எபிலாக்
ஒன்பது வருடங்கள் கழித்து,
அன்று வீரராகவன் மற்றும் அக்ஷயாவின் மகன் தனேஸ்வரின் பிறந்தநாள்...
நெடுஞ்செழியன், கீர்த்தனா மற்றும் அவர்களின் மகள் ஹன்சிகா என்று மூவரும் விருந்துக்கு வந்திருந்த தருணம் அது...
தனேஸ்வரனுக்கும் ஹன்சிகாவுக்கும் ஒரே வயது தான்...
ஹன்சிகா மாதக்கணக்கில் கொஞ்சம் மூத்தவள் அவ்வளவு தான்...
குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தபடி, வீரராகவனும் நெடுஞ்செழியனும் நின்று இருந்தார்கள்...
தனேஷ்வரைப் பார்த்த நெடுஞ்செழியனோ, "செம்ம டாலேண்ட் டா உன் பையன், ஸ்கூல் ல செமயா பெர்ஃபோர்ம் பண்ணுறான், என் பொண்ணு மட்டும் கொஞ்சம் லேட்டா பிறந்து இருந்தா உன் பையனுக்கே கட்டி கொடுத்து இருப்பேன்" என்று சொல்ல, வீரராகவன் ஜூஸை அருந்திக் கொண்டே, "டூ யூ மைண்ட் தெயார் ஏஜ்?" என்று கேட்டான்...
"வாட்?" என்று நெடுஞ்செழியன் கேட்க, "மன்த்ஸ் தானே டிஃபிரென்ட், தட்ஸ் ஃபைன்" என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி...
"ஹேய் ஆர் யூ சீரியஸ்?" என்று நெடுஞ்செழியன் கேட்க, "வளர்ந்து அவங்களுக்கு பிடிச்சா பார்த்துக்கலாம்..." என்று சொன்ன வீரராகவனோ திரும்பி அங்கே பேசிக் கொண்டு இருந்த அக்ஷயா மற்றும் கீர்த்தனாவைப் பார்த்து விட்டு, "இத உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிடாதே, அப்புறம் இப்போவே சம்பந்திங்க போல ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிடுவாங்க" என்று சொல்ல, நெடுஞ்செழியன் சத்தமாக சிரித்துக் கொண்டான்...
"நம்ம புஷ் பண்ண கூடாது செழியா, அவங்களுக்கா பிடிச்சா பார்த்துக்கலாம்" என்றான். நெடுஞ்செழியனும், "யூ ஆர் ரைட்" என்று சொல்லிக் கொண்டே ஜூஸை அருந்தினான்.
இதே சமயம் ஹன்சிகாவோ, அங்கே கைகளை கட்டிக் கொண்டே, தனேஸ்வரனைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அவனோ தனது ஸ்கூல் நண்பிகளுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருக்க, ஹன்சிகா அருகே வந்த தனிஷா, "ஹாய் ஹன்ஸ், இந்த கலர் நல்லா இருக்கே" என்று அவள் உடையை பார்த்தபடி சொல்ல, "தேங்க்ஸ்" என்றாள் வேண்டா வெறுப்பாக...
இப்போது, "என்ன உம்முன்னு இருக்க?" என்று தனிஷா கேட்க, "தனா என் கூட பேசவே மாட்டேங்குறான்" என்று சிணுங்கினாள்.
தனிஷாவும், "தனா" என்று அழைக்க, அவ்விடம் வந்தான் அவன்...
ஒரு தடவை ஹன்சிகாவை பார்த்து விட்டு, தனிஷாவைப் பார்க்க, "நீ ஏன் ஹன்சிகா கூட பேசுறதே இல்லை?" என்று அவள் கேட்டாள்.
அவனோ ஹன்சிகாவை முறைத்து விட்டு, "எச்சி பண்ணுறா என்னை" என்று சொன்னபடி கன்னத்தை துடைத்துக் கொண்டான். தனிஷா இப்போது ஹன்சிகாவைப் பார்த்து, "தட்ஸ் நாட் குட், டோன்ட் டூ தட்" என்றாள்.
