ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னோடு வா அன்பே....-கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 5:

தனது அறையில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தான் ஷ்யாம் , திடீரென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பதறி கண் விழித்தான்


போனில் நேரத்தை பார்க்க மணி ஒன்று என்று காட்டியது “இந்த நேரத்துல யாரு” என்று தனக்கு தானே கேட்டு கொண்டே அரை தூக்கத்தில் சென்று கதவை திறந்தான்


வெளியே விஷ்வா தான் நின்று இருந்தான் “என்ன விஷ்வா இந்த நேரத்துல” தூக்கம் வழிந்து கொண்டே கேட்க


“ சீக்கிரம் கிளம்பி வா போலாம்..” என்றான் அவசரமாக “எங்க போறோம்…” என்க “அந்த பொண்ணை பார்க்க” என்றான் “ அதான் அந்த காலைல பாத்த பொண்ணு..” எங்கோ பார்த்து கொண்டு அவன் சொல்ல


“ அந்த பொண்ணு இந்நேரம் கஸ்டமர் கூட இருப்பா , இப்போ முடியாது அப்புறம் போலாம்” என்று சொல்லி கொண்டு அவன் நகர
அவன் சட்டையை பிடித்து இழுத்தவன் “ அந்த பொண்ணு இல்லைடா பிரியாவை பார்க்க..” என்றதும்


தூக்கத்தில் இருந்து விழித்தவன் “ என்னடா சொல்றே இந்த நேரத்துல நீ ஏன் அந்த பொண்ணை பார்க்க போறே..” அதிர்ச்சியாக அவன் கேட்க


“நீ கிளம்பி வா டா சும்மா கேள்வி கேட்காத..” என்றான் சிடு சிதுவென “ டேய் அந்த பொண்ணு இப்போ வீட்ல இருப்பா, பார்த்திபன் வீட்டுக்கு உள்ள போறது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்லை” என்க


“ அதை நான் பாத்துக்கிறேன் நீ வா..” என்று அவன் நின்ற கோலத்துலையே இழுத்து கொண்டு சென்றான்
கார் அந்த பெரிய வீட்டுக்கு பக்கத்தில் வந்து நின்றது பெரிய பிரமாண்டமான வீடு தான் வெளியே இருந்தவாறே வீட்டினை அளவிட்டான் “விஷ்வா என்ன பண்ண போற இது நல்லதுக்கு இல்லை யாராவது பார்த்தா மாட்டிப்போம் அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும்” என்று ஷ்யாம் அறிவுரை சொல்ல


“ மொத்தம் நாலு வாட்ச்மேன் தான் அவங்கள திசை திருப்பீட்டா ஈசி தான், ஆன அவ ரூம் எங்க இருக்குன்னு தான் தெரியல” அவன் சொல்வதை கேட்காமல் அவன் பாட்டுக்கு சொல்ல
கடுப்பான ஷ்யாம் “ நான் என்ன பேசுறேன் நீ என்ன சொல்ற, வாடா போயிடலாம்” என்க அவனோ கரை கிளப்பி விட்டை சுற்றி வந்தான்


“ விஷ்வா மணி ஒண்ணு இந்த நேரத்துல எல்லாரும் தூங்கி இருப்பாங்க , உன்னால எப்படி ரூம் கண்டு பிடிக்க முடியும் நான் சொல்றதை கேளு வா கிளம்பிடலாம்” என்றான்
ஆனால் அவன் கண்கள் பளிச்சிட்டது ஆம் அவன் தேடியது அவன் கண்ணில் தென்பட்டது உதட்டில் சிரிப்பு வர அவன் பார்வை போகும் திசையை திரும்பி பார்த்தான்


அங்கே பிரியா அவள் அறை பால்கனியில் அமர்ந்து வெளியே வானை வெறித்து பார்த்து அமர்ந்து இருந்தாள்


“ இந்த பொண்ணு எதுக்கு இந்த நேரத்துல இங்க உக்கார்ந்து இருக்கு” என்று ஷ்யாம் திட்ட , அதை எல்லாம் கேட்க நிற்காமல் விஷ்வா காரில் இருந்து இறங்கி இருந்தான்
“ டேய் …. டேய் எங்க டா போறே… என்னால அடி வாங்க முடியாது” என்று ஷ்யாம் பதற


திரும்பி அவனை பார்த்தவன் “ நீ இங்கேயே இரு நான் பாத்துக்கிறேன்…” என்றவன் திரும்பி நிற்காமல் சென்று விட்டான்


அதை தொடர்ந்து ஷ்யாம் கத்தியது காற்றில் தான் கரைந்தது
விஷ்வா அங்கே மதில் சுவர் பக்கம் வந்தான் பெரிய சுவர் எப்படி ஏறுவது என்று அக்கம் பக்கம் பார்த்தான் எந்த வழியும் இல்லை சற்று யோசித்தவன் பின்னால் அடி எடுத்து வைத்து சென்றான்


கொஞ்ச தூரம் சென்றவன் “ ஊஃப் …. ஸ்டே காம்..” என்று தன்னை நிலை படுத்தி விட்டு வேகமாக ஓடி குதித்தான் சுவரின் மேல் பகுதியில் பிடித்தவன் அதில் ஏறி அந்த பக்கம் குதித்தான்
அதை பார்த்து கொண்டு இருந்த ஷ்யாம் “ ஆத்தாடி இவன் நமக்கும் சேர்த்து அடி வாங்கி தராமல் விடமாட்டான்


ஏறி குதித்தவன் எழுந்து அங்கே இருந்த புதர் பக்கத்தில் சென்று நின்று நோட்டம் விட்டான் , அவன் நல்ல நேரத்துக்கு காவலாளிகள் அந்த பக்கம் நின்று பேசி கொண்டு இருக்க


வேகமாக அங்கே இருந்து நகர்ந்தவன் அவள் அறைக்கு கீழே வந்து நின்றான், இனி மேலே ஏறவேண்டும் ஆனால் எப்படி
மேலே ஏறுவது வீட்டை ஒட்டி ஒரு பெரிய மரம் நின்று இருக்க அதன் கிளை அவள் அறை பால்கனி பக்கத்தில் இருந்தது அங்கே இருந்து குதித்தால் அங்கு செல்லலாம்


முடிவெடுத்தவன் அடுத்த கணமே மரத்தில் ஏறி இருந்தான் , வேகமாக மேலே ஏறியவன் அவள் அறை பால்கனியை அடைந்ததும் எகிறி குதித்து விட்டான்


மேலே வானத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தவள் சட்டென்று அவள் பக்கம் ஏதோ வந்து விழவும் “ ஆ…. “ என்று கத்தி கொண்டே எழ சட்டென்று எட்டி அவள் வாயை பொத்தினான்
அப்போது தான் அது அவன் தான் என்று கண்டு கொண்டாள்


