ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 25- நெஞ்சிலாடும் நினைவலைகள்

நெஞ்சிலாடும் நினைவலைகள் விமர்சனம்



ஆரம்பம் முதல் இறுதிவரை நல்லா சஸ்பென்ஸ் கலந்து இருந்த கதை 👍

நாயகி ப்ரியம்வதா நல்ல கலகலப்பான துடிப்பான பெண்..மருத்துவம் முதலாம் ஆண்டு படிக்கிற பொண்ணு..பரணி , சோமு, அபிநயா , சுமதி, ரேணு, சுவாதி இவங்க எல்லாம் அவள் அக்கா ப்ரீத்திகாவின் ப்ரண்ட்ஸ்.இவங்களும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்தான்
இவளுக்கும் பரணி, சோமு கூட நல்ல நட்பு உண்டாகுது ‌..இது அபிநயா , சுமதிக்கு பொறாமையா இருக்குது ..அபிநயா , சுமதி இரண்டுபேரும் பரணிய ஒருதலையாகவிரும்புறவங்க..இவங்க எல்லாரும் கொடைக்கானலுக்கு டூர் போகும் போது ப்ரியம்வதாவையும் சேர்த்து கூட்டுபோறாங்க...போன இடத்தில் பரணியின் இறப்பு ஏற்படுது கூடவே ப்ரியம்வதாவுக்கும் விபத்து நடக்குது ..விபத்தின் மூலம் ஒரு வருட நினைவுகளை இழந்திடுறா...வருடங்கள் கடக்க இந்த நிலையில் இவள் பெற்றோர்கள் இவளுக்கு திருமணம் செய்ய நினைத்து வரன் பார்க்கிறாங்க ..பார்த்த வரன்களுக்கு இவளைப்பற்றிய தவறான கடிதமும் பரணியுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் போயி இவ கல்யாணம் தடைபடுது ..இப்படி செய்றது யார்னு தெரியாமல் இவ குடும்பம் ரொம்ப வருத்தப்படுறாங்க..



விக்ரமாதித்யன் நம்ம நாயகன்..இவன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சில சீப் டிடெக்டரா வேலை பார்க்கிறான் ..இவனுக்கு பார்க்கப்படும் வரன் தான் ப்ரியம்வதா ..திருமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கான் நாயகன்..ஒரு சந்தர்ப்பத்தில் நாயகியை சந்திக்கும் போது அவளின் குறும்புதனத்திலும் உதவும் மனப்பான்மையிலும் தைரியத்திலும் கவரப்பட்டு அவளை திருமணம் செய்யவிருப்பப்படுகிறான்...

இப்படி இருக்க நாயகியை கொல்ல நினைத்து விபத்துக்கள் ஏற்படுது..விக்ரமின் பெஸ்ட் ப்ரண்ட் பிரபு ப்ரியம்வதாவின் உடன் பிறவா அண்ணண்.நாயகியை கொல்ல நினைக்கிறவங்களை கண்டுபிடிக்க ட்ரை பண்ணுறான் விக்ரம்..பிரபுவின் மூலம் நாயகியை பற்றிய தகவல்கள் தெரிய வருது.. இவர்கள் திருமணமும் நடந்திடுது ..


நாயகியை காப்பாற்ற பரணியின் மரணம் விபத்தா கொலையான்னு கண்டுபிடிக்கிற முயற்சியில இறங்குறான் விக்ரம் .. நாயகியை கொல்ல நினைக்கிறவங்க யாரு ? எதற்காக கொல்ல நினைக்கிறாங்க? ப்ரியமாவதாவுக்கு அந்த நினைவுகள் திரும்பியதா ? பரணியின் மரணத்தின் உண்மை எது? விக்ரம் கொலையாளியை கண்டுபிடித்தானா ? பல கேள்விகளுக்கு விடை கதையை வாசித்து தெரிஞ்சுக்கலாம்..‌


ரியா கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது..தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண் , தன்னை சுத்தி இருக்கவங்கள சந்தோஷமா வச்சுக்க நினைக்கிறது , எல்லார் கூடவும் ஜோவியலா பழகுறது.மாமியார் மருமகள் பாண்டிங்அவ அம்மா அப்பா அவ அக்கா கூட உள்ள பாண்டிங் எல்லாமே ரொம்ப பிடிச்சது..குட்டிப்பொண்ணுனன்னு பேருக்கு ஏத்தபோல குழந்தை போல குணம்னு நினைச்சா என்கிட்ட முதிர்ச்சியும் இருக்குன்னு காட்டிட்டா 👍👍👍


