ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 4- அகமாளவந்த அகவாளனே!

shafnasri

Active member
முதல் திருமணத்தால் உண்டான காயங்களும் வலிகளையும் ஏமாற்றங்களையும் கடந்து அதை ஆற்றும் மருந்தா இருந்ததா நறுவியின் மறுமணம் என்பதே கதை ❤


நறுவியின் முதல் மணம் தோல்வி அடைந்ததால் இந்த உலகம் எப்படி எல்லாம் பேசும் மற்றும் பிரச்சினைனு வந்தா பெற்றோர்களின் ஆறுதல் எப்படி இருக்கும்னு ரொம்பவும் எதார்த்தமா சொல்லீருக்கீங்க ❤


அண்ணி கொளுந்தன் உறவு வித்தியாசமா நல்லா இருந்தது ❣️ அண்ணிகாக அண்ணாகிட்ட சண்டைக்கு போகுறது அழகு 😍💓


அறிவு அவனின் காதல்,புசிக்கேட்னு கொஞ்சுறது, சொல்லப்படாத தோல்வியுற்ற காதலின் வலி, முக்கியமாக கவிதைகள் இவை எல்லாமே அருமை ❤ அறிவின் அப்பா அவனுக்கு கொடுத்த அறிவுரையில் அசந்துட்டேன்❣️ ஒரு காட்சினாலும் அப்பா மகன் பிணைப்பு அவ்வளவு அழகு ❤


கார்த்தி நறுவிக்கு செய்தது அனைத்தும் வன்கொடுமைகள் 😡😡 அவன் மனம் திருந்தி வந்தாலும் அவனை மன்னிக்க முடியாதுனு சொன்ன விளக்கம் நல்லா இருந்தது .


காமாட்சி ஒரு அம்மாவா அவங்க பண்ணது தப்பு சொல்ல முடியல. சுயநலமானாலும் அது என்னை பாதிக்காத வரை எனக்கு ஒன்று மில்லைனு நறுவியின் நிலைப்பாடு நல்லா இருக்கு. பாட்டியும் அவர்களின் பேச்சும் சுத்தமா சரியில்லை🤬🤬


தமிழிசை தமிழியல் பெயர் காரணம் அருமை😍
கார்த்தி நறுவியை திருமணம் செய்யறுதுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான காரணம் சொல்லி இருக்கலாம்னு எனக்கு தோணுச்சு. மிகவும் அழகான கதை ❤


அறிவின் அகமானவள் வாசகர்களின் அகத்தை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 

Fathima rijana

New member
அகமாள வந்த அகவாளனே

நறுவி நம் கதையின் நாயகி. முதல் திருமணம் தோல்வியில் முடிய தமிழறிவாளன் நம் நாயகன் அவளை மறுமணம் செய்கிறான்.

நறுவி அவனை ஏத்துகிட்டாளா அவளோட லைப் எப்படி போகுதுனு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

நறுவி அவளை எல்லாரும் திட்டிகிட்டே இருக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. குழந்தை இல்லைனா எல்லாரும் பொண்ணுங்களை தான் குறை சொல்றாங்க 😒😒😒

பாவம் அவளோட அம்மா அப்பா கூட அவளுக்கு ஆதரவா இல்லாதது வருத்தமா இருந்துச்சு.

அறிவு நறுவியை காக்க வந்த நாயகன். அவனோட காதல் ரொம்பவே அழகா இருந்துச்சு. அவனோட பூனைகுட்டி லவ் செம 🥰🥰🥰

இளங்கோ நவி பாண்டிங் அவ்ளோ அழகா ரசிக்கும் படியா இருந்துச்சு. இளங்கோவை ரொம்பவே பிடிச்சுது. 😍😍😍

கார்த்திக் இவன் எல்லாம் என்ன மனுஷனோ 😡😡😡😡சரியான சுயநல பிசாசு.

இவனை நல்லா தண்டிச்சு விட்ருக்கனும். அவனுக்கு ஜோடி சேர்த்து பொழைச்சு போனு விட்டுடீங்க 😏😏😏

அவன் திருந்தினாலும் என்னால ஏத்துக்கவே முடியல 🤧🤧🤧

கடைசியில் நவி அறிவுக்கு அழகான தேவதைகளை கொடுத்தது மனதுக்கு நிறைவாக இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top