ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

25. பேரன்பின் பிறவி நீ கதைக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
25. பேரன்பின் பிறவி நீ கதைக்கான விமர்சனங்கள்
 

Ruby

Well-known member
#Twist21

#No25_பேரன்பின்_பிறவி_நீ

என்னால கெஸ் பண்ணவே முடியலை முக்கால்வாசி டுவிஸ்ட் எல்லாம்... கடைசி வரை யாரு யாருன்னு யோசிக்க வச்சுட்டீங்க.. சந்தேகம் வந்தாலும் ஒண்ணுக்கு மேற்பட்ட ஆட்கள் மேல வந்ததால சில விசயம் தவிர எல்லாமே நியூ தான்... சூப்பர்???

மதியழகி இவளின் கல்யாணம் கதிர் கூட Fix ஆக, அவளுக்கோ இவள் ஊருக்கு பிஸினஸ் விசயமாக வரும் இனியன் மீது ஈர்ப்பு.. இவள் வீட்டுக்கு தெரியாது செய்யும் செயலால், மாப்பிள்ளை கோபப்பட, அவளை திருமணம் செய்ய அவங்க வீட்டுக்கு ஆகாத ராஜன் முன்னாடி வரான்.. யார் இந்த இனியன்?

கல்யாண நாள் அன்று ராஜன் போதைமருந்து வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட, செய்வது்??? போதை மருந்து இருப்பதோ அழகி குடுத்த பெட்டியில்!!!??? ராஜனுக்கும், மதி குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை!? அந்த பெட்டியில் எப்படி போதை மருந்து வந்துச்சு? அழகி ஏன் குடுத்தா? அழகியின் கல்யாணம் என்ன ஆகும்? அழகியின் ஈர்ப்புகாதல் என்ன ஆகும்?

இன்னொருபுறம் மதி - ராஜின் காதல்... ப்பா ரொம்ப அருமையான காதல்??? அப்படி ஒரு நேசம் இருவருக்கும் இடையில்.. ஒரு பாடலில் தடுக்கி விழுந்து தடம் மாறி இடம் மாறும் உள்ளங்கள்??? யார் இந்த மதி அண்ட் ராஜ்? இவர்களின் காதல் கை கூடியதா?

பத்மா, அழகி அண்ட் அவள் அக்கா கயலின் தோழி.. தோழிகளுக்கே யார் என்று சொல்லாத அவளின் காதல், ஊசலாடுது.. நிறைவேறுமா? அழகியின் மச்சான் சந்தோஷ் தாயின் காதலால் பல வேதனைகளை கடந்து வந்த இவனின் கயல் மீதான காதல் நிறைவேறுமா?

சுற்றுலா வந்த பலர் காணாமல் போக, அந்த கேசை விசாரிக்கும் அமிழ்தன், அது போதை மருந்து கும்பலில் கொண்டு விட, யார் என்று கண்டு பிடிப்பானா?

தெரியகூடாதது தெரிந்து கொண்டதால் எஸ் கேவால் கடத்தப்படும் அழகி? அப்படி என்ன தெரிஞ்சுகிட்டா? யார் இந்த sk?

இப்படி பல பல கேள்விகளுடன் இன்னும் சில கேள்விகளுக்கும் விறுவிறுப்பாக விடை தந்து இருக்கிறார் ஆசிரியர்...

ஒருவனை அவமதிப்பதால் நடக்கும் நிகழ்வுகள் அவனை மட்டும் அன்றி அவனை சுற்றி இருப்போரையும் எப்படி எல்லாம் பாதிக்குது என தெளிவாக சொல்லி இருக்காங்க.. sk இவன் ஒரு psycho???. பிளாக் ஸ்பார்க்(யார்னு கதையில்) இவனின் பலவீனம் பயன்படுத்த பட்டதும், அதற்கு சமூகமும், சொந்தமும் காரணம் ஆனது சோகம் தான்..???

இனியன் காதல் சூப்பர்??? அவனின் மன எண்ணங்களை சூழ்நிலையே எதிராக நின்று சரி என்று நிரூபிப்பது பாவம் தான்.. தவறே செய்யாது பாவம் எவ்வளவு மன வேதனை??? அவனின் வேத்னைகளை போக்கும் காதல் சூப்பர்??

சோஷியல் சின்ன பிள்ளையாக இருந்தாலும் ஒருவனை அவனின் வேதனையில் இருந்து மீட்டு எடுத்து இருக்கா.. அழிந்து போய் இருக்க வேண்டியவன் அவனை நல்லபடியா ஆக்கி இருக்கு அவளின் வார்த்தைகள்???

