ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 18- உன்னில் ஒரு நஷா இராவணா

உன்னில் ஒரு நஷா இராவணா விமர்சனம்

இது ஒரு பக்கா ஃபேமிலி லவ் ஸ்டோரி ..

நாயகன் கதிர்நயனன் .நாயகி பிரக்யா உமையாள்..நாயகி பிரக்யா தன் சொந்த குடும்பத்த விட்டு தன்‌கணவனை விட்டு பிரிந்து மூன்று வருடம் அமெரிக்காவில இருக்கா . எதனால் குடும்பத்தை பிரிஞ்சு இருக்கா? அவளுடன் மீண்டும் இணைய அவளை தேடிவரும் அவள் மாமன் நயனன்.. இவர்கள் பிரிவு எதனால் ஏற்படுகிறது? மீண்டும் அவர்கள் எப்படி இணைந்தார்கள் ? விடை கதையில் ..


பிரக்யா ஒரு குழந்தை டாக்டர்..பிரக்யாக்கு தாய் கிடையாது அவளின் சின்ன வயதிலேயே அவளுடைய அம்மா இறந்துடுறாங்க.. ஆரம்பத்துல இருந்து வெறுப்பை மட்டுமே காட்டும் அவளுடைய அப்பா..இதனால‌ அவள் தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டுல இருக்கா ..சின்ன‌‌ வயசுல இருந்தே அவளை பாதுகாக்கும் அவள் மாமன் நயனன் தாயாய் தகப்பனாய் அவளுக்கு எல்லாமுமாய் இருக்கான் ..அவளை டாக்டருக்கும் படிக்க வைக்கிறான்..


ஒரு சூழலில் அவள் கர்ப்பம் என்று தெரியவர அவளை திருமணம் செய்து காப்பாத்துறான் நயனன்..செய்யாத தவறுக்காக பழி சுமக்கறா உமையாள் ..அவள் மேல் சுமத்தப்பட்ட பழி விலகியதா ? உமையாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் ?நயனன் உமையாள் வாழ்க்கை எப்படி போகுது‌அப்படின்றத அழகா சொல்லி இருக்காங்க ரைட்டர் ..❣️


நயனன் அவளுக்கு மாமனாகவும் கணவனாகவும் கண்டிப்பில் அவளின் இராவணணாகவும் இருந்தது எல்லாமே சூப்பரா..அவளுக்கு எல்லா சூழலிலும் உறுதுணையாக இருந்தான் .அவங்க இரண்டு பேரோட காதல் ❣️❣️பிரக்யாவின் மேல் நயனனுக்கு தோன்றும் காதலும் சின்னுவுக்கு தன் மாமனின் மேல் ஏற்படும் காதலும் சூப்பர்ப்பா 💞💞 பிரக்யா தம்பி தங்கைங்களோட சீன்ஸ் ஜாலியா இருந்தது..

பிரக்யா சின்ன வயசுல இருந்தே செய்யாத தப்புக்காக பழி இவள் மேல் விழுகிறதும் அதற்கு எல்லாரும் இவளையே திட்டுறதுலாம் பாவம் ..அதிலும் எப்போடா திட்ட சான்ஸ் கிடைக்கும் அவளை கரிச்சு கொட்டலாம்னு நினைக்கிற அவ சித்தி அவளுடைய அப்பா இவங்கல்லாம் அவளை திட்டும்போது பாவமா இருந்தது 😒😒..எல்லார் திட்டினாலும் அவமேல் தப்பு இருக்காதுன்னு அவளுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தாங்க அவங்க அம்மம்மா பர்வதம்மாள் அன்ட் அவளுடைய மாமா கதிர் நயனன் ..❣️❣️அம்மம்மா பேத்தி பான்ட் சூப்பர்...

அபிராமி - அப்பப்பா தேள் கொடுக்கு போல கூடப்பிறந்த அக்கா பொண்ணுன்ற பாசம் கூட இல்லாம அக்கா மேல இருக்கற கோபம் எல்லாம் வன்மமா மாறி அவளை எப்போ பாரு தன் நாவுன்ற கொடுக்கால கொத்திட்டே இருந்தாங்க 😬😬😬அய்யோ என்ன என்ன பேச்சு ச்சீ என்ன பொம்பளையோனு தோணுச்சு..ஆனா கர்மா இஸ் பூமராங் மாதிரி இவங்க பண்ண தப்புக்கு இவங்க பசங்க மூலமா தண்டனை கிடைச்சது.. ஆனாலும் கடைசிவரை திருந்தவே இல்லை..இவங்களுக்கு தண்டனை கொடுத்து இருக்கலாம்..பெத்துவங்க பண்ணுற தப்பு பிள்ளைங்கல வந்து சேரும்ன்ற மாதிரி இவங்க ஒரு பொண்ண பேசின பேச்சுக்கு இவங்க பசங்க நிலைமை 😢

நீலகண்டன் இவரெல்லாம் ஒரு அப்பாவா 😤.சரியான வன்மகுடோன் ..இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்தல்லாம் மாட்டாங்க..இவரை எல்லாம் நயனன் மாதிரி தான் ட்ரீட் பண்ணணும்..

எல்லாருக்கும் அப்பா பாசமா இருப்பாங்க சித்தி கொடுமை இருக்கும்.. ஆனா இங்க உல்டாவா சித்தி ரொம்ப பாசமா இருந்தாங்க 😃 அப்பா வெறுப்பா இருந்தாரு 😬பூரணி அன்ட் பூர்ணாவின் உமையாள் மீதான பாசம் சூப்பர்ப்பா 👍👍

விசாலினி இவளும் சரியான விசம்தான்.. ஆனா இவளை இந்த அளவு ஏத்தி விட்டது அபிராமின்றதால அவ்வளவா கோவம் வரலப்பா..லாஸ்ட்டா இவளுக்கும் நயனனே வரன் பார்த்து திருமணம் பண்ணி வச்சிடுறான்.

