என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் விமர்சனம்..
எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்ற மாதிரி இது சஸ்பென்ஸ்+ ட்விஸ்ட் + லவ் + பிரிவு + நட்புன்னு எல்லாமே சேர்ந்த கதை ..
நாயகன் ஜெயதீரன் வேதநாயகபுரத்தின் போலீஸ் அதிகாரி..ஐந்து வருடங்களுக்கு முன் குழந்தை கடத்தல் கேஸில் தன் மனைவியே தனக்கு எதிரானதால் அவளை விட்டு பிரிந்து வாழ்கிறான்..தன் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபித்தே தன் ஜெய்யுடன் மீண்டும் இணைவேன் என நிற்கும் நம் நாயகி அவன் மனைவி மயல்மொழி ..இருவரும் மீண்டும் இணைந்தார்ளா ? உண்மையான குற்றவாளி யார்? என்பதை ஆசிரியர் சஸ்பென்ஸ் கலந்துசொல்லிருக்காங்க...
விட்ட இடத்திலிருந்து தான் மீண்டும் ஆரம்பிக்கும்ன்ற மாதிரி மறுபடியும் தீரா கிட்டயே அந்த குழந்தை கடத்தல் கேஸ் வருது...முதல் தடவை போல இல்லாமல் தீரன் அதை சரியா தேடி ஆதாரத்துடன் கண்டுபிடிச்சவிதம் அருமையோ அருமை


தீரன் அவனுடைய மனைவி பையனை பிரிஞ்சு வாழ்றது கஷ்டமா இருந்தது...

தன் தந்தைக்காக மயல் பொய் சொன்னதும் கோபம்தான் வந்தது..மயலின் தன் தாய் மீதான தேடல் நம்மை கலங்க வைத்தது..

தாய் தந்தை இருந்தும் அனாதை போல வாழும் வலி அவளின் நிலையை எடுத்துக்கூறியது..ஆனால் இருவரிடம் உள்ள காதல் கொஞ்சம் கூட குறையாம அழகா இருந்தது.
தீரா ஜோதிகா



நட்பு சூப்பரோ சூப்பரு... சைட் கேரக்டர் யாராவது ஸ்கோர் பண்ணமுடியுமா


அட ஆமாங்க நம்ப ஜோதிகா செம்மயா ஸ்கோர் பண்ணிட்டாங்க

ஜோதிகா புலம்புறதும் தேன்மொழிய பார்த்து பம்முறதும்


ஆனால் தன் நண்பனுக்காக எப்போதும் உறுதுணையாக நின்னாங்க..
முகில் கிருபா நட்பும் அருமை..அதேபோல முகில் கயல் காதலும் செம்ம..மயலோட அக்கா தான் இந்த கயல் ..இதுங்க ரொமான்ஸ் சீன்ஸ்லாம்

கிருபா மலர் ஜோடியும் சூப்பரு...
நான் கூட பயந்துட்டேன் கயலுக்கு இப்படி ஆகிடுச்சேன்னு

ஆனா நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கல..
ராம்பிரசாத்தான் இதுக்கெல்லாம் காரணமா இருப்பாருன்னு எல்லாரையும் கெஸ் பண்ண வச்சி கடைசில ட்விஸ்ட் டா வில்லன்யாருன்னு வச்சது அல்ட்டி
ஆனால் ராம்பிரசாத் பாவம் மனுசன் உடைஞ்சுட்டாரு.. ஆரம்பத்துல இருந்து தப்பானவராதெரிஞ்சது..ஆனால் இதை கண்டுபிடிக்க ஜெய்ய வரவழைக்க மனுசன்போட்ட திட்டம்தான் இதுன்னு தெரிஞ்ச அப்றோம்தான் இவருமேல நம்பிக்கை வந்தது..
வில்லன் யாருன்னு கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க பிரண்ட்ஸ்
ஆனா நான் இதற்காகத்தான் வில்லன் இப்படி பண்ணேன்னு சொல்லும் போது இப்படிலாம்மா மனிதர்கள் இருப்பாங்கன்னு தோணுச்சு..இதுவும் ஒரு வகையான பைத்தியக்காரத்தனம் தான்..ஆனால் இறுதியில் கிடைத்த தண்டனை சிறப்பு...
கதாபாத்திரங்களும் கதையின் நகர்வும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சுவாரஸ்யமானதாகவே இருந்தது...
எங்கள் உள்ளங்களை ஈர்த்த பூமுகமாக ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!