ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

28. தூரமே தூரமாய் - விமர்சன திரி

pommu

Administrator
Staff member
28. தூரமே தூரமாய் - விமர்சன திரி
 

santhinagaraj

Active member
தூரமே தூரமாய்

விமர்சனம்.

ரொம்பவும் ஆழமான அழுத்தமான அழகான வழி நிறைந்த காதலும் நட்பும் கதை.

அழகான காதலி மூழ்கி மகிழ்ச்சியோடு காண வந்தவளை தவிக்க விட்டு செல்கிறான் காதல் கொடுத்தவனே என்னை மறந்துவிடு எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை வரப் போகுது என்று சொல்லி.

காதலன் சொல்லிய வார்த்தையில் சித்தம் கலங்கி விபத்தில் சிக்குகிறாள் நாயகி.

காதலர்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் பல கடந்தும் நாயகி இமையாள் காதலின் வார்த்தைகளை நம்ப மறுத்து தங்கள் காதலின் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறாள் காதலின் மற்றும் காதலனின் நினைவுகளோடு .

விட்டுச் சென்ற காதலனும் காத்திருக்கும் காதலையும் வருடங்கள் பல கடந்து சந்திக்கும்போது இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்பது ரொம்ப அழுத்தமாக ஆழமாகவும் கதையில் காட்சிப்படுத்திய விதம் மனதை உருக வைத்தது.

நிஜமாவே இமையாவோட காதல நினைக்கும் போது இப்படியும் காதலிக்க முடியுமா என்றுநெஞ்சம் நெகிழ்ந்தது கண்கள் கலங்கியது.

இமயாவோட காதலின் மீது நாயகனும் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கலாம். என்னதான் நாயகனின் காதலும் குறைந்ததில்லை என்றாலும்இமையாவோட காதலக்கு குறைவாக தான் தெரிந்தது எனக்கு.

நாயகன் நாயகியின் காதலயும் மிஞ்சியது நாயகியின் அண்ணன் இனியன் நாயகன் ருதுவின் நட்பு.

ஒரு அண்ணனாகவும் நண்பனாகவும் இனியனின் உணர்வுகள் ரொம்ப அருமையா காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ருதுவின் கடந்த காலம் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இமயாவோட கஷ்டத்திற்கு முன்னாடி அது எனக்கு பெருசா தெரியல. அதுக்காக ருது பண்ண செயல்களையும் ஏத்துக்க முடியல எல்லாமே அவனோட சுயநலமா தான் தெரிந்தது எனக்கு.

தன்னோட காதலியின் மீது நம்பிக்கை வைத்து சொல்லியிருந்தால் இவ்வளவு பிரிவும் துயரங்களும் அடைந்து இருக்கத் தேவையில்லை.

இனியன் ஷிவன்யா காதல் ரொம்ப கியூட்டா அழகா இருந்தது.

திருவேங்கடம் _அம்பிகா; சுரேந்தர்_ தீபா பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்த நல்ல அப்பா அம்மா பிள்ளைகளின் மீதான இவர்களின் அன்பும் புரிதலும் அருமை.

கைலாஷ், ரூபிணி இவர்களை என்ன சொல்றதுன்னு தெரியல இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குட்டி பையன் தேஷ் அவனின் தவிப்பு அன்னையின் மீதான ஏக்கம் அவன் மீது காட்டும் இமையாளின் எதிர்பார்ப்பில்லாத அன்பும் அருமை.
அந்த அன்பிற்காக இமையா செய்யத் துணிந்த காரியத்தை கொஞ்சம் கோவம் தான் இமைகளின் மீது.

ருத்வின் போலீஸ் அதிரடி காட்சிகள் எல்லாம் ரொம்ப மாஸா இருந்தது

ரொம்பவும் நெகிழ்ந்து கண் கலந்து படிக்க வைத்த அருமையான காதல் கதை.

கதையின் முடிவு ரொம்பவும் நிறைவாக இதமாக இருந்தது சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அழகான, கதையின் முழுமையான விமர்சனம். மனமார்ந்த நன்றிகள் சிஸ்.
 

Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#தூரமே_தூரமாய்….

அழகான அழுத்தமான காதல் கதை…..

நேசித்தவர்கள் சில காரணங்களால் தூரமாய் விலகி போக….அந்த நேசமே தூரமாய் இருந்தவர்களை நெருங்க செய்து….

தூரத்தை தூரமாய் விலகி விட்டது…..

ருது, தனக்கு கல்யாணம் ஆச்சி இனி நீ என் வாழ்க்கையில் இல்லை என இமையாளிடம் சொல்ல….

காதல் கொண்ட மனம் அதை ஏற்க மறுக்குது……

அவரவர் வழியில் பிரிந்து போக….

அவர்களின் காதல் மட்டும் அனாதையாய்……

ருது விட்டு சென்ற இடத்திலே இமையாளும் அவ காதலும் தேங்கி நிற்க…..

இனி பிரிவு என்பதே இல்ல என….

ருதுவின் அதிரடி முடிவு…..

ருது, இமையாள் தவிக்கும் போது எல்லாம் செம்ம கோவம் தான் இவன் மேல வருது…..

ஆன அவளுக்கு பிரிவை பரிசளித்ததுட்டு அவனும் ஒன்னும் சந்தோசமா இல்லையே…..

அந்த நேரத்தில் அவன் முடிவு சரி தான்…..

ஆனாலும்…..

இமையாள்….இவளின் காதல் உண்மையா ரொம்ப பிரமிக்க வைக்குது….

எந்த ஆதாரமும் இல்லாம எப்படி இப்படி ஒரு நம்பிக்கை…..

இனியன், இமையாக்கு கூட ருது மேல சிறு கோவம் வருது…ஆன இவன் pure soul….

ருதுக்கு இப்படி பட்ட ப்ரெண்ட் கிடைக்க ரொம்ப லக்கி…..

ருது, இனியன் வர சீன்ஸ் அவளோ cute…..

எனக்கு ரொம்ப பிடிச்சது…..

இப்படி அழுத்தமான காதல் ஒரு பக்கம்னா…..

ருது, ஐபிஎஸ்…..அவனோட அதிரடிகள்….செம்ம சரவெடிகள் தான்…..

மாஸ் ஹீரோ🔥🔥🔥🔥🔥

இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க…..

அவங்களும் சூப்பர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Wow amazing lines.. thank you so much sis 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
 
Top