ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 27- அம்மம்மா பொண்ணா இவ

அம்மம்மா பொண்ணா இவ

மங்கம்மா நம் நாயகி. பேய் ஓட்டும் பெண். மாந்தீரிகம் சக்தி தெரிஞ்சவ. அருண் சூர்யா நம் நாயகன். அவனை சுத்தி ஏதோ அமானுஷ்யm நடக்குது. அவனுக்கு பார்த்த 3 பொண்ணுங்களும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி இறந்து போயிடுறாங்க.

அது ஏன்னு மங்கம்மாக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் அவனை அவ கல்யாணம் பண்ணா எல்லாம் சரி ஆகும்னு அருண் வீட்ல பொண்ணு கேட்குறாங்க. அருணை சுத்தி என்ன நடக்குது.

மங்கம்மா அருண் கல்யாணம் நடந்துச்சா? அருணை சுத்தி நடக்குறதுல இருந்து மங்கம்மா அவனை காப்பாத்துனாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

ப்ப்பா கதை படத்துல வர சொல்ற மாதிரி பிரஸ்ட் ஆஃப் பேய், சுடுகாடுனு ஒரு மாதிரி பயம் வரும் அளவுக்கு இருந்துச்சு. ஒரு 2 நாள் ஸ்டாப் பண்ணிட்டு அப்புறம் எடுத்தேன். 😒😒😒 எனக்கு அவ்வளவு பயமா இருந்துச்சு. 😩😩😩

அப்புறம் அவங்க பிளாஷ்பேக்க்கு அப்புறம் கொஞ்சம் பயம் போய் இன்ட்ரெஸ்ட்டா படிச்சேன். அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. அப்படியே கதைக்குள்ள போய் ஒரு பேய் படம் பார்த்த எபெக்ட் செம சூப்பரா இருந்துச்சு 😍😍👏👏👏👌👌👌

சீலம் மங்கா இவங்க காம்போ சூப்பரா நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு. சீலம் வர இடம் எல்லாம் பயம் போய் சிரிச்சிட்டே இருந்தேன்.

பேயை சைட் அடிச்சவன் இவனா தான் இருப்பான் 😂😂😂 கடைசியில் அந்த தரணி கூட சேர்த்து விட்டு இருக்கலாம் இவனை 😜😜😜

அருண்க்கு மங்கா மேல எம்புட்டு லவ் ஜென்ம ஜென்மமா தொடரும் காதல். அவ நினைவுகள் அழிஞ்சாலும் அவ கூட சேர்ந்து வாழும் போது நிறைவாக இருந்துச்சு.

மங்கா அவனை முன் ஜென்மத்துல விட்டாலும் இந்த ஜென்மத்துல அவனுக்காக அவ்வளவு போராடி அவனை மீட்டு அவன் கூட சேருறது நல்லா இருந்துச்சு.

நல்லா பேய் மாந்தீரிகம் நிறைந்த கதை.

ஸ்டோரி நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு 👏👏👏

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அம்மம்மா பொண்ணா இவ


பேயா கதைங்க.. எப்பவும் பேய் கதையை ஆர்வமா படிக்கிற ஆளுங்க.. பட்டையை கிளப்பிட்டாங்க போங்க.. அவங்க விவரிச்சதுல எல்லாம் செம செம.. நேராகவே பேய் படத்தை பார்க்கற மாதிரி இருந்துச்சு.. கூடவே சிரிப்பும் வேற..

நம் நாயகன் அருண் சூர்யா.. இவனை எனக்கு ரொம்பவே பிடிச்சது. ஆனா பாருங்களேன் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணுவோம்னு பொண்ணை பார்த்தா அந்த பொண்ணுக எல்லாம் போய் சேர்ந்துருதுக.. அது சரி எப்பவும் ஹீரோவுக்கு ஹீரோயின் தானே..

