ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'விழி தீயிலொரு தவம்' - கதைத் திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 19







அந்த பக்க குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை விழிகளில் கண்ணீரோடும் இதழில் புன்னகையோடும் பார்த்த யாழ்மொழியை புரியாமல் பார்த்தான் லியோ.



"என்ன பார்க்குற?" என்ற அவனின் குரலில் இமை சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டவள், "அந்த ஜோடி அன்னங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. அவைகளுடைய காதலுக்கு எந்த தடையும் இல்லை. அந்த சுதந்திரம் கூட எனக்கு இல்லையே என்ற ஏக்கம்தான்" என்று பேசிக்கொண்டே சென்ற யாழ்மொழியின் வார்த்தைகளில் அத்தனை வலி.



ஒட்டி உரசி நீராடிக்கொண்டிருந்த ஜோடி அன்னங்களை ஒரு பார்வைப் பார்த்தவன், தன்னவளின் புறம் திரும்பி அவளையே விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.



யாழ்மொழியும் மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் பார்வையில் முகம் சிவந்தவளாக மீண்டும் தலையை குனிந்துக்கொள்ள, "நீ சொல்றது சரிதான், ஆனா ஒரு சந்தேகம். அதுங்க காதல் ஜோடிங்கன்னு நீ எப்படி சொல்ற. ஒருவேள ரெண்டும் பொண்ணுங்களாவோ பசங்களாவோ கூட இருக்கலாமே!" என்று தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்.



அந்த கேள்வியில் அவனை முறைத்துப் பார்த்தவள், "இயற்கையை ரசிக்கக் கூட தெரியாத தாங்கள் எல்லாம் என்ன தான் பதவியில் இருக்கிறீர்களோ! கடவுளே..." என்று பொறுமிக்கொள்ள, "இதுக்கும் என் பதவிக்கும் என்ன சம்பந்தம, வாட் த ஹெல்..." என்று லியோவோ சலிப்பாக விழிகளை உருட்டிக்கொண்டான்.



தலையிலடித்துக்கொண்டு அவள் மென்மையாக புன்னகைக்க, அவளை நெருங்கி அமர்ந்தவன், "உன்னோட வலி என்னால புரிஞ்சுக்க முடியாது, ஆனா நான் ஒன்னு சொல்லட்டுமா! உன்னோட வாழ்க்கைய உனக்கு பிடிச்ச மாதிரி நீதான் அமைச்சுக்கணும். யாருக்கும் உன்ன அடக்கி ஆள உரிமை கிடையாது. உன்னோட கடைசி நிமிஷத்துல என்னால இந்த சுதந்திரத்த அனுபவிக்க முடியலன்னு நீ நினைச்சிட கூடாது யாழ்மொழி" என்றான் ஆழ்ந்த குரலில்.



அவனின் வார்த்தைகளில் அதிர்ந்த முகமாக அவனை சில கணங்கள் பார்த்துக்கொண்டிருந்தவள், "இத்தனை பேசும் தாங்கள் ஏன் இந்த மக்களை அடிமைப்படுத்த எண்ணுகிறீர்கள் அதிகாரி. சுதந்திரமாக விட்டு விடலாம் அல்லவா!" என்று கேட்க, இப்போது அதிர்ந்து விழிப்பது லியோவின் முறையானது.



அவளின் கேள்வி அவனின் இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போலிருக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் அவளை விட்டு விலகப் போக, தன்னை மீறி அவனின் புஜத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள் யாழ்.



இதை எதிர்பார்க்காதவன் அவளின் மேல் மோதிவிட, பெண்ணவளின் முகமோ சொந்தாமரையாய் வெட்கத்தில் சிவந்தது.



"அது.. நான்... நான் ஏதாவது தவறாக பேசிவிட்டேனா" என்று வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க முயற்சி செய்தவாறு திக்கித்திணறி அவள் கேட்க, அவளின் தடுமாற்றத்தை ரசித்துப் பார்த்தவனுக்கு விழிகளை அகற்ற முடியவில்லை.



இதுவரை அவன் பழகிய பெண்களிடம் இத்தனை வெட்கத்தையோ இந்த சிவந்த கன்னங்களையோ அவன் பார்த்தது கிடையாது.



ஒவ்வொன்றையும் அவனுக்கு புதிதாக கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும்.



இருவரும் அத்தனை அருகாமையிலிருக்க, "யூ மெஸ்மரைஸிங் மீ யாழ்" என்று அவளையே ரசித்துப் பார்த்த வண்ணம் கிறக்கமான குரலில் சொன்னான் லியோ.



அவனின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவளுக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஆனால் அவனின் அந்த குரல் அவளுக்குள் ஏதோ செய்தது.



"இருவரின் தேசமும் வேறு, இருவரின் கலாச்சாரமும் வேறு. இருவரின் தகுதியும் வேறு. ஆனால் தங்களின் மீதான காதல் என்னை எதையும் உணர விடவில்லை அதிகாரி" என்று அவனின் இரு விழிகளையும் மாறி மாறிப் பார்த்தவாறு ஹஸ்கி குரலில் தன் மனதிலுள்ள காதலை அவள் சொல்லிவிட, இதை எதிர்பார்க்காதவனோ அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான்.



பெண்ணவளுக்கு பயத்தில் இதயம் படுவேகமாகத் துடித்தது. சந்தோஷம், பயம், பதட்டம், வெட்கம் என அனைத்து உணர்ச்சிகளும் அவளை சூழ்ந்துக்கொள்ள, அப்போதுதான் அவளுக்கு வீராவும் இந்திராவும் முத்தமிட்டுக்கொண்ட காட்சி ஞாபகத்திற்கு வந்தது.



அதை நினைத்துப் பார்த்தவளோ அவனின் விழிகளைப் பார்த்தவாறு மெல்ல பார்வையை அவனின் இதழ் மீது பதித்தாள்.



முயன்று தைரியத்தை வரவழைத்து சற்று முன்னே வந்து அவனின் இதழ் மீது தன்னிதழை ஒற்றி எடுத்து அவள் விலகி அமர்ந்துக்கொள்ள, அவளுக்கோ உடல் நடுங்க பயத்தில் வேகமாக மூச்சு வாங்க ஆரம்பித்தது.



ஆனால் லியோவின் எதிர்வினையே வேறு.



"என்ன இது?" என்று அவன் சாதாரணமாகக் கேட்க, "ஆங்.. அது.. கா.. காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொள்வது சகஜம்தானே. இது கூட தெரியாதா?" என்று பதிலுக்கு கேட்டு சிரித்தாள் யாழ்மொழி.



"ஆனா உனக்கு முத்தம் கொடுக்க கூட தெரியல்லயே யாழ்!" என்று குறும்பாக சொன்னவன் அவள் பின்னந்தலையைப் பற்றி தன் முகமருகே இழுத்து தலையை சரித்து அவளிதழை கவ்விக்கொள்ள, யாழ்மொழியோ விக்கித்துப் போய்விட்டாள்.



ஆனால் ஆடவனோ அவளிதழை சுவைத்துக்கொண்டே அவளுக்குள் மூழ்கத் தொடங்க, பெண்ணவளுக்கு இந்த புதிதான முத்தத்தில் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.



பயத்தில் அவள் அவனின் சட்டைக்காலரை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, லியோவுக்கு அவளிதழ் தேனை விடக் கூட மனமில்லை.



தன் மனதை மயக்கியவளுடனான முதல் இதழ் முத்தத்தை அவன் ரசித்து அனுபவித்துக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் விழிகளை மூடிக்கொண்ட யாழ்மொழியும் அவனுக்கு இசைந்துக் கொடுக்க ஆரம்பித்தாள்.



இருவரும் விலக மனமின்றி ஒருவருக்குள் ஒருவர் மூழ்கிக்கொண்டே போக, ஆடவனின் கரங்களோ அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டிருந்தன.



சில கணங்கள் கடக்க முதலில் நடப்புக்கு வந்த லியோவுக்கு அப்போதுதான் தான் செய்யும் காரியமே உணர, மொத்த உணர்ச்சிகளும் அத்தோடு வடிந்துப் போனது.



உடனே தன்னிடமிருந்து அவளை தள்ளி விட்டவன் மூச்சு வாங்கியவாறு அவளைப் பார்க்க, யாழ்மொழியும் வேக மூச்சுக்களை விட்டவாறு தன்னவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.



"அதிகாரி நான் ஏதாவது..." என்று பேச வந்தவளின் வார்த்தைகள் எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.



வேகமாக எழுந்தவன் அவன் பாட்டிற்கு தன் காரிலேறி அந்த இடத்தை விட்டே மின்னல் வேகத்தில் சென்றிருக்க, போகும் தன்னவனை புரியாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளோ தன் இதழை மெல்ல வருடினாள்.



அவனுடைய ஸ்பரிசமும் நெருக்கமும் வாசனையும் இன்னும் தன்னை சுற்றியே இருப்பது போல் அவளுக்குத் தோன்ற, அவளிதழில் வெட்கப் புன்னகைத் தோன்றியது.



அவனுடனான முத்தத்தையே நினைத்துப் பார்த்தவாறு அவள் காலார அரண்மனையை நோக்கி நடந்துச் செல்ல, இங்கு ஆங்கிலேய அரண்மனைக்கு முன் வண்டியை நிறுத்திய லியோவுக்கு யார் பேசுவதும் காதில் விழவில்லை.



வேகமாக தனது படுக்கையறைக்கு சென்றவன், கதவை சாற்றிவிட்டு அறையில் பதற்றமாக குறுக்கும்

நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தான்.



'இல்ல, இது தப்பு. நான் இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு ப்ரிட்டிஷ் ஹையர் ஆஃபீசர் சாதாரண செர்வன்ட்கிட்ட மயங்குறதா! வாட் ரப்பிஷ், இது மட்டும் மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்னோட பதவில நான் இருக்குறதே பெரிய அவமானமா போயிரும். ஐ வில் நொட் லெட் எனிதிங் டிஸ்ட்ரோய் மை பவர். வெறும் என்டர்டெயின்மென்ட்காக பழகுறது பரவாயில்ல, ஆனா இது...'



என்று தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை அவன் கட்டுப்படுத்த முயற்சிக்க, ஆனால் யாழ்மொழியின் முகமும் அவளுடனான முத்தமும் மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்து அவனை பாடாய் படுத்தியது.



'இந்த உறவு சரியா வராது. ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறதுன்றதே சாத்தியமில்லாத ஒன்னு. ஒருவேள ரெண்டு பேரும் காதலிச்சா கூட காலம் முழுக்க சேர்ந்து வாழுறதுங்குறது இம்பாஸிபள். அவ என்னை காதலிக்கிறத இந்த நாட்டு மக்களால கொஞ்சமும் ஏத்துக்க முடியாது. இந்த உறவால எனக்கு மட்டுமில்ல அவளுக்குமே பாதிப்புதான். ரெண்டு பேரும் பிரியணும், அதான் விதி. இதுக்கப்பறம்...'



என்று தனக்குத்தானே சொன்னவாறு விழிகளை அழுந்த மூடிக்கொண்டவன் ஒரு முடிவு எடுத்தவனாக பட்டென்று விழிகளைத் திறந்தான்.



ஏனென்று புரியாத வலியில் மனம் பிசைய, அந்த உணர்வு பிடிக்காமல் சுவற்றில் ஓங்கிக் குத்தி தன் சிந்தனையை திசைத் திருப்ப முயற்சித்தான்.



ஆனால் அனைத்தும் தோல்வியே..



அதேநேரம் யாழ்மொழி அரண்மனைக்கு வர, "யாழ்மொழி, இத்தனை நேரம் எங்குதான் சென்றிருந்தாயோ! இளவரசி உன் மீது கடுங்கோபத்தில் இருப்பது போல் தெரிகிறது. விரைவாக சென்று என்னவென்று பார்" என்று மற்ற பணிப்பெண்களில் ஒருத்தி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.



அடுத்தகணம் வேகமாக இந்திராவின் அறையை நோக்கி ஓடியவள், உள்ளே நுழைந்து மூச்சு வாங்கியவாறு நின்றவளுக்கு ராதாவைப் பார்த்ததும் சர்வமும் அடங்கியது.



அங்கு இளவரசிக்கு முன்னே ராதா நின்றுக்கொண்டிருக்க, அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்த இந்திரா, "யாழ்..." என்றழைத்தவாறு எழுந்து அவளை நோக்கி வர, யாழ்மொழிக்கு பயத்தில் இதயத் துடிப்பு ஓசை தன் காதிற்கே கேட்டது.



