உள்ளம் அலைபாயுதே எனது பார்வையில். சுதா ப்ரியா தனது கல்லூரிக் காலத்தில் சிறு ஈர்ப்பு கொண்ட அருண் மீது சிறு ஈர்ப்பு இருப்பதை அவனிடம் தெரிவிக்கிறாள். அருண் தனக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்லியதால் விலகிவிடும் ப்ரியா அவள் படித்த கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாள். நண்பனின் திருமணத்தில் மணப்பெண்ணின் குடும்பம் அண்ணன் மருத்துவரான கௌதம் க்கு திருமணம் செய்து வைக்க பெண் கேட்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் வசதி அதிகம் என்று நினைத்து தயங்கினாலும் அவர்களின் அணுகுமுறையால் திருமணம் நடக்கிறது. திருமண வரவேற்பில் ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் சிறு பிரிவு ஏற்படுகிறது. எப்படி பிரச்சினைகள் தீர்ந்து ஒன்று சேருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்.