ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே

Ammu ramu

New member
Wonderland writer
நிவேதா வேலையில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருக்க.. எந்தவித பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக சென்று கொண்டிருந்தது நாட்கள்.
அன்று காலை... வேலைக்கு செல்ல, நிவேதா தயாராகிக் கொண்டிருக்க..
சுதா பிக்னிக் செல்லும் தன் மகனிடம்.. "எங்கேயும் போக கூடாது வினோ, டீச்சர் சொல்றதை கேட்டு அமைதியா இருக்கணும்.. ஜாக்கிரதை" என அறிவுரை கூறிக் கொண்டிருந்தார்.
"அம்மா, காலைல இருந்து இதோட நூறு தடவை சொல்லிட்டீங்க ம்மா, இன்னும் கால்மணி நேரத்துல, நான் ஸ்கூல்ல இருக்கணும். இப்படியே நீங்க பேசிக்கிட்டு இருந்தா பஸ் கிளம்பிடும், அப்புறம் நான் பிக்னிக் போக முடியாது" என்று சலித்துக் கொண்டவன், "நான் ஜாக்கிரதையா தான் இருப்பேன்.. போயிட்டு வரேன் பாய் ம்மா" என்றான்.
அப்போது நிவேதா, "வினோ" என்று அழைக்க.. "என்ன க்கா" என்றான்.
"ஜாக்கிரதை வினோ, பத்திரமா இருடா" என்று அவளும் கூற., அதில் கடுப்பானவன்,
"அக்கா நான் பார்த்துக்கிறேன், போயிட்டு வரேன் பாய்" என்று கூறிவிட்டு அவசரமாக ஓடினான்.
இதை பார்த்த நந்திதா.. "உங்க புள்ளைக்கு நல்லது சொன்னா கோவம் வருது பாத்திங்களா, பணம் வாங்குற வரைக்கும் தான் கெஞ்சிட்டு இருந்தான். பணத்தை கொடுத்ததும் என்ன பேச்சு பேசுறேன்" பாருங்க என்றாள் தாயிடம்.
"சரி விடு நந்து, அவன் சின்ன பையன் தானே.. போக, போக சரியாகிடுவான்" என்று நிவி கூற..
"அதானே நீயும், அம்மாவும் அவனை விட்டு கொடுக்க மாட்டீங்களே" என்ற நந்து, அவளும் கல்லூரி செல்ல ஆயத்தமானாள்.
நேரமாவதை உணர்ந்த நிவேதாவும், வேகமாக உண்டுவிட்டு., மித்ரன் வீடு நோக்கி விரைந்தாள்.
வேக, வேகமாக மூச்சு வாங்க.. உள்ளே வந்தவளை பார்த்த சிவகாமி.. "ஏன் நிவி, இப்படி மூச்சு வாங்குது" என கேட்க..
"டைம் ஆச்சுன்னு வேகமா நடந்து வந்தேன் ம்மா, அதனாலதான்" என்றாள் நிவேதா.
உடனே சிவகாமி.. "பொறுமையாவே வரவேண்டியது தானே நிவி. பாரு எப்படி மூச்சு வாங்குதுன்னு, கொஞ்ச நேரம் உட்காரு.. தண்ணீர் கொண்டு வரேன் குடி" என்று அக்கறையாக கூறினார்.
பார்த்த முதல் பார்வையிலேயே, நிவேதாவை அவருக்கு பிடித்து விட., இந்த ஒரு வாரத்தில், நிவேதாவிடம் நன்றாகவே நெருங்கி இருந்தார் சிவகாமி.
அவர் கொடுத்த நீரை வாங்கி பருகியவளின், படபடப்பு கொஞ்சம் அடங்கியிருக்க., சிவகாமியிடம்.. "குழந்தை இன்னும் எழுந்துக்கலையா ம்மா" என்றாள் நிவேதா.
"எழுந்துட்டான் நிவி, அவன் அவங்க அப்பாகிட்ட இருக்கான்" என்று அவர் கூற.. "அவர்கிட்டயா".. என தனக்குள்ளே கூறி கொண்டவள், மறுவார்த்தை எதும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தாள்.
