அகமாளவந்த அகவாளனே!!
நாயகன் -தமிழறிவாளன்
நாயகி - நறுவீ
தோல்வியில் முடிந்த முதல் திருமணத்தின் கசடுகள் இரண்டாம் திருமணம் மூலம் வடுக்களாகவே இருந்ததா இல்லை வசந்தமா மாறியதா என்பதே கதை...!!
கார்த்திக் மூலம் உண்டான ரணங்களால காயப்பட்டிருந்த நறுவீய தன் தூய அன்பால தமிழ் மாத்தினது ரொம்ப பிடிச்சது...
தமிழோட காதலும் அருமை..நறுவீயின் பக்குவமும் அருமை..
செய்யாத தவறுக்காக நறுவீய எல்லாரும் தப்பா பேசுறதும் பாக்க கஷ்டமா இருந்தது.


.முதல் திருமணம் தோல்வினால ஊர் உலகம் எப்படி கேவலமா பேசும்..அத சமாளிக்க பெற்றோர்கள் கூட துணைநிற்காம தனிமையாய் இருக்கிறது ரொம்ப கஷ்டம்.. அப்படி பட்ட கஷ்டத்துல இருக்கிற நறுவீய தன் தூய நேசித்தால் தமிழ் மாத்துனது சூப்பர்...
இளங்கோ அன்ட் அண்ணி- பிணைப்பு ரொம்ப அருமையா இருக்கு...

காமாட்சி அவங்களும் அம்மாவா யோசிச்சாங்க தவிர பொண்ணோட அம்மா ஸ்தானமா யோசிக்க தவறவிட்டாங்க பட் லாஸ்ட்ல மாறிட்டாங்க...
சுந்தரவல்லி பாட்டி மாதிரி சிலபேர் வாழ்க்கையில் இன்னும் இருக்காங்க.. அவங்களுக்கு நறுவீ கொடுத்த பதிலடியும் சூப்பர்.. அவளுக்கு துணை நின்ற தமிழும் சூப்பர்...
கார்த்திக் சரியான சுயநலவாதி

தான் செய்யறது தப்புன்னு தெரிஞ்சும் பண்ணிட்டு கடைசில தன் மேல் தப்பு இல்லைனு சொல்லிட்டு போயிட்டான்..பட் லாஸ்ட் ல குற்ற உணர்ச்சி இருந்தாலும் அவன நறுவீ மன்னிக்காது சூப்பர்..
நறுவீ பேரன்ட்ஸ்..எந்த சிச்சுவேசன்லயும் தன் பிள்ளைங்களுக்கு ஆதரவாதான் இருக்கனும்றத மறந்துட்டாங்க போல

..பட் லாஸ்ட் வர இவங்க ரியலைஸ் பண்ணல...

கவிதை எல்லாமே சூப்பர்... தமிழின் புசிகேட் மேலான காதல் கவிதை எல்லாமே..


அவர்கள் ஆத்மார்த்தமான அன்பின் அடையாளமா கிடைச்ச தமிழ் இயல் அன்ட் தமிழ் இசை ...

நறுவீயின் அகத்தினை ஆளவந்த(ஆண்ட) அகவாளனான தமிழ்
வெற்றிபெற வாழ்த்துக்கள்..
