ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 4- அகமாளவந்த அகவாளனே!

முதல் திருமணத்தால் உண்டான காயங்களும் வலிகளையும் ஏமாற்றங்களையும் கடந்து அதை ஆற்றும் மருந்தா இருந்ததா நறுவியின் மறுமணம் என்பதே கதை ❤


நறுவியின் முதல் மணம் தோல்வி அடைந்ததால் இந்த உலகம் எப்படி எல்லாம் பேசும் மற்றும் பிரச்சினைனு வந்தா பெற்றோர்களின் ஆறுதல் எப்படி இருக்கும்னு ரொம்பவும் எதார்த்தமா சொல்லீருக்கீங்க ❤


அண்ணி கொளுந்தன் உறவு வித்தியாசமா நல்லா இருந்தது ❣️ அண்ணிகாக அண்ணாகிட்ட சண்டைக்கு போகுறது அழகு 😍💓


அறிவு அவனின் காதல்,புசிக்கேட்னு கொஞ்சுறது, சொல்லப்படாத தோல்வியுற்ற காதலின் வலி, முக்கியமாக கவிதைகள் இவை எல்லாமே அருமை ❤ அறிவின் அப்பா அவனுக்கு கொடுத்த அறிவுரையில் அசந்துட்டேன்❣️ ஒரு காட்சினாலும் அப்பா மகன் பிணைப்பு அவ்வளவு அழகு ❤


கார்த்தி நறுவிக்கு செய்தது அனைத்தும் வன்கொடுமைகள் 😡😡 அவன் மனம் திருந்தி வந்தாலும் அவனை மன்னிக்க முடியாதுனு சொன்ன விளக்கம் நல்லா இருந்தது .


காமாட்சி ஒரு அம்மாவா அவங்க பண்ணது தப்பு சொல்ல முடியல. சுயநலமானாலும் அது என்னை பாதிக்காத வரை எனக்கு ஒன்று மில்லைனு நறுவியின் நிலைப்பாடு நல்லா இருக்கு. பாட்டியும் அவர்களின் பேச்சும் சுத்தமா சரியில்லை🤬🤬


தமிழிசை தமிழியல் பெயர் காரணம் அருமை😍
கார்த்தி நறுவியை திருமணம் செய்யறுதுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான காரணம் சொல்லி இருக்கலாம்னு எனக்கு தோணுச்சு. மிகவும் அழகான கதை ❤


அறிவின் அகமானவள் வாசகர்களின் அகத்தை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
அகமாள வந்த அகவாளனே

நறுவி நம் கதையின் நாயகி. முதல் திருமணம் தோல்வியில் முடிய தமிழறிவாளன் நம் நாயகன் அவளை மறுமணம் செய்கிறான்.

நறுவி அவனை ஏத்துகிட்டாளா அவளோட லைப் எப்படி போகுதுனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

நறுவி அவளை எல்லாரும் திட்டிகிட்டே இருக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. குழந்தை இல்லைனா எல்லாரும் பொண்ணுங்களை தான் குறை சொல்றாங்க 😒😒😒

பாவம் அவளோட அம்மா அப்பா கூட அவளுக்கு ஆதரவா இல்லாதது வருத்தமா இருந்துச்சு.

அறிவு நறுவியை காக்க வந்த நாயகன். அவனோட காதல் ரொம்பவே அழகா இருந்துச்சு. அவனோட பூனைகுட்டி லவ் செம 🥰🥰🥰

இளங்கோ நவி பாண்டிங் அவ்ளோ அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு. இளங்கோவை ரொம்பவே பிடிச்சுது. 😍😍😍

கார்த்திக் இவன் எல்லாம் என்ன மனுஷனோ 😡😡😡😡சரியான சுயநல பிசாசு.

இவனை நல்லா தண்டிச்சு விட்ருக்கனும். அவனுக்கு ஜோடி சேர்த்து பொழைச்சு போனு விட்டுடீங்க 😏😏😏

அவன் திருந்தினாலும் என்னால ஏத்துக்கவே முடியல 🤧🤧🤧

கடைசியில் நவி அறிவுக்கு அழகான தேவதைகளை கொடுத்தது மனதுக்கு நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
அகமாளவந்த அகவாளனே!!

நாயகன் -தமிழறிவாளன்
நாயகி - நறுவீ


தோல்வியில் முடிந்த முதல் திருமணத்தின் கசடுகள் இரண்டாம் திருமணம் மூலம் வடுக்களாகவே இருந்ததா இல்லை வசந்தமா மாறியதா என்பதே கதை...!!👍

கார்த்திக் மூலம் உண்டான ரணங்களால காயப்பட்டிருந்த நறுவீய தன் தூய அன்பால தமிழ் மாத்தினது ரொம்ப பிடிச்சது...😍

தமிழோட காதலும் அருமை..நறுவீயின் பக்குவமும் அருமை..