எப்பொழுதும் அவள் வரும் நேரம், குழந்தை சிவகாமியிடம் தான் இருக்கும். அதனால் குழந்தையை அவரிடமிருந்து வாங்கி கொள்வாள். ஆனால், இன்று குழந்தை மித்ரனிடம் இருப்பதால் எப்படி அவனிடமிருந்து குழந்தை வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் நிவேதா.
குழந்தை மித்ரனிடம் இருக்கிறான் என்று கூறியும், குழந்தையை வாங்க செல்லாமல் அமைதியாக நின்றிருந்த நிவேதாவை பார்த்த சிவகாமி.. "என்ன நிவி, நான் தான் குழந்தை அவன்கிட்ட இருக்கான்னு சொல்லிட்டேனே., போய் குழந்தையை வாங்கிட்டு வா" என்று கூற... "நானா" என்று திடுக்கிட்டாள் நிவேதா.
அன்றைய நாளிற்கு பிறகு, முடிந்தவரை அவன் கண்களில் படாமலே.. தன் வேலையை செய்து கொண்டிருந்தவளுக்கு., சிவகாமி கூறியதைக் கேட்டதும், உடலில் ஒரு நடுக்கம் வந்தது.
"அம்மா, நீங்க போய் குழந்தை வாங்கிட்டு வந்துடுங்களேன். நான் போய் குழந்தைக்கு பால் கலக்குறேன்" என்று கூறி, அவள் நழுவ பார்க்க..
"அதெல்லாம் பால் கலந்து தயாரா தான் இருக்கு. நீ போய் குழந்தை வாங்கிட்டு வா" என்றவர், பூஜை அறைக்கு சென்றிருந்தார்.
"ஐயோ, என்னை பார்த்தாலே அவர் கோபம் ஆயிடுவாரே, இவங்க வேற இப்படி சொல்லிட்டு போறாங்களே.. இப்போ எப்படி அவர்கிட்ட போய் குழந்தை வாங்கிட்டு வரது" என எண்ணியவள்., ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மித்ரனின் அறையை நோக்கிச் சென்றாள்.
படையப்பா படத்தில் வரும் ரஜினியின் வீடு போல பிரம்மாண்டமாக அமைந்திருந்தத வீட்டில்...
வேலையில் சேர்ந்த இந்த ஒரு வாரத்தில் இன்று தான் அவள் மித்ரன் அறை இருக்கும் தளத்திற்கு வருகிறாள்.
அந்தத் தளம் முழுவதும் அவன் மட்டுமே பயன்படுத்துவதால், அனுமதி இன்றி யாரும் அங்கே வருவதே இல்லை. அவன் அறையும், அந்த தளத்தையும் சுத்தம் செய்வது கூட அவன் இல்லாத நேரங்களில் மட்டுமே.
ஆனால் குழந்தைக்காக அங்கு சென்ற நிவேதா.. "கடவுளே, கடவுளே" என பயத்தில் ஜபித்தபடி மாடிப்படி ஏறி கொண்டிருந்தவள்... குழந்தையின் அழுகுரல் கேட்டதும்.. பயம் எல்லாம் பறந்து போக, வேகமாக மித்ரன் அறை வாசலில் சென்று நின்றாள்.
யாரும் அந்த தளத்திற்கு வருவதில்லை என்பதால் எப்பொழுதும் அவன் அறை கதவு சற்று திறந்தே இருக்கும்.
ஆனாலும், அனுமதி கேட்டு அவள் கதவை தட்ட..‌ குழந்தையை பார்த்தவாறு படுக்கையில் அமர்ந்திருந்த மித்ரன்.. தன் அத்தை தான் வந்திருப்பதாக எண்ணி., வாங்கத்தை என்று கூறினான்.
அவன் அனுமதி அளித்ததும் வேகமாக உள்ளே சென்ற நிவேதா.. அவனின் தோற்றம் கண்டு, கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
அலுவலகத்திற்கு இன்னும் தயாராகாமல் இருந்த மித்ரன், மேல் சட்டை எதுவும் இல்லாமல் வெற்றுடலாக இருந்தவன், நைட் பேண்ட் மட்டுமே அணிந்திருந்தான்.
சிவகாமி என்று நினைத்து திரும்பிய மித்ரன் நிவேதாவை பார்த்தும், "நீ எதுக்கு இங்க வந்த" என்று சாதாரணமாக தான் கேட்டான்.