பயத்தில் அவள் எச்சிலை விழுங்கிக்கொள்ள, "ராதா அனைத்தையும் கூறிவிட்டாள், இதற்கு மேல் என்னிடம் மறைக்க முயற்சி செய்யாதே" என்ற இந்திராவை குற்றவுணர்ச்சியோடு பார்த்தவள் திரும்பி ராதாவைப் பார்க்க, அவளோ தலையை குனிந்துக்கொண்டாள்.



"அது இளவரசி.. நான்.. நான் தங்களிடம்..." என்று எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் தடுமாறியவள், ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு, "என்னை மன்னித்துவிடுங்கள்" என்று மட்டும் சொல்லி தலையை குனிந்துக்கொள்ள, அவள் நாடியைப் பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினாள் இந்திரா.



"உன் காதலை என்னிடம் மறைக்கும் அளவிற்கு நான் யாரோ ஒருத்தியாகி விட்டேனா யாழ், ஆனால் நீ காதலிப்பதை அறிந்து மெய்யாலுமே எனக்கு அத்தனை சந்தோஷம். யாழ்மொழியின் முடிவு எப்போதும் தவறாக போனதில்லை" என்று அவள் பேசிய வார்த்தைகளில் யாழ்மொழி அதிர்ந்தாலலோ இல்லையோ ராதாவுக்கு இது பேரிடியாக இருந்தது.



அவள் ஒன்றை நினைத்து இதை செய்திருக்க, இந்திராவின் எதிர்வினை அவள் நினைத்ததற்கு மேல் தலைகீழாக இருந்தது.



"இளவரசி..." என்று ஆனந்த அதிர்ச்சியோடு அவள் அழைக்க, உடனே தன் தோழியை அணைத்துக்கொண்டாள் மற்றவள்.



"உன்னால்தான் என் வீரா இப்போது உயிரோடு இருக்கிறான் யாழ், ஆரம்பத்தில் வீரா சொன்ன போது உன் மேல் சிறிய கோபம் எட்டிப் பார்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் ஆழமாக யோசித்துப் பார்த்ததும் தான் புரிந்தது. அந்த உயரதிகாரி உனக்காக அவரை கொல்ல வந்தவனையே உயிரோடு விட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக உனக்காக எதையும் செய்ய துணிவார் என்று" என்று இந்திரா சொல்ல, யாழ்மொழியோ அவளிடம் மறைத்ததை எண்ணி அழ ஆரம்பித்தாள்.



"என்னை மன்னித்துவிடுங்கள் இளவரசி, நான் ஒரு ஆங்கிலேயனை காதலிப்பது தெரிந்தால் தாங்கள் என்னை ஒதுக்கி விடுவீர்களோ என்ற பயத்திலேயே மறைத்துவிட்டேன். எனக்.. எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்று அவள் அழுத வண்ணமாய் சொல்ல, "புரிகிறது, ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்துக்கொள். இந்த காதலின் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்க்க தயாராக இரு" என்றாள் இந்திரா அழுத்தமாக.



தோழி கூற வருவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.



"தாங்கள் என் மீது கோபப்படாமல் இருந்ததே நான் பாதி தூரத்தை கடந்த மாதிரிதான். இதுவே போதும் இளவரசி" என்ற யாழ்மொழிக்கு அத்தனை நிம்மதி.



அவளுடைய பார்வை இப்போது மற்ற தோழியின் மீது படிய, பற்களைக் கடித்துக்கொண்ட ராதா எதுவும் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறி இருந்தாள்.



போகும் ராதாவை இந்திரா பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றாலும், இப்போது யாழ்மொழிக்கு அவளின் செயலை குறித்து லேசான பயம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது.



அடுத்த இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், "காதலிக்கிறோமே, கொஞ்சமாவது பொறுப்பென்று ஒன்று இருக்கிறதா! இரண்டு நாட்களாக அவரை தேடுகிறேன், என்னை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று கூட அவருக்கு தோன்றவில்லை. ச்சே! அவர் மட்டும் என் எதிரில் வரட்டும், அப்போது வைத்துக் கொள்கிறேன்" என்று யாழ்மொழி படபடவென பொரிந்துக்கொண்டே போக, வரைந்தவாறு அவளைப் பார்த்துக்கொண்டிருந்த இந்திராவுக்கு சிரிப்புதான் வந்தது.



"இப்போது புரிகிறதா, என் மனநிலை உனக்கு? அப்போதெல்லாம் என்னையே கிண்டல் செய்வாய், ஆனால் இப்போது.." என்று சொல்லி அவள் மேலும் சிரிக்க, தலையிலடித்துக்கொண்டாள் மற்றவள்.



அன்று நேரம் மாலையை நெருங்க, தன்னவனை காண எண்ணி யாழ்மொழி சந்தை, வயல் என அவனை சந்திக்கும் இடங்களுக்கு செல்ல, சரியாக ஜேம்ஸ்ஸோடு ஒரு இடத்தில் நின்றிருந்தான் லியோ.



"மொதல்ல இந்த காரை சேன்ஜ் பண்ணு ஜேம்ஸ், அடுத்த முறை இப்படி நின்னுச்சுன்னா நீ காரை பேளஸ் வரைக்கும் தள்ளிட்டு போக வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்" என்று அவன் கடுப்பில் கத்திக்கொண்டிருக்க, அவனைப் பார்த்ததும் உற்சாகமாகி அவனை நோக்கி ஓடினாள் யாழ்.



"அதிகாரி, ஏன் என்னை சந்திக்க தாங்கள் வரவே இல்லை? உங்களைத் தேடி அலைந்தே களைத்துப் போய்விட்டேன்" என்று மூச்சு வாங்கியவாறு திக்கித் திணறி அவள் சொல்ல, அவளை அதிர்ந்துப் பார்த்தவன் உடனே தன் முகபாவனையை மாற்றி அவளை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட ஒரு பார்வைப் பார்த்தான்.



"சார், கார் ரெடி" என்று சரியாக ஜேம்ஸ் குரல் கொடுக்க, தன்னை கண்டுகொள்ளாதது போல் காரில் ஏறப் போனவனின் முன் சென்று நின்றவள், "ஏன் என்னிடம் பேச மறுக்கிறீர்கள், நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா! ஒருவேளை அன்று நான் தவறாக முத்தம் கொடுத்தேனா, அதற்குதான் கோபமா?" என்று ஏதேதோ பேசிக்கொண்டு போக, சலிப்பாக விழிகளை உருட்டினான் அவன்



"இங்க பாரு, நான் ப்ரிட்டிஷுக்கு கீழ வேலை பார்க்குறவன், இந்த அதிகாரம் பதவிக்காக நான் நிறைய விஷயங்கள தியாகம் பண்ணியிருக்கேன். உன்னால இதுக்கு எந்த கலங்கமும் வர நான் விட மாட்டேன், புரியுதா.." என்று அவன் கிட்டத்தட்ட கத்த, "அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?" என்று புரியாமல் கேட்டாள் யாழ்மொழி.



"நான் உன் கூட பழகுறது உயர் பதவியில இருக்குற எனக்குதான் அவமானம், என்ட் எனக்கு உன் மேல காதல் இல்லை யாழ். நாம ரெண்டு பேரும் ரெண்டு விதமான திசையில இருக்கோம். ஒன்னா இருக்குறது சாத்தியமே இல்லை. உன்னை விட என் நாடும் பதவியும்தான் எனக்கு முக்கியம். அதனால... தேவையில்லாத ஆசைகள நீ மனசுல வளர்த்துக்காத"



என்று அவன் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு அவள் முகத்தைப் பார்க்க, அடுத்தகணம் யாழ்மொழியின் பார்வையில் லியோவுக்கு உள்ளுக்குள் சுள்ளென்று இருந்தது.



**************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க... 👇
https://aadvikapommunovels.com/threads/விழி-தீயிலொரு-தவம்-கருத்துத்-திரி.2588/
 
அத்தியாயம் 20




லியோவோ படபடவென பேசிக்கொண்டே சென்றவன் அடுத்து யாழ்மொழி பார்த்த பார்வையில் மனம் பிசைய அதற்குமேல் அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.



ஜேம்ஸ்ஸிற்கு அவர்கள் பேசிக்கொள்வது புரியாவிட்டாலும் இருவருக்குமிடையில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் அவனால் நன்றாகவே உணர முடிந்தது.



யாழ்மொழியொ விழிநீரை துடைத்தெறிந்து விட்டு அவனை அழுத்தமாகப் பார்த்தவள், "காதல் இல்லாமல்தான் என்னுடன் பழகினீர்களா, காதல் இல்லாமல்தான் எனக்கு அன்று முத்தம் கொடுத்தீர்களா? ஏன் அந்த ஆங்கிலேய அரண்மனையிலிருந்து என்னை காப்பாற்றியது கூட காதலே இல்லாமல்தானா?" என்று தன் கேள்விக் கனைகளைத் தொடுக்க, அவனோ பதிலுக்கு அலட்சியமாக தோளைக் குலுக்கினான்.



"உன் கூட பழகின ஒரே காரணத்துக்காகதான் நான் உன்னை காப்பாத்தினேன், என்ட் முத்தம் கொடுத்துக்குறது நான் வளர்ந்த சூழல்ல சகஜமான ஒன்னு. அதை நீ காதல்னு எடுத்துப்பேன்னு எனக்கு தெரியல. என்னோட பதவி அதிகாரம் என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும், அப்படிப்பட்ட பதவில இருக்குற நான் உன்னை மாதிரி ஒரு பணிப்பெண்ண காதலிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்"



என்று அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் மனதை முள்ளாய் கிழிக்க, தொண்டை வரை வந்த கதறலை கட்டுப்படுத்திக்கொண்டாள் யாழ்மொழி.



விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், "என்னுடைய முதல் காதலே தாங்கள்தான் அதிகாரி, ஆனால்.. வலியும் தாங்களே" என்றுவிட்டு கண்ணீரோடு அந்த இடத்தை விட்டு நகர, லியோவோ ஒருகணம் அவளின் செயலில் ஸ்தம்பித்துப் போய்விட்டான்.



கத்துவாள், சண்டை போடுவாள் என அவன் ஒன்று நினைத்திருக்க, அவளோ அமைதியாக நகர்ந்ததும் அவனுக்குள் குற்றவுணர்ச்சி பிடுங்கித் தின்றது.



அவளின் வார்த்தைகளும் அந்த அழுத்தமான பார்வையும் அவனை கொல்லாமல் கொன்றுவிட, தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், "சீக்கிரம் வண்டிய எடு!" என்று இறுகிய குரலில் சொன்னவாறு காரில் ஏறிக்கொண்டான்.



யாழ்மொழியோ நடை பிணம் போல் அரண்மனைக்கு வந்து சேர்ந்தவள் யாருடனும் எதுவும் பேசவில்லை.



அறைக்குள் சென்று கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, அப்போதும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை.



'அப்போது எல்லாம் அவ்வளவுதானா! அவருடைய விழிகளில் நான் கண்ட உணர்வு அத்தனையும் பொய்யா? காதல் இத்தனை வலியை கொடுக்குமென்று தெரிந்திருந்தால் அந்த திசைக்கும் சென்றிருக்க மாட்டேன். இப்படி என் மனதை காயப்படுத்தி விட்டீர்களே!'



என்று மானசீகமாக தன்னவனோடு பேசியவளுக்கு உள்ளுக்குள் சுள்ளென்று தைக்கும் காதல் வலியை அனுபவிப்பதற்கு இறப்பது மேலென தோன்றியது.



அதேநேரம் ரொனேல்டின் அரண்மனையில் அதிகாரிகள் பலர் கூடியிருந்து கலந்துரையாட, லியோவோ எந்த பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடாமல் ஏதோ ஒரு இடத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.



"இந்த நாட்டுல இருந்து பல பொருட்கள நம்ம நாட்டுக்கு ஏற்றுமதி பண்றோம், இந்த பொருட்களுக்கான கேள்வி நம்ம சந்தையில ரொம்ப அதிகமா இருக்கு. இந்த நேரம் இதோட விலைய அதிகரிச்சா நம்மளோட இலாபம் இன்னும் அதிகரிக்கும்" என்று பேசிக்கொண்டே சென்ற ரொனெல்டின் பார்வை லியோவின் மீது படிய, அவனை புருவ முடிச்சுகளோடு பார்த்தார்.



