ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 32

CRVS2797

Member
தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 32)


ஹைய்யா... ஓடுகாலி திரும்பவும் ஓடிப் போயிட்டா..!
ஆனா, இந்தத் தடவை சிங்கிளாத்தான் ஓடிப் போயிருக்கா. அங்கப்போய் எவன் கூட மிங்கிளாவான்னு
அது அவனுக்குத்தான் வெளிச்சம். எனிஹவ், வீரா & அசஷயாவுக்கு வந்த சோதனை
எந்த வேதனையையும் தராம
வாழ்க்கையில் ரெண்டு பேரையும் நல்லாடியா கோர்த்து விட்டுத்தான் போயிருக்குது.
அதாவது சனியன் போகிறச்ச ஏதாவது நல்லது பண்ணிட்டுத் தான் போகுமாம். இவங்க விஷயத்துலயும் அதான் நடந்திருக்குது. யூ ஹேப்பி,
ஐ'ம் ஹேப்பி & வீ ஆர் ஆல் ஹேப்பி..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

அத்தியாயம் 32

அடுத்த நாள் காலையில் அவள் எழுந்த போது அவன் இடம் வெறுமையாக இருந்தது...

குழந்தையைக் காணவில்லை... அவன் தான் மல்லிகாவிடம் குழந்தையை காலையில் தூக்கிக் கொடுத்து இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டே எழுந்தவள் குளிக்கச் சென்றாள்.

தன்னுடன் இன்று அவன் அலுவலகத்துக்கு வரச் சொன்னது அவளுக்கு நினைவில் இருக்க, புடவை அணிந்து ஆயத்தமானவள் வெளியே வர அங்கே தனபாலனுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் வீரராகவன்...

அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதுமே, சாப்பிட்டுக் கொண்டே விழிகளை மட்டும் உயர்த்தி அக்ஷயாவை பார்த்தான் வீரராகவன்... அவளுக்கோ அவனை பார்க்கும் அளவுக்கு தைரியம் இருக்கவே இல்லை... இன்னும் அவனுடனான கட்டில் யுத்தம் நினைவுக்கு வந்து போனது...

அவனை தவிர எல்லா இடமும் பார்த்தாள். மல்லிகாவின் கையில் இருந்த குழந்தைக்கு முத்தமிட்டவள், "குளிச்சிட்டிங்களா?" என்று குழந்தையிடம் கேட்டுக் கொண்டே நின்று இருக்க, "இன்னைக்கு என் கூட வர்ற தானே" என்று கேட்டான் வீரராகவன்...

கேள்வி கேட்கின்றான்...

அவனை தவிர்க்க முடியாது...

திரும்பி அவனை பார்த்தாள்...

விழுங்கி விடுவது போல இருக்கும் அவன் பார்வையை அவளுக்கு எதிர்கொள்ள சிரமமாக தான் இருந்தது...

உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே, "வரேன்" என்றாள்.

தனபாலனோ, "இங்கயும் உன்னை விட்டு வைக்கலயா?" என்று சிரித்தபடி கேட்க, வீரராகவனோ, "வீட்ல சும்மா இருக்கவா அழைச்சு வந்தேன்" என்று கேட்டான்...

"நீ ஒரு மெஷின் டா" என்று சொன்னார் தனபாலன்...

இதனை ஒரு நாள் முன்னால் அவர் சொல்லி இருந்தாள் அக்ஷயாவும் ஆமோதித்து இருப்பாளோ என்னவோ... இப்போது அவளுக்கு சிரிப்பு தான் வந்தது...

கட்டுப்படுத்திக் கொண்டே, வீரராகவன் அருகே அமர்ந்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்... இருவரும் சாப்பிட்டு விட்டு புது ப்ராஜெக்ட் நடக்கும் அலுவலகத்துக்கு கிளம்பி விட்டார்கள்...

முதல் நாள் நடந்த சம்பவத்தால் கடுப்பான மோனிஷாவோ, தனது அறைக்குள் இருந்து ஜோடியாக வருபவர்களை வன்மத்துடன் சி சி டி வி யில் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு இதனை ஜீரணிக்கவே முடியவில்லை...

ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது...

வீரராகவனோ தனது அறைக்குள் வந்து தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட, அக்ஷயாவும் தனது டைப்பிங் வேலையில் ஈடுபடும் பொருட்டு அங்கே இருந்த சிஸ்ட்டத்தை ஆன் செய்தாள்...

கொஞ்ச நேரம் கடந்து இருக்கும்...

"ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்க?" என்று யோசித்துக் கொண்டே மோனிஷா அவர்கள் அறைக்குள் நுழைய, இருக்கையில் சாய்ந்து இருந்தபடி அவளை ஏறிட்டு பார்த்த வீரராகவனோ, "கம் இன்" என்று சொன்னான்...

அவளும் உள்ளே வந்து அமர்ந்தவள், "அப்புறம் ப்ராஜெக்ட் எல்லாம் எப்படி போகுது?" என்று கேட்க, "இப்போ தானே ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்" என்றான் அவன் இளக்காரமான குரலில்...

அவளோ சட்டென்று திரும்பி அங்கே டைப் செய்து கொண்டு இருந்த அக்ஷயாவைப் பார்த்து விட்டு மீண்டும் வீரராகவனை பார்த்தவள், "சோ இந்த ப்ராஜெக்ட் ஐ கால் ஆஃப் பண்ணுறது உங்களுக்கு பிரச்சனை இல்லை ரைட்?" என்று கேட்டாள். அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "கோ எஹெட்" என்றான்...

"கடைசியா யோசிச்சுக்கிங்க மிஸ்டர் வீரா" என்று சொல்ல, "அக்ஷயா வன் காஃபி" என்றான்...

"ஐ டோன்ட் ட்ரின்க் காஃபி" என்றாள் மோனிஷா...

"காஃபி எனக்கு" என்று அவள் மூக்கை உடைத்து விட்டு எழுந்தவனோ காஃபி மெஷின் அருகே பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டே நடந்து செல்ல, மோனிஷாவோ அவனை முறைத்துப் பார்த்தாள்.

அக்ஷயாவோ காஃபியை கப்பில் எடுத்துக் கொண்டு இருக்க, அவளை நெருங்கி நின்றான் வீரராகவன்...

அக்ஷயாவுக்கோ அவன் நெருக்கம் என்னவோ செய்ய, ஒற்றைக் கையால் காஃபியை பிடித்துக் கொண்டே, அவனை பக்கவாட்டாக திரும்பி ஏறிட்டுப் பார்த்தாள்...

அவனோ மோனிஷாவை பார்த்துக் கொண்டே, ஒற்றைக் கையால் அக்ஷயாவின் இடையை பிடித்து தன்னுடன் நெருக்கிக் கொண்டவன், ஏ சி யினால் குளிர்ந்து போய் இருந்த அவன் கரத்தை அவளது கத கதப்பான வெற்றிடையில் அழுந்த பதிக்க மூச்சடைத்துப் போனாள் அக்ஷயா... அவனோ அவளை பார்க்கவே இல்லை...

மோனிஷாவை பார்த்துக் கொண்டே, "மறுபடியும் சொல்றேன் கோ எஹெட், இந்த ப்ராஜெக்ட் கென்செல் ஆனா கூட ஐ டோன்ட் கெயார்" என்று சொல்லிக் கொண்டே, இப்போது திரும்பி அக்ஷயாவை பார்த்தான்...

அவள் விழிகளோ அதிர்ந்து விரிந்து இருக்க, அப்படியே குனிந்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தவன், "தேங்க்ஸ் ஃபோர் தெ காஃபி" என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் இருந்த காஃபி கப்பை வாங்கிக் கொண்டே தனது இருக்கையில் சென்று அமரவும், மோனிஷா கோபமாக எழுந்து கொள்ளவும் நேரம் சரியாக இருந்தது...

