ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 25

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 25

எக்கானமி சீட்டில் அமர்ந்து இருந்தான் சர்வஜித்...

முகத்தில் ஒரு இறுக்கம்...

இறுக்கத்தின் நடுவே மெல்லிய வலி...

உணர்வுகளை அடக்கி ஆழ்ந்த மூச்சை விட்டவன் அருகே வந்து அமர்ந்தார் அந்த பெரியவர்... அவர் மனைவியும் வந்து இருந்தார்... அந்த பெரியவருக்கோ தலையில் மெதுவாக நரை எட்டிப் பார்க்க, வயது ஒரு அறுபத்தைந்து சொல்லலாம்.

பார்க்க ஆசிய நாட்டை சேர்ந்தவரது தோற்றம் தான்...

"ஹாய் ஹாண்ட்ஸம்" என்றார்...

அவனும் அவரை திரும்பிப் பார்த்து, "ஹாய்" என்றான்...

"ஐ ஆம் லிங்கம்" என்று சொல்லி கையை நீட்டினார்...

முதல் என்றால் கணக்கில் எடுக்காமல் ஒரு அழுத்தமான பார்வையுடன் கடந்து விடுவான் சர்வஜித்...

தனக்கு தேவை இல்லாதவர்களுடன் அவன் சினேகமாக உரையாடுவது இல்லை...

இன்று ஏனோ பேச வேண்டும் என்று தோன்றியது...

"ஐ ஆம் சர்வஜித்" என்று கையை குலுக்க, "தமிழா?" என்றார் அடுத்த வரியில்...

"ம்ம்" என்றான்...

"பார்க்க பாலிவுட் ஆக்டர் போல இருக்கீங்க" என்றார் அவர்...

அவனிடம் மெல்லிய புன்னகை...

கஷ்டப்பட்டு சிரித்தான்...

"என்ன லீவுக்கு ஊருக்கு போறீங்களா?" என்று கேட்டார்...

அவனும், "ம்ம்" என்று சொல்ல, "சின்ன பையனா இருக்கீங்க, நீ வா போ-னு பேசவா?" என்று கேட்டார்...

அவனிடம் மனதில் ஒரு வெறுமை...

இப்போது அவர் எப்படி பேசினாலும் அவன் மூளையில் ஏற போவது இல்லை...

"ம்ம்" என்றான் அதற்கும்...

இதனிடையே விமானமும் புறப்பட்டு விட்டது...

"நான் இப்படி தான் கல கலன்னு பேசிட்டே இருப்பேன்... இந்த அமெரிக்காவுல எப்படி தான் இருக்கீங்களோ தெரியல" என்றார்...

அவனோ, "ஏன்?" என்று கேட்க, அவரும், "என்னால இருக்கவே முடியல... ஒரு வயசில இங்க வேலை செய்தேன் தான்... வயசான அப்புறம் உறவுகளை மனசு தேட ஆரம்பிச்சுடுச்சு... அதனால நானும் என் பொண்டாட்டியும் இந்தியாவுக்கு வந்துட்டோம்... அப்புறம் பையனுக்கு குழந்தை பிறந்திச்சுனு பார்க்க போய்ட்டு இப்போ தான் ரிட்டர்ன் ஆகுறோம்... என்ன வாழ்க்கை சாமி இது" என்று புலம்பி தள்ளி விட, அவருக்கு அடுத்த பக்கம் இருந்த அவர் மனைவியோ, "பேசி பேசி அந்த பையனை கஷ்டப்படுத்தாம சும்மா வாங்க" என்று அவருக்கு கையில் ஒரு கிள்ளு...

அவரோ, "ஆஹ்" என்று அலற, சர்வஜித்தோ அவர்களை விசித்திரமாக பார்த்துக் கொண்டே, அவர் மனைவியை எட்டி பார்த்தவன், "பரவாயில்லை அவர் பேசட்டும், எனக்கு ஓகே தான்" என்றான்.

அவர் மனைவியோ, "அப்போ சிக்கிட்டீங்க" என்று சொல்லிக் கொண்டே ஹெட் செட்டை மாட்டி படம் பார்க்க தொடங்க, லிங்கமோ, "அவளுக்கு என் பேச்சு போர் அடிச்சு போச்சு... ஆனா நான் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டா தெரியுமா?" என்றார்...

ஆத்மார்த்த அன்பு...

ஆழமான அன்பு...

இமைக்காமல் பார்த்தான் அவன்...

மேலும் தொடர்ந்த லிங்கமோ, "அவளுக்கு மகன்னா அவ்ளோ உசுரு... மகன் கூட இரு... நான் கிளம்புறேன்னு சொன்னேன்... திட்டி திட்டியே கூடவே வர்றா" என்று சொல்லிக் கொண்டே சிரிக்க, அவனும் மெலிதாக புன்னகைத்தான்...

மனைவி என்கின்ற உறவு வாழ்க்கை முழுக்க தொடரும் என்று அவனுக்கு புரிய வைத்த இன்னொரு ஜோடி...