"பேர்த் டேன்னு தான் ஹக் பண்ணி கிஸ் பண்ணுனேன், அது தப்பா?" என்று விழிகளை உருட்டிக் கேட்டாள்.
"எனக்கு பிடிக்கல" என்று சொன்னான் அவன்...
"சாரி இனி பண்ண மாட்டேன், அதுக்குன்னு என் கூட பேசாம இருந்திடுவியா?" என்று கேட்டாள்.
"ஓகே, இனி பண்ண கூடாது" என்றான் ஒற்றை விரலை நீட்டி.
"டீல்" என்றாள்.
அவளும் அவன் கையை பற்றிக் கொண்டே, "ரெண்டு பேரும் ஊஞ்சல் ஆடலாம் வர்றியா? எனக்கு தான் நீ இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும் புரியுதா?" என்று கேட்டபடி செல்ல, அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே, வீரராகவனை நோக்கி வந்தாள் தனிஷா...
நெடுஞ்செழியனோ, "செமயா வளர்ந்துட்டா நம்ம டார்லிங்" என்று சொல்ல, "ஹாய் அங்கிள்" என்றாள் அவள் நெடுஞ்செழியனைப் பார்த்து...
"ஹாய் டார்லிங்க, ட்ரெஸ் செமயா இருக்கே" என்று சொல்ல, "அப்பா செலெக்ஷன்... தப்பாதுல" என்றாள்.
"செமயா பேசுறா டா" என்று சொன்ன நெடுஞ்செழியனோ, "அப்போ அப்பா என்ன செலெக்ட் பண்ணுனாலும் கரெக்ட் ஆஹ் இருக்குமா?" என்று கேட்க, "கண்டிப்பா" என்று சொன்னவள் வீரராகவனைப் பார்க்க, "அம்மா கூட இந்த ட்ரெஸ் பிடிக்கலன்னு சண்டை போட்ட தானே" என்று கேட்டான் அவன்...
"அவங்க சொல்லிட்டாங்களா?" என்று சிணுங்கிக் கொண்டே கேட்டவளோ, "அவங்க எடுத்தாங்கன்னு நினச்சேன்" என்று சொல்ல, சத்தமாக நெடுஞ்செழியனும் வீரராகவனும் சிரித்துக் கொள்ள, நெடுஞ்செழியனோ, "அப்போ, அப்பா என்ன செலெக்ட் பண்ணுனாலும் பிடிக்கலன்னாலும் அக்செப்ட் பண்ணிப்ப, ரைட்?" என்று கேட்க, அவளும், "கண்டிப்பா" என்றாள் இரு கண்களையும் சிமிட்டி.
இதே சமயம், கீர்த்தனாவுடன் பேசிக் கொண்டு இருந்தாள் அக்ஷயா...
"உன் பொண்ணு செம்ம துறு துறுன்னு இருக்கா" என்று சொல்ல, சுற்றும் முற்றும் பார்த்த கீர்த்தனாவோ, "அவ பேசுற பேச்சை வெளிய சொல்ல முடியாது டி, நான் விழி பிதுங்கி போய் இருக்கிறேன்... எங்க தான் கத்துக்கிறான்னு தெர்ல" என்றாள்.
"என்னடி ஆச்சு?" என்று கேட்க, "அன்னைக்கு நான் சமைச்சிட்டு இருந்தேன், எனக்கு எப்போ கல்யாணம் பண்ணி தருவீங்கன்னு கேக்கிறா" என்று சொல்ல, அக்ஷயாவோ, "இப்போ சின்ன பசங்க இப்படி தானே பேசுறாங்க" என்று சொல்ல, "ஆஹ் அவ கல்யாணம் பண்ணி தர சொல்றது உன் பையனை..." என்றாள்.