பத்மாவின் காதல் wow... எப்போவும் அவனின் நலனும், விருப்பமும் பார்க்கிற அவளுக்கு அவளின் காதல் கிடைத்தது சூப்பர்?? இது மட்டும் தான் ஆரம்பத்தில் இருந்தே சரியா நான் கெஸ் பண்ண விசயம்.. போதைமருந்தால் ஏற்படும் விளைவை குட்டியா சொல்லி இருக்காங்க...

அழகியின் குறும்பு, மூணு மங்கா 5k எல்லாம் அநியாயம் ரைடர் மேடம்.. அதைவிட அழகியின் ஜான்சி ராணி அவதாரம்?????? அழகி - இனியன் agreement பத்திரம் எல்லாம் டேய் ரொம்ப ஓவரா போறீங்க டா ரெண்டு பேரும் மோமெண்ட் தான்?????

சந்தோஷ் - அழகியின் பிணைப்பு சூப்பர்???

ராஜ் அண்ட் மதி அண்ணாவின் புரிந்துணர்வு!! அதுவும் ராஜை பற்றிய அவனின் கணிப்பு அண்ட் அவனுக்காக அவன் செய்தது??? ரொம்ப பிடிச்சது அந்த சீன்... இருவருக்குமான அந்த பிணைப்பு லவ்லி????

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே??????
 

Gowri

Well-known member
பேரன்பின் பிறவி நீ....
அழகி அவளை பெண் பார்க்க கூட யாரையும் விடாம இருக்கும் ராஜன், யார் அவன்???. இப்படி இருக்கறப்ப கம்பனி ஆரமிக்க வரும் இனியன், அவனை ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து நட்பு கொண்டு தீடிர்னு கல்யாணமும் ஆகுது இனியன் & அழகிக்கு. இப்ப மட்டும் ராஜன் எப்படி அவளை விட்டு கொடுத்தான், யார் இந்த இனியன் & இவனுக்கும் ராஜனுக்கு என்ன சம்மந்தம்????? இது எல்லாம் கதையில்......

ராஜன் - ஷார்ட் ஆ சொல்லணும் நா, ட்ரக்ஸ் கடத்துறதுள்ள இருந்து எல்லா கேப்மாரி வேலையும் செய்யும் கூட்டத்துக்கு ரொம்ப முக்கியமானவன் ???, இன்னும் ஷார்ட் ஆ நா செம்ம கேடிபய ???. இவன் ஏன் அழகிக்கு வர வரன் எல்லாத்தையும் தடுக்கணும் அவளா லவ் பண்றானோ??, அது கதையில்....

அழகி - சரியான கேடி, ஆன பாசக்கார பயபுள்ள???. சில நேரம் தாயாய் பல நேரம் குழந்தையாய் அனைவரையும் படுத்தி எடுக்கும் செல்ல ராட்சஸி???. ஒயின் குடிச்சிட்டு இவ பண்ற சேட்டை, சந்தோ ஓட பைக் ஆ எடுத்து போய் கீழ விழரது, அப்பறம் நம்ம சொர்கத்தில் இருக்கோமானு கேட்டு பண்ற அலப்பரைக்கள் அப்பறம் இனியன் கிட்ட போடற ஓகே கண்டிஷன்ஸ் எல்லாம்?????

இனியன் - இவன் தான் அந்த பாவப்பட்ட ஜீவன், நம்ம ஹீரோ சார் நம்ம அழகியோடா செல்ல பனைமரம்???. கம்பனி ஆரமிக்கரேன் வந்து இவன் செய்யும் வேலைகள், அதுவும் அழகி கல்யணத்தப்ப???அடேய் இனியா இது நீயானு நம்மள ஆச்சிரியா பட வெய்க்கற மாதிரி கெட்டப், அது என்னனா??? அது எல்லாம் சொல்றதுக்கு இல்ல, அதும் கதையில்... ஆன இவனோட பாஸ்ட்????.

சந்தோ - அழகியோட அத்தை பையன், ஆன அழகிக்கு அண்ணன் மாதிரி தான். கயல்க்கு தான் கண்ணாலன் ???, அவள் அழகி ஓட அக்கா பெரியப்பா பெண்.....சிறு வயதில் பட்ட அவமானங்கள் எல்லாம் ஒரு மனிதனை என்ன நிலமைக்கு கொண்டு போகும்னு சொல்ல இவன் போதும்....பாவம் தான் இவன்...