அந்த ஆத்மார்த்த அன்பை, ஜேம்ஸ் மற்றும் க்ளாராவிடம் தான் முதலில் உணர்ந்து இருக்கின்றான்...

இப்போது லிங்கம்...

"நான் மட்டுமே பேசிட்டு வரேன்... நீ ஏதாவது சொல்லுப்பா" என்றார்...

அவனோ, "சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... லீவுக்கு குடும்பத்தை பார்க்க போறேன்" என்று சொன்னான்...

"ஓஹ், பொண்டாட்டி புள்ள எல்லாம் இருக்கா?" என்று கேட்க, "ம்ம்" என்றான்...

"அப்போ இங்கயே செட்டில் ஆக வேண்டியது தானே" என்றார்...

அவனிடம் ஒரு மௌனம்...

அவரோ, "அது சரி, என் பையனே அமெரிக்காவுல தான் இருக்கான்... ஆனா பாரு உன்னை நான் இங்க செட்டில் ஆக சொல்றேன்... இந்த வயசில வாழ்க்கை எப்போவுமே ஓட்டம் தான்" என்றவரோ மேலும், "வாழ்க்கைல உனக்கு கிக் தர்ற மூணு விஷயம் சொல்லு" என்றார்...

அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "மனி, செக்ஸ், அண்ட் ஃபூட்" என்று சொல்ல, அவரோ, "பேர்ஃபெக்ட், நீ புத்திசாலி தான்... நாம இதுக்காக தான் சின்ன வயசுல ஓடிட்டே இருப்போம்... இன்னும் இன்னும் வேணும்னு சொல்ற விஷயங்கள் தான் இது மூணும்... ஆனா ஒரு வயசுக்கு அப்புறம் எதுவுமே கிக் ஆஹ் இருக்காது... உள்ள நோய் எல்லாம் வந்து சாப்பிட கூட மாட்டோம்... அப்போ நமக்கு கிக் ஆஹ் இருக்கிறது இந்த காதலும் பாசமும் தான்... அது எல்லாம் ஒரு வித ஃபீல்... என் வயசு வர்ற நேரம் உனக்கும் கண்டிப்பா புரியும்" என்றார்...

அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ம்ம்" என்றான்...

அவரோ, "அப்புறம் எங்க வேலை பார்க்கிற?" என்று அவர் கேட்க, அவனுக்கோ தனது அடையாளத்தை முதல் முறை சொல்ல தயக்கம்...

அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம்...

எந்த அடையாளத்தை தலைக்கு மேல் சுமந்துக் கொண்டே இருந்தானோ, அதனையே இப்போது வெளியேச் சொல்ல தயங்கி நிற்கின்றான்...

"ஐ டி கம்பெனில" என்றான்...

"ஓஹ், நிறைய பேரை இப்போ லே ஆஃப் பண்ணுறாங்கல்ல" என்று சொல்ல, "ம்ம் ரிசெஷன்" என்றான் சர்வஜித்...

"என் பையனுக்கும் வேலை இன்னும் ஒரு மாசம் தான்... மும்முரமா வேலை தேடிட்டு இருக்கான்... டென்ஷன்ல அவன் மனைவியை கரிச்சு கொட்டிட்டே இருக்கான்... பாவம் அந்த பொண்ணு... நாம வேற அவனுக்கு ஏன் பாரமா இருக்கணும்னு யோசிச்சு கிளம்பிட்டேன்... எனக்கும் இந்த ஸ்னோல அங்கே வீட்டுக்குள்ள இருக்க முடியல... ஊருக்கு வந்தா நாலு பேர் வீட்ல போய் பேசிட்டு சந்தோஷமா இருக்கலாம்" என்று பெருமூச்சுடன் சொல்ல, அவர் குரலில் மகனுக்காக அவர் படும் கஷ்டம் அப்பட்டமாக தெரிந்தது...

ஒரு வயதுக்கு பிறகு நமக்காக யோசிக்காமல் உறவுகளுக்காக தான் யோசிப்போம் என்று சொல்லாமல் சொன்னார்...

மருதநாயகத்தின் முகம் அவனுக்கு கண் முன்னே வந்து போனது...

பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், ஜன்னலினூடு வெளியே பார்த்தான்...

வெண்மேகங்கள் நடுவே, விமானம் பறந்துக் கொண்டே இருக்க, அந்த காட்சி அவனுக்கு இதமாக இருக்க, இதழ்கள் மெதுவாக விரிந்தன...

எப்போதுமே ரசிக்க தோன்றாத இயற்கையை இன்று ரசித்தான்...

ஸ்டாக் மார்க்கெட் ஏற்ற இறக்கங்களை கணினியில் பார்த்துக் கொண்டு இருந்த கண்கள் இப்போது வெளியே வந்து தன்னை சுற்றி இருப்பவற்றை பார்க்கின்றன...

இப்போது அவனுக்கு மீண்டும் ஆதிரையாழின் நினைவுகள்...

அவள் அமெரிக்கா வரும் போது இந்த வெண்மேகங்களை பார்த்து சிரித்த நினைவு வந்து போனது...