ரம்யா ரியா நட்பு ரொம்ப பிடிச்சது.ரியாவிற்கு ஆறுதலாக இருப்பதாகட்டும் , அவளுக்கு சரியான அறிவுரை சொல்றதாகட்டும் ரம்யா நல்ல நண்பி , ரெண்டு பேருக்கும் சூழ்நிலைவேறு வேறா இருந்தாலும் ரெண்டு பேரோட நட்பும் அழகா இருந்தது..🫶


பரணி சோமு ரியா இவங்க நட்பு ரொம்பவே பிடிச்சது ..பச்சை சட்டை குட்டி சாத்தான் காம்போ செம்மம

😂😂😂😂🤣

பரணி ரியா மேல வச்சு இருந்த பாசம் ஒரு தகப்பன் தன் மகள் மேல் கொண்ட பாசம் போல இருந்தது ..ஆனால் இந்த பாசத்தை கூட தவறா புரிஞ்சிக்கிட்டு ரியாவ தப்பா பேசும்போது கடுப்பாயிட்டு 😏 இவங்க பாசம் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் தவறா தெரிஞ்சனால பாவம் நல்லவனான பரணியின் உயிர் போயிடுச்சு 😞😞 பரணி டெத் ரொம்ப கஷ்டமா போச்சுப்பா 😞😞


விக்ரம் கேரக்டரும் நல்லா இருந்தது..விக்ரமின் புரிதலாகட்டும் அவனின் காதலாகட்டும் சூப்பர் 👍ரியாவுக்கு கேரக்டரில் சளைச்சவனில்லை விக்ரம் ..ரியா பயத்தில் இருக்கும்போதும் அவளைப்பற்றிய குழப்பத்தில் இருக்கும் போது அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர போராடுற விக்ரம் , ரியா டவுன்னாகுற டைம்ல அவளை தன் காதலாலும் அரவணைப்பாலும் மீட்டெடுக்கும் விக்ரம், சூழ்ச்சி வலைல இருந்து அவளை காப்பாத்துற விக்ரம்னு விக்ரம் கேரக்டர் செம்மப்பா ❣️❣️


பிரபுவும் விக்ரமுக்கு நல்ல நண்பன்.அவனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவி பண்ணுறது , கலாய்க்கிறதுன்னு சூப்பரா இருந்தது பிரபு கேரக்டர்..ரியாவுக்கும் நல்ல அண்ணணா இருந்தான்.. இவனுடைய மனைவி காயத்ரி கேரக்டரும் ரியா காயத்ரி பாண்டிங் சூப்பர்...


பரணியின் அம்மா திலகவதி இவங்களும் சூப்பர் கேரக்டர்ப்பா‌‌.இவங்களுடைய முதிர்ச்சியும் தெளிவும் பேச்சும் மனதை அசைத்தது ..ரியா வை இவங்க புரிஞ்சுகிட்டது பிடித்தது ..


ரியாவின் பெற்றோர்கள் வேதாச்சலம் வாசவி, விக்ரமின் பெற்றோர்கள் கல்யாணசுந்தரம் வசந்தா மணி கேரக்டர் எல்லாமே அருமையா இருந்தது..வசு ரியா பாண்டிங் செம்ம..வேதா தன் பிள்ளைக்கு பிரச்சனை நடந்ததுல இருந்து வெளிய வர உதவி பண்ணுறதாகட்டும் அவள் பாதுகாப்புக்கு பார்த்து பார்த்து செய்யுறது அருமை.. கல்யாணசுந்தரம் பாசத்தை வெளில காட்டலனாலும் அவர் பாசம் நல்லா தெரிஞ்சது😊


ரியா ரித்து பாண்டிங் அழகா இருந்தது .ரியாவுக்கு தன் பிரண்ட்ஸாலதான் பிரச்சினைனு அவள் கவலைபடுறது கஷ்டமா இருந்தது..ஆனால் பரணியின் காதல் தெரியவந்தும் ஆகாஷ் அதை சரியா புரிஞ்சிகிட்டது, ரித்துவோட குற்ற உணர்ச்சியை போக்குனதுனு ஆகாஷ் கேரக்டரும் சூப்பர்ப்பா ❣️