"ஆஃபீசர் லியோ.." என்று அவர் இரண்டு தடவைக்கு மேல் அழைத்ததும் தான் நடப்புக்கு வந்தவன், அவரை புரியாமல் பார்க்க, "வாட் ஆர் யூ திங்கிங் அபௌட்? நான் பேசினது உனக்கு காதுல விழுந்துச்சா? உன்னோட கவனமே இங்க இல்லயே லியோ, உன்னோட கவனம் எப்போவுமே சிதறினது கிடையாது. வாட் இஸ் ரோங் வித் யூ?" என்று கூரிய பார்வையோடுக் கேட்டார் அவர்.



"ஆங்.. தட்.. தட்ஸ் நத்திங் சார்" என்று சிறு தடுமாற்றத்தோடு அவன் சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு மீண்டும் பேச்சை ஆரம்பித்தார் ரொனெல்ட்.



"தெயார் ஆர் லொட் ஆஃப் திங்க்ஸ் வீ ஹேவ் டூ சார்ட் அவுட் இன் அவர் கன்ட்ரி. சோ... எங்கள்ல யாராச்சும் ஒருத்தர் நம்ம நாட்டுக்கு திரும்ப போய் அதை சரி பண்ணிட்டு வரணும். அதுக்காக யார் தயாரா இருக்கீங்கன்னு நீங்களே டிஸ்கஸ் பண்ணி எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க" என்று ரொனேல்ட் சொன்னதும், லியோவோ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.



மற்றவர்களோ தங்களுக்குள் கிசுகிசுக்க, "நான் போறேன்" என்று ஒரு கையை மட்டும் உயர்த்தி அவன் சொன்னதும், மொத்தப் பேரின் பார்வையும் இப்போது அவனின் புறம் திரும்பியது.



"ஆஃபீசர் லியோ, நிஜமாதான் சொல்றியா?" என்று அவர் சந்தேகமாகக் கேட்க, "ஆமா சார், நான் போறேன், ஐ டிசைட் இட்" என்றான் லியோ தீர்க்கமான பார்வையோடு.



"அப்போ சரி, நாளைக்கே அதுக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ நான் ஆரம்பிக்குறேன். பீ ரெடி மை பாய்" என்று உற்சாகமாக சொன்ன ரொனேல்ட் கூட்டம் முடிந்ததற்கு சார்பாக மதுக்குவளையை உயர்த்திக் காட்ட, மற்றவர்களும் கரகோஷத்தோடு தத்தமது மதுக்குவளையை மேலே உயர்த்தினர்.



ஆனால், மருந்துக்கும் முகத்தில் புன்னகையின்றி ஏனென்று புரியாத வலியோடு லியோ அமர்ந்திருக்க, அந்த கூட்டத்திற்குள் தனக்குள் ஒரு திட்டத்தை தீட்டியவாறு விஷமப் புன்னகையோடு மதுக் குவளையை வாயில் சரித்தான் வில்லியம்.



அடுத்து வந்த நாட்கள் யாழ்மொழி அரண்மனையை விட்டு வெளியில் வரவே இல்லை. உண்ணாமல் சரியாக உறங்காமல் வாடிய முகமாக இருந்தவளை சுற்றியிருந்தவர்களும் கவனிக்க, அது இந்திராவின் விழிகளில் சிக்காமலா போகும்!



அன்று இந்திராவுக்கு தேவையான ஆடைகளையும் அலங்காரங்களையும் யாழ்மொழி தயார் செய்துக்கொண்டிருக்க, அவள் எடுத்து வைத்த ஆடையையும் அவளையும் பார்த்த இளவரசியோ வாய்விட்டு சிரித்துவிட்டாள்.



"யாழ், என்ன இது? காதலித்த பிறகு உன் ரசனை இப்படி போகுமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்படி மட்டும் நான் வெளியில் சென்றால் ஊரே என்னை பார்த்துதான் சிரிக்கும்" என்று சிரித்துக்கொண்டே அவள் சொல்ல, அப்போதுதான் தான் எடுத்து வைத்ததை கவனித்தவள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அசடுவழிந்தாள்.



அவள் தெரிவு செய்திருந்த சேலைக்கும் சட்டைக்கும் அந்த அலங்காரங்களுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை.



"உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி" என்று தயக்கமாக யாழ்மொழி சொல்ல, "காதலில் பிரச்சனை என்றால்தான் இப்படி நடந்துக்கொள்ள தோன்றும், என்ன நடந்தது யாழ்? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" என்று தோழியை கூர்மையாகப் பார்த்தபடி கேட்டாள் இந்திரா.



"ஒன்றுமில்லை இளவரசி, காதல் என்றாலே வலிதானே! தாங்கள் அறியாததா?" என்று ஒரு மாதிரி குரலில் விரத்திப் புன்னகையோடுக் கேட்டவள், மீண்டும் வேலையைத் தொட, ஏதோ ஒன்று இந்திராவுக்கு சரியாகத் தோன்றவில்லை.



"நீ கடந்த சில நாட்களாக அரண்மனையில் இருந்து வெளியிலேயே செல்லவில்லை, அதை நானும் கவனிக்க தான் செய்கிறேன். காதலில் பிரச்சனைகள் வராமல் இருக்காது யாழ்மொழி, அவர்களோடு சற்று பேசினாலே அத்தனையும் தீர்ந்துவிடும். வீணாக யோசித்துக்கொண்டு இருக்காதே.. இப்போதே நாம் வெளியில் செல்லலாம், நீ உன்னவரை சந்தித்து பேசு"



என்று இந்திரா சொல்ல, தனது பிரச்சனையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணற ஆரம்பித்தாள் யாழ்மொழி.



"இல்லை. அது இளவரசி... அவருக்கு..." என்று என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாமல் கைகளைப் பிசைந்தவாறு அவள் தடுமாற, எதையும் கேட்பதாக இல்லை இந்திரா.



"என் காதல் இத்தனை தூரம் கைக்கூட காரணமே நீ தான் யாழ், நீ ஒரு பிரச்சனையில் இருக்க உன்னை விட்டுவிடுவேனா நான். இதுதான் நீ எனக்கு செய்த உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு. சீக்கிரம் தயாராகு!" என்றுவிட்டு வேகவேகமாக தயாராகியவள் யாழ்மொழியை இழுத்துக்கொண்டே சென்றிருக்க, வேறு வழியில்லாமல் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் மற்றவள்.



ஏனோ லியோ பேசியதை சொல்லி அவனைப் பற்றி எண்ணத்தை மாற்ற காதல் மனம் விடவில்லை. ஏதோ ஒரு சிறு நம்பிக்கை அவள் மனதிலிருக்க, அமைதியாக தோழியோடு சென்றாள் அவள்.



குதிரையும் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல, சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே வந்தவளோ அவன் இங்கு இருக்கவே கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும் இன்னொரு புறம் அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஏக்கமும் சூழ்ந்துக்கொண்டது.



இந்திராவின் குதிரை சந்தைக்கு பக்கத்தில் நிற்க, "இங்குதானே அந்த ஆங்கிலேய அதிகாரிகள் வரி வசூலிக்க வருவார்கள், கண்டிப்பாக உன்னவரும் இங்குதான் இருக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு அவள் குதிரையிலிருந்து இறங்க, யாழ்மொழியும் இறங்கி சுற்றி முற்றி தேடிப் பார்த்தாள்.



சரியாக பாலாவோடு பேசியவாறு வெளியில் வந்த வீரா தன்னவளைக் கண்டதுமே புன்னகையோடு அவளை நோக்கி வர, "வீரா..." என்று உற்சாகமாக அழைத்தாள் இந்திரா.



"தேசத்து இளவரசி இந்த சந்தைக்கு முன்னால நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க" என்று அவன் கேலியாகக் கேட்க, "யாழ்மொழிக்கும் அவளுடைய காதலனுக்கும் இடையில் சிறு பிரச்சனை வீரா, நம் காதலுக்காக போராடிய யாழ்மொழியை நாம்தானே சேர்த்து வைக்க வேண்டும்" என்றாள் விழிகள் மின்ன.



வீராவோ யாழ்மொழியை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவன், இந்திராவின் கரத்தைப் பற்றி அவளிடமிருந்து சற்று தள்ளி அழைத்து வைத்தான்.



"இதெல்லா தெரிஞ்சுதான் பண்றியா இந்திரா, அந்த வெள்ளைக்காரன் நம்மள அடிமை மாதிரி நடத்துறான். அவன போய் இவ காதலிக்கிறா. இதோட விளைவு தெரிஞ்சுமா இதுக்கு நீ... ச்சே! அவன் இவள ஏமாத்துறதா கூட இருக்கலாமே" என்றவனுடைய வார்த்தைகள் சிறு பயத்தோடு ஒலிக்க, "வீரா, யாழ்மொழி முட்டாள் அல்ல, அவள் எது செய்தாலும் அது தப்பாக இருக்காது. அவளை மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று அழுத்தமாக சொன்னாள் அவள்.



"எனக்கு என்னவோ இது சரியா தோனல, அவ சின்ன பொண்ணு இந்திரா" என்று அவன் சொல்ல, "அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்ய அவளுக்கு முழு உரிமை இருக்கிறது, தந்தை கூறியதை பற்றி தெரிவித்து நான் அனுப்பிய கடிதம் உனக்கு கிடைத்ததா வீரா, என்ன முடிவு செய்தாய்?" என்று கேட்டாள் இந்திரா யோசனையோடு.



"அது... நா..." என்று புருவ முடிச்சுகளோடு யோசித்தவனின் பார்வை யாழ் நின்றிருந்த இடத்தை நோக்க, அங்கு அவள் இருந்தால்தானே!



"யாழ் எங்க?" என்று அவன் கேட்டதும்தான் பட்டென்று திரும்பியவள் அங்கு தோழி இல்லாததைப் பார்த்து அதிர்ந்து விழிக்க, அதேநேரம் இங்கு ஒரு தூணிற்கு பின்னே மறைந்திருந்தாள் யாழ்மொழி.



அவளுடைய விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓட, சந்தை வியாபாரிகளோடு காரில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்த லியோவையே அவள் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.



ஏனோ அவள் மனம் ஏங்க காதல் மனம் அவன் பேசிய வார்த்தைகளால் கதறித் துடித்தது.



"எங்க நிலைமையையும் புரிஞ்சுக்கோங்க ஐயா, இதுக்கு மேல வரி விதிச்சா எங்களாலயும் என்னதான் பண்ண முடியும்?" என்று அந்த ஏழை வியாபாரி கிட்டத்தட்ட அழும் நிலையில் பேச, அமைதியாக நின்றிருந்தவனுக்கு அவர் பேசியது காதில் விழவே இல்லை.



ஏதோ ஒரு திசையை நோக்கி மனம் உந்த, உடனே தன்னவள் நின்றிருந்த இடத்தை நோக்கி அவன் திரும்பவும், யாழ்மொழியோ தூணிற்கு பின்னே உடனே மறைந்துக்கொண்டாள்.



தன் மனதின் போராட்டத்தை எண்ணி அவனுக்கே எரிச்சலாக இருந்தது.



'ச்சே! அவள மறக்க நினைச்சாலும் முடிய மாட்டேங்குதே!' என்று நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனுக்கு ஏனோ தன்னவள் தன்னை சுற்றி இருப்பது போலவே உள்ளுக்குள் தோன்ற, மீண்டும் அதே திசையைப் பார்த்தவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.



அதேசமயம் தூணிற்கு பின்னே மறைந்து நின்றிருந்த யாழ்மொழியின் நிலையோ பரிதாபம்!



முகத்தை மூடிக்கொண்டு அவள் கதறியழ, 'மானங்கெட்ட மனசு இத்தனை தூரம் அவன் பேசியதற்கு பிறகும் அவனை இப்படி காண வேண்டுமா?' என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டது அவளுடைய மனசாட்சி.



"வேண்டாம் யாழ், அவர்தான் காதலே இல்லை என்று விட்டாரே! அதற்குமேல் என்ன இருக்கிறது? அவரைக் காணுவது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்" என்று கண்ணீரைத் துடைத்தவாறு அவள் திரும்ப, சரியாக அவளவனின் மார்பிலேயே மோதி நின்றாள்.