என்ன தான் அவன் திரும்பிச் சென்றாலும் மருதநாயகம் முன்னே அதே திமிருடன் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான்...

அவருக்கு பிடித்த திமிரை அவன் விட்டு கொடுக்க விரும்பவில்லை...

அப்படி விட்டு கொடுத்து விட்டால் அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று அவருக்கும் தெரிந்து விடும் அல்லவா?

அதற்காகவே தன்னிலை மாற்ற விரும்பவில்லை அவன்...

அதே சமயம் மகனை பற்றிய எண்ணம் அவனுக்கு...

"எப்படியும் ஐந்து வயசு ஆகி இருக்கும்... என்ன பேர்னு கூட தெரியல... என்னை அவனுக்கு தெரியுமா?" என்று பல்வேறு எண்ணங்கள்...

இடையில் ஆதிரையாழின் எண்ணம்...

அவளை பற்றி என்ன எண்ணம் என்று அவனுக்கே தெரியவில்லை...

அவளை பற்றி தனது மனம் என்ன நினைக்கின்றது என்றும் புரியவில்லை... ஆனால் அவள் நினைவு அடிக்கடி அவனுக்கு தன்னையும் மீறி வந்து போகும்...

இதனிடையே அவன் அப்படியே தூங்கி விட, நீண்ட நேரம் கழித்து சென்னை விமான நிலையத்தில் இறங்கிக் கொண்டான்...

அவன் அருகே லிங்கமும் அவர் மனைவியும் நடந்து வர, வாசலுக்கும் வந்து விட்டான்... டாக்சிக்கு புக் செய்து விட்டு விமான நிலைய வாசலில் காத்துக் கொண்டு இருக்க, லிங்கம் செல்ல வேண்டிய டாக்சி வந்து சேர்ந்தது... அவனது டாக்சியும் வந்து இருந்தது...

லிங்கமோ, "அப்புறம் வரேன் தம்பி" என்று சொல்ல, அவனோ ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு, அவரை பார்த்துக் கொண்டே, பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்தவன், அதில் இருந்த விசிட்டிங் கார்டுகளில், ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டியபடி, "இத உங்க பையனுக்கு வாட்ஸ் அப்ல அனுப்பி, கால் பண்ண சொல்லுங்க" என்றான்...

அவரோ அந்த கார்டை பார்த்து விட்டு, "இது ஃபேமஸ் ஐடி கம்பெனில, அங்க தானா நீ வேலை பார்க்கிற?" என்று கேட்க, அவனோ, பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து கண்ணில் அணிந்துக் கொண்டே, "அந்த கம்பெனி எம் டி யே நான் தான்" என்று மென் புன்னகையுடன் சொல்லி விட்டு அங்கே தனக்காக காத்துக் கொண்டே நின்ற காரில் ஏற, அவரோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "ரொம்ப நன்றி சார், நீ வா போன்னு கூப்பிட்டதுக்கு மன்னிச்சுக்கோங்க" என்றார்...

அவனோ கார் கண்ணாடியை இறக்கி, "மரியாதையா கூப்பிட்டீங்கனா உங்க பையனுக்கு வேலை இல்ல" என்று சொல்ல, "ஐயையோ, போயிட்டு வாப்பா, உன் மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்ப" என்று சொல்ல, ஒரு திருப்தியான புன்னகையுடன் கார் கண்ணாடியை மூடியவனோ அப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டே, "லெட்ஸ் கோ" என்று டிரைவரிடம் சொல்ல, காரும் புறப்பட்டது...

"பணம் சம்பாதிக்கிறது பெருசு இல்லடா, நாலு பேருக்கு உதவி பண்ணி பாரு, சம்பாதிக்கிறத விட ரெண்டு மடங்கு சந்தோஷம் கிடைக்கும்" என்று மருதநாயகம் எப்போதும் சொல்லும் வார்த்தையின் அர்த்தம் இப்போது புரிந்தது...

அவர் சொல்லும் போதெல்லாம், 'இந்த பெருசு ப்ளேட் போடுது' என்று நினைத்துக் கொள்வான்...

சில அறிவுரைகளை புரிந்துக் கொள்ள பக்குவம் வர வேண்டும்... பரந்த மனப்பாங்கு இருக்க வேண்டும்... இல்லை என்றால் அந்த அறிவுரைகள் எல்லாமே வீண் தான்...

இப்போது தான் மருதநாயகத்தின் அறிவுரைகள் எல்லாம் அவனுக்கு புரியவே ஆரம்பித்தன...

அவன் ஊருக்கு வருவது யாருக்கும் தெரியாது...

அன்று விடுமுறை... ரணதீரன் வீட்டில் தான் இருந்தான்...

அங்கே இருக்கும் மரங்களில் ஏறி அவன் விளையாடிக் கொண்டே இருக்க, மருதநாயகமோ அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டே, "கவனம் தீரா" என்று சொல்லிக் கொண்டே இருந்த தருணம் அது...

அவர்கள் வளாகத்தினுள் கார் நுழைந்தது...

ஆம் சர்வஜித்தின் கார் தான் அது...
 
Super and waiting for next epi sis
 
Top