விழிகள் விரிய அவனிடம் இருந்து விடுபட போராட, அதே நேரம் சத்தம் கேட்டு காவலாளிகள் அந்த பக்கம் வர
அவளை அழைத்து கொண்டு மறைவாக சென்று நின்றான், சுவற்றில் அவளை சாயவைத்தவன் அவள் வாயை பொத்தி கொண்டு அவள் மேல் சாய்ந்து நின்றவன் “ கத்தாம அமைதியா இருந்தா பேசிட்டு போயிடுவேன், இல்லை அப்புறம் காலைல நடந்தது தான் நடக்கும்” என்க


பெண்ணவள் அதிர்ந்து தான் போனாள் “ பேசமாட்டேல..” என்க இல்லை என அவசரமாக தலை அசைத்தாள்
அப்போது கீழே நின்று இருந்த காவலாளிகளும் எதுவும் இல்லை என்று திரும்பி சென்று விட
நிம்மதி பெருமூச்சு விட்டவன் , திரும்பி நிதானமாக அவளை பார்த்தான்
கண்கள் கலங்கி அழுது வீங்கி இருந்தாள் நிறைய நேரம் அழுது இருப்பாள் போலும் “ எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க” அவளோ மீண்டும் கண்ணை கசக்கினாள்


“மச்… அதான் எதுவும் பண்ணமாட்டேன்னு சொன்னேன்ல எதுக்கு அழுவுற” என்க “ நான் யார் கிட்டயும் சொல்லமாட்டேன் பிளீஸ் போடுங்க, எனக்கு பயமா இருக்கு” என்றாள் விமலுடன்


அவளை விட்டு தள்ளி நின்றவன் “ ஒண்ணும் பண்ணல டி …. உன்ன பார்க்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன்” என்றான்


“ நீங்க எதுக்கு என்ன பாக்கணும்” என்க “ என்னை முதல் முறை ஒரு பொண்ணு கை நீட்டி அரஞ்சு இருக்கா , எப்படி தூக்கம் வரும் அதான் நீ தூங்கிட்டு இருந்தா எழுப்பி விடலாம்னு வந்தேன் “ என்றான்


அவன் நேரே கையை கூப்பியவள் “ பிளீஸ் நான் தெரியாம பண்ணிட்டேன் விடுங்களேன்” என்றாள்


“ எப்படி விட சொல்ற , அதெல்லாம் விட முடியாது…” என்றவன் அவளை கூர்ந்து நோக்க துடிக்கும் இதழ்களை தனதாக்க ஆவல் பிறந்தது


எதுவும் செய்யமாட்டேன் என்று அவளிடம் சொன்னாலும் மனம் அதில் மீண்டும் சாய இன்னும் நெருங்கினான்
அதில் பயந்த பெண்ணவள் மீண்டும் நடுங்க “ பிளீஸ் என்னை வேணா ரெண்டு அடி அடிச்சுக்கோங்க” என்று கன்னத்தை காட்ட


அங்கே ஏற்கனவே ஐந்து விரல் அடையாளங்கள் அச்சு போல் பதிந்து இருக்க அவன் மோக வலை சட்டென்று அறுபட


“ யார் அடிச்சது…” என்றான் குரல் இறுக்கி இருந்தது அவளோ அவனை பார்த்து “ அது.,.” என்று இழுக்க

“யாருன்னு கேக்குறேன் ல” என்றான் மீண்டும் கழுத்து நரம்புகள் புடைத்து நின்றது அவனை பார்க்கவே பெண்ணவளுக்கு உதறல் எடுக்க
“ அது… அன்… அண்ணா… தான்” என்றாள் திக்கி திணறி “ எதுக்கு…” அவன் கேட்க “ காசை தொலைச்சதுக்கு” என்றாள்


ஆம் இன்று வேலை விட்டு வீட்டில் அவள் வந்ததும் முகம் இறுகி போய் அமர்ந்து இருந்தான் பார்த்திபன்


அவள் அவனை கண்டும் காணாதது போல் நகர்ந்து செல்ல


“ நில்லுடி…” என்றான் அவளோ அதிர்ந்து நிற்க “ உன்ன நம்பி ஒரு வேலையை குடுத்தா அதை ஒழுங்கா பண்ண தெரியாதா உனக்கு…” என்று சீற
அவன் சத்தத்தை கேட்டு அவ்விடம் வந்த அவன் மனைவி மீனா “ என்ன என்னாச்சு இவ இன்னைக்கு என்ன பண்ணா” என கேட்டு கொண்டே வந்தாள்


அவளுக்கோ இவளை பார்ப்பதே பிடிக்காது பார்த்திபன் சொன்னதால் தான் வீட்டுக்குள்ளையே வைத்து இருக்கிறாள்


கோபமாக பிரியாவை பார்த்தவர் “ பத்து லட்சத்தை தொலைச்சிட்டு வந்து நிக்கிற…” என்க


நெஞ்சில் கையை வைத்தவர் “ பத்து லச்சமா காசு என்ன மரத்துலையா காய்க்குது இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிற, கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு” என்று அவள் பாட்டுக்கு கத்த


“ காசு கிடைச்சிருச்சு மீனா விஷ்வா கொண்டு வந்து குடித்தான்” என்க


“ அதனால அப்படியே விடுறதா அவ பண்ண தப்புக்கு தண்டனை வேண்டாம்” என்றவள் அவள் முடியை கொத்தாக பற்ற வலியில் முகம் சுழித்தாள் பெண்ணவள்


“ விடுங்க … அண்ணி வலிக்குது..” என்று அவள் கெஞ்ச “ உனக்கு சோறு போடுறதே பெரிய விஷயம் இதுல காசை வேற தொலைக்குற அதுக்கு தண்டன வேண்டாமா” என்று மீண்டும் முறுக்க


அவளுக்கோ முடி பிய்ந்து அவள் கையோடு சென்று விடுமோ என்ற வலி ஒரு வேகத்தில் அவர் கையை தட்டி விட
அவர் சுதாகரிக்க வில்லை போலும் தடுமாறி கீழே விழுந்தாள்


உடனே அவள் பதறி தூக்க போக “ அஆஅ…” என்ற அலறல் அந்த வீடு முழுவன் எதிர் ஒலிக்க அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்து இருந்தான் பிரபாகரன்


அவளோ கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து பார்க்க கண்கள் சிவக்க அவள் முன் ருத்ரா மூர்த்தியாக நின்று இருந்தான் பார்த்திபன்


குனிந்து மனைவியை தூக்கி நிறுத்தியவர் “ எவ்ளோ தைரியம் இருந்து இருந்தா என் மனைவியை கீழே தள்ளி விட்டு இருப்ப உன்னை” என்றவன் மீண்டும் பெண்ணவள் கன்னத்தில் அறைந்து இருந்தான்


“ இன்னைக்கு நைட்டு உனக்கு சாப்பாடே இல்லை போடி என் கண்ணு முன்னால இருந்து” என்று சொல்ல


பெண்ணவளும் அழுது கொண்டே அங்கே இருந்து ஓடி சென்று விட்டாள்


“ அப்போவே சொன்னேன் இவளை வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம்னு இப்போ பாருங்க ஏன் மேலேயே கையை வச்சுட்டா..” என்று மீனா சொல்ல


“ பொறு மீனா அவளை நான் ஒன்னும் சும்மா இங்க வச்சு இருக்கல அவளை வச்சு நிறைய பிளான் பண்ணி இருக்கேன் அது வரைக்கும் பொறுமையா இருப்போம்” என்று சொன்னவன் கண்களில் அப்படி ஒரு அனல்


அவள் சொன்னதை கேட்ட விஷ்வாவுக்கு அப்படி ஒரு கோபம் பார்த்திபன் மேல்


தொடரும்……

உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில் பதிவு இடலாம்...