"கடவுளே..." என்று நெற்றியை தடவியவாறு நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு எதிரில் நின்றிருந்த லியோவைப் பார்த்ததுமே அதிர்ச்சியையும் தாண்டி அழுகை முட்டிக்கொண்டு வர, விழிகளிலிருந்து கண்ணீர் தானாக ஓட ஆரம்பித்தது.



லியோவுக்கும் அவளைப் பார்த்ததுமே தன் மொத்த ஏக்கத்திற்கு பதில் கிடைத்தது போலிருக்க, இருந்தும் முகபாவனையை உடனே மாற்றியவன், "இங்க ஒளிஞ்சிருந்து என்ன பண்ற?" என்று கேட்டான் இறுகிய குரலில்.



அவளோ பதிலெதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, வழக்கம் போல் அவளின் பார்வையில் தடுமாறியவன், "அது... அது வந்து... நான் நாளைக்கு என் நாட்டுக்கு போறேன். திரும்பி வருவேனா என்னன்னு தெரியல. அதான்..." என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, யாழ்மொழியோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



அழுகை தொண்டையை அடைக்க, கீழுதட்டைக் கடித்து அதை அடக்கிக்கொண்டவள், "ம்ம்... ஆனால் என் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிந்தால் போதும் அதிகாரி. தங்களுக்கு என் மேல் துளியும் காதல் இல்லையா?" என்று குரல் தழுதழுக்க கேட்க, அந்த கேள்விக்கு அவனிடமே பதில் இல்லை.



ஒத்துக்கொள்ள அவனுடைய மனம் தடுத்தது என்றால், அதை மறுப்பதற்கு அவளுடைய பார்வையும் கண்ணீரும் தடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவன் திணற, அவனின் தடுமாற்றமே அவள் எதிர்பார்த்த பதிலை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.



குறும்பாக இதழ் வளைத்து சிரித்த யாழ்மொழி, "தேசம் திரும்பும் வரை தங்களுக்காக காத்திருப்பேன் அதிகாரி" என்றுவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காது அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளை வெறித்துப் பார்த்திருந்தவனின் இதழ்களோ தன்னை மீறி மெல்ல புன்னகைத்தன.



***************

தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 இந்த book பத்தி சொல்லனும்னா,

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.

காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.

இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்?

Happy reading 😍

IN link 👇
https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇
https://www.amazon.com/dp/B0FVF3NGM2
 
அத்தியாயம் 21






அடுத்தநாள் மனம் முழுக்க பாரத்தோடு லியோ தன் நாட்டிற்கு திரும்பியிருக்க, அவனின் நினைவுகளால் வாடிப் போனாள் யாழ்மொழி என்றுதான் சொல்ல வேண்டும்.



'நிச்சயமாக அவர் என்னைத் தேடி வருவார், ஒருவேளை வராமல் போனால்... அவருடைய நினைவுகளே போதும் நான் வாழ' என்று மட்டும் தனக்குள் நினைத்துக்கொண்டவள் அவனுடைய நினைவுகளோடு நேரத்தைக் கடத்த, அதேநேரம் தன் அறை ஜன்னல் வழியே தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் இந்திரா.



"வீராவை நான் திருமணம் செய்தால் தந்தை ஆட்சியையே விட்டு விடுவதாக சொல்கிறார் என்றால், ஒரு போதும் தன்மானத்தை இழக்க மாட்டேன் என்று விதாண்டாவாதம் செய்கிறான் அவன். நானும் என்னதான் செய்வது, இருவருக்குமிடையில் சிக்கித் தவிப்பது என்னவோ நான்தான்'



என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள் சட்டென அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.



வேகமாக சென்று அவள் கதவைத் திறக்க, உள்ளே வந்த அரசர் வேந்தனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, அவருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்துக்கொண்ட இந்திரா தந்தையின் மடியில் தலையை சாய்த்துக்கொண்டாள்.



"நான் சொன்னதைப் பற்றி சிந்தித்தாயா இந்திரா?" என்ற வேந்தனின் கேள்விக்கு அவளிடம் அமைதி மட்டுவே நிலவ, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவர், "ஒரு தந்தையாக என் மகள் ஒரு இளவரசனை கரம் பிடிக்க வேண்டுமென்றுதான் நான் ஆசைப்படுவேன், அதில் என்ன தவறு இருக்கிறது? எப்டியிருந்தாலும் எனக்குப் பிறகு நீதான் ஆட்சியை பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் நீ காதலிப்பவன் ஒரு சாதாரண சந்தை வியாபாரி என்று தெரிந்ததும் என் பதவியையே அவனுக்கு கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன். இத்தனை தூரம் நான் இறங்கி வந்தும் நீ அமைதி காப்பது சரியா?" என்றார் கேலிப் புன்னகையோடு.



தந்தை தன் மீது கொண்டிருக்கும் பாசத்தில் மனம் நெகிழ்ந்த பெண்ணவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, "என் மீது உங்களுக்கு கோபம் இருக்கின்றது, அதனால்தான் இத்தகைய முடிவை எடுத்து என்னை சங்கடப்படுத்துகிறீர்கள்" என்று தழுதழுத்த குரலில் சொல்ல, வாஞ்சையோடு மகளின் தலையை வருடினார் அவர்.



"உன் மீது கோபம் என்றால், உன் காதல் விவகாரம் தெரிந்ததுமே உன்னை அரண்மனையை விட்டு வெளியேற்றி இருப்பேன். ஆனால், எனக்கே இருக்கும் ஒரே மகள் நீ, உன் தாயிற்கு கொடுத்த வாக்குபடி உன்னை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. காதலும் திருமணமும் உன் விருப்பமாக இருக்கலாம் ஆனால், எவரும் உன் முதுகுக்கு பின்னே தரம்குறைவாக பேசிவிடக் கூடாது இந்திரா. என் முடிவைப் பற்றி அவனிடம் பேசு, நல்ல பதிலோடு என்னை வந்து பார் புரிகிறதா?"



என்று வேந்தன் சொல்லிவிட்டு மகளின் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டவர் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனித்து பின் என்ன நினைத்தாரோ!



சட்டென்று நின்றவர் மகளைத் திரும்பிப் பார்த்து, "இந்திரா, இன்னொரு விடயம். இப்போதெல்லாம் யாழ்மொழியின் நடவடிக்கையே சரியில்லை. அவள் ஆங்கிலேயர்களோடு அடிக்கடி பேசுவதை சிலர் பார்த்திருக்கின்றனர். ஒருவேளை என் காதிற்கு அவளைப் பற்றி தவறாக ஏதேனும் செய்தி மட்டும் கிடைத்தால் அவளை கொல்லவும் தயங்க மாட்டேன்" என்று காட்டமாக சொல்ல, அதிர்ந்துப் பார்த்தாள் அவள்.



வேந்தனோ அந்த இடத்தை விட்டே சென்றிருக்க, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவளுக்கு இப்போது முழுக்க முழுக்க யாழ்மொழியைப் பற்றிய சிந்தனைதான் உள்ளுக்குள் சூழ்ந்துக்கொண்டது.



இப்படியே கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்த நிலையில், யாழ்மொழியை அழைத்துக்கொண்டு இந்திரா வீராவை சந்திக்க செல்ல, சோர்ந்த முகத்தோடு எந்தவித பிடிமானமும் இல்லாதது போல் அவளோடு சென்றாள் மற்றவள்.



"அய்யோ யாழ், உன் முகத்தை காண சகிக்கவே இல்லை, சோகமாக இருக்கிறாய் சரிதான், அதற்காக இப்படிதான் முகத்தை வைத்துக்கொள்வாயா?" என்று இந்திரா எரிச்சலாக சொல்ல,



"இளவரசி தங்களுக்கு தெரியாததா? இங்கு ஒவ்வொரு இடத்தைக் காணும் போதும் அவருடைய நினைவுதான் என்னை பாடாய்படுத்தி எடுக்கிறது. அப்படி இருக்கையில், இதில் எங்கு நான் சிரிக்க? முதலில் தேசம் திரும்பியதுமே அவரிடம் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும், இதற்குமேல் தாமதிக்க கூடாது. ஆனால் அரசர் எப்படி ஏற்றுக்கொள்வார் என்றுதான் தெரியவில்லை" என்ற யாழ்மொழிக்கு உள்ளுக்குள் குழப்பமும் பயமும் சூழ்ந்துக்கொண்டது.



தோழியை பாவமாகப் பார்த்தவள், தந்தை தன்னிடம் பேசியதை மறைத்து "ஒருவேளை அரசரோ மக்களோ உன் காதலை ஏற்க மறுத்தால், உன்னவரோடு இந்த தேசத்தை விட்டே சென்றுவிடு, சந்தோஷமாக அவரோடு வாழ், யாருக்காகவும் காதலை மட்டும் விட்டுக்கொடுக்காதே! இந்த வார்த்தைகளுக்கு மறுப்பேச்சு வேண்டாம் யாழ், சொல்வது புரிகிறதா?" என்று அழுத்தமாக சொல்ல, "என்ன! நான் பிறந்த தேசத்தை விட்டு செல்வதா, அது எப்படி முடியும் இளவரசி? அதுவும் தங்களை விட்டு என்னால் எப்படி..." என்றவளின் குரல் கமறியது.



இந்திராவின் விழிகள் கூட சற்று கலங்க, "என்னாலும் உன்னை காணாமல் இருக்க முடியாது தான் யாழ், ஆனால் உன் காதல் விவகாரம் தெரிந்தாலே இங்கு எந்தளவு பிரளயம் வெடிக்குமென்று சொல்ல முடியாது. ஒருவேளை இவர்களுக்காக நீ காதலை விட்டுக் கொடுத்தாலும், பழையதை மறக்காமல் உன் வார்த்தைகளாலேயே கொன்று விடுவார்கள். நான் சொல்வதை கேட்பாய் அல்லவா! அவர் உன்னை அழைத்தால் கேள்விகளின்றி அவரோடே சென்றுவிடு அவ்வளவுதான்" என்றாள் முடிவாக.



யாழ்மொழிக்குதான் இது என்ன சோதனை என்று தோன்றியது.



எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, "யாழ், இங்கேயே காத்திரு. நான் வீராவோடு பேசிவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு இந்திரா அவனின் வீடு இருக்கும் குடிசையை நோக்கிச் சென்றாள்.



அப்போதுதான் சந்தையிலிருந்து வந்திருப்பான் போலும்!



"அம்மா, எவ்வளவு நேரம், எனக்கு பசிக்குது. சீக்கிரம்" என்று வீரா தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க, "பொறுமையே இல்ல இப்போலாம் உனக்கு" என்று எரிச்சல் பட்டவாறு திரும்பிய வைதேகிக்கு வாசலில் நின்றிருந்தவளைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.



"அம்மா..." என்று அவர் பயத்தில் வீராவையும் அவளையும் மாறி மாறிப் பார்க்க, உடனே திரும்பிப் பார்த்த வீராவின் இதழ்கள் புன்னகைத்தன.



"அட இளவரசி, நம்ம வீட்ட தேடி வந்திருக்காங்க, அம்மா, அவளுக்கும் சேர்த்தே கஞ்ச ஊத்துங்க" என்ற வீராவின் வார்த்தைகளைக் கேட்டவாறு இந்திரா அவன் பக்கத்தில் சாதாரணமாக வந்தமர, வைதேகிக்கு பதற்றத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.



"என்ன பேசுற வீரா, மொதல்ல எழுந்து அவங்களுக்கு பாய விரிச்சு கொடு, இளவரசி தரையில் உட்கார்ந்து இருக்குறத யாராவது பார்த்தாங்கன்னா நம்மள கொன்னுடுவாங்க" என்று பெரியவர் பயந்தபடி சொல்ல, "அதெல்லாம் எதுவும் தேவையில்லை அம்மா, ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி சொல்லிவிட்டு செல்லதான் நான் வந்ததே" என்று அவள் சொல்ல, மற்ற இருவரும் கேள்வியாக நோக்கினர்.



"தந்தைக்கு நம் திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை வீரா, ஆனால் அவருடைய விருப்பம் ஒன்றே நீ ஆட்சியை ஏற்க வேண்டும். நான் சொல்வது எதையும் கேட்பதாக இல்லை அவர். விரைவாக உன் பதிலை சொல்" என்று அவள் அவனின் பதிலை ஆர்வமாகக் கேட்க,



வீரா சலிப்பாக விழிகளை உருட்டினான் என்றால், வைதேகிக்கு தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது.



