ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 20- நேச முகம் மலராதோ

நேச முகம் மலராதோ

அர்ஜுன் நம் நாயகன் அவனோட அக்கா சூர்யா சின்ன வயசுலேயே காதலிச்சு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிறா. அப்புறம் தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சு குழந்தையோட அவனை விட்டு அம்மா வீட்டுக்கு அவளை கூட்டிட்டு வந்துடுறாங்க.

அவ லைப்க்கு குழந்தை இடைஞ்சலா இருக்கும்னு குழந்தையை அர்ஜுன் அப்பா அவரோட பிரண்ட் மாணிக்கத்துகிட்ட கொடுத்து வளர்க்க சொல்லுறாரு. சூர்யா குழந்தை போனதும் அதை மனசுக்குள்ளயே வைச்சு தேடுறா.

அவளுக்கு செகண்ட் மேரேஜ் பண்ணி வைச்சுடுறாங்க. அவளோட மன நிலைமை தெரியாமல். அந்த லைப்பும் தோல்வியில் முடிஞ்சுடுது. விரக்தியில் குடிச்சிட்டு எல்லார் கூடவும் சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருக்கா.

அர்ஜுன் அவ பொண்ணை கூட்டிட்டு வந்தா சூர்யா மாறிடுவானு அவளை தேடி போறான். அங்க போய் அவளை பார்க்குறான்.

பல்லவி நம் நாயகி. அவளுக்கு மாணிக்கம் கல்யாணம் பேசி இருப்பாரு. அர்ஜுன் அதிரடியா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துடுறான். பல்லவி பிடிக்காமல் அர்ஜுன் கூட வரா. சூர்யா திருந்தினாளா? பல்லவி சூர்யாவை அம்மாவா ஏத்துக்கிட்டாளா? அர்ஜுன் கூட சந்தோசமா வாழ்ந்தாளானு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

பல்லவி பிடிக்காமல் அர்ஜுனை கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அவன் கூட சேர்ந்து வாழும் போது அவன் யாருனு தெரிஞ்சு அர்ஜுனை விட்டு போய் அர்ஜுனை சுத்தலில் விட்டு அப்புறம் சேருறது ஸ்டோரி சூப்பரா இருந்துச்சு.

மாணிக்கம் ஷீலா ரெண்டு பேரும் பல்லவியை தன்னோட பிள்ளையா அவ்வளவு பாசமா வளர்த்து அர்ஜுனை புரிஞ்சுகிட்டு அவனோட அனுப்பி வைக்குறது நல்லா இருந்துச்சு.

அர்ஜுன் அதிரடியா பல்லவியை கல்யாணம் பண்ணி அவளோட வெறுப்பை சம்பாதித்து அப்புறம் லவ்ல விழுறது எல்லாம் நல்லா இருந்துச்சு.

ஸ்டோரி படிக்க சூப்பரா இருந்துச்சு.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
நேச முகம் மலராதோ


கவிசெளமி



இக்கால தான்தோன்றி தனமான இளம் பெண்களின் பிரதிநிதியாக வலம் வரும் நாயகனின் அக்கா.


பெற்றோரின் பேச்சை கேட்காது,திருமணம் செய்து அதையுமா துறந்து ,தன் குழந்தையும் இழந்து,அதன் தாக்கத்தால் அவள் பாதை தடம் மாறுகிறது.


அக்காவை நல்வழிப்படுத்தவும்,அவள் வாழ்க்கையை நிம்மதியாக வாழ தன் வாழ்க்கையை பணயம் வைக்கின்றான் நாயகன் அர்ஜீன்.


பிறந்த குழந்தையாக தொலைந்த அக்காவின் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவளை காண செல்கிறான்,விபரம் கூறி உதவி கோறி அழைத்து வர..


ஆனால் அங்கோ அவளுக்கு திரமணம் நிச்சயம் செய்து இருக்க செய்திருக்க, செய்வது அறியது திகைத்துவிடுகிறான்



சிலபல தடுகிடுதத்தங்கள் செய்து திருமணமும் செய்து கொள்கிறான்,அவளுக்கும் தனக்குமான உறவை மறைத்து


பெண்ணவளுக்கு அவன் மீது பிடிப்பும் பிடித்தமும் இல்லை.

தன் பெற்றோரின் மீதும் கோபம்…நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தி, அப்படியென்ன இவன் செய்தான், இவனுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்று…



பிடிக்காமல் நடந்த திருமணம் ,அதனால் யாரோடும் ஒட்டமுடியாமல் தடுமாற, ஒருவாறு அர்ஜீனின் காதலை புரிந்து வாழ்க்கையை ஏற்கும் நிலையில் இதற்கிடையில் சூர்யா வேறு குடித்ததுவிட்டு வர அவளை அந்நிலையில் காண‌ இதென்ன என அவளால் அங்கே ஒட்டவே முடியாமல், அர்ஜீனின் மீது கோபம் ஏகபோகமாக வளர்கிறது.





தன் அக்காவின் செயல் நாளுக்கு நாள் மோசமாவதை உணர்ந்து அவளிடம், அவள் மகளை எப்படியாவது கண்டுபிடித்து ஒப்படைக்கிறேன், இவ்வாறு இருக்காதே என சண்டையிட்டு கோபபட்டாலும் பல்லவியின் மனம் சூர்யாவை ஏற்குமா என தெரியாமல் அவளை அக்காவின் முன் நிறுத்த இயலாமல் திண்டாடுகிறான்.



எதேச்சையாக சூர்யாவின் மகள் தான் தான் என அறிய நேர,இங்கே இருக்கவே முடியாது என தன் தாய் தந்தையிடம் அர்ஜீனை பிரிந்து தன் தாய் தந்தையிடம் சென்றுவிடுகிறாள்.




பின்‌அர்ஜீனை சேர்ந்தாளா?

பெற்ற தாயை மன்னித்து ஏற்றாளா?

பெறாமல் பெற்ற தாய் தந்தையாக வளர்த்தவர்களின் நிலை என்ன?

சூர்யா தன் குழந்தையை கண்டறிந்தாளா?

பல முடிச்சுகளை விடையறிய இந்நாவலை வாசித்திடுங்கள்



நேசமுகம் மலராதோ…மணம் வீசும

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖💖💖💖
 
நேச முகம் மலராதோ!

The story follows அர்ஜுன், a successful young man whose home life is constantly troubled due to his sister Surya, who struggles with substance abuse. To save her, Arjun sets out to find பல்லவி and ends up marrying her. Why did he do this? Who is Pallavi, and how does their life unfold after marriage? You’ll have to read the story to find out.
Arjun’s actions and threats toward Pallavi could be explained more clearly, and her emotions could be portrayed in greater depth. Apart from that, it’s an engaging and well-written story.✨❤️
 
Top