கடைசில வச்ச ட்விஸ்ட்டா உமையாள் கர்ப்பத்திற்கு காரணம் யாருன்றது எதிர்பார்க்கல..என்ன கொஞ்சம் உமையாள்ல போல்ட்டா காட்டி இருக்கலாம்னு தோணிச்சு 🫣உமையாளும் அவளின் ராவணணாகிய அவளின் மாமன் நயனனின் காதலும் முடிவல்ல .. இன்பினிட்டி ♾️


பெரும் காதலாய் ...!!

வளர் நேசமாய்...!!

நனி மோகமாய் ..!!


இவர்கள் காதலும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
உன்னில் ஒரு நஷா இராவணா ♥️

சிறுவயதில் இருந்தே செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கும் பிரக்யா உமையாள் அம்மா இறந்து, அப்பா வேறு ஒரு திருமணம் முடிக்க, தாத்தா, பாட்டி, தாய் மாமன் இடம் வளர்கிறாள், அங்கும் அவள் சித்தி (அம்மா தங்கை) அவள் அம்மா மேல் இருந்த கோவம் அனைத்தையும் இவளை காயப்படுத்தி தீர்த்து கொள்ள,
அவளை காப்பாற்ற ஹாஸ்டல் இல் சேர்க்க,
அங்கும் தவறு செய்யாமலே பழி சுமந்து வீடு வர, தாத்தா அவள் வாழ்கை பார்த்து மாமாவுக்கே திருமணம் முடிந்து வைக்க... அவள் மேல் தவறில்லை என்று உணர்ந்தனரா? அவர்கள் வாழ்கை சந்தோசமானதா?
காரணம் இன்றி அவள் மேல் வெறுப்பை காட்டியவர் நிலைமை?
அதுவே கதை...
கதிர் ♥️ பிரக்யா காதல்
 
உன்னில் ஒரு நஷா இராவணா

பிரக்யா உமையாள், a doctor, has been living abroad for three years, away from her family and hometown. Why? What struggles led her to this life? That is the heart of the story.
Having lost her mother at a young age and never receiving her father’s love, Praghya faces constant hardship. From childhood, she suffers punishment for things she never did and bears the consequences of others’ misunderstandings. Her maternal uncle கதிர்நயனன் protects her from her father’s harshness and guides her through these challenges.

While the plot is gripping, I found the romantic direction a bit difficult to connect with. The story follows the traditional "Thai Maaman" (maternal uncle) marriage trope. Given that Kathirnayanan was her protector and father figure during her darkest childhood years, the shift into a romantic relationship felt uncomfortable for me🙃☹️
 
ஜியா ஜானவியின்

உன்னில் ஒரு நஷா இராவணா



கதிர்…பிரக்யா


தாய் இறந்தபின் தந்தை இருந்தும் சிலபல காரணங்களால்,பாட்டி வீட்டில் வளர்கிறாள் பிராக்யா.



இயல்பிலே துறுதுறுப்பான பெண்ணான பிராக்யா தன் தாய்மாமன் கதிர்க்கு மட்டுமே சற்று பயப்படும் ரகம்,பாசமும் அதிகம்.


ஆனால் அவளது சித்தி இறந்த தன் அக்காவின் மீது பிறந்ததிலிருந்து வளர்த்த வன்மம் ,அக்காவின் மகள் மீது,திரும்ப வார்த்தைகளால் வதைத்து கொண்டே இருக்கிறார்.இதனால் அவளை மேலே படிக்க விடுதியில் விடுகன்றனர்.


இந்நிலையில் கதிருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்தவுடன் ,ஏனோ அவசரமாக கிளம்பி செல்கிறாள்.



காரணம் தெரியாமல் வீட்டினர் குழம்புகின்றனர்.



திடீரென உடம்பு சரியில்லையென விடுதியிலிருந்து அழைப்பு வர, அடித்து பிடித்து செல்கிறான் கதிர்.



அங்கு அவர்கள் கூறும் விடயம் குடும்பத்தில் இடியாய் இறங்குகிறது.



குடும்பத்தையே புரட்டி போட்ட அந்த காரணம் தான் என்னவோ



கதிரின் நிச்சயிக்க பட்ட திருமணம் நின்றுவிடுகிறது

நிற்பதற்கான காரணம் தான் என்னவோ…



எப்பொழுதும் பிரக்யாவை திட்டி கொண்டே வளம் அவருக்கான தண்டனையாக ஆண்டவன் கொடுத்து என்ன???



தாயாவள் தன் வலி பொருப்பாள்…பிள்ளைகளின் நிலையை பொருப்பாளா???



இது அவருக்கான தண்டனையாக இருந்தாலும் அன்புள்ளம் கொண்ட அவர்களின் வாழ்க்கை இப்படி திசை மாறியிருக்க வேண்டாம்.


ஏனோ மனம பிசைகிறது.




ஆம் முக்கியமான ஒருவரை விட்டுவிட்டேமே…பிரக்யாவின்…அப்பா…அவரை பார்த்தாள் ச்ச்சீ பே என தான் சொல்ல தோன்றுகிறது.



விதிவிலக்காக சில சம்பவங்களில் அவளத தந்தையின் இன்னொரு மனைவி அதாவது சித்தி…நெகிழ்வு தான்



உன்னில் ஒரு நஷா இராவணா…உணர்வு குவியல்



வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top