"இந்திரா, இது கொஞ்சமும் நியாயமில்ல, நான் எப்படியோ அப்படியே என்னை ஏத்துக்குதுதானே முறை, ஒரு சாதாரண பழ விக்கிறவன போய் நாட்ட ஆழ சொல்றது முட்டாள்தனம். எனக்கு இதுல கொஞ்சமும் உடன்பாடு இல்ல" என்று அவன் முடிவாக சொல்ல, "இளவரசி, நான் இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எனக்குன்னு இருக்குறது இவன் மட்டும்தான். ஒருவேள உங்க மேல ஆசைப்பட்டுட்டான்னு அரசர் வேற ஏதாவது திட்டத்தோட..." என்று அதற்குமேல் பேசாமல் சங்கடத்தோடு தலை குனிந்துக்கொண்டார் வைதேகி.



இந்திராவுக்கு அவர்கள் சொல்ல வருவது நன்றாகவே புரிந்தது.



"இல்லை அம்மா, தாங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. என் தந்தை கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டார். அவரைப் பொறுத்தவரை என்னை ஒரு இளவரசனுக்கு மணம் முடித்து கொடுக்க வேண்டும் அவ்வளவே! சாதாரண பழ வியாபாரியாக நீர் என்னை மணப்பதை விட இந்த நாட்டு அரசனாக நீர் என்னை மணக்க வேண்டுமென்று எண்ணுகிறார். அதில் என்ன தவறு இருக்கிறது?



இத்தனை தூரம் தந்தை எனக்காக பேசுகிறார் என்றால் நாமும் அவர் ஆசையை மதிக்க வேண்டுமல்லவா வீரா? தயவு செய்து புரிந்துக்கொள்!" என்று அவள் பேசிக்கொண்டே போக, தன் முன்னே இருந்த உணவுத் தட்டை தூக்கியெறிந்தான் அவன்.



"போதும், இதோட நிறுத்து! அதான் எனக்கு இந்த பதவில எல்லாம் ஆசை இல்லன்னு சொல்றேன்ல, ஆட்சிய கொடுத்து என்னை அடிமை மாதிரி வச்சுக்கலாம்னு பார்க்குறாரா? இங்க பாரு, நான் இந்த சந்தையில வேலைப் பார்க்குற ஒருத்தன்னு தெரிஞ்சே தானே உன் மனச பறிகொடுத்த, இதே வியாபாரியாதான் நான் உன்னை கட்டிப்பேன். உன்னால முடியாதுன்னா அரசரோட ஆசைப்படி ஒரு இளவரசனையே நீ கட்டிக்கோ! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல"



என்று வாய்க்கு வந்ததை கோபத்தில் அவன் பேசிவிட, தன்னவனை அதிர்ந்துப் பார்த்தவளுக்கு அவனின் வார்த்தைகளில் விழிகள் கூட கலங்கிவிட்டன.



"என்ன பேசுற வீரா?" என்று வைதேகி மகனை அதட்ட, தன்னவனின் நாடியைப் பற்றி தன் முகம் நோக்கித் திருப்பியவள், "நிஜமாகவே உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையா வீரா" என்று கேட்டாள் தழுதழுத்த குரலில்.



ஆனால் அப்போது அவனுக்கு இருந்த கோபத்திற்கு அவளுடைய கலக்கமான முகமும் குரலும் அவனின் மூளைக்குள் பதியவே இல்லை.



"ஆமா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, போதுமா?" என்று முகத்திற்கு அடித்தாற் போல் சொன்னவன் அவளின் கரத்தை உதறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, "அவன தப்பா எடுத்துக்காதம்மா, அவன் ஏதோ கோபத்துல பேசிட்டான்" என்ற வைதேகிக்கும் மகனின் செயலில் ஒரு மாதிரியாகிப் போனது.



"பரவாயில்லை அம்மா, நான் வருகிறேன்" என்று குரல் கமற சொன்னவள் முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேற, இதற்கிடையில் இந்திராவுக்காக காத்துக்கொண்டு நின்றிருந்த யாழ்மொழிக்கு லியோவின் நினைவுதான்.



அவனை முதன் முதலாக சந்தித்தது இந்த சந்தையில் அல்லவா!



அந்த நினைவுளை மீட்டிப் பார்த்தவாறு அவள் நின்றிருக்க, திடீரென பின்னால் கேட்ட குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.



அவளெதிரே வில்லியம் விஷமப் புன்னகையோடு நின்றுக்கொண்டிருக்க, அவனைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.



மூளை எச்சரிக்கை செய்ய, வேகமாக அங்கிருந்து நகரப் போனவளின் முன்னே கை நீட்டி தடுத்தவன், "வெயிட்! இப்போ எதுக்கு என்னை பார்த்து இவ்வளவு பயப்படுற, நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் கிடையாது, முன்னாடி நடந்ததுக்கு என்னை மன்னிச்சிரு" என்று முன்னரை விட தமிழிலில் சற்று தெளிவாகவே பேச, யாழ்மொழிக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.



அவனை மேலும் கீழும் அவள் ஆச்சரியமாகப் பார்க்க, "ஐ அன்டர்ஸ்டேன்ட், இங்க இருக்கணும்னா உங்க மொழிய தெரிஞ்சுக்குறது ரொம்ப அவசியம். அப்போதானே ஐ கென் டோக் டூ யூ. என்ட், நீயும் ஆஃபீசர் லியோவும் லவ்.. ஐ மீன் காதலிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்" என்றான் வில்லியம்.



அவன் பேசுவது பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளை மட்டும் வைத்து அவன் சொல்ல வருவதை அறிந்துக்கொண்டாள் யாழ்மொழி.



"நானும் அதிகாரியும் காதலிப்பது தங்களுக்கு தெரியுமா?" என்று ஆச்சரியத்தோடுக் கேட்டவள், "அவர் எப்போது தேசம் திரும்புகிறார், நலமாக இருக்கிறார் அல்லவா" என்று விழிகளில் ஆர்வத்தோடுக் கேட்க, அவளுடைய வெகுளியான குணத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான் அவன்.



"அவர் உன்ன பத்தி என்கிட்ட சொன்னாரு. ஐ அம் சோ ஹேப்பி, நீ அவருக்கு பொருத்தமா இருப்ப. உனக்கு ஏதாச்சும் சொல்லணும்னு சொல்லு, நான் லெட்டர்.. அது கடிதம்ல எழுதி அனுப்புறேன். பதில் கடிதம் வந்ததும் உனக்கு கொடுக்குறேன்" என்று அவன் பொய்யாக அவளுக்கு ஆசையைக் காட்ட, யாழ்மொழியோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறைதான்.



"உண்மையிலேயே இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, அவரோடு பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும். அதுவுமில்லாமல் முன்னர் நடந்ததை வைத்து நான் தங்களை தவறாக நினைத்திருந்தேன். இப்போது... அத்தனையும் மாறிவிட்டது. இந்த உதவியை மறக்கவே மாட்டேன்" என்று யாழ்மொழி உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டே போக, உள்ளுக்குள் வில்லத்தனமாக புன்னகைத்தான் வில்லியம்.



'இந்த பொண்ண ஏமாத்துறது இவ்வளவு ஈஸியா, ச்சே! இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே இவள ஏமாத்தி நம்ம ஆசைய தீர்த்து இருக்கலாம்' என தனக்குள் நினைத்துக்கொண்டவன், ஒரு தலையசைப்போடு அங்கிருந்து சென்றுவிட, சரியாக வீராவின் குடிசையிலிருந்து தோழியைத் தேடி வந்தாள் இந்திரா.



"இளவரசி..." என்று ஆர்வமாக அவள் அழைக்க, இந்திராவின் முகமோ இருண்டுப் போயிருந்தது.



"என்ன நடந்தது, ஏதாவது..." என்று யாழ்மொழி யோசனையோடு இழுக்க, "ஒன்றுமில்லை யாழ், அரண்மனைக்கு செல்லலாம். எனக்கு களைப்பாக இருக்கிறது" என்று படபடவென சொன்னவள் தோழியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் குதிரையை நோக்கிச் சென்றாள்.



யாழ்மொழிக்கு எதுவுமே புரியவில்லை. போகும் அவளை புருவ முடிச்சுகளோடு பார்த்தவள் அமைதியாக அவளோடு செல்ல, இங்கு தன்னைத்தானே நொந்துக்கொண்டான் வீரா.



'ச்சே! அவ உனக்காக அத்தனையையும் தூக்கி போட தயாரா இருக்கா. ஆனா நீ அவ மனச நோகடிச்சிட்ட வீரா. இது ரொம்ப தப்பு. ரொம்ப ரொம்ப தப்பு. என் மேல கோபத்துல இருப்பா, இனி என்னை தேடி கண்டிப்பா வர மாட்டா. ஆனா, நான் எப்படியாச்சும் இந்திராவ சந்திக்கணுமே. நம்ம ஆளுங்கள்ல ஒருத்தன் அரண்மனையில காவலாளியா இருக்கான்ல'



என்று நாடியை நீவி விட்டவாறு யோசித்த வீராவோ தனக்குள் ஒரு திட்டத்தைப் போட, அவனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.



***********

தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌 இந்த book பத்தி சொல்லனும்னா,

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஆரன் பெரும் இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்க, அவனை சந்திக்கக் கூடாத இடத்தில் காண்கிறாள் கதாநாயகி ஐரா ஸ்மிரித்தி.

காலம் அவனோடு அவளை நெருக்கமாக்க, இவனோ வேறு ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறான். ஒரு முக்கோண காதல் ஆரம்பமாக, அடுத்து அடுத்து என்று இதயங்கள் நொறுங்க, பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளோடு நகரும் இக்கதைக்களம்.

இத்தனையும் தாண்டி துரோகமும் தலை தூக்க, அதையும் ஏற்று இணையுமா இவர்களின் காதல்?

Happy reading 😍

IN link 👇https://www.amazon.in/dp/B0FVF3NGM2

USA link 👇

https://www.amazon.com/dp/B0FVF3NGM2
 
அத்தியாயம் 22








அதேநேரம் இங்கிலாந்தில்,



ஜன்னல் வழியே மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அதிகாரிகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் லியோ.



"லியோ.. உன்ன எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அங்கயிருந்து வந்ததுலயிருந்து ஒரு மாதிரியாவேதான் இருக்க. சரி அதை விடு, இந்த ஃபைல நீ செக் பண்ணிட்டேன்னா ஆஃபீஸ்க்கு சப்மிட் பண்ணிடலாம்" என்று அரசாங்கத்தில் பணி புரியும் அவனின் தோழன் ஜஸ்டின் சொல்ல, "செக் பண்ணிட்டேன்" என்றுவிட்டு சலிப்பாக விழிகளை உருட்டினான் மற்றவன்.



ஜஸ்டினுக்கு சிறு சந்தேகம் எழ, வேகமாக அதையெடுத்துப் பார்த்தவன், "செக் பண்ணிட்டேன்னு சொன்ன, இதுல நிறைய எரர்ஸ் இருக்கு லியோ. இப்படி மட்டும் சப்மிட் பண்ணியிருந்தா ப்ரெசிடென்ட் நம்மள இங்கயிருந்து துரத்தியே விட்டிருப்பாரு" என்றான் அதிர்ச்சியோடு.



ஆனால் லியோவின் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் வெளிப்படவில்லை.



"ஓ.." என்று மட்டும் சொன்னதோடு அவன் பாட்டிற்கு இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்துக்கொள்ள, மற்றவனுக்கு எல்லாமே புதிதாகத்தான் தெரிந்தது.



"ஆர் யூ ஓகே லியோ, உன்கிட்ட எனக்கு ஏதோ வித்தியாசம் தெரியுது. நீ ரொம்ப சேன்ஜ் ஆகியிருக்க. இங்க திரும்ப வந்ததுலயிருந்து உன்னை கவனிச்சிட்டுதான் இருக்கேன். நீ எதையோ ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்க, உன் கான்சென்ட்ரேட் இங்கேயே இல்ல ரைட்?" என்று ஜஸ்டின் கூரிய பார்வையோடுக் கேட்க, அவனை இறுகிய முகமாகப் பார்த்தான் லியோ.