அக்ஷயா வாயில் கையை வைக்க, "நான் செழியன் கிட்ட கூட சொல்லவே இல்ல, இப்படி எல்லாம் இனி பேச கூடாதுன்னு சொல்லி வச்சு இருக்கேன்" என்றாள்.
அக்ஷயாவோ, "அவளை கன்ட்ரோல் பண்ணிக்கோ, ஆனா உன் பொண்ண என் பையனுக்கு கட்டி கொடுப்பியா?" என்று கேட்டாள்.
"ஊர்ல மாமியார் கொடுமை தானே கேள்விப்பட்டு இருப்ப... அப்புறம் மருமகள் கொடுமை எப்படி இருக்கும்னு என் பொண்ணு உனக்கு காட்டுவா... நல்லா யோசிச்சுக்கோ" என்று சொல்ல, "ச்சீ அவ ஸ்வீட், அவளை நான் நல்லா பார்த்துப்பேன்" என்று சொல்ல, கீர்த்தனவோ சிரித்துக் கொண்டே, "முதல் வளரட்டும் டி" என்று சொன்னாள்.
அக்ஷயாவோ, "நான் பேசுனதை உன் புருஷன் கிட்ட சொல்லிடாதே" என்றாள்.
"ஏன் டி?" என்று அவள் கேட்க, "அப்புறம் அவர் என் புருஷன் கிட்ட சொல்லுவார்... உனக்கு தான் அவரை பத்தி தெரியும் ல... இது என்ன பேச்சுன்னு கேட்டு என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவார்" என்றாள்.
"உனக்கு இப்போவுமா பயம்? அப்படி தெரியலயே" என்று கீர்த்தனா சொல்ல, "சும்மா நடிச்சுக்கிறது" என்று நாக்கை சுழட்டி சொன்னாள் அக்ஷயா சிரித்துக் கொண்டே...
அப்போது வீரராகவனோ, "அக்ஷயா" என்று அழைக்க, அவளும் ஏறிட்டுப் பார்த்தாள்.
விழிகளால் உள்ளே வரும்படி அழைத்தான்...
அவளும், "கேக் கட் பண்ண போறாங்க போல, வா" என்று சொல்லி கீர்த்தனாவையும், "எல்லாரும் வாங்க வாங்க" என்று சொல்லி, அனைவரையும் அழைத்து வர, ஹாலில் நின்று இருந்தவனோ பெருமூச்சுடன், 'தனியா வர சொன்னா ஊர்ல எல்லாரையும் அழைத்து வர்றா' என்று நினைத்துக் கொண்டே, நேரத்தைப் பார்த்தவன், அக்ஷயா அருகே வந்து, "என்னடி இது? எல்லாரையும் கூப்பிட்டு வந்திருக்க? கேக் கட் பண்ண தான் டைம் இருக்குல்ல" என்று கேட்டான்.
"நீங்க தானே வர சொன்னீங்க" என்று சொல்ல, அவளை அழுத்தமாக பார்த்தவன், "கிஸ் அடிக்க கூப்பிட்டேன், இப்போ அடிக்கட்டுமா?" என்று கேட்டான்.
"ஐயோ" என்றபடி அவள் பின்னே செல்ல, அவளை பெருமூச்சுடன் பார்த்து விட்டு, " உன்னை வச்சிட்டு ரொமான்ஸ் கூட பண்ண முடியாது... சரி வா கேக் வெட்டலாம்" என்று சொன்னான்...
அவன் கோபத்தைப் பார்த்து, அவளுக்கு சிரிப்பும் வந்து விட்டது...
சிரிப்பை அடக்கிக் கொண்டே அவனுடன் கேக்கை வெட்ட சென்றாள்.
அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன், "சிரிக்காதடி, கடுப்பா இருக்கு" என்று திட்டிக் கொண்டே, அவள் கையை இறுக பற்றிக் கொண்டான்.
முற்றும்.