ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 20- நேச முகம் மலராதோ

#நேச_முகம்_மலராதோ
#கௌரிஸ்ரிவ்யூ

அர்ஜுன்…..தொழிலில் ரொம்ப சாக்சஸ் ஃபுல்லா இருந்தாலும் வீட்டில் நிம்மதியே இல்ல….

அதுக்கு காரணம் அவன் அக்கா சூர்யா….பள்ளி படிப்பின் போதே காதல், ஓடி போய் கல்யாணம், உடனே குழந்தை, கணவனுடன் சண்டை, பிரிவு என எல்லா துன்பத்தையும் அனுபவிச்சிட்டாங்க…..

இது எல்லாம் சேர்ந்து, அவங்களை மனநலம் குன்ற செய்ய…..அவங்க குழந்தையை கூட அவங்க கவனிக்க மறுக்கறாங்க….

சூர்யா அப்பா, அந்த குழந்தையை மாணிக்கம் கிட்ட கொடுத்து வளர்க்க சொல்றார்…..

சில நாட்களில் குழந்தை இல்லாத வெறுமையும் சேர்ந்து சூர்யாவை தப்பான வழிகளில் வழி நடத்த…..

மொத்த குடும்பமும் அனுதினமும் பிரச்சினைக்களை சந்திச்சு நிம்மதி இல்லாம இருக்காங்க…..

அக்கா அவங்க குழந்தை அவங்க கிட்டையே வந்த சரி ஆக வாய்ப்பு இருக்குன்னு நம்பி அவளை தேட….

அவள் இருக்கும் இடம் வந்தவுடன்…..அக்கா மகள் மேல் காதல் பார்த்தவுடன் அர்ஜுனுக்கு……

பல்லவி,....அவளுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி, அவளை கல்யாணமும் செய்துக்காரன்,......

இனி பல்லவி - அர்ஜுன் வாழ்க்கை?????

அர்ஜுன்…..அவசர கல்யாணம் பண்ணினது வேணா தப்பா இருக்கலாம்….அவனின் காதலும், பொறுமையும், குடும்பத்தின் மீது உள்ள பாசமும் நல்ல இருக்கு…..

பல்லவி….அவன் பண்ணினது தப்பு தான்….ஆன போட்டு படுத்தி எடுத்துட்டா அவனை….

சூர்யா….அவங்க பண்ணின தப்பை அவங்க ரொம்ப லேட்டா தான் உணர்ந்துகிட்டாங்க….

கதை நல்லா இருந்தது ரைட்டர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்து
க்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
நேசம் முகம் மலராதோ..... நாயகி: பல்லவி
நாயகன் : அர்ஜுன்
நாயகனோட அக்கா சூர்யா சிறு வயதிலேயே காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க முதல்மணத்தில் தோல்வி அடைந்து மறுமணம் செய்து அதிலும் தோல்வி அடைந்து போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகிடறாங்க... அவங்களுக்கு ஒரு குழந்தை அதை அவங்க பெற்றோர் பொண்ணு வாழ்க்கைக்கு பிரச்சினை வரக்கூடாது என்று பிரித்து வேற இடத்துக்கு அனுப்பி மாணிக்கம் கிட்ட கொடுத்தடறாங்க..
அர்ஜூன் ஒரு தொழிலதிபர் நாயகன் அக்காவை எப்படியாவது சரி செய்யனும்னு முயற்சி பண்றார்...அக்காவோட குழந்தையை கொண்டு வந்தா அவங்க சரியாகிடுவாங்கன்னு தேட ஆரம்பிக்கிறார். தேடுதல் முடிவில் பல்லவியை சந்திக்கிறார் அவங்க கல்யாணத்தை நிப்பாட்டிட்டு கல்யாணம் பண்ணிக்கிறார்..❤️❤️❤️❤️.பல்லவி பளபளன்னு பாலீஷ் போட்டமாதிரி இருந்ததால் ஐயா ஃப்ளாட் ஆகிறார் இதுவே ஒரு வத்தலோ ,தொத்தலோ, பாட்டியோ ..இருந்தா கல்யாணம் பண்ணி இருப்பியாடாவ்வ்....
🥰🥰🥰பல்லவி அமைதியின் மறு உருவம் சாந்தஸ்வரூபி அப்படி எல்லாம் இல்லீங்கோ சூர்யா பொண்ணு எப்படி இருப்பா மாமனை வச்சு செய்றா...
பல்லவி மனசு மாறி அர்ஜூனை ஏத்துக்கிட்டாலா சூர்யா என்ன ஆனாங்க என்பதே கதை ... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 💐 ❤️ ❤️
 
நேச முகம் மலராதோ!!