கதைல நாயகியை டாக்டரா பார்த்துருப்பீங்க டீச்சரா பார்த்துருப்பீங்க போலீஸா பார்த்துருப்பீங்க.. ஆனா இந்த கதைல நம் நாயகி மங்கம்மா பேயோட்டறவ.. இதுல பில்லி சூனியம் எல்லாம் வெக்க தெரியும்ங்க..

எப்பவும் போல நாயகன் நாயகிக்கு கல்யாணம் நடந்தா எல்லாமும் சரியாகிரும்னு நம்பி கல்யாணம் பண்ணி வெக்கறாங்க.. அதுக்கு அப்பறம் நம்ம மங்கம்மா அவளோட புருசனை காப்பாத்துனாளா இல்லையாங்கறது தான் இந்த கதையே.

நம்ம அருணுக்கு ஏன் இப்படி நடக்குதுனு பிளாஷ்பேக் எல்லாம் போய் பார்த்தா....

அப்பாடியோய் வாயை பிளக்க வெச்சுட்டாங்க.. நம்ம சீலம் மங்கா பேசறது நல்லா இருந்துச்சு.. பேயை சைட் அடிச்சவன் இவன் தான்.. பாவம் பொண்ணு கிடைக்கல போல..ஹிஹிஹிஹிஹி

ஜென்மம் ஜென்மமா தொடரும் காதல்.. இந்த ஜென்மத்திலும் போராடி வென்றது அருமை..

வாழ்த்து
க்கள் சிஸ்டர்..
 
அம்மம்மா பொண்ணா இவ
அருண் சூர்யா’s life is full of strange twists. Every time his marriage is fixed, something goes wrong. It feels like destiny itself is waiting for the right person.
This story breaks the usual heroine image.மங்கம்மா is a powerful spirit healer who deals with unseen forces and dark rituals.
Marriage is believed to be the solution, but instead of peace, it opens the door to danger. What follows is a fight between fate, love, and the supernatural.
The flashback explains everything and it changes the way we see the hero’s life. Shocking, intense, and unexpected.
At its heart, this is a love story that survives lifetimes. Love that refuses to die, no matter the form or the birth✨❤️
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP27
பெத்தனசுதா அருஞ்சனை குமார் அவர்கள் இடத்தில்
"அம்மம்மா பெண்ணா இவள்."
மங்கம்மா.. அருண்சூர்யா.. மஹாமாயா
இவர்கள் மூன்று பேரையும் சுற்றி கதை.
முன் ஜென்மத்தில் இருந்து தொடர்கிறது இவர்களின் பந்தமும் பயணமும்.
சீலன்.. இந்த ஜென்மத்தில் அருணின் தம்பியாக இருக்கிறான். இவனும் இவர்களோடு முன் ஜென்மத்தில் தொடர்புடையவன் தான். இவன்தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறான். இவன் வரும் நிறைய காட்சிகள் சிரிப்பை ஏற்படுத்துகிறது 😀😀 இவன் புலம்பலும் பயமும் வேற லெவல் 😀😂
மங்கம்மா.. பேய் ஓட்டும் பெண் அந்த செட்டப்பும் அசால்டாக இவள் சுடுகாட்டிற்கு சென்று வருவதும் கொஞ்சம் திகிலை ஏற்படுத்த தான் செய்வது.
அருணுக்கு மாங்கா மீது அவ்வளவு காதல் 🥰 முன் ஜென்ம கதை சுவாரசியமாக இருந்தது 🥰
விமர்சனத்தில் கதையைப் பற்றி கூறுவதை விட அதை படித்து உணரும்போது இன்னும் நன்றாக இருக்கும். அதனால் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே 🥰😀
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்து கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️🌹
 
பெத்தனசுதா அருஞ்சுனைகுமாரின்

அம்மம்மா பொண்ணா இவ


நாயகன்: அருண்சூர்யா

நாயகி :மங்கம்மா


திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்கள் திருமணத்திற்கே முன்பே ஏதோ ஒரு வகையில் அடுத்தடுத்து துர்மரணத்தை சந்திக்கின்றனர்.அதற்கான காரணம் தான் என்னவோ???



