ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

33. அணுவே என் வர(சாப)மாய் !!! கதைக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
33. அணுவே என் வர(சாப)மாய் !!! கதைக்கான விமர்சனங்கள்
 
கதை எண் 33

அணுவே என் வர(சாப)மாய்

ஆரம்பமே தலை சுத்த ஆரம்பித்து விட்டது ???

செம திங்கிங் உங்களுக்கு கொஞ்சம் கூட யூகிக்க முடியாத பல திருப்பங்கள்

தேவா, க்ரிஷ் இருவரின் திருமணத்தில் ஆரம்பிக்கும் கதைகளம் தக்சினதாவம் இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அதை தேவா கண்டு பிடிக்க முயல பல திடிக்கிடும் மர்மங்கள் அரங்கேறும் நிலையில் எல்லாவற்றையும் எவ்வாறு வெளி கொண்டு வருவான்??

அணுவிருந்தா, அணுக்ரிதா, அணுரிதி இவர்கள் பெயரை ஞாபகம் வைக்கவே முதலில் கஷ்டமாக தான் இருந்துச்சு போக போக மிகவும் ஸ்வரசியமாக இருந்தது ??

க்ரிஷ் காதலும், தேவாவின் போசேஸ்ஸிவ் எல்லாம் செம ??

ரிதி, பிரணவ் பிரண்ட்ஷிப், கிரித்திக் இவனின் நியாயமான ஆசை நிறைவேறுமா??

எல்லாம் இடத்திலும் தேவா சிந்தித்து செயல்படுவது செம ?? அணு & தேவா தாயார் காம்பினேஷன் செம ???

விகர்ணன் காதல் செம ஆனால் ???

முகமூடி, சுபாஷினி இன்னும் நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் அதிர்ச்சி ?? இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று ??
அணு வரமா?? சாபமா??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???☺️☺️

லிங்க் ???
 

Gowri

Well-known member
அணுவே என் வர(சாப)மாய்...
தர்ஷன்தேவா & தர்ஷன்கிருஷ் ரெண்டு பேரும் டுவின்ஸ். அவங்களுக்கு அனுக்ருதா & அனுவிருந்தா ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது. ஒரு வருஷத்துக்கு அப்பறம் க்ருதா காணாம போய் தேவா அனுரிதிய கல்யாணம் பண்ணிக்கறான். அணுரிதி அவன் முறைபொண்ணு தான். க்ருதா எங்க போன அவ இடத்தில் ரிதி எப்படி, பிடிக்காம கல்யாணம் நடந்ததா, ரிதி ஃபர்ஸ்ட் தேவா ஆக வேணானு சொல்லிட்டு, இப்ப கல்யாணம் பண்ண என்ன ரீசன் எல்லாம் கதையில்.....

அப்பாடா எல்லா பேரும் கரெக்ட் ஆ சொல்லிட்டேன், எஸ் எஸ்???. ஆன ரைட்டர் ஜீ இந்த பேர் எல்லாம் குழப்பமா படிக்கவே எனக்கு 4-5 எபிசோட் தேவாபட்டுச்சி???.

தர்ஷன்தேவா- ரொம்ப அமைதி & அழுத்தமான கதாபாத்திரம். ரிதி மேல ஓவர் லவ் & போசெஸ்ஸிவெனஸ் ???. அவன் சஸ்பென்ஸ் ப்ரேக் பண்ற இடம் எல்லாம் சிம்பிளி க்ளேவர் ????

தர்ஷன்கிருஷ்- அப்படியே எதிர் தேவாக்கு, ரொம்ப ஜாலி டைப். இவனும் விரு மேல இருக்கற லவ் லா குறைஞ்சவன் இல்ல. இவங்களோட லவ் அப்படியே மயிலிறகு போல வருடுது ????.

ரிதி - இவளும் கிருஷ் மாதிரி தான், கிருஷ் ஓட தீனிமூட்ட, தேவாக்கு மட்டும் அனு???. எல்லார் கிட்டையும் நல்ல பேசி அவங்களோட மனசா படிக்கறவ தேவா கிட்ட மட்டும் கொஞ்சம் ஸ்லிப் ஆகி சரி பண்ணிட்டா. என்ன கொஞ்சம் முன்னாடியே செய்து இருக்கலாம், ஆன அதுக்கு தேவாவும் ஒரு காரணம்.

அணுவிருந்தா - கிருஷ் ஓட விருமா, இவளும் அப்படித்தான். தப்பான நேரத்தில் தப்பான முடிவு எடுத்து எல்லாம் தப்பு தப்பு ஆகி கிருஷ் கோவத்துக்கு ஆளாயிட்ட???. ஆன இதுல கிருஷ் பாவம். காதலுக்கு நம்பிக்கை முக்கியம் அப்படிங்கறதா அந்த நேரம் மறந்துட்டா. அதனால் ஏற்பட்ட விளைவுகள்???

