அத்தியாயம் 4
கிட்டத்தட்ட இரண்டு நாட்களாய் அவள் அந்த துத்தி தாவரத்தை தேடிக் கொண்டிருக்கிறாள்... அச்செடியின் புகைப்படத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கையில் வைத்துக் கொண்டவள் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் தேடித் தேடிப் பார்த்தாள் எங்கும் கிடைக்கவில்லை...
மனம் நொந்து போன நறுமுகை வேறு வழி கிடையாது கவிதாவிடம் உதவி கேட்டாள்.. ஏனெனில் கவிதா சற்று கிராமம் போல இருக்கும் இடத்திலிருந்து தான் வருகிறாள்...
சொல்லப்போனால் நறுமுகை இருக்கும் இடமும் கிராமம் போன்ற இடம் தான் ..ஆனால் அவள் சாலைக்கு சற்று அருகிலேயே இருக்கிறாள்.. ஆனால் கவிதா அப்படி இல்லை சாலையில் இருந்து கிட்டத்தட்ட அரை மணி தூரம் உள்ளே நடக்க வேண்டும் ..அவ்வாறு அவள் வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் புதர்கள்தான் மண்டி கிடக்கும்..
அன்று கல்லூரியில் இருந்து சீக்கிரமே கிளம்பியவர்கள் முழுவதும் அந்த துத்தி தாவரத்தை தான் தேடி அலைந்தனர்...
கவர் முழுக்க
அந்த தாவரத்தை நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்த மகளைக் கண்ட சுரதைக்கு சற்று கவலையாக இருந்தது...
" அப்படி என்ன தான் ப்ராஜெக்ட்டோ... இப்படி நொந்து நூலாகும் அளவுக்கு.. ம்ஹூம் போய் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள இந்த லட்சணம்.. இன்னும் ஆறு மாசத்தை நீ எப்படி தான் ஓட்ட போறியோ..?" என அவர் பங்கிற்கு வேறு பயமுறுத்தி விட்டு செல்லவும் அவ்வளவு தான் தலைசுற்றி விட்டது நறுமுகைக்கு ...
மறுநாள் தான் எடுத்து வைத்த துத்தி அடங்கிய கவரினை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக கல்லூரிக்கு விரைந்தாள் நறுமுகை...
நிச்சயம் இன்று விக்ரம் தன்னை பார்த்து இவ்வளவு கொண்டு வந்திருக்க? உனக்கு கிடைச்சிருச்சா பரவாயில்லையே..! என ஆச்சரியப்பட போறான் என எண்ணி எண்ணி மகிழ்ந்தவாறு சென்றாள் ...
அவள் உள்ளே செல்லும்போது விக்ரம் லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டிருந்தான்.. இவளை பார்த்ததும் தலையை மட்டும் அசைத்திட வேகமாக பையினை கூட கழட்டாது கவரினை எடுத்துக் கொண்டு அவனிடம் விரைந்தவள்,
" நீங்க சொன்ன மாதிரியே கொண்டு வந்துட்டேன் சார்.. பாருங்க இந்த கவர் புல்லா துத்தி மட்டும் தான்.." என்றதும் அவளை அமைதியாக பார்த்த விக்ரம் ,
"ம்ம்ம்...எடுத்து கீழே வை பார்ப்போம்..." என்றதும் வேகமாக எடுத்து கீழே வைக்க முற்படும் நேரம் அங்கு மேடையில் சில பல பொருட்கள் எல்லாம் இருந்தன ..
அதை கண்டதும் பல்லை கடித்த விக்ரம் ,
"ஏய்..இதை வச்சு தான் ப்ராஜெக்ட் பண்ண போறோம்.. இப்படி தான் அசால்ட்டா போடுவியா... ஒரு பேப்பரோ இல்லை ஏதாவது கவரோ வச்சு அதுக்கு மேல வை .." என கண்டிப்புடன் கேட்டதும் சட்டென முகம் சுருங்கிவிட்டது நறுமுகைக்கு ...
