உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 26)
ஆனா, இன்னைக்கு இத்தனை தூரம் தன்னம்பிக்கையா மாமியார் கிட்ட பேசற தேன்மொழி, அன்னைக்கு
தன்னை பெத்தவங்களுக்காக தன் சுயத்தை தொலைச்சுட்டு
அந்த வாத்தி சொன்னான்னு
தன்னோட ஆசை, கனவு, வேலை, லட்சியம் எல்லாத்தையும் துறக்க ரெடியாத்தானே இருந்தா. அதுவும் தன்னோட வாய் பேச முடியாத ஒரேயொரு சூழ்நிலைக்காகவே, ரெண்டாம் கல்யாணம், கையில ஒரு பெண் குழந்தை, பிடிச்ச மாமியார்ன்னு
இப்படி அத்தனை மைனஸ் பாயிண்ட் இருந்தும் கமிட்டட் ஆக தயாராத்தானே இருந்தா.
இன்னைக்கு வம்சி ஏத்துக்கிட்டதாலத்தானே இத்தனை போல்டா பேசுறா, சுயத்தை தொலைக்காதிங்கன்னு அட்வைஸ் பண்றா.
லைஃப்ல... ஆணோ, பெண்ணோ எல்லாருமே ஏதாவாதொரு காரணத்துக்காக, ஏதாவது ஒரு கட்டத்துல,
அது நல்லதோ, கெட்டதோ
குடும்ப சூழ்நிலைக்காக தன்னோட, கனவுகளையோ, இலட்சியங்களையோ, சுயத்தையோ தொலைக்கிறது நடந்துக்கிட்டேத்தான் இருக்குது.
அது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்லபடியாவும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது, கெட்டதாகவும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மேகம் தன்னோட சுயத்தை தொலைக்கிறதாலத் தான் மழையா பொழியுது. மழை தன் சுயத்தை தொலைக்கிறதாலத் தான் வறட்சியா மாறுது.
ஸோ.. எல்லா நன்மை தீமைகளும் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப அமைகிறது, மாறுபடுகிறது.
சில நேரத்துல தப்பும் சரியாகலாம், பல நேரங்கள்ல
சரின்னு நினைச்சதும் தப்பாகிடலாம்... இது தான்
இயற்கையின் நியதி.



CRVS (or) CRVS 2797