அவனை முறைத்தபடி வெளியேறப் போன மோனிஷாவோ, "கண்டிப்பா இதுக்கு அனுபவிப்ப" என்று சொல்ல, வீரராகவனோ இதழ்களை பிதுக்க, அவளோ அங்கிருந்து விறு விறுவென வெளியேறி இருந்தாள்.

அக்ஷயாவுக்கு இப்போது என்ன நடந்தது என்று கிரகிக்கவே முடியவில்லை... சற்று முன்னர் அவன் இடையில் பதித்த கையினால் உண்டான குளிர்மை அப்படியே இருக்க, புடவையை சரி செய்து இடையை மறைத்துக் கொண்டாள்.

வீரராகவனோ லேப்டாப்பை பார்த்துக் கொண்டே காஃபியை அருந்தியவன், "சாரி எல்லாத்துக்கும் கம்ஃபார்ட்டபிள் ஆஹ் இருக்கு" என்று சொல்ல, இப்போது புரையேறியது என்னவோ இருக்கையில் அமர்ந்து டைப் செய்து கொண்டு இருந்த அக்ஷயாவுக்கு தான்... அவன் சட்டென்று நிமிர்ந்து அவளை பார்க்க, அவளோ அவன் ஒரு கணம் பார்த்துக் கொண்டே தலையை தட்டியவள் மீண்டும் மானிட்டரை பார்க்க தொடங்கி விட்டாள்.

இதே சமயம் மோனிஷாவுக்கோ இருப்பு கொள்ள முடியவே இல்லை...

அதுவும் தனக்கு முன்னாலேயே அவன் மீண்டும் மீண்டும் அக்ஷயாவுக்கு முத்தமிடுவதை நினைத்துப் பார்த்தவளுக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது...

அப்படியே சற்று நேரம் அலுவலகத்தில் இருந்தவளுக்கு உடலில் ஏதோ ஒரு மாற்றம்...

சாரதியை அழைத்துக் கொண்டே, விறு விறுவென வெளியேறி ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.

அவளை பரிசோதனை செய்த வைத்தியரோ, "உங்க பிளட் ப்ரெஷர் ரொம்ப ஹை ல இருக்கு, இங்க ஒரு நாள் அட்மிட் ஆகி ரெஸ்ட் எடுக்கணும்" என்று சொல்ல, அவளும் உயிர் பயத்தில் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தாள். இந்த விடயம் புயல் வேகத்தில் எல்லாருக்கும் பரவ, தனக்கு வந்த செய்தியை கேட்ட வீரராகவனோ, "அக்ஷயா, ஹாஸ்பிடல் போயிட்டு வரேன்... நீ ஆஃபீஸ் வெஹிக்கில் ல கிளம்பிடு" என்று சொல்லி விட்டு உடனே மோனிஷாவை பார்க்க கிளம்பி விட்டான்.

அக்ஷயாவுக்கோ இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை... "யாரு ஹாஸ்பிடல்ல?" என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானவளுக்கு, மோனிஷா தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றாள் என்கின்ற செய்தியும் வந்து சேர, யோசனையுடனேயே வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்.

இதே சமயம், வைத்தியசாலைக்கு பூங்கொத்துடன் வந்து சேர்ந்தான் வீரராகவன்...

"ஹவ் ஆர் யூ மேடம்?" என்று கேட்டுக் கொண்டே, பூங்கொத்தை அவள் அருகே வைக்க, அவனை முறைத்துப் பார்த்தாள் பெண்ணவள்...

"கூல், பிளட் ப்ரெஷர் இன்னும் ஹை ஆகிட போகுது" என்று சொல்ல, அவளோ பயத்துடன் அவளுக்கு கட்டி இருந்த ப்ரெஷர் பார்க்கும் கருவியை பார்த்தாள். அதுவும் சற்று ஏறி இருக்க, வீரராகவனோ, "நான் சொன்னேன் ல, இங்க இருந்தா உங்களுக்கு தான் மிஸிஸ் ராதாகிருஷ்ணன் பிரஷர் அதிகமாகும்... சோ நீங்க இங்க இருந்து கிளம்புறது பெட்டர்... யோசிச்சு முடிவு எடுங்க... உங்கள டென்ஷன் பண்ணுறது எப்படின்னு எனக்கு தெரியும்" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டே எழ அவன் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மோனிஷா...

