெளியே வந்த திவ்யாவின் கண்ணில் ஊர்மியின் மணப்பெண் அலங்காரம் பட்டது.. ஏதோ தப்பாக நடக்கிறது என்பதை யூகித்தவள்..

"திவ்யா அலெர்ட்டா இருடி" என வேகமாக மனோரஞ்சன் அறைக்குச் சென்று நடந்ததை சொல்லியதும் காயத்ரியின் காரை பாலோ பண்ணிக் கொண்டு இவர்களும் ஒரு காரில் பின் தொடர்ந்தனர்...

முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு பரமசிவம் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர் காயத்ரியும்.. ஊர்மிளாவும்.. ஊர்மிளாவுக்கோ மனம் முழுவதும் பயம் மட்டுமே... உடலெல்லாம் தொப்பலாக நனைந்து கை வேறு நடுங்கிக் கொண்டிருந்தது..

"அயித்தே.. எனக்கு பயமா இருக்குத்தே.. அந்த கெடா மீசை என்னை அந்த சொட்டைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுச்சின்னா நான் என்னத்த பண்ணுவேன்.. அத்தானை இனி பார்க்க கூட முடியாதுல்ல" என புலம்பிக் கொண்டே உள்ளே வந்தவளுக்கு அங்கிருந்த அலங்காரங்களும் தோரணங்களும் மேலும் பீதியை கிளப்பியது...

பரமசிவமோ தன் பெண்ணை மணப்பெண் கோலத்தில் பார்த்ததும் தந்தை என்ற பாசம் ஊற்றெடுக்க.. "ஊர்மி கண்ணு.. ஏன்றா இப்படி பண்ணிப்புட்ட.... இந்த சொட்டையை புடிக்கலன்னா சொல்லியிருக்கலாம்ல கண்ணு.. இப்ப பாரு.. யாரு வீட்டுல வந்து ஒக்காந்துட்டு.. என்ற மானத்தை சந்தி சிரிக்க வச்சுப்புட்டியே கண்ணு" என்றவனை முறைத்துக் கொண்டிருந்தனர் அயித்தையும்.. மருமகளும்...

"நான் ஒன்னும் ஆரோ வீட்டுல இருக்கலை. இது எனக்கு உரிமை உள்ள வூடு தான்.. என்ற அயித்தேயோட வூடு.. என்னைக் கட்டிக்க போற அத்தானோட வூடு" என அப்பொழுதும் தங்களை விட்டுக்கொடுக்காமல் பேசியவளை வாஞ்சையுடன் பார்த்தார் காயத்ரி...

"சரிடா கண்ணு.. நீதான் உரிமை. உரிமைன்னு. சொல்ற.. ஆனா உன்ற அயித்தே.. ஒனக்கான உரிமையை கொடுக்காம.. உன்னை வூட்டு வேலைக்காரியால்ல வச்சிருக்கா கண்ணு... அவ கல்யாணம் பண்ணி வைப்பான்னு பார்த்தா இந்த சென்மத்துல உன்ற கழுத்துல தாலி ஏறாது போல கண்ணு... அதான் நானே உன்ற அத்தானை உனக்கு கட்டி வைக்கலாம்னு கடத்திப்புட்டேன் கண்ணு" என மீசையை நீவியவாறே சொன்னவரைப் பார்த்து "ஈஈஈஈ" முப்பத்தி ரெண்டு பல்லையும் காட்டினர் மாமியாரும் மருமகளும்.

"ஹைய்ய் எங்க அண்ணேன்னா அண்ணேன் தான்", "ஹைய்ய்.. எங்க அப்பான்னா அப்பா தான்" என சந்தோஷத்தில் கூவியவாறே அவரை இருவரும் இரு பக்கமாக அணைத்துக் கொள்ள,

அப்பொழுது தான் உள்ளே நுழைந்தனர் மனோரஞ்சனும், திவ்யாவும்...

காயத்ரியோ மெதுவாக பரமசிவத்தின் காதில், "அண்ணேன்... இந்த நரம்பியை எம் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுதுண்ணேன்.. அந்த ஒட்டடைக்குச்சி" என்றதும் பரமசிவம் கோபத்தில் கண்கள் சிவக்க.. மனோரஞ்சனை பார்த்து ஒரு முறை முறைக்க... அவரோ உள்ளுக்குள் ஆடி விட்டார்..

"ஆத்தி.. இவர் பாக்குறதை பார்த்தா.. எனக்கு சங்கு ஊதிருவான் போலையே".."நமக்கு தான் உசிரு தான் முக்கியம் மனோ ரஞ்சா.. கட்சி வுட்டு கட்சி தாவிரு".. என நினைத்தவாறே,

"மச்சான்.. வாங்க மச்சான் எப்படி இருக்கீக??.. வூட்டுல எல்லாரும் சவுக்கியமா.. தங்கச்சி எப்புடி இருக்கு.. மூக்கு ஒழுகி (ஊர்மியின் தங்கை) எப்புடி இருக்கு.. இப்பவும் மூக்கு ஒழுகிட்டு தான் சுத்துதா??" என்றவரை முறைத்த பரமசிவம்,

"என்ன மாப்பிளை சவுக்கியத்தை கூட சங்கடமா கேக்குற மாதிரியில்ல தெரியுது".. என மீசையை முறுக்கவுமே,...

"அய்யோ மச்சான்.. நான் அப்படியெல்லாம் பேசுவேனா.. இப்போ என்ன எம்பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணணும் அவ்ளோ தானே பண்ணிட்டா போச்சி" என அவரே ஊர்மியை கொண்டு மணமேடையில் உட்கார வைத்தவர்.. அடுத்து பார்க்கவையும் உட்கார வைத்து அவரே தாலி எடுத்துக் கொடுக்க..

அங்கிருந்த அடியாட்களின் ஆசீர்வாதத்துடன் ஊர்மிளாவின் கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் பார்க்கவ்...

அனைவரும் முகத்தில் மகிழ்சசியிருக்க.. மூவர் முகத்தில் மட்டும் எள்ளளவும் சந்தோஷத்தின் சாயல். இல்லாமலே போனது ..

 
Top