செய்யாத தவறுக்காக நறுவீய எல்லாரும் தப்பா பேசுறதும் பாக்க கஷ்டமா இருந்தது‌‌.☹️☹️.முதல் திருமணம் தோல்வினால ஊர் உலகம் எப்படி கேவலமா பேசும்..அத சமாளிக்க பெற்றோர்கள் கூட துணைநிற்காம தனிமையாய் இருக்கிறது ரொம்ப கஷ்டம்.. அப்படி பட்ட கஷ்டத்துல இருக்கிற நறுவீய தன் தூய நேசித்தால் தமிழ் மாத்துனது சூப்பர்...

இளங்கோ அன்ட் அண்ணி- பிணைப்பு ரொம்ப அருமையா இருக்கு...😍😍

காமாட்சி அவங்களும் அம்மாவா யோசிச்சாங்க தவிர பொண்ணோட அம்மா ஸ்தானமா யோசிக்க தவறவிட்டாங்க பட் லாஸ்ட்ல மாறிட்டாங்க...👍

சுந்தரவல்லி பாட்டி மாதிரி சிலபேர் வாழ்க்கையில் இன்னும் இருக்காங்க.. அவங்களுக்கு நறுவீ கொடுத்த பதிலடியும் சூப்பர்.. அவளுக்கு துணை நின்ற தமிழும் சூப்பர்...🥰

கார்த்திக் சரியான சுயநலவாதி👊தான் செய்யறது தப்புன்னு தெரிஞ்சும் பண்ணிட்டு கடைசில தன் மேல் தப்பு இல்லைனு சொல்லிட்டு போயிட்டான்..பட் லாஸ்ட் ல குற்ற உணர்ச்சி இருந்தாலும் அவன நறுவீ மன்னிக்காது சூப்பர்..

நறுவீ பேரன்ட்ஸ்..எந்த சிச்சுவேசன்லயும் தன் பிள்ளைங்களுக்கு ஆதரவாதான் இருக்கனும்றத மறந்துட்டாங்க போல😪..பட் லாஸ்ட் வர இவங்க ரியலைஸ் பண்ணல...😒😒

கவிதை எல்லாமே சூப்பர்... தமிழின் புசிகேட் மேலான காதல் கவிதை எல்லாமே..❣️❣️❣️

அவர்கள் ஆத்மார்த்தமான அன்பின் அடையாளமா கிடைச்ச தமிழ் இயல் அன்ட் தமிழ் இசை ...🦋🦋

நறுவீயின் அகத்தினை ஆளவந்த(ஆண்ட) அகவாளனான தமிழ்
வெற்றிபெற வாழ்த்துக்கள்..👍
 
Last edited:
அகமாளவந்த அகவாளனே!

விமர்சனம்:

முதல் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாம் திருமணத்தில் நுழையும் நறுவீ.

தன் பல வருட காதல் தோல்வியில் முடிந்து மீண்டும் வரமாய் கிடைத்திட நாயகியின் கவலைகள் அனைத்தையும் காதலாய் மாற்றிட மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையில் இணையும் தமிழறிவாளன்.

மரத்துவிட்டது என நினைத்த உணர்வுகள் மீண்டும் இளந்தளிராய் துளிர்க்க ஆரம்பித்தன நாயகனின் காதலினால். சுந்தர வள்ளி பாட்டியின் பேச்சு வேதனை அளிக்கும் வேளையிலும், மாமியார் காமாட்சி ஒதுங்கி நிற்கும் வேளையிலும் நாங்கள் இருக்கிறோம் என கணவன் தமிழறிவாளனும், மைத்துனன் எனும் பங்கில் இளாவும் நறுவீயை பாதுகாப்பது அருமை🥰

குழந்தை பெறுவதற்கு தகுதி இல்லை என மற்றவர்களால் முத்திரை பதிக்கப்பட்ட நறுவிக்கும், தன்னை தானே குழந்தை பெற தகுதி இல்லை என தாயிடம் கூறி நறுவீயை மணந்த தமிழறிவாளனுக்கும் காதல் வாழ்க்கையின் அடையாளமாக இரட்டை பெண்குழந்தைகள் பெற்று இல்வாழ்க்கை சிறப்பாக அமைந்தது அருமை😊😊

முதல் திருமண வாழ்க்கையின் கசப்புகளை களைந்து நறுவீயின் அகத்தை ஆள வந்த தமிழறிவாளன் சிறப்பு.



கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
 
Top