அன்று இரவு வீட்டுக்கு வீரராகவன் வந்து சேர்ந்ததும், "எப்படிப்பா மோனிஷாவுக்கு இருக்கு?" என்று சொல்ல, அவனோ, "நாட் பேட்" என்று சொல்லிக் கொண்டே அங்கே குழந்தையுடன் நின்ற அக்ஷயாவை ஒரு கணம் பார்த்து விட்டு அறைக்குள் குளிப்பதற்காக நுழைந்து விட்டான்...

அவன் வெளியே வந்ததுமே, அனைவரும் சாப்பிட்டு விட்டு படுக்க சென்று விட்டார்கள்... வீரராகவன் லேப்டாப்புடன் ஹாலில் அமர்ந்தவன், "தனிஷா தூங்குனதும் சொல்லு" என்று சொல்ல, அக்ஷயாவுக்கோ அவன் எதற்காக சொல்கின்றான் என்று அப்போது புரியவில்லை...

லேப்டாப்புடன் அறைக்குள் இருப்பது குழந்தைக்கு தூங்குவதற்கு இடைஞ்சல் என்று நினைக்கின்றான் போல என்று தான் நினைத்து இருந்தாள்.

சற்று நேரத்தில் தனிஷாவும் தூங்கி விட்டாள்.

வெளியே வந்த அக்ஷயாவோ, "தனிஷா தூங்கிட்டா" என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல, அவனோ, "ம்ம்" என்று சொன்னபடி லேப்டாப்பை மூடியவன் அக்ஷயாவை தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்...

அக்ஷயாவோ படுப்பதற்காக கட்டிலை நோக்கி செல்ல, கதவை தாழிட்டு விட்டு அவள் பின்னே வந்தவன், அவளை அள்ளி அணைத்து தூக்கிக் கொள்ள, அவளோ பதறி போனாள். அவனோ, அவள் பதறலுக்கு பதில் சொல்லும் விதமாக அவளின் இதழில் அழுந்த முத்தம் பதித்துக் கொண்டே, அடுத்த அறையை நாடிச் சென்றான்...

அவன் அந்த அறையை விட்டு வெளியேறிய போது அவன் இதழ்களில் யாரும் கண்டு பிடிக்க முடியாத மெல்லிய புன்னகை...

அக்ஷயாவோ சிறிது நேரம் கழித்து தான் வெளியே வந்தாள். இதழ்களில் வெட்கப் புன்னகை... அதே புன்னகையுடன் அவனைப் பார்க்க, அவன் தூங்கி இருந்தான்... இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களது உணர்வுகள் பேசிக் கொண்டு தான் இருந்தன...

அடுத்த நாள் காலையில் எழுந்த அக்ஷயாவோ "இன்னைக்கு சாரி கட்ட கூடாது... எல்லாருக்கும் முன்னாடி கண்ட இடத்துல கை வைக்கிறார்" என்று நினைத்துக் கொண்டே, லெக்கின்ஸ் மற்றும் டாப் ஒன்றை அணிந்து கொண்டே வெளியேற, அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான் வீரராகவன்...

அவளோ அவன் பார்க்கவும் இல்லை...

பார்க்கும் அளவுக்கு தைரியமும் இருக்கவே இல்லை...

அன்றும் இருவரும் ஜோடியாக சென்று அலுவலகத்தில் இறங்க, அங்கே வாசலில் அவர்களின் ப்ராஜெக்ட் மேனேஜர் பீட்டர் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தான்...

"என்ன பீட்டர்? இங்கே?" என்று கேட்டுக் கொண்டே வீரராகவன் காரில் இருந்து இறங்க, "சார் ஒரு அர்ஜன்ட் விஷயம்" என்று சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி சென்ற பீட்டரோ, "ப்ராஜெக்டை கால் ஆஃப் பண்ண போறதா பேசிக்கிறாங்க" என்றான்...