சரியென தலையசைத்தவள் அங்கிருந்த பொருட்களை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு, பேப்பரை விரித்தவள் அதன் மீது தான் கொண்டு வந்த தாவரங்களை எல்லாம் பரப்பி வைத்தாள்..
வெளியே வைத்தால் வாடி விடுமோ என்கிற பயத்தில பிரிட்ஜுக்குள் வைத்து விட்டிருந்தாள் அந்த அறிவாளி..
தாவரங்களை தொட்டுப் பார்த்தவன் சட்டென விழிகள் சுருக்கி நறுமுகையே பார்த்து,
" என்ன ஜில்லுனு இருக்கு..?" என கேட்டதும் வாயெல்லாம் பல்லாக,
"அது ஈவ்னிங் பறிச்சது சார்.. இன்னைக்கு கொண்டு வர வரைக்கும் எப்படி இருக்கும்னு தெரியல.. அதான் ஃபிரஷ்ஷா இருக்கட்டும் பிரிட்ஜுக்குள்ள வச்சுட்டேன்.." என்றதும் அவ்வளவுதான் விக்ரமின் முகம் இறுகிப்போனது ..
கீழ் உதட்டை கடித்துக் கொண்டு அவளை அழுத்தமாக பார்த்தவன்,
" நல்ல பிரெஷா தான் இருக்கு.. பேசாம ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரியா..? ஆளுக்கு ஒரு கிளாஸ் குடிப்போம்.." என்றதும் சட்டென நறுமுகையின் முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போல் ஆகிவிட்டது..
" சா...ர்..." என இழுக்கவும் , அவள் முன்பு கரத்தை நீட்டி தடுத்து,
" அறிவு இருக்கா உனக்கு..?? முட்டாள் ..முட்டாள்.. ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறோம் அந்த செடியை எப்படி எடுத்து பத்திரமா வைக்கணும்ங்கிற அறிவு கூட உனக்கு வேண்டாமா? நீ கண்ட நேரத்துக்கு போய் செடியை கலெக்ட் பண்ண கூடாது.. மார்னிங் தான் போய் கலெக்ட் பண்ணனும் ..அப்பதான் நல்லா இருக்கும்.. அது கூட உனக்கு தெரியாதா...?" என்றதும் நறுமுகைக்கு விழி பிதுங்கி விட்டது ...
"சார் ..இதுவே நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன் ..திருப்பி மார்னிங் போனா அங்க எதுவுமே இருக்காது.." என்றதும் அவளை மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியபடி தலை சாய்த்து பார்த்த விக்ரம்,
" ப்ராஜெக்ட் பண்ணனும்னு தெரியும்ல.. அப்ப இதெல்லாம் பண்ணி தான் ஆகணும்.. உனக்கு எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து கையில கொடுப்பாங்களா? ஒழுங்கா விடிய காலைல கலெக்ட் பண்ணி கொண்டு வா.." என்றதும் பாவமாக அவனை பார்த்த நறுமுகை விழிகளை மட்டும் திருப்பி தான் கொண்டு வந்த தாவரத்தை பார்த்தவள் பின்பு விக்ரமிடம் ,
"அப்போ இதெல்லாம் என்ன சார் பண்றது..?" என கேட்டவளிடம் மனசாட்சியே இன்றி,
" குப்பையில தூக்கி போடு.. இது ஒண்ணுத்துக்கும் ஆகாது.." என்று விட்டு லேப்டாப்பை தூக்கிக்கொண்டு சென்றவனை கண்ட நறுமுகையின் விழிகள் இரண்டும் கலங்கிவிட்டது ...
எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் செடிகளை கொண்டு வந்தாள் என்பது அவளுக்குத்தானே தெரியும் ..!