பத்மா - இவ காதல் ஒரு தவம் மாதிரி தான், லேட் ஆ கிடைத்தாலும் அந்த வரம் அவளுக்கு கிடைச்சிருச்சி, அத கொடுத்தது யாருனுனா அது சஸ்பென்ஸ்??????.

மருது - இனியன் ப்ரெண்ட், நல்ல நண்பன்...

ராஜ் & மதி - இவங்க டைரி லா பயணிக்கின்ற காதல் ஜோடி, ரொம்பவே அழகான காதல் இவங்களோடது, ஆன அவர்கள் யாருனு தெரிஞ்சது அப்பறம் ரொம்ப கஷ்டமாக போச்சி குமாரு???

அருண், SK & பிளாக் ஸ்பார்க் - இவங்க எல்லாம் வில்லன் பயலுகள். அந்த SK தான் கேங் லீடர்???, ஆன பிளாக் ஸ்பார்க் லாஸ்ட் வரை யாருனு தெரியல. ஆன தெரிஞ்சது அப்பறம் அடேய் நீயடா ஒரே அதிர்ச்சி????...

டுவிஸ்ட் போட்டிக்கு கண்டிப்பா நியாயம் செய்து இருக்காங்க ரைட்டர் ஜீ, ஒரு ஒரு எபிசோட் உம் செம்ம, என்னவா இருக்கும்னு கெஸ் பண்ண முடியல ???, அதுக்கு ரைட்டர் ஜீக்கு ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????
 
கதை எண் 25

பேரன்பின் பிறவி நீ

துறு துறு அழகியாக நம் நாயகி இவளுக்கு மாப்பிளையாக வருபவனுக்கு சில கண்டிஷன் இருக்கு ??அதை எல்லாம் பூர்த்தி செய்ய ஒரு மணமகன் கிடைப்பானா??

ராஜன் அழகியை விரும்ப இனியனும் விரும்ப அழகியின் மணவாளன் யார்??

சந்தோஷ் அமைதியின் பிறப்பிடம் இவன் இவனின் வலியும் வேதனையும் அதனால் ஏற்படும் இன்னல்களும் ??? அருமையான நண்பன் அழகிக்கு அதுவும் அந்த காட்சியில் ??? இவனுக்கு ஒரு காதல் அது கை கூடுமா?? அழகியின் நம்பிக்கையை தக்க வைப்பானா??

ராஜன் இவனை பற்றிய என்னுடைய யூகங்கள் கரெக்டா இருந்துச்சு ???என்ன மனுஷன் டா நீ இப்படித்தான் தோணுச்சு ??

அழகி இது ஒரு வளர்ந்த குழந்தை தான் தானும் சந்தோசமாக இருந்து தன்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோசமாக இருக்க வைத்து எப்போவும் கலகலப்பு நிறைந்த சுட்டி பெண் இவ்வளவு விளையாட்டாக சுற்றும் இவளுக்குள் இவ்வளவு காதல் அவ்வளவும் அழகு அதுவும் அந்த டீல் பேசும் சீன், சென்னை செல்வது, டாட்டூ சீன் இது எல்லாமே பார்க்கவே சூப்பரா இருக்கு ??

கயல், பத்மா உறுதுணையாக தோழிகள் அதுவும் பத்மா ?? இவள் அழகிக்கு துணை நிற்கும் விதம் இவளுக்குள் பல வருடமாக இருக்கும் காதல் கை நழுவி செல்ல அதனை கை பற்றுவாளா??

இனியன் எல்லாம் இடத்திலும் ஜெயித்தாலும் ஒரு இடத்தில் விழுந்து தானே ஆகணும் ?? இவனின் காதலும், இவனுக்குள் இருக்கும் வலியும், மீளா துயரில் இருந்து மீண்டு வருவதும் ??? இவனின் புத்திசாலி தனமும், விவேகமும், வேகமும் செம மாஸ் ??

டைரியின் பக்கங்கள் கண் கலங்க வைத்து விட்டது ???அவ்வளவு ஆத்மார்த்தமான அழகிய பொக்கிஷம் ஆனால் ???

அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத கதைகளம் செம சஸ்பென்ஸ் ?? அதுவும் அந்த பிளாக் ????

