ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 36- விதியை மாற்றிடும் திருத்தங்கள்

விதியை மாற்றிடும் திருப்பங்கள்
சிவானி, accidentally harming her mother, joins Officer சங்கர் to travel into the past and save her. They face danger, history, and unexpected challenges.
Set across three timelines, including the freedom struggle, the story shows courage, sacrifice, and selfless acts. Amid all this, a blossoming love story adds warmth✨❤️
 
இராஜி அன்புவின் விதியை மாற்றிடும் திருத்தங்கள்



நாயகன்: சங்கர்


நாயகி: சிவானி




காட்டிலாக்கா அதிகாரியாக இருக்கும் சங்கர்,மன உளைச்சல் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டு தன் தந்ததையிடம் சென்றுவிட, அந்த நேரத்தில் , மழையின் காரணமாக பெரும் மழையின் காரணமாக, ‌பெருநிலசரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.


தன் இங்கேயே இருந்திருந்தால்,இவ்வளவு மனித உயிர் சேதத்தை தடுத்திருக்கலாம் என மனம் அல்லாட மனம் தவித்து நிற்கிறான்.



அவ்விடத்திற்கு வருகிறாள் நாயகி, தான் ஒரு யூ- டியுபர் என்றும் தனக்கு இந்த காட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறாள்.



இந்த சூழலில் அது முடியாது என சங்கர் மறுக்க,அவள் அவனது பேச்சை கேட்காது உள்ளே செல்ல முற்படுகிறாள்.



நடந்த கோரத்தின் சாயல் கூட மாறாத நிலையில்,அவளது செயல் அவனை உறுத்த, அவளை கேள்விகளால் துளைக்க, தான் செய்த தவறால் தன் அம்மா பாதிக்கப்பட்டிருப்பதால் தன் அம்மாவை காப்பாற்ற அந்த மலைக்கு ,அங்குள்ள சித்தர்களை சந்திக்க அங்கு செல்ல வேண்டும் என கூறுகிறாள்.




அவள் வார்த்தை மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவனுக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் தோன்ற கடினப்பட்டு அதன் உச்சியை அடைகின்றனர்.




இருவருக்குமான காரணங்கள் வேறாக இருக்கலாம்,ஆனால் இருவரும்,மன உளைச்சளில் உழன்று, மீண்டு வர தவிக்க,உயிரை பணயம் வைத்து, இறந்த காலத்திவ் நடந்த 3

தவறுகளை திருத்தினால் ,இப்பொழுது நடந்த தவறுக்கூ உபாயம் கிடைக்கும் என சில சங்கேத வார்த்தைகளின் மூலம் அறிய,சங்கரை சிவானிக்கு துணை இருக்கும் படி கட்டளை வருகிறது.




அதை ஏற்று கொண்டவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த மனதை இரணமாக்கும் சம்பவங்கள் நடக்காமல் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என நம் மனம் ஏங்குமே,அதுபோன்ற சம்பவங்களை சிலவற்றை நட்க்காமல் தடுக்கதான் இவர்கள் தன் உயிரை பணயம் வைத்து செல்கின்றனர்.



எந்தந்த காலகட்டத்திற்கு செல்கின்றனர்,அங்கே அவர்கள் சந்திக்கும் சவால்கள்,இன்னல்கள்,ஆபத்துகள் ,அதனை எவ்வாறு தன் அறிவு கூர்மை,சமயோஜித புத்தி,சாதுர்யம்,உடல் பலம்,மனபலம் கொண்டு திருத்தங்கள் செய்கின்றனர் என்பதே கதையின் போக்கு,இதனிடையே மெல்லிய தூரலாய் காதல் இழையோட,அழகான நகர்வுகளுடன்,சுவாரஸ்யமான திருப்பங்களுடன்,விதியை மாற்றிடும் திருத்தங்கள்.



மூன்று திருத்தங்களினால் விளைந்த திருப்பங்கள் என்ன??





மழையின் அறிகுறி இருந்தும்,விடுப்பு எடுத்து சென்று மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய காரணம் தான் என்ன?



சிவானியும் சங்கரும்,தங்கள் முயற்சி பயனலித்து அவர்களது மன உலைச்சளிலிருந்து மீண்டனரா…



ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பிய சங்கர்,அவளை விடுத்து,சிவானியை தருமணம் செய்ய, காரணம் தான் என்ன???


சில நாட்களே ஆன சங்கர்,சிவானியின் சந்திப்பு,பல ஜென்ம பந்தமாக மாறியது எப்படி???



இறந்தகாலம் மட்டுமன்றி எதிர்காலத்திலும்,இவர்கள் பயணம் தொடர்விலி இருக்கும் என்றும்,அதற்கான திருத்த வேண்டிய திருத்தங்கள்….அச்சோ. மிரட்டல்…..


விதியை மாற்றிடும் திருத்தங்கள்…சுவாரசிய தொகுப்பு.




வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖 💖 💖
 
#விதியை_மாற்றிடும்_திருத்தங்கள்.
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஃபேண்டஸி கதை🤩🤩🤩🤩🤩

ஃபாரஸ்ட் ஆபீசர் சங்கர்….அவன் வேலை செயற இடத்தில் சமீபமா நில சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே இல்லாம போச்சி🥺🥺🥺🥺🥺….

மறைமுகமா அவனும் தான் காரணமோனு நிறைய குற்ற உணர்வு இருக்கு…..

அப்ப அங்க வரா…. சிவானி…..அந்த காட்டில் சித்தர் இருப்பதாக நம்பி…..

அவளோட அம்மாவை காப்பாத்த…..

அவளோட தேடலும், அவனோட குற்ற உணர்வும் அவங்களை காலம் கடந்து பயணிக்க வைக்குது….

அவள் நம்பின சித்தர் மூலமா…..

கடந்த காலத்தில், மக்களுக்கு நடந்த பெரும் துயரில் இருந்து அவங்களை காத்தா….அதாவது அந்த விதியை மாத்தினா இவ அம்மாவும் காப்பாற்ற படுவாங்க….அவனும் குற்ற உணர்வில் இருந்து விடு படலாம்…..

எப்படி????

எந்த காலகட்டம்?????

அவங்க மாற்றின விதிகள் என்னென்ன?????

ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

கதை குட்டியா போச்சி….பட் செம்ம interesting கதை🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரை
ட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
 
விதியை மாற்றிடும் திருத்தங்கள்

சங்கர் காட்டுலாக்க அதிகாரி. அங்க பெரிய மழையினால மண் சரிவு ஏற்பட்டு ஒரு ஊரே அழிஞ்சுடுது. அதை பார்த்துட்டு இருக்கும் போது அங்க வரா நம்ம ஹீரோயின் ஷிவாங்கி.

அங்க அவளுக்கு வர ஆபத்துல இருந்து காப்பாத்துறான். ஒரு வீட்ல தங்க வைச்சு இருக்கான். ஷிவாங்கி யூட்யூபர்னு பொய் சொல்லி தான் அங்க இருக்கா. அவ அங்க இருக்கவங்க கிட்ட மலை மேல இருக்குற சித்தர்கள் பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சங்கரை மலை மேல கூட்டிட்டு போறா.

அவனும் அவ எதுக்காக இங்க வந்து இருக்கானு தெரிஞ்சுக்க அங்க கூட்டிட்டு போறான்.ஷிவாங்கி தன்னோட அம்மாவை காப்பாற்ற சித்தர்கள் கிட்ட ஹெல்ப் கேட்க வந்து இருப்பா. அங்க ஒரு குகைக்குள்ள ரெண்டு பேரும் போறாங்க.

அங்க அவங்கள ஒரு சுழல் மாதிரி ஒன்னு அவங்கள மூணு கால கட்டத்துக்கு கூட்டிட்டு போகுது. அங்கநடந்த தப்பை சரி பண்ணனும்னு அவங்களுக்கு விதிச்சு இருக்கு அதை எப்படி சரி பண்ணாங்க. அதுல இருந்து எப்படி தங்களோட கால கட்டத்துக்கு திரும்ப வராங்க ஷிவாங்கி அம்மா சரி ஆகிருச்சானு கதையில் சொல்லி இருக்காங்க.

ஒவ்வொரு கால கட்டத்துக்கும் கூட்டிட்டு போய் நம்மளையும் டைம் ட்ராவல் பண்ண வைச்ச பீல். ரொம்பவே நல்லா இருந்துச்சு.

இரண்டாவது கால கட்டம் எனக்கு ரொம்பவே பிடிச்சது. வெள்ளையர்களை எதிர்த்து போராடி அப்போ நடந்த சம்பவத்தை அழிச்சது படிக்கவே சூப்பரா சுவாரஸ்யமா இருந்துச்சு.

கதை படிக்க நல்லா விறு விறுப்பா இருந்துச்சு 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP36
Raji Anbu அவர்களின் எழுத்தில்
"விதியை மாற்றிடும் திருத்தங்கள்"
தலைப்பிலேயே கதையைப் பற்றிய சிறு குறிப்பு கொடுத்து விட்டார் ஆசிரியர்.
தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு முகை என்ற கிராமமே அழிந்து விடுகிறது. அதில் உயிரிழந்த மக்களை காப்பாற்ற முடியாத தன்னிலையை மிகவும் வெறுக்கிறான் சங்கர் காட்டிலாகா அதிகாரி.
மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்தக் காட்டில் சந்திக்கிறான் ஷிவானியை.
விபத்தில் அவளின் அன்னை கோமா ஸ்டேஜில் இருக்க அதற்குத் தான் காரணம் என நினைத்தவள் அதற்கான தீர்வாக காட்டில் இருக்கும் சித்தரை தேடி வருகிறாள்.
அவளோடு பல கால கட்டங்களுக்கு பயணிக்கிறான் சங்கர்.அங்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் நிறைந்தது தான் கதை. இதற்கிடையில் இவர்களுக்குள் காதலும் வளர்கிறது 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top