இதில் கவிதாவும் வேறு அவளுடன் சேர்ந்து சேகரித்து அல்லவா தந்தாள்.. இப்போது இருவரது உழைப்பும் வீணாகி விட்டதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
எவ்வளவு உற்சாகமாய் காலையில் கிளம்பி வந்தாள்..! இப்போது அனைத்தும் வீணாகி போகவும் தொப்பென இருக்கையில் அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது ..
தனக்கு ஓரளவேனும் அறிவு இருக்கிறது என எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது விக்ரம் கூறுவது போல தனக்கு அறிவே இல்லை போல அதனால் தான் எப்போது எந்த நேரத்திற்கு தாவரத்தை சேகரிக்க வேண்டும் என முன்னமே அவனிடம் கேட்டு சென்றிருக்கலாமே என காலம் கடந்து ஞானோதயம் வந்தது...
அவளை கண்ட கவிதா சாமுவேல் அவளிடம் அவளுக்கான வேலையை சொல்லிவிட்டு சென்றுவிட, அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு நறுமுகையே பார்த்தவள் வேகமாக அவளிடம் வந்து,
" என்னடி ஒரு மாதிரி இருக்க..?? ஏதாவது பண்ணலாம் இல்ல உட்கார்ந்துட்டு இருக்க..?" என்றதும் கலங்கிய வழிகளால் அவளைப் பார்த்த நறுமுகை,
" எதுவும் பண்ணக்கூடாது கவிதா ..குப்பையில் போட சொல்லிட்டாரு .." என பேசும் போதே குரல் தளும்பியது...
அதைக் கேட்ட கவிதாவிற்கும் அதிர்ச்சியாகிவிட்டது,
"ஏன்டி...??? நிறைய தானே கலெக்ட் பண்ணோம் அப்புறம் என்னவாம் அவருக்கு..?"
"அது.. காலையில தான் கலெக்ட் பண்ணனுமாம்.. ஈவினிங் எல்லாம் கலெக்ட் பண்ண கூடாதாம்... நான் பிரெஷா இருக்கும்ன்னு பிரிட்ஜ்ல வேற வச்சுட்டேன் இப்ப அதுக்கும் சேர்த்து திட்றாரு .." என்றதும் அதை கேட்ட கவிதா,
"பிரிட்ஜில் வைச்சுட்டியா? லூசுடி நீ.. வெளியவே வச்சிருக்க வேண்டியது தானே ..?"
"வெளிய வெச்சாலும் அந்த ஆளு வேண்டாம்னு தான் சொல்லி இருப்பாரு... அவர் தான் சொல்றாரு விடிய காலைல தான் செடியை கலெக்ட் பண்ணனுமாமீ.. கண்ட நேரத்துக்கு எடுத்தா எதையும் பண்ண முடியாது அப்படின்னு திட்டிட்டு போறாரு ..கடுப்பா வருது.." என்றதும் பெருமூச்சுடன் அவளை பார்த்த கவிதா,
" பேசாம கைடை மாத்திடு." என அசால்ட்டாக கூறியதும் அவளை அதிர்ந்து போய் பார்த்த நறுமுகை,
"என்னடி சொல்ற ..?"
"சாமுவேல் அண்ணா தான் சொன்னாரு ..கைடு மாத்துறா தான் இருந்தா நம்ம நாகராஜன் சார் கிட்ட சொல்லலாம்னு.. பேசாம சொல்லிடு.. எனக்கு செட் ஆகல வேற யாராவது அரேஞ்ச் பண்ணுங்கன்னு.." என்றதும் அதில் குழப்பமான நறுமுகை,
" அது எப்படி கவிதா நல்லா இருக்கும்.. சார் ஆளுக்கு ஒருத்தரை போட்டு இருக்காரு.. நான் மட்டும் போய் இவர் கூட செட்டாகலைன்னு சொன்னா அது தப்பாயிடாதா..?" என்றதும் கவிதாவிற்கும் அதுதான் சரி எனப்பட்டது..