பிரணவ் - கிருஷ் & அனுக்கு ரொம்ப நல்ல நண்பன் & அன்பானவன்.

ஹிரித்திக் - இவனும் ரீதி & பிரணவ் ஓட ஃப்ரெண்ட் தான். வாழவே பிடிக்காம வழ்துட்டு இருந்தவன அவன் கூட்டில் இருந்து வர வெச்சது இவங்க தான். அதுள்ள பெரிய பங்கு தேவாக்கும் உண்டு. அவனும் அவன் இஸ்ட்ட படி வாழ, நல்ல போன அவன் லைஃப் லா?????

விகர்ணன் - க்ருதா மேல அவன் வெச்சி இருந்த லவ் க்யூட். ஆனா ???.

அனு, கிருஷ், பிரணவ் பண்ற சேட்டை எல்லாம்????, இவங்க ஃப்ரெண்ட்ஸ் ஷிப் உம் ரொம்ப அழகு????.

முகமூடி காரன் - நீ தான் உலகத்துல வாழவே தகுதி இல்லாதவன், அப்பறம் அவங்கள சொல்லுடா bad fellow ??????. அவனுக்கு ஆன முடிவு செம்ம ரைட்டர் ஜீ ???.

லாஸ்ட் வரை இவனா இவனா புலம்பவிட்ட, பட் நிறைவா தந்துடிங்க????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
 
வணக்கம் சகோதரிகளே..

பொம்முநாவலின் போட்டிக் கதை.

#அணுவே என் வர(சாப) மாய்..!!!

கதை எண் 33

உயிர் உறை உள் உறை அணுவாய் உறை
எல்லா உறைந்திருந்த உள் நோக்கில்..
காதலும் உறைய கடமையும் உறைந்ததோ..

சாபமிட்ட மனிதரும் சபாவிமோசனமிட்ட தேவதேவனும்
காலத்தின் வரமா.. !!??சாபமா!!? என
உரக்க கூறினாலும் மீண்டும் மீண்டும் ..
தொடரும் தொடரி இது..

அணு இருக்கும் வரை வரம்
அணு இல்லாதவரை சாபமோ.

அணு இங்கே விஞ்ஞானத்தின்
கலைகூடமாய் வியாபிப்பு..

முதலில் ஒரு போட்டிக் கதைக்கு இக்கருவை தேர்ந்தெடுத்த ஆசிரிய தோழிக்கு சபாஷ் போட தோனுது. புதிய முயற்சி நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் மா.

தர்ஷன் தேவா ஒரு மைய புள்ளியை தொட அது நீண்டு கொண்டே பல வியந்த ஆச்சரிய விழுமியங்களை தொட்டுக்கொண்டே செல்கிறது. இவனின் சொல்லாத காதல் சிலநேரம் வலியாக, மிதமான காதலாக வந்து சத்தமில்லாது சென்றது.

தர்ஷன் கிருஷ் காதல் நாயகன்,நல்ல ரசிகன்,நல்ல தோழன் என பல முகங்களின் வர்ணகலவை. அழகான காதல் நிமிடங்களின் சொந்தக்காரன்.

அணுரிதி என்ன ஒரு விளையாட்டு பெண். நட்புக்காய் காதலை துறக்கும் இடம் கவலையே.. பாசமான காதல் கைக்கோர்த்த போதும் சிறு மகிழ்ச்சியுடன் ஏற்பது அழகு.

அணுவிருந்தா. எல்லா செயலையும் சமாளிக்கும் அழகு பெண். காதல் வந்தபோது இருந்த நிலையில் வசந்தம் என்றால். கணவனின் பாராமுக நிலையில் வருந்துவது சோகமே.

அணுக்கிரிதா இவரை சுற்றியே மாயவாலையாய் தொடரும் அணுவரம் சிலநேரம் சாபமாய் உருவாவது விதி பயனோ..

கிருத்திக் மனதோடு வலி ஏற்படுத்திய நல் நேயன்.

இப்படி பலதரப்பட்ட பாத்திரங்கள் . போர்த்தொடுத்து சென்றது.

கடைசிவரை ஆசிரியதோழியின் யார் அந்த அணுக்கிரகன் என வியந்து பார்த்த பொழுது இவனா என !!!ஆச்சரியம் தொடுத்தது மிகவும் அருமை அருமை.

சில இடங்களில் சில விஷயங்கள் புரிய வைத்திருக்களாம்..

இப்படியும் மனித இனத்தில் பிறவிகள் உண்டா.!?பணம் புகழ்,அழகு என்ற கூட்டுறவு பின்னனிக்கு துணைபோகும் இவர்களை என்ன வென்பது.

