#Twist21
#No28_தேவதை_இவளோ
விஜய் இவன் அவன் தேவதையை தேடி கொண்டிருக்கும் போது அவனின் மாமா பெண் திருமணத்திற்கு ஊருக்கு செல்லும் சூழல்!! அங்கு கல்யாண பெண்ணை(நிவி) பார்த்து ஒரு ஈர்ப்பு!! ஆனாலும் வெளியில் சொல்லாமல் கல்யாணத்தில் கலந்துக்குறான்... நிவி அவளை ஒருதலையா காதலிக்கும் காளி திருமணத்தை நிறுத்த ஒருபுறம் வேலைகள் பாக்குறான்... நிவியின் கல்யாணம் நடக்குமா? விஜயின் ஈர்ப்பு காதலாகுமா? இல்லை அவனின் கனவு தேவதையை கை புடிப்பானா?
விஜயின் நண்பன் சூர்யா பல நாட்களாக காதலிக்கும் காயத்ரியிடம் காதல் சொல்ல முயற்சித்து தோற்று போய் விஜயின் உதவியை நாட, அவனும் சம்மதிக்க, எதிர்பாராது காயத்ரி இறக்க, அதன் பழி விஜய் மேல விழுது!? யார் காயத்ரியை கொன்றது? எதற்காக? அது ஏன் விஜய் மேல விழுந்தது? அவன் குற்றம் செய்தானா இல்லையா? எல்லாவற்றையும் விறுவிறுப்பா குடுத்து இருக்காங்க...
எல்லா இடத்திலும் பல திருப்பங்கள்... காரணம் எல்லாமே எதிர்பார்க்கவே இல்லை!???
தீர விசாரிக்காது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டு அநியாயமா ஒரு உயிர் போயிட்டு??? பழி ஓரிடம் பாவம் ஓரிடம்??? எல்லாரும் அவர் அவர் மனதில் வைத்து இருந்ததை வாய் விட்டு சொல்லி இருக்கலாம்???
காயத்ரி ரொம்ப பாவம்??? அவளின் குடும்பமும்??
நிவேதா அண்ட் கயல் நட்பு சூப்பர்... நிவேதா அண்ட் வெற்றி இருவரும் சூப்பரா கேசை முடிச்சுட்டாங்க... தர்ஷினி அவளின் காதல் எதிர்பார்த்த ஒன்று.. இது ஒன்னு தான் எதிர்பார்த்த மாதிரி இருந்தது..
தேவின் காதல்??? அவனின் முயற்சி??
ஏங்க சுபம் போட முன்னாடி கூட சஸ்பென்ஸ் reveal பண்ணி இருக்கீங்க.. எத்தனை டுவிஸ்ட்??? ரகுராம் மேல செம்ம கடுப்பு எனக்கு... போடா டேய்...
பர்தா பெண் எல்லாம் சுத்தமா எதிர்பார்க்கலை??? அதுவும் கடைசியா ஒரு டுவிஸ்ட் வச்சீங்களே, அடே பிராடுகளா???
குற்றவாளியை திட்ட கை துறுதுறுண்ணு இருக்குது ஆனால் சஸ்பென்ஸ் போயிடும் என கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்???
கடைசி அத்தியாயங்கள் எல்லாம் பரபரப்பா பல டுவிஸ்ட் களோடு சூப்பரா கொண்டு போய் இருக்கீங்க... ???
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே???