#பொம்முநாவல்ஸ்குறுநாவல்போட்டி
#T22 விதையில்இருந்துவிருட்சம்வரை
#என்_வெட்க_சிவப்பழகியே
#கதைஇல03
#ஷாயினிவிமர்சனம்13
#antihero_story
ஊரிற்கு ஒதுக்கு புறமான இடத்தில்,
அறையொன்றில் கட்டி வைக்கப்பட்டு
இருக்கும் அபலை பெண்ணவளான
குழலியிடம் அவளை கடத்தி அங்கே
கட்டி வைத்திருந்த அரளிக்கொடியான
நஞ்சுக் கொடி சில நிபந்தனைகளை
விதிக்க, அதற்கு சம்மதம் தெரிவித்து,
நஞ்சுக் கொடி நீட்டிய காகிதங்களில்
தனது கையெழுத்தை இடுகிறாள் #குழலி !
நஞ்சு நிறைந்தவளோ! தனது திட்டம்
வெற்றியடைய போகும் இறுமாப்பு
கலந்த திமிர் பார்வையுடன் மனம்
நிறைய சந்தோசத்துடன் வெளியேற
முன்னர் , குழலியை கட்டிய கயிற்றை அவழ்த்து விடவும்,
வெளியே வந்த அபலை பெண்ணான
குழலி மனம் நிறைய வலிகளுடனும் பாரத்துடனும் கண்கள் இரண்டும்
கண்ணீரில் கரைய , அருகிலிருந்த ஆற்றுக் கரையோரம் சென்றவள்;
தனது வாழ்க்கையில் நடந்தவற்றை வலிகளுடன் நினைத்து பார்க்க,
அவள் வாழ்வில் நடந்தவையும் இனி நடக்க போவதும் , நிழல் காட்சிகளாய் விரிகின்றது! கதைகளின் ஒவ்வொரு அத்தியாயங்களூடாக நம் முன்னே காட்சியாகிறது!
ஆரம்பத்தில் கதை தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பென்று
நினைக்க வைத்தாலும் இரு ஜோடி புறாக்களின் நாயகர்களின் காதல வைத்தே அதற்கு சரிவர ஈடு செய்து அசத்தி விட்டீர்கள்!
தனக்கு, பெற்றவளுக்கு ஈடான ராகவி
பார்த்த மணமகனை ஏற்றுகொள்ள
முடியாமலும் , தனது காதலை பற்றி சொல்ல தைரியமில்லா கோழையாக மனம் நிறைய காதலை, காதலனான விக்கி மீது வைத்திருந்தவள், தனது காதலுக்காக தன்னுயிரை தியாகம் செய்ய நொடியில் முடிவெடுத்து விட, அங்கு நின்றிருந்த இரு வீட்டாரும் கலங்கி தவிக்க,
இதனால்,வேந்தனுடன் அவளிற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமணம் நின்று விட, அங்கு இருவர் நடந்ததை எண்ணி முற்று முழுதாக மகிழ முடியாது தவிக்க,
தமது நீண்ட நாள் விருப்பத்தை பாரதி வைத்தே நிறைவேற்றும் நோக்கில் வேந்தனின் தாய் கமலா தூபம் போட, குழலியின் தங்கையான சங்கவியோ கையறு நிலையில் , கல்லூரியில் செல்லும் வயதிலேயே வேந்தனோடு காதலை உணரா திருமண பந்தத்தில்
இணைய நேருகின்றது.
நீண்ட நாள் விருப்பம் நிறைவைடந்த,
மகிழ்வில், வேந்தன் மனைவியுடன்,
தமது வீட்டிற்கு செல்ல, சங்கவியின்
பிடிவாதத்தால் குழலியுடன் பாரதி,
குழலியின் காதலனான விக்கியை தேடி செல்ல நேர, அங்கு குழலிக்கும் ராகவிக்கும், தனக்கு பெண்ணவளை யாரென தெரியாதென்றும் ,இதற்கு முன்னே பார்த்தது கூட இல்லையென தனது பெயரினை கூட வேறாக கூறி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறான் #ராஜா
நம்பியவன் கைவிட்ட நிலையில்! ஊராரின் தீர்ப்பில்,காதலித்தவனுடன்
திருமணத்தில் இணை நேருபவள் , தன்னவனின் அலட்சியத்தில் வாடி வதங்கி போகிறாள்.
•ஆசை பட்ட வாழ்வு நரகமாக மாற, அதை விரும்பி ஏற்ற பெண்ணவள் நிலையோ ?
பெண்ணவளின் எதிர்காலம்? அதன் பிறகு நடந்தவை?
தமக்கையின் கணவனாக அத்தனை நாளும் மனதில் நினைத்தவனை தனது சரிபாதியாக சங்கவி ஏற்றுக் கொள்வளா?
வேந்தன் தன்னை தனது #வெட்க #சிவப்பழகியிடம் உணர வைப்பானா?
என்பதெல்லாம் கதை மீதியில் !
அருமையானதும் , சற்று அழுத்தமான கதை களம் ! அதே நேரம் மத்திய தர குடும்பங்களில் வர கூடிய சாதாரண பிரச்சனை. அதனால், ஏற்படும் பக்க விளைவுகள் ! என அதனை கதையில் மாந்தர்களுடாக காட்டியமை ! அழகு கதை கருவை புரியுமாறு அமைத்து இலகு மொழியில்,கதையை சிறப்புற எழுதி முடித்தமைக்கு பாரட்டுக்கள்!
விருட்சம் போட்டியில் வெற்றி பெற
மனதார்ந்த வாழ்த்துக்கள் சகி!
கதை மாந்தர்கள் பற்றி கதையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்!
கதை திரி
Post in thread 'என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி'
https://pommutamilnovels.com/index.php?threads/என்-வெட்க-சிவப்பழகியே-_-கதை-திரி.994/post-23382
கதை பற்றிய கருத்துக்களை பகிர
Thread 'என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்'
https://pommutamilnovels.com/index.php?threads/என்-வெட்க-சிவப்பழகியே-கமெண்ட்.993/