அவனின் மனக்கண் முன் யாழ்மொழியின் முகம் வந்துச்செல்ல, விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், "அதெல்லாம் ஒன்னு இல்ல, ஐ அம் ஆல்ரைட். ரொம்ப தூரம் ட்ரேவல் பண்ணேன், என்ட் க்ளைமேட் எல்லா எனக்கு ஒத்துக்கல. தட்ஸ் இட்! சும்மா கற்பனை பண்ணி பேசாத, மொதல்ல இங்கயிருந்து வெளிய போ" என்று மேசை மீதிருந்த தாள்களை புரட்டியவாறு சொல்ல, ஜஸ்டினோ சிறிதுநேரம் அவனையே பார்த்திருந்தவன் பின் எதுவுமே பேசாமல் அறையிலிருந்து வெளியேறினான்.



அவன் சென்ற அடுத்தகணமே மீண்டும் யாரோ உள்ளே வருவது போல் சத்தம் கேட்க, "இவன..." என்று பற்களைக் கடித்துக்கொண்டு நிமிர்ந்துப் பார்த்த லியோவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, வார்த்தைகளோ தொண்டைக்குழியில் நின்றுவிட்டன.



"க்ரிஸ்டி..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் அழைத்தவாறு அவன் எழுந்து நிற்க, அவனெதிரே புன்னகையோடு நின்றிருந்தாள் அவனின் பழைய காதலி.



"என்னை பார்க்க வரணும்னு உனக்கு தோனவே இல்லல்ல, இன்னும் என்மேல கோபமாதான் இருக்கியா?" என்று சிறு வேதனை குரலில் அவள் கேட்டதும், நெற்றியை நீவிவிட்டுக்கொண்டவன், "மைக்கேல்" என்றான் சட்டென்று.



உடனே க்ரிஸ்டியின் முகம் மாற, "உன்ன காயப்படுத்தின சாபமோ தெரியல, மைக்கேலும் நானும் பிரிஞ்சிட்டோம். அது ஏன்னு நான் லெட்டர்லயே சொல்லியிருக்கேன்" என்று அவள் பேசிக்கொண்டே அவனின் அருகே வர, அவளுக்காக இருக்கையை இழுத்து அமரக் கொடுத்தவாறு, "லெட்டர்ல மைக்கேல பத்தி நீ சொல்லும் போது எனக்கும் இதேதான் தோனுச்சு, பட் பிரிஞ்சிட்டேன்னு சொல்றதுக்கு உன்னால முடியலயா? ஓகே லீவ் இட்" என்றான் சாதாரணமாக.



க்ரிஸ்டியோ அவனின் முகத்தை கூர்ந்துப் பார்த்தவள் ஒருவித விரக்திப் புன்னகையோடு தலையை குனிந்து கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருக்க, "வாட்?" என்று கேட்டான் லியோ அவளின் அருகே அமர்ந்தபடி.



"இதை பத்தி நேர்ல சொல்லணும்னு நான் நினைச்சதுக்கு காரணம் இருக்கு லியோ. லெட்டர்ல பேசும் போது உன் வார்த்தைகள்ல கோபத்த நான் உணரல, அதனால நீ என்னை மன்னிச்சிட்டேன்னு நான் நினைச்சேன். ஒருவேள நான் மைக்கேல பிரிஞ்சிட்டேன்னு சொன்னா நீ சந்தோஷப்படுவேன்னு..."



என்று அவள் தயக்கமாக இழுக்க, அவளை புருவ முடிச்சுகளோடு பார்த்தவன் பின் இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவாறு முகத்தை திருப்பிக்கொண்டான்.



ஏனோ லியோவின் சிரிப்பும் அவனிடத்தில் தெரிந்த ஒரு மென்மையும் க்ரிஸ்டிக்கு வித்தியாசமாகத் தெரிய, அவனை ஆச்சரிப் பார்வைப் பார்த்தாள் அவள்.



"யூ ஆர் சோ டிஃபெரென்ட் ஃப்ரொம் பிஃபார், நான் காதலிச்ச லியோவா நீ எனக்கு தெரியல. ஏதோ வேற மாதிரி.. ஐ டோன்ட் நோ ஹவ் டூ சே" என்று ஆச்சரியக் குரலில் பேசிக்கொண்டே சென்றவள் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ஒருவேள, இதுக்கு அந்த இந்தியன் கேர்ள்தான் காரணமா, லெட்டர்ல கூட நீ அதிகமா அவள பத்திதான் பேசியிருப்ப. நான் சொல்றது சரிதானே?" என்று கேட்டாள் ஒரு மாதிரியான குரலில்.



அவளின் கேள்வியில் திகைத்துப் பார்த்தவன், "வா.. வாட்? ஆர் யூ மேட்? அப்படியெல்லாம் இல்ல. அவள பத்தி உன்கிட்ட சொல்லியிருக்கேன், பேளஸ்ல வேலை பார்க்குற சாதாரண பொண்ணு, அவள போய் நான் எப்படி க்ரிஸ்டி.. ஆனா அம்மணி என்னை ரொம்ப காதலிக்கிறாங்க. பார்க்க சின்ன பொண்ணு ஆனா வாய் இருக்கே ஏதோ பெரிய மகாராணி மாதிரி ரொம்ப பேசுவா. திட்டினா போதும் உதட்டை கியூட்டா வச்சுகிட்ட ஒரு பார்வை பார்ப்பா என்னை... ஐ அம் டோட்டலி ஃப்ளர்ட். ஆனா அதுக்காக காதலிச்சிர முடியுமா" என்று மூச்சு விடாமல் தன்னவளைப் பற்றி பேசிக்கொண்டே 瑩போக, க்ரிஸ்டியோ விழி விரித்து அவனைப் பார்த்தாள்.



அவளுடைய இதழ்கள் புன்னகைக்க, "இப்போ நான் காதல பத்தி பேசவே இல்ல லியோ. ஆனா அவதான் காரணமான்னு நான் ஒரு கேள்வி கேட்டதும் அவள பத்தியே நீ பேசுற" என்று சொன்னவாறு அவனை நெருங்கி அமர்ந்தவள் அவனின் இடது பக்க நெஞ்சின் மீது கரத்தை வைக்க, அதுவோ அத்தனை வேகமாக துடித்துக்கொண்டிருந்தது.



"இ.. இல்ல, நான் ஏதோ அவள பத்தி.. எனக்கும் அவளுக்கும்.. அது..." என்று அவன் தடுமாற ஆரம்பிக்க, "லியோ, முதல் தடவை உன்கிட்ட பதட்டத்தயும் தடுமாற்றத்தயும் பார்க்குறேன். அதுவும் அந்த சாதாரண சின்ன பொண்ணு உன்ன முழுசா மாத்தியிருக்கா. பட், யூ கான்ட் அக்செப்ட் இட் ரைட்?" என்று இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவனோ வார்த்தைகளின்றி அதிர்ந்த முகமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.



"ஐ திங், அவ உன் வாழ்க்கையில வந்ததாலதான் நீ லெட்டர்ல என்கிட்ட ரொம்ப சகஜமா பேசியிருக்க. உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சிருக்கு. அவ மட்டுமில்ல நீயும் அவள ரொம்ப காதலிக்கிற, அவ அளவுக்கு.. இல்லன்னா அவள விட அதிகமா கூட இருக்கலாம். உன்னால அவள பிரிஞ்சு இருக்க முடியல" என்று அவள் சொல்லிக்கொண்டே போக, அவள் கரத்தை பட்டென்று உதறிவிட்டான் அவன்.



"ஜஸ்ட் ஷட் அப் க்ரிஸ்டி! நீயா ஏதேதோ பேசுற. என.. எனக்கு அவள பிடிக்கும்தான். ஆனா லவ்.. அதெல்லாம் இல்ல, எனக்கு லவ் வேணாம்" என்று அழுத்தமாக சொன்னவனைப் பார்த்து அவள் சிரிக்க, அவளை முறைத்துப் பார்த்தான் லியோ.



"நான் உன் கூட ரொம்ப வருஷம் இருந்திருக்கேன், இப்போ நாம பிரிஞ்சிருக்கலாம். பட் உன்ன பத்தி எனக்கு தெரியாம இல்ல. நீ அந்த பொண்ண ரொம்ப லவ் பண்ற, ஆனா உன் மனசுக்குள்ள ஏதோ இருக்கு. உன்னை அத ஏத்துக்க விட மாட்டேங்குது தட்ஸ் இட்!" என்று நிறுத்தியவள் அவனை நெருங்கி, அவன் கரத்தைப் பற்றி அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள்.



"நான் பண்ண அதே தப்ப நீயும் பண்ண கூடாது லியோ. தட்ஸ் ஐ வான்ட். முட்டாள்தனமா யோசிச்சு அந்த பொண்ண விட்டுராத, ஒரு தடவை கைவிட்டு போயிருச்சுன்னா திரும்ப பெறவே முடியாது" என்றவளின் வார்த்தைகள் விரக்தியோடு வெளிப்பட, பார்வையில் அத்தனை ஏக்கம்.



லியோவுடனான பழைய நினைவுகள் அவளின் மனக்கண் முன் தோன்றி மறைய, "யாழ்..." என்று அவன் மெல்ல முணுமுணுத்ததுமே அவனைப் பற்றியிருந்த கரத்தை விட்டு தள்ளி நின்றுக்கொண்டாள் க்ரிஸ்டி.



"லீவ் மீ அலோன், இங்கயிருந்து கெளம்பு" என்று மூச்சு வாங்கியவாறு சொன்னவன் தலையைத் தாங்கியவாறு அப்படியே அமர்ந்திருக்க, விழிநீரைத் துடைத்துவிட்டு விறுவிறுவென அந்த அறையிலிருந்து வெளியேறினாள் அவள்.



இங்கு லியோவுக்கு தன் மனதை தன்னாலயே கணிக்க முடியவில்லை. இந்த உணர்வுகள் கொடுத்த வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் "ஆஆ...." என்று அந்த அறையே அதிர கத்தியவனின் விழியிலிருந்து ஒரு சொட்டு விழிநீர் வெளியேறி தரையில் விழ, அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம்தான்.



லியோவின் நிலை இவ்வாறு இருக்க, இங்கு கடற்கரைக்கு அருகே காத்திருந்த யாழ்மொழியைத் தேடி வந்த வில்லியம் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்ட, அதை ஆர்வமாக வாங்கிப் படித்தாள் அவள்.



"என்னைப் பற்றி தெரிந்தே அதிகாரி என் மொழியில் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். உண்மையிலேயே என்னால் நடப்பதை நம்பவே முடியவில்லை, இந்த உதவியை செய்ததற்கு நான் தங்களுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறேனோ தெரியவில்லை" என்று சந்தோஷத்தில் அவள் படபடவென பேசிக்கொண்டே போக, வில்லியமோ ஏளனப் புன்னகையோடு அவளைப் பார்த்தான்.



"யூ நோ வாட், உன்னோட அதிகாரி சீக்கிரமா இங்க வர போறதா எங்க ஆளுங்க பேசிக்குறாங்க. ஆனா..." என்று வில்லியம் நிறுத்த, "ஆனால் என்ன? வருவதில் ஏதாவது சிக்கலா என்ன" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.



"அவர் வரதுல எந்த சிக்கலும் இல்ல, நீதான் பிரச்சனையே" என்ற வில்லியமின் வார்த்தைகளில் பெண்ணவளுக்கோ அத்தனை அதிர்ச்சி.



"நானா?" என்ற கேள்வியோடு அவள் சிலையாகி நிற்க, "ஆமா, நீ காதலிக்கிறத அரசர் ஏத்துக்குவாருன்னு நினைக்கிறியா? கண்டிப்பா இந்த மக்களே ஏத்துக்க மாட்டாங்க. பட் யூ டோன்ட் வொர்ரி, உனக்காக நாங்க இருக்கோம். அவர் வந்ததுமே நீ எங்க அரண்மனைக்கு வந்துரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி எங்க நாட்டுக்கு போய் பாதுகாப்பா இருக்கலாம். வாட் டூ யூ சே?" என்று ஏதேதோ பேசிச் சென்றான் அவன்.



யாழ்மொழியோ தீவிரமாக யோசித்தவள், "முதலில் அதிகாரி வரட்டும், அதற்குப் பிறகு நடப்பதை பார்த்துக் கொள்ளலாம்" என்று முடிவாக சொன்னவள், "இது நான் எழுதிய கடிதம், இதை அவருக்கு கொடுத்து விட முடியுமா?" என்று ஆசையோடு நீட்ட, கோபத்தை அடக்கியவாறு அதை வாங்கிக்கொண்டான் அவன்.



