#நிழலாய்_தொடரும்_நிழல்_விமர்சனம்
இது இலக்க்ஷமணாங்கற பெண்ணை மையமா கொண்ட கதை ❤
இலக்க்ஷமணாவின் குடும்ப வாழ்க்கையையும் சீரியல் கொலை வழக்கையும் சமமாக கொண்டு போனது நல்லா இருந்தது ❤
இயல்பான கதாபாத்திரகள் கொடுத்தது சிறப்பு ❤ எல்லாரும் நல்லவங்கனு சொல்லாம சந்தர்ப்பவாதிகளும் சுயநலவாதிகளும் கூடதான் நம்ம வாழ்ந்தாகனும் சொன்னது நல்லா இருந்தது❤
அசோகன் சுயநலவாதி. ஆனால் தப்பு பண்ணிட்டு அதை வீட்டுல சொல்ல அவன் பட்டப்பாடு இருக்கே அதை நல்லா சொல்லீருக்கீங்க. அவனின் நண்பர்களின் நன்மாறன் நல்ல நண்பன் ❤
அசோகனின் குடும்பபமும் சரி திப்புவும் சரி தன் மகன் தன் தங்கைனு வரும்போது இலெக்க்ஷமணாவையும் அவளின் உணர்வுகளையும் புரிஞ்சுக்காம பேசுறது வெறுப்பு தான் வருது

கனியா சராசரியான பெண். தனக்கு தன் குடும்பத்தில் இருக்கிறவங்க முன் உரிமை குடுக்கனும் நினைக்கிறாங்க. நல்ல வேலை அதுக்காக எந்த வில்லத்தனமும் பண்ணல.
திப்பு இலெக்க்ஷமணாவை புரிஞ்சுக்கவும் செய்றான் அதே சமையம் தன் தங்கைனு வரும்போது வார்த்தைகளால் காயப்படுத்துறான் எரிச்சல் வருது

ஆதி நல்ல தம்பி ❤.இலெக்க்ஷமணா ஆதி பாண்ட் நல்லா இருக்கு. அலெக்ஸின் காதல் அருமை



அவனின் கோபம் அக்கறை அவளையே விட்டுக்குடுக்கிறது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது

இலெக்க்ஷமணா கதாபாத்திரம் நல்லா இருந்தது❤ வேலை திருமணம் குடும்பம் முடிஞ்ச அளவுக்கு எல்லாமே சமமாக கையால நினைக்கிறாங்க. எந்த சூழ்நிலையிலும் தன் கண்ணீரையே காட்டாத பொண்ணு குடும்பமும்னு வரும் போது அழுகறது. ரொம்ப பாவமாகவும் இருந்தது

மற்றவங்க உணர்வுகளை புரிஞ்சுக்குற மதிக்கிற இலைக்ஷமணாக்கு நிச்சயம் அசோகன் சரியான இணையில்லை.
ரொம்ப விறுவிறுப்பான நல்ல கதை ❤ போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