ஆனால், ஏற்கனவே பயந்திருந்தவளுக்கு, அவனின் அந்தக் குரல் இன்னும் நடுக்கத்தை கொடுக்க.. அவன் உடையில்லா தேகத்தை பார்த்ததில் சங்கடமும் உண்டாக.. "அ.. அம்.. ம்மா., குழந்.. தை" என அவள் திணறினாள்.
அதில் எரிச்சலடைந்தவன்.. "ப்ம்ச்.. ஏய், எதுக்கு இப்போ இப்படி பேசற.. உனக்கு சாதாரணமா பேச வராதா" என்றான் முகத்தை சுளித்தவாறு.
"போச்சு, போச்சு மறுபடியும் இவருக்கு கோபம் வர மாதிரி பண்ணிட்டேன்.. கோபதுல அடிச்சிட, கிடிச்சிட போறாரு.. சீக்கிரமாக குழந்தையை தூக்கிட்டு போயிடுவோம்" என்று எண்ணியவள்.. "குழந்தை" என்று கூற..
அவள் குழந்தையை தான் கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டவனும்., "தூக்கிட்டு போ" என்றான்.
அந்த மிகப்பெரிய அறையின், நடுவே போடப்பட்டிருந்த படுக்கையில், ஒரு புறம் அவன் அமர்ந்திருக்க.. குழந்தையை தூக்குவதற்காக மற்றொரு புறம் நகர்ந்தவளை பார்த்து, "அந்த பக்கம் எங்க போற" என்றான் மித்ரன்.
"இல்லை, நீங்க இந்த பக்கம்" என்று அவள் இழுக்க.. "இரு நான் எழுந்துகிறேன். நீ குழந்தையை தூக்கிட்டு போ" என்றவன் எழுந்து அவளுக்கு வழிவிட.. படுக்கையை நெருங்கினாள் நிவேதா.
சத்தமாக அழுது கொண்டிருந்த குழந்தை, நிவேதா தூக்கியதும் தன் அழுகையை நிறுத்தியிருக்க.. குழந்தையை தட்டிக் கொடுத்தவாறே அங்கிருந்து சென்றிருந்தாள் நிவேதா.
அவள் அங்கிருந்து சென்றதும்.. படுக்கையில் அமர்ந்த மித்ரன்.. "யார் தூக்கினாலும் அழுதுகிட்டே இருக்க குழந்தை, எப்படி இவகிட்ட மட்டும் அமைதியா இருக்கான்.. இவ அப்பிடி என்ன ஸ்பேஷல்" என்று எண்ணியவன்.. "நாம அவளை வேலைக்கு சேர்த்ததே குழந்தையை நல்லா பாதுக்கதானே. அதைதானே அவ செய்றா., அப்றம் எதுக்கு தேவையில்லாமல் அவளைபத்தி யோசிக்கணும்" என நினைத்து தன் பணியை பார்க்க சென்றான்.
மித்ரனின் அறையிலிருந்து வந்தவளுக்கு, சிங்கத்தின் குகையில் இருந்து தப்பித்தது போன்ற உணர்வு ஏற்பட.. ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.
குழந்தையை ஏந்தியவாறு படிகட்டில் இருந்து இறங்கிய நிவேதா.. "உங்க அப்பாவை பார்த்து பயப்படாத ஒரே ஆள், நீ மட்டும் தான்டா குட்டி" என்றவள் "குட்டிக்கி பசிக்கிதா" என்று கேட்டவாரே கீழே வந்திருந்தாள்.
அப்போது, பூஜை முடித்த சிவகாமியும் அங்கே இருக்க, "சின்ன கண்ணா, பால் குடிக்கிறீங்களா" என்று கொஞ்சிவாறு பால் பாட்டிலை நிவேதாவிடம் நீட்ட., அதை வாங்கியவள், அருகில் இருந்த சோபாவில் குழந்தையை படுக்க வைத்து பாலை புகட்டினாள்.
பாலை குடித்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்த நிவேதா.. "அம்மா, நானும் வந்ததிலிருந்து பாக்குறேன், எல்லாரும் இவனை கண்ணா, குட்டி, பட்டுனுதா சொல்றீங்க.. யாருமே இவன் பேரை சொல்லி கூப்பிடமாட்டிங்கிறீங்களே, ஏன்" என கேட்க...
