டீசர் 1
இதை சற்றும் எதிர்பார்க்காத பெண்ணவள் "சாரி இன்ட்ரெஸ்ட் இல்லை" என்று தலை குனிந்தாள்.
அதற்குப் பின் ராமை அவள் பார்க்கவில்லை. மிருதுளாவும் தன் படிப்பை மட்டும் மனதில் வைத்துக்கொண்டாள் நாட்கள் அப்படியே ஓடியது.
தீடிரென்று ஒரு நாள் கல்லூரியின் சுவற்றின் எல்லா இடத்திலும் "ராம் லவ்ஸ் மிருதுளா(முதல் வருடம்) " என்று எழுதப்பட்டு இருந்தது. இதைக் கண்ட மிருதுளா அதிர்ச்சியில் அழத் தொடங்கினாள் அவளின் தோழிகள் அவளை ஆறுதல் படுத்தினாலும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற பயம் அவளிடம் இருந்தது. ஏனெனில் சிக்கியது இவளின் பெயர் அல்லவா! கிளாஸில் அனைவரும் மிருதுளாவைக் பார்த்துக் கொண்டு அரசல் புரசலாகப் பேசிக் கொண்டிருந்தனர்.