ஆழகாலனின் காதல் நேசம் விமர்சனம்
இது ஆன்டி ஹீரோ ஆன்டி ஹீரோயின் சேர்ந்த கதை..
நாயகன் கரிகாலன் நம்பர் ஒன் பிசினஸ்மேன்..ஆன்டி ஹீரோக்கு உள்ள பத்து பொருத்தமும் பக்காவா இருக்க கேரக்டர்.. அவனை போலவே தான் நந்தினியும் தாய் தந்தை இல்லாம சின்ன வயதிலிருந்தே வளருவதால் மென்மைன்னா கிலோ என்ன விலைன்னு கேக்குற ஆளு..பக்கா ஆன்டி ஹீரோயின்

..கரிகாலனை விட தான் பிசினஸ்ல முதல் ஆளாக வரணும்னு நினைக்கிறவ ..இரண்டு பேரோட தாத்தாவான ராஜேந்திரனும் அர்ஜூனனும் நண்பர்கள்..இவங்க இரண்டு பேருக்கும் திருமணம் செய்ய நினைக்கிறாங்க..ரெண்டு பேருக்கும் விருப்பமேஇல்லை..
ஒரு பிரச்சினையில் கரிகாலனின் தங்கை சுனிதா தன் அண்ணணுக்காக நந்தினியை அடிச்சிடுறாங்க..நந்தினி பதிலுக்கு சுனிதாவுக்கு அடிக்க வர அது கரிகாலன் மேல விழுந்துடுது..ரெண்டு பேருக்கும் பழிவாங்கனும் தோண நந்தினி சுனிதாவ அவளுடைய பாடிகார்ட் சுந்தர் கூட சேர்த்து வச்சு தவறான வீடியோ எடுத்து பரப்பிடுறா.. இதனால ரொம்ப பாதிக்கப்படுறா சுனிதா.. தன் தங்கைக்காக நந்தினியின் தங்கை உமையாளின் வீடியோவை பரப்பிடுறான் கரிகாலன்.
நந்தினி கரிகாலன் இவர்களில் மோதலின் முடிவு என்ன ? நந்தினி கரிகாலன் திருமணம் நடந்ததா ? நந்தினி தன் தவறை உணர்ந்தாளா? விடை கதையில்...
நந்தினி ரொம்ப ரக்கர்ட் கேர்ள்..இவ சுனிதாக்கு பண்ணது ரொம்ப தப்பு தான்..எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்க மாதிரி நந்தினியின் வீக்னெஸ் அவள் தங்கை உமையாள்...உமையாளுக்காக அவ பண்ண விஷயங்கள் எல்லாமே நல்லா இருந்தது..அக்கா தங்கை பாசம் ஓவர்டேக் பண்ணிடுச்சு..தன் தங்கையை காப்பாற்ற சின்ன வயதிலிருந்தே அவ பண்ண விசயங்கள் எல்லாமே அருமை..எல்லாமே பண்ணாலும் தன் தவறை அவள் உணர்ந்து சுனிதா கிட்ட மன்னிப்பு கேட்கவே இல்லை அது பண்ணியிருக்கலாம்னு தோணிச்சு..
இப்படி இருக்க நம்ம நந்தினியையும் காதலிக்கும் ரோஹன்..நந்தினிக்காக அவன் பார்த்து பார்த்து செய்த விஷயங்கள் எல்லாமே படிக்க அருமையா இருந்தது..ரோஹனின் நந்தினி மீதான காதல்

எந்த சூழலிலும் அவளை விட்டுக்கொடுக்காத பாங்குன்னு இவனின் காதலும் அழகு..
கரிகாலன் சுனிதா பாசம் நல்லா இருந்தது.. உமையாள் மீதான அவனின் காதல் அவங்க ரொமான்ஸ்லாம் அவ்வ்வ்


என்னடா டெரர்ரா இருந்தவன் சட்டுன்னு சாக்லேட்பாயா மாறிட்டான் அவன் ட்ரான்ஸ்பர்மேஷன்


உமையாள பார்த்து ஆள் பிளாட்


உமையாள் கரிகாலனின் இருவரின் ஒருதலைக்காதலும் சிறப்பு..உமையாள் நந்தினி பிணைப்பு

உமையாளின் நந்தினி மீதான பாசம் உமையாள் வீரா அக்கா தம்பி பாசம்னு எல்லா கேரக்டரும் சூப்பர்ப்பா
சுனிதா மீதான வீராவின் காதல் அவளை புரிந்துகொண்ட விதம்..வீரா யாருன்றதை பிரேக் பண்ண விதம் நல்லா இருந்தது..
விதுனா இவ என்ன பொண்ணு..சுனிதாக்கு தெரியாமல் நடந்த தவறுக்காக இவள் அவளை திட்டிய விதம் பிடிக்கல

லாஸ்ட் டா சுனிதா இவளுக்கு திருப்பி கொடுத்தது சூப்பரு ..
தன் தங்கை உமையாளை காக்க போராடுகிறாள் நந்தினி,
ஆடுகளத்தில்
களத்தின் நாயகியாய் உமையாள்
சக்கரவியுகம் போல நந்தினி
சூத்திரதாரியாய் கரிகாலன் இருக்க
களம் எப்படி ஆட்டம் கண்டது ? இதை ஆசிரியர் நல்லா சொல்லி இருக்காங்க ...
சச்சிதானந்தா சுவாமி கேரக்டர் லாஸ்ட்டா வந்தாலும் அவரை எதுக்காக கொண்டுவந்தாங்கன்னு யோசிச்சேன்.பட் எப்படியோ சரியா வந்துட்டு .. சேகர் இவரெல்லாம் என்ன தகப்பனோ


மோதிக்கொண்ட இரு சிங்கங்களையும் தங்கள் காதலினால் கட்டுவிக்கின்றனர் உமையாளும் ரோஹனும்

ஆழகால விசத்தை போலத்தான் நந்தினியின் உமையாள் மீதான பாசம்
ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!