 
அத்தியாயம் 6:

நடந்ததை சொல்லி அழுதவள் “ நீங்களும் வேணா அடிச்சுக்கோங்க…” என்று அவள் வீங்கிய கன்னத்தை காட்ட அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது


அவள் அப்படியே நின்று இருக்க மென்மையாக அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்தான்


பிரியா சட்டென்று அதிர்ந்து பின்னால் நகர “ கையால அடிக்க புடிக்கல அதான் கிஸ் அடிச்சிட்டேன்” என்று ஒற்றை கண்ணை சிமிட்ட


இவ்வளவு சோகமாக தன் நிலைமையை விளக்கியும் இப்படி செய்தவனை அருவருப்பாக தான் பார்த்தாள் பெண்ணவள்


தன்னை ரசனையாக மட்டும் பார்க்கும் பெண்களை பார்த்தவனுக்கு அவளின் இந்த அருவருப்பான பார்வை கோபத்தை கொடுக்க


அவளை இன்னும் நெருங்க சட்டென்று அவன் அலைபேசி அலறியது எடுத்து பார்க்க ஷ்யாம் தான் அழைத்து இருந்தான்


எடுத்து காதில் வைத்தவன் “ என்னடா…” என்று எறிந்து விழ “ சீக்கிரம் வா விஷ்வா கார் ரொம்ப நேரம் இங்க நின்னா டவுட் வந்திடும்” என்க “ வரேன்..” என்றவன்


பிரியாவை நோக்கி “ அப்புறமா மீட் பண்ணலாம் டியர்… இப்போ போய் தூங்கு…” என்று அவள் கன்னத்தை மெதுவாக தட்டி விட்டு அவன் வந்த வழியே இறங்கி சென்று சுவரை எகிறி குதிக்க “சரியான குரங்கா இருப்பான் போல” என்று தான் அவள் மனதில் தோன்றியது


கார் அருகே சென்றவன் அவளை திரும்பி பார்க்க இன்னும் அவனை தான் பார்த்து கொண்டு நின்றாள்


உடனே அவனோ இரு கைகளையும் இதழ் அருகே கொண்டு வந்து முத்தம் பதித்து விட்டு இரு கைகளும் விரித்து அவளுக்கு பறக்க விட “ஐயோ…” என்றவள் வேகமாக உள்ளே சென்று கதவை தாழிட்டாள்

அவனோ அவள் செய்கையை பார்த்து சிரித்து விட்டு காரில் ஏற


அவன் செய்கையை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டு இருந்த ஷ்யாமோ “ இப்படி பேசிட்டு வர தான் இந்த லேட் நைட்டு சுவர் ஏறி குதிச்சியா” என்று கிண்டலாக கேட்க


“ அதான் கிஸ் பண்ணினே பார்க்கல” என்க “ கன்னத்துல குடுத்தது எல்லாம் கிஸ் ஆ “ என்று கேட்டு கொண்டே வண்டியை எடுக்க


“ இப்போதைக்கு இது போதும் அப்புறமா பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்” என்றான் துடையை தட்டி கொண்டு


“ ஆனாலும் மச்சான் … நீ போன வேகத்தை பார்த்து முழுசா ஆண்டி ஹீரோவா மாறிட்டேனு நினைச்சேன் ஆன அப்படியே அலைபாயுதே மாதவன் மாதிரி ஆகிட்டே” என்று சொல்லி சத்தமாக சிரிக்க


“ இந்த ஆண்டி ஹீரோ எப்படி இருப்பானு நாளைக்கு பார்ப்பே..” என்றான்


“ ஆமாம் அந்த பொண்ணு என்ன அழுதுகிட்டே ரொம்ப நேரம் என்னமோ சொல்லி கிட்டு இருந்துச்சு” என்க
“ காசை தொலைச்சதுக்கு அந்த பார்த்திபன் அடிச்சு இருக்கான்” என்றான் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது


“ பாவம் அந்த பொண்ணு அவங்க கிட்டயும் மாட்டி உன் கிட்டயும் மாட்டி படாத பாடு படுது” என்று சொல்ல


“ பேசாம வண்டிய ஓட்டுடா..” என்க அவனும் “ சரி பா நான் ஒன்னும் சொல்லல” என்று அமைதியாக வண்டியை ஓட்டினான்


வீடு வந்ததும் ஷ்யாம் அவன் அறைக்கு சென்று விட்டான், விஷ்வாவின் வீட்டில் தான் அவன் தங்கி இருந்தான்


கூடவே வைத்து கொடுமை செய்து கொண்டு இருக்கிறான்


அறைக்குள் வந்தவன் படுத்து தூங்கி விட, விஷ்வா அறைக்குள் சென்றதும் லேப்டாப்பை எடுத்து கொண்டே அமர்ந்து விட்டான்


மறுநாள் காலை பார்த்திபனின் அழைப்பில் தான் கண்களை திறந்தான் ஷ்யாம் “ இந்த ஆளு எதுக்கு காலையிலேயே கூப்பிடுரார்” என்று அவருக்கு வாயில் திட்டி கொண்டே அவன் அலைபேசியை எடுத்து காதில் வைக்க


“ ஹாலோ..” என்றதும் தான் தாமதம் “ என்ன நினைச்சிட்டு இருக்க ஷ்யாம் ஷேர்ஸ் வாபஸ் வாங்கனும்ன முன் கூட்டியே சொல்ல தெரியாத, ஒரே நைட்டு ல அத்தனை ஷேர் குறைஞ்சு இருக்கு விஷ்வா பாக் அடிக்கிறார் அவனை நம்பி தான் நாங்க டீல் பண்ணோம் அவரே இப்போ இல்லனு சொல்லும் போது நாங்களும் வாபஸ் வாங்குறோம்னு வந்து நிக்கிறாங்க…. இப்போ நான் என்ன பண்றது எனக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா நூறு கோடி…” என்று சீற


“ நீங்க என்ன பேசுறீங்க எனக்கு எதுவும் புரியல..” என்று ஷ்யாம் சொல்ல “ விஷ்வா கிட்ட கேளு , நான் டென் மினிட்ஸ் ல கால் பண்ணுவேன் எனக்கு விஷ்வா கிட்ட பேசணும் அரேஞ்ச் பண்ணு” என்று அவர் வைத்து விட
ஷ்யாம் அலைபேசியை எடுத்து கொண்டு விஷ்வாவின் அறைக்கு சென்றான், வெளியே நின்று கதவை தட்ட மெதுவாக எழுந்து வந்து கதவை திறந்தான்


