Kamakshi Nagendren
New member
#இரகசியத்தின்_ராகம்
இது ஒரு துப்பறியும் கதை. இடைல கொஞ்சம் காதலும் சேர்த்து குடுத்திருக்காங்க ரைட்டர்.
நாயகர்கள்: இசை தேவ ப்ரியன், சத்ய தேவ ப்ரியன்
நாயகிகள்: மாயா, மதுபாலா
இதில நாயகர்கள் இரட்டையர்கள். இதில தேவா மெக்கானிக், சத்யன் டாக்டர். அந்த டாக்டரோட வேலை செய்யுற பயிற்சி டாக்டர் மாயா தேவாவை லவ் பண்றா. அவ தோழி சத்யனை லவ் பண்றா. இதில தோழிகள் ரெண்டு பேரும் அனாதை ஆசிரமத்தில வளந்து நட்பையும் தாண்டி உறவா பழகுறவங்க. இதில தேவா மேல போ*தை மருந்து கட*த்தல் பழி விழுது. அவன் அதை பண்ணினானா இல்லையா? அப்போ அந்த கடத்தலை பண்ணினது யாரு? அதை எப்படி கண்டுபிடிக்கிறாங்க இதான் கதை.

இதில ரெண்டு ஜோடிகளோட காதலுமே முகம் சுளிக்க வைக்காம இனிமையா இருக்கு. அதில ஒரு ஜோடியோட காதல் முதல்லயே தெரியுது. இன்னொரு ஜோடியோடது கிட்டத்தட்ட கடைசிலதான் தெரியுது. நாயகர்கள் இரட்டையர்கள்னு அனுமானிக்க முடியுது. இதில வில்லனா நாம ஒரு பாதி வரை நினைக்குற ஆள் வில்லனே இல்ல நாம நல்லவன்னு நினைக்குற ஒரு ஆள்தான் வில்லன்னு தெரிய வருது. இதுவும் நம்மளால அனுமானிக்க முடியுது ஒரு பாதிக்கு மேல. ஆனா அதுவுமே விறுவிறுப்பாத்தான் இருக்கு. புனிதமான மருத்துவமனையை போ*தை பொருள் கடத்துறதுக்கு பயன்படுத்தறது பாக்கும் போது அவ்வளவு கோபம் வருது அதுவும் உயிர் காக்க வேண்டிய மருத்துவரே இதுக்கு துணை போறது பாக்கும் போது கொ*லவெ*றி ஆகுது.

இதில ஒரு பெண் கேரக்டரை ஆண் கேரக்டராவே காமிச்சு கடைசில அது பொண்ணுன்னு தெரிஞ்சப்போ செம ஷாக். வருண், யசோம்மா கேரக்டர்ஸும் அவங்க நல்ல செயலால நெஞ்சில நிக்குறாங்க. தேவா, சத்யாவோட பெரிய குடும்பமும் நல்லா இருக்கு.கடைசில பெரியவங்க காதலர்களை வாழ்க்கைல சேர்த்து வைக்க எடுக்கிற முடிவு அதைத் தொடர்ந்த கொண்டாட்டம்னு மனசுக்கு நிறைவா இருக்கு கதை முடிவு.

தன்னோட சுயநலத்துக்காக வாழ வேண்டிய இளைஞர்கள் எவ்வளவு பேர் வாழ்க்கையை இந்த போ*தையால கெடுக்குறாங்கன்னு யோசிக்கும் போது இவனுங்களுக்கு குடுக்கிற தண்டனை இனி ஒருத்தனை இந்த மாதிரி பண்ண விடக்கூடாதுன்னு நினைக்கத் தோணுது. தண்டனைகள் கடுமையாக்கப்படணும். அதே மாதிரி பிள்ளைகளோட பெற்றோர் அவங்களை கண்காணிக்கணும். மாட்டோட மூக்கணாங்கயிறை மரத்தில கட்டி அதை தளர்வா விட்டிருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அது மேயலாம். ஆனா சுதந்திரமா ஓட முடியாது. அது மாதிரி குழந்தைங்களை கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு கட்டி பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களோட கடமை. மொத்த சுதந்திரத்தையும் குடுத்து அவங்க வாழ்க்கைக்கு பெத்தவங்களே சூனியம் வைச்சிடக்கூடாது.

மொத்தத்தில இரகசியத்தின் ராகம் அவ்வப்போது லேசா வெளிய கசிந்தாலும் அதோட இனிமை மாறாம முழுமையா ரசிக்கக்கூடியதா இருக்கு. ரைட்டரோட முதல் கதை அதோட தாக்கம் ஒண்ணு ரெண்டு இருந்தாலும் மொத்தத்தில முதல் கதையை முத்தா குடுத்திருக்காங்க. பிற்காலத்தில பெரிய எழுத்தாளராகவும், இந்த போட்டில ஜெயிக்கவும் வாழ்த்துக்கள்