யாழ்மொழியோ அந்த காமுகன் கொடுத்த கடிதத்தை உண்மையென நம்பியவாறு அதை தன்னோடு அணைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் செல்ல, போகும் அவளைப் பார்த்தவாறு அவள் கொடுத்த கடிதத்தை கிழித்தெறிந்தான் வில்லியம்.



"அந்த லியோ இங்க வரதுக்குள்ள நான் நினைச்சத நடத்தியிருப்பேன்" என்று அவன் உள்ளுக்குள் நினைத்துக்கொள்ள, இங்கு தனதறையிலிருந்த யாழ்மொழியோ அந்த கடிதத்தை தான் ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தாள்.



வில்லியம் ஒருவரை வைத்து எழுதிய அந்த பொய்யான கடிதத்தை தன்னவன் எழுதியது என நினைத்து அவள் ஆசையாக வாசித்துக்கொண்டிருக்க, அதை ராதா கவனிக்காமலில்லை.



தன் வேலைகளை செய்தவாறு அவள் யாழ்மொழியையே நோட்டமிட்டுக்கொண்டிருக்க, அடுத்தநாள் அறையிலிருந்து தோழி வெளியேறியதுமே அவளுடைய பொருட்களிலிருந்து அதை தேடி எடுத்திருந்தாள் ராதா.



அங்கிருந்த மற்ற பணிப்பெண்களும் இதை கவனிக்க, அதில் எழுதியிருந்ததை வாசித்தவள் மற்றவர்களுக்கும் வேண்டுமென்றே அந்த கடிதத்தை காண்பிக்க, சிலர் கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் ஒருசிலர் கோபத்திலும் ஒருவித பொறாமையிலும் வெடிக்க ஆரம்பித்தனர்.



நடப்பது எதையும் அறியாமல் இந்திராவின் வேலைகளை முடித்துவிட்டு அப்போதுதான் உணவுக்காக யாழ்மொழி வந்தமர, அவளை ஏளனமாக பார்ப்பதும் தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாக இருந்தனர் மற்ற பணிப்பெண்கள்.



ஆரம்பத்தில் தனக்குதான் என்பதை உணராமல் தட்டில் முகத்தைப் புதைத்தவாறு சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் பின் குத்தல் பேச்சுகள் காதில் விழவும் சடாரென நிமிர்ந்துப் பார்த்தாள்.



"ஆரம்பத்தில் அந்த ஆங்கிலேய உயரதிகாரியை வர்ணிக்கும் போது பொங்கி எழுந்தவளே இப்போது அவரிடம் மயங்கிக் கிடப்பது ஆச்சரியம்தான், அப்படி என்ன வசியம் செய்தானோ?" என்று ஒருத்தி கூற, "அவளுக்கு வசியம், நம் தேசத்துக்கு சாபம். எத்தனை பெரிய துரோகத்தை செய்துவிட்டு வெட்கமே இல்லாமல் சாப்பிடுகிறாளே! ச்சீ... மானங்கெட்ட மனிதர்கள்" என்றாள் இன்னொருத்தி.



"இவள் மயங்கியதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவன் இவளிடம் மயங்கியதில்தான் ஆச்சரியமே! எதைக் காட்டி மயக்கினாளோ, எதைக் கொடுத்து தன் பக்கம் இழுத்தாளோ? இவர்களை எல்லாம் தேசத்தை விட்டே ஒதுக்க வேண்டும்" என்று ஒருத்தி வன்மத்தோடு யாழ்மொழியின் விழிகளையே பார்த்த வண்ணம் சொல்ல, அவளோ இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



ராதாவோ உள்ளுக்குள் சிரித்தவாறு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றிருக்க, விழிகள் கலங்க கீழுதட்டைக் கடித்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவள் அவமானத்தில் தலையை குனிந்துக்கொண்டாள்.



ஆனால் வார்த்தைகளால் அவளை நோகடித்தது போதாது போலும்!



வேகமாக அவளிடம் வந்த பணிப்பெண்களில் ஒருத்தி யாழ்மொழி சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை இழுத்து வீசி எறிய, "என்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று கத்தியபடி எழுந்து நின்றவள் மொத்தப் பேரின் தன்னை நோக்கிய பார்வையில் கூனிக் குறுகிப் போய் நின்றாள்.



அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் சுவற்றுக்கு பின்னே நின்று தன்னிலையை நினைத்து கதறியழ, அவளை தேற்றக் கூட எவருமில்லை.



"இதற்குப் பிறகு என்னால் எப்படி இங்கு நிம்மதியாக இருக்க முடியும்? இல்லை.. இல்லை என்னால் முடியாது. நான் வெளியேற வேண்டும். என்.. என்னை அழைத்துச் செல்ல எப்போது வருவீர்கள் அதிகாரி? எப்போது வருவீர்கள்?"



என்று அப்படியே தரையில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அவள் கதறியழ, அன்றிரவு அப்போதுதான் உறக்கம் தழுவியவளாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுக்கொண்டிருந்தாள் இந்திரா.



திடீரென ஒரு நிழல் அவளை சுற்றி நடமாட, உள்ளுக்குள் எழுந்த எச்சரிக்கை உணர்வில் பட்டென்று விழிகளைத் திறந்தவள் தன்னை நெருங்கியிருந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.



*************

மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்.. 🙌
 



இத்தனை நேரம் வீரா பேசியதை நினைத்து உறக்கமின்றி அழுது கரைந்த இந்திரா அப்போதுதான் மெல்ல விழிகளை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, திடீரென அவளுடைய அறைக்குள் நுழைந்தது அந்த உருவம்.



அவளுடைய அறையில் தடுமாறிய அந்த நிழலுருவம் இப்போது உறங்கிக்கொண்டிருந்த இந்திராவை மெல்ல நெருங்க, உள்ளுக்குள் மனம் எச்சரிக்க பட்டென்று விழிகளைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.



"ஆஆ..." என்று அதிர்ச்சியில் கத்தப் போனவளின் வாயை உடனே பொத்திக்கொண்ட வீரா, "எதுக்கு இப்போ கத்துற, அதான் நான்தான்னு தெரியுதுல்ல. அப்பறமென்ன?" என்று பதற்றமாகக் கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் இந்திரா.



தன் வாயை பொத்தியிருந்த அவனின் கரத்தை உதறிவிட்டவள், "என்ன விளையாட்டு இது வீரா, காவலர்கள் யாராவது பார்த்தால் அவ்வளவுதான். முதலில் இங்கிருந்து செல், இல்லையென்றால்..." என்று பொரிந்துக்கொண்டே போக, "அரசருக்கே நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. இதுக்கப்பறம் எதுக்கு நான் ஓடி ஒளியணும்? பார்த்துக்கலாம்" என்றவன் சோம்பல் முறித்தவாறு அவளுடைய கட்டிலில் படுத்துக்கொண்டான்.



அவனை முறைத்துப் பார்த்தவள், "எதுவும் தேவையில்லை, இப்போ எதற்கு நீ இங்கு வந்தாய்? என்னைப் பற்றிதான் தங்களுக்கு கவலையே இல்லையே, என் மீது காதலும் இல்லை. பின் எதற்கு இத்தனை சிரமம். நான் எனக்கு பொருத்தமான ஒரு இளவரசனை தேடி மணந்துக்கொள்கிறேன் போதுமா?" என்று கோபமாக ஆரம்பித்து இறுதியில் அழுகையை அடக்கிய குரலில் முடிக்க, அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் அவன்.



அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது அவள் சென்று விழ, உடனே அவளை கட்டிலில் சரித்து அவள் மீது படர்ந்தவன், "ஏதோ கோபத்துல பேசிட்டேன், அதுக்காக சொல்லி காமிக்காத! நான் சொன்னத விட நீ சொல்லும் போது உள்ளுக்குள்ள வலிக்குது இந்திரா" என்று பாவம் போல் சொல்ல, அவளையும் மீறி அவள் மனம் அவன் பக்கம் சாய ஆரம்பித்தது.



அதை முயன்று கடிவாளமிட்டு அடக்கியவள், அவனின் விழிகளைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு,"என் மன வேதனை யாருக்கும் புரிவதில்லையே, நீயும் சராசரி ஆண்மகன்தான்" என்று வேதனைக் குரலில் சொல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்தான் அவன்.



"என்னை மன்னிச்சிரு, நான் அப்படி பேசியிருக்க கூடாது ஏதோ ஒரு கோபத்துல... ச்சே! நான் ஒரு முட்டாள் இந்திரா. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிரு. நான் வேணா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கவா?" என்று அவன் ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட, "ம்ம்..." என்றாள் அவளும் சிரிப்பை அடக்கிக்கொண்டு.



உடனே தன்னவளை அதிர்ந்துப் பார்த்தவன், "என்ன..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, "நீதானே கூறினாய், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று. ம்ம் கேளு" என்று சொன்னவாறு அவனை தள்ளிவிட்டு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு எழுந்து நின்றாள்.



வீராவோ மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான்.



'வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே வீரா' என்று தன்னைத்தானே நொந்தவாறு அவளை உதட்டைப் பிதுக்கியவாறு பார்த்தவன் வேறு வழியில்லாமல் அவளின் காலை நோக்கி குனியப் போக, உடனே அவனைத் தடுத்தவள் தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள்.



"வேண்டாம் வீரா, நான் சொன்னால் எதை வேண்டுமானாலும் செய்து விடுவாயா முட்டாள்?" என்று அவள் கேட்டதும், "உன் கால்ல விழுறதுல அப்படி என்ன எனக்கு அவமானமாகப் போகுது? உனக்காக என்ன பண்ணவும் நான் தயாரா இருக்கேன்" என விழிகளில் காதலோடு சொன்னவன் அவள் இரு கன்னங்களை தாங்கிக்கொண்டான்.



இந்திராவின் முகமோ அவனின் வார்த்தைகளிலும் பார்வையிலும் செவ்வானமாய் சிவக்க, அதை ரசித்துப் பார்த்தவனுக்கு அந்த அறையின் தனிமையும் இருளின் குளிரும் தன்னவளின் அருகாமையும் உணர்ச்சிகளை கிளறியது.



அவனுடைய உடல் சூடேற, அவளுடைய இதழை நோக்கி நெருங்கியவன் அவளிதழோடு தன்னிதழை வைத்து உரச, பெண்ணவளோ விழிகளை அழுந்த மூடிக்கொண்டு அவனின் ஆடையை இறுக பிடித்துக்கொண்டாள்.



அதற்குமேல் ஆடவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.



உடனே அவளிதழை கவ்விக்கொண்டவன் அதை சுவைக்க ஆரம்பிக்க, இந்திராவும் அவனுக்கு ஈடாக அவனிதழை சுவைக்கத் தொடங்கினாள்.



மூச்சுக்கு கூட அவகாசம் கொடுக்காமல் இருவரும் இதழ் முத்தத்தில் மூழ்கியிருக்க, தன்னவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டவன் மஞ்சத்தில் சரித்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.



வெட்கத்தில் சிவந்த முகத்தோடு அவள் விழிகளை மூடியிருக்க, அவளுடைய கழுத்தில் முகத்தைப் புதைத்தவன் முத்தத்தால் அவளை சிலிர்க்க செய்துக்கொண்டே கரங்களை அவளுடைய மேனியில் தவழவிட்டான்.



அவன் கரங்கள் அவளுடலில் அத்து மீற இந்திராவுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்தது.



அவனுடைய இதழ்கள் அவளுடைய கழுத்திலிருந்து கீழிறங்க, பெண்ணவளும் தடுக்கவில்லை. இருவரின் ஆடைகளும் மெல்ல விலக ஆரம்பிக்க, தன்னிலை மறந்து எல்லையை கடக்க ஆரம்பித்தனர் அந்த காதல் ஜோடிகள்.



அவளுடைய இடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொண்டு அவன் கழுத்தில் அழுந்த முத்தத்தைப் பதிக்க அப்போதுதான் தான் செய்யும் காரியமே வீராவுக்குப் புரிந்தது.



"அடக்கடவுளே!" என்று வெளிப்படையாக அதிர்ச்சியில் கத்தியவன் உடனே அவளை விட்டு விலகி ஆடையை சரி செய்ய, எழுந்தமர்ந்தள் தன்னவனை புரியாமல் பார்த்தாள்.