வில்லன் யாருடானு ஒவ்வொரு எபிசோட்லயும் ட்விஸ்ட் வச்சு இவங்களாதான்னு இருக்கும்னு கடைசிவரை கொண்டு வந்து வில்லன மாத்தியாச்சு 😦..பட் ஐம் கெஸ்ஸிங் அவங்கதான் வில்லனா இருக்கும்னு 😉😉😉அவங்களுடைய தவறான புரிதலாலயும் முன்கோபத்தினாலும் ஒரு உயிர் போயிடுச்சு ஆனாலும் குற்ற உண்ர்வு இல்லாமலேயே கூடவே இருந்து ரியாவையும் கொல்ல பார்த்தது மோசம் ..அதுக்கு சொன்ன ரீசன் கோவம் வந்தது😒 ஆனாலும் அவங்க பேரண்ட்ஸ் கேஸை வாபஸ் வாங்க சொல்லி ஆழம் பார்த்ததுலாம் பார்த்து ச்சே என்ன மனுசங்கன்னு தோணுச்சு 😒😒


கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ..!!விக்ரம் ரியாவோட காதல் அழகா இருந்தது..இவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் 🙈 இவங்க ட்வின்ஸ்னு முடிச்சது பிடிச்சது ..


விக்ரமும் ரியாவும் நம் நெஞ்சங்களில் நீங்கா நினைவுகளாக போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
 
Last edited:
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP25
ரஞ்சனி கணேஷ் அவர்களின் எழுத்தில்

"நெஞ்சிலாடும் நினைவலைகள்"

ப்ரியம்வதா.. மெடிக்கல் ஸ்டுடென்ட் குறும்புத்தனம் மிக்கவள் அதே நேரம் அடுத்தவருக்கு உதவும் குணமும் அதிகம்.. கதையின் நாயகி
அக்காவின் நண்பர்கள் சிலருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறாள். அங்கு ஏற்படும் பரணியின் மரணத்தால் விபத்துக்குள்ளாகி தன் ஒரு வருட நினைவுகளை இழக்கிறாள். பரணியின் மரணத்திற்கான காரணம் என்ன..,? நினைவுகளை இழந்த நாயகிக்கு நினைவுகள் திரும்ப வந்ததா..? இவளுக்கு திருமணம் பேசி வரும்போது அதை தடுக்க நினைக்கும் யாரோ..? அதில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாயகன் விக்ரமாதித்யன்.. சீஃப் டிடெக்டிவ் திருமணம் வேண்டாம் என இருப்பவன் ரியாவை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய முடிவு செய்கிறான் அவள் வாழ்வில் இருக்கும் மர்மங்களையும் கண்டுபிடிக்கிறான்.
பல திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் உடன் நகர்கிறது கதை. அசம்பாவிதத்திற்கு காரணமானவர் இவர்தான் என யாரையும் நம்மால் யோசிக்க முடியவில்லை.
பரணி.. அருமையான கதாபாத்திரம் நல்ல நண்பன் அவனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் 😔
விக்ரம் மற்றும் பிரபு அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருகிறார்கள் குற்றவாளியை கண்டுபிடிக்கும் விதம் சூப்பர் 👏
விக்ரம் ப்ரியம் வதா காதல் அழகு 🥰
ரியா மற்றும் அவள் மாமியாரின் பாண்டிங் வெகு அழகு 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️🌹
 
நெஞ்சிலாடும் நினைவலைகள்


நம் நாயகி ப்ரியவம்தா.. மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவி.. அக்கா தோழிகளுடன் கொடைக்கானல் செல்ல அங்கு அவளுக்கு விபத்து ஏற்படுகிறது. கூடவே அக்காவின் தோழனான் பரணியின் இறப்பும் நடக்கிறது.

விக்ரம் நம் கதையின் நாயகன்.. ப்ரியவம்தாவுக்கு பார்க்கும் மாப்பிள்ளை.. டிடெக்டிவ்வா இருக்கிறான்.. திருமணத்தில் ஆஅவமில்லாமல் இருந்தவன் ப்ரியவம்தாவின் குறும்புத்தனத்தால் கவரப்பட்டு திருமணம் செய்யும் ஆசைப்படறான்..