"ம்ம்ம்... அதுவும் கரெக்ட் தான்டி.. நம்ம இன்னும் என்ன மிஞ்சிப்போனா ஆறு மாசம் இருப்போம்.. அதுக்கப்புறம் இந்த காலேஜ் விட்டே போயிடுவோம் ..இப்போ போய் எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போடி .நம்மளுக்கு காரியம் ஆகணும் இல்ல .." என கவிதா நறுமுகைக்கு அறிவுரை வழங்கிவிட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டாள் ..
அந்த நாள் முழுவதும் நறுமுகைக்கு எந்த வேலையும் இல்லாததால் சிவனேவென கிடந்தாள்...அங்கு பிஎச்டி செய்யும் சிலர் அங்கு வந்து வேலை பார்த்து விடவும் அவர்களுடன் பேச்சு கொடுத்து சிரித்தவாறு இருந்தாள் நறுமுகை..
அச்சமயம் லேப்பை கடந்து சென்ற விக்ரமின் பார்வையில் அக்காட்சி விழுந்திட அவ்வளவுதான் தீ பார்வையினால் அவளை பொசுக்கி எறிந்து விட்டான் விக்ரம் ...
மதிய உணவு முடிந்ததும் எந்த வேலையும் இல்லாததால் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தவளிடம் வந்து நின்று விக்ரம் ,
"நறுமுகை.." என்கிற அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து நின்றிட,
" வாங்க.." என்று விட்டு அவன் பாட்டிற்கு எங்கேயோ சென்றான்... வேக வேகமாக அவன் பின்னாடியே சென்றாள் நறுமுகை...
அவன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் நறுமுகை..
அவன் ஏதேனும் கூறுவான் என அவனது வாயவே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விக்ரமோ லேப்டாப்பில் கவனம் பதித்தவாறு,
" என்ன பண்ணிட்டு இருக்கீங்க நறுமுகை ..?"
"அது.. நீங்க தானே சார் கூப்பிட்டீங்க ..." என்றதும் ஒரே ஒரு பார்வை அவளை பார்த்துவிட்டு மீண்டும் லேப்டாப்பில் கவனம் பதித்தவன்,
" லேப்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட்கிறேன் ..?"
"செடி கொண்டு வந்த அப்புறம்தானே எல்லாம் பண்ணனும் ...அதுவரைக்கும் எதுவும் பண்ண முடியாது.. நீங்கதான் விடிய காலைல கொண்டு வர சொல்லிட்டீங்க..." என்ன நீண்ட விளக்கத்தை அவள் பாட்டிற்கு கொடுக்கவும் அவள் முழுதாய் பேசி முடிக்கும் முன்னமே ஒற்றை கரம் நீட்டி,
" நிறுத்துங்களேன்.. நான் என்ன கேட்கிறேன் நீங்க என்ன பதில் சொல்றீங்க..?
முதல்ல ஒருத்தவங்க கேள்வி கேட்டா அதை முழுசா புரிஞ்சுகிட்டு பதில் சொல்லுங்க.. உங்களை என்ன கேட்டேன்..?? லேப்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு.. அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க..?"
என அவன் முகம் சாதாரணமாக இருந்தாலும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழுத்தத்துடன் அவள் மீது வந்து பாய்ந்தன ...
அதில் வெலவெலத்து போன நறுமுகை,
" இ..இ.ல்லை.. சார் ... நீங்க செடி நாளைக்கு கொண்டு வர சொன்னதால் இப்ப நான் சும்மாதான் இருக்கேன்னு சொல்ல வந்தேன்.." என்றதும் உஷ்ண மூச்சை இழுத்து விட்டவன்,
" எதும் என்னனு கேட்டா தெரியாது... செடி எப்போ எடுக்கணும்னு தெரியாது ... எடுத்தச் செடியை எப்படி ஸ்டோர் பண்ணி வைக்கணும்னு தெரியாது.. ஒரு கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும்னு தெரியாது.. ஆனா மத்தவங்க கிட்ட நல்லா சிரிச்சு பேச மட்டும் தெரியும் அப்படித்தானே நறுமுகை..." என சிரித்த வாக்கில் கேட்டவனின் முகம் நொடியில் அவளை அனலாய் பார்த்து ,
"கொஞ்சம் கூட வெக்கமாவே இருக்காதா உங்களுக்கு? " என நேரடியா அவள் முகம் பார்த்து கேட்டிடவும் அவ்வளவுதான் நறுமுகைக்கு முகமே விழுந்து விட்டது,
" சா...சா..ர் ..."