வெளியே அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றான் ஷ்யாம் “ காலையிலேயே ஏண்டா இப்படி வந்து நிக்கிற” என்று கேட்டு கொண்டு அவன் சென்று மீண்டும் படுக்க போக


அவனை கையை பற்றி தடுத்தவன் “ விஷ்வா நீ என்ன பண்ணி இருக்கேன்னு தெரியுதா” என்க “ என்னடா பண்ணேன் நான் தூங்க தானே போறேன்” என்று மீண்டும் போக


“டேய் அவளை பத்து லட்சம் தொலைச்சதுக்கு அடிச்சான் அப்படின்னு ஒரே காரணத்துக்கு அவனுக்கு நூறு கோடி லாஸ் ஆக வச்சிருக்க” என்று சொல்ல


“ அதுல உனக்கு என்னடா பிரச்சினை” என்க “ விஷ்வா விளையாடாத இதுல எத்தன லெய்போர்சு கஷ்ட படுவாங்கேனு தெரியுமா, நம்ம கூட இத்தன வருஷம் டை அப் வச்சிருந்த கம்பெனி அது அவங்க டிரஸ்டை பிரேக் பண்ணி இருக்க” என்று சீற


குப்புற படுத்து கொண்டே “ ஐ டோண்ட் கேர்..” என்றான் தோளை குலுக்கி

ஷ்யாமிற்கு கோபம் கொண்டு பல்லை கடித்தவன் “ அப்போ உனக்கு யார் எப்படி போனாலும் பிரச்சனை இல்லை, பிரியாவை அடிச்சவன் அழனும் அவ்ளோ தான் இல்லை” என்று அவனை உலுக்க


அவனிடம் எந்த அசைவும் இல்லை “ அப்படி என்னடா உனக்கு ஒரு நாள் தானே ஆச்சு அவளை பார்த்து, சரியா பேசுனது கூட இல்லை அதுக்குள்ள அந்த பொண்ணுக்காக இவளோ பண்ணி இருக்க அவ்ளோ லவ் ஆ என்ன” என்று கடைசி வார்த்தையை போட்டு வாங்க கேட்க


தலையை திருப்பி அவனை பார்த்தவன் “ நோ டா ஜெஸ்ட் ஒரே ஒரு வாட்டி..” என்று ஆரம்பிக்க


“ ஹான் அதை எவனாவது லூசு இருப்பான் அவன் கிட்ட சொல்லு” என்று சீற “ உண்மை தாண்ட நம்புடா..” என்க “ என்னைய பார்த்தா கேனையை போல தெரியுதா , இந்த போன் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பார்த்திபன் கூப்பிடுவான் அவன் கிட்ட சொல்லு, அப்படியே அப்பா தாத்தா எல்லாரும் கேட்பாங்க சொல்லிடு” என்று சொல்லி கொண்டு அவன் கடுப்பாக சொல்ல


திரும்பி மலாக்கா படுத்தவன் “ ஒரே நாளில நீ என்ன என்னமோ பண்ணிட்டே டீ” என்று நெளிய


ஷியாமின் அலைபேசி அலறியது , பார்த்திபன் than அழைத்து இருந்தான் சலிப்பாக எடுத்து காதில் வைத்தவன் உடல் மொழி மொத்தமாக மாறி இருந்தது


“ ஹலோ..” என்றான் கபீரமான குரலில் “ விஷ்வா எதுக்கு இப்போ இப்படி பண்ண எனக்கு இதனால எவ்ளோ லாஸ் தெரியுமா” என்று சொன்னவர் குரலில் ஒரு பவ்வியம் இருக்க


அதை உணர்ந்தவனுக்கு ஒரு நக்கல் சிரிப்பு உதட்டில் “ சாரி மிஸ்டர் பார்த்திபன் என்னால உங்க கூட இனிமே டீலிங் வச்சுக்க விருப்பம் இல்லை” என்று சொல்ல


மறுபக்கத்தில் பார்த்திபன் கதறி விட்டான் “ விஷ்வா கொஞ்சம் யோசிங்க பிளீஸ், உங்களுக்கு என்ன பிரச்சினைனு சொல்லுங்க நாம சரி பண்ணிக்கலாம்” என்று கெஞ்ச


“ ஆம் ரியலி சாரி திஸ் இச் மை ஃபைனல் டிசிஷன்” என்று சொல்லி அவன் அழைப்பை துடித்து விட
மறு பக்கத்தில் இருந்த பார்த்திபன் கோபத்தில் அங்கே இருந்த அலங்கார பொருட்களை தட்டி விட்டான்


“ விஷ்வா என்னை பகச்சுகிட்ட இல்லை இனிமே தான் நீ என் சுய ரூபத்தை பார்க்க போற” என்று உறுமி கொண்டான்


விஷ்வா தயார் ஆகி கீழே சாப்பிட வர தாத்தாவும் வெற்றியும் அவனை கேள்வியாக பார்க்க ஷ்யாம் முறைத்து பார்த்து கொண்டு நின்றான்


சாப்பிடும் மேசையில் இருந்த இருக்கையை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவன் “ மாம் சாப்பாடு..” என்று ராகமாக சொல்ல அவர் சாப்பாட்டை எடுத்து வைத்தார்
வெற்றியும் தாத்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு “ விஷ்வா… எதுக்கு பார்த்திபன் கிட்ட இருந்து எல்லா ப்ராஜக்ட் உம் கேன்சல் பண்ண” என்று தாத்தா கேட்க


சாவகாசமாக தோசையை சாப்பிட்டு கொண்டு அவரை எரித்தவன் “ நீங்க தானே தாத்தா நேத்து சொன்னாங்க அவன் ரொம்ப மோசம் ஆனவன்னு அதான் அவன் கிட்ட இருந்து எல்லா டீலிங் உம் முடிச்சு கிட்டேன்” என்று தோளை குலுக்க


“ ஆன விஷ்வா இதுல அவன் ரொம்ப அடி வாங்கி இருப்பான் , தேவை இல்லாம எதுக்கு அவனை பக்கச்சு கிட்ட” என்று வெற்றி கேட்க


“ விடுங்க டாட் எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன்” என்று அலட்சியமாக சொல்லி கொண்டு அவன் எழ


மற்றவர்கள் அவனை புரியாமல் பார்த்து கொண்டனர்


அவன் தாய் வேணியோ “ இதுக்காகவா இப்படி பண்ணான் நம்ப முடியலையே…” என்று சொல்ல


“ அதான் எனக்கும் சந்தேகம்..” என்று தாத்தா சொல்லி கொண்டு ஷ்யாமை பார்க்க அவனோ “ எனக்கும் சந்தேகம் தான் காண்போம் ஆனா சொல்றேன்” என்று விட்டு நகர்ந்து கொள்ள