அதற்குள் ப்ரியவம்தாவிற்கு விபத்து ஏற்படுகிறது.. ஒரு தவறான புரிதலில் நடந்தது தான் அனைத்தும்

அவளை கொல்ல நினைத்தது யார்.?

பரணியின் இறப்பிற்கான காரணம் தான் என்ன.?

இதை விக்ரம் கண்டுபிடித்தானா.?



கதை விறுவிறுப்பாக இருந்தது.


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
#நெஞ்சிலாடும்_நினைவலைகள்_விமர்சனம்

பிரியம்வதாங்கற பெண்ணை மையப்படுத்துன க்ரைம் சஸ்பன்ஸ் கதை 🤩

பிரியம்வதா மருத்துவ மாணவி அவங்க வாழ்க்கையில் நடந்த எதிப்பார்க்காத விபத்து💔. அதுனால அவங்களுடைய ஒரு வருட நினைவுகளை இழந்து அவங்க எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் 😰

பிரியம்வதாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக வரும் விக்ரமன் ❤ எப்படி தீர்வு காணுறாங்க? பழைய நினைவுகள் எல்லாம் திரும்புச்சா? யாரு குற்றவாளி? ஏன் இதை செய்தார்கள்? இப்படியான பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்கள் கதையில்❤

கதாபாத்திரங்களை ரொம்ப நல்லா உருவாக்கிருக்கீங்க ❤ இறுதி வரை அவங்க நிலை மாறாம இருந்தது நல்லா இருந்தது. இயல்பான உரையாடல்களுடன் கதை சொன்ன விதம் அருமை 👏

பிரியம்வதா க்யூட் 😍 பரணி மற்றும் பச்சை சட்டை கூட அவளை பார்க்கவே அழகா இருந்தது ❤ விவரிக்க முடியாத நல்ல உறவுகள் ❤

வதுவின் தைரியமும் ,குழந்தைதனமும், யாரை எப்போ எங்க நிலுத்துங்கற தெளிவு அதுவும் அந்த வயசுல நல்லா இருந்தது❤

விக்ரமின் புரிதலும் காதலும் சூப்பர் 🫶🫶 பரணிக்கு நடந்தது ரொம்பே கஷ்டமா இருந்தது 😭 பரணி சோமு நட்பும், பரணியின் புரிதலும் பொறுப்பும் நல்லா இருக்கு. ரொம்ப நல்லவன் பரணி நீ அதுதான் பிரச்சினை போல.

வது தங்கையா இல்லை ரித்து தங்கையானு தெரியல. ரொம்பவே குழந்தபிள்ளையா இருந்துட்டா ரித்து. பிரபு நண்பனா அண்ணா கணவனானு எல்லாமா மனசுல நிக்கறான்.

ரம்யா வது நட்பு ரொம்ப பிடித்தது ❤ விக்ரம் மற்றும் வது குடும்பங்கள் சோ சுவீட் 🥰 விக்ரமின் வார்த்தைகள் வதுவின் நினைவுகளை தூண்டிவிடுறது ரொம்பவே நல்லா இருந்தது😍

இவங்க தான் குற்றவாளினு கணிக்கக்கூடியதா இருந்தது ஆனாலும் கதையின் விறுவிறுப்பு குறையல.

இரண்டு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இன்ஃபிரியாட்டி காம்ப்ளக்ஸ் வருவது இயல்பு தான். ஆனால் அதைகூட கவனிக்காத பெற்றவர்கள் என்ன நல்ல பெற்றவர்கள் 😨😨 இதனால எவ்வளவு இழப்பு 😫😫

கதையை இன்னும் கொஞ்சம் ஷார்ட்டா சொல்லீருந்தா இன்னுமே சுவாரஸ்யமா இருந்திருக்கும். அதை தவிர்த்து ரொம்ப நல்ல கதை ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
 