"என்ன நடந்தது, எதற்கு இந்த பதற்றம்?" என்று அவள் கேட்ட கேள்வியில் தன்னவளை திகைப்போடு பார்த்தவன், "இந்த பதட்டம் உன்கிட்டதான் வந்திருக்கணுமே, சரி பரவாயில்ல விடு! இப்போ இது போதும், கல்யாணத்துக்கு அப்பறம் மீதிய பார்த்துக்கலாம்" என்றான் அவளுடைய கன்னத்தைக் கிள்ளி.



இத்தகைய குணத்தை இந்திரா அவனிடத்தில் எதிர்பார்க்கவே இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்கிறானே!



புன்னகையோடு கலைந்திருந்த மேலாடையை அணிந்தவாறு அவனருகே சென்றவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொள்ள, "சரி நான் போகணும், அப்பறமா பார்க்கலாம்" என்றுவிட்டு ஜன்னல் வழியே குதிப்பதற்காக எட்டிப் பார்க்க அடுத்தகணம் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.



கீழே அவன் செல்லும் வழியில் ஏகப்பட்ட காவலாளிகள் நின்றுக்கொண்டிருக்க, "இப்போ என்ன பண்றது, போச்சு போச்சு" என்று தலையில் அடித்துக்கொண்டு வீரா புலம்ப ஆரம்பிக்க, கத்தியே சிரித்துவிட்டாள் பெண்ணவள்.



"இது தங்களுக்கு தேவைதானா? சரி இருக்கட்டு. இன்றிரவு இங்கேயே உறங்கு, நாளை செல்லலாம். என் அனுமதியில்லாமல் யாரும் என் அறைக்குள் நுழைய மாட்டார்கள் பயப்பட தேவையில்லை" என்று அவள் சொல்லிவிட்டு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.



வீராவுக்கு வேறு வழி தெரியவில்லை. தரையில உறங்கப் போனவன் அவளின் முறைப்பைப் பார்த்துவிட்டு ஒருவித சங்கடத்தோடு கட்டிலில் சென்று அவளருகே படுத்துக்கொண்டான்.



அன்றிரவு முழுக்க வீரா நிம்மதியாக உறங்கினானோ இல்லையோ தன்னவனை அணைத்தபடி நிம்மதியாக உறங்கினாள் இந்திரா என்றுதான் சொல்ல வேண்டும்.



அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.



எந்தவொரு பணிப்பெண்களையும் இந்திரா அறைக்குள் விடவே இல்லை. யாழ்மொழியைத் தவிர.



அங்கு வீராவைப் பார்த்த யாழிற்கு மயக்கம் வராத குறைதான்.



"இளவரசி, என்ன இது? இது பற்றி அரசருக்கு தெரிந்தால் அவ்வளவுதான்" என்று அவள் பதற்றமாகக் கூற, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட வீராவும் இந்திராவும் அப்பட்டமாக அசடுவழிந்தனர்.



"அதனால்தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் யாழ். நீதான் எனக்கு ஏதாவது ஒரு யோசனை சொல்ல வேண்டும்" என்று அவள் பாவம் போல் கேட்க, யாழ்மொழிக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



மூவரும் இந்திராவின் அறைக்குள் ஒவ்வொரு மூலையைப் பிடித்து யோசனையோடு அமர்ந்திருக்க, அவளுடைய அறையை சுற்றி முற்றிப் பார்த்தவன், "என் குடிசையை போல பத்து குடிசைகள சேர்த்தா கூட இந்த அறையை நிரப்ப முடியாது போல" என்று ஆச்சரியக் குரலில் சொல்ல, மென்மையாக புன்னகைத்தாள் அவனவள்.



"தாங்கள் சம்மதம் சொன்னால் மொத்த அரண்மனையும் ஆட்சியும் தங்களுக்குதான், ஆனால் மறுக்கும் போது நானும் என்னதான் செய்ய முடியும்?" என்று இந்திரா சொல்ல, அதற்கு பதில் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டான் அவன்.



இந்திராவின் முகமும் இறுக, இவர்களின் சம்பாஷனைகளை கவனித்துக்கொண்டிருந்த யாழ்மொழியோ, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. இளவரசி இப்போது இவர் வெளியில் செல்ல நினைப்பது உசிதமல்ல. சூரியன் மறையும் வேளை ரகசிய வழிக்கு பக்கத்திலிருக்கும் காவலர்கள் உணவுக்காக சென்றதும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று தன் யோசனையை சொன்னாள்.



அதைக் கேட்ட இந்திராவுக்கும் அவள் சொல்வது சரியென தோன்ற, தன்னவனை கேள்வியாகப் பார்க்க, அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் அங்கிருந்த மெத்தையில் தொப்பென்று படுத்துக்கொண்டான்.



தன்னவனை ஒரு பெருமூச்சோடு பார்த்த இந்திரா, "யாழ், நீ சென்று உன் வேலைகளை கவனி. நான் தந்தையை சந்திக்க வேண்டும். அறைக்குள்ளேயே இருப்பதும் மற்றவர்களுக்கு சந்தேகத்தை தான் தூண்டும்" என்றுவிட்டு, "வீரா, நான் சென்றதுமே கதவை பூட்டிக்கொள், யார் கதவைத் தட்டினாலும் திறக்காதே! புரிகிறதா?" என வீராவின் புறம் திரும்பிச் சொல்ல, பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தான் வீரா.



அதன் பிறகு இந்திராவும் யாழ்மொழியோடு அங்கிருந்து சென்றுவிட, கிட்டத்தட்ட யாழ்மொழி சொன்னது போல் சூரியன் மறையும் வேளை ரகசிய வழிக்கு பக்கத்திலிருந்த காவலர்கள் உணவுக்காக அங்கிருந்து சென்றிருக்க, ஒருவன் மட்டும் காவலுக்காக நின்றிருந்தான்.



"இளவரசி, இதுதான் சரியான சந்தர்ப்பம். இப்போதே வீராவை அழைத்துச் செல்லுங்கள்" என்று யாழ் தகவல் சொல்ல, "இப்படியே அழைத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம், என்ன செய்வது..." என்று தீவிரமாக யோசித்தவளுக்கு மூளையில் மின்வெட்ட, உடனே வீராவைப் பார்த்து முப்பத்திரெண்டு பற்கள் தெரிய சிரித்து வைத்தாள் அவனவள்.



"இந்த சிரிப்பே சரியில்ல" என்று அவன் மிரட்சியாக சொல்ல, அடுத்த பத்து நிமிடங்களில் தன்னை சந்திப்பதற்காக அரண்மனையிலிருந்து வெளியேறும் போது இந்திரா அணியும் மாயாவி ஆடையில் பாவமாக நின்றுக்கொண்டிருந்தான் வீரா.



"எனக்கு வேறு வழி தெரியவில்லை வீரா, இப்போதெல்லாம் தந்தையின் பாதுகாப்பு பலமாக இருக்கிறது. அவ்வளவு இலகுவாக செல்ல முடியாது. அதனால்தான்..." என்று தயக்கத்தோடு அவள் இழுக்க, "இது நமக்குள்ளயே இருக்கட்டும்" என்று சொன்னவன் திடீரென கதவு தட்டப்படும் சத்தத்தில் திடுக்கிட்டுப் பார்த்தான்.



"இந்திரா... இந்திரா..." என்ற அரசர் வேந்தனின் சத்தம் கேட்க, உள்ளேயிருந்த மூவருக்கும் அடி வயிறு கலங்கியது.



"இளவரசி சீக்கிரம் ஏதாவது செய்யுங்கள்..." என்று யாழ்மொழி பதற்றமாக சொல்ல, உடனே வீராவை இழுத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அறை மூலையிலிருந்த அந்த ஒரு மறைவான பகுதி கண்ணில் பட்டது.



நான்கு பக்கமும் பெரிய முந்தானையால் மூடப்பட்டு ஆடை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தைப் பார்த்தவள் உடனே வீராவை அதற்குள் மறைத்து வைத்துவிட்டு வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.



"தந்தையே..." என்று அவள் அழைத்த வித்ததிலேயே விழிகளை கூர்மையாக்கிய வேந்தன் உள்ளே இருந்த யாழ்மொழியை ஒரு பார்வைப் பார்த்தவாறு அறைக்குள் நுழைய, அவளோ மரியாதை நிமித்தமாக தலை குனிந்து ஒரு ஓரமாக நின்றுக்கொண்டாள்.



"இவள் அறையிலிருக்க கதவை பூட்டி வைத்திருப்பதற்கான காரணம் என்ன இந்திரா? என்னிடம் எதையாவது மறைக்கிறாயா என்ன?" என்று அவர் சந்தேகப் பார்வையோடுக் கேட்க, "அதெல்லாம் ஒன்றுமில்லை தந்தையே, காலையில்தானே தங்களை சந்திதேன். இப்போது மீண்டும் என்னை தேடி வந்திருக்கிறீர்களே! ஏதாவது முக்கியமான செய்தியா என்ன" என்று கேட்டாள் அவள் பதற்றத்தை மறைத்துக்கொண்டு.



"ஏன், மகளை சந்திக்க எனக்கு காரணம் வேண்டுமா என்ன?" என்று கேலியாகக் கேட்டவரின் விழிகளுக்கு சரியாக சிக்கியது வீரா மறைந்திருந்த அந்த இடம்.



ஏதோ ஒரு உருவம் அங்கு நிற்பது போல் அவருக்கு தோன்ற, தன் மகளின் நடவடிக்கைகளையும் கூர்ந்துப் பார்த்தாள்.



பதற்றமாக கைகளை பிசைந்துக்கொண்டு அவர் பார்த்த அதே இடத்தை ஓரக்கண்ணால் பார்ப்பதும் இதழை நாவால் அடிக்கடி ஈரமாக்குவதுமாக அவள் தடுமாறிக்கொண்டிருக்க, அரசர் வேந்தனுக்கு ஏதோ ஒன்று புரிய ஆரம்பித்தது.



"என் முடிவைப் பற்றி அவனிடம் கேட்டாயா இந்திரா, ஆட்சியை மறுக்க யாருக்குதான் மனம் வரும்?" என்று அவர் வேண்டுமென்றே இந்த கேள்வியைக் கேட்க, வீராவோ புருவ முடிச்சுகளோடு அவர் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தான்.



"அது... அது தந்தையே, வீராவுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்க விருப்பமில்லை. ஆட்சி வேண்டாமென்று..." என்று இந்திரா இழுக்க, இரு புருவங்களை உயர்த்தி ஆச்சரியப் பார்வை பார்த்த வேந்தனோ ஒரு தலையசைப்போடு அந்த அறையிலிருந்து வெளியேறப் போனார்.



யாழ்மொழியும் இந்திராவும் ஒருசேர நிம்மதி பெருமூச்சுவிட, சட்டென நின்றவர் ஓரக்கண்ணால் வீரா மறைந்திருந்த அந்த இடத்தை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியேறியிருக்க, அதைக் கவனித்த யாழ்மொழிக்கு ஆச்சரியம்.



"அப்பாடா! எப்படியோ தப்பிச்சாச்சு" என்று வீரா சிரித்தவாறு சொல்லிக்கொண்டு வெளியில் வர, "எனக்கு என்னவோ அரசருக்கு தெரியுமென்றுதான் தோன்றுகிறது" என்ற யாழ்மொழி அதே ஆச்சரியத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.



அவள் சொன்னதைக் கேட்ட மற்ற இருவரும் அதிர்ந்து விழிக்க, அன்று இரவுக்குள் வீராவை அரண்மனையிலிருந்து வெளியேற்ற படாதபாடு பட்டாள் இந்திரா என்றுதான் சொல்ல வேண்டும்.



அதேநேரம் இங்கிலாந்தில்,



வேலைக்கு செல்வதற்காக தயாராகி கதவைத் திறக்கப் போன க்ரிஸ்டி, கதவு தட்டப்படும் சத்தத்தில் யோசனையோடு கதவைத் திறந்தாள்.



அடுத்தகணம் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து அவள் விழி விரிக்க, ஒருவித சங்கடத்தோடு அவளெதிரே நின்றிருந்தான் லியோ.



****************



தென்றல் தீண்டும் தாரகை.. எங்களோட நெக்ஸ்ட் டிரெக்ட் புக் இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு.. 🙌

IN link 👇https://www.amazon.in/dp/B0FVF3NGM2


USA link 👇https://www.amazon.com/dp/B0FVF3NGM2


மையவிழிப் பார்வையிலே Is now available in kindle store >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC

USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC
 
Status
Not open for further replies.
Top