வீரராகவன் எதிர்பார்த்தது தான் இது...

"மிஸிஸ் ராதாகிருஷ்ணன் எங்க?" என்று கேட்க, அவனோ, "அவங்க இன்னைக்கு மார்னிங் கனடா கிளம்பிட்டாங்களாம்... ஸூம் மீட்டிங் இன்னைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு ஏற்பாடு பண்ண சொன்னார் ராதாகிருஷ்ணன் சார், அதுல தான் உங்க கூட பேசணுமாம்" என்று சொல்ல, வீரராகவனுக்கு பதட்டம் கொஞ்சமும் இல்லை...

அக்ஷயா பதறி விட்டாள்.

"என்னது ப்ராஜெக்டை கால் ஆஃப் பண்ண போறாங்களா?" என்று அவள் கேட்க, "சோ வாட்?" என்று கேட்டுக் கொண்டே, பீட்டரிடம், "ஸூம் மீட்டிங்குக்கு ரெடி பண்ணுங்க" என்று சொன்ன வீரராகவன் கூலாக தனது அறைக்குள் செல்ல, அக்ஷயா புரியாமல் தான் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

இதே சமயம் ப்லைட்டில் சென்று கொண்டு இருந்த மோனிஷாவோ, "உன்னை விட்டா ஊர்ல ஆம்பிளையா இல்ல? திமிர் பிடிச்சவன்?" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டு தான் பயணம் செய்தாள்.

எப்படியும் ப்ராஜக்ட் நிறுத்தப்பட போகின்றது என்று வீரராகவனுக்கு தெளிவாக தெரிந்தது...

அதனால் போலியான வாக்குறுதிகளை வேலையாட்களுக்கு வழங்காமல், "கெட் ரெடி டு ஃபேஸ் தெ இஸ்ஸு" என்று மறைமுக அறிவிப்பை வழங்கி இருந்தான்...

இதனால் அவனுக்கு நஷ்டம் தான்...

ஆனால் அது அவனை பெரிதாக பாதிக்காது...

ப்ராஜெக்ட்டின் ஆரம்ப கட்ட வேலைகளுக்கு செலவான பணம் தானே... அவனால் ஈடுகட்ட கூடியது தான்...

அதனாலேயே அவன் நிதானமாக இருந்தான்...

அக்ஷயாவுக்கும் அன்றைய தினம் அவன் வேலை பெரிதாக கொடுக்கவில்லை...

அவளும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே இருப்பவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். மாலை ஆறுமணி போல மீட்டிங்கும் ஆரம்பமானது...

"மிஸ்டர் வீரராகவன், ரியலி சாரி ஃபோர் திஸ் இஸ்ஸு, இப்போதைக்கு இந்த ப்ராஜெக்டை தொடர முடியாது, மோனிஷாவுக்கு ஹெல்த் இஸ்ஸு" என்றார்...

மோனிஷா என்ன சொன்னாலும் தலையாட்டி பழகியவர் அல்லவா? இதற்கும் தலையை பூம் பூம் மாடு போல ஆட்டி இருந்தார்.

"நோ வாரிஸ் மிஸ்டர் ராதாகிருஷ்ணன்... இப்போ கால் ஆஃப் பண்ணுனது பெட்டர்... எனக்கு லாஸ் கம்மி தான்... கோ எஹெட்" என்று சுருக்கமாக மீட்டிங்கை முடித்தவன் அங்கே வேலை செய்பவர்களுக்கு நியாயமான சலுகை அறிவிப்புகளையும் வழங்கி விட்டு கிளம்ப, மணி எட்டை தாண்டி இருந்தது...

அக்ஷயாவோ அவனை பிரமிப்பாக தான் பார்த்தாள்.


அனைத்தையும் இலகுவாக கையாளும் அவனது திறமை அவளுக்கு வியப்பாக இருந்தது... பிடித்தும் இருந்தது...
Super
 
Top