“ என்ன நடக்குதுன்னே தெரியல..” என்று நகர்ந்து விட்டார் வேணி


தொடரும்…

என்னோடு வா அன்பே...- கருத்து திரி
 
அத்தியாயம் 7:


விஷ்வாவின் கார் ஷியாமின் கைகளில் சீறி பாய்ந்தது , இன்றைய வேலைகளை சொல்லி கொண்டே ஷ்யாம் கார் ஓட்டி கொண்டு இருக்க


விஷ்வா பக்கத்தில் அமர்ந்து லேப்டாப்புடன் அவன் சொல்வதை கேட்டு கொண்டே அதில் மும்முரமாக தட்டி கொண்டு வந்தான்


கார் ஆஃபீஸ் வந்து அடைந்ததும் இருவரும் இறங்கி கொண்டார்கள் அவர்கள் அறைக்குள் செல்ல போக வெளியே விசிட்டிங் ஏரியாவில் அமர்ந்து இருந்தார் பார்த்திபன்


அவனை கண்டும் காணாமல் விஷ்வா உள்ளே செல்ல பல்லை கடித்தான் பார்த்திபன்


நூறு கோடி சிறிய தொகை அல்லவே போனால் போகட்டும் என விட்டு விட , அவனிடம் பேசி பார்க்க தான் வந்தார்
அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் பாதி கூட இல்லாத சிறு பையனிடம் கெஞ்ச வேண்டிய நிலைமை , காரியம் ஆக கழுதை காலை கூட பிடிக்கலாம் என்பார்களே அது தான் வந்து விட்டார் போலும்


உள்ளே சென்ற ஷ்யாம் விஷ்வாவை பார்த்து “ விஷ்வா பார்த்திபன் வந்து இருக்கான் உள்ளே கூப்பிடவா” என்று கேட்க “முக்கியமான மீட்டிங் இருக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லு” என்று விட்டு வேறு வேலை பார்க்க


அவனை முறைத்தவன் “ இப்போ எந்த மீட்டிங்கும் இல்லை விஷ்வா நீ தேவை இல்லாம அந்த ஆள உசுப்பேத்தாத அப்புறம் அவன் ஏதாவது பண்ணிட போறான்” என்று சொல்ல


அவனை ஏறிட்டு பார்த்தவன் “ வெயிட் பண்ண சொல்லு, முடியலையா கிளம்ப சொல்லு..” என்று கணினிக்குள் மூழ்க
“ இனி நான் சொன்னாலும் கேட்கமாட்டான்” என்று வாய்க்குள் புலம்பியவன் வெளியேறினான்


கதவு திறக்க பட்டதும் பார்த்தவன் நிமிர்ந்து பார்க்க அவனை நோக்கி வந்த ஷ்யாம் “ சாரி சார் முக்கியமான ஒரு மீட்டிங் , கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா” என்று கேட்க


அமர்ந்தவாறு அவனை முறைத்தவர் “ இட்ஸ் வெரி அர்ஜென்ட் ஷ்யாம் , ஃபைவ் மினிட்ஸ் பேசிட்டு போயிடுறேன்” என்றார் பார்வை கொலை வெறியில் இருந்தாலும் காரியம் ஆக தன்மையாக பேசினார்


“ சரி சார் நான் கேட்டுட்டு வந்து சொல்றேன்” என்றவன் உள்ளே செல்ல
விஷ்வாவோ டேபிள் மேல் காலை தூக்கி வைத்து கொண்டு லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்து கொண்டு இருந்தான் அதை கண்டவன் கடுப்பாகி


“ விஷ்வா பார்த்தி….” என்று ஏதோ சொல்ல வர “ வெயிட் பண்ண சொல்லு இல்லை கிளம்ப சொல்லு” என்று விட
வேறு வழி இல்லாமல் வெளியே வந்தவன் “ சாரி சார் ஏர்க்கனவே மீட்டிங் ஸ்டார்ட் ஆயிடிச்சு..” என்க
இரும்பை முழுங்கியவர் போல் அமர்ந்து விட்டார்


நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது நொடிகள் நிமிடங்கள் ஆக நிமிடங்கள் மணி துளிகளாக மாறியது ஆனால் அவன் வந்த பாடு இல்லை


கலை நடந்த பிரச்சனையில் சாப்பிடாமல் வந்தார் இப்போது மதியத்தை தாண்டி நேரம் சென்று இருக்க பசி உயிரை கொன்றது அடக்கி கொண்டே அமர்ந்து இருந்தார்


அப்போது அது வழியே விஷ்வாவுக்கு சாப்பாடு சென்றது , வேண்டும் என்றே செய்கிறான் என புரிய பல்லை கடித்தார்


விஷ்வாவின் அறைக்கு சாப்பாடு வரவும் அவனை முறைத்து கொண்டு இருந்த ஷ்யாமை நோக்கி “ உனக்கு பசிக்கல வாடா வந்து சாப்பிடு..” என்று அழைக்க


கடுப்புடனே அவன் முன் அமர அவனை சாப்பாட்டை பரப்பி வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்


ஷ்யாமும் அவனுகென சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டு விஷ்வாவை ஏறிட்டு பார்த்தவன் “ எதுக்கு இப்படி பண்றே விஷ்வா உன் மனசுல என்னை இருக்கு” என்று நிதானமாக கேட்க


“அதான் காலையில சொன்னேனே அவன் கேட்டவன் அதான் அவன் கிட்ட இருந்த டீலிங் எல்லாம் முடிச்சு கிட்டேன்” என்று சொல்ல


கடுப்பானவன் “ விளையாடாத விஷ்வா சீரியஸ் ஆக கேட்கிறேன் எதுக்கு இப்படி வெயிட் பண்ண வச்சிருக்க” என்று கேட்க


விளையாட்டை கை விட்டவன் அவனை ஏறிட்டு பார்த்து “பசி எப்படி இருக்கும், இன்னொருத்தன் கிட்ட கை ஏந்தி நிக்கும் போது எப்படி இருக்கும்னு அவனுக்கு தெரியவேண்டமா அதான் சின்ன டாஸ்” என்று ஒற்றை கண்ணை சிமிட்ட


கண்கள் விரித்த ஷ்யாம் ஏதோ புரிந்தவனாக சிரித்து கொண்டு “ பைன், இப்போ புரியுது சோ, நேத்து நிலாவுக்கு சாப்பாடு போடாம பட்டினி போட்டதுக்கு தண்டனை சரியா” என்க


“ அப்படி எல்லாம்…” என்று அவன் ஆரம்பிக்க குறுக்கிட்டவன் “ நல்லா தெரியுது மச்சான் … நீ காதல்ல குப்புற விழுந்துட்ட ஒரு நாள் பார்த்த பொண்ணுக்காக இவளோ தூரம் வந்துட்ட நீ நடத்து” என்று கிண்டல் செய்ய


விஷ்வாவின் முகத்திலும் சிரிப்பு வந்ததோ…..