இந்த கதையோட நாயகன் அர்ஜூன்.தொழில்ல ரொம்ப சக்ஸஸா இருக்க அர்ஜூனுக்கு வீட்டுக்கு வந்தாலே பிரச்சினை வரிசைகட்டி நிக்குது..இதனால அவனுக்கு‌‌வீட்டுல நிம்மதியே இல்ல.இதுக்கு எல்லாம் காரணம் அவளுடைய அக்கா சூர்யா..சில காரணங்களால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிடுறாசூர்யா.சூர்யாவுடைய போதைப்பழக்கத்திலிருந்து அவளை விடுவிக்க பல்லவிய தேடிப்போறான் அர்ஜூன் ..தேடிப்போன‌ இடத்துல அவளை கல்யாணம் பண்ணி கூட்டி வந்துடுறான்...அர்ஜூன் ஏன் இப்படி பண்ணான் ? பல்லவி யாரு? கல்யாணம் அப்புறம் அர்ஜூன் பல்லவி வாழ்க்கை எப்படி போகுது ? இதற்கான விடைகளை கதைல படிச்சு தெரிஞ்சுக்கலாம்.

சூர்யா அர்ஜூனுடைய‌ அக்கா ..படிக்குற வயசுலயே காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க..மெச்சூரிட்டி இல்லாத‌வயசுல கல்யாணம் பண்ணதால கணவனுடன் சண்டை , குழந்தையும் வர அதைத்தொடர்ந்து விவாகரத்துனு முதல் திருமணம் தோல்வியாகிடுது..இதனால சூர்யா மனசு சரியில்லாமல் இருக்க அவங்க குழந்தையையும் சரியா கவனிக்க தவறிடுறாங்க.அவங்க அப்பா அம்மாக்கு மகளின் எதிர்கால பயம் .அதனால சூர்யாவுடைய‌ குழந்தைய வேறு ஒருத்தவங்ககிட்ட கொடுத்துடுறாங்க..மறுமணமும் பண்ணி அதுவும் தோல்வில முடியுது..இதனால போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிடுறாங்க..எங்க போனாலும் வம்புனு அர்ஜூனுக்கு வீட்டுக்கு வந்தாலே ஒரே பிரச்சினை..இவங்க நடவடிக்கைகளால வீட்டில் யாருக்கும் நிம்மதி இல்லை.

அர்ஜூன் தொழில்ல ரொம்ப சக்ஸஸா இருந்தாலும் அவனுக்கு அக்காவை நினைச்சு கவலைபடுறான்..அவளை எப்படியாவது இதுல இருந்து மீட்கணும்னு நினைக்கிறான்..இதற்கு சொல்யூசனா அவளுடைய குழந்தையை தேடி போறான் ..அர்ஜூன் உடைய அப்பா அந்த குழந்தையை தன் நண்பர் மாணிக்கத்துகிட்ட கொடுத்து வளர்க்க சொல்றார் ..மாணிக்கத்தை தேடி செல்ற அர்ஜூன் அங்க நம்ம பல்லவியை பார்த்ததும் டோட்டல் ப்ளாட் ..🤭🤭🤭 அவளுடைய சம்மதம் இல்லாமலேயே அவளுடைய கல்யாணத்தை நிப்பாட்டி அவ அப்பாவை நிர்ப்பந்தப்படுத்தி அவளை கல்யாணமும் பண்ணிடுறான்..