அதில் பாதிப்படைந்த மாப்பிள்ளை வீட்டார் அவர்களின் குல தெய்வ கோயில் கருப்பனிடம் முறையிட,அவன் சில குறிப்புகள் காட்டுகின்றான்.




அதன் படி அவனை திருமண செய்து கொள்ளும்படி கேட்கின்றனர் அவ்வூரை காளி உபாசிகியான மங்கம்மாவை..


ஏதோ ஒரு வகையில் குடும்பம் மொத்தமும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, எதிர்க்க ஆள் இல்லனா எப்படி …அமாங்க அவரு பேரு சத்யசீலன்…பேரு என்னவோ பெத்த பேரு தான் ….அவன் என்னவோ ஒரு பக்கம் வேணா வேணானு கத்திகிட்டு நிக்க, ச்ச்சு ஓரமா போய் சத்தம் போட்டு விளையாடுனு அவங்க அவங்க,, அவங்க வேலைய பார்க்க போய்ட்டாங்க…



ஐய்யோ ,இவளா, சுடுகாட்டு பேயா,சூன்யாகாரியா, இவளும் இவ உடுப்பும், எனக்கு அண்ணியானு அவன் கதற கதற, அத கேட்க தான் ஆளா இல்ல…ஆமாங்க மங்கம்மா உடுப்பும் அப்படிதான் இருக்கும்…ஆளும் எடுப்பா தான் இருப்பா…பின்ன நடுராத்திரியில பேய்க்கூட வாக்கிங் போறவ பின்ன எப்படி இருப்பா…



இதற்கிடையில்,ஏற்கனவே நடந்த‌துர்மரணங்களால பயந்தவங்க மங்கம்மா சொலலறதையெல்லாம் செய்றாங்க…இதுல மெயின் ரோலே நம்ம சீலனுக்கு…


அவன் எப்படி ஒத்துகிட்டான் தான பாக்கறீங்களா…அவன்‌ஸஎங்கக ஒத்துகிட்டான்…ஒத்துக்க வைச்சு,சுடுகாட்ட சுத்தவிட்டுட்டா…


ஏதோ ஒரு விதத்துல அருண் மங்கம்மாவ நெருங்க முற்படும் பொழுதுயெல்லாம்,பல தடைகள் ஏற்பட்டுட்டே இருக்குது.



மங்கம்மாவுக்கு இது தெர்ந்தாலும் ,அவ அத எப்படி சமாளிச்சி அருண் கரம் பிடிக்கிறா என்பது தான் கதை.



கதைக்கு நாயகனா அருண் இருந்தாலும்,நமக்கு கண் எல்லாம் நம்ம சீலன் மேல தானுங்கோ…இது அருணுக்கு வந்த சோதனையா,நமக்கு வந்த சோதனையானு தான் தெரியலை…



அருணுக்கு பார்க்கும் பெண் மட்டும் தொடர் துர்மரணங்கள் நிகழ்வதற்கான காரணங்கள் என்னவோ…?


காசு பார்க்க தான் வேஷம் போடறானு மங்கம்மா மேல குற்றம் சுமத்தற சீலன்,மங்கம்மாவின் சொல்லுக்கெல்லாம் கட்டுப்படுவதற்கான காரணம் தான் என்ன???



பெண் பார்க்கும் படலத்திலே ஆயிரம் நீக்கு போக்கு பாரக்கும் பெரியவர்கள், சுடுகாட்டை சுற்றபவளை ஒத்துகொண்டது ஏனோ


ஆயிரம் பெண்களை பார்த்தாலும்,அழகான பெண்களை தான் தேடும் ஆண்களின் கண்கள் ,இந்த அருண் மட்டும் இந்த மங்கம்மாவை தன் மனையாளாக தேர்ந்தெடுத்தற்கான காரணம் தான் என்ன???


இந்த கேள்விக்கான பதிலும்,இன்னும் பலபல சுவாரஸ்யமும் திடுக்கிடும் நகர்வுகளுடன்


அம்மம்மா பொண்ணா இவ…தொடரும் பந்தம்
வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top