இருவரும் சாப்பிட்டு முடிய கொஞ்ச நேரம் பொறுத்தே பார்த்திபனை உள்ளே அழைத்தான்


உள்ளே கோபமாக வந்தவர் அவனை பார்க்க ராஜா போல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அவரை பார்த்து “ கொஞ்ச மீட்டிங்ல பிசி ஆயிட்டேன்… வாங்க உக்காருங்க” என்று சொல்லி இருக்கையை கை காட்ட


வந்து அவன் எதிரில் அமர்ந்தவன் “விஷ்வா இந்த டீலிங் கேன்சல் பண்ண வேண்டாம் என்னோட எக்ட்ரா ரெண்டு பங்கு கூட உங்க கம்பெனிக்கு தரேன்… பிளீஸ் இதனால எனக்கு பெரிய லாஸ்” என்று கிட்ட தட்ட கெஞ்ச


இருக்கையை சுழற்றியவரு அவரை பார்த்தவன் “ நான் ஆல்ரெடி கேன்சல் பண்ணிட்டேனே இப்போ ஒண்ணும் பண்ண முடியாது mr. பார்த்திபன் பெட்டர் நீங்க வேறே டீல் பாக்கலாம்” என்றான்
“ ஆனா விஷ்வா ஏன் இப்படி ஒரு முடிவு என்ன காரணம் அதை சொல்லுங்க” என்று சீற


“ ஷட் mr. பார்த்திபன் திஸ் இச் மை ஆபீஸ், உங்க வீடு கிடையாது உங்க அதிகாரத்தை காட்ட, உங்களுக்கு ரீசன் தானே தெரியணும் நான் சொல்றேன்” என்றவன் அவரை ஊடுருவும் பார்வை பார்த்து


“ உங்கள பத்தி நல்ல விசாரிச்சேன், பெர்சனலா சொந்த தங்கச்சி கிட்ட இருந்து சொத்தை எல்லாம் எழுதி வாங்கினவர் தானே நீங்க அதான் உங்க கூட டீல் வச்சு நம்ம மேலே கை வச்சா என்னை பண்றது , ட்ரஸ்ட் அது தான் பிசினஸ்க்கு ரொம்ப முக்கியம், சொந்த குடும்பதுகிட்ட இப்படி நடந்தவர் என் சொத்து மேலே கை வைக்க மாட்டார் என என்ன நிச்சயம் அதான் முடிச்சுட்டேன்” என்று சொல்ல


பார்த்தவன் அதிர்ந்து நின்றான்


“ இந்த டீலிங் இனிமே நடக்காது mr. யூ கேன் கோ நவ்” என்று வாசலை கை காட்ட “எண்ணி வச்சுக்கோ விஷ்வா இனிமே யூ ஆர் மை எனிமி” என்று சொல்லி விட்டு விறு விறுவேன செல்ல
அவனை ஒரு பார்வை பார்த்தவன் வேலையில் மூழ்கினான்


அதன் பிறகு அவன் தலை நிமிர்ந்த போது மணி ஐந்து அப்போது ஷ்யாமும் சரியாக “ கிளம்பலாமா விஷ்வா” என்று கேட்க


“ எஸ் ஆப்கோர்சு” என்றவனும் எழுந்து கொள்ள இருவருமாக இறங்கி கார் அருகே செல்ல “ நான் கார் ஓட்டுறேன்” என்று விஷ்வா சொல்ல ஷ்யாமும் சாவியை நீட்டினான்


அதை வாங்கி கொண்டே விஷ்வா உள்ளே ஏறி காரை இயக்கி வெளியே வந்தவன் வண்டியை பிரியாவின் வீட்டை நோக்கி ஓட்ட


“ விஷ்வா எங்கே போற இப்போ வீட்டுக்கு போகாம என்னை பண்ற” என்று கேட்க


அவன் வழக்கம் போல் வாயை இருக மூடி கொண்டான்


அதை கண்டு சலித்தவன் “ என்னமோ பண்ணு” என்று அமைதியாகி விட


அவன் காரோ பிரியாவின் வீட்டிற்கு செல்லும் சாலைக்கு கொஞ்சம் முன்னால் அவனுக்கு முன் சென்று கொண்டு இருந்த காரை வழி மறித்து நிப்பாட்ட “ என்னை பண்ற டா” என்ற ஷியாமின் கத்தலை கணக்கில் எடுக்காமல் காரை விட்டு கீழே இறங்கி
அந்த காரின் டிரைவரிடம் “ வெளியே இறங்கு..” என்க அவன் உயரத்தை கண்டு பயந்தவன் “ சார்..” என்று இழுக்க “உசுரு மேல பயம் இருந்தா கீழே இறங்கு” எனக்


அவரும் பயந்து கொண்டே கீழ் இறங்கினார்


அவர் இறங்கியதும் காரை சுற்று வந்து பின் கதவை திறக்க அங்கே அவனை கண்டு அஞ்சிய படி இருந்தது என்னமோ பிரியா தான்


அவளை கண்டதும் தான் ஷ்யாமிற்கு காரணம் புரிய “ ஓ…. இந்த பொண்ணை பார்க்க தானா” என்றவன் அவன் பக்கத்தில் நின்ற டிரைவரிடம் “ இங்க நடக்கிறது எதுவும் வெளிய போச்சு உன் உசிரை நீ மறந்துட வேண்டியது தான்” என்று மிரட்ட அவரோ பயந்து கொண்டு “ நான் சொல்ல மாட்டேன் சார்” என்றார் அவசரமாக


கார் கதவு திறந்து கொண்டு உள்ளே ஏறியவன் அதை அறைந்து சாத்த பெண்ணவள் பயந்து ஒடுங்கி கொண்டாள்


கார் கண்ணாடி கருப்பு நிறத்தில் இருந்ததால் உள்ளே நடப்பது எதுவும் ஷ்யாமிற்கு தெரியவில்லை


விஷ்வாவோ அவள் முகத்தை பற்றி திருப்பி பார்க்க அங்கே வீக்கம் சற்று குறைந்து இருந்தது , அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க


“ சாப்டியா…” என்றான் குரலில் அத்தனை கம்பீரம் அதை கேட்டதும் ஆம் என்று பலமாக தலை அசைக்க


“ குட்…” என்றவன் பின் கழுத்தை வருடி கொண்டு “ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு அப்படியே இரு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஐ குறைச்சுக்கிறேன்” என்றவன் அதிரடியாக


அவள் கழுத்தை பற்றி இதழியல் இதழ் பொருத்தி இருந்தான்


தொடரும்…..