அர்ஜூன் கல்யாணம் பண்ண விதம் தப்புதான் ..அது எப்படி பல்லவி சீக்கிரமே ஏத்துப்பான்னு நினைச்சான் .. அவளும் சாத்வீக சுந்தரிலாம் கிடையாது.. சூர்யாவோட பொண்ணுல்ல.அவனை படாதபாடு படுத்திட்டா ..ஆனா அதுவும்‌படிக்க நல்லாதான் இருந்தது..🤭🤭🤭

இதற்கிடையில் சூர்யாவும் திருந்த ஆரம்பிக்கிறாங்க ..பல்லவிக்கும் எதிர்பாராத விதமாக உண்மை தெரிய வருது.அவளும் அர்ஜூன் கிட்ட சண்டை போட்டு தன்னோட அம்மா வீட்டுக்கு போயிடுறா..சில பல கோட்பாடுகள் வச்சு இருக்க பல்லவிக்கு சூர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல இருந்து பிடிக்கல .. இவங்கதான் தன்னை பெத்தவங்ன்றத ஏத்துக்க முடியல.இவங்களுக்காததான் அர்ஜூன் இப்படி பண்ணுனான்றதுதான் அவளுக்கு கோவம்..ஆனாலும் சரவெடி மாதிரி🤭🤭பின்னாடியே போயி அர்ஜூன் சமாதானம் பண்ணுறான் ...ஆனா பல்லவி அவனை அலைய விடுறா 😂.. கடைசில பல்லவியும் சமாதானம்ஆகி ஒன்னா ஆகிடுறாங்க..கடைசியில நேசமுகமும் மலர்ந்தது !!

ஆரம்பத்துல சூர்யா மேல் கோவம் வந்தாலும் அவங்களுடைய மனநிலையையும் புரிந்தது..அவங்க பண்ண தப்புக்கு அடுத்தவங்க மேல பழி போட்டு எஸ்கேப் ஆகிட்டு இருந்தாங்க...ஆனாலும் கடைசில கொஞ்சம் கொஞ்சமா தன்னை மாத்தி கிட்ட விதம் எல்லாம் மனசு நிறைவா இருந்தது..👍

மொத்தத்துல ஒரு பீல் குட் ஸ்டோரிப்பா !!

ஆசிரியர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
#நேசமுகம்_மலராதோ_விமர்சனம்

அர்ஜீன் கதையின் நாயகன். தன் அக்கா சூர்யாவின் வாழ்வை சரி செய்ய எடுக்கும் முயற்சி கைகொடுத்ததா இல்லையா என்பதே கதை ❤

சூர்யா பருவவயதில் படிப்பைவிடுத்து காதல் திருமணம் குழந்தைனு வாழ்க்கை திசைமாறிடுது அந்த திருமண வாழ்வும் சரிவரல மறுமணமும் விவாகரத்துல முடிஞ்சுடுது. அதன் விளைவு குடி சண்டைனு வாழ்க்கை நகருது😓😓
சூர்யாவின் நிலைக்கு முழுக்க அவளேதான் காரணம் ஆனால் சுத்தி இருக்கவங்களை காரணமாக்கவது கோபத்தை கொடுக்குது 😏😏

அர்ஜூன் பிடிவாதத்தின் மறுவுருவம். அவங்க அக்கா வாழ்க்கையை சரி செய்ய விருப்பமில்லாமல் பல்லவியை கல்யாணம் பண்ணும் போது எரிச்சல் வருது🤯🤯 அதுகப்பறமும் உண்மை தெரிஞ்சா அவளின் மனநிலை பத்தி யோசிக்காமல் அவளை புடிச்சு வைக்க என்ன பண்ணணும்தான் யோசிக்கறான் 😡

கதை எங்கயும் தொய்வா இல்லை. அடுத்த அடுத்த கட்டத்துக்கு சீக்கிரம் நகருவது சிறப்பு ❤ நந்தா நல்ல நண்பன் ❤

அர்ஜீன் பல்லவியை எதைகாட்டி மிரட்டுறானு இன்னும் தெளிவா சொல்லீருக்கலாம். பல்லவிக்கு உண்மை தெரிஞ்சதுக்கு அப்பறம் அர்ஜீன் பண்ணது தான் தப்புனு யோசிக்கிறாளே தவிர ஏன் என்ன வேணாம்னு சொன்னாங்கனு? யாரையும் கேட்களையே? பல்லவியின் உணர்வுகளை இன்னுமே நல்லா சொல்லீருக்கலாம் அதை தவிர்த்து நல்ல கதை ❤❤

நேசமுகம் மலர்ந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
Top