வாழ்த்துக்கள் மா. போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
 

Ruby

Well-known member
#Twist21

#No33

#அணுவே_என்_வர(சாப)மாய்

எல்லாம் அணு மயம் இங்கே... யாருக்கு யார் வரம்? யார் சாபம்?

அணுவிருந்தா செய்த தப்பால் அவளுடனே அவளின் சகோதரி அணுக்ரிதா அவளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகுது...

அவளின் உணர்வுகளை மதிக்காது அவளின் தாய் தங்கைக்காக அவளுக்கும் அண்ணன் தம்பி தேவா அண்ட் கிரிஷ் இருவருடனும் திருமணம் நிச்சயம் ஆகுது... கல்யாணத்துக்கு அடுத்த நாள் ரிதா காணாமல் போயிடரா..

தாயின் வற்புருத்தலால் அத்தை பெண் அணுரிதியை திருமணம் செய்யும் தேவா மட்டும் ரிதா காதலனுடன் போனதாக எல்லாரும் நம்பும் போதும் நம்பவே இல்லை! என்ன காரணமோ???

அணுரிதி முதலில் தேவாவை திருமணம் செய்ய சம்மதிக்காது(??) பிறகு ரிது காணாமல் திருமணம் செய்யுறா! ஏன் முதலில் மறுத்தா, இப்போ ஏன் சரி சொன்னா??? அவன் அணு சொல்லும் போது எல்லாம் ஏன் அவள் எரிச்சல் ஆகுறா??

காதலித்து கல்யாணம் செய்த கிரிஷ் அண்ட் விருந்தா இன்று தள்ளி நிற்கும் காரணம், விருதாவின் தப்பு???

ரிதாவை ஒருதலையாய் காதலித்த விகர்ணன் ஒருபுறம்.. இந்த ரிதா எங்க தான் போய் இருப்பா!???

தேடலின் இடையில் தேவாவிற்கு நண்பனுக்கு உதவ செல்கையில் கிடைக்கும் ஒரு file, அதிலே இருக்கும் ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! என்ன அவை??

எதிர்பாராது ரிதியின் பிரபல சினிமா நண்பனின் இறப்பு, ஏன் எப்படி,யார்??

அனைத்திற்கும் விடையாய் அவர்கள் கண்டுபிடிக்கும் விடைகள் ப்பா எதிர்பார்க்காத, கொடுமையான விசயங்கள்... கொஞ்சம் கொஞ்சம் யூகம் இருந்தாலும் இவ்வளவு மோசமா யோசிக்கலை???

இதையெல்லாம் செய்யும் ஆள், தெரிய வந்த போது அவ்வளவு கோபம் வந்தது??? என்ன நடிப்பு வெளியில், மிருகம் பாதி மனிதம் பாதி என்றது போய், முழு மிருக குணம் தான்??? இதில் நியாயம் வேற பேசி செம்ம கடுப்பு?? வரமாய் நினைத்து அந்த ஜந்து செய்தது, மற்றவருக்கு சாபம்! அந்த ஜந்து பிறந்தது தான் சாபம்???

அடுத்தவர் உணர்வை மதிக்காது தனக்கு இருப்பது மட்டுமே உணர்வு என துச்சமாய் நடத்தியதற்கு கிடைத்த தண்டனை சிறியது தான் என்னை பொறுத்தவரை!!! அவமானம் எல்லாம் அனுபவிக்க விட்டு இருந்தால் தெரிந்து இருக்கும்?

ரிதாவை கண்டு பிடிப்பாங்களா? அப்படி எங்க போனாள்? அந்த ஃபைலில் இருந்தது என்ன!?? எல்லாம் கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

கடைசியில்???

பிரகாஷ் அண்ட் சுபா இருவரும் டாக்டர் தான்.. ஆனால் இவ்வளவு வித்தியாசம் இருவருக்கும் இடையில்... பணத்திற்காக படித்த படிப்பை இப்படி பயன்படுத்தியது ரொம்ப கேவலம்... அதனால் தான் அவருக்கு தண்டனை அவர் இரத்தத்தின் மூலமே கடவுள் கொடுத்து இருக்கார்!

காதல் என்று சொன்ன போது அப்படி ஒரு கோபம் வந்தது.. அதை காதலாய் பார்க்க எனக்கு பிடிக்கலை...

பிரணவ், நல்ல நட்பு... இவனை போல, தேவா போல நட்பு கிடைப்பது வரம்! உணர்வை புரிந்து அதற்கு உயிர் கொடுக்கும் ஆட்கள்??? ரிதி, கிரித்திக் நட்பு?? கார்த்தியாயினி சாபம் என்று சொன்னவரே வரம் சொல்லிட்டாங்க??

யார் யார் என யோசிக்க விட்டுடீங்க கடைசிவரை???

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????
 
Top