"அவனுக்கு இன்னும் பேரே வைக்கல நிவி, அப்புறம் எப்படி எல்லாரும் பெயரை சொல்லி கூப்பிடுவாங்க" என்றார் சிவகாமி.
"குழந்தைக்கு ஆறு மாசம் ஆயிடுச்சு, இன்னுமா பேரு வைக்கலை" என்றாள் அவள்.
"இந்த குழந்தையை பற்றி எதுவும் தெரியாமல்., இப்படி கேள்வி கேட்டுகிட்டு இருக்காளே இவ" என எண்ணிய சிவகாமி "வைக்கணும் நிவி" என்று கூறினார்.
"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மா, ஏற்கனவே குழந்தைக்கு ஆறு மாசம் முடிஞ்சிருச்சு. இதுக்கு மேல லேட் பண்ணாம பேர் வைக்கிறதான் நல்லதுனு எனக்கு தோணுது ம்மா" என்றாள்.
சிவகாமி நிவேதாவிடம் நன்கு பழகுவதால், அவளும் சிவகாமியிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டாள். அதனாலே அவரின் இந்த பதிலுக்கு அவள் தன் கருத்தை கூறியிருந்தாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை உணவு உண்ண கீழேவந்த மித்ரன் கேட்டிருக்க.. "என் குழந்தைக்கு எப்போ பெயர் வைக்கணும்னு எனக்கு தெரியும்" என்றான் கோபமாக.
அவனின் குரலை கேட்டதும் நடுங்கிய நிவேதா.. "நிவி உனக்கு இது தேவையா, வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியா" என தனக்குள்ளேயே பேசிக்கொண்டவள்.. அவன் அவர்களை நெருங்கியதும்., "சாரி சார், வெரி சாரி" என்று கூறினாள் அவனிடம்.
மித்ரானின் கோபத்தை கண்டு சிவகாமி.. எங்கே அவன் நிவேதாவை எதுவும் திட்டி விடுவானோ என்று பயந்து.. "நிவி குழந்தை டிரஸ் எல்லாம் பால் கொட்டிடுச்சு பாரு, என் ரூமுக்கு கூட்டிட்டு போய், அவனுக்கு உடம்பு துடைத்துவிட்டு டிரஸ் மாத்தி விடுமா" என்றவர் அவளை அங்கிருந்து அனுப்பியிருந்தார்.
தன் அத்தையின் செயலைக் கண்ட மித்ரன்., "அத்தை இப்போ எதுக்கு அவளை உள்ளே அனுப்பினீங்க" என்றான் கடுமையான குரலில்.
"நீதான் பாத்தியேடா, குழந்தையோட டிரஸ் எல்லாம் பால் கொட்டிடுச்சு., அதான் அவளை மாத்திவிட சொன்னேன்" என்றார் அவர்.
"அத்தை, நீங்க அந்த பொண்ணுக்கு ரொம்ப இடம் கொடுக்குறீங்க., அதனால தான் அவ இந்த பேச்சு பேசுறா" என்ற மித்ரன்.. "எதோ குழந்தை அவகிட்ட அழாம இருக்கானேன்ற ஒரே காரணத்துக்காக தான் அவளை இப்போ சும்மா விடுறேன்" என்று மிரட்டினான்.
"மித்ரா, இப்ப அந்த பொண்ணு என்ன தப்பா சொல்லடிச்சு., குழந்தைக்கு ஏழு மாசம் ஆகபோது, பெயர் வைக்கலையானு தான கேட்டுச்சு.. இதில் என்னடா தப்பு இருக்கு" என்றார் சிவகாமி.
"அத்தை... குழந்தையை பெத்துக்க தெரிஞ்ச எனக்கு, அதுக்கு எப்போ பேரு வைக்கணும்னு தெரியும்., இதையெல்லாம் கேட்கிறது அவளோட வேலை கிடையாது, அவ எதுக்கு வந்தாலோ, அந்த வேலையை மட்டும், அவளை பார்க்க சொல்லுங்க" என்றவன் உணவு மேஜையை நோக்கி சென்றான்.
"ஆண்டவா, இவனை என்னதான் பண்றதோ தெரியலையே" என்ற சிவகாமியும்., அவர் அறையை நோக்கி சென்று இருந்தார்.
தொடரும்...
 

Attachments

  • IMG_20260109_232112.jpg
    IMG_20260109_232112.jpg
    731.8 KB · Views: 0
Top