"என்ன சார் எம்எஸ்சி ப்ராஜெக்ட் பண்ண போறோம் ஒரு நாலெட்ஜ் இருக்கா உனக்கு? நானும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு பார்க்கிறேன்.. இவ்வளவு நேரம் சும்மா தானே உட்கார்ந்திருந்த... லைப்ரரிக்கு போய் ஏதாவது புக் எடுத்து படிப்போம் ... இல்ல அட்லீஸ்ட் உன் போன்லையாவது நம்ம பண்ண போற ப்ராஜெக்ட் பத்தி ஏதாவது உருப்படியான விஷயத்தை பார்ப்போம்னுலாம் இல்லை..
அப்படியே வெட்டி முண்டம் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க..??
உன் கூட படிக்கிற பொண்ணு தானே அந்த கவிதா ..பார்க்கறல சாமுவேல் ஒன்னு ஒன்னையும் சொல்லிட்டு போயிட்டே இருக்கான்.... அது அவ்ளோ பக்காவா பண்ணுது.. அந்த பொண்ணுக்கு கற்பூர புத்தி.. நீயும் இருக்கியே ..?"
என அடிக்குரலில் சிறியவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நறுமுகையின் தன்னம்பிக்கையை மொத்தமாய் உடைத்து எரிந்தது...
தலை குனிந்து நின்றிருந்த அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் குளம் கட்டி விட்டது..
தன் முகத்தை அவனுக்கு காட்டாது அசையாது நின்றவளை அழுத்தமாய் பார்த்தவனுக்கு அவள் மீது அப்படி ஒரு வெறுப்பாய் போய்விட்டது..
" ஒரு வேலையையும் உருப்படியாய் செய்ய தெரியலை... இதுல நீ எல்லாம் எப்படித்தான் ப்ராஜெக்ட் முடிக்க போறியோ எனக்கு தெரியல.. உன்னை போய் என் தலையில கட்டி வச்சிருக்காங்க பாரு..ச்சை..." என மீண்டும் மீண்டும் அவள் மீது அமிலமாய் ஊற்றியவனது வார்த்தைகள் நறுமுகையே இன்னும் இன்னும் நிலைகுலையவே செய்தது ..
ஒரு பேப்பரில் எதையோ எழுதியவன் அவளிடம் நீட்டி,
" இதுல இருக்குற கொஸ்டின்ஸ்க்கு எல்லாம் ஆன்சர் தேடி எழுதிட்டு வாங்க.." என ஒரு ஐந்து கேள்விகளை எழுதி இருந்தான்..
அது என்னவென்று கூட பார்க்காதவள் சரியென தலையை மட்டும் அசைத்து விட்டு அந்த பேப்பரை வாங்கிக் கொண்டு வந்தவள் நீரே லேபுக்கு செல்லாது கழிப்பறைக்குள் புகுந்து அங்கு கதவை தாழ் போட்டுவிட்டு அழுதாள்... கதறி கதறி அழுது கரைந்தாள் நறுமுகை...
படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி

கருத்துத்திரி

திட்டும் பார்வை ... ஒட்டும் இதயம் ❤❤ - கருத்துத்திரி
திட்டும் இதயம் .. ஒட்டும் பார்வை ❤❤- கருத்துத்திரி
aadvikapommunovels.com