என்னோடு வா அன்பே கருத்து திரி

 
அத்தியாயம் 8:


காரில் அவனை கண்டு பயந்து ஒடுங்கி போய் இருந்தவளை இழுத்து அவன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்
அவள் எதிர்பார்க்கா நேரத்தில் இதழில் முத்தம் இட்டு இருந்தான் , அவள் அவனை இரு கைகளாலும் தள்ளி விட அவனோ மேலும் அவளை தன்னோடு இறுக்கி கொண்டான்


அவன் பிடியில் இருந்த அழுத்தம் அவன் முத்தத்தில் இல்லை மென்மையாக இருந்தது ஆனால் அதை உணரும் நிலையில் தான் அவள் இல்லையே


வீட்டினரின் அரைவணைப்பு இல்லாமல் கன்னியஶ்ரீகளின் அரைவணைப்பில் வளர்ந்த பெண்ணவள்


திருமணத்திற்கு முன்பாக ஆண்களின் தொடுகை கூட தவறு என சொல்லி வளர்க்க பட்டவள் , ஸ்கூல் கல்லூரி, மடம் அவர்களின் பழக்க வழக்கங்கள் என ஒரு சிறிய கூட்டில் வளர்ந்த பெண்ணவளுக்கு
அவள் சொந்த வீடே கண்ணியமாக தான் தெரிந்தது , சுயமாக உழைத்து அவள் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி இருக்க முதல் நாள் அவன் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை


இதில் தொடர்ந்து அவளை அவன் சுற்றி வந்து கட்டாய படுத்த பயம் தான் வந்தது


இதில் யாரிடமும் அவள் வலியை கொட்ட முடியாத அழுத்தம் வேறு , கண்ணில் கண்ணீர் வழிய அதன் உப்பு சுவையை உணர்ந்து தான் அவளை விட்டு விலகினான்

ஏறிட்டு அவளை பார்த்தவன் “ எதுக்கு இப்போ அழுவுற..” என்று அதட்டகால கேட்க சட்டென்று கண்ணீரை துடைத்தவள் இல்லை என்று தலை ஆட்ட


“ குட் ..” என்று கன்னம் தட்டி விட்டு அவன் கோர்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பையை எடுத்து நீட்டினான் அவளும் என்ன என்று பார்க்க “ புரோட்டீன் பார்…” என்று சொல்லி பத்து சாக்லேட் வடிவிலான புரோட்டீன் பாறை அவளிடம் நீட்ட அவள் தயங்கினாள்


“புடி ….” என்று மீண்டும் அதட்ட வாங்கி கொண்டாள் “ இனிமே சாப்பாடு போடலெனா இதுல ஒண்ணு சாப்டா போதும் பசியும் போயிடும் ஹெல்தியும் கூட” என்று சொல்ல


அவனை எந்த வகையில் சேர்ப்பது என்று தான் விழித்தாள்


அவள் அதிர்ந்து நிற்பதை ஒரு கணம் ரசனையாக பார்த்தவன் “ நாளைக்கு ஆபீசில பாக்கலாம்” என்று சொல்லி விட்டு இறங்கி கொள்ள ‘ மறுபடியும் ஆபீசுக்கு வருவானா ‘ என்று பயந்தாள் பெண்ணவள்


வெளியே வந்தவன் டிரைவரை பார்த்து “ நான் வந்து பேசினது யாருக்கும் தெரிய கூடாது” என்று கட்டளையாக சொல்ல “ சொல்லமாட்டேன்” என்றார் அவர் அவசரமாக


அவர் காரை எடுத்து கொண்டு செல்லவும் தான் அவன் காரில் ஏறி கொண்டான் விஷ்வா , அவனை தொடர்ந்து காரில் ஏறி கொண்ட ஷ்யாம் அவனை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு


“ என்ன லிப்ஸ்டிக் கரை எதுவும் காணும் இணைக்கும் கன்னத்துலையா” என்று கிண்டலாக கேட்க


சிரித்து கொண்டே ஸ்டியரிங்கில் தாளம் இட்டவன் “ நேச்சுரல் பிங்க் லிப்ஸ் டா நோ…. லிப்ஸ்டிக்..” என்று சிலாகித்து சொல்ல


அவன் ரசனையை ஒரு முறை பார்த்தவன் “ ஓ அப்போ இந்த நேச்சுரல் அழகுக்காக தான் இவளோ நாள் சிங்கிளா இருந்தியா..” என்று கேட்க


“ டேய்…. நான் இப்போவும் சிங்கிள் தான் டா…” என்று சொல்ல “ தெரியுது தெரியுது…” என்று கிண்டலாக சொல்லி கொண்டான் ஷ்யாம்


பிரியாவின் கார் வீட்டுக்குள் வந்து சேர முகத்தை அழுந்த துடைத்தவள் அவன் கொடுத்த பையை கை பைக்குள் போட்டு விட்டு இறங்கி வீட்டுக்கு சென்றாள்


உள்ளே முன்னரையில் இருக்கும் சோஃபாவில் கோபமாக அமர்ந்து இருந்தார் பார்த்திபன் அவர் பக்கத்தில் அவரை விட அதிக கோபத்துடன் அமர்ந்து இருந்தார் மீனா


இருவரும் அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்க்க நிற்கவா போகவா என்று தடுமாறியவள் மெல்ல நடக்க


“ எதுக்கு டி நீ பொறந்து தொலைச்ச உன்னால இப்போ நூறு கோடி நஷ்டம் தெரியுமா…” என்று மீனா சீற
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை

என்ன சொல்கிறார் இவர் நான் என்ன செய்தேன் என்றவள் புரியாமல் பார்க்க


“ என்னடி எதுவும் தெரியாத மாதிரி நிக்கிற , அந்த விஷ்வா உனக்கு சொத்தில பங்கு தரமா விட்டோம்னு உங்க மேல நம்பிக்கை இல்லனு நம்ம கூட இருந்த எல்லா ஒப்பந்தத்தையும் முடிச்சிட்டான் ….. நூறு கோடி நூறு கோடி டி… எல்லாம் உன்னால” என்று அவர் சீற


“ அட பாவி….” என்று அவள் மனம் கூக்குரல் இட மீனா ஏதோ பேச வர
“ மீனா இரு நான் பேசிக்கிறேன்” என்று அடக்கிய பார்த்திபன்


அவளிடம் நெருங்கி நிதானமாக “ இங்க பாரு நூறு கோடி சின்ன அமௌன்ட் இல்லை, நான் நிறைய இடத்துல கேட்டு பார்த்துட்டேன் கிடைக்கல , இப்போ இருக்குற ஒரே வழி இந்த வீட்டை விக்கிறது தான்” என்று சொல்ல அவள் அதிர்ந்து விட்டாள்


அவளுக்கு எங்கே அவன் ஆஸ்தியை பற்றி தெரிய போகிறது அவளை பயம் கொள்ள வைக்க அப்படி சொல்லி விட்டான்


மேலும் தொடர்ந்தவன் “ இந்த வீட்டை வித்து கடன் அடச்சிடுவேன் அப்புறம் நான் ஏன் புள்ளைங்களை பொண்டாட்டியை கூட்டிட்டு வேறே வீட்டுக்கு போயிடுவேன் நீ தான் நடு தெருவுல நிக்கணும் இப்போ சொல்லு என்ன பண்ணலாம்” என்று கேட்க


கண்ணீர் நிரம்ப “ நான் எதுவும் செய்யலையே , என்னால என்ன பண்ண முடியும்” என்று இயலாய்மையுடன் கேட்க
“ நீ நினைச்சா முடியும்..” என்க அவரை கேள்வியோடு பார்த்தாள்


