ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
விமர்சனம்.
ஆழமான காதலும், அழகான நட்பும், குடும்பமும்,போலீஸ் அதிரடிகளும் மருத்துவத்துறையின் குற்றங்களும் நிறைந்த விறுவிறுப்பான கதை.
நம்ம கதையோட நாயகன் வண்ண நிலவன் போலீஸ் ஏசிபி.
நிலவன் கண்டுபிடிக்கும் ஒரு மருந்து பல பிரச்சினைகளை அவனுடைய வாழ்வில் நிகழ்த்துகிறது. சில இழப்புகளையும் சந்திக்கிறான். அந்த மருந்தை அடைய ஒருத்தன் வெறித்தனமா திட்டம் தீட்டுகிறான்.
போலீஸா இருந்தவன் எப்படி மருந்து கண்டுபிடிக்கிறான் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிரல் கதையோட நாயகி டாக்டர். அதிய பாக்கும்போதெல்லாம் அவளை வம்பு இழுத்துக்கிட்டு இருக்கான். நிலவன் அதிக நெருங்க முற்பட ஆதி அவனை விட்டு விலகி இருக்க நினைக்கிறாள். ரெண்டு பேரும் விரும்பியும் விரும்பாமலும் பட்டும் படாமலும் காதல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதி நிலவன் காதல் அவ்வளவு அருமை. அதிலும் நிலவின் காதல் வார்த்தையில் அடங்காதது
நிலவன் எப்படி போலீஸ்ஆனான்? அவன் கண்டுபிடித்த மருந்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது அவனுடைய இழப்புகள் என்ன? அந்த மருந்தை அடைய திட்டம் போட்டவனின் முயற்சி வெற்றி பெற்றதா என்று கதையை ரொம்ப விறுவிறுப்பாவே கொண்டு போய் இருக்காங்க.
தெரிந்த நபர்கள் தானே என்று நாம் நினைக்கும் நபர்களால் நம் வீட்டு பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், மருத்துவத்துறையில் நடைபெறும் குளறுபடிகளையும். தங்களின் சுயநலத்திற்காக பண பேராசைக்காக உறவாக இருப்பவர்களே செய்யும் துரோகங்களையும், ரொம்ப ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லி இருக்காங்க
ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொரு விதமான ஆழத்தையும் தாக்கத்தையும் மனதில் ஏற்படுத்தியது. நிஜமாவே ஒரு சஸ்பென்ஸ் படத்தை சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்க்கிற ஃபீல் கதையை படிக்கும் போது ஏற்பட்டுச்சு.
ஒரு போலீசா,டாக்டரா,லவ்வரா நிலவன் எல்லா இடத்திலும் ஸ்கோர் பண்ணிட்டான்
நிலவும் நெருங்கும்போது அதி பிரிந்து செல்ல அதி நெருங்கி வரும்போது அவளை கடத்தி விட அவளை மீட்க நிலவனின் போராட்டம் எல்லாம் தித்திக் நிமிடங்களாக நகர்ந்தன.
இவ்வளவு பிரச்சனைகள் பரபரப்புக்கு இடையிலையும் கலாட்டாக்கு குறைவில்லாமல் நண்பர்களோட கலாட்டாக்கள் அமர்க்களம்
புகழ் நிலவன் நட்பு அருமை நிலவரின் வார்த்தைக்காக புகழ் அவன் காதலையும் துறந்து கல்யாணத்துக்கு ரெடி ஆகுவதிலெல்லாம் உண்மை நட்பின் ஆழம் தெரியுது
பூஜா நிலவன் நட்பு ரொம்ப ஆர்த்மார்த்தமாக அருமையாக இருந்தது. இவங்களோட நட்பு ரொம்ப புடிச்சி இருந்தது எனக்கு.
நிறைய கேரக்டர்கள் வைத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரொம்ப சரியாகவழி நடத்திய விதம் அருமை
ஆக்சன்,அதிரடி, காதல்,நட்பு, துரோகம், சமூக பிரச்சனைகள் என எல்லாம் கலந்து ஆரம்பம் முதல் இறுதி வரை கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு போய் இருக்காங்க
ரொம்ப அருமையான கதை நிறைவாக இருந்தது. இருந்தாலும் நிறைவு போடாமல்
ஆதித்க்கும் ரம்யாஸ்ரீக்கும் இடையில் ஒரு ஆரம்ப புள்ளி வைத்து இருக்காங்க அதுவும் நன்றாக வர
வாழ்த்துக்கள்