#நெஞ்சிலாடும்_நினைவலைகள்….
#கௌரிஸ்ரிவ்யூ…..
அழுத்தமான, டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை சூப்பரோ சூப்பர்🥰 🥰 🥰 🥰 🥰
ரியா…. ட்ரைனிங் டாக்டர்….அவளோட முதல் வருஷ நினைவுகளை விபத்தில் இழந்தரா🥺🥺🥺🥺🥺….
அப்படி இழந்தாலும், அவளோட வாழ்க்கை இயல்பாவே இருக்கு…காரணம் அவ குடும்பம் தான்……
ஆன கண்ணுக்கு தெரியாத எதிரி இருக்காங்க அவளுக்கு…..
கல்யாணம் பேசினா….அவளை தப்பா சித்தரிச்சி ஃபோட்டோஸ், லெட்டர்ஸ் அவங்க வீட்டுக்கு போய் அந்த கல்யாண பேச்சும் நின்னு….அவளை பத்தி பத்தா பேசறாங்க🥶🥶🥶🥶🥶…..
இது அவளை கல்யாணத்தின் மேல், insecurity பீல் தருது…..
இந்நிலையில் தான்…..விக்ரம் வரான் அவ வாழ்க்கையில்…..
அம்மா பார்த்தா பெண்ணா…..
பார்த்ததும் காதல் இல்லைனாலும்…..அவளோட கேரக்டர் தெரிஞ்சி ஈர்ப்பு தான் அவ மேல🤩🤩🤩🤩🤩….
அதே ஈர்ப்பு ரியா கிட்ட??????
விக்ரம் கிட்ட பழக பழக…..அவளோட நினைவுகள் ஒண்ணு ஒண்ணா வர…..
அவள் இழந்தது எவளோனு தெரிய தெரிய அவளுள் பெரிய பாரம்…..
ஈர்ப்பு காதலா மாறி கல்யாணம் ஆனாலும் அவளோட insecurity பீல் அப்படியே தான் இருக்கு….
எல்லா நினைவுகளும் வந்தாலும்….விபத்துக்கு முன்னாடி நடந்த பயங்கரம், அதை தொடர்ந்த விபத்து மட்டும் நியாபகம் வரல🤧🤧🤧🤧🤧…..
அதும் ஒரு கட்டத்தில் நினைவு வர……ரியாவின் நிலை🥺🥺🥺🥺🥺….,
என்ன தான் ஆச்சி அன்னைக்கு????
ரியாவின் விபத்து எதனால்????
அவளின் கண்ணுக்கு தெரியாத எதிரி யார்?????
இது எல்லாம் சுவாரஸ்யமா சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
விக்ரம்…..எதார்த்த ஹீரோ….டிடெக்டிவ்….ரியா மேல ரொம்ப காதல்…..அவளோட protector உம் 🥰🥰🥰🥰🥰…..
ரியா….கலகலப்பான பொண்ணு.,.ரியா, பரணி & பச்சை சட்டை காம்போ செம்ம cute🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫰🏻…..
இவளோட ஜாலியான & எல்லாரும் நண்பர்கள்னு நினைக்கும் கேரக்டரே அவளோட துன்பத்துக்கு காரணம்னா அமைதியா அவ வேலையை பார்த்திட்டு இருந்து இருப்பாளோ என்னவோ…..
பரணி…..ரியா கிட்ட அவனோட காதல் யார் என்பதையும், காதலை பத்தியும் சொன்னதும்….ரியாவோட பதிலை கேட்டு அவனோட உடனடி பதில் உண்மையில் வியக்க வைத்தது ❤️❤️❤️❤️❤️❤️…..
அப்படி பட்டவனுக்கு இப்படி நேர்ந்து இருக்க வேணாம்🥺🥺🥺🥺🥺🥺
ரியா சொல்ற மாறி இவளுங்க திருந்த ஒரு உயிர் போகணுமா என்ன🤧🤧🤧🤧🤧🤧
சும்மா ஒரு பிடிவாததுக்கும், பொறாமையாலும் இங்கே போனது நல்ல பையனின், அண்ணனின், தம்பியின் உயிர் எனில்…..
தாங்கவே முடியல🤧🤧🤧🤧🤧🤧……
அவன் சொன்னது போல யாரோ கயல்விழி, கனிமொழியின் வாழ்க்கையில் இருந்து இருக்கலாம் இல்ல😔😔😔😔😔😔
ஏன் இப்படி?????
மனம் கனத்து விட்டது🥺🥺🥺🥺🥺….
கதை ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர் 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்
கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
Top