“ நாளைக்கு விஷ்வா ஆபீசில போ , போய்… அவன்கிட்ட உன் விருப்ப படி தான் எல்லாத்தையும் எழுதி குடுத்தா சொல்லு, உனக்கு சொத்து மேலே விருப்பம் இல்லைன்னு சொல்லு , அவனை எப்படியாவது புரிய வச்சு மீண்டும் எல்லா ஒப்பந்தமும் பழைய படி நடக்கணும் புரியுதா…” என்று கேட்க


அவளோ அதிர்ந்து அவரை பார்த்தாள் “ நான் எப்படி…” என்று அவள் இழுக்க


“ எப்படியா… உன்னால தான் நஷ்டம் அப்போ நீ தான் போகணும்..” என்று மீனா சீறி கொண்டு வர


“ விடு மீனா… அவ போவா…” என்று பார்த்திபன் அழுத்தமாக சொல்ல அதில் போய் தான் ஆக வேண்டும் என்ற கட்டளை இருக்க


அவள் தலை தானாக சரி என ஆடியது


மேலே மாடிக்கு சென்றவளுக்கு அப்போது தான் அவன் “ நாளை ஆபீசில பார்க்கலாம்..” என்று சொன்னதன் அர்த்தம் புரிய


“ ஆக எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றான்…” என்று சொல்லி கொண்டாள்


இரவு தூங்க சென்று பார்த்தவளுக்கு தூக்கம் வந்தால் தானே அவனை நாளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பயத்தை கொடுக்க புரண்டு புரண்டு படுத்தாள்


தூக்கம் வராமல் இருக்க பால்கைனியை கண்டவளுக்கு நேற்றைய நிகழ்வு ஞாபகம் வர , எழுந்து சென்று கதவை திறந்து பார்த்தாள்


பார்த்தவளுக்கு கண்கள் விரிந்து கொண்டது , வெளியே சாலையில் காரில் சாய்ந்து நின்று கொண்டு அவளை தான் சிரித்த முகாக பார்த்து நின்றான் விஷ்வா


இவள் வெளியே வந்ததை கண்டதும் இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்பி வைக்க சட்டென்று வாசல் கதவை அடைத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்


அதை கண்டு வாய் விட்டு சிரித்தவன் கார் உள்ளே ஏற பக்கத்து இருக்கையில் தூங்கி கொண்டு இருந்த ஷ்யாமை கண்டு மேலும் சிரிப்பு தான் வந்தது


உள்ளே ஏறி காரை இயக்கியவன் மனதில் “ ஆக அவளும் தூக்கம் இல்லாம என்னை தேடி இருக்கா” என்று எண்ணி கொண்டு உல்லாசமாக காரை ஓட்ட


அவன் கார் செல்வதை திரைச்சீலைக்கு பின்னால் நின்று பார்த்து கொண்டு நின்றவள் பெரு மூச்சு ஒன்றை விட்டு கொண்டு சென்று படுத்து விட்டாள்


ஏன் என்று தெரியாமல் நல்ல ஒரு தூக்கம் வந்து அவளையும் சூழ்ந்து கொண்டது


மறுநாள் காலையில் அவள் கண்விழிக்க கீழே நிறைய சத்தம் கேட்டது பரிஜயமான குரல்கள் தான் அதனையே வந்தவர்கள் யாரென்று கண்டு கொண்டாள்


ஆம் நேற்று விஷ்வா செய்த பிரச்சினையை அறிந்த குடும்பத்தினர்கள் இரவோடு இரவாக வீடு வந்து சேர்ந்து இருந்தனர்


கௌரி மற்றும் நாராயணன் பார்த்திபனின் தங்கை மற்றும் தம்பி இருவருக்கும் சொத்தில் பங்கு இருக்க இப்போது வந்த நஷ்டத்தையும் மூவரும் தானே பார்த்து கொள்ள வேண்டும்

அதனால் தான் கிளம்பி வந்து விட்டனர்
இருவரும் அவர்கள் குடும்பத்தோடு டில்லி, மும்பை என்று செட்டில் ஆகி இருக்க அங்கே இருக்கும் தொழிலை தான் கவனித்து கொண்டு இருந்தனர்
முக்கியமான பொறுப்பை பார்த்திபன் பார்த்தாலும் இவர்கள் உழைப்பும் உண்டு விஷ்வா செய்த அலப்பறையால் அவர்கள் குடும்பத்தை கூட்டி கொண்டு வந்து விட்டார்கள்


கௌரிக்கு இரண்டு மகன்கள் கெளதம் மற்றும் கார்த்திக் இரண்டு பேரும் வசதியான வாழ்க்கை வாழும் பணக்கார திமிர் உள்ள ஆண்கள் பெண்களை போக பொருளாக மட்டும் பார்க்கும் ஜென்மங்கள்


நாராயணன் அவருக்கு ஒரு மகள் மட்டும் சுவேதா அவளும் அவர்களை போல் திமிரான பெண் தான்


பார்த்திபனுக்கும் ஒரு பெண் தான் திவ்யா… அவள் மட்டும் தான் குரூப்பில் டூப் கொஞ்சம் நல்ல மனது உள்ள பெண் நிலாவிடம் கொஞ்சமாவது சிநேகமாக பேசும் ஜீவன்


நாராயணன் வீட்டில் தான் நின்று படித்து கொண்டு இருந்தாள் இப்போது அவர்களுடன் வந்து இருக்கிறாள்


அவர்கள் குரலை கேட்டதும் ஒரு வெறுமை இனி அவர்கள் பேச்சும் சேர்ந்து கேட்க வேண்டுமே என்று தான்


குளித்து முடித்து ஆபீசுக்கு தயார் ஆகி தான் வெளியே வந்தாள் நீல நிற சுடிதார் தான் வேஷம் கீழே படிக்கட்டில் இறங்கி வருபவளை சாப்பாடு மேஜை மேல் இருந்த எல்லோரும் திரும்பி பார்க்க

அவளுக்கு சங்கடமாக இருந்தது
எல்லோரின் முகத்தையும் பார்க்க அவளை கொல்லும் கோபத்தில் பார்த்து இருந்தார் நாராயணன் மற்றும் கௌரி

மெல்ல இதழை விரித்து அவள் சிரிக்க வெடுக்கென்று முகத்தை திருப்பி கொண்டார்


அது தெரியும் தானே கவலை எல்லாம் இல்லை அடுத்து சுவேதாவை பார்க்க அவள் இவளை பார்க்கவே இல்லை

அடுத்து கார்த்திக் மற்றும் கௌதம் இவளை விழுங்கி விடும் காம பார்வை அவர்களிடம் சட்டென்று பார்வையை திருப்பி கொண்டாள்


அடுத்து திவ்யா அவள் மட்டும் தான் அவளை பார்த்து சிநேகமாக சிரிக்க அவளும் பதிலுக்கு சிரித்தாள்


தொடரும்….


 
Status
Not open for further replies.
Top