உங்களின் எழுத்து மிகவும் அருமை எதிர்பாராத பல ட்விஸ்ட் சில யூகிக்க முடிந்தது சில விஷயம் அதிர்ச்சி &ஆச்சர்யம்

ட்விஸ்ட் என்பதற்கு ஜஸ்டிஸ் பண்ணி இருக்கீங்க சூப்பர் ??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

 
வணக்கம் சகோதரிகளே ..

#பேரன்பின்_பிறவி_நீ

கதை எண் 25

ஏழேழு பிறப்பிற்கான காதலும்
மீண்டும் மீண்டும் வந்தாலும்..
நிறை மனதாய் ஊடுறுவி
நிலைகொள்ளல் செய்திடலே
அழகு காதல்ன்றோ..

காதல் ஒருமுறையா வரும்..
இல்லை இல்லை..
மனதின் துயர் போக்கிட
ஒர் துணை மீண்டும் உதயமாகிட்டாலே
மீண்டும் பிறக்குமே..

அன்பின் பிறவிபயனின் தேவதை
இந்த குறும்பின மங்கையே..
பெண்ணே உன் காதலால்..
இன்னோர் காதலும் வாழ்ந்ததுவே..
நீ பேரன்பின் பிறயடி காதலியே..

பேரன்பின் பிறவி நீ
காதல் மட்டுமே என்பேன்..!!

அழகி பெயருக்கேற்ற மனதாலும்,உடலாலும் அழகியே.குறும்பின் குழந்தை ,பாசத்தின் சோதரி, நட்பின்சகி,காதலின் காதலி என பலரூபத்தின் அழகு மங்கை. இவளின் வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களே கதையின் அனைத்து பாத்திர படைப்புக்களும்.
அவை சுவாரசியங்கள் நிறைந்த நிலையோடு பயணிப்பது மிகவும் அழகு. அழகி மனதோடு அமர்ந்துக் கொண்டாள்.

இவள் காதலின் அந்த காதல் சின்னமிட்ட காட்சியில் அசந்து போனேன்.
அப்படி ஒரு காதலா.. என்று. இவள் வரும் அத்தனை காட்சிகளும் மிகவும் ரசனை நிறைந்தது. மாமரம்,ஐந்தாயிரம் ரூபா, டீல்,சென்னை பயணம், கார்ட்டூன் பார்ப்பது என அவ்வளவு அழகு.

ராஜன் இவனை நான் நினைத்த நிஜங்களை பொய்க்காது தந்தது அருமை. அவனின் காதலும் அழகே..

இனியன் இவனின் வரவில் நாயகியின் கற்பனை வடிவில் புரிந்துக்கொண்டேன். அவனே இவன் என்று. இவனின் முன்னோடி வாழ்கையை நினைத்த போது கவலையே. ஆயினும் அதை தூக்கிபோட்டு புதிய அவதார வடிவாய் வருவது அசத்தல்..
காதல் ஒருமுறையா என்ன... மீண்டும் பிறக்கும் அதன் தன்மையோடு பயணிக்கும் போது.. இது சாலப்பொருத்தம் இவனுக்கு .

பத்மா.. முதலிலே (ராஜன் + அழகி ) கொஞ்சம் பொறாமை வந்தபோதே தெறிந்து கொண்டேன் ஏதோ இருக்கிறது என்று.

சந்தோஷ் சில வேதனைகளால் பாதைமாறும் அப்பாவி இளைஞன் .
இவனை நினைத்து வலியே.. அவனின் பாசமான நட்புக்கு என் தலைசாய்ப்பு.

நட்புநிலைகளை அழகாக காட்டியுள்ளிர்கள். யாரையும் தீயவனாய் மாற்றும் செயல் சூழலே என கூறியிருப்பது. உங்களின் எழுத்தின் அழகையே காட்டுது.

கடைசிவரை உங்களின் ஆச்சரியங்களை கையாண்டது அருமை ஆசிரிய தோழியே.. ஒரு போட்டிக் கதைக்கு உரித்தான கதை என்று சொல்லலாம்.

உங்களின் எழுத்து நடையில் நல்ல முதிர்ப்பு உண்டு. சில இடங்களில் சில வரிகளில் வாழ்வை இலகுவாக்கி பயணிக்கலாமே என சொல்லாமல் சொல்லியிருப்பது அழகு. ஒருவரை திரும்பி பார்க்க அந்த டயரியின் பக்கங்களை கோர்த்திருப்பது அழகுமா.
வாழ்த்துக்கள் மா.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
 
Top